-
0 Comments
இரண்டாம் பருவம் – அலகு-2 பாடக்குறிப்புகள்
- கலிங்கத்துப் பரணி
-
-
காலத்தால் முற்பட்டது: பரணி நூல்களிலேயே காலத்தால் முற்பட்டது கலிங்கத்துப் பரணி ஆகும்.
-
பாட்டுடைத் தலைவன்: முதல் குலோத்துங்க சோழன் கலிங்க நாட்டின் மீது படை எடுத்து பெற்ற வெற்றியைச் சிறப்பித்துப் பாடியதே இந்நூல்.
-
சிறப்புப் பெயர்: இந்நூல் “தென்தமிழ்த் தெய்வப்பரணி” என்று சிறப்பிக்கப்படுகிறது.
-
ஆசிரியர்: செயங்கொண்டார்.
-
காலம்: 11-12 ஆம் நூற்றாண்டு.
-
பணி: இவர் முதற்குலோத்துங்க சோழனின் அவைக்களப் புலவர் ஆவார்.
-
பாராட்டு: பலபட்டடை சொக்கநாதர் இவரை “பரணிக்கோர் செயங்கொண்டார்” என்று பாராட்டி உள்ளார்.
-
பிற நூல்கள்: கலிங்கத்துப்பரணி தவிர, இவர் இசை ஆயிரம், உலாமடல் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.
-
-
போர்க்களக் காட்சிகள் (கலிங்கத்துப் பரணி)
-
வீரர்களின் முகமலர்ச்சி: விருந்தினர்களும், ஏழைகளும் தொடர்ந்து வந்து உணவு உண்பதைக் கண்ட வள்ளலைப் போல, பருந்துக் கூட்டமும், கழுகுக் கூட்டமும் தம் உடலைக் கொத்தித் தின்பதைக் கண்டு, இறந்து கிடக்கும் வீரர்களின் திருமுகங்கள் தாமரை மலர்போல மகிழ்ச்சியால் மலர்ந்திருந்தன.
-
நரிக்கூட்டத்தின் செயல்: பிறர்க்குக் கொடுத்து உதவாதவர் இறந்த பின்பு அவருடைய பொருள்களைக் கவர்ந்து செல்லும் பேதைகளைப் போல, நரிக்கூட்டம் வீரர்கள் உயிரோடு இருக்கும் வரையில் அருகிலேயே இருந்துவிட்டு, உயிர் போன பின்பும் கூட அவர்களை விட்டு அகலாமல் இருக்கின்றன.
-
மகளிரின் செயல்: யானைகள் உயிருடன் இருந்தவரை அதன் மதநீரை உண்ட வண்டுகள், மதயானைகள் இறந்ததும் அவற்றை வெறுத்து ஒதுக்கின. வண்டுகள், வானுலகத்தவர் மன்னன் பெற்ற வெற்றி கண்டு பொழியும் பூக்களில் உள்ள தேனை உண்ண மேலே பறந்து சென்று விட்டன. இச்செயல், பொருள் உள்ளவரை கூடி இருந்துவிட்டு, பொருள் தீர்ந்தவுடன் நீங்கி வேறு ஒருவனைத் தேடி அடையும் விலைமகளிரைப் போன்றது.
-
வீரரது மனைவிகளின் செயல்கள்: போர்க்களத்தில் உயிர் நீத்து விழுந்து கிடக்கும் மத யானைகளுடன் மன்னர்களின் கொடிகள் பிணைந்து கிடக்கும் காட்சி, உயிர் நீங்கிய தங்கள் கணவர்களுடன் நெருப்பில் உடன்கட்டை ஏறிய பெண்கள் போல் இருக்கிறது.
-
இடாகினி பேயின் வினவல்: கற்புடைய மகளிர் போரில் இறந்துவிட்ட தங்கள் கணவருடன் வீர சொர்க்கம் அடைய வேண்டி, போர்க்களம் முழுவதும் தங்கள் கணவர் உடலைத் தேடியும் காண முடியாத நிலையில், பிணங்களைத் தின்னும் இடாகினிப் பேயிடம், “எம் கணவர் உடல் கிடக்கும் இடம் எங்கே?” என்று கேட்பதைக் காணலாம்.
2. திருக்குற்றாலக் குறவஞ்சி
-
பெயர்க்காரணம்: குற்றாலம் என்ற இடத்தின் பெயரால் இந்நூல் திருக்குற்றாலக் குறவஞ்சி எனப் பெயர் பெற்றது.
