பத்துப்பாட்டு

              பாட்டு என்றாலே பத்துப்பாட்டைத்தான் குறிக்கும். அதற்கு காரணம் சங்க காலத்தில் தோன்றிய நெடும்பாட்டுகள் இவை. சான்றோர் உரைத்த தண்தமிழ் தெரியல் ஒருபது பாட்டும்”நச்சினார்க்கினியர் உரைச் சிறப்புப் பாயிரம் பத்துப்பாட்டு பற்றி குறிபிடுகிறது.

பழைய வெண்பா

“முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய 

கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப் 

பாலை கடாத்தொடும் பத்து.”  

1. திருமுருகாற்றுப்படை – புலவராற்றுப்படை

2. பொருநராற்றுப்படை

3. சிறுபாணாற்றுப்படை

4. பெரும்பாணாற்றுப்படை – பாணாறு

5. முல்லைப்பாட்டு – நெஞ்சாற்றுப்படை

6. மதுரைக் காஞ்சி

7. நெடுநல்வாடை

8. குறிஞ்சிப் பாட்டு – பெருங்குறிஞ்சி

9. பட்டினப்பாலை – வஞ்சிநெடும்பாட்டு

10. மலைபடுகடாம் – கூத்தராற்றுப்படை

பொதுவான தகவல்கள்

  • பத்துப்பாட்டில் அக நூல்கள் – 3. அவை: முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை
  • பத்துப்பாட்டில் புறநூல்கள் 6. அவை: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி,மலைபடுகடாம்.
  • பத்துப்பாட்டில் அகமும் புறமும் சார்ந்த நூல் ஒன்று. நெடுநல்வாடை
  • ஆற்றுப்படை நூல்கள் 5.
  • ஆற்றுப்படை என்று பெயர்பெற்ற நூல்கள் 4
  • பத்துப்பாட்டில் குறைந்த அடிகளைக் கொண்ட நூல் முல்லைப்பாட்டு (103அடி)
  • பத்துப்பாட்டில் அதிக அடிகளைக் கொண்ட நூல் மதுரைக் காஞ்சி (782 அடி)
  • ஆற்றுப்படை நூல்களுள் குறைந்த அடிகள் கொண்ட நூல் பொருநராற்றுப்படை (248அடி)
  • ஆற்றுப்படை நூல்களுள் அதிக அடிகளைக் கொண்ட நூல் மலைபடுகடாம் (583அடி)
  • திணையால் பெயர் பெற்ற நூல்கள் 4. அவை: அகத்திணை 3 (முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ),          புறத்திணை 1. மதுரைக் காஞ்சி
  • காலத்தால் (அ) பருவத்தால் பெயர் பெற்ற நூல் 1. நெடுநல்வாடை
  • பத்துப்பாட்டை எழுதிய புலவர்கள் 8 பேர். இரண்டு, இரண்டு பாடல்கள் பாடியவர்கள் இரண்டு பேர். நக்கீரர் பாடிய நூல்கள் இரண்டு திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை. கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய நூல்கள் இரண்டு: பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை
  • பத்துப்பாட்டு என்ற தொடரை முதன்முதலாகப் பயன்படுத்தியவர் நன்னூலின் முதல் உரையாசிரியராகிய மயிலைநாதர் ஆவார்.
  • அறத்தொடு நிற்றல் என்ற துறையில் அமைந்த நூல் குறிஞ்சிப்பாட்டு
  • செலவழுங்கல் துறையில் அமைந்த நூல் பட்டினப்பாலை
  • பத்துப்பாட்டில் வீடு பேற்றிற்கு முதன்மை கொடுக்கும் நூல் மதுரைக்காஞ்சி
  • பத்துப்பாட்டில் அகநூலாக இருந்தும் புறச்செய்திகளை மிகுதியாகக் கூறும் நூல் பட்டினப்பாலை
  • பத்துப்பாட்டில் பட்டினப்பாலையும் மதுரைக்காஞ்சியும் வஞ்சியடி கலந்த ஆசிரியப்பா; மற்ற எட்டும் ஆசிரியப்பா.
  • பத்துப்பாட்டில் காலத்தால் பிந்திய நூல் திருமுருகாற்றுப்படை
  • ஆற்றுப்படை என்பதில் ஆறு என்பதற்கு வழி என்றும் படை என்பதற்கு படுத்துதல் (செலுத்துதல்) என்றும் பொருள்
  • பண்பாடுவோன் பாணன், பாணன் மனைவி பாடினி, விறலி
  • பாணனுடன் சேர்ந்து பாடுபவள் பாடினி
  • பாணனின் பாட்டுக்கு ஆடுபவள் விறலி
  • ஆடும் ஆண்கள் கூத்தர்கள்
  • வேடந்தாங்கி நடிப்போன் பொருநன்
  • ஆற்றுப்படை நூல்களில் மட்டும் முன்னிலை ஒருமைக்குப் பன்மைப் பயனிலை வரும் என்று தொல்காப்பியம் கூறுகிறது. “முதுவாய் இரவல… செல்குவீராயின்” (சிறுபாணாற்றுப்படை)
  • பாவை விளக்கையும் அன்னப் பறவையையும் கொண்டு வந்தவர்கள் யவனர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *