மூன்றாம் பருவம்
அலகு – 4 – குறுவினாக்கள் மற்றும் விடைகள்
- முதல் ஐந்தாண்டு திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
- முதல் ஐந்தாண்டு திட்டம் 1951 தொடங்கப்பட்டது.
- தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள அணைகளைப் பட்டியலிடுக.
- பவானிசாகர் அணை (1956)
- அமராவதி அணை (1957)
- மணிமுத்தாறு அணை (1958)
- வைகை அணை (1959)
- ஆழியாறு அணை (1962)
- மத்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகளைப் பட்டியலிடுக.
- நெய்வேலிப் பழுப்பு நிலக்கரித் திட்டம்
- இணைப்பு இரயில்பெட்டித் தொழிற்சாலை
- எண்ணூர் அனல்மின்சார நிலையம்
- மணலி மண்ணெண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் தொழிற்சாலை
- திருவெறும்பூர்: உயர் அழுத்தக் கொதிகலன் தொழிற்சாலை.
- ஆவடி: டாங்கித் தொழிற்சாலை.
- கல்பாக்கம்: மின்அணு நிலையம்.
- நிலவுடைமை உச்சவரம்பு சட்டம் குறித்து எழுதுக.
- தமிழ்நாட்டு அரசாங்கம் சட்டத்தின் மூலம் நிலவுடைமைக்கு உச்சவரம்பு 15 ஏக்கர்களுக்குமேல் உரிமை கொண்டாட முடியாது என்று திட்டம் கொண்டு வந்தது. நிலமின்றி வாழ்ந்த மக்களுக்கு நிலங்கள் பங்கீடு செய்யப்பட்டன.
- இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்து எழுதுக.
- இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, மத்திய அரசு இந்தியைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்காது என்று அறிவித்தது. ஆனால் சென்னை மாகாண முதலமைச்சர் ஓ.பி. இராமசாமி ரெட்டியாரைக்கொண்ட அமைச்சரவை மீண்டும் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க முயன்றது.
- இந்தி எதிர்ப்புப் போராட்டம் (1948): தமிழறிஞர்கள், சமயவாதிகள், காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தனர். 17.7.1948இல் சென்னையில் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது.
- அரசியல் அமைப்பில் மொழிக் கொள்கை குறித்து எழுதுக.
- அரசியலமைப்பில் மொழிக் கொள்கை (1950): இந்திய அரசியலமைப்பில் 343வது பிரிவில் இந்தியாவின் ஆட்சி அலுவல் மொழியாக இந்தி இருக்கும் என்று கூறப்பட்டது. 351வது பிரிவு, இந்தி மொழியைப் பரவச் செய்வதும், வளமுறச் செய்வதும் இந்திய அரசின் கடமை என்று அமைந்து இருந்தது.
- தார்ப்பூசி அழிக்கும் போராட்டம் என்றால் என்ன?
- புகைவண்டி நிலையம், அஞ்சல் நிலையம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள பெயர்ப்பலகைகளில் காணப்படும் இந்தி எழுத்துக்களை தார்பூசி அழிக்கும் போராட்டம் ஆரம்பமானது.
- வானொலிக்கு எதிரான போராட்டம் என்றால் என்ன?
- மத்திய அரசு வானொலிக்கு ‘ஆகாஷ்வாணி’ என்று பெயர் சூட்டுவதாக அறிவித்ததற்கு எதிராக 23.5.1959இல் போராட்டம் ஆரம்பமானது. தமிழ் எழுத்தாளர்கள், பாடகர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டனர்.
- இந்திய ஆட்சிமொழி சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
- 13.4.1963இல் இந்திய அரசின் ஆட்சிமொழிச் சட்டம் தாக்கல் செய்யப்பட்டது.
- இதன்படி, 26.1.1965 முதல் இந்தி ஆட்சி மொழியாகும், ஆங்கிலம் துணை மொழியாகப் பயன்படுத்தப்படும்.
- இடைநிலை கல்வித் திட்டம் குறித்து எழுதுக.
- வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு ஏதுவாக கணினிக் கல்வியும் தொழில் கல்வியும் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் ‘அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது.
- சமுக நலத்திட்டங்களைப் பட்டியலிடுக.
- பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டம் (1970).
- கண்ணொளி வழங்கும் திட்டம் (1971)
- இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கும் திட்டம் (1973).
- ஊனமுற்றோர் மறுவாழ்வு திட்டம் (1974).
- அனாதை சிறுவர்கள் மறுவாழ்வு திட்டம் (1975).
- தொட்டில் குழந்தை திட்டம்
- பசுமைவீடு திட்டம்
- கண்ணொளி வழங்கும் திட்டம் குறித்து எழுதுக.
- கண்தானத்தை ஊக்குவிக்கும் திட்டம்
- லட்சக்கணக்கானோர் கண்ணொளி பெற்றனர்; இத்திட்டம் பின்னர் மத்திய அரசால் தேசிய அளவில் பின்பற்றப்பட்டது.
- குடிசைத்தொழில்கள் சிலவற்றை எழுதுக.
- பட்டுப் பூச்சி வளர்த்தல்
- மரச்சாமான்கள்
- தேனீ வளர்ப்பு
- மண்பாண்டத் தொழில்
- பாய் முடைதல்
- கோழி வளர்ப்பு
- பண்ணைத் தொழில்
- கதர், கைத்தறிப் பொருட்கள் தயாரித்தல்
- இந்திய கனிமங்கள் யாவை? அல்லது இந்தியாவில் கிடைக்கும் கனிமங்களைப் பட்டியலிடுக.
- நிலக்கரி
- இரும்பு
- மாங்கனீசு
- பாக்ஸைட்
- மைக்கா
- இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் உலோகங்கள் யாவை?
- மாங்கனீசு
- பாக்சைட்
- ஜிப்சம்
- இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் உலோகங்கள் யாவை?
- நிக்கல்
- பெட்ரோலியம்
- துத்தநாகம்
- பாதரசம்
- தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
- 1957இல் ‘தமிழ்நாடு மின்சார வாரியம்’ தொடங்கப்பட்டது.
- தகவல் தொடர்பு – விளக்கம் தருக.
- தகவல் தொடர்பு என்பது ஓர் இடத்திலிருந்து தொலைவில் உள்ள மற்றொரு இடத்தோடு தகவல்களைப் பரிமாறிக் கொள்ளப் பயன்படுத்தும் அமைப்பு மற்றும் அதற்கான கருவிகள் ஆகும்.
- இணையப் பயன்பாடுகள் குறித்து எழுதுக. (அல்லது) இணையம் வழங்கும் வசதிகளை ப் பட்டியலிடுக.
- வலைதளப்பக்கங்கள்
- மின்னஞ்சல்
- பல மொழிகளில் செய்திகள்
- ஒளிப்படங்கள்
- வன்பொருள், மென்பொருள் உட்பிரிவுகள் குறித்து எழுதுக.
- உற்பத்தி, பரிசோதிப்பு, தரக்கட்டுப்பாடு, விற்பனை, பராமரிப்பு, ஆய்வு மற்றும் மேம்பாடு போன்ற உட்பிரிவுகளைக் கொண்டுள்ளன.
- தனிப்பட்ட தகவல் தொடர்பு என்றால் என்ன?
- தனிப்பட்ட தொடர்பு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கிடையே கருத்துக்கள், எண்ணங்கள் மற்றும் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு செயல்முறையாகும்.
- தபால், தந்தி
- பொதுத் தகவல் தொடர்பு என்றால் என்ன?
- பொதுத் தகவல் தொடர்பு என்பது, செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வழியாக ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்களைச் சென்றடையும் தகவல்தொடர்பு முறையாகும்.
- முதல் தபால் தலை எங்கு எப்போது வெளியிடப்பட்டது?
- 1852 இல் முதல் தபால் தலை கராச்சியில் வெளியிடப்பட்டது.
- தமிழ் இணையக் கல்விக்கழகம் பற்றி எழுதுக.
