முதல் பருவம் அலகு-5 பாடக்குறிப்புகள்

அலகு – 5 பக்தி இலக்கியம்

திருநாவுக்கரசர்

  • இயற்பெயர்: மருள் நீக்கியார்
  • பெற்றோர் : புகழனார், மாதினியார்
  • அக்கா : திலகவதியார்
  • பிறந்த ஊர்: திருவாமூர்
  • இவர் பாடியவை4,5,6 திருமுறைகள்
  • சிறப்பு பெயர்கள்:
    • திருநாவுக்கரசர்,வாகீசர்,அப்பர்,ஆளுடைய அரசு,தாண்டக வேந்தர்,தருமசேனர்
  • சமண சமயத்திலிருந்து  சைவ சமயத்திற்கு மாற்றியவர்தமக்கை திலகவதியார்

பாடல் விளக்கம்

  • மலர் போன்ற சிவபெருமானின் திருவடிகளை அடைக்கலமாக அடைந்தமையால், நாம் யாருக்கும் அடிமையாவதில்லை. மரணத்தைத் தருகின்ற இயமனுக்கு அஞ்சுவதில்லை. நரகத்தில் புகுந்து துன்பமடைவதில்லை. பொய்யும் புரட்டும் இனி நம்மை அணுகுவதில்லை. என்றும் ஆனந்தமாக இருப்போம். நோய் என்பதையே அறியாது இருப்போம். வேறு யாரையும் பணிந்து நிற்க மாட்டோம். எந்நாளும் நமக்கு இன்பமே ஏற்படும். துன்பம் என்பதை நாம் அறிய மாட்டோம். யாருக்கும் அடிமையாகாதவனும், வெண்குழையைக் காதில் அணிந்த அரசனாகிய ஆதி சங்கரனுக்கு மட்டுமே நாம் அடிமையாக இருப்போம் என்று திருநாவுக்கரசர் பாடுகின்றார்.

மாணிக்கவாசகர்

  • இயற்பெயர் தெரியவில்லை
  • பெற்றோர் : சம்புபாதசாரியார்சிவஞானவதி
  • இவர் பாடியவை8 திருமுறை

சிறப்பு பெயர்கள்

  • அருள் வாசகர்
  • மணிவாசகர்
  • அழுது அடியடைந்த அன்பர்
  • தென்னவன் பிரமராயர்
  • மாணிக்கவாசகர் (இவர் பாடல்கள் ஒவ்வொன்றும் மாணிக்கம் போல் உள்ளதால் )

பாடல் விளக்கம்

  • திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க; திருவைந்தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க; இமைக்கும் நேரமுங் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க; திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னையாட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க; ஆகம வடிவாகி நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க; ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க.
  • மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி வெல்க; பிறவித் தளையை அறுக்கிற இறைவனது வீரக்கழலணிந்த திருவடிகள் வெல்க; தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாதவனாயிருப்பவனது தாமரை மலர் போலும் திருவடிகள் வெல்க; கை குவித்து வணங்குவோர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் வெல்க; கைகளைத் தலைமேல் உயர்த்தி வணங்குவோரை வாழ்வில் உயரச் செய்கின்ற சிறப்புடையவனது திருவடி வெல்க என்று இறைவனின் திருவடிகளை வாழ்த்துகின்றார் மாணிக்கவாசகர்.

 

முதலாழ்வார் மூவர்

  • வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு  ஆழ்வார்களுள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் முதலாழ்வார்கள் எனப் போற்றப்படுகின்றனர்.

பொய்கையாழ்வார்

  • பிறந்த ஊர் : காஞ்சிபுரம்பொய்கையில் அவதரித்தவர்,
  • காலம் : 7ம்நூற்றாண்டு
  • எழுதிய நூல் : முதல் திருவந்தாதி
  • பாடல்கள் : 100

பாடல் விளக்கம்

  • பெருமானே! இந்த உலகத்தையே அகல் விளக்காக அமைத்து, உலகத்தை வளைத்து நிற்கும் கடல் நீரை அவ்விளக்கிற்கு நெய்யாக வார்த்து, உலகிற்கு ஒளி தரும் கதிரவனை அவ்விளக்கின் சுடராகப் பொருத்தி, சுதர்சனம் என்ற சக்கரத்தைக் கையில் ஏந்திய உம்முடைய திருவடிக்கு என் சொல் மாலையைச் சூட்டுகின்றேன். துன்பக்கடலில் இருந்து என்னை விடுவிப்பாயாகஎன்று வேண்டுகின்றார்.

பூதத்தாழ்வார்

  • பிறந்த ஊர் : மகாபலிபுரம்
  • காலம் :  7ம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி
  • பாடல்கள் : 100

பாடல் விளக்கம்

  • பெருமானே! உம்மால் ஞானத் தமிழை அறிந்த நான் அன்பையே அகல் விளக்காக அமைத்து, உன் மீது கொண்ட ஆர்வத்தை நெய்யாக வார்த்து, என் சிந்தையைத் திரியாக அமைத்து ஞானத்தால் சுடர் ஏற்றுகின்றேன். உலகத்தின் இருளில் இருந்து என்னை விடுவிப்பாயாகஎன்று வேண்டுகின்றார்.

பேயாழ்வார்

  • பிறந்த ஊர் :  மயிலாப்பூர்
  • காலம்: ஏழாம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி
  • பாடல்கள் : 100

பாடல் விளக்கம்

  • பெருமானே! நான் இன்று கடலைப்போல கருத்த நிறம் கொண்ட உம் திருமுகத்தைக் கண்டேன். உம்முடைய திருமேனியைக் கண்டேன். உம் திருமார்பில் மலர்ந்திருக்கும் இலக்குமியைக் கண்டேன். உம்முடைய கையில் எதிரிகளை அழிக்கும் பொன்நிற சக்கரத்தையும், வலம்புரிச் சங்கையும் கண்டேன். அதனால் அருள் பெற்றேன்என்று மனமுருகிப் பாடுகின்றார்.

ஆண்டாள்

  • பிறந்த ஊர் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
  • வளர்ப்புத்தந்தை : பெரியாழ்வார்
  • காலம் : 9ம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி
  • பாடிய பாடல் : 173

திருப்பாவை – முதல் பாடல்

பாடல் விளக்கம்

  • அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

பகுத்தறிவு இலக்கியம்

திருமந்திரம் – திருமூலர்

  • திருமூலர் 63 நாயன்மார்களுள்  ஒருவரும், பதினெண் சித்தர்களுள்  ஒருவரும் ஆவார். எல்லாம் வல்ல பரம் பொருளாகிய இறைவருளால் பல ஆயிரம் ஆண்டுகள் யோக நிலையில் இருந்து தவம் செய்தவர். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். இவர் இயற்றிய திருமந்திரத்தைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.  இத்திருமந்திரம் ஒன்பது தந்திரங்களில் (இயல்கள்) மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.  மூலன் உரை செய்த மூவாயிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தியருளதுஎன்ற திருமூலரின் வாக்கினாலேயே இதனை அறியலாம். 
  • வேறு பெயர்கள்: திருமந்திர மாலை, மூவாயிரந்தமிழ் என்பன திருமந்திரத்தின் வேறு பெயர்கள் ஆகும்.

அன்புடைமை

பாடல் விளக்கம்

  • அன்பு என்று அழைக்கப்படுகின்ற உணர்வு, சிவன் என்று அழைக்கப்படுகின்ற இறைவன் இரண்டும் வேறு வேறு என்று கூறுபவர்கள் உண்மை ஞானம் அறியாதவர்கள். ஓர் அறிவு முதல் ஆறறிவு வரை உள்ள அனைத்து உயிர்கள் மீதும் செலுத்தப்படுகின்ற எதிர்ப்பார்ப்பில்லாத தூய்மையான அன்புதான் சிவம் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. இறைவனது திருவருளால் தமக்குள்ளும் பிறருக்குள்ளும் இருந்து வெளிப்படும் தூய்மையான அன்புதான் சிவம் என்பதை அறிந்து உணர்ந்தபின், அந்த அறிவு ஞானமே தூய்மையான அன்பு சிவமாக அவருடைய உள்ளத்தில் அமர்ந்து இருப்பார்.
  • பொன்னைக் காட்டிலும் ஒளி வீசுகின்ற புலித்தோலை ஆடையாக உடுத்தியிருப்பவன் சிவபெருமான். வானில் மின்னுகின்ற பிறைச் சந்திரனைத் தன் சடை முடியில் சூடியிருப்பவன். சுடுகாட்டில் எஞ்சியிருக்கும் சூடான சாம்பலைப் பொடி போல திருமேனி எங்கும் பூசிக் கொள்பவன். அநதச் சாம்பலின் பொடி மீது திருநடனம் ஆடுகின்றவன். அப்படிப்பட்ட இறைவனிடம் நான் கொண்டுள்ள அன்பும், இறைவன் என் மீது கொண்டுள்ள அன்பும் இரண்டறக் கலந்துள்ளது.
  • உள்ளம் உருக இறைவனைப் போற்றி வழிபடுங்கள். உடலை விட்டு உயிர் பிரியும் முன்பே அனைத்து உயிர்களின் மீதும் அன்பை செலுத்தி, அதன் மூலம் இறைவனைத் தேடுங்கள். அப்படிச் செய்தால், உயிர் உடலை விட்டுப் பிரிந்த பின்பும் தனது அளவில்லாத பெருங்கருணையைக் கொடுத்து இறைவன் நம்மோடு  இருப்பார்.
  • தானே சுயமாகத் தோன்றியவன். தம்மை அன்போடு வணங்கி வாழ்ந்த உயிர்கள் இறந்து விண்ணுலகம் செல்லும் காலம் வரை அவர்களோடு வழித்துணையாக வருபவன். கொன்றை மலர்களைத் தன் இடப்பாகத்தில் மாலையாக அணிந்திருப்பவன். அப்படிப்பட்ட சிவபெருமான் பேரன்பின் உருவமாக என்னுடன் கலந்து நிற்கின்றான்.
  • கொன்றை மலர்களைச் சூடியிருக்கின்றவனின் திருவடிகளை நான் கண்டு கொண்டேன். அறியாமையாகிய யானையைக் கதறும்படி பிளந்து அதன் தோலை உரித்துப் போர்வையாகத் தன் மேல் போர்த்திக் கொண்டனின் அழகிய கழல்களை நான் கண்டு கொண்டேன். தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் இறைவனின் திருடிகளை நான் கண்டு கொண்டேன். இறைவன் மீது நான் கொண்ட பேரன்பால் அழகிய கழல்களை அணிந்து அன்பு உருவமாக நிற்கின்ற சிவனின் திருமேனியை நான் கண்டு கொண்டேன்.

