சங்க இலக்கியம் – குறிப்புகள்

  • கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி”- புறப்பொருள் வெண்பாமாலை (ஐயனாரிதனார்)
  • சங்கத்தால் ஆய்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் சங்க இலக்கியம் ஆகும்.
  • சங்க இலக்கியம் வேறுபெயர் – திணை இலக்கியம், பதினெண்மேற் கணக்கு, பாட்டுத்தொகை (பாட்டு- பத்துப்பாட்டு, தொகை- எட்டுத்தொகை)

எட்டுத்தொகை 

    • அகம் சார்ந்த நூல்கள்
      1. நற்றிணை
      2. குறுந்தொகை
      3. ஐங்குறுநூறு
      4. கலித்தொகை
      5. அகநானூறு
    • புறம் சார்ந்த நூல்கள்
      1. புறநானூறு
      2. பதிற்றுப்பத்து
    • அகமும் புறமும்  சார்ந்த நூல்
      1. பரிபாடல்

அகம் சார்ந்த நூல்கள்

நற்றிணை

  • நல்ல திணை 
  • பாடுபொருள்: அகம்
  • அடிவரையறை : 9-12
  • பாடல் எண்ணிக்கை: 400
  • பாடிய புலவர்கள்:175
  • வேறுபெயர்: நற்றிணை நானூறு
  • தொகுப்பித்தவர்: பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி
  • கடவுள் வாழ்த்துப் பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • நற்றிணையில் இடம்பெற்றுள்ள இசைக்கருவிகள் – முழவு, முரசு, தண்ணுமை, கிணைப்பாறை, சிறுபறை, குழல் 
  • அறவோன்- மருத்துவன்
  • கணியர் – சோதிடம் பார்ப்பவர்
  • படிவ மகளிர்– தவம் செய்யும் பெண்கள்

குறுந்தொகை

  • நல்ல குறுந்தொகை
  • பாடுபொருள்: அகம்
  • அடிவரையறை : 4 – 8
  • பாடல் எண்ணிக்கை: 400
  • தொகுத்தவர்: பூரிக்கோ
  • பெண்பாற் புலவர்கள்: அள்ளூர் நன்முல்லையார், ஆதிமந்தியார், ஔவையார், காக்கைப்பாடினியார்
  • குறவன்- நிலத்தை உழுது  தினை விதைப்பவன்
  • சேணான்- உயர்வான பரணின் மீது இருப்பவர்
  • கோடியர்– கூத்தர்
  • அணிகள்: தலையணிகள், காசுமாலைகள், பூங்குழை, மின்னிழை, சேயிழை, மாணிழை
  • ஆரியக்கூத்தர்- மூங்கிலில் கட்டிய கயிற்றின் மேல் ஆடுபவர்.
  • விழா நிறைந்த ஊர் – சாறு கொள் ஊர்
  • நாழிகைக் கணக்கர் – இரவில் தூங்காது காலக்கணக்கைக்  கூறுபவர்.
  • கடப்பாட்டளன் – தன் பொருள் பலருக்கும் பயன்பட வேண்டும் என்னும் நல்லெண்ணம் கொண்டவன்.

ஐங்குறுநூறு 

  • ஐந்திணைகளில் ஒவ்வொன்றும் குறைந்த அடிகளைக் கொண்ட நானூறு பாடல்களைக் கொண்டு விளங்குவதால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.
  • பாடுபொருள்: அகம்
  • அடிவரையறை : 3-6
  • பாடல் எண்ணிக்கை: 500
  • பாடிய புலவர்கள்: 5
  • தொகுத்தவர்: புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
  • தொகுப்பித்தவர்: யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
  • கடவுள் வாழ்த்து பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • நொண்டிப்பத்து அந்தாதி முறையில் அமைந்தது.
  • சொல்லாட்சியால் பெயர் வைத்தல் – வேட்கைப்பத்து, வேழப்பத்து, களவன்பத்து
  • போரில் இறந்த வீரர்களுக்கு கல்நட்டு அக்கல்லில் வீரரின் உருவத்தையும் பெயரையும் எழுதி, எழுத்துரை ‘நடுகல்’ என்னும் பெயருடன் வழிப்பட்டனர். 

