காப்பியங்கள்
பழந்தமிழ் இலக்கியங்கள் தனிநிலைச் செய்யுளாக அமைந்தவை. தனிநிலைச் செய்யுட்களின் வளர்ச்சியே தொடர் நிலைச் செய்யுளாகும். தொடர்நிலைச் செய்யுளே காப்பியம் என அழைக்கப்பட்டது. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் அமையப் பாடுவது பெருங்காப்பியம். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேல் குறையின் அது சிறுகாப்பியம் என அழைக்கப்படும். இவ்வாறு காப்பியத்திற்கு இலக்கணம் கூறுகிறது தாண்டியலங்காரம்.
ஐம்பெரும் காப்பியங்கள்
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- சீவக சிந்தாமணி
- வளையாபதி
- குண்டலகேசி
ஐஞ்சிறு காப்பியங்கள்
- சூளாமணி
- நீலகேசி
- உதயணகுமார காவியம்
- யசோதர காவியம்
- நாககுமார காவியம்
பிறகாப்பியங்கள்
- கம்பராமாயணம்
- பெரியபுராணம்
- திருவிளையாடல் புராணம்
- வில்லிபாரதம்
- பெருங்கதை
- நளவெண்பா
- தேம்பாவணி
- இரட்சணிய யாத்திரிகம்
- சீராபுராணம்
- இயேசு காவியம்
- நாயகம் ஒரு காவியம்
- இராவண காவியம்
வினாக்கள்
கேள்விக்கென்ன பதில் – காப்பியங்கள்