-
0 Comments
மூன்றாம் பருவம் அலகு 1 பாடக்குறிப்புகள்
அலகு – 1: தொல் பழங்கால வரலாறும் சங்ககால வரலாறும்
தொல் பழங்காலம், லெமூரியா மற்றும் கற்காலங்கள்
I. தொல் பழங்கால வரலாறு
-
வரையறை: எழுத்துச் சான்றுகள் இல்லாதக் காலத்தில், மனிதன் வாழ்ந்து சென்ற எச்சங்களைக் கொண்டு வரலாற்றை அறிதல்.
-
கற்காலம்: வாழ்விற்குக் கற்களைப் பயன்படுத்திய காலம்; வேட்டையாட கருவிகளை மாற்றச் சிந்தித்த காலம்.
II. லெமூரியா கோட்பாடு
-
ஆதிமனிதன்: உலகில் முதன்முதலில் ஆதிமனிதன் தோன்றியதாகக் கருதப்படுவது தென்னிந்தியா.
-
லெமூரியா: தென்னிந்தியாவுக்குத் தெற்கில் இருந்த ‘லெமூரியா’ கண்டத்தில்தான் முதல் மக்களினம் தோன்றினர். இவர்களே தமிழ்நாட்டின் ‘ஆதி குடிகள்’.
-
சான்றுகள்: இப்போதுள்ள தென்னிந்தியா, இலங்கை, கிழக்கிந்தியத் தீவுகளில் வாழ்வோரிடம் இன ஒற்றுமை, உடற்கூறு ஒற்றுமை, மொழி ஒற்றுமை காணப்படுகிறது. ‘பூமராங்’ (வேட்டைக் கத்தி) பயன்பாடும் ஒற்றுமை காட்டுகிறது.
III. கற்கால வகைகள்
-
-
பழங்கற்காலம் 2. புதிய கற்காலம் 3. உேலாகக் காலம்.
-
IV. பழங்கற்காலம்
-
வாழ்வியல்: விலங்குகளை வேட்டையாடியும், கிழங்குகளைச் சேகரித்தும் வாழ்ந்தனர்; ‘உணவை சேகரிப்போர்’ என அழைக்கப்பட்டனர். நாடோடி வாழ்க்கை வாழ்ந்தனர்.
-
கருவிகள்: கற்களால் ஆன பலவகை கோடாரிகள், ஈட்டிகள், கத்திகள்.
-
முக்கிய இடங்கள்: அத்திரம்பாக்கம் (சென்னை அருகில்), பிம்பேட்கா (ம.பி.), கர்நூல்.
-
பண்பாடு: நெருப்பை உண்டாக்கக் கற்றுக்கொண்டனர். சைகையால் கருத்துப் பரிமாற்றம் செய்தனர். கிராமதேவதைகளை ஆயுதம்/கல் உருவம் வைத்து வழிபட்டனர்.
V. புதிய கற்காலம்
-
முன்னேற்றம்: மனித நாகரீகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்; பயிர்த்தொழிலில் ஈடுபட்டு நீர்நிலைகள் அருகே நிலைத்து வாழத் தொடங்கினர்.
-
வேளாண்மை: நெல், சோளம், பருப்பு வகைகள், பழ வகைகள் பயிரிட்டனர்.
-
வாழ்விடம்: மண் சுவர்கள், ஓலை/தட்டை கூரைகள் கொண்டு குடில்கள் அமைத்தனர்.
-
இடங்கள்: மாஸ்கி, பிரம்மகிரி (கர்நாடகம்), பையம்பள்ளி (தமிழ்நாடு).
-
இறந்தவரைப் புதைக்கும் முறை: பெரிய தாழியில் உடலை உட்கார்ந்த நிலையில் வைத்தனர். தாழி மீது கற்பலகையை வைத்து, அதைச் சுற்றிலும் செங்குத்தான கற்களை நட்டு வைத்தனர்.
VI. உலோகக் காலம், பெருங்கல் காலம்
-
மாற்றம்: கற்கருவிகளைவிட இரும்புக் கருவிகள் சிறந்தவை என உணர்ந்தனர்.
-
செம்புக் கற்காலம்: செம்பு மற்றும் வெண்கலம் பயன்படுத்தப்பட்டன. ஹரப்பா பண்பாடு இதன் பகுதி. பையம்பள்ளியில் வெண்கலம், செம்புப் பொருட்கள் கிடைத்துள்ளன.