கலித்தொகை

  • கலிப்பாக்களால் ஆன பாடல்களைக் கொண்டுள்ளமையால் கலித்தொகை எனும் பெயர் பெற்றது.
  • பாடுபொருள்: அகம்
  • பாடல் எண்ணிக்கை: 150
    • பாலை- 35 பாடல்கள்
    • குறிஞ்சி- 29 பாடல்கள்
    • மருதம்- 35 பாடல்கள்
    • முல்லை- 17 பாடல்கள்
    • நெய்தல்- 37 பாடல்கள்
  • பாடிய புலவர்கள்: 5
  • ‘ஏறுதழுவுதல்’ குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.
  • போர்க்களத்தில் வெற்றிப் பெற்ற பின் ‘துணங்கை கூத்து’ ஆடுவது குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.
  • மகாபாரதம், இராமாயண காப்பிய செய்திகள் இடம்பெற்றுள்ளது. 
  •  
  • உரை- நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.

அகநானூறு

  • அகம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டுள்ளமையால் அகநானூறு எனும் பெயர் பெற்றது.
  • பாடுபொருள்: அகம்
  • அடிவரையறை : 13-31
  • பாடல் எண்ணிக்கை: 400
  • பாடிய புலவர்கள்: 145
  • தொகுத்தவர்: மதுரை உப்பூரிக்குடி கிழார் மகனார் உருத்திர சன்மர்
  • தொகுப்பித்தவர்: பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
  • வேறுபெயர்: நெடுந்தொகை
  • நூல் அமைப்பு:
    • களிற்றியானை நிரை- 1-120
    • மணிமிடைப்பவளம்-121- 300
    • நித்திலக் கோவை – 301- 400
  • பாடல் வைப்புமுறை
    • பாலைத்திணை- 1,3,5,7,… ஒற்றைப்படை எண்ணாக வருபவை 
    • குறிஞ்சித்திணை – 2,8,12,18….
    • முல்லைத்திணை – 4,14,24,…
    • மருதத்திணை- 6,16,26,…..
    • நெய்தல் திணை – 10,20,30,……
  • குடவோலை முறை பற்றி குறிப்பிடுகிறது.
  • காவிரிக் கரையில் பங்குனி விழா நடைபெறுவது பற்றிய செய்திகளும் இடம்பெற்றுள்ளன.

புறம் சார்ந்த நூல்கள்

புறநானூறு

  • புறம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டமையால் புறநானூறு எனும் பெயர் பெற்றது.
  • பாடுபொருள்: புறம் 
  • பாடல் எண்ணிக்கை – 400
  • வேறுபெயர்: புறம்,புறப்பாட்டு
  • புறநானூறு தோன்றிய காலம் தமிழகத்தின் வீரயுகம் என்றும் தமிழகத்தின் பொற்காலம் என்றும் அழைக்கபடுகிறது.
  • பண்டைய காலத்தில் வாழ்ந்த பேரரசர்கள்,சிற்றரசர்கள், வீரர்கள் பற்றிய செய்திகளையும் வழிபாட்டு முறைகள், மக்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை பற்றி செய்திகளையும் தருவதால் தமிழரின் வரலாற்றுப் பெட்டகம் என்று அழைக்கபடுகிறது.
  • கடையேழு வள்ளல்கள்
    • பாரி-பறம்பு மலை
    • பேகன்-பழனி மலை
    • ஓரி- கொல்லிமலை
    • காரி- மலையமான் நாடு
    • ஆய்-பொதியமலை
    • அதியன்-தகடூர்
    • நள்ளி- தோட்டி மலை

பதிற்றுப்பத்து

  • பத்து சேரமன்னர்களையும் பத்துப் பத்தாக நூறு பாடல்களில் பாடியுள்ளமையால் பதிற்றுப்பத்து எனும் பெயர் பெற்றது.
  • பாடுபொருள்: புறம் 
  • பாடல் எண்ணிக்கை- 100 (கிடைத்தவை 80 )
  • பாடாண் திணையில் மட்டுமே அமைந்த பாடல்களைக் கொண்டுள்ளது.
  • இரும்புக்கடலை என்றும் அழைக்கபடுகிறது.
  • ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் துறை,வண்ணம், தூக்கு, பெயர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
  • திருமணத்தின் போது அருந்ததி என்னும் விண்மீனைப் பார்க்கும் வழக்கத்தைக் குறிப்பிடுகிறது.
  • நான்காம் பத்து அந்தாதி தொடையில் அமைந்துள்ளது.

