இரண்டாம் பருவம் அலகு 2 வினா விடை

அலகு- 1 : தமிழ் இலக்கிய வரலாறு அறிமுகம்

குறு வினா-விடை

  • குறவஞ்சி பெயர்க்காரணம் தருக.

       குற+வஞ்சி, குறவர் குளத்தில் பிறந்த வஞ்சிக்கொடி போன்ற பெண் என்ற பொருளைத் தரும். இவ்விலக்கியத்தில் குறத்தி குறி கூறுதல், குறத்தியின் செயல்கள் இடம்பெறுவதால் இப்பெயர் பெற்றது.

  • குறவஞ்சி குறிப்பு வரைக.
    • பெயர்க்காரணம்: குற+வஞ்சி, குறவர் குளத்தில் பிறந்த வஞ்சிக்கொடி போன்ற பெண் என்ற பொருளைத் தரும். இவ்விலக்கியத்தில் குறத்தி குறி கூறுதல், குறத்தியின் செயல்கள் இடம்பெறுவதால் இப்பெயர் பெற்றது.
    • காலம்: நாயக்கர் காலம்
    • வேறு பெயர்கள்: குறம், குறவஞ்சி நாடகம், குறத்திப் பாட்டு
    • முதல் குறவஞ்சி நூல்: திருக்குற்றாலக் குறவஞ்சி
  • கலம்பகம் பெயர்க்காரணம் கூறுக.
    • கலம்பகம் என்பதற்கு கலவை என்று பொருள். (கலம்-12, பகம்-6 = 18 உறுப்புகள் உடையது). பலவகையான ஓசை நயமுடைய பாக்களும் இனங்களும் உறுப்புகளும் பயின்றுவர பாடப்படுவது கலம்பகம் ஆகும்.
  • கலம்பகம் குறிப்பு வரைக.
    • பெயர்க்காரணம்: கலம்பகம் என்பதற்கு கலவை என்று பொருள். (கலம்-12, பகம்-6 = 18 உறுப்புகள் உடையது). பலவகையான ஓசை நயமுடைய பாக்களும் இனங்களும் உறுப்புகளும் பயின்றுவர பாடப்படுவது கலம்பகம் ஆகும்.
    • கலம்பக உறுப்புகள்: புயவகுப்பு, மதங்கு, அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சிந்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல்.
  • கைக்கிளை என்றால் என்ன?
    • தலைவன் தலைவியை முதன்முறை கண்டு அவளறியாமல் அவளைக் காதலிப்பதாகச் செய்யுள் செய்வது.
  • உலா குறிப்பு வரைக.
    • பெயர்க்காரணம்:பாட்டுடைத் தலைவன் உலா வருவதாகப் பாடப்படும் இலக்கிய வகை ஆதலால், இதற்கு உலா இலக்கியம் என்ற பெயர் பெற்றது.
    • வேறு பெயர்கள்: பவனி, பெண்பாற் கைக்கிளை, உலாப்புறம், உலாமாலை, புற உலா
    • முதல் உலா நூல்  திருக்கைலாய ஞான உலா
  • பரணி பெயர்க்காரணம் தருக.
    • போர்க்களத்தில் பாடும் புலவன் வாள், வேல் முதலிய படைக் கருவிகளால் அமைக்கப்பட்ட பரண் மீது அமர்ந்து பாடுவர்.  வீரர்கள் யானை மீது அமர்ந்து வில் எறிந்தும், வாள் எறிந்தும் பகைவார்களை விரட்டுதலைக் கருவாகக் கொண்டு படைக்கப் பெறும் இலக்கியம் என்பதால் பரணி எனப் பெயர் பெற்றது.
    • பரணி என்பது நட்சத்திரத்தின் பெயர். இது காளியையும் எமனையும் தெய்வமாகக் கொண்ட நாள். காளியைத் தெய்வமாகக் கொண்டு பாடப்படுவதால் இப்பெயர் பெற்றது.
  • முதல் பரணி நூல் எது?
    • கலிங்கத்துப்பரணி
  • கலிங்கத்துப்பரணி குறிப்பு வரைக.
    • முதல் குலோத்துங்கன் அனுப்பிய படைத்தலைவன் கருணாகரத் தொண்டைமான் கலிங்க வேந்தன் அனந்தவர்ம சோடங்கனை வென்றதைப் பாடியது.
    • எழுதியவர்: செயங்கொண்டர்
    • “பரணிக்கோர் செயங்கொண்டர்” என்று புகழப்படுகிறார்.