பட்டினத்தார்

  • இவர் பெருஞ்செல்வந்தராகத் திகழ்ந்தவர். அனைத்தையும் துறந்து ஞானியானவர். இளமை, செல்வம் ஆகியவை நிலையில்லாதவை என்று பாடியவர். பல சித்து விளையாட்டுகளைச் செய்தவர். சிதம்பரம், திருச்செங்கோடு, திருவிடைமருதூர், திருக்கழுக்குன்றம், திருக்காளத்தி ஆகிய இடங்களுக்குச் சென்று இறுதியில் திருவொற்றியூரில் சமாதியானவர்.

திருவிடைமருதூர்

பாடல் விளக்கம்

  • உள்ளத்தில் ஒழுக்கம் இல்லாமல் முற்றும் துறந்து விட்டேன் என்று பொய் பேசிக் கொண்டு காட்டில் வாழ்வதால் பயன் இல்லை. காற்றை சுவாசித்து உயிர் வாழ்வதாலும் பயன் இல்லை. கந்தல் துணிகளை உடுத்திக் கொண்டு, கையில் திருவோடு ஏந்தி பிறரிடம் இரந்து உண்டு வாழ்வதாலும் பயன் இல்லை. அவை யாவும் மற்றவர்களுக்காக போடப்படும் வேஷம்தான். ஆனால் இல்லறத்தில் இருந்து மனைவி மக்களுடன் வாழ்ந்தாலும், உள்ளத்தில் ஒழுக்கமாக இருப்பவனே இறைவனின் திருவடியை அடைவான். பேரின்பத்தைப் பெறுவான்.
  • வாழ்வதற்குரிய செல்வங்கள் நம்மை விட்டு நீங்கி விட்டால் பெற்ற தாயும் நமக்குப் பகையாவார். நம் வாழ்வின் பாதியாக விளங்கும் மனைவியும் பகையாவார். நம் மூலமாக இந்த உலகிற்கு வந்த பி்ள்ளைகளும் பகையாவார். உற்றார் உறவினர் அனைவரும் பகையாவர். இவர்கள் அனைவரும் நம்மை விட்டு நீங்கினாலும் சிவபெருமானின் பொன்னடிகளைப் போற்றிக் கொண்டே இருந்தால், அவரின் திருவடி நமக்கு எப்போதும் துணையாக இருக்கும். என் நெஞ்சே! அவருடைய திருவடிகளில் அன்பு செலுத்து. அதுவே உனக்கு இந்த உலகத்தின் ஆசைகளில் இருந்து விடுதலை தரும்.

கடுவெளிச்சித்தர்

  • கடு என்பதற்கு பெரிய என்று பொருள். கடுவெளி என்பது பரந்த வெளி. பரந்த வெளியாகிய மனதை நோக்கி, அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இவருடைய பாடல்கள் அமைந்துள்ளன. ஆகையால் கடுவெளிச்சித்தர் என்று அழைக்கப்படுகின்றார்.

பாடல் விளக்கம்

  • மனமே! உயிர்களைத் துன்புறுத்தும் பாவச் செயலைச் செய்யாதே. அப்படிப்பட்ட செயலைச் செய்வாயானால் எமன் உன் மீது கோபம் கொண்டு உயிரைக் கொண்டு சென்று விடுவான்.
  • ஒருவரை துன்பம் தரும் வார்த்தைகளால் சபிக்கக் கூடாது. சபிப்பதால் அவருக்கு விதிக்கப்பட்ட விதியை உன் சாபத்தால் மாற்ற முடியாது. எனவே கோபம் கொள்ளாதே! ஆசையைத் தூண்டுகின்ற எண்ணத்தைத் தூண்டாதே.
  • சூது என்பது சூதாட்டம். பொய் என்பது இல்லாத ஒன்றை உண்டு என்றும், உள்ளதை இல்லை என்றும் கூறுவதாகும். மோசம் என்பது பிறர் பொருளை அபகரிப்பதாகும். இவை மூன்றும் மனித வாழ்வைச் சீர்குலைக்கும். இவற்றைச் செய்பவர்கள் நரகத்தை அடைவார்கள், உறவுகள் அவர்களை விட்டுப் பிரிவார்கள். எனவே இறைவன்பால் பக்தி கொண்டு, செய்ந்நன்றி மறவாமல், அனைவரிடமும் நட்பு கொண்டு வாழ வேண்டும்.
  • தண்ணீரின் மேல் நீர்க்குமிழி தோன்றி உடனே அழிந்துவிடும். அதுபோல நம் உடலும் தோன்றியவுடன் அழிவது உறுதி. இந்த உண்மையை உணர்ந்து இந்த உலகின் மேல் பற்று இல்லாமல் இருப்பதே சிறந்தது.
  • ஓர் ஆணும் பெண்ணும் இறைவனை (குயவன்) வணங்கினர். அவர்களின் வேண்டுதலுக்கிணங்கி ஒரு குழந்தையை (தோண்டி) இறைவன் கொடுத்தார். அக்குழந்தையைப் பராமரிக்க மறந்து அதன் தந்தை ஆடிய ஆட்டத்தால் அந்தக் குழந்தை இறந்து விட்டது. எனவே இந்த உடல் அழிகின்ற தன்மை உடையது என்று உணர்ந்து இறைவனை வணங்க வேண்டும்.
  • யாரையும் இழிவாகப் பேசுதல் கூடாது. பொருளாசை, மண்ணாசை, பெண்ணாசை என்ற மூன்றும் பொல்லாதவை. இவற்றை விட்டு விட வேண்டும். சிவனை அன்பு கொண்டு வணங்கினால் எமன் நம்மை நெருங்குவதில்லை.
  • நன்மையான வழிகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். எந்நேரமும் இறைவனை நினைத்திருக்க வேண்டும். அறிவுள்ள பெரியோருடன் கூடியிருக்க வேண்டும். வள்ளலாகிய இறைவனை வணங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
  • உத்தமர்களான பெரியோர்களின் உறவைக் காத்துக் கொள்ள வேண்டும். தருமங்கள் முப்பத்திரண்டையும் தவறாது செய்ய வேண்டும். தீமையானவற்றைப் பின்பற்றாது இருக்க வேண்டும். பொய் பேசுதல், கோள் சொல்லுதல் இவற்றை நீக்க வேண்டும்.
  • வேதங்களில் கூறப்பட்டுள்ள நன்மையான வழிகளைப் பின்பற்ற வேண்டும். பெரியோர்கள் காட்டிய வழிகளில் விருப்பமுடன் செல்ல வேண்டும். மன அமைதி தரும் வார்த்தைகளை மட்டும் பேச வேண்டும். கொடுமையான கோபத்தை அழிக்க வேண்டும்.
  • ஒரு பொருளையும் பிறரிடம் இருந்து இரவாமல் வாழ வேண்டும். பெண்களின் மீது ஆசை கொண்டு அழிந்து போகாமல் நம்மைக் காக்க வேண்டும். இறைவனின் மீது பற்று கொண்டு மனம் மாறாமல் பக்தியுடன் செயல்பட வேண்டும்.
  • மெய்ஞ்ஞானப்பாதையாகிய அட்டாங்க யோகம் பயில வேண்டும். சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவற்றைப் பயிலுதல் உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை தரும். இவற்றைக் கற்றால் மரணமிலாப் பெருவாழ்வு அடையலாம்.

இராவண காவியம்

  • இராவணகாவியத்தை இயற்றியவர் புலவர் குழந்தை. இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க் காண்டம் – என ஐந்து காண்டங்களையும், 57 படலங்களையும், 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. இராவணனைக் காவியத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் 1906 ஆம் ஆண்டில் முத்துசாமிக் கவுண்டருக்கும், சின்னம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இயற்கையாகவே இளமையிலேயே கவி பாடும் ஆற்றல் உடையவராகத் திகழ்ந்தார். ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் 39 ஆண்டுகள் பணியாற்றினார். தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். விதவை மணம், கலப்பு மணம், சீர்த்திருத்த மணம் ஆகியவற்றை முன்னிறுத்தி நடத்தினார். வேளாண் வேதம் என்னும் மாத இதழை நடத்தினார்.

தாய்மொழிப்படலம்

பாடல் விளக்கம்

  • இராவணனின் இலங்கை சிறப்புகள் பல பொருந்திய நாடு. கல்வி கேள்விகளால் அறிவு பெற்ற மக்கள் நிரம்பிய நாடு. அந்நாட்டில் கல்வி பயிலும் ஏடுகள் இல்லாமல் ஒருவரையும் பார்க்க இயலாது. இயல், இசை கற்காதவர் அந்த நாட்டில் இல்லை. தமிழிசையைப் பாடி மகிழாதவர் இல்லை. கல்விக் கூடங்களுக்குச் சென்று கல்வியறிவு பெறாதவர்கள் இல்லை. தமிழிசையைப் போற்றி ஆடல் தொழிலை மேற்கொள்ளாதவரும் இல்லை. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழின் பயனை அடையாதவர்கள் இல்லை. நற்றமிழின் வளர்ச்சியை விரும்பாதவர்களும் இல்லை என்று அந்நாட்டின் சிறப்பு கூறப்படுகின்றது.
  • அந்நாட்டு மக்கள் தமிழைத் தங்கள் உயிராக மதித்தனர். தமிழ் தங்களின் இரு கண்களில் இருந்து வருகின்ற பார்வை என்றும், மானத்தைக் காக்கின்ற போர்வை என்றும், உயிரைக் காக்கும் கருவி என்றும், உள்ளத்தின் சிந்தனை என்றும், செல்வங்கள் பொதிந்திருக்கின்ற பெட்டி என்றும், உயர்வின் உறைவிடம் என்றும் மதித்து தமிழைப் போற்றி வாழ்ந்தனர்.
  • அந்நாட்டில் புலவர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர். நகர் முழுவதும் பள்ளிக்கூடங்கள் காணப்பட்டன. வீடுகள் யாவும் தமிழ்த்தாய் உறைகின்ற கோயில்களாகக் காட்சியளித்தன. கொண்டாடும் விழாக்கள் அனைத்திலும் தமிழின் மேன்மைகள் ஓங்கின. வயல்வெளிகளிலும் தமிழ்ப்பாடல்கள் ஒலித்தன. தமிழ்க் கூத்துகள் மக்களை மகிழ்வித்தன. திரும்பிய திசையெல்லாம் தமிழ்ச்சொற்கள் ஒலித்தன. வண்டமிழ்ச் சிறப்பினை அறிந்த மக்கள் நிரம்பிய நாடாகக் காட்சியளித்தது.
  • தமிழ் மொழியைப் பயிலாத நாட்களில் அங்குள்ள மக்கள் யாரும் உணவை உண்பதில்லை. பொன் பட்டாடைகளை உடுத்துவதில்லை. கரும்பு, கற்கண்டுச் சுவையினை எண்ணுவதில்லை. செம்பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களைப் பயன்படுத்துவதில்லை. வண்ணப் பூக்களைச் சூடுவதில்லை. நறுமணம் வீசும் சாந்தத்தைப் பயன்படுத்துவதில்லை. யாழின் நரம்புகளை மீட்டுவதில்லை.
  • தமிழைப் பாடுபவர்களுக்கு, தமிழில் உரையாற்றுபவர்களுக்குகு, நூலைப் படித்து உரை செய்கின்றவர்களுக்கு நாடு, நகரத்தோடு அவர் விரும்பிய பொருட்களைக் கொடுத்து அவர்களைத் தங்கள் நாட்டிற்கு வரவழைத்து செந்தமிழ் வளர்த்தனர் அம்மக்கள்.