அகமும் புறமும் சார்ந்த நூல்

பரிபாடல்

  • பரிந்து செல்லும் ஓசையுடைய பாடல்களை கொண்டுள்ளதால் பரிபாடல் எனும் பெயர் பெற்றது.
  • பாடுபொருள்- அகம் புறம் சார்ந்தது.
  • பாடல் எண்ணிக்கை-70(கிடைத்தவை 22)
    • திருமால்-6
    • முருகன்-8
    • வையை-8
  • அடிவரையறை – 25-40
  • பாடிய புலவர்கள்- 13
  • வல்லோன்- ஓவியம் வரைபவர்
  • உரை- பரிமேலழகர் உரை எழுதியுள்ளார்.
  • அகலிகை, மன்மதன் ஓவியங்கள் திருபரங்குன்றத்தில் இடம்பெற்றிருந்ததை பரிபாடல் மூலம் அறிய முடிகிறது.

பத்துப்பாட்டு

  • திருமுருகாற்றுப்படை முதல் மலைபடுகடாம் முடியப் பத்து நீண்ட பாடல்களின் தொகுப்பே பத்துப்பாட்டு என்று சான்றோரால் வழங்கப்படுகின்றது.
  • ஆற்றுப்படை நூல்கள்
    • திருமுருகாற்றுப்படைநக்கீரர்
    • பொருநராற்றுப்படைமுடத்தாமக் கண்ணியார்
    • சிறுபாணாற்றுப்படைநல்லூர் நத்தத்தனார்
    • பெரும்பாணாற்றுப்படை:கடியலூர் உருத்திரங்கண்ணனார்
    • மலைபடுகடாம்பெருங்கெளசிகனார்
  • அகம் சார்ந்த நூல்கள்
    • முல்லைப்பாட்டு : நப்பூதனார்
    • குறிஞ்சிப்பாட்டு – கபிலர்
    • பட்டினப்பாலை – கடியலூர் உருத்திரங்கண்ணனார்
  • புறம் சார்ந்த நூல்கள்
    • திருமுருகாற்றுப்படைநக்கீரர்
    • பொருநராற்றுப்படைமுடத்தாமக் கண்ணியார்
    • சிறுபாணாற்றுப்படைநல்லூர் நத்தத்தனார்
    • பெரும்பாணாற்றுப்படை:கடியலூர் உருத்திரங்கண்ணனார்
    • மலைபடுகடாம்பெருங்கெளசிகனார்
    • மதுரைக்காஞ்சி: மாங்குடி மருதனார்
  • அகம் புறம் சார்ந்த நூல்
    • நெடுநல்வாடை
  • பத்துப்பாட்டில் மிகச் சிறிய பாட்டு 103 அடிகளைக் கொண்டது. மிக நீண்டது 782 அடிகளைக் கொண்டது.

திருமுருகாற்றுப்படை

  • பத்துப்பாட்டுக்குக் கடவுள் வாழ்த்துப் போல அமைந்தது திருமுருகாற்றுப்படை.
  • இது 317 அடிகள் கொண்டது. 
  • முருகன் அருள் பெற்ற ஒருவன், அதைப் பெற விரும்பும் இன்னொருவனை முருகப் பெருமானிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது.
  • இயற்றியவர் நக்கீரர். 
  •  இதற்குப் புலவராற்றுப் படை என்றும் ஒரு பெயர் உண்டு.

பொருநராற்றுப்படை

  • சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாட்டுடைத் தலைவன் ஆவார்.
  • இயற்றியவர் – முடத்தாமக் கண்ணியார் 
  • இப்பாட்டு 248 அடிகள் கொண்டது.
  • போர்க்களம் பாடும் பொருநன் ஒருவன் (கூத்தன்) தனக்குப் பரிசளித்த கரிகாலனிடம் இன்னொரு பொருநனை ஆற்றுப்படுத்துவதாக இயற்றப்பட்டது இது.

பெரும்பாணாற்றுப் படை

  • இயற்றியவர் – கடியலூர் உருத்திரங்கண்ணனார் 
  • பாட்டுடைத் தலைவன் – காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன்.
  •  500 அடிகள் கொண்டது. 
  • பேரியாழை வாசிக்கும் பாணன் ஒருவன், தன்போல் இன்னொரு பாணனைத் தனக்குப் பரிசளித்த வள்ளலான இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டதாதலால் பெரும்பாணாற்றுப் படையாயிற்று.

சிறுபாணாற்றுப் படை

  • இயற்றியவர் – இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
  • பாட்டுடைத் தலைவன் -ஓய்மான் நாட்டை ஆண்ட நல்லியக்கோடன்
  • இது 269 அடிகள் கொண்டது.
  • சீறியாழை (சிறிய யாழ்) வாசிக்கும் பாணன் ஒருவனை, நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டமையின் இப்பெயர் பெற்றது.

