-
0 Comments
பதினெண்கீழ்க்கணக்கு – குறிப்புகள்
- வெண்பா யாப்பினைப் பயன்படுத்தி, குறைவான அடிகளால் ஐம்பது முதல் ஐந்நூறு பாடல்களைக் கொண்டு விளங்குவது கீழ்க்கணக்கு என்றும் கூறுகிறது பன்னிரு பாட்டியல்.
- இத்தொகுப்பில் பதினெட்டு நூல்கள் அடங்கும். இப்பதினெட்டு நூல்களையும்
-
- நீதி நூல்கள் (11 நூல்கள்)
1) திருக்குறள்
2)நாலடியார்
3) இன்னா நாற்பது
4) இனியவை நாற்பது
5)நான்மணிக்கடிகை
6)ஆசாரக்கோவை
7) சிறுபஞ்சமூலம்
8) ஏலாதி
9)திரிகடுகம்
10)முதுமொழிக்காஞ்சி
11) பழமொழி நானூறு
-
- அக நூல்கள் (6 நூல்கள்)
1) ஐந்திணை ஐம்பது
2)ஐந்திணை எழுபது
3) திணைமொழி ஐம்பது
4) திணைமாலை நூற்று ஐம்பது
5) கைந்நிலை
6)கார் நாற்பது
-
- புற நூல் (ஒன்று)
1)களவழி நாற்பது
என மூன்று பிரிவுகளுள் அடக்கலாம்.
திருக்குறள்
பெயர்க்காரணம்:
- குறள் வெண்பாக்களால் பாடப்பட்டுள்ளதால் இப்பெயர் பெற்றது.
- திருக்குறள் என்பது “அடையடுத்த கருவியாகு பெயர்”
- ஆசிரியர் – திருவள்ளுவர்
- பாவகை – குறள் வெண்பா
திருக்குறளின் வேறு பெயர்கள்:
- திருவள்ளுவம்
- தமிழ் மறை
- பொதுமறை
- முப்பால்
- பொய்யாமொழி
- தெய்வநூல்
நூல் பகுப்பு முறை:
- பால் – 3(அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்)
- அதிகாரம் – 133
- பாடல்கள் – 1330
- இயல்கள் – 9
நாலடியார்
பெயர்க்காரணம்:
- நான்கு அடிகளால் ஆன நானூறு பாடல்களை கொண்டதால் நாலடி நானூறு என்றும் நாலடியார் என்றும் அழைக்கப்படுகிறது
- ஆசிரியர் – சமண முனிவர்கள்
- தொகுத்தவர் – பதுமனார்
- பாடல்கள் – 400
- பொருள் – அறம்
- பா வகை – வெண்பா
வேறு பெயர்கள்:
- நாலடி நானூறு
- வேளாண் வேதம்
நூல் பகுப்பு:
- இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது
- அறத்துப்பால் – 13 அதிகாரங்கள்
- பொருட்பால் – 24 அதிகாரங்கள்
- இன்பத்துப்பால் – 3 அதிகாரங்கள்
நூலின் சிறப்பு:
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள ஒரே தொகை நூல் இது.
நான்மணிக்கடிகை
பெயர்க்காரணம்:
- நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற அணிகலன் போல் ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகள் இடம்பெறுவதால் நான்மணிக்கடிகை எனும் பெயர் பெற்றது.
- ஆசிரியர் – விளம்பி நாகனார்
- ஊர் – விளம்பி
- பாடல்கள் -104
- பாவகை – வெண்பா
இன்னா நாற்பது
பெயர்க்காரணம்:
- இன்னா – துன்பம். இன்னது இன்னது இன்னா என நாற்பது பாடல்களில் கூறுவதால் இன்னா நாற்பது எனப்படுகிறது.
- ஆசிரியர் – கபிலர்
- பாடல்கள் – 1 + 40
- பாவகை – வெண்பா
இனியவை நாற்பது
பெயர்க்காரணம்:
- இவை இவை இனிமை பயப்பவை என நாற்பது பாடல்களால் கூறுவதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது.