- நோக்கம்: இணையம் வழியாகத் தமிழ் ஆதாரங்களை (மொழி, இலக்கியம், கலை, பண்பாடு) தமிழ்ச் சமுதாயத்தினருக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் அளிப்பது.
- நிறுவல்: 18.5.2000இல் தமிழக அரசால் நிறுவப்பட்டு, 16.07.2010இல் ‘தமிழ் இணையப் பல்கலைக்கழகமாக’ இருந்து ‘தமிழ் இணையக் கல்விக்கழகமாக’ பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
நெடுவினாக்கள்
- விடுதலைக்குப் பின் தமிழ்நாடு பெற்ற வளர்ச்சி குறித்து எழுதுக. (அல்லது) விடுதலைக்குப் பின் தமிழகத்தின் வளர்ச்சி குறித்து விரித்துரைக்க.
விடுதலைக்குப் பின் தமிழ்நாட்டு வரலாறு
விடுதலைக்குப் பிந்தைய தமிழ்நாட்டில், நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் நிலவிய ஏற்றத்தாழ்வுகளைக் களைய, பல்வேறு துறைகளிலும் ஐந்தாண்டுத் திட்டங்கள் வகுக்கப்பட்டன.
- ஐந்தாண்டுத் திட்டங்கள்:
- முதல் திட்டம்: 1951
- இரண்டாம் திட்டம்: 1956
- மூன்றாம் திட்டம்: 1961
- நான்காம் திட்டம்: 1969
- ஐந்தாம் திட்டம்: 1974
- அடுத்த திட்டம்: 1980 இந்தத் திட்டங்களின் முக்கிய நோக்கம், உழவுத் தொழில் மற்றும் கனரகத் தொழில்களின் வளர்ச்சி ஆகும். இத்திட்டங்களின் பயனாக, தமிழகத்தில் வேளாண்மையிலும், கனரகத் தொழில்களிலும் வளர்ச்சி காணப்பட்டது.
பல்வேறு துறைகளில் முன்னேற்றம்
-
-
- விடுதலைக்குப் பிறகு பல இரசாயன உர உற்பத்தி ஆலைகள் தோன்றி உழவுக்குத் தேவையான உரங்களை வழங்கின. கோவை, தஞ்சை மாவட்டங்களில் இருந்து டிராக்டர்கள் மூலம் நிலங்களைப் பண்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
- வேளாண்மைக்கு முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ. 9.37 கோடியும், இரண்டாம் திட்ட காலத்தில் ரூ. 51.02 கோடியும், மூன்றாம் திட்ட காலத்தில் ரூ. 57.20 கோடியும், நான்காவது திட்ட காலத்தில் ரூ. 93.48 கோடியும் ஒதுக்கப்பட்டது.
- தமிழகத்தின் பல பகுதிகள் மழையை நம்பியே இருந்தன, மரபு வழிப்பட்ட வேளாண்மையே தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது. தஞ்சை, திருச்சி, நெல்லை போன்ற பகுதிகள் வேளாண்மையில் சிறப்பாக விளங்கின.
- விடுதலைக்குப் பிறகு பவானிசாகர் அணை (1956), அமராவதி அணை (1957), மணிமுத்தாறு அணை (1958), வைகை அணை (1959), ஆழியாறு அணை (1962) போன்ற பெரிய அணைக்கட்டுகள் கட்டப்பட்டன.
- திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நில உச்சவரம்பு 30 ஸ்டாண்டர்டு ஏக்கரில் இருந்து 15 ஸ்டாண்டர்டு ஏக்கராகக் குறைக்கப்பட்டது. நிலமின்றி வாழ்ந்த மக்களுக்கு நிலங்கள் பங்கீடு செய்யப்பட்டன.
- கரும்பு, நெல், பருத்தி, சோளம், கம்பு போன்ற பயிர் வகைகளில் ஒட்டு ரகங்கள் உருவாக்கப்பட்டதால், 1971ஆம் ஆண்டுக்குள் உணவுத்துறையில் தன்னிறைவு ஏற்பட்டது. இந்தியாவிலேயே பசுமைப் புரட்சி கண்ட இரண்டாவது மாநிலமாகத் தமிழகம் விளங்கலாயிற்று.
-
-
- கோவை, மதுரை ஆகிய இடங்களில் நூற்பாலைகளும் நெசவாலைகளும் துணி வகைகளை உற்பத்தி செய்தன. சென்னையில் உற்பத்தியாகும் ‘பின்னி’ துணிவகைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. கைத்தறி நெசவாளர்கள் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தனர்.
- மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டில் பல பெரிய உற்பத்தித் திட்டங்களை நிறுவியது.
- நெய்வேலிப் பழுப்பு நிலக்கரித் திட்டம் (மூலதனம் ரூ. 182 கோடி): மின்சாரம், செயற்கை உரம், அடுப்புக்கரி உற்பத்தி, பீங்கான் பாத்திரங்கள், மின்தடை சாதனங்கள் தயாரிப்பு.
- சென்னை: இணைப்பு இரயில்பெட்டித் தொழிற்சாலை, எண்ணூர் அனல்மின்சார நிலையம், மணலி மண்ணெண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் தொழிற்சாலை.
- திருவெறும்பூர்: உயர் அழுத்தக் கொதிகலன் தொழிற்சாலை.
- ஆவடி: டாங்கித் தொழிற்சாலை.
- கல்பாக்கம்: மின்அணு நிலையம்.
- தமிழ்நாடு முழுவதும் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு இலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. எல்லா மாவட்டங்களிலும் ‘தொழில்நுட்பப் பள்ளிகள்’ தொடங்கப்பட்டன.
- நெசவு ஆலைகள் தவிர, சிமெண்ட், உரம், போக்குவரத்து வண்டிகள், டயர் உற்பத்தி செய்யும் தொழில்கள் பெருகின. துப்பாக்கித் தொழிற்சாலை, டாங்குகள் கட்டும் தொழிற்சாலை, இரயில் பெட்டித் தொழிற்சாலை போன்ற புதிய கனரகத் தொழிற்சாலைகள் உருவாயின.
- ஆயிரக்கணக்கான சிறு தொழில்கள் பெருகின. அம்பத்தூர், கிண்டி, இராணிப்பேட்டை போன்ற இடங்களில் உருவான தொழிற்பேட்டைகள் குறிப்பிடத்தக்கவை.
- கோவை, மதுரை, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் பஞ்சாலைத் தொழில் சிறந்து விளங்கியது. சர்க்கரை உற்பத்தியும் பெருகியது.
- டால்மியாபுரம், தாழையூத்து போன்ற இடங்களில் சிமெண்ட் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைந்தன. 1976இல் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் ஏற்பட்டது.
- அசோக் லேலாண்ட், ஸ்டாண்டர்டு மோட்டர்ஸ் லிமிடெட் போன்ற போக்குவரத்து ஊர்தி உற்பத்தித் தொழிற்சாலைகள் முக்கியமானவை. தோல் தொழில் வளர்ச்சிக்கு 1964இல் சென்னையை அடுத்த மாதவரத்தில் முதல் தொழிற்பேட்டை உருவானது.
- பொதுத்துறை நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது, அவை வியத்தகு வளர்ச்சி அடைந்தன. பருத்தி, இரும்பு-எஃகு, சணல், சர்க்கரை, தேயிலை, பொறியியல் போன்ற தொழில்கள் பொதுத்துறையின் கீழ் வந்தன.
- மின்னணுப் பொருள்கள், நுண்கருவிகள், எந்திரப் பாகங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் சிறுதொழில்கள், அரசு கடனுதவியுடன் ஊக்குவிக்கப்பட்டன.
- பட்டுப் பூச்சி வளர்த்தல், மரச்சாமான்கள், தேனீ வளர்ப்பு, மண்பாண்டத் தொழில், பாய் முடைதல், கோழி வளர்ப்பு, கதர், கைத்தறிப் பொருள்கள் தயாரித்தல் போன்றவை குடிசைத் தொழில்களாக வளர்ந்தன.