மலைபடுகடாம்(கூத்தராற்றுப்படை)

  • இயற்றியவர் – இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார்
  • பாட்டுடைத் தலைவன் – நன்னன் சேய் நன்னன்
  •  583 அடிகள் கொண்டது.
  • பரிசில் பெற்ற கூத்தன், அது பெறவிரும்பிய இன்னொரு கூத்தனை நன்னனிடம் ஆற்றுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டது.
  • மலைக்கு யானையை உவமித்து, அதில் பிறந்த ஓசையைக் கடாம் (மதநீர்) எனச் சிறப்பித்தமையால் மலைபடுகடாம் எனப்பட்டது.

மதுரைக் காஞ்சி

  • பத்துப்பாட்டுள் மிகவும் நீண்ட பாட்டான இது 782 அடிகளைக் கொண்டது.
  • இது, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ் செழியனுக்கு, நிலையாமையை எடுத்துக்கூறும் வகையில் மாங்குடி மருதனார் இயற்றியது.
  • மதுரை மன்னனுக்குக் கூறிய காஞ்சியாகையால் மதுரைக்காஞ்சியாயிற்று (காஞ்சி – நிலையாமை).

குறிஞ்சிப் பாட்டு

  • இயற்றியவர்  – கபிலர்
  • இது 261 அடிகள் கொண்ட அகவற்பாட்டாகும்.
  • குறிஞ்சிக்குரிய இயற்கைப் புணர்ச்சியும் அதற்குரிய நிமித்தங்களும் இதில் காணப்பட்டமையால் குறிஞ்சிப்பாட்டாயிற்று.
  • பெருங்குறிஞ்சி என்ற பெயரும் இதற்கு உண்டு.
  • இது அறத்தொடு நிற்றல் என்ற அகத்துறைக்கு அழகான எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. 

முல்லைப் பாட்டு

  • பத்துப்பாட்டுள் மிகச்சிறிய பாட்டான இதில் 103 அடிகள் உள்ளன.

  • இதனை இயற்றியவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார்.

  • இதற்கு முல்லை என்ற பெயரும் உண்டு.

  • முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்துள்ளது.

பட்டினப்பாலை

  • பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணைச் செய்யுள் என்பது  பொருள். 
  • 301 அடிகள் கொண்டது.
  • இதில் வஞ்சியடிகள் கலந்து வருவதால், இதனை வஞ்சிநெடும் பாட்டு என்பர்.
  • இதன் தலைவன் திருமாவளவன் என்னும் கரிகால் வளவன் ஆவான்.
  • இதனை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
  • பொருள்தேடச் செல்ல விரும்பிய தலைவன் தன் மனைவியைப் பிரிய மனமின்றித் தன் செலவினைக் கைவிட்ட நிலையில் பாடப்பட்டது இது.
  • அகப்பொருள் இதனைச் செலவழுங்குதல் என்று கூறும்.

நெடுநல்வாடை

  • இது 188 அடிகள் கொண்டது.

  • இதனை இயற்றியவர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார்.

  • காதலன் பகைவர்மேல் படையெடுத்துச் சென்று பாசறையில் இருக்கிறான். காதலி பிரிவுத் துயரால் வாடிக்கிடக்கிறாள். காதலியின் துயரைப் போக்க முடியா அரண்மனைப் பெண்டிர், தலைவன் விரைவில் திரும்பி வருமாறு கொற்றவைக்கு வழிபாடு செய்கின்றனர். இதுவே இதன் மையக் கருத்து.



மூன்றாம் பருவம் – ஒளி/ஒலிப்பதிவுகள்

அலகு-1 ஒளிப்பதிவு

அலகு 1 ஒலிப்பதிவுகள்

 

  • தொல் பழங்கால வரலாறும் சங்க கால வரலாறும்

  • அகழ்வாராய்ச்சி

  • திணை வாழ்வியல்

  • களவு வாழ்க்கை, கற்பு வாழ்க்கை , எண்வகை மணங்கள்

  • உணவு , ஐவகை நிலங்களில் உணவு வகைகள்

  • அணிகலன்கள், கலை, விளையாட்டு

  • முச்சங்கங்கள், சங்க கால ஆட்சி முறை

  • அயல்நாட்டு வாணிகத் தொடர்பு

 

அலகு -2 ஒளிப்பதிவு
அலகு – 2 ஒலிப்பதிவு
  • சோழர் வரலாறு

 