நாடெல்லாம் புலவர் கூட்டம் நகரம் எல்லாம் பள்ளி ஈட்டம்

  • புலவர் குழந்தை அவர்கள் இராவண காவியத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சியையும் தமிழ் பற்றாளர்களின் சீரிய முயற்சியின் காரணமாக தமிழ் மொழி வளர்ச்சி அடைந்துள்ள நிலையினை பற்றி கூறும்போது,  “நற்றமிழாகிய தமிழ் மொழி வளர்ச்சி அடைந்துள்ளதால், இங்குள்ள மக்களின் கைகளில் ஏடுகள் ஆகிய புத்தகங்கள் இல்லாமல் இல்லை. இங்கு இயல் இசை கல்லாதவர்கள் இல்லை. பாடும் புலமைப் பெறாதவர்கள் இல்லை. பள்ளிக்குச் சென்று நல்லறிவு பெறாதவர்கள் இல்லை” எனக் கூறுகிறார்.
  • மேலும் தமிழ் மொழியை வளர்த்த சான்றோர்கள், தமிழ் மொழியைத் தங்கள் இருவிழிகளாகப் போற்றினர். அவர்கள் பார்வைக்குத் தெரிந்தது அனைத்தும் தமிழ் உருவங்களாக விளங்கின. அவர்களுக்கு தமிழ் மொழியே காப்பாக அமைந்தது. அவர்கள் தமிழ் மொழியை தனது உரிமையாக கருதி வாழ்ந்தார்கள். அதன் காரணமாக,

நாடெல்லாம் புலவர் கூட்டம்

நகரெல்லாம் பள்ளி ஈட்டம்

வீடெல்லாம் தமிழ்த்தாய்க் கோட்டம்

விழாவெல்லாம் தமிழ் கொண்டாட்டம்

என்ற நிலையில் தமிழ் மக்களின் வாழ்வோடு தமிழ் மொழி இணைந்து சிறப்படைந்தது.

தமிழ் மொழி பயிலாக்காலே

  • தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் தமிழ் மொழி மீது மிகுந்த பற்று கொண்டவர்கள். அவர்களுக்கு தமிழ் மொழியை கற்கும் நிலை கிடைக்கவில்லை என்றால் அவர்கள் ” உணவினைப் பெரிதாக எண்ண மாட்டார்கள். பொன்னாளாகிய பட்டாடைகளை விரும்ப மாட்டார்கள். பொன் நகைகளை விரும்பி அணிய மாட்டார்கள். மலர் மாலைகளைச் சூட மாட்டார்கள். இனிமையான இசையினை கொடுக்கும் யாழை மீட்ட மாட்டார்கள். ” என புலவர் குழந்தை கூறுகிறார்.
  • மேலும், தமிழறிந்த சான்றோர்கள் பலர், பாடல்கள் ஏற்றியும் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் உரைகளை எழுதியும் தமிழ் மொழியினை வளர்த்தார்கள். அவ்வாறு வளர்க்கப்பட்ட செந்தமிழே நம் தாய்மொழி. எனப் புலவர் குழந்தை அவர்கள் தாய்மொழிப் படலத்தில் தமிழ் மொழியின் சிறப்புகளைக் கூறியுள்ளார்.

முதல் பருவம் – அலகு-4 பாடக்குறிப்புகள்

1.சிலப்பதிகாரம்

  • இயற்றியவர்- இளங்கோவடிகள்
  • சமயம் சமணம்

பெயர்க்காரணம்:

  • காப்பியத்தின் கதை சிலம்பினைக் மையமாகக் கொண்டு அமைந்ததால் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது.

வேறு பெயர்கள்

  • குடிமக்கள் காப்பியம்
  • முத்தமிழ் காப்பியம்
  • உரையிடையிட்ட பாட்டுடை செய்யுள்

நூல் அமைப்பு

  • Sபுகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் கொண்டது.

வழக்குரைகாதை

  • பாண்டிமாதேவியின் தீக்கனவு
  • கோப்பெருந்தேவி தான் கண்ட தீக்கனவைத் தோழியிடம் கூறிக் கொண்டிருந்தாள். தோழி! நம் வேந்தனது வெண்கொற்றக் குடையும் செங்கோலும் கீழே விழும்படியாகவும், அரண்மனை வாயிலில் இடைவிடாது மணியின் ஓசை ஒலிப்பதாகவும் கனவு கண்டேன். எட்டுத் திசைகளும் அப்போது அதிர்வுற்றன. சூரியனை இருள் விழுங்கவும் கண்டேன். இரவு நேரத்தில் வானவில் தோன்றவும் கண்டேன். ஆதலால் நமக்கு வரக்கூடிய துன்பம் ஒன்று உள்ளது. எனவே மன்னனிடம் சென்று கனவைக் கூறுவோம்என்று கூறி மன்னனை நாடிச் சென்றாள்.
  • கோப்பெருந்தேவியின் வருகை
      • கோப்பெருந்தேவி மன்னனை நாடிச் செல்லும்போது மகளிர் பலர் தேவியைச் சூழ்ந்து வந்தனர். அவர்களில் சிலர் கண்ணாடி ஏந்தி வர, சிலர் அணிகலன்களை ஏந்தி வர, சிலர் அழகிய கலன்களை ஏந்தி வர, சிலர் புதிய நூலாடையையும், பட்டாடையையும் ஏந்தி வர, சிலர் வெற்றிலைகளை ஏந்தி வர, சிலர் வண்ணமும் சுண்ணமும் கத்தூரி கலந்த சந்தனக் குழம்பும் ஏந்தி வர, சிலர் தொடையல் மாலை, கவரி, தூபம் ஆகியனவற்றையும் ஏந்தி வந்தனர். கூன் உடைய மகளிரும், குருடும், ஊமையருமான குற்றவேல் செய்யும் மகளிரும் அரசியைச் சூழ்ந்து வந்தனர். நரையுடைய முதுமகளிர் பலர், “கடல் சூழ்ந்த இவ்வுலகத்தினைக் காக்கும் பாண்டியனுடைய தேவியே நீடு வாழ்வாயாகஎன வாழ்த்தினர். தோழியரும் காவல் மகளிரும், தேவி அடியெடுத்து வைக்குந்தோறும் புகழ்ந்து போற்றி வந்தனர். தன் பரிவாரங்களுடன் சென்ற தேவி தன் கணவனிடம் தான் கண்ட கனவின் தன்மையை எடுத்துச் சொல்ல, அதனைக் கேட்டுக் கொண்டு பாண்டியன் நெடுஞ்செழியன் அமர்ந்திருந்தான்.
  • கண்ணகி வாயிற்காப்போனிடம் கூறியது
      • அப்போது சினத்துடன் அங்கு வந்த கண்ணகி, “வாயிற்காவலனே, அறிவு இழந்து நீதி நெறி தவறிய மன்னனின் வாயிற்காவலனே! பரல்களை உடைய சிலம்பு ஒன்றினைக் கையிலே ஏந்தியவளாய், தன் கணவனை இழந்த ஒருத்தி நம் கடைவாயிலில் நிற்கின்றாள் என்று உன் மன்னனிடம் சென்று அறிவிப்பாயாகஎன்று கூறினாள்.
  • வாயிற்காவலன் கூற்று
      • வாயிற்காப்போன் மன்னனிடம் சென்று, “கொற்கை நகரத்து வேந்தனே வாழ்க! தென்திசையில் உள்ள பொதிய மலைக்குத் தலைவனே வாழ்க! செழியனே வாழ்க! தென்னவனே வாழ்க! பழிச்சொல் இல்லாத பாண்டிய மன்னனே வாழ்க! குருதிக் கொட்டும் தலையைப் பீடமாகக் கொண்டவளும், வேற்படையைக் கையில் ஏந்தியவளுமாகிய கொற்றவை அல்லள்! ஏழு கன்னியரில் இளையவளான பிடாரியும் அல்லள்! சிவபெருமானை நடனமாட வைத்த பத்திரகாளியும் அல்லள். தாருகாசுரனுடைய அகன்ற மார்பினைப் பிளந்த துர்க்கையும் அல்லள். பகைமை கொண்டவள் போலவும், உள்ளத்தில் மிகுந்த சினம் கொண்டவள் போலவும் உள்ள அவள் கையில் பொற்சிலம்பு ஒன்றினை ஏந்தியவளாய், கணவனை இழந்தவளாய்  நம் வாயிற்புறத்தில் வந்து நிற்கின்றாள்என்று கூறினான். அத்தகையவளை இங்கே அழைத்து வருக என ஆணையிட்டான் மன்னன்.
  • கண்ணகி வழக்குரைத்த நிலை
      • வாயிலோன் வழிகாட்ட கண்ணகி உள்ளே சென்றாள். அவளைக் கண்ட பாண்டியன், “கண்ணீர் சிந்தும் கண்களுடன் என் முன் வந்திருப்பவளே! நீ யார்? என வினவினான்.
      • கண்ணகி பெருஞ்சீற்றம் கொண்டு, “ஆராய்ந்து அறியாத மன்னனே! நா்ன என்னைப் பற்றிக் கூறுகிறேன் கேட்பாயாக. தேவர்களும் வியப்படையுமாறு புறாவின் துன்பத்தைத் தீர்த்த சிபி என்ற மன்னனும், தன் கன்றை இழந்த பசுவின் துன்பத்தைக் கண்டு ஆற்றாமல், அக்கன்று இறப்பதற்குக் காரணமான தன் மகனைத் தன்னுடைய தேர்ச்சக்கரத்தைக் கொண்டு தண்டித்த மனுநீதிச் சோழனும் வாழ்ந்த புகார் நகரமே என் ஊராகும். அவ்வூரில் புகழ் பெற்று விளங்கும் பெருங்குடி என்னும் வணிகர் மரபில் வாழும் மாசாத்துவான் என்பவனின் மகனாகப் பிறந்து, வாழ வேண்டும் என்ற விருப்பம் கொண்டு, ஊழ்வினை துரத்த, உன் மதுரை மாநகருக்கு வந்து, என்னுடைய கால் சிலம்பினை விற்பதற்கு விரும்பி, உன்னால் கள்வன் என்று குற்றம் சுமத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி நான். என் பெயர் கண்ணகிஎன்று கூறினாள்.
  • கண்ணகி வழக்கில் வென்றமை
      • கண்ணகியின் சொல்  கேட்ட பாண்டிய மன்னன், “பெண் தெய்வமே கள்வனைக் கொல்லுதல் கொடுங்கோன்மை அன்று. முறை தவறாத அரச நீதியே ஆகும்என்றான். அதற்குக் கண்ணகி, “நல்ல முறையில் நீதி அறிந்து செயலாற்றாத மன்னனே! என் காலில் உள்ள சிலம்பு மாணிக்கக் கற்களைப் பரல்களாகக் கொண்டதுஎன்றாள். பாண்டிய மன்னன், “என் மனைவியின் கால் சிலம்பில் பரல்களாக இருப்பவை முத்துக்கள்என்று கூறினான். பின்பு கோவலனிடமிருந்து பெறப்பட்ட சிலம்பைக் கொண்டு வாருங்கள்என்று கட்டளையிட்டு வரவழைத்து கண்ணகியின் முன் வைத்தான். உடனே கண்ணகி அவர்கள் வைத்த சிலம்பினை எடுத்து உடைத்தாள். அச்சிலம்பிலிருந்து மாணிக்கப் பரல் ஒன்று மன்னனின் முகத்திலும் வாயிலும் தெறித்து விழுந்தன.
  • பாண்டியன் தன் தவறுணர்ந்து இறத்தல்
    • அவ்வாறு தெறித்த மாணிக்கப் பரல் கண்டு திடுக்கிட்ட வேந்தன் வெண்கொற்றக்குடை தாழவும், செங்கோல் வளையவும், பொற்கொல்லன் பொய்யுரை கேட்டு நீதி தவறிய நான் அரசன் இல்லை. கோவலன் சிலம்பை என்னுடையதாகக் கொண்டதால் நானே கள்வன்”, எனக்கூறி உள்ளம் குமுறினான். துடித்தான். மக்களைக் காக்கும் பாண்டிய நாட்டு ஆட்சிக்கு என் காரணமாகத் தவறு நேர்ந்து விட்டதே என்று பதறினான். கெடுக என் ஆயுள்எனத் தனக்குத் தானே தண்டனை விதித்துக் கொண்டு மயங்கிக் கீழே விழுந்து இறந்து போனான். கணவனின் மரணம் கண்டு கோப்பெருந்தேவி உள்ளம் நிலை குலைந்து உடல் நடுங்கினாள். தாய் தந்தையரை இழந்தவர்க்கு அம்முறை சொல்லிப் பிறரைக் காட்டி ஆறுதல் கூற முடியும். ஆனால், கணவனை இழந்தோர்க்கு அங்ஙனம் காட்டலாகாதுஎனக் கருதித் தன் கணனின் கால்களைத் தொட்டு வணங்கி விழுந்து இறந்து போனாள்.

2.மணிமேகலை

  • இயற்றியவர்– சீத்தலை சாத்தனார்
  • சமயம்பௌத்தம்

பெயர்க்காரணம்

  • காப்பியத்தின் கதை முழுதும் காப்பியத் தலைவி மணிமேகலையை மையமாகக் கொண்டு பாடப்பட்டதால்மணிமேகலை எனப் பெயர் பெற்றது.

வேறு பெயர்கள்

  • இரட்டைக் காப்பியங்கள் (சிலப்பதிகாரம்,மணிமேகலை)
  • இந்நூலின் பதிகம் இந்நூலினை மணிமேகலை துறவு என்று குறிப்பிடுகிறது.

நூல் அமைப்பு

  • முப்பது காதைகள் கொண்டது.

பாத்திரம் பெற்ற காதை

  • மணிபல்லவத்தீவின் காவல் தெய்வமாகிய தீவத்திலகை, மணிமேகலையை அறிந்து கொண்டு, அவளிடம் இங்குள்ள கோமுகிப் பொய்கையில் ஆபுத்திரனால் விடப்பட்ட அமுதசுரபி என்ற பாத்திரம் உன் கைகளை வந்து அடையும். அந்தப் பாத்திரத்தில் வற்றாமல் உணவு சுரந்து கொண்டே இருக்கும். அதைக் கொண்டு நீ பசித்தவர்களுக்கு உணவு தந்து காப்பாய்” என்று கூறியது. அத்தெய்வம் கூறியவாறு மணிமேகலையிடம் அமுதசுரபி வந்தடைந்தது. மணிமேலை தீவத்திலகையிடம் விடை பெற்றுக் கொண்டு வான் வழி பறந்து வந்து புகார் நகரை அடைகின்றாள். பின்பு அறவண அடிகளைக் காணச் செல்கின்றாள். இந்தச் செய்திகளை இக்காதை விவரிக்கின்றது.

நீயார் என வினவல்

  • மணிமேகலா தெய்வம் மந்திரம் சொல்லித் தந்து சென்ற பின்னர் மணிமேகலை மணிபல்லவத் தீவைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டாள். வெள்ளை மணல் குன்றுகளையும், அழகிய பூங்காக்களையும், குளிர்ச்சியான மலர்கள் பூத்திருக்கும் தெப்பங்களையும் சுற்றிப் பார்த்துக் கொண்டே பத்து மைல் தூரம் சென்றாள். அப்போது தெய்வத் திருக்கோலத்துடன் தீவதிலகை என்பவள் எதிரே தோன்றினாள். “படகு கவிழ்ந்து தப்பி வந்தவளைப் போல இங்கு வந்துள்ள தூயவளே நீ யார்?” என்று மணிமேகலையைப் பார்த்துக் கேட்டாள்.

மணிமேலை பதில் கூறல்

  • மணிமேகைலை தீவதிலகையிடம், “யார் நீ என்று என்னைக் கேட்டாய்? எந்தப் பிறப்பைப் பற்றிய கேள்வி இது? தங்கக் கொடி போன்றவளே! நான் சொல்லப் போவதைப் பொறுமையாகக் கேட்பாயாக! முற்பிறப்பில் நில உலகை ஆட்சி செய்த அரசனான இராகுலன் மனைவி நான். என் பெயர் இலக்குமி. இந்தப் பிறவியில் நாட்டியக் கலைச்செல்வி மாதவியின் மகள். என் பெயர் மணிமேகலை. மணிமேகலா தெய்வம் என்னைக் கொண்டு வந்து இங்கு சேர்த்தது. புகழ் பெற்ற இந்தப் பீடிகையால் என் பழைய பிறப்பைப் பற்றித் தெரிந்து கொண்டேன். இது நான் அடைந்த பயன். பூங்கொடியே நீ யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?” என மணிமேலை கேட்டாள்.

நான் தீவதிலகை

  • மணிமேகலை தனது முற்பிற்பினை அறிந்ததை தீவதிலகை அறிந்தாள். நல்ல முறையில் சில செய்திகளைக் கூறலானாள். “இந்த மணிபல்லவத் தீவின் அருகில் இரத்தினத் தீவகம் உள்ளது. அதில் உள்ள சமந்தகம் என்ற மலை உச்சியின் மேல், தன்னைச் சேர்ந்தவர்களைப் பிறவிக் கடலில் இருந்து கரை சேர்க்கும் புத்தரின் பாத பீடிகை உள்ளது. (சமந்தகம் என்பது இலங்கையில் உள்ள சிவனொளி பாதமலை) அதனை வலம் செய்து இங்கு வந்தேன். குற்றிமின்றிக் காட்சி தரும் இந்தப் பாத பீடத்தை இந்திரனின் ஆணையால் காவல் செய்து வருகிறேன். என் பெயர் தீவதிலகை” என்று கூறினாள்.

தீவதிலகை பாராட்டுதல்

  • அறநெறிகளின் தலைவன் புத்தபகவான். அவர் கூறிய புகழ் நிறைந்த நல்லறத்தில் தவறாக நோன்பு உடையவரே, இந்தத் திருவடித்தாமரைப் பீடிகையைப் பார்ப்பதற்கும், வணங்குவதற்கும் உரியவர் ஆவர். அப்படிப் பார்த்து வணங்கிய பின்னர் அவர்கள் தம்முடைய பழம்பிறப்பை உணர்வார்கள். அத்தகைய சிறப்புக்கு உரியவர்கள் இவ்வுலகில் அரியவர். அத்தகையவரே தருமநெறிகளைக் கேட்பதற்கும் உரியர். அத்தன்மை மிக்க அணியிழையே! இன்னும் கேட்பாயாக!

அமுத சுரபி

  • “மிக்க புகழுடைய இந்தப் பீடிகையின் முன்பு தெரிவது கோமுகி என்ற பொய்கையாகும். நீர் நிறைந்துள்ள இந்தப் பொய்கையில் பெரிய குவளை மலர்களும் நெய்தல் மலர்களும் அழகாகப் பூத்துக் கலந்து பொலிவுடன் திகழ்கின்றன.வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திரத்தன்று (பௌர்ணமி நாள்) புத்தர்பிரான் தோன்றிய அந்த நாளில் ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்ற பேரும் புகழும் மிக்க பாத்திரம் வெளிப்பட்டுத் தோன்றும்.

அந்த நாள் இந்த நாளே

  • அந்த நல்ல நாளான வைகாசிப் பௌர்ணமி இன்றுதான். அந்த அரிய அமுதசுரபி பாத்திரம் தோன்றும் நேரமும் இதுதான். நேரிழையே! அதோ அது உன்னிடம் வருவது போலத் தெரிகிறது. இந்தப் பாத்திரத்தில் இடும் உணவானது ஆருயிர் மருந்தாகும். அது எடுக்க எடுக்கக் குறையாது பெருகும். வாங்குபவர் கைகள் வலிக்குமே அன்றி பாத்திரத்தில் குறையாது. மணக்கின்ற மாலை அணிந்த பெண்ணே! அறவண அடிகளிடம் இப்பாத்திரத்தின் வரலாற்றைத் தெரிந்து கொள்வாய்” என்று தீவதிலகை கூறினாள்.