- சுதந்திரத்திற்குப் பின் தமிழகத்தில் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், பாரத கனரகத் தொழிற்சாலை, ஆவடி டாங்கி தொழிற்சாலை, துப்பாக்கித் தொழிற்சாலை போன்ற பத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.
-
-
- பொருளாதார வளர்ச்சிக்கு மின்சாரம் இன்றியமையாதது. 1947இல் பேசின் பிரிட்ஜ் அனல்மின் நிலையம், 1948இல் மேட்டூர் நீர்மின் நிலையம் உருவாயின.
- 1957இல் ‘தமிழ்நாடு மின்சார வாரியம்’ தொடங்கப்பட்டது. கல்பாக்கம் அனல்மின் நிலையம், தூத்துக்குடி அனல்மின் நிலையம் போன்றவை துவங்கப்பட்டன.
-
-
- சாலைப் போக்குவரத்து சிறந்த முன்னேற்றம் அடைந்தது. 1947இல் சென்னை நகரப் பேருந்துகள் தேசியமயமாக்கும் திட்டம் தொடங்கி 1948இல் நிறைவுற்றது.
- 1972இல் பல்லவன் போக்குவரத்துக் கழகம் உருவாகியது. அதன் பிறகு பல புதிய போக்குவரத்துக் கழகங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுத்தன.
- புகைவண்டிப் போக்குவரத்தில் தமிழகம் வேகமான வளர்ச்சியைப் பெற்றது. நெல்லை – நாகர்கோயில், திண்டுக்கல் – கரூர், சேலம் – தருமபுரி – பெங்களூரு இடையே புதிய இரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. மீட்டர்கேஜ் ரயில்பாதைகள் அகலப் பாதைகளாக மாற்றப்பட்டன.
-
-
- சுதந்திரத்திற்குப் பிறகு நில உரிமைகள் ஒரு சிலரிடம் குவிந்திருந்ததை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டியிருந்தது.
- தமிழ்நாட்டு அரசாங்கம் சட்டத்தின் மூலம் நிலவுடைமைக்கு உச்சவரம்பு 15 ஏக்கர்களுக்குமேல் உரிமை கொண்டாட முடியாது என்று திட்டம் கொண்டு வந்தது. நிலமின்றி வாழ்ந்த மக்களுக்கு நிலங்கள் பங்கீடு செய்யப்பட்டன.
-
-
- கிராமங்கள் முன்னேற சாலை அமைத்தல், மின்சார வசதி, குடிநீர் வசதி போன்றவை அளிக்கப்பட்டன. ‘நூலக நிறுவனம்’ அமைக்கப்பட்ட பிறகு கிராமங்கள் தோறும் நூலகங்கள் உருவாகின.
- வானொலி, செய்தித்தாள்கள், திரைப்படங்கள் ஆகியவை கிராமங்களைச் சென்றடைந்தன.
-
- கலைக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள், உயர்தரக் கல்வி நிலையங்கள் பலமடங்கு பெருகியுள்ளன. வேளாண்மைப் பல்கலைக்கழகம், பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் போன்ற பல பல்கலைக்கழகங்கள் உருவாகியுள்ளன.
- தேசிய ஒருமைப்பாடு, சமூகநீதி, சமயசார்பின்மை, சமதர்மப் பொருளாதாரம், அனைவருக்கும் தரமான கல்வி போன்ற உயர்ந்த குறிக்கோள்களுடன் கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
டாக்டர் ராதாகிருஷ்ணன் கமிஷன் (1948), A. லெட்சுமணசுவாமி முதலியார் குழு (1952), C.S. கோத்தாரி கமிஷன் (1964) போன்றவை அமைக்கப்பட்டன. 1968இல் ‘தேசிய கல்விக்கொள்கை’ உருவாக்கப்பட்டது.
- மொழிப் போராட்டம் வழி தமிழகம் முழுவதும் நடைபெற்ற இழப்புகள் குறித்து விவரி. (அல்லது) மொழிப் போராட்டம் குறித்து எழுதுக.
மொழிப் போராட்டம்: இந்தித் திணிப்புக்கு எதிரான எதிர்ப்பு
மொழி ஒரு சமூகத்தின் ‘பண்பாட்டுத் தொடர்புக்கருவி’ ஆகும். பல மொழிகள் பேசும் நாட்டில் ஒரு குறிப்பிட்ட மொழியைத் திணிப்பது தவறானது, அது முரண்பாடுகளை உருவாக்கும். சென்னை மாகாணத்தில் ‘இந்தி மொழி திணிப்பு ஏற்பட்டது’.
- விடுதலைக்குப் பிந்தைய இந்தித் திணிப்புப் போராட்டம்:
-
-
- இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, மத்திய அரசு இந்தியைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்காது என்று அறிவித்தது. ஆனால் சென்னை மாகாண முதலமைச்சர் ஓ.பி. இராமசாமி ரெட்டியாரைக்கொண்ட அமைச்சரவை மீண்டும் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க முயன்றது.
- நாளிதழ்கள், மாத, வார இதழ்கள் அரசின் இந்த முடிவைக் கண்டித்தன.
- இந்தி எதிர்ப்புப் போராட்டம் (1948): தமிழறிஞர்கள், சமயவாதிகள், காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தனர். 17.7.1948இல் சென்னையில் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது. பெரியார், மறைமலையடிகள், திரு.வி.க., அண்ணா போன்றோர் கலந்துகொண்டனர்.
- இந்தி திணிப்பு ‘ஆரிய திராவிட போராட்டத்தின் மறுவடிவம்’ என்று பலர் பேசினர். மறைமலையடிகள், “திராவிடர்களின் பண்பாட்டையும், மறுமலர்ச்சியையும் அழிக்கவே ஆரியர்கள் இந்தியைப் புகுத்தி உள்ளனர்” என்றார்.
- அமைதிப் போராட்டம் (1948): திராவிடர் கழக செயற்குழு இந்திக்கு எதிராக ஊர்வலம் நடத்துதல், பொதுக்கூட்டம் கூட்டுதல், அமைச்சர்களுக்குக் கருப்புக் கொடி காட்டுதல், அரசு அலுவலகங்களில் மறியல் செய்தல் போன்ற அமைதியான போராட்டங்களை நடத்தத் தீர்மானித்தது.
- சென்னைக்கு வந்த இந்திய கவர்னர் ஜெனரல் இராஜாஜிக்குக் கருப்புக் கொடி காட்டப்பட்டது. அரசு இந்தித் திணிப்பை அகற்றவில்லை.
- 19.12.1948இல் கும்பகோணத்தில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. பெரியார், மணியம்மை கைது செய்யப்பட்டனர். 1949இல் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து அண்ணா தலைமையில் திமுக ஆரம்பிக்கப்பட்டது.
- அரசின் புதிய ஆணை (1950): கல்வி அமைச்சர் மாதவராவ், 2.5.1950இல் 1ஆம் வகுப்பு முதல் 6ஆம் வகுப்பு வரை இரண்டாம் மொழியாக ஆங்கிலத்தையும், மூன்றாம் மொழியாக இந்தியையும் கட்டாயமாக்கி ஆணை பிறப்பித்தார். தி.க.வும், திமுகவும் இதனை எதிர்த்து 10.5.1950இல் ‘இந்தி எதிர்ப்பு நாளாகக்’ கொண்டாடினர்.
- அரசியலமைப்பில் மொழிக் கொள்கை (1950): இந்திய அரசியலமைப்பில் 343வது பிரிவில் இந்தியாவின் ஆட்சி அலுவல் மொழியாக இந்தி இருக்கும் என்று கூறப்பட்டது. 351வது பிரிவு, இந்தி மொழியைப் பரவச் செய்வதும், வளமுறச் செய்வதும் இந்திய அரசின் கடமை என்று அமைந்து இருந்தது.
