தமிழ்
“வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி”
என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றுவார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
தமிழ், மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இலக்கிய வளம்மிக்க மொழி. காலத்தால் மூத்த தமிழ்மொழி தனித்தன்மையால் மிடுக்குற்றுச் செம்மொழியாய் திகழ்கிறது. ‘திருந்திய பண்பும், சீர்த்த நாகரீகமும் பொருந்திய தூயமொழி தமிழ்ச் செம்மொழியாம்’ என்று பரிதிமாற் கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார். உலகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இவற்றுள் இலக்கண, இலக்கிய வளமுடைய மொழிகள் மூவாயிரம். இவற்றுள்ளும் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றுத் தொன்மையுடைய மொழிகள் சிலவே. அவை தமிழ், சீனம், சமஸ்கிருதம், இலத்தின்,ஈப்ரு,கிரேக்கம் ஆகியன. இவற்றுள் இன்றும் நிலைத்து நிற்கும் மொழிகளுள் நம் தாய்மொழியாம் தமிழ் மொழியும் ஒன்று.
தமிழ் மொழியைத் “திராவிடத்தின் தாய் ஆரியத்தின் மூலம்“ என்பார் தேவநேயப் பாவாணர். “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி“ என்று தமிழ் மக்களைக் குறிப்பிடுகிறது புறப்பொருள் வெண்பாமாலை.
இவ்வாறான சிறப்புகளையும் பெருமைகளையும் கொண்ட தமிழ் மொழியில் உள்ள நூல்களோ எண்ணிலடங்கா.
போட்டித் தேர்வுக்கான பாடதிட்டதில் தமிழ் இலக்கியப்பகுதிகள், தமிழ் இலக்கணப்பகுதிகள், தமிழ்த்திறனாய்வுகள், தமிழக வரலாறும் பண்பாடும், தமிழும் பிறதுறைகளும் என்ற ஐந்து பகுதிகளைப் பத்து அலகுகளாக பிரித்துக் கொடுத்துள்ளனர். அவை:
2) காப்பியங்கள்
3)பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள், உரையாசிரியர்கள்
5) இலக்கணங்கள்
6) இலக்கண உரையாசிரியர்கள்,மொழி வரலாறு, நோக்கு நூல்கள்
8) தமிழக வரலாறு
மேற்கண்ட தலைப்புகளில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தவல்கலையும், செய்திகளையும் வரும் பதிவுகளில் பார்க்கலாம். அதனை தொடர்ந்து இடம்பெற்றுள்ள கேள்விக்கென்ன பதில் என்ற பகுதியில் இதுவரை தேர்வுகளில் கேட்கப்பட்டக் கேள்விகளுக்கு நீங்கள் விடையளிப்பதன் மூலம் தேர்வு குறித்த தெளிவினைப் பெறுவீர்கள் என்று நம்புகிறோம்.