-
0 Comments
- தொல்காப்பியம் நூல் அமைப்பு குறித்து எழுதுக. அல்லது தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்களின் பெயர்களை எழுதுக.
- தொல்காப்பியம் 3 அதிகாரங்களைக் கொண்டது. அவை, எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகியவை ஆகும்.
- தொல்காப்பியத்தின் சிறப்பு பாயிரத்தை எழுதியவர் யார்?
- பனம்பாரனார்
- அகத்தினைக்குரிய முப்பொருள்கள் யாவை?
- முதற்பொருள்
- கருப்பொருள்
- உரிப்பொருள்
- அன்பின் ஐந்திணை என்று அழைக்கப்படுபவை…..
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
- பாலை
- முதற்சங்கத்தை நிறுவியவர் யார்?
- காய்சினவழுதி
- இடைச்சங்கத்தை நிறுவியவர் யார்?
- வெண்டேர் செழியன்
- கடைச்சங்கத்தை நிறுவியவர் யார்?
- முடத்திருமாறன்
- நம்பி அகப்பொருளினை இயற்றியவர் யார்?
- நாற்கவிராச நம்பி
- கற்பு பிரிவின் வகைகள்
- கற்பு வாழ்க்கையில் பிரிவு 6 வகைப்படும். அவை,
- ஓதற்பிரிவு
- தூதிற்பிரிவு
- துணைவயிற்பிரிவு
- பொருள்வயிற்பிரிவு
- காவல் பிரிவு
- பரத்தையிற்பிரிவு
- கற்பு வாழ்க்கையில் பிரிவு 6 வகைப்படும். அவை,
- புறப்பொருள் வெண்பாமாலையை இயற்றியவர் யார்?
- ஐயனாரிதனார்
- வெட்சித்திணை என்றால் என்ன?
- பகைவரது பசுக்கூட்டத்தைக் கவர்ந்து வருவது வெட்சித்திணை ஆகும்.
- பாடாண் திணை என்றால் என்ன?
- பாடப்படக்கூடிய ஆண்மகனது வீரம்,கொடை, வெற்றி ஆகியவற்றை புகழ்ந்து பாடுவது பாடாண் திணை ஆகும்.
- பொதுவியல் திணை என்றால் என்ன?
- எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைக் கூறுவது பொதுவியல் திணை ஆகும்.
- நன்னூல் எழுதியவர் யார்?
- பவணந்தி முனிவர்
- நன்னூலின் நூல் அமைப்பு குறித்து எழுதுக.
- இரண்டு அதிகாரங்களைக் கொண்டது. அவை,
- எழுத்ததிகாரம்
- சொல்லதிகாரம்
- இரண்டு அதிகாரங்களைக் கொண்டது. அவை,
- தண்டியலங்காரம் எந்த நூலை அடியொற்றி எழுதப்பட்டது?
- வடமொழி நூலான காவியதரிசனம் என்ற நூலை அடியொற்றி எழுதப்பட்டது.
- தன்மையணி என்றால் என்ன?
- ஒரு பொருளின் இயல்புத்தன்மையை நேரில் கண்டாற்போல உள்ளபடி விளக்குவது தன்மையணி ஆகும்.
- உவமையணி என்றால் என்ன?
- ஒருவன் தான் கூறக் கருதியப் பொருளை அதனோடு ஒப்புமை உடைய மற்றொரு பொருளோடு இயைபுபடுத்திக் கூறுவது ‘உவமையணி’ ஆகும்.
- உருவக அணி என்றால் என்ன?
- உவமைக்கும், பொருளுக்கும் வேற்றுமையின்றி இரண்டையும் ஒன்றாகக் கூறுவது ‘உருவக அணி’ ஆகும்.
- தற்குறிப்பேற்ற அணி என்றால் என்ன?
- இயல்பாக நிகழும் நிகழ்ச்சி மீது கவிஞன் தன்னுடையக் கருத்தை ஏற்றி கூறுவது ‘தற்குறிப்பேற்ற அணி’ ஆகும்.
- புகழா புகழ்ச்சி அணி என்றால் என்ன?
- ஒன்றைப் பழிப்பது போல புகழ்ந்து கூறுவது ‘புகழா புகழ்ச்சி அணி’ ஆகும்.
- யாப்பருங்கலக்காரிகை நூலினை இயற்றியவர் யார்?
- அமிர்தசாகரர்
- எட்டுத்தொகையில் அமைந்துள்ள அகம் சார்ந்த நூல்களின் பெயர்களை எழுதுக.
- நற்றிணை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- கலித்தொகை
- அகநானூறு
- எட்டுத்தொகையில் அமைந்துள்ள புறம் சார்ந்த நூல்களின் பெயர்களை எழுதுக.
- புறநானூறு
- பதிற்றுப்பத்து
- எட்டுத்தொகையில் அமைந்துள்ள அகம்புறம் சார்ந்த நூலின் பெயரினை எழுதுக.
- பரிபாடல்
- நற்றிணை குறிப்பு வரைக.
- வேறுபெயர் : நற்றிணை நானூறு
- பாடல் எண்ணிக்கை: 400
- அடிவரையறை: 9-12
- தொகுப்பித்தவர்: பாண்டியன் மாறன்வழுதி
- குறுந்தொகை குறிப்பு வரைக.
- பெயர்க்காரணம்: குறுகிய அடிகளைக் கொண்ட நானூறு பாடல்களைக் கொண்டுள்ளதால் இப்பெயர் பெற்றது.
- அடிவரையறை: 4-8
- பாடல் எண்ணிக்கை: 4௦௦
- வேறுபெயர்: நல்ல குறுந்தொகை
- தொகுத்தவர்: பூரிக்கோ
- நாழிகை கணக்கர் என்பவர் யார்?
- இரவில் தூங்காது காலக்கணக்கை ஆராய்பவர்.
- ஐங்குறுநூறு பெயர்க்காரணம் தருக.
- பெயர்க்காரணம்: ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் வீதம் குறுகிய அடிகளைக் கொண்ட ஐந்நூறு பாடல்களைக் கொண்டுள்ளமையால் ஐங்குறுநூறு எனும் பெயர் பெற்றது.
- அகநானூறு குறிப்பு வரைக.
- பெயர்க்காரணம்: அகம் சார்ந்த நானூறு பாடல்களை கொண்டு அமைந்துள்ளதால் அகநானூறு எனும் பெயர் பெற்றது.
- பாடல் எண்ணிக்கை:4௦௦
- அடிவரையறை: 13- 31
- புறநானூறு பெயர்க்காரணம் தருக.
- புறம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்ட நூல் என்பதால் இப்பெயர் பெற்றது.
- ஆற்றுப்படை நூல்களின் பெயர்களை எழுதுக.
- திருமுருகாற்றுப்படை
- பொருநராற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை
- கூத்தராற்றுப்படை
- பத்துப்பாட்டில் அகம் சார்ந்த நூல்களின் பெயர்களை எழுதுக.
- குறிஞ்சிப்பாட்டு
- முல்லைப்பாட்டு
- பட்டினப்பாலை
- ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- சீவகசிந்தாமணி
- வளையாபதி
- குண்டலகேசி
- கம்பராமாயணத்தில் அமைந்துள்ள கண்டங்கள்…
- 6 கண்டங்கள் உள்ளன.
- பாலகாண்டம்
- அயோத்தியா காண்டம்
- ஆரண்ய காண்டம்
- கிட்கிந்தா காண்டம்
- சுந்தர காண்டம்
- யுத்த காண்டம்
- 6 கண்டங்கள் உள்ளன.
- சைவ சமயக் குரவர் நால்வரின் பெயர்களை எழுதுக.
- திருஞானசம்பந்தர்
- திருநாவுக்கரசர்
- சுந்தரர்
- மாணிக்கவாசகர்
- தேவாரம் என்பதன் பொருள்
- கடவுளுக்கு சூட்டப்படும் பாமாலை என்பது பொருள் ஆகும்.
- முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் என்று அழைக்கப்படுகிறது.
- பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர்
- நம்பியாண்டார் நம்பி
- நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?
- நாதமுனிகள்
- முதல் ஆழ்வார்கள் மூவர் பெயரினை எழுதுக.
- பொய்கையாழ்வார்
- பூதத்தாழ்வார்
- பேயாழ்வார்
- இராவண காவியம் குறிப்பு வரைக.
- எழுதியவர்: புலவர் குழந்தை
- இக்காப்பியம் ஐந்து காண்டங்களால் ஆனது. அவை,
- தமிழகக் காண்டம்
- இலங்கைக் காண்டம்
- விந்தக் காண்டம்
- பழிபுரி காண்டம்
- இலங்கைக் காண்டம்.
பெருவினாக்கள்
- தொல்காப்பியம் குறித்து எழுதுக.
-
தொல்காப்பியம்
- பழந்தமிழ் நூல்களுள் தொன்மையும் முதன்மையும் உடையது தொல்காப்பியம்.
“செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலந்தொகுத் தோனே“
என்கிறார் பனம்பாரனார்.
-
தொல்காப்பியம் அமைப்பு
- தொல்காப்பியம் எழுத்து, சொல். பொருள் என்ற அதிகாரங்களையும், 9 இயல்களாக மொத்தம் 27 இயல்களை உடை 1610 நூற்பாக்களால் ஆனது.
எழுத்ததிகாரம்
- எழுத்ததிகாரம், நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உறுப்பியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என 9 இயல்களைக் கொண்டது.
- தமிழ்மொழியின் எழுத்துக்களையும், சார்பெழுத்துக்களையும் பற்றி குறிப்பிடுகின்றது.
- மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்களையும், மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்களையும், இவ்விரு எழுத்துக்களும் பிறக்கும் முறையினையும் பற்றிய செய்திகளைத் தருகிறது.
சொல்லதிகாரம்
- சொல்லதிகாரம், கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என 9 இயல்களைக் கொண்டது.
- திணை, பால், எண். முதலியனவும், வேற்றுமை வகைகளும், சொல்லின் முதல், ஈறு, இடை சந்தி, சாரியை, விகாரம் என்னும் 6 உறுப்புகளும், பெயர், வினை எச்சங்களும், இடை உரிச்சொற்களும் பற்றி குறிப்பிடுகிறது.
- இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் சொற்களும் இடம்பெறுகின்றன.
- ஆறுதொகை வகைகளும், 10 வகை எச்சங்களும், சொல்மரபுகளும், அவைகளை ஆளும் முறைகளும் அமைந்துள்ளன.
- வடசொற்கள் ஏற்றுக்கொள்ளும் முறையை,
“வடசொற்கிளவி வடவெழுத்து ஓரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே”
என்கிறார் தொல்காப்பியர்
பொருளதிகாரம்
- பொருளதிகாரம், அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என 9 இயல்களைக் கொண்டது.
- இல்வாழ்க்கைப் பற்றிய செய்திகள் அகப்பொருள் என்றும், மற்ற அனைத்தும் புறப்பொருள் என்றும் அழைக்கப்படுகின்றன.
- ஆணும் பெண்ணும் இணைந்து அன்பால் சேர்ந்து வாழும் வாழ்க்கை ‘அகவாழ்க்கை’ ஆகும்.
- வீரம் விளங்க கொடையில் சிறந்து புகழ்பெற்று வாழும் வாழ்க்கை ‘புறவாழ்க்கை’ ஆகும்.
- குறிஞ்சி .முல்லை மருதம், நெய்தல்,பாலை கைக்கிளை, பெருந்திணை என்னும் ஏழும் அகத்திணைக்கு உரிய ஒழுக்கங்கள் ஆகும்.
- குறிஞ்சி .முல்லை மருதம், நெய்தல், பாலை ஐந்தும் ‘அன்பின் ஐந்திணை’ எனப்படும்.
- ‘கைக்கிளை’ என்பது ‘ஒரு தலைக்காமம்’ ஆகும்.
- ‘பெருந்திணை’ என்பது ‘பொருந்தாக் காமம்’ ஆகும்.
- திருமணத்திற்கு முன்னர் தலைவனும், தலைவியும் பிறர் அறியாமல் சந்தித்து அன்பை வளர்த்துக் கொள்வது ‘களவு’ ஆகும்.