 

  • பள்ளு பெயர்க்காரணம் தருக.
    • பெயர்க்காரணம்: பள்ளர்களின் வாழ்க்கையை விளக்கிக் கூறும் இலக்கியம் என்பதால் பள்ளு என்ற பெயர் பெற்றது.
  • பள்ளு குறிப்பு வரைக.
    • பெயர்க்காரணம்: பள்ளர்களின் வாழ்க்கையை விளக்கிக் கூறும் இலக்கியம் என்பதால் பள்ளு என்ற பெயர் பெற்றது.
    • வேறு பெயர்கள்: உழத்திப்பாட்டு, பள்ளேசல், பள்ளு நாடகம், பள்ளு மூவகைத்தமிழ், பள்ளிசை
    • முதல் பள்ளு நூல்: முக்கூடற்பள்ளு

 

  •  பிள்ளைத்தமிழ் குறிப்பு வரைக.

    • பெயர்க்காரணம்: பாட்டுடைத்தலைவனையோ அல்லது தலைவியையோ பிள்ளைப் பருவமாக நினைத்து பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும்.
    • வேறுபெயர்: பிள்ளைப் பாட்டு, பிள்ளைக் கவி
    • ஆண்பாற் பிள்ளைத்தமிழின் பத்து பருவங்கள்:காப்பு,செங்கீரை,தால்,சப்பாணி,முத்தம்,வருகை,அம்புலி,சிற்றில்,சிறுபறை,சிறுதேர்
    • பெண்பாற் பிள்ளைத்தமிழின் பத்து பருவங்கள்:காப்பு,செங்கீரை,தால்,சப்பாணி,முத்தம்,வருகை,அம்புலி,நீராடல்,அம்மானை,ஊசல்

 

  • தூது குறிப்பு வரைக.
    • பெயர்க்காரணம்: ஒருவரிடம் சென்று ஒரு செய்தியைச் சொல்லி வருவதற்கும், ஒரு பொருளை வாங்கி வருவதற்கும், பிரிந்த இதயங்களை ஒன்று சேர்ப்பதற்கும் மற்றொருவரை அனுப்புவது தூது ஆகும்.
    • வகைகள்: அகத்தூது, புறத்தூது
    • முதல் தூது நூல்: நெஞ்சுவிடு தூது

 

  • அந்தாதி குறிப்பு வரைக.
    • அந்தம் முதலாகத் தொடுக்கப்படுவது அந்தாதி ஆகும்.
    • ஒரு செய்யுளின் ஈற்றில் உள்ள எழுத்து, அசை, சீர், அடி இவற்றில் ஒன்று அடுத்து வரும் செய்யுளின் முதலாக அமையும் படி பாடுவது அந்ததியாகும்.
    • முதல் அந்தாதி நூல்: அற்புதத் திருவந்தாதி

 

  • முதல் தனிப்பாடல் திரட்டை வெளியிட்டவர் யார்?
    • பொன்னுசாமித் தேவர்

 

  • பாரதியார் குறிப்பு வரைக.
    • இயற்பெயர் : சுப்பிரமணியன்
    • பெற்றோர் : சின்னச்சாமி ஐயர – இலக்குமியம்மை
    • முப்பெரும் பாடல்கள் :கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் 
    • புனைபெயர்கள்: ஷெல்லிதாசன், காளிதாசன், சக்திதாசன், சாவித்திரி

 