-
பெருங்கல் காலம்/இரும்புக் காலம்: தென்னிந்தியாவில் சமகாலம் எனக் கருதப்படுகிறது.
-
மெகாலித்: ‘பெரிய கல்’ என்று பொருள்; கல்லறையின்மேல் சுற்றி அடுக்கப்பட்ட கற்களைக் குறிக்கிறது.
-
கல்லறைப் பொருட்கள்: கருப்பு சிகப்பு வண்ணத்தாளான பானையோடுகள், இரும்பாலான மண்வெட்டி, அரிவாள், சிறு ஆயுதங்கள்.
-
முக்கிய இடங்கள்: ஹல்லூர், மாஸ்கி, நாகார்ஜுனீ கொண்டா, ஆதிச்சநல்லூர்.
VII. முக்கிய அகழ்வாராய்ச்சிகள்
-
அகழாய்வு நோக்கம்: பண்பாட்டின் மேன்மைகளை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லுதல்.
-
அரிக்கமேடு: புதுச்சேரி அருகில். முக்கிய கட்டடம்: ‘பண்டக சாலை’. கண்டுபிடிப்புகள்: தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், ரோமானியப் பழங்காசுகள். சாயப் பட்டறைகள் இருந்தன.
-
ஆதிச்சநல்லூர்: தாமிரபரணி ஆற்றங்கரை (தூத்துக்குடி). தாழிகள் பயன்படுத்தப்பட்டன. கிடைத்தவை: மனித எலும்புக்கூடுகள், கருப்பு – சிவப்பு பானையோடுகள், தங்கத்திலான நெற்றிப்பட்டம், கத்தி, வாள் போன்ற இரும்புப் பொருள்கள்.
VIII. சிந்துவெளி நாகரிகம்
-
கண்டுபிடிப்பு: 1922-ஆம் ஆண்டு சர். ஜான் மார்சல்.
-
பெயர்: மொகஞ்சதாரோ என்பதற்கு ‘இறந்தவர்களின் நகரம்’ என்று பொருள்.
-
உலோகப் பயன்பாடு: வெண்கலம், செம்பு பயன்படுத்தினர்; இரும்பை அறியாதவர்களாக இருந்தனர்.
-
நகர அமைப்பு: மதில்கள், 100 அடி நீள நீராடும் மண்டபம், சுட்ட செங்கற்கள், சீரான தெருக்கள். மூடப்பட்ட கழிவுநீர் வடிகால் அமைப்பு.
-
சமயம்: சக்தி வழிபாடு, சிவலிங்க வழிபாடு (சைவசமயம் மிகப் பழைமையானது).
IX. கீழடி அகழாய்வு
-
இடம்: வைகை ஆற்றங்கரை, சிவகங்கை மாவட்டம்.
-
காலக்கணிப்பு: கி.மு. 6ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நகரமயமாக்கல் இருந்ததை உறுதி செய்கிறது. மக்கள் எழுத்தறிவும் நகர நாகரிகமும் பெற்றிருந்தனர்.
-
சிறப்பு: இது ஒரு ‘தொழில் நகரமாக’ இருந்தது.
-
கட்டுமானம்/தொழில்: செங்கல் கட்டுமானம், சுடுமண்ணாலான உறை கிணறுகள், வீடுகள்தோறும் குளியலறைகள். நூல் நூற்கும் தக்களி கிடைத்தது.
-
எழுத்தறிவு: 60க்கும் மேற்பட்ட தமிழ் பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. (குவிரன் ஆதன், ஆதனி போன்ற பெயர்கள்).
-
வணிகம்: கங்கைச் சமவெளியில் வெள்ளி முத்திரைக் காசுகள், ரோமானிய உயர்ரக மண்பாண்டங்கள் (அழகன்குளம் மற்றும் கீழடியில்) கிடைத்துள்ளன.
சங்ககாலத் திணை வாழ்வியல்
X. திணை வாழ்வியல்
-
திணை: குலம், நிலம், ஒழுக்கம் ஆகியவற்றைக் குறிக்கும்.
-
வகை: அகத்திணை (காதல்) மற்றும் புறத்திணை (வீரம், கொடை).