- மணம் நிகழ்ந்தபின் அவர்கள் ஊடியும் கூடியும் வாழும் வாழ்க்கை ‘கற்பு’ ஆகும்.
- தொல்காப்பியம், 1 முதற்பொருள் 2. கருப்பொருள், 3. உரிப்பொருள் என ‘முப்பொருள்’ பற்றி பேசுகிறது.
- நிலமும் பொழுதும் ‘முதற்பொருள்’ ஆகும்.
- தெய்வம்,உணவு,விலங்கு, மரம், பறை,தொழில், யாழ் என்பன ‘கருப்பொருள்கள்’ ஆகும்.
- புணர்ச்சி, பிரிவு, இருத்தல், இரங்கல், ஊடல் என்பன முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்ற திணைக்குரிய ‘உரிப்பொருள்கள்’ ஆகும்.
உரை எழுதியோர்
- தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர் தெய்வச்சிலையார், கல்லாடர், பேராசிரியர் ஆகியோர் உரை எழுதியுள்ளனர்.
-
- முச்சங்கம் பற்றி எழுதுக.
-
சங்கம்
முதல் சங்கம்
இடைச் சங்கம்
கடைச் சங்கம்
இடம்
தென் மதுரை
கபாடபுரம்
வட மதுரை
காலம்
4440
3700
1850
புரந்த அரசர்
காய்சினவழுதி முதலாக கடுங்கோன் ஈறாக 89 பேர்
வெண்டேர் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக 59 பேர்
முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி ஈறாக 49 பேர்
சங்க உறுப்பினர்
549
59
49
புலவர்கள்
4449, அகத்தியர், சிவபெருமான், முருகன், முரஞ்சியூர் முடிநாகராயர்
3700, அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர் கருங்கோழி, வெள்ளூர் காப்பியன், சிறு பாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக்கோன், கீரந்தை
449, சிறுமேதாவியார், சேந்தம் பூதனார், அறிவுடை அரனார், பெருங்குன்றூர் கிழார், இளந்திருமாறன்,
மருதனிளநாகனார், நக்கீரனார்
நூல்கள்
அகத்தியம், பரிபாடல், முதுநாரை, முதுகுருகு
அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம், இசைநுணுக்கம், கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை, அகவல்
அகத்தியம், தொல்காப்பியம்,
நெடுந்தொகை,குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, குற்றிசை, பேரிசை
-
- நம்பியகப்பொருள் நூல் அமைப்பு குறித்து எழுதுக.
நம்பியகப் பொருள்
-
- கி.பி.13ஆம் நூற்றாண்டில் தோன்றிய ‘நம்பி அகப்பொருள்’ என்ற நூல் அகப்பொருள் இலக்கணத்துக்கு என ஒரு தனிப்பெரும் நூல் ஆகும்.
- எழுதியவர் : நாற்கவிராச நம்பி
நாற்கவிராச நம்பி
-
- நம்பியகப்பொருளின் ஆசிரியர் நாற்கவிராச நம்பி.
- இயற்பெயர் நம்பி
- ஊர் புளிங்குடி
- சமண சமயத்தை சார்ந்தவர்.
- தமிழ், வடமொழி இரண்டிலும் வல்லவர்.
- ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி. வித்தாரக்கவி என்னும் நால்வகைப் பாக்களும் புனையும் ஆற்றல் பெற்றவர். அதனால் இவர். “நாற்கவிராசன்’ என அழைக்கப்பட்டார்.
- நம்பி தம் அகப்பொருள் நூலுக்கு ‘அகப்பொருள் விளக்கம்’ என்று பெயரிட்டும், இந்நூலுக்கு உரையும் எழுதினார்.
- தம் நூலைப் பாண்டியன் குலசேகரன் அவையில் அரங்கேற்றினார்.
அகச்செய்திகள்
-
- ஓர் ஆணுக்கும். ஒரு பெண்ணும் இடையே ஏற்படும் காதல் உணர்வை மையமாகக் கொண்டு அமைவது ‘அகப்பொருள் இலக்கணம்’ ஆகும்.
நூலின் அமைப்பு
-
- நாற்கவிராச நம்பியால் இயற்றப்பெற்ற அகப்பொருள் விளக்கம்
-
- அகத்திணையியல்(116)
- களவியல்(54)
- வரைவியல்(29)
- கற்பியல்(10)
- ஒழிபியல்(43)
என்ற ஐந்து பகுதிகளை உள்ளடக்கியது. 252 நூற்பாக்களைக் கொண்டது ஆகும்.
- அகத்திணையியல்
-
- அகத்திணையியலில் ஐந்திணைப்பாகுபாடுகள். முதல் கரு. உரிப்பொருள் பற்றியச் செய்திகள் உள்ளன.
- களவியல்
-
- களவின் இலக்கணங்களாக எண்வகைத் திருமணம் பற்றியும். கைக்கிளையின் பாகுபாடுகளாக காட்சி. ஐயம், துணிவு. குறிப்பறிதல் பற்றியச் செய்திகளும் உள்ளன.
- வரையியல்
-
- வரைவியலில் திருமணம் செய்தல், அறத்தொடு நிற்றல், தலைவி, தோழி, செவிலி அறத்தோடு நிற்கும் திறம் பற்றி கூறுகிறது.
- கற்பியல்
-
- கற்பியலில் இல்லறம் நடத்தும் கிழவன், கிழத்தியின் பாங்கும். கற்பின் சிறப்பும், கற்பிற்குரிய இலக்கணத்தை பற்றியும் பேசுகிறது. இல்வாழ்க்கையில் பிரிவானது,
-
- பரத்தையிற் பிரிவு
- ஓதல் பிரிவு
- காவல் பிரிவு
- தூது பிரிவு
- துணைவயிற் பிரிவு
- பொருள்வயிற் பிரிவு
என 6 வகைப்படும்.
-
- ஒழிபியல்
-
- ஒழிபியலில் அகப்பாட்டு உறுப்புகள் 12 ஆகும். அவை, திணை, கைக்கோள், கூற்று, கேட்போர், இடம், காலம், பயன், முன்னம், மெய்ப்பாடு, எச்சம், பொருள் வகை, துறை ஆகும்.
- புறப்பொருள் வெண்பாமாலை நூல் அமைப்பு குறித்து எழுதுக. (அல்லது) புறத்திணைகளைப் பட்டியலிடுக. (அல்லது) பன்னிரு திணைகள் விவரி.
1. வெட்சி : ஆக்களைக் கவர்தல்
2.கரந்தைத் திணை : கவர்ந்த பசுக்களைப் பகைவரிடம் இருந்து மீட்பது
3.வஞ்சித் திணை: பகைநாட்டின் மீது போர் தொடுத்து செல்வது
4.காஞ்சித் திணை : எதிர்த்துப் போர் செய்வது
5. நொச்சித்திணை : மதில் காப்பது
6. உழிஞைத் திணை : மதிலை முற்றுகையிடுதல்
7.தும்பைத் திணை : இருவேந்தர் போரிடுவது
8.வாகைத் திணை : வெற்றியைக் கொண்டாடுவது
9.பாடாண் திணை : ஆண்மகனது வெற்றி, கொடை, புகழ் ஆகியவற்றை சிறப்பித்துப் பாடுவது
10.பொதுவியல் : புறத்திணைகளுக்கு எல்லாம் பொதுவாக கூறும் செய்திகள்
11.கைக்கிளை: ஒரு தலைக்காமமே ‘கைக்கிளை‘ ஆகும்.
12.பெருந்திணை : பெருந்திணை என்பது ‘பொருந்தாக் காதலை‘ குறிக்கும்.
- அணி வகைகள் விவரி.
-
- தன்மையணி : ஒரு பொருளின் இயல்புத் தன்மையை நேரில் கண்டாற்போல உள்ளப விளக்குவது ‘தன்மையணி’.
- உவமையணி : ஒருவன் தான் கூறக் கருதியப் பொருளை அதனோடு ஒப்புயை உடைய மற்றொரு பொருளோடு இயைபுபடுத்திக் கூறுவது ‘உவமையணி
- உருவகயணி : உவமைக்கும் பொருளுக்கும் வேற்றுமையின்றி இரண்டையும் ஒன்றாகக் கூறுவது ‘உருவக அணி’.
- தீவக அணி : தீவகம் என்பது விளக்கு ஆகும். ஓரிடத்தில் வைக்கப்பட்ட விளக்கு பல இடங்களிலும் உள்ள பொருளை விளக்க காட்டும். அதுபோல ஓரிடத்தில் நின்ற சொல் பல இடங்களிலும் சென்று பொருளை விளக்குவது ‘தீவக அணி’.
- பின்வரு நிலையணி : முன்னர் வந்த சொல்லாவது, பொருளாவது பல இடத்தும் வருமாயின் அது ‘பின்வருநிலை அணி’.
- முன்னவிலக்கணி : கவிஞன் ஒரு பொருளைக் குறிப்பால் மறுத்து மேன்மை தோன்றச் சொல்லுவது ‘முன்னவிலக்கணி’
- ஒட்டணி : கவிஞன் தான் கூறக் கருதிய ஒன்றை நேரே கூறாமல் விடுத்து அதனை ஒப்புமை உடைய பொருளோடு ஒட்டிக் கூறுவான் அதன் வாயிலாகச் சொல்லக் கருதியதைக் குறிப்பாக உணர்த்துவான். ஒட்டிக் கூறுவதால் ‘ஒட்டணி’ என பெயர் பெற்றது.
- அதிசய அணி : கவிஞனின் கூற்றானது சான்றோருக்கும் வியப்பைத் தருவதாய் உலக இயல்புக்கு மாறானதாய் அமைவதே ‘அதிசய அணி’.
- தற்குறிப்பேற்ற அணி : இயல்பாக நிகழும் நிகழ்ச்சி ஒன்றின் மேல் கவிஞன் தான் கூறக் கருதிய பொருளை ஏற்றிச் சுவைபட உரைப்பது ‘தற்குறிப்பேற்ற அணி’.
- நிரல்நிறையணி : கவிஞர் தம் செய்யுள்களில் முதலில் சொற்பொருள்களை வரிசைப்படுத்துவர். அவற்றோடு தொடர்புடையவற்றைப் பின்னர் அதே முறையில் பொருள்படுமாறு வரிசைப்படுத்திப் பாடுவர். இவ்வாறு அமைவதே ‘நிரல்நிறை அணி’ ஆகும்.
- ஆர்வமொழி அணி : உள்ளத்தின்கண் நிகழும் ஆர்வத்தின் காரணமாக நிகழ்ச்சிகளை மிகுதிபடுத்திக் கூறுவது ‘ஆர்வமொழி அணி’.
-
தன்மேம்பாட்டுரையணி : ஒருவனுடைய ஆற்றலைப் பிறர் அறியார். அவ்இடங்களில் தன்னுடைய ஆற்றலைத் தானே எடுத்துக் கூறுவர். இவ்வாறு எடுத்து மொழிவதே ‘தன்மேம்பாட்டுரை அணி’.
-
சிலேடையணி : செய்யுளில் இடம்பெறும் ஒரு சொல்லோ தொடரோ தனித்து நின்றும் பிரிந்து நின்றும் பல பொருள்களைத் தரும். அவ்வாறு பல பொருள்பட அமைவது ‘சிலேடை அணி’.
- மாறுபடு புகழ்நிலையணி : கவிஞன் தான் பழிக்கக் கருதிய பொருளைக் கூறாது மற்றொரு பொருளைப் புகழ்ந்து கூறுவான். இதனை ‘மாறுபடு புகழ்நிலை அணி”.
-
புகழாப் புகழ்ச்சியணி : ஒன்றைப் பழித்துக் கூறுவது போன்ற தன்மையால் அப்பொருளுக்கு மேம்பாடு தோன்றும் படியாக உரைப்பது ‘புகழாப்புகழ்ச்சி அணி’.
-
வாழ்த்தணி: இவருக்கு இன்னது பொருந்து என்று கவிஞன் தாம் நினைத்தை விரித்துச் சொல்லுவது ‘வாழ்த்தணி’.