அமுதசுரபி கிடைத்தது

  • தீவதிலகை கூறியது கேட்ட மணிமேகலை, அதனை அடைய விரும்பி அந்த புகழ் மிக்க பீடத்தை தீவதிலகையுடன் வலம் வந்து வணங்கினாள். பீடிகையின் எதிரே நின்றாள். அப்பது எல்லோரும் வணங்கத்தக்க மரபினை உடைய அமுதசுரபி பாத்திரம் அந்தப் பொய்கையில் இருந்து எழுந்து வந்து, மணிமேலை கைகளில் சென்று சேர்ந்தது. அமுத சுரபியைப் பெற்ற மணிமேகலை பெரிதும் மகிழ்ந்தாள்.

புத்த பகவானை வணங்கினாள்

  • மகிழ்ந்த மணிமேகலை,“மாறனை வெற்றி கொள்ளும் வீரனே! தீய வழிகளான வாழ்வின் பகைகளை நீக்கியவனே! மற்றவர்களுக்குத் தரும வழி வாய்ப்பதற்கு முயலும் பெரியோனே! சுவர்க்க வாழ்வினை அடைய விரும்பாத பழையோனே! மக்களது எண்ணங்கள் பின்னடைய எட்டாத மேல்நிலை அடைந்து இருப்பவனே! உயிர்களுக்கு அறிவுக் கண்களை அளித்த மெய் உணர்வு உடையோனே! தீமை தரும் சொற்களைக் கேட்க மறுக்கும் காதுகளை உடையவனே! உண்மை மட்டுமே பேசும் நாவினை உடையவனே! நரகர் துன்பத்தைப் போக்க உடனே அங்கு சென்றவனே! உனது மலர்ப் பாதங்களை வணங்குவேன் அல்லாமல் வாழ்த்துவது என் நாவில் அடங்காத செயலாகும்” என்று கூறி புத்த பகவானைப் போற்றி வணங்கினாள் மணிமேகலை.

பசி தீர்க்கும் பணி

  • புத்த பகவானை மணிமேகலை வணங்கிப் போற்றியதைக் கண்ட தீவதிலகையும் போதிமரத்தின் அடியில் அமைந்துள்ள தேவனின் திருவடிகளை வணங்கினாள். பின் மணிமேகலையைப் பார்த்து, “பசியாகிய நோய் இருக்கிறதே அது மேல்குடியில் பிறந்த தகுதியை அழித்து விடும். தூய எண்ணங்களைச் சிதைத்து விடும். கல்வி என்ற பெரும் புணையையும் நீக்கிவிடும். நாணமாகிய அணியையும் போக்கிவிடும். பெருமையான அழகினைச் சீர்குலைக்கும். மனைவியோடு அடுத்தவர் வாசலில் பிச்சை எடுக்க நிறுத்திவிடும். இப்படியான பசி என்ற நோயினை நீக்க வேண்டும். அது ஒரு பாவி. அதனை விரட்டி அடிக்க வேண்டும். அப்படி நீக்கியவர்களின் புகழை அளவிட முடியாது.

பசியால் நாயினைத் தின்றவர்

  • புல்லும் மரங்களும் வெம்மையாலே கருகிப் புகைந்து பொங்கின. அனல் கொதித்தது. பசியினாலே உயிரினங்கள் அழியுமாறு மழை வளம் குன்றிப் போனது. அரச பதவியை விட்டு மறைகளை ஓதி துறவு மேற்கொண்ட அந்தண விசுவாமித்திர முனிவன், பசியால் எல்லா இடங்களும் சுற்றித் திரிந்தான். கொடிதான இந்தப் பசியைப் போக்க ஏதும் கிடைக்காமல் நாயின் சதையைத் தின்றான் என்றால் பசியின் கொடுமையை என்னவென்று சொல்வது? தின்பதற்கு முன் தேவபலி செய்ததாலே இந்திரன் தோன்றி மழைவளம் பெருகச் செய்தான். விளை பொருள்கள் மலிந்தன. மண் உயிர்களும் பெருகின.

உயிர் அளிப்பவர் யார்?

  • கைம்மாறு செய்யும் தகுதி உள்ளவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுப்பவர், அறத்தை விலைக்கு விற்பவர்கள் ஆவர். இல்லாத ஏழை மக்களின் பசியை நீக்குவோர்தாம் மேன்மையான அறநெறி வாழ்க்கை வாழ்பவர்கள். இந்த உலகத்தில் வாழ்பவர்களுக்கெல்லாம் உணவு தருபவர்களே உயிர் தந்தவர்கள் ஆவர். நீயும் அப்படிப்பட்ட உயிர் தரும் தரும வழியை உறுதியாக மேற்கொண்டாய். கலக்கமற்ற நல்லறத்தினை அறிந்து கொண்டாய்” என்று தீவதிலகை மணிமேகலையிடம் கூறினாள்.

அறம் செய்த பயன்

  • இதைக் கேட்ட மணிமேகலை,“முன்பிறப்பிலே என் கணவனான இராகுலன் திட்டிவிடம் என்ற பாம்பு தீண்ட உயிர் விட்டான். அப்போது நானும் அவனோடு சேர்ந்து தீக்குளிக்க உடல் வெந்தது. உணர்வுகள் நீங்கின. அப்போது வெயில் மிகுந்த உச்சிவேளையில் வந்து தோன்றிய சாது சக்கரமுனிவனுக்கு முன்னர் உணவு தந்ததுபோல கனவு மயக்கம் அடைந்தேன். என் உயிரும் பிரிந்தது. அந்தக் கனவின் காட்சியே நினைவின் பயனாய் அறப்பயனாகி ஆருயிர்களைக் காக்கும் மருந்தாக அமுதசுரபி எனக்குக் கிடைத்தது”.

தாய்போல் காப்பேன்

  • “சம்புத்தீவு என்கிற இப்பெரிய நாவலந்தீவிலே தரும நெறிகளை விதைத்து அந்த விளைவினைச் செல்வமாக அனுபவிப்போர் சிலராவர். கந்தலான துணி உடையை உடுத்திக் கொண்டு பசி துன்புறுத்துவதால் வருத்தப்பட்டு, அதிக வெயில் என்று வெறுக்காமலும், மழை அதிகம் என்று சோம்பித் திரியாமலும், செல்வந்தர் வீட்டு வாசல்களில் சென்று நின்று துன்பம் அதிகமாவதால் முன்பிறப்பில் செய்த தீவினை போலும் என எண்ணி அயர்வோர் பலராவர். பெற்ற குழந்தையின் பசியால் வாடிய முகம் கண்டு இரங்கி சுவையான பாலைச் சுரப்பவள் தாய். அந்தத் தாயின் கொங்கைகள் போல சுரந்து உணவளிப்பது இந்த தெய்விகப் பாத்திரம். இந்தப் பாத்திரத்தின் உள்ளே இட்ட அரிய உயிர் மருந்தாகிய உணவு பசியால் வாடிய ஏழைகளின் முகத்தைக் கண்டதும் சுரத்தலைக் காணும் விருப்பமுடையவள் நான்” எனக் கூறினாள் மணிமேகலை.

வானத்தில் பறந்தாள்

  • “அதன் திறத்தினை உன்னிடம் கூற நான் மறந்து விட்டேன். நீ எடுத்துக் கூறினாய். அறமே சாட்சியாக அருள் சுரந்து அது அனைவருக்கும் உணவு தரும். சிறந்தவர்களுக்குத்தான் அது உணவு தரும். அதன் பயனை நீ நன்றாக அறிந்துள்ளாய். தரும வழியில் மற்றவர்களுக்கு உதவவும் தயாராக இருக்கிறாய்! ஆகவே மணிபல்லவம் விட்டு உனது ஊருக்குச் செல்வாயாக!” என்றாள் தீவதிலகை. மணிமேகலை அவளது திருவடிகளில் விழுந்து வணங்கி விடை பெற்றாள். அமுதசுரபியைத் தன் மலர் போன்ற கையில் ஏந்தி மேலே எழுந்து வானத்தில் பறந்து புகார் நகர் நோக்கிச் சென்றாள்.

பழைய பிறப்பைக் கூறினாள்

  • “சொன்ன சொல் மாறாத மணிமேகலா தெய்வம் கூறிய ஏழாம் நாளும் வந்தது. என் மகள் மணிமேகலை வரவில்லையே, தெய்வம் கூடப் பொய் சொல்லுமா?” என நினைத்து வருந்தினாள் மாதவி. அப்போது அவர்கள் முன் வானிலிருந்து இறங்கித் தோன்றினாள் மணிமேகலை. மாதவி சுதமதி ஆகியோர் கவலை நீங்கினர். மணிமேகலை அவர்களிடம் ஓர் அரிய செய்தியைக் கூறினாள். “இரவிவன்மனின் பெருமை மிக்க புதல்வியே! குதிரைப் படைகளை உடைய துச்சயன் மனைவியே! அமுதபதியின் வயிற்றில் பிறந்து அப்போது எனக்குத் தமக்கையராக இருந்த தாரையும் வீரையும் ஆகிய நீங்கள் இப்பிறப்பில் எனக்குத் தாயார்களாக ஆனீர்கள்! உமது திருவடிகளை வணங்குகிறேன்” என்று கூறிய மணிமேலை, மாதவி சுதமதி இருவரையும் வணங்கினாள். (சுதமதி மாதவியின் தோழி. மணிமேகலைக்குச் செவிலித்தாய். ஆகவே இருவரையும் தாய் என்று கூறினாள் மணிமேகலை).

அறவண அடிகள் திருவடி தொழுவோம்

  • “உங்கள் இருவருக்கும் இந்த மானிடப் பிறப்பிலேயே தீயவினைகளைத் துடைத்து நற்பேறு எய்தும் வாய்ப்பு கிடைக்கும். அதற்கான தவநெறி முறைகளை அறவண அடிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்வீர். உங்கள் பிறவிப் பயன் இதுவே ஆகும். இதோ இந்தப் புகழ் மிக்க பாத்திரம் அமுதசுரபியாகும். இதனை நீங்களும் வணங்குங்கள்” என்று மணிமேகலை கூற, அவர்களும் வணங்கினர். மேலும் “உண்மையே பேசும் தாய்மார்களை நோக்கிக் குறை காண இயலாத மாபெரும் தவத்தோரான அறவண அடிகளின் பாதங்களை வணங்கிடச் செல்வோம். நீங்களும் வாருங்கள்” என்று அவர்களோடு அறவண அடிகளைக் காணப் புறப்பட்டனர்.

