அன்புவனம்

அன்பால் இணைவோம்!

அனைவருக்கும் உதவுவோம்!

கருத்து

எங்கள் வலைதளம் குறித்த தங்கள் கருத்தினைப்

பதிவிட

வலையொளி

எங்களின் வலையொளி பக்கத்தினைப் பார்வையிட

Anbhuvanam

முகநூல்

எங்களின் முகநூல் பக்கத்தினைப் பார்வையிட

Facebook

கீச்சகம்

எங்களின் கீச்சகப் பக்கத்தைப் பார்வையிட

Twitter

எங்களுடன் இணைந்து பயணிக்க

தங்களின் விருப்பத்தை எங்கள் குழுவிற்குமின்னஞ்சல் மூலம் தெரியபடுத்தவும்.
புதிய பதிவுகள்

Latest POST

யாதும் ஊரே யாவரும் கேளீர்

உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் பிறப்பதும் 

இருப்பதும் இறப்பதும்

வாழ்வதும் வீழ்வதும்

உயர்வதும் தாழ்வதும் என

நடப்பது அனைத்தும் 

நாம்செய்த வினைப்பயன் 

என்பதை உணர்ந்து

உலகினர் அனைவரும்

உறவினராய் ஒரு தாய்ப் 

பெற்ற பிள்ளைகளாய்

அமெரிக்கா முதல்

ஆண்டிப்பட்டி வரையுள்ள

ஆயிரம் சாதிகளழிய

இனம் மொழி

மதம் கடந்து

அனைவரும் சகோதரர்களென

அன்பால் இணைந்து வாழ

அகிலம் ஆனது அன்னை மடியாய்!

நகரம்

நதிகளை ஒழித்து

நன்மரங்களை அழித்து

நல்சுவாசம் தொலைத்து

நச்சுக்காற்றால் பிணித்து

வாழும் நாள் குறைத்து

வீழும்நாள் குறித்து

நமக்கு நாமே உருவாக்கிய

நரகம் நகரம்!

நாளைய இந்தியா

அந்நிய நாட்டில் அடிமையைப் போல்

ஆணிவேரற்ற மரங்களாய்

இன்பம் இழந்து

ஊதியத்திற்காய் வாழும் 

நிலை ஒழிந்து 

இளைஞர் அறிவு

இணையற்ற சக்தியாய் உருவெடுக்க

உலகம் போற்றிடும்

உன்னத பூமியாய் 

நமக்காய் மலரட்டும்! 

நாளைய இந்தியா!

wpChatIcon
error: Content is protected !!