-
- பா வகைகள் குறித்து எழுதுக.
வெண்பா
-
- ஈற்றடி முச்சீரும் ஏனைய அடி நாற்சீரும் பெற்று வரும்.
- மாமுன் நிரை, விளம் முன் நேர், காய் முன் நேர் என்பனவாகிய வெண்பாத் தளைகளையே பெற்று வரவேண்டும்.
- ஈற்றுச் சீர் ஓரசையாலோ, ஓரசையுடன் குற்றியலுகரமோ பெற்று முடிதல் வேண்டும்.
- இவ்வெண்பா குறைந்தது இரண்டு அடிகளைக் கொண்டது.
ஆசிரியப்பா
-
- உரைநடை போன்று அமைவதே ஆசிரியப்பா.
- ஈரசைச் சீர்கள் நான்கு கொண்ட அளவடிகளால் அமைவது இது.
- எதுகை, மோனைகளால் சிறப்புப் பெறுவது. குறைந்தது மூன்றடிகளைப் பெற்று வரும்.
- அடி மிகுதிக்கு எல்லை இல்லை.
கலிப்பா
-
- நிரை முதலாகிய வெண்பாவுரிச்சீர் ( புளிமாங்காய், கருவிளங்காய்) மிகுந்துவரும்.
- கலிப்பாவுக்குரிய கலித்தளைகளுடன் பிறதளைகளும் கலந்துவரும்.
- கலிப்பாவுக்குரிய அடி அளவடி. அம்போதரங்க உறுப்பில் குறளடி, சிந்தடிகளும், அராக உறுப்பில் நெடிலடி, கழிநெடிலடிகளும் வரும்.
- கலிப்பாவின் ஓசை, துள்ளல் ஓசை.
- கலிப்பா ஒன்றையொன்று தொடரும் உறுப்புகளால் ஆகியது. அவை தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறுமாகும்.
வஞ்சிப்பா
-
- வஞ்சியுரிச்சீர் எனப்படும் கனிச்சீர்களால் ஆயது வஞ்சிப்பா. சிறுபான்மை காய்ச்சீர்களும் கலந்து வரலாம்.
- ஒன்றிய வஞ்சித்தளையும் ஒன்றாத வஞ்சித்தளையும் வரும். சிறுபான்மை பிறதளைகளும் வரலாம்.
- வஞ்சிப்பாவிற்குரிய அடி குறளடியும் சிந்தடியும் ஆகும். அதாவது ஒரு வஞ்சிப்பா முழுமையும் குறளடிகளாய் வரும் ; அல்லது சிந்தடிகளாய் வரும். வஞ்சிப்பாவின் அடிச்சிறுமை மூன்றடி ;பெருமைக்கு வரம்பு இல்லை.
- வஞ்சியடிகளின் இறுதியில் ஒரு தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் கொண்டு வஞ்சிப்பா முடிவடையும்.
- வல்லினம் மிகும் இடங்களைப் பட்டியலிடுக.
-
- வல்லினம் மிகும் இடங்கள் என்பது ஒரு சொல்லின் இறுதியில் வல்லின மெய்யெழுத்துக்கள் (க், ச், த், ப்) மிகுந்து வரும் இடங்களைக் குறிக்கும்.
சுட்டு, வினா எழுத்துக்களை அடுத்து:
-
- அ, இ, எ, ஆ, ஏ போன்ற சுட்டு மற்றும் வினா எழுத்துக்களை அடுத்து வரும் போது வல்லினம் மிகும்.
- எடுத்துக்காட்டாக, “அ + குடம் = அக்குடம்“, “இந்த + பக்கம் = இந்தப்பக்கம்“, “எ + கேள்வி = எக்கேள்வி”
உவமைத் தொகையில்:
-
- ஒரு பொருளை வேறொரு பொருளுடன் ஒப்பிட்டு கூறும் போது வல்லினம் மிகும்.
- எடுத்துக்காட்டாக, “தாமரை + முகம் = தாமரைமுகம்“, “மயில் + தோகை = மயில்தோகை“
இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ) மறைந்து வரும்போது:
-
- இரண்டாம் வேற்றுமை உருபு ஐ மறைந்து வரும்போது வல்லினம் மிகும்.
- எடுத்துக்காட்டாக, “பாலை + உண்டான் = பாலைஉண்டான்“, “பழத்தைத் தின்றான் = பழத்தின்றான்“
பெயரெச்சம், வினையெச்சம்:
-
- பெயரெச்சம் மற்றும் வினையெச்சம் ஆகியவற்றின் பின் வல்லினம் மிகும்.
- எடுத்துக்காட்டாக, “ஓடிய + குதிரை = ஓடியக்குதிரை“, “செய்து + பார்த்தான் = செய்துப்பார்த்தான்“
வினைத்தொகை:
-
- வினைத்தொகையில் வல்லினம் மிகும்.
- எடுத்துக்காட்டாக, “சுட்டு + களம் = சுட்டுக்களம்“, “வீசு + தென்றல் = வீசுதென்றல்“
எதிர்மறைப் பெயரெச்சம்:
-
- எதிர்மறைப் பெயரெச்சத்தில் வல்லினம் மிகும்.
- எடுத்துக்காட்டாக, “கண்ட + காட்சி = கண்டகாட்சி“, “செல்லாத + பாதை = செல்லாதப்பாதை“
பண்புத்தொகை:
-
- பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.
- எடுத்துக்காட்டாக, “செம்மை + தாமரை = செந்தாமரை“, “வெண்மை + புறா = வெண்புறா”
உரிச்சொற்றொடர்களில்:
-
- உரிச்சொற்றொடர்களில் வல்லினம் மிகும்.
- எடுத்துக்காட்டாக, “சால + சிறந்தது = சாலச்சிறந்தது“, “தவ + பெரிது = தவப்பேரிது”
உம்மைத்தொகை:
-
- உம்மைத்தொகையில் வல்லினம் மிகும்.
- எடுத்துக்காட்டாக, “இரவும் + பகலும் = இரவுபகலும்“, “கையும் + காலும் = கைகால்கள்“
இரட்டைக்கிளவி:
-
- இரட்டைக்கிளவி சொற்களில் வல்லினம் மிகும்.
- எடுத்துக்காட்டாக, “சலசல + என்றது = சலசலத்தது“, “படபட + என்றது = படபடத்தது“.
- வல்லினம் மிகா இடங்களைப் பட்டியலிடுக.
-
- வல்லினம் மிகா இடங்கள் என்பவை, தமிழ் இலக்கணத்தில் ஒரு சொல்லின் இறுதியில் உள்ள வல்லின எழுத்துக்கள் (க், ச், ட், த், ப், ற்) அடுத்த சொல்லின் முதலில் வரும்போது மிகாமல், அதாவது தோன்றாமல் வருவது ஆகும்.
எழுவாய் சொற்களை அடுத்து:
-
- உதாரணத்திற்கு, “தம்பி படித்தான்” என்ற இடத்தில், ‘தம்பி‘ என்ற எழுவாய்க்குப் பின் வல்லினம் மிகாது.
அது, இது, எது ஆகிய சொற்களை அடுத்து:
-
- “அது சென்றது“, “இது பெரியது“, “எது கிடைத்தது” போன்ற இடங்களில் வல்லினம் மிகாது.
பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றின் பின்:
-
- “எழுதிய பாடல்“, “எழுதாத பாடல்” போன்ற இடங்களில் வல்லினம் மிகாது.
இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வரும் இடங்களில் (இரண்டாம் வேற்றுமைத்தொகை):
-
- “கற்றல் நூல்” (கற்ற நூலை) என்ற இடத்தில், ‘ஐ‘ உருபு மறைந்து வந்தாலும், வல்லினம் மிகாது.
சுட்டு, வினா சொற்களை அடுத்து:
-
- “அது பறந்தது“, “எது தங்கம்“, “எவை சென்றன” போன்ற இடங்களில் வல்லினம் மிகாது.
ஆ, ஏ, ஓ போன்ற வினா எழுத்துக்களின் பின்:
-
- உயிரெழுத்துகளின் பின்: “வாழ்க தமிழ்” போன்ற இடங்களில், உயிரெழுத்தான ‘ழ‘ விற்கு பின் வல்லினம் மிகாது.
- எட்டுத்தொகை நூல்கள் குறித்து விவரி.
-
- அகம் சார்ந்த நூல்கள்
- நற்றிணை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- கலித்தொகை
- அகநானூறு
- புறம் சார்ந்த நூல்கள்
- புறநானூறு
- பதிற்றுப்பத்து
- அகமும் புறமும் சார்ந்த நூல்
- பரிபாடல்
- அகம் சார்ந்த நூல்கள்
அகம் சார்ந்த நூல்கள்
நற்றிணை
-
- நல்ல திணை
- பாடுபொருள்: அகம்
- அடிவரையறை : 9-12
- பாடல் எண்ணிக்கை: 400
- பாடிய புலவர்கள்:175
- வேறுபெயர்: நற்றிணை நானூறு
- தொகுப்பித்தவர்: பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி
குறுந்தொகை
-
- நல்ல குறுந்தொகை
- பாடுபொருள்: அகம்
- அடிவரையறை : 4 – 8
- பாடல் எண்ணிக்கை: 400
- தொகுத்தவர்: பூரிக்கோ
ஐங்குறுநூறு
-
- ஐந்திணைகளில் ஒவ்வொன்றும் குறைந்த அடிகளைக் கொண்ட நானூறு பாடல்களைக் கொண்டு விளங்குவதால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.
- பாடுபொருள்: அகம்
- அடிவரையறை : 3-6
- பாடல் எண்ணிக்கை: 500
- பாடிய புலவர்கள்: 5
கலித்தொகை
-
- கலிப்பாக்களால் ஆன பாடல்களைக் கொண்டுள்ளமையால் கலித்தொகை எனும் பெயர் பெற்றது.
- பாடுபொருள்: அகம்
- பாடல் எண்ணிக்கை: 150
- பாடிய புலவர்கள்: 5
அகநானூறு
-
- அகம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டுள்ளமையால் அகநானூறு எனும் பெயர் பெற்றது.
- பாடுபொருள்: அகம்
- அடிவரையறை : 13-31
- பாடல் எண்ணிக்கை: 400
- பாடிய புலவர்கள்: 145
புறம் சார்ந்த நூல்கள்
புறநானூறு
-
- புறம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டமையால் புறநானூறு எனும் பெயர் பெற்றது.
- பாடுபொருள்: புறம்
- பாடல் எண்ணிக்கை – 400
- வேறுபெயர்: புறம்,புறப்பாட்டு
பதிற்றுப்பத்து
-
- பத்து சேரமன்னர்களையும் பத்துப் பத்தாக நூறு பாடல்களில் பாடியுள்ளமையால் பதிற்றுப்பத்து எனும் பெயர் பெற்றது.
- பாடுபொருள்: புறம்
- பாடல் எண்ணிக்கை– 100 (கிடைத்தவை 80 )
- பாடாண் திணையில் மட்டுமே அமைந்த பாடல்களைக் கொண்டுள்ளது.
- இரும்புக்கடலை என்றும் அழைக்கபடுகிறது.
அகமும் புறமும் சார்ந்த நூல்
பரிபாடல்
-
- பரிந்து செல்லும் ஓசையுடைய பாடல்களை கொண்டுள்ளதால் பரிபாடல் எனும் பெயர் பெற்றது.
- பாடுபொருள்– அகம் புறம் சார்ந்தது.
- பாடல் எண்ணிக்கை-70(கிடைத்தவை 22)
- திருமால்-6
- முருகன்-8
- வையை-8
- அடிவரையறை – 25-40
- பாடிய புலவர்கள்– 13
- எட்டுத்தொகையில் அமைந்துள்ள அகம் சார்ந்த நூல்களைப் பட்டியலிடுக.