- மத்திய அரசு, மற்ற மொழி பேசும் மக்களுக்கு ஆங்கிலம் தொடர்பு மொழியாக வைத்துக்கொள்ள 15 ஆண்டுகள் (1965 வரை) நீட்டிப்பு கொடுத்தது. இந்தி கற்பவர்களுக்கு அரசு வேலைகளில் தனிச்சலுகைகள் வழங்கியதால், தமிழகம் எங்கும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிகள் உருவாயின.
- இராஜாஜி ஆட்சிக்காலத்தில் போராட்டம் (1952-1954):
-
-
- 10.4.1952இல் இராஜாஜி முதல்வரானார். அவரது காலத்தில் ‘மொழிப்போர்’ புதிய வடிவம் பெற்றது. திராவிடர் கழகமும், திமுகவும் இணைந்து போராட்டத்தைத் துவங்கின.
- புகைவண்டி நிலையம், அஞ்சல் நிலையம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள பெயர்ப்பலகைகளில் காணப்படும் இந்தி எழுத்துக்களை தார்பூசி அழிக்கும் போராட்டம் ஆரம்பமானது. பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்கள் இதில் ஈடுபட்டனர்.
- இப்போராட்டத்தை அரசு அடக்க முயலவில்லை, இதனால் மக்களிடையே இந்தி எதிர்ப்புணர்ச்சியும், தமிழ் மீது பற்றும் ஏற்பட்டது.
- தேசியக்கொடி எதிர்ப்புப் போராட்டம் (1955):
-
-
- 1955இல் மத்திய அரசு இந்தியை மீண்டும் தேர்வுப் பாடமாகத் திணிக்கும் சூழ்நிலை உருவானது. இதனைத் தடுக்க, 17.7.1955இல் திருச்சியில் திராவிடர் கழக நிர்வாகக்குழு, “இந்தியக் கூட்டாட்சியில் இருக்க விரும்பவில்லை. 1.8.1955இல் தேசியக்கொடி எரிப்புப் போராட்டம் தொடங்கப்படும்” என்று முடிவெடுத்தது.
- பிரதமர் நேருவின் கோரிக்கையின் பேரில், தமிழக முதல்வர் காமராஜர், இந்தி பேசாத மக்களின் நலன்களைப் பாதிக்கக்கூடிய எந்த நடவடிக்கைகளையும் இந்திய அரசோ, மாநில அரசோ எடுக்காது என்று உறுதிமொழி அளித்தார். இதனால் திராவிடர் கழகம் போராட்டத்தைக் கைவிட்டது.
- பி.ஜி. கெர் குழுவும் இந்தி திணிப்பும் (1955):
-
-
- 7.6.1955இல் பி.ஜி. கெர் தலைமையில் ஒரு குழு இந்தி மொழியைப் பரப்புவதற்கும், வளர்ப்பதற்கும் அமைக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கை, இந்தி கட்டாயப் பாடம் இல்லை, விருப்பப் பாடமாகப் படிக்கலாம் என்றது, ஆனால் மூன்றாவது மொழிக்குக் கிடைக்கும் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றது.
- கெர் குழு அறிக்கை எதிர்ப்புப் போராட்டம் (1957): இந்தக் குழுவின் அறிக்கை மறைமுகமாக இந்தியைத் திணிப்பதாகக் கருதி பலமான எதிர்ப்பு தோன்றியது. பெரியார், “‘வளைந்த குண்டூசிக்குக்கூட பெறாத இந்தி நமக்கு எந்த வகையிலும் தேவையில்லை'” என்றார். திமுகவும் கடுமையாக எதிர்த்தது.
- 26.11.1957இல் பெரியாரின் ஆணைப்படி, மாநிலம் முழுவதும் ‘சட்ட எரிப்புப் போராட்டம்’ துவக்கப்பட்டது. சுமார் 4,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவர்கள் முதல் முறையாக கும்பகோணத்தில் போராட்டம் நடத்தினர்.
- வானொலிக்கு எதிரான போராட்டம் (1959):
-
-
- மத்திய அரசு வானொலிக்கு ‘ஆகாஷ்வாணி’ என்று பெயர் சூட்டுவதாக அறிவித்ததற்கு எதிராக 23.5.1959இல் போராட்டம் ஆரம்பமானது. தமிழ் எழுத்தாளர்கள், பாடகர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டனர். மத்திய அரசு ‘ஆகாஷ்வாணி’ என்ற சொல்லைத் திரும்பப் பெற்றுக்கொண்டதும் போராட்டம் நிறுத்தப்பட்டது.
- குடியரசுத் தலைவர் ஆணையும், தேசப்பட எரிப்புப் போராட்டமும் (1960):
-
-
- 1959இல் பி.ஜி. கெர் அளித்த பரிந்துரையை குடியரசுத் தலைவர் ஏற்று, 20.4.1960இல் இந்தியை ‘ஆட்சி மொழியாக’ அறிவித்தார்.
- பிரதமர் நேருவின் உறுதிமொழியை மீறிவிட்டதாகக் கருதிய பெரியார், “நாட்டுப் பிரிவினைக்கு வழிவகுத்து விட்டார்கள். எனவே தேசப்பிரிவினைக்கு இந்திய தேசப் படத்திற்கு தீ வையுங்கள்” என்று அறிக்கை வெளியிட்டார்.
- 5.6.1960ஆம் தேதி ‘துக்கநாளாக’ அறிவிக்கப்பட்டது. பெரியார், வீரமணி கைது செய்யப்பட்டனர்.
- திமுகவால் 31.7.1960இல் சென்னை கோடம்பாக்கத்தில் ‘இந்தி எதிர்ப்பு மாநாடு’ கூட்டப்பட்டது.
- இந்திய ஆட்சிமொழிச் சட்டம், 1963:
-
-
- 13.4.1963இல் இந்திய அரசின் ஆட்சிமொழிச் சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, 26.1.1965 முதல் இந்தி ஆட்சி மொழியாகும், ஆங்கிலம் துணை மொழியாகப் பயன்படுத்தப்படும். திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை இந்தி பேசாத மக்களுக்கு இழைத்த அநீதி என்று கண்டித்தார்கள்.
- திமுக பொதுக்குழு கூடி அரசியல் சட்டம் 17வது பிரிவை எரிக்கத் தீர்மானம் நிறைவேற்றியது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1965ஆம் ஆண்டு இறுதி வரை நடைபெறும் என திமுக அறிவித்தது.
- பக்தவச்சலம் சட்ட எரிப்புப் போராட்டம்:
-
-
- 3.10.1963இல் பக்தவச்சலம் முதலமைச்சர் ஆனதும் ஆட்சிமொழிக்கு எதிரான போராட்டம் வேகம் பெற்றது. அண்ணா தலைமையில் 17.11.1963இல் அரசியல் சட்டத்தின் 17வது மொழிப் பிரிவை எரிப்பதாக இருந்தது, ஆனால் அவர் கைது செய்யப்பட்டார்.
- அண்ணா உட்பட பலருக்கு 6 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. போராட்டம் தீவிரமடைந்து, 26.1.1965இல் புதுவேகம் பெற்றது.
- குடியரசு தினமும், துக்க தினமும்:
-
-
- 8.1.1965இல் திமுக, 26.1.1965ஐ துக்க தினமாகக் கொண்டாடவும், கருப்புச் சின்னம் அணியவும் முடிவெடுத்தது.
- இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் (1965):
-
-
- அனைத்துக் கல்லூரி மாணவர்களும் ஒன்றுகூடி ஒரு போராட்டக்குழுவை அமைத்தனர். சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இந்தியை அரக்கி வடிவத்தில் கொடும்பாவி செய்தும், எரித்தும், இந்திப் புத்தகங்களை எரித்தும் எதிர்ப்பைக் காட்டினர்.
- மதுரையில் அரசியல் பிரிவு 17 கொளுத்தப்பட்டது. இதற்குக் காரணமான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டம் தீவிரமடைந்து, தடியடி, கண்ணீர் புகைக்குண்டு எனப் பரவியது.
