-
0 Comments
பக்தி இலக்கியம் – குறிப்புகள்
- பக்தி இலக்கியம் பெரிதும் வளர்ந்த காலம் பல்லவர் காலம் ஆகும்.
- தேவாரம்
- தே+வாரம்=தேவாரம்
- கடவுளுக்கு சூட்டப்படுகின்ற பாமாலை என்று பொருள்.
- சைவ சமயத்தின் முழுமுதற் கடவுள் சிவபெருமான்
- சிவபெருமானின் ஐன்தொழில்கள் – படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்
பன்னிரு திருமுறைகள் பகுப்பு
- சைவ சமயப் பெரியவர்கள் பாடிய பாடல்கள் திருமுறைகள் எனப்படும்.
- 1 , 2, 3 திருமுறைகள் – திருஞானசம்பந்தர் (சம்பந்தர் தேவாரம்)
- 4, 5 , 6 திருமுறைகள் – திருநாவுக்கரசர் (தேவாரம்)
- 7ம் திருமுறை – சுந்தரர் (சுந்தரர் தேவாரம்)
- 8ம் திருமுறை – மாணிக்கவாசகர்-திருவாசகம் மற்றும் திருக்கோவையார்
- ஒன்பதாம் திருமுறை – 9 பேர்
- பத்தாம் திருமுறை – திருமூலர்
- பதினொன்றாம் திருமுறை – திரு ஆலவாய் உடையார் முதலாக பன்னிருவர்
- பன்னிரண்டாம் திருமுறை – சேக்கிழார் (பெரியபுராணம்)
- திருமுறைகளை தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
இவர் 11 திருமுறைகளை மட்டுமே தொகுத்தார்
பெரியபுராணம் பின்னால் எழுதப்பட்டது. - திருமுறைகளைதொகுப்பித்தவன் முதலாம் ஆதித்த சோழன்
முதலாம் ராஜராஜன் திருமுறை கண்ட சோழன் எனப்படுகிறான் - முதல் ஏழு திருமுறைகள் மூவர் தேவாரம் எனப்படும்.
இதற்கு மூவர் தமிழ் என்று வேறு பெயரும் உண்டு. - திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் – மூவர் முதலிகள்எனப்படுவர்.
- சைவ சமயக் குரவர்கள் நால்வர்
1. திருஞானசம்பந்தர்
2. திருநாவுக்கரசர்
3. சுந்தரர்
4. மாணிக்கவாசகர்
- பன்னிரு திருமுறைகளையும் பாடியவர்கள் மொத்தம் 27 பேர்.
திருஞானசம்பந்தர்
- இயற்பெயர் : ஆளுடைய பிள்ளை
- பெற்றோர் – சிவபாத இருதயர் – பகவதி அம்மையார்
- பிறந்த ஊர் – சீர்காழி
- இவர் பாடியவை: 1,2,3 திருமுறைகள்
சிறப்பு:
- 23 இசைகளில் பாடியுள்ளார்.
- யாழ்முறி இவருக்கு மட்டுமே உரியது.
- திராவிட சிசு – ஆதிசங்கரரால் போற்றப்பட்டார்.
- நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர் – சுந்தரர்
செய்த அற்புதங்கள்
- மழவன் மகளுக்கு ஏற்பட்ட கடுமையான முயலகன் என்னும் நோயைப் போக்கினார்.
- கூன் பாண்டியன் வெப்பு நோயைப் நீக்கினார்.
- திருமறைக்காட்டுக் கோவிலின் கதவை தம் பாட்டால் மூடும்படி செய்தார்.
- திருவோத்தூரில் ஆண் பனையைப் பெண் பனையாக்கி அற்புதம் செய்தார்.