  • சேரர் வரலாறு

 

  • பாண்டியர் வரலாறு

 

  • பல்லவர் வரலாறு

 

  • நாயக்கர் வரலாறு

 

  • முகமதியர் வரலாறு

 

அலகு - 3 - ஒளிப்பதிவு
அலகு – 3 ஒலிப்பதிவு
  • ஐரோப்பியர் வரலாறு

 

  • டச்சுக்காரர்கள்

 

  • பிரெஞ்சுக்காரர்

 

  • ஆங்கிலேயர் 

 

  • கர்நாடகப் போர்

 

  • பாளையக்காரர்கள்

 

  • விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு

 

அலகு - 4 ஒளிப்பதிவு
அலகு – 4 ஒலிப்பதிவு
  • விடுதலைக்குப் பின் தமிழகத்தின் வளர்ச்சி

 

  • மொழிப்போராட்டம்

 

  • கல்வி வளர்ச்சி

 

  • சமூக வளர்ச்சி

 

  • சமூக நலத்திட்டங்கள்

 

  • தொழில் வளர்ச்சி

 

  • இணைய வளர்ச்சி
அலகு- 5 மொழிப்பயிற்சி

சோழர்கள் வரலாறு

சோழர்கள்

  • சோழர்களின் தலைநகரம் : உறையூர், பூம்புகார்
  • கொடி: புலிக்கொடி
  • அடையாளப் பூ: ஆத்தி
  • பிற்கால சோழப் பேரரசின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்- விசயாலய சோழன்

விசயாலய சோழன்(846-881)

  • விசயாலய சோழன் பற்றியும் அவர் பாண்டியருடன் ஆற்றிய போர் பற்றியும் அன்பில் செப்பேடு, ஆனைமங்கலச் செப்பேடு, திருவாலங்காட்டுச் செப்பேடு ஆகியவற்றில் குறிப்புகள் உள்ளன. 

முதல் இராசராசன் (கி.பி. 985-1014)

  • இயற்பெயர்: அருண்மொழிவர்மன்
  • பெற்றோர்: இரண்டாம் பராந்தகன் (சுந்தரசோழன் ) – வானவன்மாதேவி
  • பட்டம்: இராசகேசரி

சிறப்புகள்

  • மெய்க்கீர்த்தியை அறிமுகப்படுத்தியவர்.
    • “திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்”
  • தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவர்.

போர்கள்

  • சேர பாண்டியருடன் செய்த போரில் வெற்றி பெற்றார்.
  • கொல்லமும் குடகும் கங்கர் நாடும் கைப்பற்றினார். 
  • இலங்கை மீது படையெடுத்து சென்று வெற்றி கண்டார்.

சமய ஈடுபாடு: சைவ சமய ஈடுபாடு கொண்டவர்.  இவருடைய புனைப்பெயர் சிவபாதசேகரன் என்பதாகும்.

முதல் இராசேந்திரன் (கி.பி. 1012-1044)

  • இயற்பெயர்: மதுராந்தகன்
  • தந்தை: முதலாம் இராசராசன்
  • மெய்கீர்த்தி: “திருமன்னி வளர இருநில மடந்தையும்”
  • பட்டம் : கங்கை கொண்டான், கடாரம் கொண்டான்
  • போர்கள்:
    • மேலை சாளுக்கியருடன் போர்
    • இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தனுடன் போர்
    • சேரபாண்டியருடன் போர்
  • சமயப்பணி: கங்கைகொண்ட சோழேச்சுரம் என்னும் சிவன் கோவிலைக் கட்டியுள்ளார்.
  • சோழகங்கம் என்னும் ஏரியை வெட்டுவித்தான். 

முதலாம் குலோத்துங்க சோழன்(கி.பி. 1070-1122)

  • கீழை சாளுக்கியரின் வழித்தோன்றல்
  • சிறப்புப்பெயர்
    • “சுங்கம் தவிர்த்த சோழன்” 
    • திருநீற்றுச்சோழன்
  • கலிங்கத்துப்பரணியின் பாட்டுடைத்தலைவன் ஆவார்.
  • மெய்கீர்த்தி:
    • திருமன்னி விளங்கும்”
    • “புகழ்மாது விளங்க”
    • “பூமருவிய திருமடந்தை”
    • “திருமகள் செயமகள்”
    • “பூமேல் அரிவை”
    • “பூமியும் திருவும்”
    • “புகழ்சூழ்ந்த புணரி”
  • போர்கள்:
    • மேலை சாளுக்கியருடன் போர்
    • பாண்டிய நாட்டுடன் போர்
    • சேரருடன் செய்த போர்
    • கலிங்கத்துடன் போர்
  • சமயப்பணி: இவர் சிவபெருமான் மீது கொண்ட பக்தியால் “திருநீற்றுச்சோழன்” என்று அழைக்கப்பட்டார்.