- மாணவர் இராஜேந்திரன் மரணம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இராஜேந்திரன் என்ற மாணவர் மரணமடைந்தார். இதனால் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மாணவர் கையிலிருந்து பொதுமக்கள் கைக்குச் சென்றது.
- தீக்குளித்த திமுகத் தொண்டர்கள் பலி: திருச்சி சின்னச்சாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம் போன்ற பலர் உடலில் தீ வைத்துக் கொண்டு ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என்று கூறிக் கொண்டே இறந்தனர். இந்தப் போராட்டத்தை அடக்க முடியாமல் அரசு திணறியது, காங்கிரஸ் அரசு மக்களின் ஆதரவை இழந்தது.
- திமுக ஆட்சியும் போராட்டத்தின் முடிவும் (1967):
-
- 1967 பிப்ரவரியில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், 20 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியைத் தோற்கடித்து திமுக ஆட்சியைப் பிடித்தது. அண்ணாத்துரை 6.3.1967இல் முதலமைச்சர் ஆனார்.
- 23.1.1968இல் கூடிய சட்டமன்றத்தில் அண்ணா, “ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழிகளே தமிழகத்தின் ஆட்சி மொழியாக இருக்கும். இந்திமொழி தேவை இல்லை” என்று அறிவித்தார். அரசு கல்லூரிகளில் தமிழ் பாடமொழியாக இருக்கும் என்றும், அடுத்த ஐந்தாண்டுக்குள் அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.
- மத்திய அரசு இந்தியைத் திணிக்க முயலக்கூடாது என்றும், ஆங்கிலத்தையே ஆட்சிமொழியாக நீடிக்கச் செய்யவேண்டும் என்றும் திமுக அரசு கேட்டுக்கொண்டது.
- இவ்வாறு திமுக இருமொழிக் கொள்கைத் திட்டத்தை அறிமுகம் செய்தவுடன், நீண்ட காலமாக நடந்து வந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் முடிவடைந்தது.
- கல்வி வளர்ச்சி குறித்த திட்டங்களை விவரி.
கல்வி வளர்ச்சி
விடுதலைக்குப் பின் தமிழ்நாட்டில் கல்வித் துறையில் பெரும் வளர்ச்சி காணப்பட்டது. தொடக்கப்பள்ளிகள், இடைநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றின் எண்ணிக்கை பல மடங்காகப் பெருகியுள்ளன.
முக்கியக் குறிக்கோள்கள்:
- தேசிய ஒருமைப்பாடு, சமூக நீதி, சமயசார்பின்மை, சமதர்மப் பொருளாதாரம், மனிதவளப் பயன்பாடு, உணவு உற்பத்தியில் தன்னிறைவு, தொழில்மயமாக்கல், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அனைவருக்கும் தரமான கல்வி போன்ற உயரிய குறிக்கோள்கள் வகுக்கப்பட்டன.
- இந்தக் குறிக்கோள்களை அடைய கல்வி முறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவர கல்விக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
கல்விக் குழுக்கள்:
- டாக்டர் ராதாகிருஷ்ணன் கமிஷன் (1948).
- A. லெட்சுமணசுவாமி முதலியார் தலைமையில் ஒரு குழு (1952).
- C.S. கோத்தாரி தலைமையில் கமிஷன் (1964).
- ‘தேசிய கல்விக்கொள்கை’ (1968) உருவாக்கப்பட்டது.
அனைவருக்கும் ஆரம்பக்கல்வி மற்றும் நலத்திட்டங்கள்:
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
- காமராஜர் தொடக்கக் கல்வி முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தார். அனைத்துக் கிராமங்களிலும் பள்ளிகள் தொடங்கப்பட்டு, குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டது.
- மாணவர்களைப் பள்ளியில் சேர்க்கவும், இடைநிற்றலைத் தவிர்க்கவும், முழுமையான முன்னேற்றம் அடையவும் சத்துணவுத் திட்டம் (தினசரி உணவுடன் வாரத்திற்கு ஐந்து நாட்கள் முட்டை) மற்றும் இலவசப் பேருந்து வசதி வழங்கப்படுகிறது.
- கரும்பலகைத் திட்டம் மூலம் ஒவ்வொரு தொடக்கப்பள்ளிக்கும் வகுப்புகள், கரும்பலகைகள், விளையாட்டுப் பொருட்கள், கற்பித்தல் பொருட்கள் வழங்கப்பட்டன.
- தமிழ்நாடு அரசு, மத்திய அரசுடன் இணைந்து ‘அனைவருக்கும் கல்வித் திட்டத்தை’ செயல்படுத்தி வருகிறது.
பிற கல்வி நலத்திட்டங்கள்:
- புதிய தொடக்கப்பள்ளிகள் திறப்பு; 300 பேர் வாழும் சிறு குடியிருப்புகளிலும் பள்ளிகள்.
- ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி.
- 10ஆம் வகுப்புக்கு மேல் தமிழ்மொழிவழிக் கல்வி பயில்வோருக்கு இலவசக் கல்வி.
- ஏழை மாணவர்களுக்கு இலவசப் புத்தகங்கள், சீருடை.
- ஆதிதிராவிடக் குழந்தைகளுக்கு இலவசத் தங்கும் விடுதிகள்.
- பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் மூலம் உள்ளூர் மக்களின் பங்களிப்பை ஊக்குவித்தல்.
- பள்ளிச் சிறுவர்களுக்கு இலவச மருத்துவ வசதிகள்.
- பாடத்திட்டம் மேம்படுத்தப்பட்டு, தற்காலத் தேவைக்கேற்ப கணக்கு, அறிவியல், புவியியல் போன்ற பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.
- விளையாட்டு, கைவினை ஈடுபாடுகள், அறிவியல் துணைப்பொருட்கள் ஆகியவற்றில் பண ஒதுக்கீடு மற்றும் கண்காட்சிகள்.
- ஆசிரியர்களின் சம்பள விகிதம் உயர்வு மற்றும் சலுகைகள்.
- நல்லாசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்குப் பரிசுத்தொகை.
இடைநிலைக் கல்வி மற்றும் உயர்கல்வி:
- வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு ஏதுவாக கணினிக் கல்வியும் தொழில் கல்வியும் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் ‘அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது.
- மாணவர்களுக்குக் கட்டணமின்மை, சீருடை, பாடநூல், போக்குவரத்து, பயண அட்டைகள், சைக்கிள், கணினிக் கல்வி போன்றவை இலவசமாக வழங்கப்பட்டன.
- தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
- நூலக வசதிகள் மேம்பாட்டுத் திட்டம், கற்பித்தல் கருவிகள் வழங்கல், மொழி ஆய்வகங்கள் (தமிழ், ஆங்கிலம் தெளிவாகத் தெரிந்து கொள்ள).
- ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை மேம்படுத்த பணியிடைப் பயிற்சி திட்டங்கள், மாநில அளவிலான பயிற்சி நிறுவனங்கள், முன்மாதிரி பள்ளிகள்.
- கலைத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்வி, மக்கள் தொகைக் கல்வி, வேலைத் திறனளிக்கும் கல்வி, மதிப்புணர்வுக் கல்வி போன்றவை வலியுறுத்தப்படுகின்றன. தாய்மொழி வழியே பாடங்களைக் கற்பிக்கும் முயற்சி.
- ‘தமிழ் மெல்ல இனிச் சாகும்’ என்ற பாரதியின் எச்சரிக்கை, பிற மொழிச் சரித்திரங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதன் அவசியத்தை உணர்த்தியது.
- உயர்கல்வியின் இலக்கு இளைஞர்களின் தனித் திறமைகளை வளர்த்து, இந்த நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள அவர்களைத் தயார்படுத்துவதாகும். உலகத்தரம் வாய்ந்த கல்வி வழங்குதல், உள்கட்டமைப்பு மேம்பாடு, இணையவழி மின் ஆளுமை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவித்தல், நலிவடைந்த மாணவர்களுக்கு வாய்ப்பளித்தல் போன்றவை இதன் நோக்கங்கள்.