3.பெரியபுராணம்

  • இயற்றியவர்: சேக்கிழார்
  • பெரிய புராணம் என்னும் பெருங்காப்பியம் தமிழகச் சூழலையும், 63 அடியார் பெருமக்களையும் மையமாகக் கொண்டு திகழ்கின்றது.
  • இந்நூல் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களையும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் உடையது.
  • 4286 விருத்தப் பாக்களையுடைய ஒரு பெரு நூலாகும்.

பூசலார் நாயனார் புராணம்

கதைச் சுருக்கம்

தொண்டை நாட்டில் திருநின்றவூரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் பூசலார். அவர் சிவபக்தியில் சிறந்தவராய், வேதத்தில் வல்லவராய் விளங்கினார். நாயனார் திருக்கோயில் ஒன்றினைக் கட்டிக் குடமுழுக்கு நீராட்ட விரும்பினார். அதற்குரிய பொருள் கிடைக்காமையால் மனத்திற்குள்ளேயே எல்லாப் பொருள்களையும் கொண்டு சேர்த்துப் பிரதிட்டை செய்யும் நாளையும் குறித்தார். அச்சமயத்தில் காஞ்சி மாநகரில் பல்லவ வேந்தன் கோயில் கட்டிப் பிரதிட்டை செய்யும் நாளைக் குறித்தான். சிவபிரான் மன்னன் கனவில் தோன்றித் “திருநின்றவூரில் பூசல் என்பவன் கோயில் கட்டிப் பிரதிட்டை செய்ய உள்ளான். நாம் அங்குச் செல்வதால் உனது ஆயலப் பிரதிட்டையைப் பின்னொரு நாளில் வைத்துக்கொள்” என்றருளினார். உடனே மன்னர் விழித்தெழுந்து திருநின்றவூரை அடைந்தான். ஆங்குப் புதிதாகக் கட்டப்பட்ட கோயில் எதுவும் இல்லை என அறிந்தான். பின்பு பூசலாரை அடைந்து தொழுது “அடிகள் கட்டிய திருக்கோயில் எங்குள்ளது? என வினவி அத்திருக்கோயிலின் பிரதிட்டை நாள் இன்று என இறைவரால் அறிந்தேன்” என்றான். பூசலார் மருட்சியடைந்து தாம் மனத்துக்கண் கட்டிய கோயிலின் முறையினை விளக்கினார். மன்னன் நாயனாரைத் தொழுது விடைபெற்றான். நாயனார் தம் மனக்கோயிலுள் சிவபிரானைப் பிரதிட்டை செய்தார். சில காலம் மனக்கோயில் வழிபாடு செய்து இறைவர் திருவடி நிழலைச் சேர்ந்தார்.

பூசலார் தம் மனதில் கோயில் அமைத்தல்

  • பகைமை கொண்ட முப்புர அசுரர்களின் பொன், வெள்ளி, இரும்பு ஆகிய பறக்கும் கோட்டைகளை எரித்து அழித்த சிவபிரானுக்குக் கோயில் எடுக்க வேண்டும் என்று எண்ணி, எந்தப் பொருள்களும் இல்லாத வறுமையில், மனத்தின்கண் எழுந்த உணர்வுகளைக் கொண்டு நல்ல ஆலயத்தை உருவாக்கிய திருநின்றவூரின்கண் விளங்கும் பூசலார் தம் நினைவால் அமைத்த கோயிலை உரைக்கத் தொடங்கினேன்.
  • உலகில் ஒழுக்கநெறி உயர்ந்து மேவும் பெருமையுடைய தொண்டை நாட்டில் நான்கு வேதங்களும் நன்கு ஓதப்பெறும் தொன்மையான திருநின்றவூர். அங்கு இறைவனின் அடியார்கள் தம் கொள்கையில் சிறந்து நிற்பர்.
  • வேத நெறி தழைத்து மேவும் வகையில் பூசலார் திருநின்றவூரின்கண் தோன்றினார். அவருடைய உணர்வுகள் யாவும் சிவபிரான் திருப்பாதங்களையே சார்ந்தன. அன்பு மாறாத நெறி பெருகி வளரும் தன்மையில் வாய்மையுடன், வேதத்தின் நியதியில் பொலிவுடன் விளங்கினார்.
  • சிவனடியார்களுக்கு ஏற்ற பணிகளைச் செய்தலே தமக்குரிய திருத்தொண்டு என்று எண்ணியவராக, சிவபிரான் எழுந்தருளுவதற்கு ஒரு கோயிலை அமைக்க வேண்டும் என்று விரும்பினார். தன்னிடம் பொருட்செல்வம் இல்லை என்று உணர்ந்தும், கோயில் அமைக்கும் எண்ணத்தில் உறுதியுடன் நின்றார்.
  • கோயில் அமைக்க அவருடைய உள்ளம் விரும்பியது. ஆனால், கோயில் அமைப்பதற்குரிய பெருஞ்செல்வத்தை வருந்தித் தேடியும் கிடைக்காததால் என்ன செய்வேன் என்று மனம் வருந்துகின்றார். மனதுள்ளேயே அக்கோயிலைக் கட்ட வேண்டும் என்று எண்ணி அதற்குரிய செல்வத்தைச் சிறுகச் சிறுகத் தம் சிந்தனையிலேயே திரட்டிக் கொண்டார்.
  • தொழிற் கருவிகளோடு கட்டுதற்குரிய சாதனங்களுடன் தச்சர்களையும் தேடிக் கொண்டு ஆயலம் எடுப்பதற்குரிய நல்ல நாளும் விரும்பி, ஆகம விதிப்படி அடிநிலை எடுத்து, தம் அன்பின் நிறைவினால் இரவும் பகலும் உறங்காது மனதுக்குள்ளேயே கோயிலைச் செதுக்கினார்.
  • கோபுரத்தின் அடி முதல் முடி வரை அமைந்துள்ள அடுக்குகள் யாவற்றிலும் சித்திர வேலைப்பாடுகள் அமையுமாறு மனத்தினால் அமைத்து, விமானத்தின் முடிவில் சிகரமும் சிற்ப நூலில் சித்திரங்களும் உருவாக்கினார். இத்தகைய பணி யாவும் நீண்ட நாட்கள் செய்யப்படும் பணியாக தமது நினைவில் நிலைநிறுத்திக் கொண்டார்.
  • விமானத்தின் உச்சியில் கூர்மையான சிகரம் அமைத்து, சுண்ணச் சாந்து பூசி சிற்ப அலங்காரங்களைச் செய்த பின்பு, திருமஞ்சனத்திற்குரிய கிணறும், கோயிலைச் சுற்றி மதில்களைக் கட்டிக் குளமும் அமைத்தார். சிவபிரான் திருமேனியின் திருவுருவமாகிய சிவலிங்க மூர்த்தியைப் பிரதிட்டை செய்யும் நாளைக் குறித்தார்.

பல்லவ மன்னன் கனவில் சிவபிரான் தோன்றுதல்

  • பல்லவ வேந்தன் காஞ்சி மாநகரில் பெருஞ்செல்வத்தில் கற்கோயிலை முழுமையாகக் கட்டி முடித்தான். பின்பு சிவபிரானைப் பிரதிட்டை செய்ய குடமுழுக்கு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான். அதற்கு முன் நாள், கொன்றை மலர் சூடிய சிவபிரான் மன்னன் கனவில் தோன்றினார்.
  • “திருநின்றவூரில் பூசல் என்னும் அன்பன் பலநாள் மனத்துக்கண் அமைத்த புகழ் மிக்க ஆலயத்துள் நாளை நாம் புகுகின்றோம். ஆதலால் நீ செய்யும் குடமுழுக்குச் செயலை நாளைய தினம் தவிர்த்துப் பின்பு ஒருநாளில் அமைத்துச் செய்வாய்” என்று கூறி மறைந்தார்.

பல்லவ மன்னன் பூசலாரைக் கண்டு வணங்குதல்

  • திருத்தொண்டராகிய பூசலார் நாயனாரின் பெருமையை சிவபிரான் சொல்லக் கேட்ட பல்லவ மன்னன், அத்திருப்பணி செய்தவரைக் கண்டு வணங்குதல் வேண்டும் என்று விருப்பம் கொண்டு திருநின்றவூரை சென்றடைந்தான்.
  • திருநின்றவூரை அடைந்த வேந்தன், அன்பராகிய பூசலார் அமைத்த கோயில் எப்பக்கம் உள்ளது என்று அங்கு வந்தவர்களைக் கேட்க, அவர்களும், “தாங்கள் கூறும் பூசலார், கோயில் எதுவும் அமைத்தது இல்லை” என்றனர். அந்நிலையில் இறைவனின் அடியவர்கள் அனைவரும் தன்னைச் சந்திக்க வருமாறு உரைத்தான் மன்னன்.
  • அன்பர்கள் அனைவரும் வந்து அரசனைக் காண, மன்னன் அவர்களிடம் “பூசலார் என்பவர் யார்?” என்று வினவ, அவர்களும், “குற்றம் இல்லாத அந்த அன்பர் இந்த ஊரைச் சேர்ந்தவர்” என்று கூற, பூசலாரை நாடிச் சென்றான் மன்னன்.
  • திருத்தொண்டராகிய நாயனாரைக் கண்ட மன்னன் தொழுது போற்றி, “எட்டுத் திசைகளில் உள்ளவரும் தொழுமாறு நீங்கள் கட்டிய கோயில் எங்குள்ளது? இன்று அக்கோயிலில் தேவர் தலைவனான சிவபிரானைப் பிரதிட்டை செய்யப் போவதை அறிந்து இறைவன் அருள் பெற்று உம்மைக் கண்டு அடிபணிய வந்தேன்” என்று கூறினான்.

பூசலார் தாம் கட்டியது மனக்கோயில் என்று உரைத்தல்

  • மன்னன் உரை கேட்ட நாயனார் மருட்சி அடைந்தவராக, “என்னை ஒரு பொருளாகக் கொண்டு எம்பிரான் அருள் செய்தார். பணமும் பொருளும் கிடைக்கப்பொறாமையால் உள்ளத்தால் முயன்று நினைந்து நினைந்து அமைத்த கோயில் இதுவேயாகும்” என்று தாம் மனத்துள் எழுப்பிய ஆலயத்தை மன்னனுக்கு விளக்கமாக எடுத்துக் கூறினார்.
  • நாயனாரின் உரை கேட்ட மன்னன், அங்கு நிகழ்ந்த அதியசயத்தை எண்ணிக் “குற்றமற்ற திருத்தொண்டர்தம் பெருமைதான் என்னே!” என்று போற்றி, தான் சூடிய மாலை தரையில் பதியுமாறு நிலத்தில் வீழ்ந்து பூசலாரை வணங்கினான். பின்பு முரசு ஒலிக்கும் படையோடு தன் காஞ்சி மாநரை அடைந்தான்.