-
முப்பொருள்: முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்.
XI. முதற்பொருள் (நிலமும் பொழுதும்)
-
நிலம்: குறிஞ்சி (மலை), முல்லை (காடு), மருதம் (வயல்), நெய்தல் (கடல்), பாலை (வறட்சி).
-
பொழுது: சிறுபொழுது (ஒரு நாளின் 6 காலப் பிரிவுகள்), பெரும்பொழுது (ஓர் ஆண்டின் 6 காலப் பிரிவுகள்).
XII. உரிப்பொருள் (ஒழுக்கம்)
-
குறிஞ்சி – புணர்தல் (ஒன்று சேர்தல்).
-
முல்லை – இருத்தல் (பிரிவைப் பொறுத்தல்).
-
மருதம் – ஊடல் (பிணக்குக் கொள்ளுதல்).
-
நெய்தல் – இரங்கல் (வருந்துதல்).
-
பாலை – பிரிவு (பிரிந்து செல்லுதல்).
XIII. ஐவகை நில மக்கள் வாழ்வு
-
குறிஞ்சி: வேட்டையாடி வாழ்ந்தனர். முருகனை வழிபட்டனர்.
-
முல்லை: ஆடு, மாடு மேய்த்து வாழ்ந்தனர். வரகு, சாமை பயிரிட்டனர். திருமாலை வழிபட்டனர்.
-
மருதம்: நாகரிக வளர்ச்சி பெற்ற பகுதி. பருத்தி பயிரிட்டு ஆடை நெய்தனர். இந்திரனை வழிபட்டனர்.
-
நெய்தல்: மீன் பிடித்தல், முத்துக் குளித்தல். கடல் இவர்களது ‘உழுநிலம்’. வருணனை வழிபட்டனர்.
-
பாலை: மக்கள் ‘எயினர்’. தொழில் ‘வழிப்பறி செய்தல்’. கொற்றவையை வழிபட்டனர்.
XIV. புறத்திணை (போர்த் திணைகள்)
-
போரின் அடிப்படை: போரிடும் முறைக்கு ஏற்ப பூக்களை அணிந்து செல்லுதல்.
-
முக்கிய திணைகள்:
-
வெட்சி (பசுக்கூட்டங்களைக் கவர்தல்).
-
கரந்தை (மீட்டுவரச் செய்யும் போர்).
-
வஞ்சி (நாட்டைப் பிடிப்பதற்காகப் படையெடுத்தல்).
-
காஞ்சி (நாட்டைக் காக்கப் போரிடுதல்).
-
நொச்சி (கோட்டையைக் காக்கப் போரிடுதல்).
-
உழிஞை (கோட்டையைச் சுற்றி முற்றுகையிடுதல்).
-
தும்மை (எதிரெதிரே நின்று போரிடுதல்).
-
வாகை (வெற்றி பெற்ற அரசனைப் புகழ்தல்).
-
சங்ககால வாழ்வியல் (களவு, கற்பு, உணவு, வாணிகம்)
XV. களவு வாழ்வு
-
களவு வரையறை: ஒருவனும் ஒருத்தியும் தமக்குள் கண்டு காதல் கொள்ளும் ஒழுக்கம்; பிறர் அறியாதபடி மறைவாக நிகழும்.
-
வகை: காமப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கொடு தழாஅல், தோழியிற் கூட்டம்.
-
வரைவு கடாஅதல்: திருமணம் செய்து கொள்ளுமாறு தோழி வற்புறுத்துவாள்.
-
மடேலறுதல்: களவில் வெற்றி பெற, பனைமடலால் செய்யப்பட்ட குதிரை மீது ஏறி காதலை வெளிப்படுத்துவது.
-
எண்வகை மணங்கள்: நால்வேத நெறியினர் வகுத்த பிரமம்… கந்தர்வம் (காதலர்கள் தாமே கூடி இன்புறுவது – களவு வாழ்வு) உள்ளிட்ட எட்டு வகைகள் இருந்தன.
XVI. கற்பு வாழ்வு (திருமண வாழ்வு)
-
கற்பு வரையறை: திருமணம் நிகழ்ந்த பிறகு, தைலமக்கள் மேற்கொள்ளும் இனிய இல்லற வாழ்க்கை.