சோழர்களின் நிர்வாக முறை

  • முதலாம் இராசராசனது ஆட்சி காலத்தில் சோழப்பேரரசு 9 மண்டலங்களாகப் பிரிந்து இருந்தது.
  • அந்தணர்கள் வழ்ந்த ஊர் சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டது.
  • அவ்வூரில் இருந்த அவை ‘பிரமதேய  அவை என்று அழைக்கப்பட்டது.
  • வாரியங்களின் கடமைகள்
    • சம்வத்சர வாரியம் – வழக்குகளுக்குத் தீர்ப்பளித்தல், அறநிலையங்களைப் பாதுகாத்தல்
    • ஏரி வாரியம் – விளைநிலங்களைப் பாதுகாத்தல், விளைவுக்கு நீர்ப்பாய்ச்சுதல்
    • தோட்ட வாரியம் – புன்செய் நிலங்களைப் பாதுகாத்தல்
    • பொன் வாரியம் – பொன் நாணயங்களை ஆராய்தல்

இரண்டாம் பருவம் அலகு 2 வினா விடை

அலகு- 1 : தமிழ் இலக்கிய வரலாறு அறிமுகம்

குறு வினா-விடை

  • குறவஞ்சி பெயர்க்காரணம் தருக.

       குற+வஞ்சி, குறவர் குளத்தில் பிறந்த வஞ்சிக்கொடி போன்ற பெண் என்ற பொருளைத் தரும். இவ்விலக்கியத்தில் குறத்தி குறி கூறுதல், குறத்தியின் செயல்கள் இடம்பெறுவதால் இப்பெயர் பெற்றது.

  • குறவஞ்சி குறிப்பு வரைக.
    • பெயர்க்காரணம்: குற+வஞ்சி, குறவர் குளத்தில் பிறந்த வஞ்சிக்கொடி போன்ற பெண் என்ற பொருளைத் தரும். இவ்விலக்கியத்தில் குறத்தி குறி கூறுதல், குறத்தியின் செயல்கள் இடம்பெறுவதால் இப்பெயர் பெற்றது.
    • காலம்: நாயக்கர் காலம்
    • வேறு பெயர்கள்: குறம், குறவஞ்சி நாடகம், குறத்திப் பாட்டு
    • முதல் குறவஞ்சி நூல்: திருக்குற்றாலக் குறவஞ்சி
  • கலம்பகம் பெயர்க்காரணம் கூறுக.
    • கலம்பகம் என்பதற்கு கலவை என்று பொருள். (கலம்-12, பகம்-6 = 18 உறுப்புகள் உடையது). பலவகையான ஓசை நயமுடைய பாக்களும் இனங்களும் உறுப்புகளும் பயின்றுவர பாடப்படுவது கலம்பகம் ஆகும்.
  • கலம்பகம் குறிப்பு வரைக.
    • பெயர்க்காரணம்: கலம்பகம் என்பதற்கு கலவை என்று பொருள். (கலம்-12, பகம்-6 = 18 உறுப்புகள் உடையது). பலவகையான ஓசை நயமுடைய பாக்களும் இனங்களும் உறுப்புகளும் பயின்றுவர பாடப்படுவது கலம்பகம் ஆகும்.
    • கலம்பக உறுப்புகள்: புயவகுப்பு, மதங்கு, அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சிந்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல்.
  • கைக்கிளை என்றால் என்ன?
    • தலைவன் தலைவியை முதன்முறை கண்டு அவளறியாமல் அவளைக் காதலிப்பதாகச் செய்யுள் செய்வது.
  • உலா குறிப்பு வரைக.
    • பெயர்க்காரணம்:பாட்டுடைத் தலைவன் உலா வருவதாகப் பாடப்படும் இலக்கிய வகை ஆதலால், இதற்கு உலா இலக்கியம் என்ற பெயர் பெற்றது.
    • வேறு பெயர்கள்: பவனி, பெண்பாற் கைக்கிளை, உலாப்புறம், உலாமாலை, புற உலா
    • முதல் உலா நூல்  திருக்கைலாய ஞான உலா
  • பரணி பெயர்க்காரணம் தருக.
    • போர்க்களத்தில் பாடும் புலவன் வாள், வேல் முதலிய படைக் கருவிகளால் அமைக்கப்பட்ட பரண் மீது அமர்ந்து பாடுவர்.  வீரர்கள் யானை மீது அமர்ந்து வில் எறிந்தும், வாள் எறிந்தும் பகைவார்களை விரட்டுதலைக் கருவாகக் கொண்டு படைக்கப் பெறும் இலக்கியம் என்பதால் பரணி எனப் பெயர் பெற்றது.
    • பரணி என்பது நட்சத்திரத்தின் பெயர். இது காளியையும் எமனையும் தெய்வமாகக் கொண்ட நாள். காளியைத் தெய்வமாகக் கொண்டு பாடப்படுவதால் இப்பெயர் பெற்றது.
  • முதல் பரணி நூல் எது?
    • கலிங்கத்துப்பரணி
  • கலிங்கத்துப்பரணி குறிப்பு வரைக.
    • முதல் குலோத்துங்கன் அனுப்பிய படைத்தலைவன் கருணாகரத் தொண்டைமான் கலிங்க வேந்தன் அனந்தவர்ம சோடங்கனை வென்றதைப் பாடியது.
    • எழுதியவர்: செயங்கொண்டர்
    • “பரணிக்கோர் செயங்கொண்டர்” என்று புகழப்படுகிறார்.