-
வேறுபெயர்: குறவஞ்சி நாடகம்.
-
பாட்டுடைத் தலைவன்: குற்றால நாதர்.
-
பாட்டுடைத் தலைவி: வசந்தவல்லி.
-
பாடல்கள்: 128 பாடல்களைக் கொண்டது.
-
நூலாசிரியர்: திரிகூடராசப்பக் கவிராயர்.
-
பணி: இவர் சின்னணஞ்சாத் தேவரின் அவைக்களப் புலவர்.
-
அரங்கேற்றம்: திருக்குற்றாலநாதரின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது.
-
பாராட்டு: மதுரை மன்னனான முத்துவிஜயரங்க சொக்கநாத நாயக்கரின் பாராட்டைப் பெற்றவர்.
-
-
குற்றால மலையின் வளம் (குறத்தி கூற்று):
-
குற்றால மலையில் உள்ள ஆண் குரங்குகள் பழங்களைப் பறித்து மந்திகளுக்குக் கொடுத்து மகிழும்.
-
மந்தி சிந்திய பழங்களை வானுலகில் வாழும் தேவர் கூட்டம் விரும்பிக் கேட்கும்.
-
வேடர்கள் தங்கள் கண் பார்வையால் உற்று நோக்கித் தேவர்களை அழைப்பார்கள்.
-
சித்தர்கள் இம்மலைக்கு வந்து உடலுக்கு நன்மை அளிக்கும் யோகங்கள் என்னும் சித்து வேலைகளைச் செய்வார்கள்.
-
தேன்கலந்த மலை அருவியின் அலைகள் மேல் நோக்கி உயர்ந்து பாய்ந்து வானத்தில் இருந்து வழிந்தோடும்.
-
இதனால் செந்நிறச் சூரியனின் தேரில் பூட்டிச் செல்லும் குதிரைக் கால்களும் தேர்ச் சக்கரமும் வழுக்கி விழும்.
-
இம்மலை, வளைந்த இளம் பிறையைச் சூடிய சடை முடியுடைய திருக்குற்றாலநாதராகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள சிறப்பு மிக்கது என்று குறத்தி மலைவளம் கூறுகிறாள்.
-
3. முக்கூடற்பள்ளு
-
தொன்மை: இது பள்ளு நூல்களில் தொன்மையானது.
-
மூன்று ஆறுகள்: தாமிரபரணி ஆறு, சிற்றாறு, கயத்தாறு ஆகிய மூன்று ஆறுகளைக் குறிப்பிடுகிறது.
-
பாட்டுடைத் தலைவன்: சீவலபேரி என்ற ஊரில் கோவில் கொண்டுள்ள அழகர் மீது பாடப்பட்டதே முக்கூடற்பள்ளு.
-
வேறு பெயர்கள்: அவ்வூரில் அழகர், ‘செண்டு அலங்காரர்’ என்றும் குறிப்பிடப்படுகிறார்.
-
காலம்: கி.பி. 17 ஆம் நுற்றாண்டு.
-
குறிப்பிடப்படும் செல்வர்கள்: காவை வடமலைப் பிள்ளையன், ஆறை அழகப்ப முதலியார், திருமலைக் கொழுந்துப் பிள்ளையன்.
-
ஆற்றில் வெள்ளம் வருவதற்கான அறிகுறிகள் (பள்ளர்கள் கூற்று):
-
தென்மேற்குத் திசையில் மலையாள மின்னல் மின்னிக் கொண்டுள்ளது.
-
தென் கிழக்குத் திசையில் ஈழத்து மின்னல் மின்னிக் கொண்டுள்ளது.
-
நேற்றும் இன்றும் மரக்கொம்புகளைச் சுற்றியவாறு காற்று அடிக்கிறது.
-
கிணற்றில் உள்ள சொறித்தவளைகள் கூப்பாடு போடுகின்றன.
-
நண்டுகள் வளைகளுள் மழைநீர் புகுந்து விடாதபடி வாயில்களைச் சேற்றினால் அடைக்கின்றன.
-
மழை நீரைத் தேடிக் கோடி வானம்பாடிகள் அங்கும் இங்கும் பறக்கின்றன.
-
இந்த அறிகுறிகளைக் கண்ட பள்ளர்கள் யாவரும் துள்ளி ஆடியிருக்கின்றார்கள்.
-
4. அபிராமி அந்தாதி
-
பாட்டுடைத் தலைவி: அபிராமி.
-
ஊர்: திருக்கடவூர்.
-
இயற்றியவர்: அபிராமி பட்டர்.