-
ஊடல்: தலைவன் பரத்தையர் முதலான பிற பெண்களுடன் உறவு கொள்வதால் தலைவி கொள்ளும் கோபம்.
-
கற்பில் பிரிவு: கல்வி காரணமாக (ஓதல்), காவல் காரணமாக, பொருள் தேட (பொருள்வயிற் பிரிவு) உட்பட 6 பிரிவுகள்.
XVII. சங்ககால உணவு
-
சமையல் நூல்: உணவு சமைக்கும் முறைகளைக் கூறும் நூல் ‘மடைநூல்’.
-
உணவு வகைகள்: தினையரிசியும் பாலும் கலந்த பால்சோறு, இறைச்சியும் அரிசியும் கலந்த ஊன் துைவ அடிசில். ஊன் உணவும் கள்ளும் எல்லோராலும் உண்ணப்பட்டன.
-
கறி/ஊறுகாய்: அசைவ உணவே பெருவழக்கு. ஊறுகாய் ‘காடி’ என அழைக்கப்பட்டது.
-
கள்/மது: கடும் புளிப்புடன் கூடிய கள் விரும்பப்பட்டது. புறநானூறு இதனை ‘தேட்கடுப்பன்ன நாட்படு தேறல்’ எனக் குறிப்பிடுகிறது. யவன மதுவும் (ரோம ஒயின்) பருகினர்.
-
உண்ணும் முறை: வாழையிலை அல்லது தேக்கிலையில் சுடச்சுட உண்டனர்.
XVIII. அணிகலன்கள்
-
பயன்பாடு: பொன்னாலும், நவமணிகளாலும் ஆன அணிகலன்கள் மதிப்புப் பெற்றைவ.
-
பெண்கள்: கழுத்தில் தாலி, கொத்தமல்லி மாலை, அட்டிகை; கையில் சங்கு மற்றும் எலும்பால் ஆன வளையல்கள்; காலில் மாம்பிஞ்சு கொலுசு, காலில் மெட்டி.
-
ஆண்கள்: வீரக்கழல், வீரக் கண்டை, அரைநாண், பதக்கம், கடுக்கண், குண்டலம்.
XIX. வாணிகம்
-
சிறப்பு: உழவும் வாணிகமும் இருபெரும் உற்பத்தித் தொழில்கள். வாணிகர் ‘அரசர் பின்னோர்’ எனப் பெருைமயுடன் அழைக்கப்பட்டனர்.
-
கடல் வாணிகம்: கடற்காற்றின் உதவியால் ‘நாவாய்’ (கப்பல்) ஓட்டினர்.
-
தரை வாணிகம்: அயல்நாடுகளுக்கு வணிகர்கள் ஒன்றாகச் சென்றார்கள் ‘வணிகச் சாத்து’ எனப்பட்டனர்.
-
பண்ட மாற்று முைற: அரிசி, உப்பு, பால் போன்றவற்றுக்கு பண்டமாற்று. உப்புக்கு நெல் மாற்றப்பட்டது.
-
ஏற்றுமதி: மிளகு, முத்து, இரத்தினம், தந்தம். ஏற்றுமதியில் நான்கில் மூன்று பங்கு மிளகு.
-
இறக்குமதி: யவனக் கப்பல்கள் “பொன்னோடு வந்து மிளகொடு பெயரும்” (திரும்பிச் செல்லும்). அரபுநாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி.
கல்வி, கலை, தமிழ்ச் சங்கங்கள் மற்றும் ஆட்சி முறை
XX. கல்வியும் அறிவியலும்
-
கல்வியின் உயர்வு: ‘கேடில் விழுச்செல்வம் கல்வி’ (குறள் 400).
-
ஆசிரியர்கள்/பள்ளிகள்: ஆசிரியர் ‘கணக்காயர்’ எனப்பட்டனர். கல்வி பயிலும் இடம் ‘பள்ளி’ (பெரும்பாலும் திண்ணைகளில்).
-
நூல்கள்: மாணவர்கள் ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதினர். இலக்கண நூல்கள்: தொல்காப்பியம், காக்கைப்பாடினியம். கணித நூல்: ‘ஏரம்பம்’.
-
வானவியல்: வானவியல் புலவர்களுக்கு ‘கணிகள்’ என்று பெயர்.