- சமுக வளர்ச்சி குறித்து எழுதுக. (அல்லது) பொருள் சார்ந்த சமூக வளர்ச்சியில் தமிழகம் பெற்ற முன்னேற்றம் குறித்து விளக்குக.
சமூக, பொருளாதார வளர்ச்சி
- சுதந்திர இந்தியாவில் நிலவி வந்த ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் பொருட்டு பதினோர் ஐந்தாண்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
- இதன் பயனாகத் தமிழகத்தில் வேளாண்மை மற்றும் கனரகத் தொழில்களில் வளர்ச்சி காணப்பட்டது.
- மத்திய அரசு நிறுவனங்கள் பல நிறுவப்பட்டன, மின் உற்பத்தி, போக்குவரத்து போன்ற துறைகள் நன்கு வளர்ச்சியடைந்தன.
வேளாண்மை வளர்ச்சி
- வேளாண்மையே பொருளாதார அமைப்பின் அடிப்படையாகவும், இந்திய மக்களின் முதன்மைத் தொழிலாகவும் விளங்குகிறது.
- ஐந்தாண்டுத் திட்டங்களில் வேளாண்மைக்கு கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- தமிழகத்தின் பல பகுதிகள் மழையை நம்பியுள்ளன, மரபு வழிப்பட்ட வேளாண்மை தொடர்கிறது.
- தஞ்சை, திருச்சி, நெல்லை மாவட்டங்கள் வேளாண்மையில் சிறந்து விளங்குகின்றன.
- சுதந்திரத்திற்குப் பிறகு பவானிசாகர் அணை (1956), அமராவதி அணை (1957), மணிமுத்தாறு அணை (1958), வைகை அணை (1959), ஆழியாறு அணை (1962), சேர்வலாறு அணை (1985) போன்ற பெரிய அணைக்கட்டுகள் கட்டப்பட்டன.
- நில உச்சவரம்பு சட்டம்: முதலில் 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நில உச்சவரம்பு இருந்தது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அது 15 ஸ்டாண்டர்டு ஏக்கராகக் குறைக்கப்பட்டது.
- கரும்பு, நெல், பருத்தி, சோளம், கம்பு போன்ற பயிர்களில் ஒட்டு ரகங்கள் உருவாக்கப்பட்டன. இதன் காரணமாகத் தமிழகத்தில் சுமார் 1971க்குள் உணவுத்துறையில் தன்னிறைவு ஏற்பட்டது, மேலும் இந்தியாவிலேயே பசுமைப் புரட்சி கண்ட இரண்டாவது மாநிலமாகத் தமிழகம் விளங்கியது.
தொழில் வளர்ச்சி
- வேளாண்மையில் 63% மக்கள் ஈடுபட்டபோதிலும், 15% மக்களே கனரகத் தொழில்கள், சிறுதொழில்கள், நடுத்தரத் தொழில்கள் போன்ற வேளாண்மை அல்லாத தொழில்களில் ஈடுபட்டிருந்தனர்.
- தொழில்துறை நெசவு ஆலைகளைத் தாண்டி சிமெண்ட், உரம், போக்குவரத்து வண்டிகள், டயர் உற்பத்தி போன்ற துறைகளில் விரிவடைந்தது.
- மத்திய, மாநில அரசுகள் துப்பாக்கித் தொழிற்சாலை, டாங்கி தொழிற்சாலை, இரயில் பெட்டித் தொழிற்சாலை போன்ற புதிய கனரகத் தொழிற்சாலைகளை உருவாக்கின.
- ஆயிரக்கணக்கான சிறு தொழில்கள் பெருகின. அம்பத்தூர், கிண்டி, ராணிப்பேட்டை, கப்பலூர், அரக்கோணம், மார்த்தாண்டம், திருச்சி, காரைக்குடி, ஒசூர் போன்ற இடங்களில் தொழிற்பேட்டைகள் உருவாயின. இவற்றில் அம்பத்தூரும் கிண்டியும் மிகப்பெரியவையாக விளங்கின.
- பஞ்சாலைத் தொழில் கோவை, மதுரை, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் சிறந்து விளங்கியது.
- புதிய வேளாண்மை முறைகளால் சர்க்கரை உற்பத்தியும் பெருகியது, இது கிராமப்புற முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது.
- டால்மியாபுரம், தாழையூத்து போன்ற இடங்களில் சிமெண்ட் உற்பத்தித் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் 1976இல் தொடங்கப்பட்டது.
- அசோக் லேலண்ட், ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் போக்குவரத்து ஊர்திகளை உற்பத்தி செய்தன.
- தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. 1964இல் சென்னையை அடுத்த மாதவரத்தில் முதல் தோல் தொழில்பேட்டை உருவானது.
- பொதுத்துறை நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அவை பருத்தி துணி, இரும்பு எஃகு, சணல் ஆலை, சர்க்கரை ஆலை, தேயிலைத் தொழில், பொறியியல் தொழில் போன்ற துறைகளில் வியத்தகு வளர்ச்சி அடைந்தன.
- சிறு தொழில்கள் மின்னணுப் பொருட்கள், நுண்கருவிகள், எந்திரப் பாகங்கள், காலணிகள், விவசாயக் கருவிகள் போன்றவற்றை உற்பத்தி செய்கின்றன. அரசு கடனுதவி மற்றும் தொழில்நுட்ப உதவி அளித்து சிறு தொழில்களை ஊக்குவிக்கிறது.
- குடிசைத் தொழில்கள் (உள்ளூரில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு வீட்டு உறுப்பினர்களால் வீடுகளிலேயே செய்யப்படுபவை) பட்டுப் பூச்சி வளர்த்தல், மரச்சாமான்கள், தேனீ வளர்ப்பு, மண்பாண்டத் தொழில், பாய் முடைதல், கோழி வளர்ப்பு, பண்ணைத் தொழில், கதர், கைத்தறிப் பொருட்கள் தயாரித்தல் ஆகியவை அடங்கும்.
இந்தியக் கனிமங்கள்
- நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கனிம வளம் இன்றியமையாதது.
- இந்தியாவில் நிலக்கரி, இரும்பு, மாங்கனீசு, பாக்ஸைட், மைக்கா ஆகியவை அதிகம் கிடைக்கின்றன. செம்பு, ஈயம், துத்தநாகம், தங்கம் மற்றும் பெட்ரோல் போதிய அளவில் இல்லை.
- இந்தியப் புவியியல் ஆய்வுத்துறை, இந்திய சுரங்கக்கழகம் போன்ற நிறுவனங்கள் கனிமவளக் கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ளன.
- உலோக வளங்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றன:
- பெருமளவில் பயன்படும் உலோகங்கள்: இரும்புத்தாது, மைக்கா.
- ஏற்றுமதிக்கான உலோகங்கள்: மாங்கனீசு, பாக்சைட், ஜிப்சம். 1950இல் 22 வகையான உலோகங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 70க்கும் மேற்பட்டவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
- சுயதேவைகளைப் பூர்த்தி செய்யும் உலோகங்கள்: சோடியம், சோடியம் உப்பு, பாக்சைட், பாஸ்பேட், நிலக்கரி, கண்ணாடி.
- வெளிநாடுகளைச் சார்ந்துள்ள உலோகங்கள்: நிக்கல், பெட்ரோலியம், துத்தநாகம், பாதரசம், தகரம், பிளாட்டினம், பித்தளை.
எரிசக்தி
- எரிசக்தியின் உபயோகம் நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இந்தியாவின் எரிசக்தி பெட்ரோலிய எண்ணெய், வாயு, நிலக்கரி, சாணம், எரிவாயு, காற்று ஆகியவற்றிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
- நன்மைகள்: தொழில்துறை வளர்ச்சி, மக்களுடைய அன்றாட வாழ்க்கை (சமைத்தல், மின்விசிறி இயக்குதல், பொருட்கள் பாதுகாப்பு), போக்குவரத்து மற்றும் விவசாயத் துறைகளில் (டிராக்டர்கள், அறுவடை கருவிகள்) பெரிதும் உதவுகிறது.