-
பாடல்கள்: 102 பாடல்கள்.
-
அபிராமி பட்டர்:
-
இயற்பெயர்: சுப்ரமணிய ஐயர்.
-
காலம்: 18-19 ஆம் நுற்றாண்டு.
-
நூல்கள்: அபிராமி அந்தாதி, அபிராமி அம்மைப்பதிகம்.
-
-
அன்னை அபிராமி அருளும் பதினாறு செல்வங்கள்:
-
அன்னை அபிராமி இந்த உலகத்தில் மகிழ்ச்சியுடன் வாழ பதினாறு செல்வங்களை அளிப்பதாகக் கூறப்படுகிறது.
-
அவை: கல்வி, நீண்ட ஆயுள், உண்மையான நண்பர்கள், நிறைந்த செல்வங்கள், முதுமையிலும் இளமையுடன் திகழக்கூடிய உடல் நலம், நோயற்ற உடல், சோர்வின்றி இயங்குகின்ற மனம், அன்பைப் பொழிகின்ற மனைவி, மதிப்பும் மரியாதையும் தருகின்ற குழந்தைகள், என்றும் குறையாத புகழ், வாக்கு மாறாதிருத்தல், பிறருக்கு உதவி செய்யத் தடையில்லாத செல்வ நிலை, அழியாத செல்வங்கள், நீதி தவறாத ஆட்சி, துன்பம் இல்லாத வாழ்க்கை, அபிராமியின் திருவடியின் மீது அன்பு இவற்றோடு அடியவர்களின் நட்பு ஆகியனவாகும்.
-
அவள் அலைகள் வீசும் கடலில் துயில் கொண்டிருக்கும் திருமாலின் தங்கை. திருக்கடவூரில் கோயில் கொண்டிருக்கும் தெய்வம். சிவபெருமானின் ஒரு பாகத்தை விட்டு நீங்காதிருக்கும் பேறு பெற்றவள்.
-
5. திருவரங்கக் கலம்பகம்
-
பாடியவர்: அழகியமணவாளதாசர்.
-
பாடல் எண்ணிக்கை: 100 பாடல்கள்.
-
அழகியமணவாளதாசர்:
-
வேறுபெயர்: பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்.
-
நூல்கள்: அஷ்டப்பிரபந்தம், திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்துமாலை, திருவரங்கத்தந்தாதி, சீரங்கநாயகர் ஊசல்திருநாமம், திருவேங்கடமாலை, திருவேங்கடத்தந்தாதி, அழகர் அந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி.
-
-
பெண் கேட்டு வந்த தூதனுக்கு அளிக்கப்பட்ட மறுமொழி:
-
வேடர்களாகிய எங்கள் மகளை மணம் பேச வந்த தூதனே, எங்கள் பெண்ணை மணம் பேச வந்த தூதனே! செல்லினால் அரிக்கப்பட்ட ஓலை செல்லுமோ? செல்லாது.
-
திருவரங்கநாதரும், நப்பின்னையின் கணவருமாகிய நம்பெருமானது திருவடிகளில் அன்பு வைத்த, வேடர்களாகிய எங்களது மகளை விரும்பி, முன்னாட்களிலே, பட்டந்தரித்த அரசர்கள் பட்ட பாடுகளை எங்கள் ஊரினுள் வந்து பார் என்று கூறப்பட்டது.
-
அரசர்களின் பொருட்கள் ஆனதன் விளக்கம்:
-
எங்கள் வீட்டு வாசலில் வைத்து மூடும் கதவுகளாக இருப்பது, அவர்கள் பிடித்துவந்த குடைகள்.
-
தினையரிசிகளை அளக்கும்படியாக வைத்த மரக்கால்கள், படி முதலிய அளவுகருவிகள் அவர்கள் தரித்து வந்த பெரிய பெரிய கிரீடங்கள்.
-
எங்கள் குடிசைக்குமேல் மூடுகின்ற கற்றை, அவர்களுக்கு வீசி வந்த சாமரங்கள்.
-
அவர்கள் தோல்வியடைந்து விட்டுச் சென்ற வில்லும் வாளும் வேலும் எங்கள் வீட்டின் நாற்புறத்திலும் வேலியாகப் போடப்பட்டுள்ளன.
-
-
ஆகவே, உன்னை ஏவிய அரசனுக்கும் இந்தக் கதியே நேரும் என்று போய்க் கூறுவாயாக எனத் தூதனிடம் மறுமொழி அளிக்கப்படுகிறது.
