-
0 Comments
ஐம்பெரும் காப்பியங்கள் – குறிப்புகள்
-
காப்பியம் பெருங்காப்பியம், சிறுங்காப்பியம் என இரு வகைப்படும்.
ஐம்பெரும் காப்பியங்கள்
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- சீவகசிந்தாமணி
- வளையாபதி
- குண்டலகேசி
சிலப்பதிகாரம்
- இயற்றியவர்- இளங்கோவடிகள்
- சமயம் – சமணம்
பெயர்க்காரணம்:
-
- காப்பியத்தின் கதை சிலம்பினைக் மையமாகக் கொண்டு அமைந்ததால் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது.
வேறு பெயர்கள்
- குடிமக்கள் காப்பியம்
- முத்தமிழ் காப்பியம்
- உரையிடையிட்ட பாட்டுடை செய்யுள்
நூல் அமைப்பு
- புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் கொண்டது.
மூன்று நீதிகள் அல்லது உண்மைகள்
-
- “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது ;
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவது ;
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்”
- “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது ;
காப்பியக் கதை
- கோவலன் கண்ணகி திருமணத்தில் தொடங்கி, மாதவியின் நடனத்தால் மையல் கொண்ட கோவலன், கண்ணகியை விடுத்து, மாதவி மாட்டு விடுதலறியாவிருப்பினன் ஆகி, மணிமேகலையை மகளாய்ப் பெற்று, பல ஆண்டுகளுக்குப் பின் இந்திர விழாவில் கானல் வரிபாடும் நிலையில் ஊழ்வினை காரணமாக மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் மாதவி என அவளைப் பழித்து நீங்கி, கண்ணகியைத் தஞ்சமடைந்து, கவுந்தியடிகள் துணையுடன் மதுரை சென்று, மாதரியிடம் கண்ணகியை அடைக்கலமாக்கி, மதுரை வீதியில் பொற்கொல்லனிடம் சிலம்பு விற்கச் சென்று கள்வன் எனக் குற்றஞ் சாட்டப்பட்டு, மன்னன் கொன்று வா என ஆணையிடக் கொலைக் களத்தில் கோவலன் கொலைப்பட, வண்ணச் சீறடி மண்மகள் அறியாது புகாரில் வாழ்ந்த கண்ணகி மதுரை வீதியில் சீற்றமே உருவாய் அரண்மனை வாயில் புகுந்து மன்னனிடம் தன் கணவன் கள்வனல்லன் என்பதைச் சிலம்பை உடைத்து, மாணிக்கத்தைக் காட்டி தெளிவுப்படுத்த அதனால் குற்றம் செய்தேன் என மன்னன் மடிய, கோப்பெருந்தேவி உயிர் துறக்க,சினம் அடங்காப் பத்தினி மதுரை மாநகரைத் தீக்கிரையாக்கி, வஞ்சி மாநகர் புகுந்து அங்குள்ள மலைக்குறவர் காண, விமானத்தில் ஏறி விண்ணுலகு சென்றாள். இதுவே சிலப்பதிகாரம் காட்டும் கண்ணகி கோவலன் கதையாகும்.
மணிமேகலை
- இயற்றியவர்- சீத்தலை சாத்தனார்
- சமயம் – பௌத்தம்
பெயர்க்காரணம்
- காப்பியத்தின் கதை முழுதும் காப்பியத் தலைவி மணிமேகலையை மையமாகக் கொண்டு பாடப்பட்டதால், மணிமேகலை எனப் பெயர் பெற்றது.
வேறு பெயர்கள்
- இரட்டைக் காப்பியங்கள் (சிலப்பதிகாரம்,மணிமேகலை)
- இந்நூலின் பதிகம் இந்நூலினை மணிமேகலை துறவு என்று குறிப்பிடுகிறது.
நூல் அமைப்பு
- முப்பது காதைகள் கொண்டது.
மூன்று கருத்துகள்
- இளமை நிலையாமை
- யாக்கை நிலையாமை
- செல்வம் நிலையாமை
காப்பியக் கதை
- கோவலன் கொலை செய்யப்பட, செய்தியறிந்த மாதவியும். அவள் மகள் மணிமேகலையும் பௌத்த சமயத்தில் சேர்ந்துதுறவியாகின்றனர். புத்தபிரானுக்கு மலர் வேண்டி மலர்வனம் புகுகின்றாள் மணிமேகலை. மணிமேகலை மீது காமம் கொண்ட இளவரசன் உதயகுமரன் அவளைப் பின் தொடர்கிறாள். தன்னைப் பொருள்விலையாட்டி எளக் கூறி இகழ்ந்தும் உதயகுமரன் பின்னால் தன் மனம் செல்வதையறிந்து வருந்துகிறாள் மணிமேகலை. இந்நிலையில் மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத் தீவில் விட்டுவிடுகிறது. அங்குப் பழம்பிறப்பு அறிந்து, மூன்று மந்திரங்களும் பெறுகிறாள். ஆபுத்திரனின் அமுத சுரபியும் கோமுகிப் பொய்கையிலிருந்து கிடைக்கிறது. மந்திரத்தின் உதவியால் விண்ணில் பறந்து புகார் வந்து பசியால் வாடியோர்க்கு உண்டி கொடுத்து உயிர்கொடுக்கிறாள் உதயகுமரன்தரும் துன்பம் நீங்கமந்திரத்தின் உதவியால் காயசண்டிகை வடிவத்தை எடுத்துக்கொள்கிறாள். காயசண்டிகையின் கணவன் காஞ்சனனால் உதயகுமரன் தவறுதலாகக் கொல்லப்படுகிறான். கொன்ற பழி மணிமேகலையை வந்தடைகிறது. அரசன் மகளைக் கொன்றதால் சோழ மன்னன் மணிமேகலையைர் சிறையில் அடைக்கிறான். மகனைப் பறி கொடுத்த அரசி. மணிமேகலையைப் பல்வேறு வகையில் கொடுமைப்படுத்துகிறாள். தவவலிமையால் அவற்றிலிருந்து விடுபடுகிறாள். உண்மை உணர்ந்த அரசி அவளை விடுவித்துத் தன்னை மன்னிக்க வேண்டுகிறாள். பின்னர் மணிமேகலை காஞ்சி சென்று பௌத்த மதக் கொள்கைகளைப் பரப்பி அறவண அடிகளிடம் ஆசி பெறுகிறாள். இதுவே மணிமேகலையின் கதையாகும்.