பூசலார் தம் மனக்கோயிலில் சிவபிரானைப் பிரதிட்டை செய்தல்

  • பூசலார் தாம் சிந்தையால் அமைத்த கோயிலில் சிவபிரானை நற்பெரும் பொழுதில் பிரதிட்டை செய்தார். பல நாட்கள் நலம் விளங்கும் பூசைகள் யாவும் செய்தார். திருநடனம் புரியும் இறைவனின் அழகிய திருப்பாதத்தில் சேர்ந்தார்.

4.கம்பராமாயணம்

  • இயற்றியவர்: கம்பர்
  • பெயர்க் காரணம்: இக்காப்பியத்தின் கதை இராமனின் வரலாற்றைப் பற்றித் தெரிவிப்பதால் இராமாயணம் எனப்பட்டது. 

காப்பிய அமைப்பு

  • இக்காப்பியம் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களைக் கொண்டது.

குகப்படலம்

  • வனம் புகுந்த இராமன் குகனைத் தோழமை கொண்ட செய்தியை உணர்த்தும் பகுதியை விவரிப்பதே குகப்படலம் ஆகும்.

குகனின் அறிமுகம்

  • இராமன் முனிவர்கள் தந்த விருந்தை அருந்தியிருந்தபொழுது, குகன் என்னும் பெயரை உடையவன் அங்கு வந்தான். அந்தக் குகன் ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவன். தூய்மையான கங்கையின் துறையில் பழங்காலம் தொட்டு ஓடங்களைச் செலுத்தும் உரிமை பெற்றவன். பகைவர்களைக் கொல்லும் வில்லை உடையவன். மலை போன்ற திரண்ட தோள்களை உடையவன்.
  • அந்தக் குகன் துடி என்னும் பறையை உடையவன். வேட்டைக்குத் துணை செய்யும் நாய்களை உடையவன். தோலினால் தைக்கப்பட்ட செருப்பை அணிந்த பெரிய கால்களை உடையவன். இருள் நெருங்கி நிறைந்ததைப் போன்ற நிறத்தை உடையவன். அவனது பெரிய சேனை அவனைச் சூழ்ந்திருப்பதால் நீர் கொண்டு கார் மேகம் இடியோடு கூடித் திரண்டு வந்ததைப் போன்ற தன்மை உடையவன்.
  • ஊதுகொம்பு, துந்துபி என்னும் பறை, சங்கு, முழங்கும் பேரிகை, பம்பை என்னும் பறை ஆகிய இசைக்கருவிகள் நிறைந்துள்ள படையை உடையவன். இலை வடிவமான அம்புகளை உடையவன். ஓடங்களுக்குத் தலைவன். யானைக் கூட்டத்தைப் போன்று பெரிய சுற்றத்தார்களை உடையவன்.
  • காழகம் (அரைக்கால் சட்டை) என்னும் ஆடை அணிந்தவன். கங்கை ஆற்றின் ஆழத்தைக் கண்டறிந்த பெருமையை உடையவன். இடுப்பிலிருந்து தொங்கவிட்ட செந்நிறத் தோலை உடையவன். இடுப்பைச் சுற்றிக் கட்டிய, ஓன்றோடு ஒன்று பிணைக்கப்பட்ட புலி வாலை உடையவன்.
  • பற்களைத் தொடுத்தது போன்ற பல அணிகலன்களைப் பூண்டவன். வீரக்கழலை அணிந்தவன். தலை மயிரில் நெற்கதிர்களைச் செருகிக் கொண்டவன். சினம் வெளிப்பட மேலேறி வளைந்த புருவத்தை உடையவன்.
  • பனை மரம் போன்று நீண்டு வளர்ந்துள்ள கைகளை உடையவன். பாறை போன்ற மார்பினை உடையவன். எண்ணெய் பூசப்பட்ட இருளைப் போன்ற கருநிற உடம்பை உடையவன்.
  • தன் இடுப்பில் குருதிக் கறை படிந்த வாளை உடையவன். நஞ்சை உடைய நாகமும் கண்டு நடுங்குகின்ற கொடிய பார்வையை உடையவன். பைத்தியக்காரர் போல் தொடர்பில்லாத பேச்சை உடையவன். இந்திரனின் வச்சிராயுதம் போன்று உறுதியான இடையை உடையவன்.
  • விலங்குகளின் இறைச்சியையும், மீனையும் உண்ட புலால் நாற்றம் பொருந்திய வாயை உடையவன். சிரிப்பு என்பது சிறிதும் இல்லாத முகத்தினை உடையவன். கோபம் இல்லாதபோதும் கனல் கக்குமாறு பார்ப்பவன். யமனும் அஞ்சும்படி அதிர்ந்து ஒலிக்கின்ற குரலை உடையவன்.
  • சிருங்கி பேரம் என்று சொல்லப்படும் பேரலைகள் பெற்ற கங்கை ஆற்றின் அருகில் அமைந்த நகரத்தில் வாழ்பவன். அப்படிப்பட்ட குகன் முனிவர் இருப்பிடத்தில் தங்கியுள்ள இராமனைக் காண்பதற்காகத் தேனையும் மீனையும் காணிக்கையாக எடுத்துக் கொண்டு வந்தான்.

இராமனின் தவச்சாலையை குகன் சேர்தல்

  • பொய்மை நீங்கிய மனத்தையும், இராமனிடம் அன்பு கொள்ளும் குணத்தையும் உடைய குகன் தன்னுடைய சுற்றத்தார் தூரத்தே நிற்க, அம்பையும், வில்லையும், வாளையும் நீக்கிவிட்டு, இராமன் தங்கியிருந்த தவச்சாலையின் வாயிலை அடைந்தான்.

குகன் இலக்குவனுக்குத் தன்னை அறிவித்தல்

  • வாயிலை அடைந்த குகன் தன் வருகையை உணர்த்தக் கூவிக் குரல் கொடுத்தான். முதலில் தம்பி இலக்குமணன் அவனை அணுகி, “நீ யார்?” என்று வினவினான். குகன் அவனை அன்போடு வணங்கி, “ஐயனே! நாய் போன்ற அடியவனாகிய நான் ஓடங்களைச் செலுத்தும் வேடன் ஆவேன். தங்கள் திருவடிகளைத் தொழ வந்தேன்” என்று கூறினான்.

குகனின் வரவை இலக்குவன் இராமனுக்கு அறிவித்தல்

  • இலக்குமணன் “நீ இங்கேயே இரு” என்று குகனிடம் கூறிவிட்டு, தவச் சாலைக்குள் சென்று தன் தமையன் இராமனைத் தொழுது, “அரசே! தூய உள்ளம் பெற்றுள்ளவனும், தாயைக் காட்டிலும் மிக நல்லவனும், அலை மோதும் கங்கையில் செல்லும் ஓடங்களுக்குத் தலைவனுமான குகன் என்னும் ஒருவன் உன்னைக் காண்பதற்காக, பெருந்திரளாகத் தன் சுற்றத்தாருடன் வந்துள்ளான்” என்று தெரிவித்தான்.

இராமனைக் கண்டு வணங்கிய குகன்

  • இராமனும் மனமுவந்து, “நீ அந்தக் குகனை என்னிடம் அழைத்து வா” என்று கூறினான். இலக்குமணனும் குகனை நோக்கி, “உள்ளே வா” என்றான். அதைக் கேட்ட குகன் விரைவாக உள்ளே சென்று, இராமனைத் தன் கண்ணினால் கண்டு களிப்படைந்தான். தன் கருமை நிற முடிகள் தரையில் படுமாறு அவனை வணங்கி எழுந்து, உடல் வளைத்து, வாயினைத் தன் கைகளால் பொத்திப் பணிவோடு  நின்றான்.

குகன் தன் கையுறைப் பொருளை அறிவித்தல்

  • “இங்கே அமர்க” என்று குகனிடம் இராமன் கூறினான். ஆனால் குகன் அமரவில்லை. இராமனிடம் அளவு கடந்த அன்பை உடைய அந்தக் குகன், இராமனை நோக்கி, “தங்கள் உணவாக அமையும்படி தேனையும், மீனையும் பக்குவப்படுத்திக் கொண்டு வந்துள்ளேன். தங்களுடைய எண்ணம் யாதோ?” என்று கேட்டான். இராமன் முனிவர்களை நோக்கிப் புன்னகைத்து விட்டு, பின்வருமாறு சொல்லத் தொடங்கினான்.

குகனது அன்பை இராமன் பாராட்டுதல்

  • “மனம் மகிழும்படி உள்ளத்திலே உண்டான அன்பின் தூண்டுதலால் பக்தி ஏற்பட அருமையாகக் கொண்டு வரப்பட்ட இத்தேனும் மீனும் அமிழதத்தைக் காட்டிலும் சிறந்தவை அல்லவா? நீ கொண்டு வந்தவை எவையாயினும் சரி, அவை அன்போடு பொருந்தியவை என்றால் தூய்மையானவையே! அவை எம்மைப் போன்றவர்கள் ஏற்கத் தக்கவையே. ஆதலால் நாம் அவற்றை இனிதாக உண்டவர்போல் ஆனோம்” என்று குகனிடம் கூறினான் இராமன்.

விடியலில் நாவாய் கொண்டு வர குகனிடம் இராமன் கூறல்

  • ஆண் சிங்கம் போன்ற இராமன் “நாம் இன்று இத்தவச்சாலையில் தங்கி நாளை கங்கையைக் கடப்போம். எனவே நீ உன் சுற்றத்தாரோடு இங்கிருந்து சென்று, உன்னுடைய நகரத்தில் உவகையோடு தங்கிவிட்டு, விடியற்காலை நாங்கள் செல்வதற்குரிய ஓடத்துடன் இங்கே வருக” என்று கூறினான்.

குகனது வேண்டுகோள்

  • இராமன் இவ்வாறு கூறியதும், குகன் “இவ்வுலகம் முழுவதையும் உனக்குரிய செல்வமாகக் கொண்டவனே! உன்னை இந்தத் தவவேடத்தில் பார்த்த என் கண்களைப் பறித்து எறியாத கள்ளன் நான். இந்தத் துன்பத்தோடு உன்னைப் பிரிந்து எனது இருப்பிடத்தை நோக்கிச் செல்ல மாட்டேன். ஐயனே! இங்கிருந்து என்னாலான அடிமைத் தொழிலை உனக்குச் செய்கிறேன்” என்று கூறினான்.