- ஆசிரியர் – பூதஞ்சேந்தனார்
- பாடல்கள் – 1 + 40
- பாவகை – வெண்பா
திரிகடுகம்
பெயர்க்காரணம்:
- சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் உடல் நோயைத் தீர்ப்பான. அதனை போன்று இந்நூலில் அமைந்துள்ள ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்களும் உள்ளந்தின் நோயைத் தீர்க்கும்.
- திரி – மூன்று
- கடுகம் – காரமுள்ள பொருள்
- ஆசிரியர் – நல்லாதானர்
- பாடல்கள் – 100 + 1
- பாவகை – வெண்பா
ஆசாரக்கோவை
பெயர்க்காரணம்:
- மனித வாழ்விற்கு இன்றியமையாத ஒழுக்கநெறிகள் பலவற்றையும் ஒன்றிணைத்துக் கூறும் ஒரு தொகுப்பு நூல் என்பதால் அப்பெயர் பெற்றது.
- ஆசிரியர் -பெருவாயின் முள்ளியார்
- பாடல்கள் – 100
- பாவகை – பல்வேறு வெண்பா வகைகள்
பழமொழி நானூறு
பெயர்க்காரணம்:
- ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பழமொழி இடம்பெறுவதால் பழமொழி நானூறு எனப் பெயர்பெற்றது.
- ஆசிரியர் -முன்றுறை அரையனார்
- பாடல்கள் – 400
- பாவகை – வெண்பா
சிறுபஞ்சமூலம்
பெயர்க்காரணம்:
- கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய வேர்கள் இணைந்து மனிதனின் நோயை குணப்பதுவது போல இந்நூல் மனிதனின் உள்ளப்பிணியை நீக்குகிறது.
- ஆசிரியர் – காரியாசான்
- பாடல்கள் – கடவுள் வாழ்த்து 1, பாயிரங்கள் 2, செய்யுட்கள் 102
- பாவகை – வெண்பா
முதுமொழிக்காஞ்சி
பெயர்க்காரணம்
- மூத்தோர் சொற்கள் பலவற்றைக் கோர்த்த கோவை முதுமொழிக்காஞ்சி எனப்படுகிறது.
- ஆசிரியர் – மதுரைக் கூடலூர்க்கிழார்
- பாடல்கள் – 100
- பாவகை – குறள் தாழிசை
ஏலாதி
பெயர்க்காரணம்:
- ஏலம், இலவங்கம், நாககேசரம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு மருந்து பொருட்கள் சேர்ந்து உடல் நோயை தீர்ப்பது போன்று இந்நூலின் உள்ள ஒவ்வொரு பாடல் கூறும் ஆறு கருத்துக்களும் மனிதனின் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும்.
- ஆசிரியர் – கணிமேதாவியார்
- பாடல்கள் – பாயிரம் 1, தற்சிறப்பாயிரம் 1, பாடல்கள் 80
- பாவகை – வெண்பா
ஐந்திணை ஐம்பது
பெயர்க்காரணம்:
- ஐந்து தினைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் ஐம்பது பாடல்கள் பாடப்பட்டதால் ஐந்திணை ஐமபது எனப் பெயர் பெற்றது.
- ஆசிரியர் – மாறன் பொறையனார்
- பாடல்கள் – 50(5 X 10 = 50)
- திணை – ஐந்து அகத்திணை
- திணை வைப்பு முறை – முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்
- பாவகை – வெண்பா
ஐந்திணை எழுபது
- ஐந்து தினைகளுக்கும் பதினாங்கு பாடல்கள் வீதம் எழுபது பாடல்கள் பாடப்பட்டதால் ஐந்திணை எழுபது எனப் பெயர் பெற்றது.
- ஆசிரியர் -மூவாதியார்
- பாடல்கள் – 70(5*14=70)
- திணை – ஐந்து அகத்தினணகளும்
- திணை வைப்பு முறை – குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்
- பாவகை – வெண்பா
திணைமொழி ஐம்பது
பெயர்க்காரணம்:
- திணைக்கு பத்து பாடல் வீதும் ஐம்பது பாடல்களைக் கொண்டதால் திணைமொழி ஐம்பது எனப் பெயர்பெற்றது.
