நற்றிணை

  • வேறுபெயர் : நற்றிணை நானூறு
  • அடிவரையறை: 9-12
  • பாடல் எண்ணிக்கை: 400
  • பாடிய புலவர்கள்: 175
  • தொகுத்தவர் : பெயர் தெரியவில்லை
  • தொகுப்பித்தவர் : பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
  • கடவுள் வாழ்த்துப் பாடியவர் : பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • கடவுள் வாழ்த்தில் போற்றப்படும் தெய்வம் : திருமால்
  • பதிப்பு: 1914 பின்னத்தூர் நாராயணசுவாமி ஐய்யர்
  • முதல் உரை – பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்​
  • பாடலின் தொடரால் பெயர்பெற்ற புலவர்கள்:  தனிமகனார், தேய்புரிப் பழங்கயிற்றியனார், விழிக்கண் பேதை பெருங்கண்ணனார்.

செய்திகள்

  • வணிகர்களுக்குக் கொடுக்கும் பட்டம் காவிதி, எட்டி
  • அன்னி, மிஞிலி இருவரும் சிற்றரசர்கள்
  • தொண்டி -சேரநாட்டுத் துறைமுகம்
  • கொற்கை – பாண்டி நாட்டுத் துறைமுகம்
  • மாந்தை – சேரநாட்டுக் கடற்கரை ஊர்
  • மருகூர்ப்பட்டினம் – பாண்டி நாட்டுக் கடற்கரை நகரம்
  • மருத்துவன் அறவோன் எனப்பட்டான்
  • கணியன் என்பதற்குச் சோதிடன் என்று பொருள்
  • “முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்”
  • நீரின்றி அமையாது உலகு போல் தம்மின்று அமையா நம் நயந்தருளி” – கபிலர்
  • ஒருமுலை அறுத்த திருமா உண்ணி” – மதுரை மருதன் இளநாகனார்
  • “கொண்ட கொழுநன் குடிவரன் உற்றேனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்” – போதனார் 

திருமுருகாற்றுப்படை

  •  ஆசிரியர் நக்கீரர். நெடுநல்வாடையைப் பாடியவரும் இவரே.
  • 317 அடிகளைக் கொண்டது.
  • பாடப்பட்டவன் முருகன். ஆற்றுப்படை நூல்கள் பரிசில் பெறச் செல்வோரால் பெயர் பெறும். திருமுருகாற்றுப்படை மட்டும் பரிசில் கொடுப்போன்(முருகன்) பெயர் பெற்றது.
  • ஆசிரியப்பாவால் ஆனது.
  • திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டிற்குக் கடவுள் வாழ்த்துப் போன்று அமைந்துள்ளது.
  • இதை புலவராற்றுப்படை எனவும் வழங்குவர்.
  • முருகனிடம் அருள் பெற்ற ஒருவர் அருள் வேண்டும் ஒருவரை ஆற்றுப்படுத்தும் விதமாக அமைகிறது.
  • பத்துப்பாட்டுள் முதலில் பதிப்பிக்கப் பெற்றது திருமுருகாற்றுப்படை(1851- ஆறுமுக நாவலர்). இந்நூல் அறுபத்தி இரண்டு பதிப்புகளைக் கண்டுள்ளது.
  • பத்துப்பாட்டில் காலத்தால் பிந்திய நூல். கடவுள் வாழ்த்தாகக் கருதி முதலில் வைக்கப்பட்டது.
  • முதற்பகுதி: திருப்பரங்குன்றம் மலை: அதனைச் சூழ்ந்த இயற்கை வளம், முருகனின் திருக்கோலம், சூரனுடன் செய்த போர் ஆகியன இப்பகுதியில் கூறப்பட்டுள்ளன.
  • இரண்டாம் பகுதி: முருகனின் ஆறு திருமுகங்களின் சிறப்பு, பன்னிரு கைகளின் செயல், திருச்செந்தூர் சிறப்பு ஆகியன கூறப்பட்டுள்ளன.
  • மூன்றாம் பகுதி: முருகனை வழிபடும் முனிவர்களின் பெருமை, பழனியில் வழிபாட்டிற்கு வரும் மகளிரின் இயல்பு ஆகியன கூறப்பட்டுள்ளன.
  • நான்காம் பகுதி: திருவேரகத்தில் முருகனை வழிபடுவோரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
  • ஐந்தாம் பகுதி : மலை நாட்டு மக்கள் குரவைக் கூத்தாடி வணங்கும் முறைகள் முதலியன கூறப்பட்டுள்ளன.
  • ஆறாம் பகுதி: முருகன் எழுந்தருளும் இடங்களும், அவனிடம் சென்று அருள்பெறும் முறைகளும் பழமுதிர்ச்சோலையின் அருவிச் சிறப்பும் கூறப்பட்டுள்ளன.
  • திருமுருகாற்றுப்படை கூறம் முருகனின் அறுபடை வீடுகள்
  1.  திருப்பரங்குன்றம்
  2.  திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)
  3.  திருஆவினன் குடி (பழனிமலை, சித்தன்வாழ்வு)
  4. திருவேரகம் (சுவாமி மலை)
  5.  குன்றுதோறாடல்
  6.  பழமுதிர் சோலை
  •  11ஆம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல். இருதொகுப்பில் (பத்துப்பாட்டு, திருமுறைகள் ) இடம் பெற்ற ஒரே நூல் திருமுருகாற்றுப்படை

பாடல் வரிகள்

  • “உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு”- தொடக்கம்
  • “பழமுதிர் சோலை மலைகிழவோனே” முடிவு
  • “கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பு”
  • “ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆல்அமர் செல்வ”

பத்துப்பாட்டு

              பாட்டு என்றாலே பத்துப்பாட்டைத்தான் குறிக்கும். அதற்கு காரணம் சங்க காலத்தில் தோன்றிய நெடும்பாட்டுகள் இவை. சான்றோர் உரைத்த தண்தமிழ் தெரியல் ஒருபது பாட்டும்”நச்சினார்க்கினியர் உரைச் சிறப்புப் பாயிரம் பத்துப்பாட்டு பற்றி குறிபிடுகிறது.