கைத்தறித்துறை வளர்ச்சி
- ஜவுளித் தொழில் இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பதோடு, வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியிலும் பங்களிக்கிறது.
- தமிழ்நாட்டில் மொத்தம் 5.56 லட்சம் கைத்தறிகள் உள்ளன. அவற்றில் 2.93 லட்சம் கைத்தறிகள் கூட்டுறவு அமைப்பின்கீழ் செயல்படுகின்றன. இவற்றுக்கு 12 கூட்டுறவு நூற்பாலைகள் நூல் விநியோகம் செய்கின்றன.
- புதுக்கோட்டை, தருமபுரி, எட்டயபுரம், தேனி ஆகிய இடங்களில் புதிய நூற்பாலைகள் கட்டப்பட்டு உள்ளன.
- நூற்புத் தொழில், கைத்தறி, விசைத்தறி மற்றும் பின்னலாடைத் தொழில் ஆகியவை ஜவுளித் தொழிலில் முக்கியமானவை, இவை கைத்தறி நெசவாளர்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துகின்றன.
கதர், கிராமத் தொழில் வளர்ச்சி
- தமிழ்நாட்டில் 1,250 கிராமத் தொழில் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இவற்றில் 80,000 கைவினைத் தொழிலாளிகள் ஈடுபட்டுள்ளனர், இதன் மூலம் பல ஆயிரம் கிராமப்புற ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
மத்திய அரசு நிறுவனங்கள்
- சுதந்திரத்திற்குப் பின் தமிழகத்தில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அவை: இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ், இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், பாரத கனரகத் தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், உரத்தொழிற்சாலை, எஃகுத் தொழிற்சாலை, பாய்லர் துணைத் தொழிற்சாலை, ஆவடி டாங்கித் தொழிற்சாலை, துப்பாக்கித் தொழிற்சாலை ஆகியவை குறிப்பிடத்தக்கன.
மின் உற்பத்தி
- பொருளாதார வளர்ச்சிக்கு மின்சாரம் இன்றியமையாதது. சுதந்திரத்திற்குப் பின் தமிழகத்தில் 1947இல் பெசின் பிரிட்ஜ் அனல்மின் நிலையம், 1948இல் மேட்டூர் நீர்மின் நிலையம் உருவாக்கப்பட்டன.
- 1957இல் ‘தமிழ்நாடு மின்சார வாரியம்’ தொடங்கப்பட்டது. இவைகளைத் தொடர்ந்து கல்பாக்கம் அனல்மின் நிலையம், தூத்துக்குடி அனல்மின் நிலையம் போன்றவை துவங்கப்பட்டன.
போக்குவரத்து
- சாலைப் போக்குவரத்து சிறந்த முன்னேற்றம் அடைந்தது. 1947இல் சென்னை நகரப் பேருந்துகள் தேசியமயமாக்கும் திட்டம் தொடங்கி 1948இல் முடிந்தது.
- 1972இல் பல்லவன் போக்குவரத்துக் கழகம் உருவாகியது. அதன்பின் பல புதிய போக்குவரத்துக் கழகங்கள் உருவாகிப் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுத்தன.
- புகைவண்டிப் போக்குவரத்தில் தமிழகம் வேகமான வளர்ச்சியைப் பெற்றது. நெல்லை-நாகர்கோயில், திண்டுக்கல்-கரூர், சேலம்-தருமபுரி-பெங்களூரு இடையேயும் புதிய இரயில் பாதைகள் அமைக்கப்பட்டன.
- தமிழ்நாட்டில் உள்ள மீட்டர்கேஜ் ரயில்பாதைகள் அகலப்பாதைகளாக மாற்றப்பட்டன, இதனால் புகைவண்டியில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது.
தொழில்நுட்ப வளர்ச்சி
- தகவல் தொழில்நுட்ப முதலீட்டிற்குத் தேவையான அறிவியல், சமூகக் கட்டமைப்பு மற்றும் மனித ஆற்றலைத் தமிழகம் கொண்டுள்ளது.
தேசிய மின் ஆளுமைத் திட்டங்கள் மற்றும் மாநில அரசின் மின் ஆளுமைத் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது.
- தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து எழுதுக. (அல்லது) தகவல் தொடர்பு முன்னேற்றம் குறித்து விளக்குக.
தகவல் தொடர்பு விளக்கம்:
- தகவல் தொடர்பு என்பது ஓர் இடத்திலிருந்து தொலைவில் உள்ள மற்றொரு இடத்தோடு தகவல்களைப் பரிமாறிக் கொள்ளப் பயன்படுத்தும் அமைப்பு மற்றும் அதற்கான கருவிகள் ஆகும்.
தொழில்நுட்பவியல் துறையின் நோக்கங்கள்:
- குடிமக்களுக்கு அரசின் தகவல்கள் மற்றும் பரிமாற்றங்களை இணையம் வாயிலாக விரைவாக வழங்குதல்.
- கிராமம், நகர மக்களிடையே உள்ள இடைவெளியை நிரப்புதல்.
- தமிழ்நாட்டை மின் ஆளுமையில் சிறந்த மாநிலமாக மாற்றுதல்.
- தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியை கணிசமான அளவுக்கு உயர்த்துதல்.
- அனைத்து வீடுகளுக்கும் கம்பிவட தொலைக்காட்சி சேவைகளை நியாயமான விலையில் வழங்குதல்.
- கணினித் தமிழை உயர்நிலைக்கு எடுத்துச் செல்லுதல் மற்றும் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துதல்.
தொழில்நுட்ப துறையின் பயன்கள்:
- முழுமையான மாற்றத்திற்கான தொடர் இயக்கி, சமமான வளர்ச்சி, புதிய கருவிகள், வேலைவாய்ப்பு உருவாக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிப்பு, விரைவான சேவைகள், நேரம் மற்றும் ஆற்றலைச் சேமித்தல்.
- டிஜிட்டல் தொழில்நுட்பம்: சமூக கைபேசி, பகுப்பாய்வு, மேகக்கணினியம், இயந்திரக் கற்றல், செயற்கை நுண்ணறிவு, ரோபோ தொழில்நுட்பம், முப்பரிமாண அச்சிடுதல், வங்கி, வணிகம், மருத்துவம், வேளாண்மை, பல்பொருள் இணையம், அனிமேஷன் மற்றும் விளையாட்டு, தரவுப் பகுப்பாய்வு, வணிக நுண்ணறிவு மென்பொருள் போன்ற தற்காலத் துறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
இணையம்:
- தொலைபேசி கம்பி வடத்தையும் இணைக்கும் கணினி தொழில்நுட்பத்தால் உருவானது ‘இணையம்’.
- இது மிகப்பெரிய நூலகம் போன்றது, வலைதளப்பக்கங்கள், மின்னஞ்சல், ஒலி, ஒளி, சலனப்படம், பல மொழிகளில் செய்திகள், ஒளிப்படங்கள் போன்ற வசதிகளை வழங்குகிறது.
- மின்னஞ்சல் மூலம் குறைவான செலவில், விரைவாக, உலகின் பல நாடுகளுக்கும் கடிதங்களை அனுப்ப முடியும். தமிழ் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் மின்னஞ்சல்களை அனுப்பும் வசதி உள்ளது.
தலைமுறைகள் கடந்த தொழில்நுட்பங்கள்:
- முதல் தலைமுறை கம்பிவழித் தொலைபேசியிலிருந்து, இரண்டாம், மூன்றாம் தலைமுறை செல்பேசிகளும், தற்போது நான்காம் தலைமுறை தொழில்நுட்பமும் பயன்பாட்டில் உள்ளன.