 

  • பள்ளு பெயர்க்காரணம் தருக.
    • பெயர்க்காரணம்: பள்ளர்களின் வாழ்க்கையை விளக்கிக் கூறும் இலக்கியம் என்பதால் பள்ளு என்ற பெயர் பெற்றது.
  • பள்ளு குறிப்பு வரைக.
    • பெயர்க்காரணம்: பள்ளர்களின் வாழ்க்கையை விளக்கிக் கூறும் இலக்கியம் என்பதால் பள்ளு என்ற பெயர் பெற்றது.
    • வேறு பெயர்கள்: உழத்திப்பாட்டு, பள்ளேசல், பள்ளு நாடகம், பள்ளு மூவகைத்தமிழ், பள்ளிசை
    • முதல் பள்ளு நூல்: முக்கூடற்பள்ளு

 

  •  பிள்ளைத்தமிழ் குறிப்பு வரைக.

    • பெயர்க்காரணம்: பாட்டுடைத்தலைவனையோ அல்லது தலைவியையோ பிள்ளைப் பருவமாக நினைத்து பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும்.
    • வேறுபெயர்: பிள்ளைப் பாட்டு, பிள்ளைக் கவி
    • ஆண்பாற் பிள்ளைத்தமிழின் பத்து பருவங்கள்:காப்பு,செங்கீரை,தால்,சப்பாணி,முத்தம்,வருகை,அம்புலி,சிற்றில்,சிறுபறை,சிறுதேர்
    • பெண்பாற் பிள்ளைத்தமிழின் பத்து பருவங்கள்:காப்பு,செங்கீரை,தால்,சப்பாணி,முத்தம்,வருகை,அம்புலி,நீராடல்,அம்மானை,ஊசல்

 

  • தூது குறிப்பு வரைக.
    • பெயர்க்காரணம்: ஒருவரிடம் சென்று ஒரு செய்தியைச் சொல்லி வருவதற்கும், ஒரு பொருளை வாங்கி வருவதற்கும், பிரிந்த இதயங்களை ஒன்று சேர்ப்பதற்கும் மற்றொருவரை அனுப்புவது தூது ஆகும்.
    • வகைகள்: அகத்தூது, புறத்தூது
    • முதல் தூது நூல்: நெஞ்சுவிடு தூது

 

  • அந்தாதி குறிப்பு வரைக.
    • அந்தம் முதலாகத் தொடுக்கப்படுவது அந்தாதி ஆகும்.
    • ஒரு செய்யுளின் ஈற்றில் உள்ள எழுத்து, அசை, சீர், அடி இவற்றில் ஒன்று அடுத்து வரும் செய்யுளின் முதலாக அமையும் படி பாடுவது அந்ததியாகும்.
    • முதல் அந்தாதி நூல்: அற்புதத் திருவந்தாதி

 

  • முதல் தனிப்பாடல் திரட்டை வெளியிட்டவர் யார்?
    • பொன்னுசாமித் தேவர்

 