  • பாரதிதாசன் குறிப்பு வரைக.
    • இயற்பெயர் : சுப்புரத்தினம்
    • நூல்கள்: பாண்டியன் பரிசு, குறிஞ்சித்திட்டு, குடும்பவிளக்கு, தமிழச்சியின் கத்தி, எதிர்பாராத முத்தம், இருண்டவீடு, அழகின் சிரிப்பு தமிழியக்கம்

 

  • நாமக்கல் கவிஞர் குறிப்பு வரைக.
    • இயற்பெயர் : வே. இராமலிங்கம் பிள்ளை
    • பெற்றோர் : வேங்கடராமபிள்ளை – அம்மணியம்மாள் 
    • காந்தியக் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
    • இலக்கிய இன்பம், தமிழன் இதயம் போன்ற படைப்புகளும், அவனும் அவளும் என்னும் காப்பியமும், ‘மலைக்கள்ளன்’ என்ற புதினத்தையும் படைத்துள்ளார். ‘என் கதை’ என்ற இவரது தன் வரலாறு நூலாகும்.

 

  • ஹைக்கூ என்றால் என்ன?
    • ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளே தமிழ் ஹைக்கூக்களுக்குக் காரணம் எனலாம்.
    • ஹைக்கூ மூன்று அடிகளில் அமைய வேண்டும்.
    • ஹைக்கூ கவிதைகளை வாமனக் கவிதை, துளிப்பா, மினிப்பா. குக்கூ. எனப் பல பெயர்களிட்டு அழைக்கும் வழக்கம் உள்ளது.
  • தமிழில் வெளியான முதல் சிறுகதை எது?
    • குளத்தங்கரை அரசமரம்

 

  • கலிங்கத்துப் பரணி
    • பரணி நூல்களில் காலத்தால் முற்பட்டது இந்நூல். 
    • முதல் குலோத்துங்க சோழன் கலிங்க நாட்டின் மீது படை எடுத்து வெற்றி பெற்றான். இந்த வெற்றியைச் சிறப்பித்துப் பாடியதே கலிங்கத்துப் பரணி ஆகும்.
    • சிறப்பு: “தென்தமிழ்த் தெய்வப்பரணி”
    • கலிங்கத்துப் பரணியின் ஆசிரியர் செயங்கொண்டார் ஆவார்.

 

    • திருக்குற்றாலக் குறவஞ்சி குறித்து எழுதுக.
  • அஷ்டப்பிரபந்தம் என்று அழைக்கப்படும் நூல்கள் யாவை?

    • திருவரங்கக் கலம்பகம் 
    • திருவரங்கத்துமாலை
    • திருவரங்கத்தந்தாதி
    • சீரங்கநாயகர் ஊசல்திருநாமம்
    • திருவேங்கடமாலை
    • திருவேங்கடத்தந்தாதி
    • அழகர் அந்தாதி
    • நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி

 

  • ஆற்றில் வெள்ளம் வருவதற்கான அறிகுறிகள் யாவை?
    •  தென்மேற்குத் திசையிலே மலையாள மின்னல் மின்னிக் கொண்டுள்ளது.
    • தென் கிழக்குத் திசையிலே ஈழத்து மின்னல் மின்னிக் கொண்டுள்ளது.
    • நேற்றும் இன்றும் மரக்கொம்புகளைச் சுற்றியவாறு காற்று அடிக்கிறது.
    • கிணற்றிலே உள்ள சொறித்தவளைகள் கூப்பாடு போடுகின்றன.
    • நண்டுகள் தம் வளைகளுள் மழைநீர் புகுந்து விடாதபடி வாயில்களைச் சேற்றினால் அடைக்கின்றன.
    • மழை நீரைத் தேடிக் கோடி வானம்பாடிகள் அங்கும் இங்கும் பறக்கின்றன.

 

  • பதினாறு செல்வங்களில் எவையேனும் நான்கினை எழுதுக.
    •  கல்வி
    • நீண்ட ஆயுள்
    • உண்மையான நண்பர்கள்
    • நிறைந்த செல்வங்கள்
    • என்றும் குறையாத புகழ்
    • வாக்கு மாறாதிருத்தல்
wpChatIcon
error: Content is protected !!