-
- அகம் சார்ந்த நூல்கள்
- நற்றிணை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- கலித்தொகை
- அகநானூறு
- அகம் சார்ந்த நூல்கள்
நற்றிணை
-
- நல்ல திணை
- பாடுபொருள்: அகம்
- அடிவரையறை : 9-12
- பாடல் எண்ணிக்கை: 400
- பாடிய புலவர்கள்:175
- வேறுபெயர்: நற்றிணை நானூறு
- தொகுப்பித்தவர்: பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி
குறுந்தொகை
-
- நல்ல குறுந்தொகை
- பாடுபொருள்: அகம்
- அடிவரையறை : 4 – 8
- பாடல் எண்ணிக்கை: 400
- தொகுத்தவர்: பூரிக்கோ
ஐங்குறுநூறு
-
- ஐந்திணைகளில் ஒவ்வொன்றும் குறைந்த அடிகளைக் கொண்ட நானூறு பாடல்களைக் கொண்டு விளங்குவதால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.
- பாடுபொருள்: அகம்
- அடிவரையறை : 3-6
- பாடல் எண்ணிக்கை: 500
- பாடிய புலவர்கள்: 5
கலித்தொகை
-
- கலிப்பாக்களால் ஆன பாடல்களைக் கொண்டுள்ளமையால் கலித்தொகை எனும் பெயர் பெற்றது.
- பாடுபொருள்: அகம்
- பாடல் எண்ணிக்கை: 150
- பாடிய புலவர்கள்: 5
அகநானூறு
-
- அகம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டுள்ளமையால் அகநானூறு எனும் பெயர் பெற்றது.
- பாடுபொருள்: அகம்
- அடிவரையறை : 13-31
- பாடல் எண்ணிக்கை: 400
- பாடிய புலவர்கள்: 145
- எட்டுத்தொகையில் அமைந்துள்ள புறம் சார்ந்த நூல்கள் குறித்து எழுதுக.
புறம் சார்ந்த நூல்கள்
-
- புறநானூறு
- பதிற்றுப்பத்து
புறநானூறு
-
- புறம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டமையால் புறநானூறு எனும் பெயர் பெற்றது.
- பாடுபொருள்: புறம்
- பாடல் எண்ணிக்கை – 400
- வேறுபெயர்: புறம்,புறப்பாட்டு
பதிற்றுப்பத்து
-
- பத்து சேரமன்னர்களையும் பத்துப் பத்தாக நூறு பாடல்களில் பாடியுள்ளமையால் பதிற்றுப்பத்து எனும் பெயர் பெற்றது.
- பாடுபொருள்: புறம்
- பாடல் எண்ணிக்கை- 100 (கிடைத்தவை 80 )
- பாடாண் திணையில் மட்டுமே அமைந்த பாடல்களைக் கொண்டுள்ளது.
- இரும்புக்கடலை என்றும் அழைக்கபடுகிறது.
- பத்துப்பாட்டு நூல்களைப் பட்டியலிடுக.
-
- ஆற்றுப்படை நூல்கள்
- திருமுருகாற்றுப்படை: நக்கீரர்
- பொருநராற்றுப்படை: முடத்தாமக் கண்ணியார்
- சிறுபாணாற்றுப்படை: நல்லூர் நத்தத்தனார்
- பெரும்பாணாற்றுப்படை:கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- மலைபடுகடாம்: பெருங்கெளசிகனார்
- அகம் சார்ந்த நூல்கள்
- முல்லைப்பாட்டு : நப்பூதனார்
- குறிஞ்சிப்பாட்டு – கபிலர்
- பட்டினப்பாலை – கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- புறம் சார்ந்த நூல்கள்
- திருமுருகாற்றுப்படை: நக்கீரர்
- பொருநராற்றுப்படை: முடத்தாமக் கண்ணியார்
- சிறுபாணாற்றுப்படை: நல்லூர் நத்தத்தனார்
- பெரும்பாணாற்றுப்படை:கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- மலைபடுகடாம்: பெருங்கெளசிகனார்
- மதுரைக்காஞ்சி: மாங்குடி மருதனார்
- ஆற்றுப்படை நூல்கள்
-
- அகம் புறம் சார்ந்த நூல்
- நெடுநல்வாடை
- பத்துப்பாட்டில் மிகச் சிறிய பாட்டு 103 அடிகளைக் கொண்டது. மிக நீண்டது 782 அடிகளைக் கொண்டது.
- அகம் புறம் சார்ந்த நூல்
திருமுருகாற்றுப்படை
-
- பத்துப்பாட்டுக்குக் கடவுள் வாழ்த்துப் போல அமைந்தது திருமுருகாற்றுப்படை.
- இது 317 அடிகள் கொண்டது.
- முருகன் அருள் பெற்ற ஒருவன், அதைப் பெற விரும்பும் இன்னொருவனை முருகப் பெருமானிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது.
- இயற்றியவர் நக்கீரர்.
- இதற்குப் புலவராற்றுப் படை என்றும் ஒரு பெயர் உண்டு.
பொருநராற்றுப்படை
-
- சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாட்டுடைத் தலைவன் ஆவார்.
- இயற்றியவர் – முடத்தாமக் கண்ணியார்
- இப்பாட்டு 248 அடிகள் கொண்டது.
- போர்க்களம் பாடும் பொருநன் ஒருவன் (கூத்தன்) தனக்குப் பரிசளித்த கரிகாலனிடம் இன்னொரு பொருநனை ஆற்றுப்படுத்துவதாக இயற்றப்பட்டது இது.
பெரும்பாணாற்றுப் படை
-
- இயற்றியவர் – கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- பாட்டுடைத் தலைவன் – காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன்.
- 500 அடிகள் கொண்டது.
- பேரியாழை வாசிக்கும் பாணன் ஒருவன், தன்போல் இன்னொரு பாணனைத் தனக்குப் பரிசளித்த வள்ளலான இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டதாதலால் பெரும்பாணாற்றுப் படையாயிற்று.
சிறுபாணாற்றுப் படை
-
- இயற்றியவர் – இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
- பாட்டுடைத் தலைவன் –ஓய்மான் நாட்டை ஆண்ட நல்லியக்கோடன்
- இது 269 அடிகள் கொண்டது.
- சீறியாழை (சிறிய யாழ்) வாசிக்கும் பாணன் ஒருவனை, நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டமையின் இப்பெயர் பெற்றது.
மலைபடுகடாம்(கூத்தராற்றுப்படை)
-
- இயற்றியவர் – இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார்
- பாட்டுடைத் தலைவன் – நன்னன் சேய் நன்னன்
- 583 அடிகள் கொண்டது.
- பரிசில் பெற்ற கூத்தன், அது பெறவிரும்பிய இன்னொரு கூத்தனை நன்னனிடம் ஆற்றுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டது.
- மலைக்கு யானையை உவமித்து, அதில் பிறந்த ஓசையைக் கடாம் (மதநீர்) எனச் சிறப்பித்தமையால் மலைபடுகடாம் எனப்பட்டது.
மதுரைக் காஞ்சி
-
- பத்துப்பாட்டுள் மிகவும் நீண்ட பாட்டான இது 782 அடிகளைக் கொண்டது.
- இது, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ் செழியனுக்கு, நிலையாமையை எடுத்துக்கூறும் வகையில் மாங்குடி மருதனார் இயற்றியது.
- மதுரை மன்னனுக்குக் கூறிய காஞ்சியாகையால் மதுரைக்காஞ்சியாயிற்று (காஞ்சி – நிலையாமை).
குறிஞ்சிப் பாட்டு
-
- இயற்றியவர் – கபிலர்
- இது 261 அடிகள் கொண்ட அகவற்பாட்டாகும்.
- குறிஞ்சிக்குரிய இயற்கைப் புணர்ச்சியும் அதற்குரிய நிமித்தங்களும் இதில் காணப்பட்டமையால் குறிஞ்சிப்பாட்டாயிற்று.
- பெருங்குறிஞ்சி என்ற பெயரும் இதற்கு உண்டு.
- இது அறத்தொடு நிற்றல் என்ற அகத்துறைக்கு அழகான எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.
முல்லைப் பாட்டு
-
- பத்துப்பாட்டுள் மிகச்சிறிய பாட்டான இதில் 103 அடிகள் உள்ளன.
- இதனை இயற்றியவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார்.
- இதற்கு முல்லை என்ற பெயரும் உண்டு.
- முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்துள்ளது.
பட்டினப்பாலை
-
- பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணைச் செய்யுள் என்பது பொருள்.
- 301 அடிகள் கொண்டது.
- இதில் வஞ்சியடிகள் கலந்து வருவதால், இதனை வஞ்சிநெடும் பாட்டு என்பர்.
- இதன் தலைவன் திருமாவளவன் என்னும் கரிகால் வளவன் ஆவான்.
- இதனை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
- பொருள்தேடச் செல்ல விரும்பிய தலைவன் தன் மனைவியைப் பிரிய மனமின்றித் தன் செலவினைக் கைவிட்ட நிலையில் பாடப்பட்டது இது.
- அகப்பொருள் இதனைச் செலவழுங்குதல் என்று கூறும்.
நெடுநல்வாடை
-
- இது 188 அடிகள் கொண்டது.
- இதனை இயற்றியவர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
- காதலன் பகைவர்மேல் படையெடுத்துச் சென்று பாசறையில் இருக்கிறான். காதலி பிரிவுத் துயரால் வாடிக்கிடக்கிறாள். காதலியின் துயரைப் போக்க முடியா அரண்மனைப் பெண்டிர், தலைவன் விரைவில் திரும்பி வருமாறு கொற்றவைக்கு வழிபாடு செய்கின்றனர். இதுவே இதன் மையக் கருத்து.
- பத்துப்பாட்டில் அமைந்துள்ள ஆற்றுப்படை நூல்கள் குறித்து விவரி.
திருமுருகாற்றுப்படை
-
-
- பத்துப்பாட்டுக்குக் கடவுள் வாழ்த்துப் போல அமைந்தது திருமுருகாற்றுப்படை.
- இது 317 அடிகள் கொண்டது.
- முருகன் அருள் பெற்ற ஒருவன், அதைப் பெற விரும்பும் இன்னொருவனை முருகப் பெருமானிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது.
- இயற்றியவர் நக்கீரர்.
- இதற்குப் புலவராற்றுப் படை என்றும் ஒரு பெயர் உண்டு.
-
பொருநராற்றுப்படை
-
-
- சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாட்டுடைத் தலைவன் ஆவார்.
- இயற்றியவர் – முடத்தாமக் கண்ணியார்
- இப்பாட்டு 248 அடிகள் கொண்டது.
- போர்க்களம் பாடும் பொருநன் ஒருவன் (கூத்தன்) தனக்குப் பரிசளித்த கரிகாலனிடம் இன்னொரு பொருநனை ஆற்றுப்படுத்துவதாக இயற்றப்பட்டது இது.
-
பெரும்பாணாற்றுப் படை
-
-
- இயற்றியவர் – கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- பாட்டுடைத் தலைவன் – காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன்.
- 500 அடிகள் கொண்டது.
- பேரியாழை வாசிக்கும் பாணன் ஒருவன், தன்போல் இன்னொரு பாணனைத் தனக்குப் பரிசளித்த வள்ளலான இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டதாதலால் பெரும்பாணாற்றுப் படையாயிற்று.
-
சிறுபாணாற்றுப் படை
-
-
- இயற்றியவர் – இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
- பாட்டுடைத் தலைவன் -ஓய்மான் நாட்டை ஆண்ட நல்லியக்கோடன்
- இது 269 அடிகள் கொண்டது.
- சீறியாழை (சிறிய யாழ்) வாசிக்கும் பாணன் ஒருவனை, நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டமையின் இப்பெயர் பெற்றது.
-
மலைபடுகடாம்(கூத்தராற்றுப்படை)
-
-
- இயற்றியவர் – இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார்
- பாட்டுடைத் தலைவன் – நன்னன் சேய் நன்னன்
- 583 அடிகள் கொண்டது.
- பரிசில் பெற்ற கூத்தன், அது பெறவிரும்பிய இன்னொரு கூத்தனை நன்னனிடம் ஆற்றுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டது.
- மலைக்கு யானையை உவமித்து, அதில் பிறந்த ஓசையைக் கடாம் (மதநீர்) எனச் சிறப்பித்தமையால் மலைபடுகடாம் எனப்பட்டது.
-
- பத்துப்பாட்டில் அமைந்துள்ள அகம் சார்ந்த நூல்கள் குறித்து எழுதுக.
