1.
கதைப்பாடலில் இடம்பெறும் "வாய்ப்பாடுகள்" என்பது எதனைக் குறிக்கும்?
2.
வழக்காறுகளின் பண்புகள்
A. மரபு வழிப்படும்
B. பரவிச் செல்லும்
C. பன்மை வடிவங்கள் பெற்றிருக்கும்
D. தனி ஒருவரால் படைக்கப்படும்Deselect Answer
3.
பொருத்துக
இடம் - தொடர்பு
A. கொடுமணல் - I.பழங்கற்காலப்பகுதி
B. அழகன் குளம் - II. நெசவுத்தொழில் மிகுந்திருந்த பகுதி
C. கீழடி - III. இரும்புக்காலப் புதைவிடங்கள் இருந்த பகுதி
D.அத்திரம்பாக்கம் - IV.உரோமானிய வணிகப் பகுதிDeselect Answer
4.
பின்வரும் பகுதியைப் படித்துத் தொடர்ந்து இடம்பெற்றுள்ள வினாக்களுக்கு விடையைச் சுட்டுக.
ஆதிகாவியங்கள் எனக் கருதப்படும் வடமொழி இராமாயண,மகாபாரத நூல்கள் பொது ஆண்டுக்கு முன் 5-4 ஆம் நூற்றாண்டில் நூல் வடிவில் வந்தவை. இந்த ஆதிகாவியங்களில் சேர,சோழ,பாண்டிய நாடுகள் கூறப்பட்டுள்ளன என்று வடமொழி வல்லுநர்கள் கூறுகிறார்கள். பாண்டிய வேந்தரது தலைநகர் பொன்னாலும் முத்தாலும் அலங்கரிக்கப் பெற்றிருந்ததாக வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. வியாசமுனி இயற்றிய பாரதத்தில் பாண்டவர்களுள் ஒருவனான அர்ச்சுனன் பாண்டியர் குலமகளை மணந்த செய்தி காணப்படுகிறது. இலங்கையின் பண்டைய வரலாற்றைக் கூறும் மகாவம்சம் என்னும் நூல் பொது ஆண்டுக்கு முன் 478 இல் இலங்கையை ஆண்ட தமிழ் வேந்தர்களான விசயன் ஒரு பாண்டிய மன்னனின் மகளை மணந்ததாகக் கூறுகிறது. கௌடில்யர் தமது அர்த்த சாஸ்த்திரத்தில் பாண்டிய நாடு முத்தையும் மென் துகிலையும் குறிப்பிட்டுள்ளார். பொது ஆண்டுக்கு முன் 350 இல் வாழ்ந்த தமிழ் நாட்டவராகக் கருதப்படும் காத்தியாயனார் தமக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்த பாணினி இயற்றிய இலக்கணத்திற்கு எழுதிய வார்த்திகம் என்னும் உரையில், 'பாண்டிய' என்னும் சொல்லிற்கு இலக்கணக் குறிப்பு கூறியுள்ளார். பொது ஆண்டுக்கு முன் 3 ஆம் நூற்றாண்டில் மகத நாட்டை ஆட்சி புரிந்த பௌத்த சமயப் பெருவேந்தரான அசோகர் தமது கற்றூண் கட்டளைகளில் சேர,சோழ,பாண்டியர்களை நட்பு மன்னர்களாகக் குறிப்பிட்டிருக்கின்றார். பொது ஆண்டு 79ஆம் ஆண்டில் இருந்த உரோம நாட்டு வரலாற்று ஆசிரியர் பிளைனி என்பார் தம் நாட்டின் பொன்னும் வெள்ளியும் தென்தமிழ் நாட்டிற்குப்போய்க் குவிந்துவிட்டதாகக் கூறிய செய்தியும் காணப்படுகிறது. திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் 'வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடிப் பண்பில் தலைபிரிதல் இன்று' என்னும் குறளுக்கு, 'தொன்றுதொட்டு வருகின்ற குடியின்கண் பிறந்தார் தாம் கொடுக்கும் பொருள் பண்டையிற் சுருங்கியவிடத்தும் தம் பண்புடைமையின் நீங்கார் என்று உரை கூறித் தொன்றுதொட்டு வருதல் என்னும் தொடரை விளக்கும்பொழுது சேர,சோழ,பாண்டியர் என்றாற்போலப் படைப்புக் காலம் தொடங்கி மேம்பட்டு வருதல் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் சேர,சோழ,பாண்டியர்கள் மிகத் தொன்மையான மரபில் வந்தவர்கள் என்பது பரிமேலழகர் கருத்தாகும். இச்சான்றுகளால் பாண்டியர் குடி மிகத் தொன்மையானது என்பது வெள்ளிடை மலை என விளங்கும்.
பொருத்துக.
A. பிளைனி - I. இலங்கை மன்னன்
B. பாணினி - II. உரையாசிரியர்
C. விசயன் - III. இலக்கண ஆசிரியர்
D. காத்தியாயனார் - IV. வரலாற்று ஆசிரியர்
Deselect Answer
5.
இவற்றுள் எது தொத்து மந்திரம்?