திருநாவுக்கரசர்
- இயற்பெயர்: மருள் நீக்கியார்
- பெற்றோர் : புகழனார், மாதினியார்
- அக்கா : திலகவதியார்
- பிறந்த ஊர்: திருவாமூர்
- இவர் பாடியவை: 4,5,6 திருமுறைகள்
- சிறப்பு பெயர்கள்:
திருநாவுக்கரசர்,
வாகீசர்,
அப்பர்,
ஆளுடைய அரசு,
தாண்டக வேந்தர்,
தருமசேனர் - சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் -தமக்கை திலகவதியார்
- முதலாம் மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் .
- கல்லையே தெப்பமாகக் கொண்டு கரை ஏறியவர்
- திங்களூரில் பாம்பு தீண்டி இறந்தவரை உயிர்ப்பித்தார்.
- திருமறைக்காட்டுக் கோவில் கதவை திறக்க செய்தார்.
சுந்தரர்
- இயற்பெயர்: நம்பி ஆரூரார் / ஆரூரார்
- பெற்றோரோர்: சடையனார் – மாதினியார்
- இவர் பாடியவை: 7 திருமுறை
சிறப்பு பெயர்கள் :
- வன் தொண்டர்
- தம்பிரான் தோழர்
- திருத்தொண்டத்தொகை பாடியவர் சுந்தரர்
மாணிக்கவாசகர்
- இயற்பெயர் தெரியவில்லை
- பெற்றோர் : சம்புபாதசாரியார் – சிவஞானவதி
- இவர் பாடியவை: 8 திருமுறை
சிறப்பு பெயர்கள்
- அருள் வாசகர்
- மணிவாசகர்
- அழுது அடியடைந்த அன்பர்
- தென்னவன் பிரமராயர்
- மாணிக்கவாசகர் (இவர் பாடல்கள் ஒவ்வொன்றும் மாணிக்கம் போல் உள்ளதால் )
நூல்கள்
- திருக்கோவையாரும் திருவாசகமும் இவர் பாடியவை
ஒன்பதாம் திருமுறை ( திருவிசைப்பா)
- 9 பேர் பாடியது
பத்தாம் திருமுறை ( திருமந்திரம்)
- திருமூலர்
- திருமந்திரத்திற்கு திருமூலர் இட்ட பெயர் திருமந்திர மாலை
- திருமந்திரத்தின் வேறு பெயர்கள்: தமிழ் மூவாயிரம்
- முதல் சித்த நூல் யோக நெறியை கூறும் தமிழர் நூல்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இந்நூலின் சிறப்பு
பதினொன்றாம் திருமுறை (பிரபந்த மாலை)
- 12 பேர் பாடியுள்ளனர்
- 40 நூல்கள் உள்ளன
- திருவாலவாயுடையார் (1)
- காரைக்காலம்மையார் (நான்கு நூல்கள்)
- கல்லாடர் (1)
- நக்கீரர் (10)
- கபிலர் (3)
- பரணர் (1)
- அதிரா அடிகள் 1
- இளம்பெருமான் அடிகள் (1)
- ஐயடிகள் (1)
- சேரமான் பெருமான் நாயனார் (3)
- பட்டினத்தார் (5)
- நம்பியாண்டார் நம்பி (ஒன்பது நூல்கள் )
- தமிழ் வியாசர் என அழைக்கப்படுபவர் நம்பியாண்டார் நம்பி
64 நாயன்மார்களை பற்றி திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர்
காரைக்கால் அம்மையார்
- இயற்பெயர் புனிதவதியார்
- காரைக்கால் – வணிக மரபினர்
- சைவசமய எழுச்சிக்கு வித்திட்ட முன்னோடி
12ம் திருமுறை (பெரியபுராணம்)
- சேக்கிழார்
- இயற்பெயர்: அருண்மொழித்தேவர்
சிறப்பு பெயர்கள் :
- உத்தம சோழப் பல்லவன்
- தொண்டர் சீர் பரவுவார்
நூல் அமைப்பு:
- இரண்டு காண்டம் 13 சருக்கம் 4286 பாடல்கள்
- உலகெலாம் என்று இறைவனே அடியெடுத்துக் கொடுக்க பாடப்பட்ட நூல்
63 நாயன்மார்களில் மூவர் பெண்கள்
- காரைக்கால்
- அம்மையார்
- இசைஞானியார்
- மங்கையர்க்கரசி
நாலாயிர திவ்ய பிரபந்தம்
- ஆழ்வார்களின் பாடல்கள் திவ்வியப்பிரபந்தம் என்று அழைக்கப்படுகின்றன. திராவிட வேதம் என்றொரு பெயரும் இதற்கு உண்டு.