-
6. தமிழ்விடு தூது
-
தூது இலக்கியத்தின் வேறு பெயர்கள்: வாயில் இலக்கியம், சந்து இலக்கியம்.
-
பாடல் எண்ணிக்கை: 268 கண்ணிகள்.
-
முதல் பதிப்பு: 1930 ஆம் ஆண்டு **உ.வே.சா.**வால் முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டது.
-
கருப்பொருள்: மதுரைச் சொக்கநாதர் மீது காதல் கொண்ட ஒரு பெண், தன் காதல் நோயைக் கூறி வருமாறு தமிழ்மொழியைத் தூது விடுக்கின்றாள்.
-
தமிழ்மொழியின் சிறப்புகள் (பாட்டுடைத் தலைவி கூற்று):
-
மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக வீற்றிருந்த சிவபெருமான், எல்லாத் திசைகளிலும் வெற்றியைத் தரும் தடாதகைப் பிராட்டியாகிய பார்வதி தேவி, விருப்பத்துடன் சிவஞானத் திரட்டைக் கையிலெடுத்த கணபதி ஆகியோர் மீது தூது விடுக்கப்படுகின்றது.
-
தமிழ்ச்சங்கத்தில் புலவர்களுக்கெதிராக அமர்ந்து பாடல் அறிவித்த முருகப்பெருமான்.
-
மூன்று வயதிலேயே பார்வதிதேவியின் அருளால் பாலருந்தி தமிழ்மொழியும் வடமொழியும் கற்றுத் தேர்ந்த திருஞானசம்பந்தர்.
-
மூன்று வருடங்களுக்கு முன்பு முதலை விழுங்கிய பிள்ளையைச் சிவபெருமானிடம் ஈன்று தரச் சொல்லிப் பாடல் இசைத்த சுந்தரர்.
-
பிரமனும் திருமாலும் தேடியும் அடைய முடியாத சிவனின் திருமுடியையும், திருவடியையும் தேடாமலேயே திருநல்லூரில் தேவாரம் பாடித் தன் தலை மீது முடியாகப் பெற்றுக் கொண்ட திருநாவுக்கரசர்.
-
சிவபெருமானே விரும்பி வந்து தம் ஓலையில் எழுதிக்கொள்ள திருவாசகத்தையும், திருக்கோவையாரையும் அருளிய மாணிக்கவாசகர்.
-
முத்தமிழ் ஓதிய அகத்தியர்.
-
பழந்தமிழ் இலக்கணம் உரைத்தத் தொல்காப்பியர்.
-
7. தனிப்பாடல்கள்
வான் குருவியின் கூடு (ஒளவையார்)
-
ஔவையார்: அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கும் அறிந்தவர். மனித வாழ்வுக்கேற்ற மகத்தான தத்துவங்களை வழங்கியவர்.
-
தற்பெருமை பேசுதல் வேண்டாம்: தூக்கணாங்குருவியின் கூடும், உறுதியான அரக்கும், பழமை கொண்ட கரையான் புற்றும், தேன்கூடும், சிலந்தியின் வலையும் நம்மில் எவருக்கும் செய்வதற்கு அரிதானவையாகும். அதனால் யாம் பெரிதும் வல்லமை உடையோம் என்று எவரும் தற்பெருமை பேசுதல் வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிதானது என்று அறிய வேண்டும்.
ஆமணக்குக்கும் யானைக்கும் சிலேடை (காளமேகப் புலவர்)
-
காளமேகப் புலவர்:
-
இயற்பெயர்: வரதன்.
-
காலம்: 15 ஆம் நூற்றாண்டு.
-
சிறப்பு பெயர்கள்: வசை பாட காளமேகம், வசைகவி, ஆசுகவி.
-
படைப்புகள்: திருவானைக்கா உலா, சித்திரமடல், கடல் விலாசம், புலவர் புராணம், சமுத்திர விலாசம், தமிழ் நாவலர் சரிதை.
-
சிறப்பு: வர்க்க எழுத்துக்களை மட்டும் கொண்டு பல பாடல்கள் புனைந்தவர்.
-
-
சிலேடை விளக்கம்:
-
ஆமணக்கு: கொட்டைமுத்து இருக்கும். (ஊன்றுகோல் போன்ற) தன் கொம்பை அசைக்கும். உள்ளே துளை உள்ள மூரித்தண்டு ஏந்தி வளரும். கொத்தாக இருக்கும் ஆமணக்குக் குலையை நேரே உயர்த்தித் தலையைச் சாய்க்கும்.
