ஐங்குறுநூறு

 ஐங்குறுநூறு

அகநூல்

500 பாடல்கள்

சிற்றெல்லை 3 அடி, பேரெல்லை 6 அடி

திணைக்கு நூறு பாடல்கள்

ஒவ்வொரு திணையும் பத்துப்பத்தாகப் பிரிக்கப்பட்டுள்ளது

ஒவ்வொரு பத்தும் பாடலின் பொருள் அல்லது பயின்றுவரும் சொல்லால் பெயர் பெறுகிறது

பாடிய புலவர்கள் ஐந்துபேர்

மருதம் – ஓரம் போகியார்

நெய்தல் – அம்மூவனார்

குறிஞ்சி – கபிலர்

 பாலை -ஓதலாந்தையார் முல்லை – பேயனார்

தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார்.

தொகுப்பித்தவன் யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை

கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துச் சிவனைப் பற்றியது

இந்நூலை முதன் முதலாகப் பதிப்பித்தவர் உ.வே. சாமிநாதையர்.

செய்திகள்

அம்மூவனார் இயற்றிய நெய்தல் திணையில் இடம்பெற்றுள்ள தொண்டிப்பத்து அந்தாதி முறையில் அமைந்துள்ளது

சங்க இலக்கியத்துள் அந்தாதி முறையில் அமைந்தவை இரண்டு

1. தொண்டிப்பத்து 2. பதிற்றுப்பத்தில் உள்ள நான்காம் பத்து அந்தாதித் தொடையைத் தொல்காப்பியர் கூறவில்லை. சங்க இலக்கியத்துள் உள்ளுறையும் இறைச்சியும் மிகுதியாக

இடம் பெற்றுள்ள நூல் ஐங்குறுநூறு.

ஆதன் அவினி என்பவன் ஒரு சேர மன்னன்

மத்தி என்பவன் கழார் என்னும் ஊருக்குத் தலைவன்

ஊரினும் பெரியது பேரூர்

ஊரினும் சிறியது சிற்றூர்

பழைமையான ஊர் மூதூர்

கட்டப்பட்ட ஊர் கட்டூர் (பாசறை)

பாசறை என்பது அரசர்களும் அமைச்சர்களும் போர்புரியத் தங்கியிருக்கும் இடம்

பாடி என்பது படைத்தலைவர்களும் வீரர்களும் தங்கி இருக்கும் இடம்

பாசறை, பாடிவீடு, கட்டூர் மூன்றும் ஒன்றே என்பாரும் உண்டு-

தைத் திங்களில் இளமகளிர் குளத்தில் நீராடி நோன்பு இருப்பர்.

நூறாயிரம் (லட்சம் ) என்ற எண்ணுப் பெயருக்கு மேலாகத் தாமரை, வெள்ளம், ஆம்பல் என்னும் பேரெண்களும் இருந்தன.

ஐங்குறு நூற்றில் குறிக்கப்படும் பேரெண் வெள்ளம்

 நடுநாட கங்குல் என்பது நள்ளிரவு

சங்க கால மக்கள் பகல் 12 மணியிலிருந்து நாளைக் கணக்கிட்டனர்.

பாண்டில் என்பது கால் நிறுத்திய பெரிய விளக்கு.

வண்டல் பாவை என்பது மண்ணைக் கொண்டு சிறுமியர் செய்யும் பொம்மை.

குரவை என்பது பெண்கள் ஏழு அல்லது ஒன்பது பேர் கைக் கோத்து ஆடும் ஆட்டம்.

பஞ்சுரம் என்பது பாலைப் பண்ணைக் குறிக்கும்.

எழுத்துடை நடுகல் என்பது போரில் இறந்த வீரனுக்காக எடுக்கப்பட்ட, அவன் பெயரும் புகழும் எழுதிய நடுகல்

ஆண்களுக்கு வலக்கண் துடித்தால் நல்லது

பெண்களுக்கு இடக்கண் துடித்தால் நல்லது

இந்திரவிழா குறித்துக் கூறும் தொகை நூல் ஐங்குறு நூறு.

மேற்கோள்

“அன்னாய் வாழி வேண்டன்னை நம்படப்பைத் தேன் மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு உவலைக் கூவல் கீழ

மானுண்டு எஞ்சிய கலுழி நீரே” – கபிலர்

“விளைக வயலே வருக இரவலர் என வேட்டோய் யாயே” ஓரம்போகியார்

குறுந்தொகை

  • வேறுபெயர்: நல்ல குறுந்தொகை, குறுந்தொகை நானூறு (இறையனார் களவியல் உரை)
  • அடிவரையறை: 4-8
  • பாடிய புலவர்கள்:205
  • பாடல் எண்ணிக்கை : 400
  • கடவுள் வாழ்த்து : 2 பாடல்கள்(முருகன்) -பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • தொகுத்தவர் : பூரிக்கோ
  • 307, 399 ஆம் பாடல்கள் மட்டும் 9 அடி
  • தொகை நூல்களில் முதலில் தொகுக்கப்பட்டது
  • 236 பாடல்கள் உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
  • பரணர் பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
  • உரிபொருட்கே சிறப்பிடம் தருகிறது” – வ.சுப. மாணிக்கம் (தமிழ்க்காதல்)
  • முதன் முதலில் பதிப்பித்தவர் சி.வை.தாமோதரம் பிள்ளை
  •  ஆராய்ச்சிப் பதிப்பு உ.வே. சாமிநாதையர்.
  • பேராசிரியர் முதல் 380 பாடல்களுக்கும், நச்சினார்க்கினியர் இறுதி 20 பாடல்களுக்கும் உரை எழுதினார் என்பர். அவை இன்று கிடைக்கவில்லை.

மேற்கோள்

  • “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ” – இறையனார்
  • “வினையே ஆடவர்க்கு உயிரே வாள்நுதல் மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிரே” – பாலை பாடிய பெருங்கடுங்கோ
  • “செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே” – செம்புலப்பெயல்நீரார்
  • ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கின் கையில் ஊமன் கண்ணில் காக்கும் வெண்ணெய் உணங்கல் போல” – வெள்ளி வீதியார்
  • “நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று…” – தேவகுலத்தார்
  • சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு இவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே” – கபிலர்

எட்டுத்தொகை

அகம் சார்ந்த நூல்கள்

  • நற்றிணை
  • குறுந்தொகை
  • ஐந்குறுநூறு
  • கலித்தொகை
  • அகநானூறு

புறம் சார்ந்த நூல்கள்

  • புறநானூறு
  • பதிற்றுப்பத்து

அகமும் புறமும் சார்ந்த நூல்

  • பரிபாடல்

முக்கிய ​குறிப்புகள்

  • முழுவதும் கிடைத்தவை: நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, அகநானூறு
  • நானூறு பாடல்களைக் கொண்ட நூல்கள் : நற்றிணை, குறுந்தொகை,அகநானூறு, புறநானூறு
  • பாவகையால் பெயர் பெற்றவை: கலித்தொகை, பரிபாடல்
  • முதலும் முடிவும் கிடைக்காதவை: பதிற்றுப்பத்து, பரிபாடல்
  • பாடல்களின் எண்ணிக்கை: 2352
  • 2352 + 5 கடவுள் வாழ்த்து– 2358