- ஆசிரியர் – கண்ணஞ் சேந்தனார்
- பாடல்கள் – 50(5*10=50)
- திணை – ஐந்து அகத்திணைகளும்
- திணை வைப்பு முறை – குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்
- பாவகை – வெண்பா
திணைமாலை நூற்றைம்பது
பெயர்க்காரணம்:
- திணைக்கு முப்பது பாடல்கள் வீதம் நூற்றைம்பது பாடல்கள் கொண்டதால் திணைமாலை நூற்றைம்பது எனப் பெயர் பெற்றது.
- ஆசிரியர் – கணிமேதாவியார்
- பாடல்கள் – 150(5*30=150)
- திணை – ஐந்து அகத்திணைகளும்
- திணை வைப்பு முறை – குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம்
- பாவகை – வெண்பா
கைந்நிலை
பெயர்க்காரணம்:
- கை = ஒழுக்கம்
- ஐந்திணை ஒழுக்க நிலை கூறும் நூல் என்னும் பொருளில் “கைந்நிலை” எனப் பெயர் பெற்றது.
- ஆசிரியர் – புல்லாங்காடனார்
- பாடல்கள் – 60(5*12=60)
- திணை – ஐந்து அகத்திணைகளும்
- பாவகை – வெண்பா
கார் நாற்பது
- கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையினாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார்நாற்பது என்னும் பெயர் பெற்றுள்ளது.
- இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்.
- ஆசிரியர் – மதுரைக் கன்னங் கூத்தனார்
- பாடல்கள் – 40(அகநூல்களில் அளவில் சிறியது)
- திணை – அகத்திணை – முல்லைத்திணை
- பாவகை – வெண்பா
களவழி நாற்பது
பெயர்க்காரணம்:
- களம் = போர்க்களம்.
- போர்க்களம் பற்றிய நாற்பது பாடல்களைக் கொண்டதால் களவழி நாற்பது எனப் பெயர் பெற்றது.
- ஆசிரியர் – பொய்கையார்
- பாடல் – 40
- திணை – புறத்திணை – வாகைத்திணை
- பாவகை – வெண்பா
|
எண் |
நூல் |
பொருள் |
பாடல் |
ஆசிரியர் |
|
1 |
நாலடியார் |
அறம் |
400 |
சமண முனிவர்கள் |
|
2 |
நான்மணிக்கடிகை |
அறம் |
106 |
விளம்பிநாகனார் |
|
3 |
இன்னா நாற்பது |
அறம் |
40 |
கபிலர் |
|
4 |
இனியவை நாற்பது |
அறம் |
40 |
பூதஞ்சேந்தனார் |
|
5 |
திருக்குறள் |
அறம் |
1330 |
திருவள்ளுவர் |
|
6 |
திரிகடுகம் |
அறம் |
100 |
நல்லாதனார் |
|
7 |
ஆசாரக்கோவை |
அறம் |
100 |
பெருவாயில் முள்ளியார் |
|
8 |
பழமொழி நானூறு |
அறம் |
400 |
முன்றுறை அரையனார் |
|
9 |
சிறுபஞ்சமூலம் |
அறம் |
102 |
காரியாசான் |
|
10 |
முதுமொழிக் காஞ்சி |
அறம் |
100 |
கூடலூர் கிழார் |
|
11 |
ஏலாதி |
அறம் |
80 |
கணிமேதாவியார் |
|
12 |
கார் நாற்பது |
அகம் |
40 |
கண்ணன் கூத்தனார் |
|
13 |
ஐந்திணை ஐம்பது |
அகம் |
50 |
மாறன் பொறையனார் |
|
14 |
ஐந்திணை எழுபது |
அகம் |
70 |
மூவாதியார் |
|
15 |
திணைமொழி ஐம்பது |
அகம் |
50 |
கண்ணன் சேந்தனார் |
|
16 |
திணைமாலை நூற்றைம்பது |
அகம் |
150 |
கணிமேதாவியார் |
|
17 |
கைந்நிலை |
அகம் |
60 |
புல்லாங்காடனார் |
|
18 |
களவழி நாற்பது |
புறம் |
40 |
பொய்கையார் |