குறிஞ்சிப் பாட்டு
-
-
- இயற்றியவர் – கபிலர்
- இது 261 அடிகள் கொண்ட அகவற்பாட்டாகும்.
- குறிஞ்சிக்குரிய இயற்கைப் புணர்ச்சியும் அதற்குரிய நிமித்தங்களும் இதில் காணப்பட்டமையால் குறிஞ்சிப்பாட்டாயிற்று.
- பெருங்குறிஞ்சி என்ற பெயரும் இதற்கு உண்டு.
- இது அறத்தொடு நிற்றல் என்ற அகத்துறைக்கு அழகான எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.
-
முல்லைப் பாட்டு
-
-
- பத்துப்பாட்டுள் மிகச்சிறிய பாட்டான இதில் 103 அடிகள் உள்ளன.
- இதனை இயற்றியவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார்.
- இதற்கு முல்லை என்ற பெயரும் உண்டு.
- முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்துள்ளது.
-
பட்டினப்பாலை
-
-
- பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணைச் செய்யுள் என்பது பொருள்.
- 301 அடிகள் கொண்டது.
- இதில் வஞ்சியடிகள் கலந்து வருவதால், இதனை வஞ்சிநெடும் பாட்டு என்பர்.
- இதன் தலைவன் திருமாவளவன் என்னும் கரிகால் வளவன் ஆவான்.
- இதனை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
- பொருள்தேடச் செல்ல விரும்பிய தலைவன் தன் மனைவியைப் பிரிய மனமின்றித் தன் செலவினைக் கைவிட்ட நிலையில் பாடப்பட்டது இது.
- அகப்பொருள் இதனைச் செலவழுங்குதல் என்று கூறும்.
-
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்து எழுதுக.
நீதி நூல்கள் (11 நூல்கள்)
1) திருக்குறள்
2)நாலடியார்
3) இன்னா நாற்பது
4) இனியவை நாற்பது
5)நான்மணிக்கடிகை
6)ஆசாரக்கோவை
7) சிறுபஞ்சமூலம்
8) ஏலாதி
9)திரிகடுகம்
10)முதுமொழிக்காஞ்சி
11) பழமொழி நானூறு
அக நூல்கள் (6 நூல்கள்)
1) ஐந்திணை ஐம்பது
2)ஐந்திணை எழுபது
3) திணைமொழி ஐம்பது
4) திணைமாலை நூற்று ஐம்பது
5) கைந்நிலை
6)கார் நாற்பது
புற நூல் (ஒன்று)
1)களவழி நாற்பது
என மூன்று பிரிவுகளுள் அடக்கலாம்.
திருக்குறள்
-
-
- பெயர்க்காரணம்: குறள் வெண்பாக்களால் பாடப்பட்டுள்ளதால் இப்பெயர் பெற்றது.
- திருக்குறள் என்பது “அடையடுத்த கருவியாகு பெயர்”
- ஆசிரியர் – திருவள்ளுவர்
- பாவகை – குறள் வெண்பா
-
திருக்குறளின் வேறு பெயர்கள்:
-
-
-
-
- திருவள்ளுவம்
- தமிழ் மறை
- பொதுமறை
- முப்பால்
- பொய்யாமொழி
- தெய்வநூல்
-
-
-
நூல் பகுப்பு முறை:
-
-
-
-
- பால் – 3(அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்)
- அதிகாரம் – 133
- பாடல்கள் – 1330
- இயல்கள் – 9
-
-
-
நாலடியார்
-
-
- பெயர்க்காரணம்: நான்கு அடிகளால் ஆன நானூறு பாடல்களை கொண்டதால் நாலடி நானூறு என்றும் நாலடியார் என்றும் அழைக்கப்படுகிறது
-
-
-
- ஆசிரியர் – சமண முனிவர்கள்
- தொகுத்தவர் – பதுமனார்
- பாடல்கள் – 400
- பொருள் – அறம்
- பா வகை – வெண்பா
-
வேறு பெயர்கள்:
-
-
-
- நாலடி நானூறு
- வேளாண் வேதம்
-
-
நூல் பகுப்பு:
-
-
-
- இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது
- அறத்துப்பால் – 13 அதிகாரங்கள்
- பொருட்பால் – 24 அதிகாரங்கள்
- இன்பத்துப்பால் – 3 அதிகாரங்கள்
- இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது
-
-
நூலின் சிறப்பு:
-
-
-
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள ஒரே தொகை நூல் இது.
-
-
நான்மணிக்கடிகை
-
-
-
- பெயர்க்காரணம்: நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற அணிகலன் போல் ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகள் இடம்பெறுவதால் நான்மணிக்கடிகை எனும் பெயர் பெற்றது.
-
-
-
-
-
- ஆசிரியர் – விளம்பி நாகனார்
- ஊர் – விளம்பி
- பாடல்கள் -104
- பாவகை – வெண்பா
-
-
இன்னா நாற்பது
-
-
-
- பெயர்க்காரணம்: இன்னா – துன்பம். இன்னது இன்னது இன்னா என நாற்பது பாடல்களில் கூறுவதால் இன்னா நாற்பது எனப்படுகிறது.
- ஆசிரியர் – கபிலர்
- பாடல்கள் – 1 + 40
- பாவகை – வெண்பா
-
-
இனியவை நாற்பது
-
-
-
- பெயர்க்காரணம்: இவை இவை இனிமை பயப்பவை என நாற்பது பாடல்களால் கூறுவதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது.
-
-
-
-
-
- ஆசிரியர் – பூதஞ்சேந்தனார்
- பாடல்கள் – 1 + 40
- பாவகை – வெண்பா
-
-
திரிகடுகம்
-
-
-
- பெயர்க்காரணம்: சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் உடல் நோயைத் தீர்ப்பான. அதனை போன்று இந்நூலில் அமைந்துள்ள ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்களும் உள்ளந்தின் நோயைத் தீர்க்கும்.
- திரி – மூன்று
- கடுகம் – காரமுள்ள பொருள்
-
-
-
-
-
- ஆசிரியர் – நல்லாதானர்
- பாடல்கள் – 100 + 1
- பாவகை – வெண்பா
-
-
ஆசாரக்கோவை
-
-
-
- பெயர்க்காரணம்: மனித வாழ்விற்கு இன்றியமையாத ஒழுக்கநெறிகள் பலவற்றையும் ஒன்றிணைத்துக் கூறும் ஒரு தொகுப்பு நூல் என்பதால் அப்பெயர் பெற்றது.
- ஆசிரியர் –பெருவாயின் முள்ளியார்
- பாடல்கள் – 100
- பாவகை – பல்வேறு வெண்பா வகைகள்
-
-
பழமொழி நானூறு
-
-
-
- பெயர்க்காரணம்: ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பழமொழி இடம்பெறுவதால் பழமொழி நானூறு எனப் பெயர்பெற்றது.
- ஆசிரியர் –முன்றுறை அரையனார்
- பாடல்கள் – 400
- பாவகை – வெண்பா
-
-
சிறுபஞ்சமூலம்
-
-
-
- பெயர்க்காரணம்:கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய வேர்கள் இணைந்து மனிதனின் நோயை குணப்பதுவது போல இந்நூல் மனிதனின் உள்ளப்பிணியை நீக்குகிறது.
-
-
-
-
-
- ஆசிரியர் – காரியாசான்
- பாடல்கள் – கடவுள் வாழ்த்து 1, பாயிரங்கள் 2, செய்யுட்கள் 102
- பாவகை – வெண்பா
-
-
முதுமொழிக்காஞ்சி
-
-
-
- பெயர்க்காரணம்: மூத்தோர் சொற்கள் பலவற்றைக் கோர்த்த கோவை முதுமொழிக்காஞ்சி எனப்படுகிறது.
- ஆசிரியர் – மதுரைக் கூடலூர்க்கிழார்
- பாடல்கள் – 100
- பாவகை – குறள் தாழிசை
-
-
ஏலாதி
-
-
-
- பெயர்க்காரணம்: ஏலம், இலவங்கம், நாககேசரம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு மருந்து பொருட்கள் சேர்ந்து உடல் நோயை தீர்ப்பது போன்று இந்நூலின் உள்ள ஒவ்வொரு பாடல் கூறும் ஆறு கருத்துக்களும் மனிதனின் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும்.
- ஆசிரியர் – கணிமேதாவியார்
- பாடல்கள் – பாயிரம் 1, தற்சிறப்பாயிரம் 1, பாடல்கள் 80
- பாவகை – வெண்பா
-
-
ஐந்திணை ஐம்பது
-
-
-
- பெயர்க்காரணம்: ஐந்து தினைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் ஐம்பது பாடல்கள் பாடப்பட்டதால் ஐந்திணை ஐமபது எனப் பெயர் பெற்றது.
- ஆசிரியர் – மாறன் பொறையனார்
- பாடல்கள் – 50(5 X 10 = 50)
- திணை – ஐந்து அகத்திணை
- திணை வைப்பு முறை – முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்
- பாவகை – வெண்பா
-
-
ஐந்திணை எழுபது
-
-
-
- ஐந்து தினைகளுக்கும் பதினாங்கு பாடல்கள் வீதம் எழுபது பாடல்கள் பாடப்பட்டதால் ஐந்திணை எழுபது எனப் பெயர் பெற்றது.
-
-
-
-
-
- ஆசிரியர் –மூவாதியார்
- பாடல்கள் – 70(5*14=70)
- திணை – ஐந்து அகத்தினணகளும்
- திணை வைப்பு முறை – குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்
- பாவகை – வெண்பா
-
-
திணைமொழி ஐம்பது
-
-
-
- பெயர்க்காரணம்:திணைக்கு பத்து பாடல் வீதும் ஐம்பது பாடல்களைக் கொண்டதால் திணைமொழி ஐம்பது எனப் பெயர்பெற்றது.
- ஆசிரியர் – கண்ணஞ் சேந்தனார்
- பாடல்கள் – 50(5*10=50)
- திணை – ஐந்து அகத்திணைகளும்
- திணை வைப்பு முறை – குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்
- பாவகை – வெண்பா
-
-
திணைமாலை நூற்றைம்பது
-
-
-
- பெயர்க்காரணம்:திணைக்கு முப்பது பாடல்கள் வீதம் நூற்றைம்பது பாடல்கள் கொண்டதால் திணைமாலை நூற்றைம்பது எனப் பெயர் பெற்றது.
- ஆசிரியர் – கணிமேதாவியார்
- பாடல்கள் – 150(5*30=150)
- திணை – ஐந்து அகத்திணைகளும்
- திணை வைப்பு முறை – குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம்
- பாவகை – வெண்பா
-
-
கைந்நிலை
-
-
-
- கை = ஒழுக்கம்
- ஐந்திணை ஒழுக்க நிலை கூறும் நூல் என்னும் பொருளில் “கைந்நிலை” எனப் பெயர் பெற்றது.
- ஆசிரியர் – புல்லாங்காடனார்
- பாடல்கள் – 60(5*12=60)
- திணை – ஐந்து அகத்திணைகளும்
- பாவகை – வெண்பா
-
-
கார் நாற்பது
-
-
-
- கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையினாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார்நாற்பது என்னும் பெயர் பெற்றுள்ளது.
- இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்.
- ஆசிரியர் – மதுரைக் கன்னங் கூத்தனார்
- பாடல்கள் – 40(அகநூல்களில் அளவில் சிறியது)
- திணை – அகத்திணை – முல்லைத்திணை
- பாவகை – வெண்பா
-
-
களவழி நாற்பது
-
-
-
- களம் = போர்க்களம்.
- போர்க்களம் பற்றிய நாற்பது பாடல்களைக் கொண்டதால் களவழி நாற்பது எனப் பெயர் பெற்றது.
- ஆசிரியர் – பொய்கையார்
- பாடல் – 40
- திணை – புறத்திணை – வாகைத்திணை
- பாவகை – வெண்பா
-
-
- ஐம்பெரும்காப்பியங்கள் குறித்து எழுதுக.
