-
0 Comments
சோழர்கள் வரலாறு
சோழர்கள்
- சோழர்களின் தலைநகரம் : உறையூர், பூம்புகார்
- கொடி: புலிக்கொடி
- அடையாளப் பூ: ஆத்தி
- பிற்கால சோழப் பேரரசின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்- விசயாலய சோழன்
விசயாலய சோழன்(846-881)
- விசயாலய சோழன் பற்றியும் அவர் பாண்டியருடன் ஆற்றிய போர் பற்றியும் அன்பில் செப்பேடு, ஆனைமங்கலச் செப்பேடு, திருவாலங்காட்டுச் செப்பேடு ஆகியவற்றில் குறிப்புகள் உள்ளன.
முதல் இராசராசன் (கி.பி. 985-1014)
- இயற்பெயர்: அருண்மொழிவர்மன்
- பெற்றோர்: இரண்டாம் பராந்தகன் (சுந்தரசோழன் ) – வானவன்மாதேவி
- பட்டம்: இராசகேசரி
சிறப்புகள்
- மெய்க்கீர்த்தியை அறிமுகப்படுத்தியவர்.
- “திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்”
- தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவர்.
போர்கள்
- சேர பாண்டியருடன் செய்த போரில் வெற்றி பெற்றார்.
- கொல்லமும் குடகும் கங்கர் நாடும் கைப்பற்றினார்.
- இலங்கை மீது படையெடுத்து சென்று வெற்றி கண்டார்.
சமய ஈடுபாடு: சைவ சமய ஈடுபாடு கொண்டவர். இவருடைய புனைப்பெயர் சிவபாதசேகரன் என்பதாகும்.
முதல் இராசேந்திரன் (கி.பி. 1012-1044)
- இயற்பெயர்: மதுராந்தகன்
- தந்தை: முதலாம் இராசராசன்
- மெய்கீர்த்தி: “திருமன்னி வளர இருநில மடந்தையும்”
- பட்டம் : கங்கை கொண்டான், கடாரம் கொண்டான்
- போர்கள்:
- மேலை சாளுக்கியருடன் போர்
- இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தனுடன் போர்
- சேரபாண்டியருடன் போர்
- சமயப்பணி: கங்கைகொண்ட சோழேச்சுரம் என்னும் சிவன் கோவிலைக் கட்டியுள்ளார்.
- சோழகங்கம் என்னும் ஏரியை வெட்டுவித்தான்.
முதலாம் குலோத்துங்க சோழன்(கி.பி. 1070-1122)
- கீழை சாளுக்கியரின் வழித்தோன்றல்
- சிறப்புப்பெயர்
- “சுங்கம் தவிர்த்த சோழன்”
- திருநீற்றுச்சோழன்
- கலிங்கத்துப்பரணியின் பாட்டுடைத்தலைவன் ஆவார்.
- மெய்கீர்த்தி:
- “திருமன்னி விளங்கும்”
- “புகழ்மாது விளங்க”
- “பூமருவிய திருமடந்தை”
- “திருமகள் செயமகள்”
- “பூமேல் அரிவை”
- “பூமியும் திருவும்”
- “புகழ்சூழ்ந்த புணரி”
- போர்கள்:
- மேலை சாளுக்கியருடன் போர்
- பாண்டிய நாட்டுடன் போர்
- சேரருடன் செய்த போர்
- கலிங்கத்துடன் போர்
- சமயப்பணி: இவர் சிவபெருமான் மீது கொண்ட பக்தியால் “திருநீற்றுச்சோழன்” என்று அழைக்கப்பட்டார்.
சோழர்களின் நிர்வாக முறை
- முதலாம் இராசராசனது ஆட்சி காலத்தில் சோழப்பேரரசு 9 மண்டலங்களாகப் பிரிந்து இருந்தது.
- அந்தணர்கள் வழ்ந்த ஊர் சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டது.
- அவ்வூரில் இருந்த அவை ‘பிரமதேய அவை‘ என்று அழைக்கப்பட்டது.
- வாரியங்களின் கடமைகள்
- சம்வத்சர வாரியம் – வழக்குகளுக்குத் தீர்ப்பளித்தல், அறநிலையங்களைப் பாதுகாத்தல்
- ஏரி வாரியம் – விளைநிலங்களைப் பாதுகாத்தல், விளைவுக்கு நீர்ப்பாய்ச்சுதல்
- தோட்ட வாரியம் – புன்செய் நிலங்களைப் பாதுகாத்தல்
- பொன் வாரியம் – பொன் நாணயங்களை ஆராய்தல்