  • பாரதியார் குறிப்பு வரைக.
    • இயற்பெயர் : சுப்பிரமணியன்
    • பெற்றோர் : சின்னச்சாமி ஐயர – இலக்குமியம்மை
    • முப்பெரும் பாடல்கள் :கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் 
    • புனைபெயர்கள்: ஷெல்லிதாசன், காளிதாசன், சக்திதாசன், சாவித்திரி

 

  • பாரதிதாசன் குறிப்பு வரைக.
    • இயற்பெயர் : சுப்புரத்தினம்
    • நூல்கள்: பாண்டியன் பரிசு, குறிஞ்சித்திட்டு, குடும்பவிளக்கு, தமிழச்சியின் கத்தி, எதிர்பாராத முத்தம், இருண்டவீடு, அழகின் சிரிப்பு தமிழியக்கம்

 

  • நாமக்கல் கவிஞர் குறிப்பு வரைக.
    • இயற்பெயர் : வே. இராமலிங்கம் பிள்ளை
    • பெற்றோர் : வேங்கடராமபிள்ளை – அம்மணியம்மாள் 
    • காந்தியக் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
    • இலக்கிய இன்பம், தமிழன் இதயம் போன்ற படைப்புகளும், அவனும் அவளும் என்னும் காப்பியமும், ‘மலைக்கள்ளன்’ என்ற புதினத்தையும் படைத்துள்ளார். ‘என் கதை’ என்ற இவரது தன் வரலாறு நூலாகும்.

 

  • ஹைக்கூ என்றால் என்ன?
    • ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளே தமிழ் ஹைக்கூக்களுக்குக் காரணம் எனலாம்.
    • ஹைக்கூ மூன்று அடிகளில் அமைய வேண்டும்.
    • ஹைக்கூ கவிதைகளை வாமனக் கவிதை, துளிப்பா, மினிப்பா. குக்கூ. எனப் பல பெயர்களிட்டு அழைக்கும் வழக்கம் உள்ளது.
  • தமிழில் வெளியான முதல் சிறுகதை எது?
    • குளத்தங்கரை அரசமரம்

 

  • கலிங்கத்துப் பரணி
    • பரணி நூல்களில் காலத்தால் முற்பட்டது இந்நூல். 
    • முதல் குலோத்துங்க சோழன் கலிங்க நாட்டின் மீது படை எடுத்து வெற்றி பெற்றான். இந்த வெற்றியைச் சிறப்பித்துப் பாடியதே கலிங்கத்துப் பரணி ஆகும்.
    • சிறப்பு: “தென்தமிழ்த் தெய்வப்பரணி”
    • கலிங்கத்துப் பரணியின் ஆசிரியர் செயங்கொண்டார் ஆவார்.

 

    • திருக்குற்றாலக் குறவஞ்சி குறித்து எழுதுக.
  • அஷ்டப்பிரபந்தம் என்று அழைக்கப்படும் நூல்கள் யாவை?

    • திருவரங்கக் கலம்பகம் 
    • திருவரங்கத்துமாலை
    • திருவரங்கத்தந்தாதி
    • சீரங்கநாயகர் ஊசல்திருநாமம்
    • திருவேங்கடமாலை
    • திருவேங்கடத்தந்தாதி
    • அழகர் அந்தாதி
    • நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி

 

  • ஆற்றில் வெள்ளம் வருவதற்கான அறிகுறிகள் யாவை?
    •  தென்மேற்குத் திசையிலே மலையாள மின்னல் மின்னிக் கொண்டுள்ளது.
    • தென் கிழக்குத் திசையிலே ஈழத்து மின்னல் மின்னிக் கொண்டுள்ளது.
    • நேற்றும் இன்றும் மரக்கொம்புகளைச் சுற்றியவாறு காற்று அடிக்கிறது.
    • கிணற்றிலே உள்ள சொறித்தவளைகள் கூப்பாடு போடுகின்றன.
    • நண்டுகள் தம் வளைகளுள் மழைநீர் புகுந்து விடாதபடி வாயில்களைச் சேற்றினால் அடைக்கின்றன.
    • மழை நீரைத் தேடிக் கோடி வானம்பாடிகள் அங்கும் இங்கும் பறக்கின்றன.

 

  • பதினாறு செல்வங்களில் எவையேனும் நான்கினை எழுதுக.
    •  கல்வி
    • நீண்ட ஆயுள்
    • உண்மையான நண்பர்கள்
    • நிறைந்த செல்வங்கள்
    • என்றும் குறையாத புகழ்
    • வாக்கு மாறாதிருத்தல்
wpChatIcon
error: Content is protected !!