ஐம்பெரும் காப்பியங்கள்
-
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- சீவகசிந்தாமணி
- வளையாபதி
- குண்டலகேசி
சிலப்பதிகாரம்
-
- இயற்றியவர்– இளங்கோவடிகள்
- சமயம் – சமணம்
பெயர்க்காரணம்:
-
- காப்பியத்தின் கதை சிலம்பினைக் மையமாகக் கொண்டு அமைந்ததால் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது.
வேறு பெயர்கள்
-
- குடிமக்கள் காப்பியம்
- முத்தமிழ் காப்பியம்
- உரையிடையிட்ட பாட்டுடை செய்யுள்
நூல் அமைப்பு
-
- புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் கொண்டது.
மூன்று நீதிகள் அல்லது உண்மைகள்
-
- “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது ;
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவது ;
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்”
- “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது ;
காப்பியக் கதை
-
- கோவலன் கண்ணகி திருமணத்தில் தொடங்கி, மாதவியின் நடனத்தால் மையல் கொண்ட கோவலன், கண்ணகியை விடுத்து, மாதவி மாட்டு விடுதலறியாவிருப்பினன் ஆகி, மணிமேகலையை மகளாய்ப் பெற்று, பல ஆண்டுகளுக்குப் பின் இந்திர விழாவில் கானல் வரிபாடும் நிலையில் ஊழ்வினை காரணமாக மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் மாதவி என அவளைப் பழித்து நீங்கி, கண்ணகியைத் தஞ்சமடைந்து, கவுந்தியடிகள் துணையுடன் மதுரை சென்று, மாதரியிடம் கண்ணகியை அடைக்கலமாக்கி, மதுரை வீதியில் பொற்கொல்லனிடம் சிலம்பு விற்கச் சென்று கள்வன் எனக் குற்றஞ் சாட்டப்பட்டு, மன்னன் கொன்று வா என ஆணையிடக் கொலைக் களத்தில் கோவலன் கொலைப்பட, வண்ணச் சீறடி மண்மகள் அறியாது புகாரில் வாழ்ந்த கண்ணகி மதுரை வீதியில் சீற்றமே உருவாய் அரண்மனை வாயில் புகுந்து மன்னனிடம் தன் கணவன் கள்வனல்லன் என்பதைச் சிலம்பை உடைத்து, மாணிக்கத்தைக் காட்டி தெளிவுப்படுத்த அதனால் குற்றம் செய்தேன் என மன்னன் மடிய, கோப்பெருந்தேவி உயிர் துறக்க,சினம் அடங்காப் பத்தினி மதுரை மாநகரைத் தீக்கிரையாக்கி, வஞ்சி மாநகர் புகுந்து அங்குள்ள மலைக்குறவர் காண, விமானத்தில் ஏறி விண்ணுலகு சென்றாள். இதுவே சிலப்பதிகாரம் காட்டும் கண்ணகி கோவலன் கதையாகும்.
மணிமேகலை
-
- இயற்றியவர்– சீத்தலை சாத்தனார்
- சமயம் – பௌத்தம்
பெயர்க்காரணம்
-
- காப்பியத்தின் கதை முழுதும் காப்பியத் தலைவி மணிமேகலையை மையமாகக் கொண்டு பாடப்பட்டதால், மணிமேகலை எனப் பெயர் பெற்றது.
வேறு பெயர்கள்
-
- இரட்டைக் காப்பியங்கள் (சிலப்பதிகாரம்,மணிமேகலை)
- இந்நூலின் பதிகம் இந்நூலினை மணிமேகலை துறவு என்று குறிப்பிடுகிறது.
நூல் அமைப்பு
-
- முப்பது காதைகள் கொண்டது.
மூன்று கருத்துகள்
-
- இளமை நிலையாமை
- யாக்கை நிலையாமை
- செல்வம் நிலையாமை
காப்பியக் கதை
-
- கோவலன் கொலை செய்யப்பட, செய்தியறிந்த மாதவியும். அவள் மகள் மணிமேகலையும் பௌத்த சமயத்தில் சேர்ந்துதுறவியாகின்றனர். புத்தபிரானுக்கு மலர் வேண்டி மலர்வனம் புகுகின்றாள் மணிமேகலை. மணிமேகலை மீது காமம் கொண்ட இளவரசன் உதயகுமரன் அவளைப் பின் தொடர்கிறாள். தன்னைப் பொருள்விலையாட்டி எளக் கூறி இகழ்ந்தும் உதயகுமரன் பின்னால் தன் மனம் செல்வதையறிந்து வருந்துகிறாள் மணிமேகலை. இந்நிலையில் மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத் தீவில் விட்டுவிடுகிறது. அங்குப் பழம்பிறப்பு அறிந்து, மூன்று மந்திரங்களும் பெறுகிறாள். ஆபுத்திரனின் அமுத சுரபியும் கோமுகிப் பொய்கையிலிருந்து கிடைக்கிறது. மந்திரத்தின் உதவியால் விண்ணில் பறந்து புகார் வந்து பசியால் வாடியோர்க்கு உண்டி கொடுத்து உயிர்கொடுக்கிறாள் உதயகுமரன்தரும் துன்பம் நீங்கமந்திரத்தின் உதவியால் காயசண்டிகை வடிவத்தை எடுத்துக்கொள்கிறாள். காயசண்டிகையின் கணவன் காஞ்சனனால் உதயகுமரன் தவறுதலாகக் கொல்லப்படுகிறான். கொன்ற பழி மணிமேகலையை வந்தடைகிறது. அரசன் மகளைக் கொன்றதால் சோழ மன்னன் மணிமேகலையைர் சிறையில் அடைக்கிறான். மகனைப் பறி கொடுத்த அரசி. மணிமேகலையைப் பல்வேறு வகையில் கொடுமைப்படுத்துகிறாள். தவவலிமையால் அவற்றிலிருந்து விடுபடுகிறாள். உண்மை உணர்ந்த அரசி அவளை விடுவித்துத் தன்னை மன்னிக்க வேண்டுகிறாள். பின்னர் மணிமேகலை காஞ்சி சென்று பௌத்த மதக் கொள்கைகளைப் பரப்பி அறவண அடிகளிடம் ஆசி பெறுகிறாள். இதுவே மணிமேகலையின் கதையாகும்.
சீவகசிந்தாமணி
-
- இயற்றியவர்– திருத்தக்கதேவர்
- தமிழில் விருத்தப்பாவால் எழுதப்பட்ட முதல் காப்பியம் சீவகசிந்தாமணி ஆகும்.
- மணநூல் என்று அழைக்கப்படுகிறது.
- சமயம்– சமணம்
நூல் அமைப்பு
-
- 13 இலம்பகங்கள்
- 3145 பாடல்கள் கொண்டது.
காப்பியக் கதை
-
- காப்பியத்தலைவன் சீவகன். ஏமாங்கத நாட்டு அரசன் சச்சந்தன், மனைவி விசயை. நாட்டை மறந்து அந்தப்புரத்தில் அடைக்கலமாகும் மன்னன் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை அமைச்சன் கட்டியங்காரனிடம் ஒப்படைக்கின்றான். அமைச்சன் தக்க நேரம் பார்த்துப் படையுடன் வந்து மன்னனைக் கொல்கிறான். அமைச்சன் சதியறிந்த மன்னன், மனைவி விசயையை மயிற்பொறியில் ஏற்றி வானில் பறக்கும்படிச்செய்கிறான். உயிர்தப்பிய விசயை சுடுகாட்டில் இறங்குகிறாள். அங்கு அவளுக்கு ஓர் ஆண்குழந்தை பிறக்கிறது. சீவகன் என்று பெயர் மட்டும் சூட்டி மகனோடு வாழ முடியாது தாய் விசயை மறைந்து வாழ்கிறாள். கந்துக்கடன் எனும் வணிகன் சீவகனை எடுத்துச்சென்று, அச்சணந்தி அடிகளிடம் கல்வி பயில அனுப்புகிறான். கல்வி கேள்விகளில் சிறந்தவனாக வளர்கின்றான். இளமைப் பருவம் எய்திய சீவகன் தன் அழகாலும் ஆண்மையாலும் போட்டிகளில் வெற்றி பெற்று, காந்தருவ தத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எண்மரை மணக்கிறான். கட்டியங்காரனைப் போரில் கொன்று தன் தந்தையின் நாட்டை மீட்டு அரசாள்கிறான். மனைவியரோடு மகிழ்ச்சியாய், நற்புதல்வர்களைப் பெற்று இருக்குங்காலை தோட்டத்தில் பார்த்த ஒரு காட்சியால் வாழ்க்கையில் விரக்தியுற்றுத் துறவு பூண்டு முக்தி அடைகிறான். இதுவே சீவக சிந்தாமணி தரும் சீவகனின் கதையாகும்.
வளையாபதி
-
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- சமண சமயம் சார்ந்த நூல்
காப்பியக் கதை
-
- நவகோடி நாராயணன் ஒரு வணிகன். இவன் வேறு சாதிப் பெண்ணை மணந்தான். இதனால் அவன் குலத்தோர் வெறுக்க, வெறுப்பைத் தாங்க இயலாது அவனும் அயல் நாடு சென்றுவிட, அவன் மனைவிக்குப் பிறக்கும் மகன் வளர்ந்த பின் புகாரில் தன் தந்தையைக் கண்டு இறுதியில் தாய் தந்தையரை இணைத்து வைக்கிறான். வைசிய புராணம் தரும் கதை இதுவேயாகும்.
குண்டலகேசி
-
- குண்டலகேசி என்பதற்கு சுருண்ட கூந்தலை உடையவள் என்பது பொருள் ஆகும்.
- இயற்றியவர்– நாதாகுத்தனார்
- 25 பாடல்கள் கிடைத்துள்ளன.
- சமயம்– பௌத்தம்
காப்பியக் கதை
-
- வணிகன் மகள் பத்தரை. இவள் காளன் என்ற கள்வனை விரும்புகிறாள். மகளின் வற்புறுத்தலால் தந்தையும் கள்வனைச் சிறையிலிருந்து மீட்டு அவளுக்கு மணம் செய்து வைக்கிறார். இன்பமான வாழ்க்கையின் இடையில் ஊடலின்போது சினத்தில் பத்தரை தன் கணவனை நீ கள்வன் தானே? என்று கூறிவிட அதனால் சினங்கொண்ட காளன் (கணவன்) தெய்வத்தை வணங்க என்று பொய் கூறி மலையுச்சிக்கு அவளை அழைத்துச் சென்று கொல்லப் போவதாகக் கூறுகின்றான். கணவனுக்கு அறிவுரை கூறியும் அவன் திருந்தாத நிலையில் அவனை வணங்கி வலம் வருவது போல் வந்து கணவனை மலையுச்சியிலிருந்து தள்ளிக் கொன்று விடுகின்றாள். தான் செய்த பாவம் நீங்கிடப் பௌத்த சமயத்தில் சேர்ந்து அறக் கருத்துக்களைப் பரப்பி இறுதியில் புத்தபிரானின் திருவடியை அடைகிறாள்.
- ஐஞ்சிறுகாப்பியங்கள் பற்றி எழுதுக.
