19 Aug 2025 மீராகிருஷ்ணன் 0 Comments என் அன்பு மகனே கிருஷ்ணா! என்னவனின் இடத்தில் வாங்கி நீ அனுப்பி வைத்த பிறந்தநாள் பரிசை எதிர்ப்பார்த்தே காத்திருக்கிறேன்…. அந்த பரிசுக்குத்தான் நமக்குள் எத்தனை சண்டைகள்….. இறுதியில் வளர்ந்த குழந்தை எனக்காக வளரும் குழந்தையான நீயே விட்டுக் கொடுத்தாய்…… கவலை கொள்ளாதே மகனே உனக்கான பரிசு என்னிடத்தில் காத்திருக்கிறது உன் வரவிற்காய்!