UGC-NET
அறிமுகம்
வணக்கம்! NTA UGC-NET தேர்வு பற்றிய புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இது தேசிய அளவில் உதவி பேராசிரியர் (ASSISTANT PROFESSOR) மற்றும் இளநிலை ஆய்வு உதவித்தொகை (JUNIOR RESEARCH FELLOWSHIP) பெறுவதற்கான ஒரு தகுதித் தேர்வாகும். மேலும் இது இந்த ஆண்டு(2024) முதல் முனைவர் பட்டப் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வாகவும் அமைகிறது. இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜூன், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது.இதற்கு https://ugcnet.nta.ac.in/ என்ற வலைதளத்தில் இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
தகுதி
UGC NET தேர்வை முதுகலை படிப்போர், படித்து முடித்தோர் எழுதலாம்.
எளிதில் வெற்றிபெற
தமிழ்மொழியில் முதுகலை படித்தவர்கள் இந்த தேர்வில் எளிதாக எதிர்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்துடன் குறிப்புகளை வெளியிட இருக்கிறோம். UGC NET தேர்வில் மொத்தம் இரண்டு தாள்கள் இருக்கின்றன. முதல் தாள் ஆங்கிலத்தில் அமையும். இந்தத் தேர்வில் எளிதாக வெற்றிபெற இரண்டு தாள்களுக்கும் சமமான முக்கியத்துவம் தரவேண்டும். ஒரு சில அலகுகளுக்கு முதன்மை கொடுத்து படித்தாலே நல்ல மதிப்பெண்கள் பெற வாய்ப்பு உள்ளது.
முதல் தாள்
முதல் தாளில் மொத்தம் பத்து அலகுகள் உள்ளன. 50 வினாக்கள் கேட்கப்பட்டு ஒவ்வொரு வினாவிற்கும் 2 மதிப்பெண்கள் வீதம் 100 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றது. இதில் பத்தி வினாவிடை (COMPREHENSION), திறனறிதல் (APTITUDE), புள்ளிவிவரங்கள் (DATA INTERPRETATION), தொடர்புதிறன் (COMMUNICATION) இப்படி சில அலகுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படித்தாலே எளிதில் வெற்றிபெறலாம்.
இரண்டாம் தாள்
இரண்டாம் தாளில் மொத்தம் பத்து அலகுகள் உள்ளன. 100 வினாக்கள் கேட்கப்பட்டு ஒவ்வொரு வினாவிற்கும் இரண்டு மதிப்பெண்கள் வீதம் 200 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இதில் பழந்தமிழ் இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள், உரையாசிரியர்கள், இலக்கணங்கள், இலக்கண உரையாசிரியர்கள், மொழி வரலாறு, நோக்கு நூல்கள், இலக்கியத் திறனாய்வு, தமிழக வரலாறு, தமிழகப் பண்பாடு, தமிழும் பிறதுறைகளும் என்ற அலகுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படித்தாலே எளிதில் வெற்றி பெறலாம். இரண்டாம் தாளுக்கான குறிப்புகள் தமிழ் என்ற தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ளது.
இதற்கு முன் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் (UGC NET PREVIOUS YEAR QUESTIONS)
- June 2019
- Dec 2019
- 2021
- June 2022
- Dec 2022
“முடியும் வரை முயற்சி செய்வோம்
நம்மால் முடியும்வரை வரை அல்ல
நாம் நினைத்தது முடியும்வரை”
வாழ்க வளமுடன் வாழ்வோம் நலமுடன்