- செல்பேசி வழியாக இணையம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கின்றன. செயற்கைக் கோள்கள் வழியே நாடு விட்டு நாடு தகவல் பரிமாற்றம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பச் சேவைகள்:
- தகவல் தொழில்நுட்பச் சேவைகள் வன்பொருள் (hardware) மற்றும் மென்பொருள் (software) என இரு பிரிவுகளைக் கொண்டது. இவை உற்பத்தி, பரிசோதிப்பு, தரக்கட்டுப்பாடு, விற்பனை, பராமரிப்பு, ஆய்வு மற்றும் மேம்பாடு போன்ற உட்பிரிவுகளைக் கொண்டுள்ளன.
- டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், காக்னிசன்ட் டெக்னாலஜீஸ், விப்ரோ போன்ற இந்திய நிறுவனங்கள் உலகெங்கும் தகவல் தொழில்நுட்பச் சேவைகளை வழங்குகின்றன.
- அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உட்படப் பல நாடுகளில் உள்ள வங்கி, காப்பீடு, நிதித் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு இந்திய நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பச் சேவைகளை வழங்குகின்றன.
- வாகனங்கள், எந்திரங்கள், புத்தக வெளியீடு போன்ற உற்பத்தித் துறைகளிலும், வங்கி, காப்பீடு, தொலைதொடர்பு, மருத்துவம் போன்ற சேவைத் துறைகளிலும் தொழில்நுட்ப சேவைகள் வளர்ச்சி பெற்றுள்ளன.
தகவல் தொடர்பில் முன்னேற்றம்:
- நாம் வாழும் யுகம் ‘தகவல் யுகம்’ ஆகும். தகவல் தொடர்புகள் தனிப்பட்டவை, தொழில் சார்ந்தவை, பொதுவானவை என மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
- தபால் வழித் தொடர்பு: 1852இல் முதல் தபால் தலை கராச்சியில் வெளியிடப்பட்டது. இந்தியத் தபால் நிலையம் உலகிலேயே மிகப்பெரியது. 1975இல் ‘விரைவுத் தபால் முறை’, 1977இல் செயற்கைக் கோள் மூலம் தகவல் தொடர்பு, 1995இல் கிராமப்புற தபால் காப்பீட்டுத் திட்டம்.
- தொலைபேசி: 1881-82இல் கொல்கத்தாவில் முதல் சேவை தொடங்கப்பட்டது. 1984இல் ‘தொலைநிலை இயக்க மேம்பாட்டு மையம்’ உருவாக்கப்பட்டது. தனியார் துறை ஊக்குவிக்கப்பட்டு, அலைபேசி பெருமளவில் உருவாயின.
- வானொலி தகவல் தொடர்பு: 1936இல் ‘அகில இந்திய வானொலி’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தேசிய, மாநில, உள்ளூர் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. பண்பலை வரிசை ஒலிபரப்பு 1977இல் சென்னையில் துவக்கப்பட்டு, தனியார் நிறுவனங்கள் மூலம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குகின்றன.
- தொலைக்காட்சி: 1959இல் ‘டெல்லி தொலைக்காட்சி மையமாக’ தொடங்கப்பட்டு, 1976 முதல் ‘தூர்தர்சன்’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. செய்திகள், நிகழ்ச்சிகள், கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.
- பத்திரிக்கை தகவல் தொடர்பு: 1868இல் ‘அமிர்த பஜார்’ பத்திரிக்கை ஆரம்பித்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் – பிரிவு 19 பத்திரிக்கைக்கு சுதந்திரப் பாதுகாப்பு அளிக்கிறது. நடுநிலையோடு செயல்பட்டு மக்களின் குரலாக ஒலிக்கின்றன. தற்போது 101 மொழிகளில் நாளிதழ்கள் வெளியிடப்படுகின்றன, இணையம் மூலம் உலகம் முழுவதும் சென்றடைகின்றன.
- திரைப்படங்கள் மூலம் தகவல் தொடர்பு: 1931இல் பேசும் திரைப்பட சகாப்தம் தொடங்கியது. கிராபிக்ஸ், 3D அனிமேஷன் மூலம் பல தந்திரக் காட்சிகள் உருவாக்கப்பட்டு, மக்களை நல்வழிக்கு அழைத்துச் செல்லும் சாதனமாகத் திகழ்கின்றன.
இந்தியாவில் தொழில்நுட்ப சேவைகளின் வளர்ச்சி:
- இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் கணினிப் பாடத்தைப் புகுத்தி ஏராளமான பட்டதாரி இளைஞர்களை உருவாக்கின. ஆங்கிலக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால், இந்தியப் பொறியியல் பட்டதாரிகள் ஆங்கிலத்திலும் போதுமான அறிவு பெற்றிருந்தனர்.
- வேலைவாய்ப்புகள்:
- கணிப்பொறித் துறையில் கற்றுத் தேர்ந்த இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் பெரும் வரவேற்புக் கிடைத்தது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 40 சதவீதம் இந்தியர்கள் பணியாற்றுகின்றனர்.
- வெளிநாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் கிளைகளை நிறுவி, ஏராளமானோர்க்கு வேலைவாய்ப்பு அளித்தன.
- தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அயலாக்கச் சேவைகளால், வெளிநாட்டு வேலைகள் இந்திய இளைஞர்களைத் தேடிவரத் தொடங்கின.
- இந்திய அரசின் நடவடிக்கைகள்: நாஸ்காம் அமைப்பின் பரிந்துரைகளை ஏற்று, 2002ஆம் ஆண்டு அரசு பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இவை பேரழிவு மீட்பு, அலைக்கற்றைப் பகிர்வு, அழைப்புதவி மையங்களுக்கான விதிகள், வருமான வரி விலக்கு, மூலதனப் பொருட்கள் இறக்குமதி சலுகைகள் போன்றவற்றை உள்ளடக்கியது.
- தமிழ் இணையக் கல்விக்கழகம் குறித்து எழுதுக.
தமிழ் இணையக் கல்விக்கழகம்:
- நோக்கம்: இணையம் வழியாகத் தமிழ் ஆதாரங்களை (மொழி, இலக்கியம், கலை, பண்பாடு) தமிழ்ச் சமுதாயத்தினருக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் அளிப்பது.
- நிறுவல்: 18.5.2000இல் தமிழக அரசால் நிறுவப்பட்டு, 16.07.2010இல் ‘தமிழ் இணையப் பல்கலைக்கழகமாக’ இருந்து ‘தமிழ் இணையக் கல்விக்கழகமாக’ பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- செயல்பாடுகள்: அரிச்சுவடி முதல் பட்டப்படிப்பு வரையிலான கல்வித் திட்டங்கள், அரிய அச்சு நூல்கள், செய்தித்தாள்கள், பருவ இதழ்கள் போன்றவற்றை மின்னுருவாக்கம் செய்தல், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவரும் பயன்படுத்தும் வகையில் மின் நூலகம் வடிவமைத்தல், தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளை ஆவணப்படுத்துதல், கணினித் தமிழ் ஆய்வினை ஊக்குவித்தல்.
- தமிழ் மென்பொருள் உருவாக்கல்: தமிழக அரசின் முகவராகச் செயல்பட்டு, தமிழில் மென்பொருட்களை உருவாக்க நிதியுதவி அளிக்கிறது, மேலும் மென்பொருட்களைச் சோதித்துச் சான்றளிக்கிறது.
- கல்வித் திட்டங்கள்: மழலைக்கல்வி, இளநிலைத் தமிழியல் பட்டக் கல்வி, தமிழர் தகவலாற்றுப்படை, தமிழ் மின்நிகண்டு, மின்கற்றலுக்கான இணையதளம், மின்நூலகம் உருவாக்குதல், தமிழ்ப் பெருங்களஞ்சியத் திட்டம், தமிழ் மென்பொருள்கள் உருவாக்கம், புதிய பாடத்திட்டங்கள், புதிய கல்வித்திட்டம், மாணவர்களுக்கான குறுஞ்செயலிகள்.