ஐஞ்சிறுகாப்பியங்கள்
நாககுமார காவியம்
-
- ஆசிரியர் – பெயர் தெரியவில்லை
- காலம் – கி.பி.16ஆம் நூற்றாண்டு
- பாடல்கள் – 170
சருக்கம் – 5
பாவகை – விருத்தப்பா - சமயம் – சமணம்
- பெயர்க்காரணம்:
கதைத் தலைவன் நாககுமாரன் பற்றிக் கூறுவதால் நூல் இப்பெயர் பெற்றது. - வேறு பெயர்: நாகபஞ்சமி கதை
உதயணகுமார காவியம்
-
- ஆசிரியர் – பெயர் தெரியவில்லை
- காலம் – கி.பி.15ஆம் நூற்றாண்டு
- பாடல்கள் = 369
காண்டம் = 6
காண்டங்கள்:
- உஞ்சைக் காண்டம்
- இலாவண காண்டம்
- மகத காண்டம்
வத்தவ காண்டம் - நரவாகன காண்டம்
- துறவுக் காண்டம்
- வேறு பெயர்: உதயணன் கதை
யசோதர காவியம்
-
- ஆசிரியர் – வெண்ணாவலூர் உடையார் வேள்
- காலம் – 13ஆம் நூற்றாண்டு
- பாடல்கள் – 320
சருக்கங்கள் – 5 - பாவகை – விருத்தம்
- சமயம் – சமணம்
நீலகேசி
-
- ஆசிரியர் – பெயர் தெரியவில்லை
- காலம் – 6ஆம் நூற்றாண்டு
- பாடல்கள் – 894
சருக்கம் – 10 - பாவகை – விருத்தம்
- சமயம் = சமணம்
- வேறு பெயர்:
நீலகேசி தெருட்டு
நீலம்(யாப்பருங்கல விருத்தியுரை) - நீலகேசி = கரிய கூந்தலை உடையவள்
சூளாமணி
-
- ஆசிரியர் – தோலாமொழித் தேவர்
- காலம் – கி.பி.பத்தாம் நூற்றாண்டு
- பாடல்கள் – 2330
சருக்கம் – 12 - பாவகை – விருத்தம்
- சமயம் – சமணம்
- பெயர்க்காரணம்: மிக்க ஒளியையும் சிறப்பினையும் உடையது சூளாமணி. ஆற்றல்களும் சிறப்புகளும் கொண்டு திவிட்டனும் விசயனும் சூளாமணி போல் ஒளிர்ந்தமையால் நூல் இப்பெயர் பெற்றது.
- சமயக் காப்பியங்கள் குறித்து எழுதுக.
-
- மணிமேகலை பௌத்தத்தைப் போற்றும் நிலையில் எழுந்தது. சீவகசிந்தாமணி சமணம் பரப்ப எழுந்தது.
- வளையாபதி சமண சமயத்தது.
- குண்டலகேசி பௌத்தத்தைப் போற்றுவது.
- ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமண சமயத்தனவாகும்.
- கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலியன வைணவ சமயக் காப்பியங்களாகும்.
- பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், கந்தபுராணம் முதலின சைவ சமயக் காப்பியங்களாகும்.
- சீறாப்புராணம் இசுலாமியக் காப்பியம்.
- இயேசு காவியம் கிறித்துவக் காப்பியம் ஆகும்.
-
- சமயம் பரப்பும் நோக்கில்தான் காப்பியங்களின் வளர்ச்சி அமைந்தது என்றே உறுதிபடக் கூறலாம்.
கம்பராமாயணம்
-
- இயற்றியவர்: கம்பர்
- பெயர்க் காரணம்: இக்காப்பியத்தின் கதை இராமனின் வரலாற்றைப் பற்றித் தெரிவிப்பதால் இராமாயணம் எனப்பட்டது.
காப்பிய அமைப்பு
-
- இக்காப்பியம் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களைக் கொண்டது.
- இந்த ஆறு காண்டங்களின் சிறு பிரிவுகளாக 113 படலங்கள் உள்ளன. மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 10,500 ஆகும்.
- கம்பராமாயணம் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கற்பு நெறி நின்று வாழவேண்டும் என்ற உண்மையை ஏகபத்தினி விரதனாம் – இராமன் மூலம் தெரிவிக்கின்றது.
வில்லிபாரதம்
-
- இயற்றியவர்: வில்லிபுத்துரார்
- காலம்: 16-ஆம் நூற்றாண்டு.
- பருவங்கள்:
வில்லிபாரதம் 10 பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.- பருவங்களின் பெயர்கள்:
- ஆதி பருவம்
- சபா பருவம்
- ஆரணிய பருவம்
- விராட பருவம்
- உத்தியோக பருவம்
- வீடும பருவம்
- துரோண பருவம்
- கன்ன பருவம்
- சல்லிய பருவம்
- சௌப்திக பருவம்
- பருவங்களின் பெயர்கள்:
- 4351 விருத்தப் பாடல்களைக் கொண்டது.
பெரியபுராணம்
-
- இயற்றியவர்: சேக்கிழார்
- பெரிய புராணம் என்னும் பெருங்காப்பியம் தமிழகச் சூழலையும், 63 அடியார் பெருமக்களையும் மையமாகக் கொண்டு திகழ்கின்றது.
- இந்நூல் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களையும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் உடையது.
- 4286 விருத்தப் பாக்களையுடைய ஒரு பெரு நூலாகும்.
திருவிளையாடற் புராணம்
-
- இயற்றியவர்: பரஞ்சோதி முனிவர்
- காண்டங்கள்:
3 காண்டங்கள் உள்ளன.- மதுரைக் காண்டம்
- கூடல் காண்டம்
- திருவாலவாய்க் காண்டம்
- படலங்கள்:
மொத்தம் 64 படலங்கள் உள்ளன. - மதுரைக் காண்டம்: 18 படலங்கள்.
- கூடல் காண்டம்: 30 படலங்கள்.
- திருவாலவாய்க் காண்டம்: 16 படலங்கள்.
- பாடல்கள்:
இந்த நூல் 3363 பாடல்களைக் கொண்டுள்ளது.
கந்தபுராணம்
-
- இயற்றியவர்: கச்சியப்ப சிவாச்சாரியார்
- முருகனின் வரலாற்றைக் கூறும் நூல்
- ஆறுகாண்டங்கள்
- உற்பத்தி காண்டம்
- அசுர காண்டம்
- மஹேந்திர காண்டம்
- யுத்த காண்டம்
- தேவ காண்டம்
- தக்ஷ காண்டம்
- 142 படலங்கள்
- 2967 பாடல்கள்
சீறாப்புராணம்
-
- ஆசிரியர் : உமறுப்புலவர்
- ‘சீறா’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘வாழ்க்கை’ அல்லது ‘வாழ்க்கை வரலாறு’ என்று பொருள். ‘புராணம்’ என்றால் ‘வரலாறு’ என்று பொருள். எனவே, சீறாப்புராணம் என்பது ‘நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல்’ ஆகும்.
- மூன்று காண்டங்களையும், மொத்தம் 92 படலங்களையும், 5027 விருத்தப் பாடல்களையும் கொண்ட ஒரு காவியம் ஆகும்.
தேம்பாவணி
-
- ஆசிரியர்: வீரமாமுனிவர்
- மூன்று காண்டங்கள்
- 36 படலங்கள்
- 3615 விருத்தப் பாடல்கள்
- கதையின் பாடுபொருள்:
- தேம்பாவணி நூல் புனித யோசேப்பைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயேசு கிறிஸ்துவின் பெருமையைப் பாடுகிறது.
- இது தமிழ் மரபுக்கு ஏற்ற ஒரு காப்பியமாக இருந்தாலும், கிறிஸ்தவக் கருத்துக்களை முன்வைக்கிறது
இயேசு காவியம்
-
- இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
- இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு பற்றி குறிப்பிடுகிறது.
- இந்நூல் பாயிரம், பிறப்பு, தயாரிப்பு, பொதுவாழ்வு, பாடுகள், மகிமை என ஐந்து பாகங்களைக் கொண்டது.
- பன்னிரு திருமுறைகள் பற்றி விவரி. (அல்லது) நாயன்மார்கள் குறித்து எழுதுக.
-
- பக்தி இலக்கியம் பெரிதும் வளர்ந்த காலம் பல்லவர் காலம் ஆகும்.
- தேவாரம்
- தே+வாரம்=தேவாரம்
- கடவுளுக்கு சூட்டப்படுகின்ற பாமாலை என்று பொருள்.
- சைவ சமயத்தின் முழுமுதற் கடவுள் சிவபெருமான்
- சிவபெருமானின் ஐன்தொழில்கள் – படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்
பன்னிரு திருமுறைகள் பகுப்பு
-
- சைவ சமயப் பெரியவர்கள் பாடிய பாடல்கள் திருமுறைகள் எனப்படும்.
- 1 , 2, 3 திருமுறைகள் – திருஞானசம்பந்தர் (சம்பந்தர் தேவாரம்)
- 4, 5 , 6 திருமுறைகள் – திருநாவுக்கரசர் (தேவாரம்)
- 7ம் திருமுறை – சுந்தரர் (சுந்தரர் தேவாரம்)
- 8ம் திருமுறை – மாணிக்கவாசகர்–திருவாசகம் மற்றும் திருக்கோவையார்
- ஒன்பதாம் திருமுறை – 9 பேர்
- பத்தாம் திருமுறை – திருமூலர்
- பதினொன்றாம் திருமுறை – திரு ஆலவாய் உடையார் முதலாக பன்னிருவர்
- பன்னிரண்டாம் திருமுறை – சேக்கிழார் (பெரியபுராணம்)
- திருமுறைகளை தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
இவர் 11 திருமுறைகளை மட்டுமே தொகுத்தார்
பெரியபுராணம் பின்னால் எழுதப்பட்டது. - திருமுறைகளைதொகுப்பித்தவன் முதலாம் ஆதித்த சோழன்
முதலாம் ராஜராஜன் திருமுறை கண்ட சோழன் எனப்படுகிறான் - முதல் ஏழு திருமுறைகள் மூவர் தேவாரம் எனப்படும்.
இதற்கு மூவர் தமிழ் என்று வேறு பெயரும் உண்டு. - திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் – மூவர் முதலிகள்எனப்படுவர்.
- சைவ சமயக் குரவர்கள் நால்வர்
-
- திருஞானசம்பந்தர்
- திருநாவுக்கரசர்
- சுந்தரர்
- மாணிக்கவாசகர்
-
- பன்னிரு திருமுறைகளையும் பாடியவர்கள் மொத்தம் 27 பேர்.
திருஞானசம்பந்தர்
-
- இயற்பெயர் : ஆளுடைய பிள்ளை
- பெற்றோர் – சிவபாத இருதயர் – பகவதி அம்மையார்
- பிறந்த ஊர் – சீர்காழி
- இவர் பாடியவை: 1,2,3 திருமுறைகள்
சிறப்பு:
-
- 23 இசைகளில் பாடியுள்ளார்.
- யாழ்முறி இவருக்கு மட்டுமே உரியது.
- திராவிட சிசு – ஆதிசங்கரரால் போற்றப்பட்டார்.
- நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர் – சுந்தரர்
செய்த அற்புதங்கள்
-
- மழவன் மகளுக்கு ஏற்பட்ட கடுமையான முயலகன் என்னும் நோயைப் போக்கினார்.
- கூன் பாண்டியன் வெப்பு நோயைப் நீக்கினார்.
- திருமறைக்காட்டுக் கோவிலின் கதவை தம் பாட்டால் மூடும்படி செய்தார்.
- திருவோத்தூரில் ஆண் பனையைப் பெண் பனையாக்கி அற்புதம் செய்தார்.
திருநாவுக்கரசர்
-
- இயற்பெயர்: மருள் நீக்கியார்
- பெற்றோர் : புகழனார், மாதினியார்
- அக்கா : திலகவதியார்
- பிறந்த ஊர்: திருவாமூர்
- இவர் பாடியவை: 4,5,6 திருமுறைகள்
- சிறப்பு பெயர்கள்:
- திருநாவுக்கரசர்,வாகீசர்,அப்பர்,ஆளுடைய அரசு,தாண்டக வேந்தர்,தருமசேனர்
- சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் –தமக்கை திலகவதியார்
- முதலாம் மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் .
- கல்லையே தெப்பமாகக் கொண்டு கரை ஏறியவர்
- திங்களூரில் பாம்பு தீண்டி இறந்தவரை உயிர்ப்பித்தார்.
- திருமறைக்காட்டுக் கோவில் கதவை திறக்க செய்தார்.