சீவகசிந்தாமணி
- இயற்றியவர்– திருத்தக்கதேவர்
- தமிழில் விருத்தப்பாவால் எழுதப்பட்ட முதல் காப்பியம் சீவகசிந்தாமணி ஆகும்.
- மணநூல் என்று அழைக்கப்படுகிறது.
- சமயம்- சமணம்
நூல் அமைப்பு
- 13 இலம்பகங்கள்
- 3145 பாடல்கள் கொண்டது.
காப்பியக் கதை
- காப்பியத்தலைவன் சீவகன். ஏமாங்கத நாட்டு அரசன் சச்சந்தன், மனைவி விசயை. நாட்டை மறந்து அந்தப்புரத்தில் அடைக்கலமாகும் மன்னன் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை அமைச்சன் கட்டியங்காரனிடம் ஒப்படைக்கின்றான். அமைச்சன் தக்க நேரம் பார்த்துப் படையுடன் வந்து மன்னனைக் கொல்கிறான். அமைச்சன் சதியறிந்த மன்னன், மனைவி விசயையை மயிற்பொறியில் ஏற்றி வானில் பறக்கும்படிச்செய்கிறான். உயிர்தப்பிய விசயை சுடுகாட்டில் இறங்குகிறாள். அங்கு அவளுக்கு ஓர் ஆண்குழந்தை பிறக்கிறது. சீவகன் என்று பெயர் மட்டும் சூட்டி மகனோடு வாழ முடியாது தாய் விசயை மறைந்து வாழ்கிறாள். கந்துக்கடன் எனும் வணிகன் சீவகனை எடுத்துச்சென்று, அச்சணந்தி அடிகளிடம் கல்வி பயில அனுப்புகிறான். கல்வி கேள்விகளில் சிறந்தவனாக வளர்கின்றான். இளமைப் பருவம் எய்திய சீவகன் தன் அழகாலும் ஆண்மையாலும் போட்டிகளில் வெற்றி பெற்று, காந்தருவ தத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எண்மரை மணக்கிறான். கட்டியங்காரனைப் போரில் கொன்று தன் தந்தையின் நாட்டை மீட்டு அரசாள்கிறான். மனைவியரோடு மகிழ்ச்சியாய், நற்புதல்வர்களைப் பெற்று இருக்குங்காலை தோட்டத்தில் பார்த்த ஒரு காட்சியால் வாழ்க்கையில் விரக்தியுற்றுத் துறவு பூண்டு முக்தி அடைகிறான். இதுவே சீவக சிந்தாமணி தரும் சீவகனின் கதையாகும்.
வளையாபதி
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- சமண சமயம் சார்ந்த நூல்
காப்பியக் கதை
- நவகோடி நாராயணன் ஒரு வணிகன். இவன் வேறு சாதிப் பெண்ணை மணந்தான். இதனால் அவன் குலத்தோர் வெறுக்க, வெறுப்பைத் தாங்க இயலாது அவனும் அயல் நாடு சென்றுவிட, அவன் மனைவிக்குப் பிறக்கும் மகன் வளர்ந்த பின் புகாரில் தன் தந்தையைக் கண்டு இறுதியில் தாய் தந்தையரை இணைத்து வைக்கிறான். வைசிய புராணம் தரும் கதை இதுவேயாகும்.
குண்டலகேசி
- குண்டலகேசி என்பதற்கு சுருண்ட கூந்தலை உடையவள் என்பது பொருள் ஆகும்.
- இயற்றியவர்– நாதாகுத்தனார்
- 25 பாடல்கள் கிடைத்துள்ளன.
- சமயம்- பௌத்தம்
காப்பியக் கதை
- வணிகன் மகள் பத்தரை. இவள் காளன் என்ற கள்வனை விரும்புகிறாள். மகளின் வற்புறுத்தலால் தந்தையும் கள்வனைச் சிறையிலிருந்து மீட்டு அவளுக்கு மணம் செய்து வைக்கிறார். இன்பமான வாழ்க்கையின் இடையில் ஊடலின்போது சினத்தில் பத்தரை தன் கணவனை நீ கள்வன் தானே? என்று கூறிவிட அதனால் சினங்கொண்ட காளன் (கணவன்) தெய்வத்தை வணங்க என்று பொய் கூறி மலையுச்சிக்கு அவளை அழைத்துச் சென்று கொல்லப் போவதாகக் கூறுகின்றான். கணவனுக்கு அறிவுரை கூறியும் அவன் திருந்தாத நிலையில் அவனை வணங்கி வலம் வருவது போல் வந்து கணவனை மலையுச்சியிலிருந்து தள்ளிக் கொன்று விடுகின்றாள். தான் செய்த பாவம் நீங்கிடப் பௌத்த சமயத்தில் சேர்ந்து அறக் கருத்துக்களைப் பரப்பி இறுதியில் புத்தபிரானின் திருவடியை அடைகிறாள்.