- ஆழ்வார்கள் திருமாலின் பக்தியில் – அன்பில் – அருளில் – தோற்றத்தில் ஆழ்ந்தவர்கள் எனலாம்.
- முதலாழ்வார்கள்:
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்.
ஆழ்வார்கள் – பாசுரங்களின் எண்ணிக்கை
1.பொய்கை ஆழ்வார்- 100
2.பூதத்தாழ்வார்- 100
3.பேயாழ்வார்- 100
4.திருமழிசை ஆழ்வார்- 216
5.மதுரகவி ஆழ்வார்- 11
6.நம்மாழ்வார்- 1296
7.குலசேகர ஆழ்வார்-105
8.பெரியாழ்வார்- 473
9.ஆண்டாள்- 173
10.தொண்டரடிப் பொடி ஆழ்வார்- 55
11.திருப்பாணாழ்வார்- 10
12.திருமங்கை ஆழ்வார்- 1137
பொய்கையாழ்வார்
- பிறந்த ஊர் : காஞ்சிபுரம்- பொய்கையில் அவதரித்தவர்,
- காலம் : 7ம்நூற்றாண்டு
- நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம்
- எழுதிய நூல் : முதல் திருவந்தாதி
- பாடல்கள் : 100
பூதத்தாழ்வார்
- பிறந்த ஊர் : மகாபலிபுரம்
- காலம் : 7ம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி
- பாடல்கள் : 100
பேயாழ்வார்
- பிறந்த ஊர் : மயிலாப்பூர்
- காலம்: ஏழாம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி
- பாடல்கள் : 100
திருமழிசையாழ்வார்
- பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)
- காலம் : கி.பி.7ம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத விருத்தம்
- பாடல்கள் : 216
பெரியாழ்வார்
- பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிப்புத்தூர்
- காலம்: 9ம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : பெரியாழ்வார் திருமொழி
- பாடிய பாடல் : 473
ஆண்டாள்
- பிறந்த ஊர் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
- வளர்ப்புத்தந்தை : பெரியாழ்வார்
- காலம் : 9ம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி
- பாடிய பாடல் : 173
தொண்டரடி பொடியாழ்வார்
- இயற்பெயர் : விப்ர நாராயணன்
- பிறந்த ஊர் : திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)
- காலம் : எட்டாம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : திருமாலை, திருப்பள்ளி எழுச்சி
- பாடிய பாடல் : 55
திருமங்கையாழ்வார்
- பிறந்த இடம் : திருக்குறையலூர்
- காலம் : எட்டாம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை, பெரிய திருமடல்,சிறிய திருமடல்.
- பாடிய பாடல் : 1253
திருப்பாணாழ்வார்
- பிறந்த ஊர் : உறையூர் (திருச்சி)
- காலம் : எட்டாம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : அமலனாதிபிரான்
- பாடிய பாடல் : 10
குலசேகர ஆழ்வார்
- பிறந்த இடம் : திருவஞ்சைக்களம்
- காலம் : எட்டாம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : பெருமாள் திருமொழி
- பாடிய பாடல் : 105
நம்மாழ்வார்
- பிறந்த ஊர் : ஆழ்வார் திருநகரி
- பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி
- எழுதிய நூல் : பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம்,திருவாய்மொழி
- பாடல்கள் : 1296
மதுரகவி ஆழ்வார்
- பிறந்த ஊர் : திருக்கோளூர்
- காலம் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி
- எழுதிய நூல் : கண்ணி நுண் சிறுத்தாம்பு
- பாடல்கள் : 96