சுந்தரர்
-
- இயற்பெயர்: நம்பி ஆரூரார் / ஆரூரார்
- பெற்றோரோர்: சடையனார் – மாதினியார்
- இவர் பாடியவை: 7 திருமுறை
சிறப்பு பெயர்கள் :
-
- வன் தொண்டர்
- தம்பிரான் தோழர்
- திருத்தொண்டத்தொகை பாடியவர் சுந்தரர்
மாணிக்கவாசகர்
-
- இயற்பெயர் தெரியவில்லை
- பெற்றோர் : சம்புபாதசாரியார் – சிவஞானவதி
- இவர் பாடியவை: 8 திருமுறை
சிறப்பு பெயர்கள்
-
- அருள் வாசகர்
- மணிவாசகர்
- அழுது அடியடைந்த அன்பர்
- தென்னவன் பிரமராயர்
- மாணிக்கவாசகர் (இவர் பாடல்கள் ஒவ்வொன்றும் மாணிக்கம் போல் உள்ளதால் )
நூல்கள்
-
- திருக்கோவையாரும் திருவாசகமும் இவர் பாடியவை
ஒன்பதாம் திருமுறை ( திருவிசைப்பா)
-
- 9 பேர் பாடியது
பத்தாம் திருமுறை ( திருமந்திரம்)
-
- திருமூலர்
- திருமந்திரத்திற்கு திருமூலர் இட்ட பெயர் திருமந்திர மாலை
- திருமந்திரத்தின் வேறு பெயர்கள்: தமிழ் மூவாயிரம்
- முதல் சித்த நூல் யோக நெறியை கூறும் தமிழர் நூல்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இந்நூலின் சிறப்பு
பதினொன்றாம் திருமுறை (பிரபந்த மாலை)
-
- 12 பேர் பாடியுள்ளனர்
- 40 நூல்கள் உள்ளன
- திருவாலவாயுடையார் (1)
- காரைக்காலம்மையார் (நான்கு நூல்கள்)
- கல்லாடர் (1)
- நக்கீரர் (10)
- கபிலர் (3)
- பரணர் (1)
- அதிரா அடிகள் 1
- இளம்பெருமான் அடிகள் (1)
- ஐயடிகள் (1)
- சேரமான் பெருமான் நாயனார் (3)
- பட்டினத்தார் (5)
- நம்பியாண்டார் நம்பி (ஒன்பது நூல்கள் )
- தமிழ் வியாசர் என அழைக்கப்படுபவர் நம்பியாண்டார் நம்பி
64 நாயன்மார்களை பற்றி திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர்
காரைக்கால் அம்மையார்
-
- இயற்பெயர் புனிதவதியார்
- காரைக்கால் – வணிக மரபினர்
- சைவசமய எழுச்சிக்கு வித்திட்ட முன்னோடி
12ம் திருமுறை (பெரியபுராணம்)
-
- சேக்கிழார்
- இயற்பெயர்: அருண்மொழித்தேவர்
சிறப்பு பெயர்கள் :
-
- உத்தம சோழப் பல்லவன்
- தொண்டர் சீர் பரவுவார்
நூல் அமைப்பு:
-
- இரண்டு காண்டம் 13 சருக்கம் 4286 பாடல்கள்
- உலகெலாம் என்று இறைவனே அடியெடுத்துக் கொடுக்க பாடப்பட்ட நூல்
63 நாயன்மார்களில் மூவர் பெண்கள்
-
- காரைக்கால்
- அம்மையார்
- இசைஞானியார்
- மங்கையர்க்கரசி
- நாலாயிர திவ்ய பிரபந்தம் குறித்து எழுதுக.
நாலாயிர திவ்ய பிரபந்தம்
-
- ஆழ்வார்களின் பாடல்கள் திவ்வியப்பிரபந்தம் என்று அழைக்கப்படுகின்றன. திராவிட வேதம் என்றொரு பெயரும் இதற்கு உண்டு.
- ஆழ்வார்கள் திருமாலின் பக்தியில் – அன்பில் – அருளில் – தோற்றத்தில் ஆழ்ந்தவர்கள் எனலாம்.
- முதலாழ்வார்கள்:
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்.
ஆழ்வார்கள் – பாசுரங்களின் எண்ணிக்கை
1.பொய்கை ஆழ்வார்– 100
2.பூதத்தாழ்வார்– 100
3.பேயாழ்வார்– 100
4.திருமழிசை ஆழ்வார்– 216
5.மதுரகவி ஆழ்வார்– 11
6.நம்மாழ்வார்– 1296
7.குலசேகர ஆழ்வார்-105
8.பெரியாழ்வார்– 473
9.ஆண்டாள்– 173
10.தொண்டரடிப் பொடி ஆழ்வார்– 55
11.திருப்பாணாழ்வார்– 10
12.திருமங்கை ஆழ்வார்– 1137
பொய்கையாழ்வார்
-
- பிறந்த ஊர் : காஞ்சிபுரம்– பொய்கையில் அவதரித்தவர்,
- காலம் : 7ம்நூற்றாண்டு
- எழுதிய நூல் : முதல் திருவந்தாதி
- பாடல்கள் : 100
பூதத்தாழ்வார்
-
- பிறந்த ஊர் : மகாபலிபுரம்
- காலம் : 7ம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி
- பாடல்கள் : 100
பேயாழ்வார்
-
- பிறந்த ஊர் : மயிலாப்பூர்
- காலம்: ஏழாம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி
- பாடல்கள் : 100
திருமழிசையாழ்வார்
-
- பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)
- காலம் : கி.பி.7ம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத விருத்தம்
- பாடல்கள் : 216
பெரியாழ்வார்
-
- பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிப்புத்தூர்
- காலம்: 9ம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : பெரியாழ்வார் திருமொழி
- பாடிய பாடல் : 473
ஆண்டாள்
-
- பிறந்த ஊர் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
- வளர்ப்புத்தந்தை : பெரியாழ்வார்
- காலம் : 9ம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி
- பாடிய பாடல் : 173
தொண்டரடி பொடியாழ்வார்
-
- இயற்பெயர் : விப்ர நாராயணன்
- பிறந்த ஊர் : திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)
- காலம் : எட்டாம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : திருமாலை, திருப்பள்ளி எழுச்சி
- பாடிய பாடல் : 55
திருமங்கையாழ்வார்
-
- பிறந்த இடம் : திருக்குறையலூர்
- காலம் : எட்டாம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை, பெரிய திருமடல்,சிறிய திருமடல்.
- பாடிய பாடல் : 1253
திருப்பாணாழ்வார்
-
- பிறந்த ஊர் : உறையூர் (திருச்சி)
- காலம் : எட்டாம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : அமலனாதிபிரான்
- பாடிய பாடல் : 10
குலசேகர ஆழ்வார்
-
- பிறந்த இடம் : திருவஞ்சைக்களம்
- காலம் : எட்டாம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : பெருமாள் திருமொழி
- பாடிய பாடல் : 105
நம்மாழ்வார்
-
- பிறந்த ஊர் : ஆழ்வார் திருநகரி
- பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி
- எழுதிய நூல் : பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம்,திருவாய்மொழி
- பாடல்கள் : 1296
மதுரகவி ஆழ்வார்
-
- பிறந்த ஊர் : திருக்கோளூர்
- காலம் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி
- எழுதிய நூல் : கண்ணி நுண் சிறுத்தாம்பு
- பாடல்கள் : 96
- பகுத்தறிவு இலக்கியம் குறித்து எழுதுக.
-
- பகுத்தறிவு என்பதற்கு ஒன்றினைப் பகுத்து அறிதல் என்று பொருள்.
- சமூகத்தில் நிகழும் நிகழ்வினை மனிதன் ஆராய்ந்து தெளிவுபெற வேண்டும் என்பதே பகுத்தறிவு இலக்கியங்களின் நோக்கம் ஆகும்.
- கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த கிறித்தவ பாதிரிமார்கள் கல்வி கற்றல், கணவன் இறந்த பின்பு கைம்பெண்களை மறுதிருமணம் செய்ய ஊக்குவித்தல், குழந்தைத் திருமணத்தைத் தடுத்தல் எனப் பல்வேறு கருத்துக்களைக் கூறி மக்களை நல்வழிப்படுத்தினர்.
சுயமரியாதைக் இயக்கம்
-
- பெரியார் 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தினைத் தொடங்கினார்.
- சமமான கல்வி, அனைவருக்கும் கிடைக்கக் கூடிய நீதி, பொருளாதார பொதுவுடைமை, மூடபழக்கத்தை ஒழித்தல் போன்றவை சுயமரியாதை இயக்கத்தின் நோக்கங்களாக அமைந்தன.
சித்தர் இலக்கியம்
-
- மனிதர்களிடம் காணப்படாத வியக்கத்தக்க ஆற்றல் கொண்டவர்களைச் சித்தர்கள் என்று அழைக்கின்றனர். இவர்கள் மெய்ஞ்ஞானம் நிரம்பியவர்கள். கொண்டவை.
- சித்தர்கள் பலர் இருப்பினும் வழக்கில் பதினெண்சித்தர்கள் என்று கூறப்படும் மரபு காணப்படுகின்றது.
1.அகத்தியர் 2.இடைக்காடர் 3.உரோமமுனி 4.கருவூரார் 5.காகபுண்டர் 6.கொங்கணர் 7.கோரக்கர் 8.சட்டைமுனி 9.மச்சமுனி 10.போகர் 11.திருமூலர் 12.நந்தி 13. புண்ணாக்கீசர் 14. தேரையர் 15. யூகிமுனி 16. காலாங்கி நாதர் 17.புலத்தியர் 18. தன்வந்திரி
திருமூலர்
-
- இவர் சித்தர் தத்துவத்தின் மூலமுதல்வர்.
- இவர் பாடிய திருமந்திரம் பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.
- 3000 பாடல்கள் இயற்றினார்.
- இத்திருமந்திரம் நிலையாமை உண்மைகளை வலியுறுத்துகின்றது. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்”, “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்பன போன்ற புகழ் பெற்ற தொடர்கள் இந்நூலில் இடம்பெற்றவையே.
இராவண காவியம்
-
- இயற்றியவர்: புலவர் குழந்தை
- இக்காப்பியம் ஐந்து காண்டங்களால் ஆனது. அவை, 1) தமிழகக் காண்டம், 2) இலங்கைக் காண்டம், 3) விந்தக் காண்டம், 4) பழிபுரி காண்டம், 5) இலங்கைக் காண்டம்.
- இக்காப்பியக் காண்டம் ஒவ்வொன்றும் பல படலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நூலில் அமைந்துள்ள மொத்தப் படலங்கள் ஐம்பத்தேழாகும். பாயிரம் உட்பட ஐந்து காண்டத்திலும் உள்ள மொத்தப் பாக்கள் 3100.
- புலவர் குழந்தை தாம் படைத்த இக்காவியத்தைத் தமிழர்க்குக் காணிக்கையாக்கியுள்ளார். தமிழர்கள் தம் பண்பாட்டுச் சிறப்பை அறிந்து வாழ்வதற்காக இராவணனின் பெருமை படைப்பதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்
-
- புலவர் குழந்தை ஓலவலசுப் பண்ணைக்காரர்குடியில் 1-7-1906இல் பிறந்தார்.
- முத்துச்சாமிக் கவுண்டர், சின்னம்மையார் என்பவர்களின் ஒரே மகனாவார்.
- இவர் திண்ணைப் பள்ளியில் கற்ற காலம் மொத்தமாக எட்டு மாதங்களேயாம்.
- இயற்கையிலேயே கவிபாடும் ஆற்றல் வாய்க்கப் பெற்றவர்.
- இசைப் பாடல்களே இவர் முதன் முதலாகப் பாடிய பாடல்கள்.
- ஆசிரியர் உதவியின்றித் தாமே முயன்று தமிழ் கற்றுச் சீரிய புலமை எய்தினார்.
- 1934இல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் புலவர் பட்டம் பெற்றார்.
- ஆசிரியராகவும் தலைமைத் தமிழாசிரியராகவும் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
பிற படைப்புகள்
-
- இராவண காவியத்தைத் தவிர, புலவர் குழந்தை மரபுவழி யாப்பில் அமைந்த அரசியலரங்கம், நெருஞ்சிப்பழம், காமஞ்சரி, உலகப் பெரியோன் கென்னடி, திருநணாச் சிலேடை வெண்பா, புலவர் குழந்தை பாடல் ஆகியவற்றைப் படைத்துள்ளார்.
- திருக்குறள், தொல்காப்பியப் பொருளதிகாரம், நீதிக்களஞ்சியம் ஆகியவை அவரால் விளக்கவுரை எழுதப்பட்ட நூல்களாகும்.

