பழந்தமிழ் இலக்கியங்கள்

                  சங்கம் வைத்து தமிழ் மொழியை வளர்த்த காலத்தை சங்க காலம் என்பர்.  பொதுவாக கி.மு. 500 முதல் கி.பி. 200  வரையில் உள்ள காலம்  சங்க காலம் எனப்படுகிறது.  இக்காலத்தில் தொல்காப்பியமே முதல் நூலாக கிடைக்கிறது   இதனை அடுத்து பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூல்கள் நமக்கு கிடைத்துள்ளன. எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் பதினெண்மேற்கணக்கு என்று அழைக்கப்படுகிறது. கி.பி. 150 முதல் கி.பி. 450 வரையில் உள்ள காலத்தை சங்கம் மருவிய காலம் என்பர்.  இக்காலத்தில்  மிகுதியான நீதி இலக்கியங்கள் தோன்றின. சங்க இலக்கியங்கள் பதினெண்மேற்கணக்கு என்று அழைக்கப்பட்டதைப் போன்று இக்காலத்தில் தோன்றிய 18 இலக்கியங்களை தொகுத்து பதினெண்கீழ்க்கணக்கு  என்றனர். 

   சங்ககாலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் தோன்றிய இலக்கியங்களே பழந்தமிழ் இலக்கியங்கள் என்றழைக்கப்படுகின்றன. அவை:

          இவை குறித்தப் பொதுநிலை அறிவாக இலக்கிய வரலாற்றுத் தரவுகளான காலம், தொகுப்புமுறை,  ஆசிரியர் வரலாறு, முதன்மையான பாடுபொருள், அவற்றிற்கு உரையெழுதியோர், அவர்கள் முன்வைத்துள்ள பொதுக் குறிப்புகள் போன்றன கவனம்பெறும். இதுவே பழந்தமிழ் இலக்கியங்கள் என்ற தலைப்பில் முதல் அலகாக பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. 

எட்டுத்தொகை

  • நற்றிணை
  • குறுந்தொகை
  • ஐங்குறுநூறு
  • கலித்தொகை
  • அகநானூறு
  • புறநானூறு
  • பதிற்றுப்பத்து
  • பரிபாடல்

பத்துப்பாட்டு

  • திருமுருகாற்றுப்படை
  • பொருநராற்றுப்படை
  • பெரும்பாணாற்றுப்படை
  • சிறுபாணாற்றுடை
  • மலைபடுகடாம்
  • குறிஞ்சிப்பாட்டு
  • முல்லைப்பாட்டு
  • பட்டினப்பாலை
  • மதுரைக்காஞ்சி
  • நெடுநல்வாடை

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

  • திருக்குறள்
  • நாலடியார்
  • நான்மணிக்கடிகை
  • இன்னா நாற்பது
  • இனியவை நாற்பது
  • திரிகடுகம்
  • ஏலாதி
  • ஆசாரக்கோவை
  • முதுமொழிக்காஞ்சி
  • பழமொழி நானூறு
  • சிறுபஞ்சமூலம்
  • ஐந்திணை ஐம்பது
  • ஐந்திணை எழுபது
  • திணைமொழி ஐம்பது
  • திணைமாலை நூற்றைம்பது
  • கைந்நிலை
  • கார்நாற்பது
  • களவழி நாற்பது

வினாக்கள்

கேள்விக்கென்ன பதில் -பழந்தமிழ் இலக்கியங்கள்

குறிப்பு: மேலே உள்ள கோடிடப்பட்ட தலைப்புகளைச் சொடுக்குவதன் மூலம் அதற்குரிய குறிப்புகள் இடம்பெற்றிருக்கும் பக்கங்களை அடைவீர்கள்.