-
பெண் கல்வி: ஒளவையார், காக்கைப்பாடினியார் போன்ற பெண்பாற் புலவர்கள் மூலம் சங்க காலத்தில் பெண்கள் கல்வி கற்றனர் என்பதை அறிய முடிகிறது.
XXI. கலைகள்
-
அ. ஓவியக் கலை: ஓவியர்கள் ‘கண்ணுள் வினைஞர்’. ஓவியம் வரையும் கோல் ‘துகிலிகை’. ஓவியங்கள் வைக்கப்பட்ட இடம் ‘சித்திரமாடம்’.
-
ஆ. இசைக்கலை: ‘கந்தருவ வேதம்’ என்று அழைக்கப்பட்டது. ஏழு சுரங்கள் (தாரம், உழை…), சீறியாழ், பேரியாழ் போன்ற யாழ் வகைகள்.
-
இ. கூத்துக் கலை: வள்ளிக்கூத்து (பெண்கள்), குரவைக் கூத்து (மலைவாழ் மக்கள்), துணங்கைக் கூத்து. சிலப்பதிகாரத்தில் 11 வகைக் கூத்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
-
ஈ. நாடகக் கலை: நாடகம் = ‘நாடு + அகம்’. மூவகைத் திரைச்சீலைகள் பயன்படுத்தப்பட்டன.
-
பம்மல் சம்பந்தனார் ‘தமிழ் நாடக தந்தை’.
-
XXII. தமிழ் வளர்த்த சங்கங்கள்
-
பாண்டியர்கள் சங்கங்களை நிறுவித் தமிழ்ப் பணியாற்றினர். சங்கங்கள் மூன்று இருந்த விவரத்தை இறையனார் களவியல் உரையே முதன்முதல் சான்று தருகிறது.
-
முதற்சங்கம்: தென்மதுரை (4440 ஆண்டுகள்). (அகத்தியர், முருகவேள்).
-
இடைச்சங்கம்: கபாடபுரம் (3700 ஆண்டுகள்). (அகத்தியர், தொல்காப்பியர்).
-
கடைச்சங்கம்: தற்போதைய மதுரை (1850 ஆண்டுகள்). (நக்கீரனார்). சங்க இலக்கியங்கள் இங்கு எழுதப்பட்டன.
XXIII. சங்க கால ஆட்சி முறை
-
ஆட்சி: மூவேந்தர்களும் (சேரர், சோழர், பாண்டியர்) கடையேழு வள்ளல்களும் ஆட்சி புரிந்தனர்.
-
சேரர்: தலைநகரம் வஞ்சி, துறைமுகங்கள் முசிறி, தொண்டி. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எழுப்பினான்.
-
சோழர்: சிறப்பு வாய்ந்தவன் கரிகாற்சோழன். வெண்ணிப்போர்.
-
காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையை அமைத்தான்.
-
-
பாண்டியர்: தலைநகரம் மதுரை. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
-
நிர்வாகக் குழுக்கள்: ஐம்பெருங்குழு, எண்பேராயம்.
-
ஊர் நிர்வாகம்: குடேவாலை முறையில் ஊரவையினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
-
வருவாய்: நிலவரி (விளைச்சலில் ஆறில் ஒரு பாகம்).
-
நாணயங்கள்: சேரர் (வில்), சோழர் (புலி), பாண்டியர் (மீன்) சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
XXIV. அயல்நாட்டுத் தொடர்புகள்
-
நாடுகள்: மேலை நாடுகள் (கிரேக்கம், உரோமம், எகிப்து, அரேபியா) மற்றும் கீழை நாடுகள் (சீனம், சாவகம்).
-
முசிறி/கொற்கை: முசிறியில் மிளகும், கொற்கையில் முத்தும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
-
யவனத் தொடர்பு: உரோமர்கள் பொன்னோடு வந்து மிளகொடு திரும்பிச் சென்றனர். உரோமர்களுக்குத் தமிழகத்தில் இருந்த தனி இருப்பிடங்கள் ‘யவனச் சேரி’ எனப்பட்டன.
-
அரேபியத் தொடர்பு: அரபுநாட்டிலிருந்து ஆண்டுேதாறும் 10,000 குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன.
-
சீனத் தொடர்பு: ஈயம், செம்பு, பவளம், சீனப்பட்டாடை இறக்குமதி ஆயின.
