தமிழ் இலக்கிய வரலாறு

அலகு 2 

வினா-விடை

  • உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக விளங்கும் மொழி எது?
விடை : உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக விளங்கும் மொழி தமிழ் ஆகும்.
  • கல்தோன்றி மண்தோன்றா காலத்தே …. என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
விடை: கல்தோன்றி மண்தோன்றா காலத்தே …. என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறப்பொருள் வெண்பாமாலைஆகும்.
  • தமிழின் பழமை குறித்த புறப்பொருள் வெண்பாமாலை பாடல் வரிகளை எழுதுக.
விடை: தமிழின் பழமை குறித்த புறப்பொருள் வெண்பாமாலை பாடல் வரி “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி” என்பதாகும்.
  •  சங்க இலக்கியத்தின் வேறு பெயர்களை எழுதுக.
விடை: சங்க இலக்கியத்தின் வேறு பெயர்கள் பாட்டுதொகை, பதினெண்மேல்கணக்கு என்பதாகும். பாட்டு என்பது பத்துப்பாட்டையும், தொகை என்பது எட்டுத்தொகையையும் குறிக்கும்.
  • எட்டுத்தொகை நூல்களின் பெயர்களை எழுதுக.
விடை: எட்டுத்தொகை நூல்களின் பெயர்கள் நற்றிணை, குறுந்தொகை, ஐந்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் என்பதாகும்.
  • நற்றிணையின் பெயர்க்காரணம் கூறுக.
விடை: ‘நல்ல திணை’ என்பது நற்றிணை என்றழைக்கப்படுகிறது.
  • நற்றிணை குறிப்பு வரைக.
விடை:  ‘நல்ல திணை’ என்பது நற்றிணை என்றழைக்கப்படுகிறது. 9 அடி முதல்  12 அடி வரையுள்ள 400 பாடல்களைக் கொண்டுள்ளது. நற்றிணை நானூறு என்று அழைக்கப்படுகிறது. நற்றிணையைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார்.
  • “நின்ற சொல்லர்…..” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
விடை: “நின்ற சொல்லர்…..” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் கபிலர் ஆவார்.
  • “நின்ற சொல்லர்….” எனத் தொடங்கும் பாடலின் திணை, துறை குறித்து எழுதுக. (அல்லது) நற்றிணையில் உங்கள் பாடப்பகுதியாக அமைந்துள்ள பாடலின் திணை, துறை குறித்து எழுதுக.
விடை: திணை: குறிஞ்சி, துறை: பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி கூறியது.
  • “நின்ற சொல்லர்…..” எனத் தொடங்கும் பாடல் யாருடைய கூற்று?
விடை: “நின்ற சொல்லர்…..” எனத் தொடங்கும் பாடல் தலைவி  கூற்று ஆகும்.
  • சாந்தில் தொடுத்த தீம்தேன் போன்றது எது?
விடை: சாந்தில் தொடுத்த தீம்தேன் போன்றது  தலைவன் தலைவி மீது கொண்ட நட்பு ஆகும்.