-
யானை: முத்துப்போன்ற தன் வெண்ணிறக் கொம்பை (தந்தத்தை) அசைக்கும். உள்ளே துளை உள்ள தன் துதிக்கைத் தண்டை ஏந்திக்கொண்டு வரும். கொத்தாகப் பழுத்திருக்கும் வாழைமரத்துக் குலையைச் சாய்க்கும்.
-
இம்பர் வான் எல்லை இராமனையே பாடி (வீரராகவர்)
-
வீரராகவர்:
-
பொன்விளைந்த களத்தூரில் பிறந்தவர்.
-
பிறவியிலேயே கண்ணொளி இழந்தவர்.
-
பாராட்டு: இலங்கை சென்று பரராசசேகர மன்னனைப் பாடி ஒரு யானை, பொற்பந்தம், ஓர் ஊர் ஆகியவற்றைப் பரிசிலாகப் பெற்றார்.
-
படைப்புகள்: திருவாரூர் உலா, திருவேங்கடக் கலம்பகம், கீழ்வேளூர் உலா, வரதராசர் பஞ்சரத்தினம், 39 தனிப்பாடல்கள்.
-
-
புலவர் பெற்ற பரிசில் (யானையின் வேறு பெயர்கள்):
-
ஒரு அரசனைப் புகழ்ந்து பாடி யானையைப் பரிசாகப் பெற்ற புலவன் வீட்டிற்கு வந்தபோது, வறுமையில் இருந்த மனைவி, என்ன பெற்று வந்திருக்கின்றாய் என்று கேட்கிறாள்.
-
புலவர் சொன்ன யானையைக் குறிக்கும் சொற்களை மனைவி வேறு பொருட்களாக நினைத்துக் கொண்டாள்:
-
களபம் என்று சொல்ல, சந்தனம் என்று நினைத்து பூசிக்கொள்ளச் சொல்கிறாள்.
-
மாதங்கம் என்று சொல்ல, தங்கம் என்று நினைத்து நாம் வாழலாம் என்கிறாள்.
-
வேழம் என்றார், உடனே அவளும் கரும்பு என்று நினைத்து சாப்பிடச் சொல்கிறாள்.
-
கம்பமா என்று சொல்ல, கம்பு மா என்று நினைத்து களி செய்து சாப்பிடலாம் என்கிறாள்.
-
இறுதியில் புலவரும் கைமா என்கிறார்.
-
-
அப்போதுதான் அது யானை என்று உணர்ந்து, “எம் இருவருக்குமே சாப்பாட்டுக்கு வழியில்லை, எப்படி யானைக்கு உணவு போடுவது?” என்று கலங்கினாள். யானையைக் குறிக்க இத்தனை சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
-
நாரைவிடு தூது (சத்திமுத்தப் புலவர்)
-
நாரையிடம் புலவர் கூறிய செய்திகள்:
-
புலவர் நாரையிடம், “சிவந்த கால்களையுடைய நாரையே! பனங்கிழங்கைப் பிளந்தது போல பவளம் போன்று செந்நிறமுள்ள கூர்மையான வாயையும், சிவந்த காலையும் உடைய நாரையே!” என்று அழைக்கிறார்.
-
புலவர், நாரையிடம் தெற்கில் உள்ள கன்னியாகுமரிக் கடலில் முழுகி, அங்கிருந்து வடக்குத் திசை நோக்கிச் சென்று, தன் ஊராகிய சத்திமுத்தத்தில் உள்ள நீர்நிலையிலே இறங்கும்படி கூறுகிறார்.
-
அங்கு, மழையினால் நனைதற்குரிய சுவரோடு கூடிய கூரை வீட்டில், கனைகுரல் பல்லி நற்சகுனமாக ஒலிப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற தன் மனைவியைப் பார்த்து, தன் நிலையைக் கூறுமாறு கேட்கிறார்.
-
அதாவது, மாறன் என்றும் வழுதி என்றும் பெயரையுடைய பாண்டிய அரசனது மதுரையில், போர்த்துக் கொள்ள ஆடை இல்லாமல் குளிர் காற்றினால் ஒடுங்கி, கைகள் இரண்டினாலும் உடம்பை மூடிக் கொண்டும், கால்களைக் குந்த வைத்துக் கொண்டு தழுவிக் கொண்டும், பெட்டிக்குள் அடங்கியிருக்கும் பாம்பு போல பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்ற வறுமையுடைய உனது கணவனைப் பார்த்தோம் என்று சொல்லுங்கள் என்று பாடுகின்றார்.
-