பழைய வெண்பா

“முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய 

கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப் 

பாலை கடாத்தொடும் பத்து.”  

1. திருமுருகாற்றுப்படை – புலவராற்றுப்படை

2. பொருநராற்றுப்படை

3. சிறுபாணாற்றுப்படை

4. பெரும்பாணாற்றுப்படை – பாணாறு

5. முல்லைப்பாட்டு – நெஞ்சாற்றுப்படை

6. மதுரைக் காஞ்சி

7. நெடுநல்வாடை

8. குறிஞ்சிப் பாட்டு – பெருங்குறிஞ்சி

9. பட்டினப்பாலை – வஞ்சிநெடும்பாட்டு

10. மலைபடுகடாம் – கூத்தராற்றுப்படை

பொதுவான தகவல்கள்

  • பத்துப்பாட்டில் அக நூல்கள் – 3. அவை: முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை
  • பத்துப்பாட்டில் புறநூல்கள் 6. அவை: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி,மலைபடுகடாம்.
  • பத்துப்பாட்டில் அகமும் புறமும் சார்ந்த நூல் ஒன்று. நெடுநல்வாடை
  • ஆற்றுப்படை நூல்கள் 5.
  • ஆற்றுப்படை என்று பெயர்பெற்ற நூல்கள் 4
  • பத்துப்பாட்டில் குறைந்த அடிகளைக் கொண்ட நூல் முல்லைப்பாட்டு (103அடி)
  • பத்துப்பாட்டில் அதிக அடிகளைக் கொண்ட நூல் மதுரைக் காஞ்சி (782 அடி)
  • ஆற்றுப்படை நூல்களுள் குறைந்த அடிகள் கொண்ட நூல் பொருநராற்றுப்படை (248அடி)
  • ஆற்றுப்படை நூல்களுள் அதிக அடிகளைக் கொண்ட நூல் மலைபடுகடாம் (583அடி)
  • திணையால் பெயர் பெற்ற நூல்கள் 4. அவை: அகத்திணை 3 (முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ),          புறத்திணை 1. மதுரைக் காஞ்சி
  • காலத்தால் (அ) பருவத்தால் பெயர் பெற்ற நூல் 1. நெடுநல்வாடை
  • பத்துப்பாட்டை எழுதிய புலவர்கள் 8 பேர். இரண்டு, இரண்டு பாடல்கள் பாடியவர்கள் இரண்டு பேர். நக்கீரர் பாடிய நூல்கள் இரண்டு திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை. கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய நூல்கள் இரண்டு: பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை
  • பத்துப்பாட்டு என்ற தொடரை முதன்முதலாகப் பயன்படுத்தியவர் நன்னூலின் முதல் உரையாசிரியராகிய மயிலைநாதர் ஆவார்.
  • அறத்தொடு நிற்றல் என்ற துறையில் அமைந்த நூல் குறிஞ்சிப்பாட்டு
  • செலவழுங்கல் துறையில் அமைந்த நூல் பட்டினப்பாலை
  • பத்துப்பாட்டில் வீடு பேற்றிற்கு முதன்மை கொடுக்கும் நூல் மதுரைக்காஞ்சி
  • பத்துப்பாட்டில் அகநூலாக இருந்தும் புறச்செய்திகளை மிகுதியாகக் கூறும் நூல் பட்டினப்பாலை
  • பத்துப்பாட்டில் பட்டினப்பாலையும் மதுரைக்காஞ்சியும் வஞ்சியடி கலந்த ஆசிரியப்பா; மற்ற எட்டும் ஆசிரியப்பா.
  • பத்துப்பாட்டில் காலத்தால் பிந்திய நூல் திருமுருகாற்றுப்படை
  • ஆற்றுப்படை என்பதில் ஆறு என்பதற்கு வழி என்றும் படை என்பதற்கு படுத்துதல் (செலுத்துதல்) என்றும் பொருள்
  • பண்பாடுவோன் பாணன், பாணன் மனைவி பாடினி, விறலி
  • பாணனுடன் சேர்ந்து பாடுபவள் பாடினி
  • பாணனின் பாட்டுக்கு ஆடுபவள் விறலி
  • ஆடும் ஆண்கள் கூத்தர்கள்
  • வேடந்தாங்கி நடிப்போன் பொருநன்
  • ஆற்றுப்படை நூல்களில் மட்டும் முன்னிலை ஒருமைக்குப் பன்மைப் பயனிலை வரும் என்று தொல்காப்பியம் கூறுகிறது. “முதுவாய் இரவல… செல்குவீராயின்” (சிறுபாணாற்றுப்படை)
  • பாவை விளக்கையும் அன்னப் பறவையையும் கொண்டு வந்தவர்கள் யவனர்கள்.