குகனின் வேண்டுகோளை இராமன் ஏற்றல்

  • மாலை சூட்டப்பட்ட வில்லை உடைய இராமன், குகன் கூறிய கருத்தைக் கேட்டான். உடனே சீதையின் முகத்தை நோக்கி, இலக்குமணனின் திருமுகத்தை நோக்கி, அவர்கள் மனமும் குகனின் அன்பை ஏற்றுக் கொள்வதை அறிந்து, “இவன் நம்மிடம் நீங்காத அன்புடையவன் ஆவான்” என்று கூறி கருணையினால் மலர்ந்த கண்கள் உடையவனாகி, “இனிமையான நண்பனே! நீ விரும்பியவாறு இன்று என்னோடு தங்கியிரு” என்று குகனிடம் கூறினான்.
  • இராமன் இன்று எம்மொடு தங்குக என்று சொல்லக் கேட்ட குகன், இராமன்  திருவடிகளை வணங்கி, மகிழ்ச்சி மிக, கடலை ஒத்த துடிப்பறையோடு கூடிய தனது சேனைப் பெருக்கை அழைத்து, அவர்கள் தங்கியுள்ள தவச்சாலையைச் சுற்றிப் பாதுகாக்கக் கட்டளையிட்டு, தானும் கட்டமைந்த வில்லைப் பிடித்து, வாளையும் அரைக்கச்சிலே கட்டி, கூரிய அம்மைப்பிடித்து, இடியோடு கூடிய மழை மேகம் போல உரத்த சத்தம்இட்டு, அத்தவச்சாலையில் அம்மூவரையும் காவல்செய்து  நின்றான்.

இராமன் நகர் நீங்கிய காரணம் அறிந்து குகன் வருத்துதல்

  • “மனு குலத்தில் வந்த மன்னனே! நீ அழகிய அயோத்தி நகரை விட்டு இங்கு வந்த காரணத்தைத் தெரிவிப்பாயாக” என்று குகன் கேட்டான். இலக்குமணன், இராமனுக்கு நேர்ந்த துன்பத்தைச் சொல்ல அதைக் கேட்டு இரங்கியவனான குகன் மிக்க துன்பமுற்று, “பூமி தேவி தவம் செய்தவளாக இருந்தும், அத்தவத்தின் பயனை முழுவதும் பெறவில்லை போலும். இதென்ன வியப்பு” என்று கூறி இரண்டு கண்களும் அருவி போலக் கண்ணீர் சொரிய அங்கே இருந்தான்.

கதிரவன் மறைதல்

  • இருள் போன்ற பகையைத் தொலைத்து, திசைகளை வென்று, அனைவர்க்கும் மேலாக விளங்கி, தனது ஒப்பற்ற ஆணைச் சக்கரத்தைச் செலுத்தி, உயர்ந்த புகழை நிலைக்கச் செய்து, உலகத்தில் உள்ள அனைவர் உள்ளத்திலும் இடம் பெற்று கருணை காட்டி, பின் இறந்து போன வலிமை பெற்ற மாவீரனான தசரதனைப் போல செந்நிறக் கதிர்களைப் பெற்ற சூரியன் மறைந்தான்.

இராமனும் சீதையும் உறங்க இலக்குவன் காவல் இருத்தல்

  • மாலை வேலையில் செய்ய வேண்டிய கடமைகளைச் செப்பமான முறையில் செய்து, அங்கு தங்கிய இராமனும், பாற்கடலில் தோன்றிய அமுதம் போன்ற சீதையும் பரந்த பூமியில் பரப்பப்பட்ட படுக்கையில் படுத்தனர். இலக்குமணன் வில்லை ஏந்திக் கொண்டு விடியற்காலை தோன்றும் வரையிலும், கண்ணையும் இமைக்காமல் விழிப்போடு காத்து நின்றான்.

இராம இலக்குவரை நோக்கி குகன் இரவு முழுதும் கண்ணீர் வழிய நிற்றல்

  • யானைக் கூட்டத்தைப் போலத் தன்னைச் சுற்றியிருக்கும் சுற்றத்தாரை உடையவனும், அம்பு தொடுக்கப்பட்ட வில்லை உடையவனும், வெம்மை ஏறிக் கொதித்து நிலைகுலையும் மனத்தை உடையவனும், இமைக்காமல் விழித்திருக்கும் கண்களை உடையவனும், ஓடங்களுக்குத் தலைவனுமான குகன், கண் இமைக்காது நின்ற இலக்குமணனைப் பாரத்தும், இராமன் நாணற் புல்லிலே படுத்திருக்கும் நிலையைப் பார்த்தும், கண்ணீர் அருவியைச் சொரியும் மலை போன்று நின்றான்.

கதிரவன் தோன்றலும் தாமரை மலர்தலும்

  • உலகத்து உயிர்களைப் போலப் பிறத்தல் என்பதைப் பெறாதவனான சூரியன் அளவற்ற பிறப்புகளை உடைய உயிர்கள் யாவும் இறக்கும் முறை இதுதான் என்று உலகத்தாருக்குக் காட்டுகின்றவனைப் போல முந்திய நாள் மாலையில் மறைந்தான். அடுத்த நாள் காலையில் இறந்த உயிர்கள் மீண்டும் பிறக்கும் முறை இதுதான் என்று காட்டுகின்றவனைப் போல உதித்தான். ஆதலால் சொர்க்கம் முதலான சிறந்த உலகங்கள் எவையாயினும், அவற்றை மறந்து விடும் வழியை (வீடுபேறு) நினைப்பீராக.
  • சேற்றில் தோன்றும் செந்தாமரை மலர்கள் சூரியனது தோற்றத்தைக் கண்டனவாய், செக்கச் செவேல் என்று மலர்ந்தன. அச்சூரியனைக் காட்டிலும் வேறான ஒரு கருஞ்சூரியனைப் போன்ற இராமனைக் கண்டு, சீதையின் ஒளி பொருந்திய முகம் என்னும் தாமரையும் மலர்ந்தது.

குகனை நாவாய் கொணருமாறு இராமன் பணித்தல்

  • பகைவருக்கு அச்சம் தரும் தோளில் வில்லை உடைய இராமன், விடியற்காலையில் செய்ய வேண்டிய கடமைகளை விருப்பத்தோடு செய்து முடித்து, முனிவர்கள் தன்னைப் பின் தொடர்ந்து வர அங்கிருந்து புறப்பட்டான். குகனை நோக்கி, “ஐயனே! எம்மைக் கொண்டு செல்வதற்குரிய ஒடத்தை விரைவாகக் கொண்டு வருக” என்று கூறினான்.

இராமனை தன் இருப்பிடத்தில் தங்க குகன் வேண்டுதல்

  • இராமன் இட்ட கட்டளையைக் கேட்ட குகன், கண்ணீரைப் பொழியும் கண்களையுடைவனாக, உயிர் வாடுகின்றவனாய், இராமனின் திருவடிகளைப் பிரிய விரும்பாதவனாய், சீதையோடு இராமனின் திருவடி வணங்கித் தனது எண்ணத்தைச் சொல்லலானான்.
  • “ஒழுங்காகத் தொடுக்கப்பட்ட மாலை அணிந்தவனே! நாங்கள் பொய் வாழ்க்கை பெறாதவர்கள். நாங்கள் வாழும் இடம் காடே ஆகும். நாங்கள் குறையற்றவர்கள். வலிமை பெற்றவர்கள். செய்ய வேண்டிய முறைப்படி நீங்கள் சொல்லும் வேலைகளைச் செய்வோம். எங்களை உங்கள் உறவினராகக் கருதி, எங்கள் ஊரில் நெடுங்காலம் இனிதாகத் தங்கி இருப்பாயாக”
  • “எம்மிடம் தேன் உள்ளது. தினையும் உள்ளது. அவை தேவர்களும் விரும்பி உண்பதற்கு உரியவையாகும். மாமிசமும் இங்கு உள்ளது. உமக்குத் துணையாக நாய் போல் அடிமைப்பட்டவராகிய எங்கள் உயிர்கள் உள்ளன. விளையாடுவதற்குக் காடு இருக்கிறது. நீராடுவதற்குக் கங்கை இருக்கிறது. நான் உயிரோடு உள்ளவரை நீ இங்கேயே இனிதாக இருப்பாயாக. இப்போதே எம்மோடு வருக”
  • உடுத்திக் கொள்ள மெல்லிய ஆடை போன்ற தோல்கள் உள்ளன. உண்பதற்குச் சுவையான உணவு வகைகள் உள்ளன. தொங்கவிடப்பட்ட பரண்கள் உள்ளன. தங்குவதற்குச் சிறுகுடிசைகள் உள்ளன. விரைந்து செல்ல கால்கள் உள்ளன. வில்லைப் பிடித்துப் போரிடக் கைகள் உள்ளன. நீ விரும்பும் பொருள் ஒலிக்கும் வானத்தின் மீதுள்ள பொருளாக இருந்தாலும் விரைவாகக் கொண்டு வந்து கொடுப்போம்.
  • “எனக்குப் பணிசெய்வோராகிய வில்லை ஏந்திய வேடர்கள் ஐந்நூறாயிரம் பேர் உள்ளனர். அவர்கள் தேவர்களைக் காட்டிலும் வலிமை பெற்றவர்கள். எங்கள் குடியிருப்பில் நீ ஒரே ஓரு நாள் தங்கினாய் என்றாலும் நாங்கள் கடைத்தேறுவாம். அதைக் காட்டிலும் வேறான ஒரு சிறப்பு எங்களுக்கு இல்லை” என்றான் குகன்.

மீண்டும் வருகையில் குகனிடம் வருவதாக இராமன் இயம்பல்

  • குகனது வேண்டுகோளைக் கேட்ட இராமனும் அவனிடம் கொண்ட மனக் கருணை அதிகமாக வெண்ணிறப் பற்கள் தோன்றச் சிரித்தான். “வீரனே! நாங்கள் அந்தப் புண்ணிய நதிகளில் நீராடி, ஆங்காங்கு உள்ள முனிவரை வழிபாடு செய்து நாங்கள் வனவாசம் செய்ய வேண்டிய சில நாட்கள் முடிந்ததும் உன்னிடம் இனிதாக வந்து சேருவோம்” என்று கூறினான்.

குகன் நாவாய் கொணர, மூவரும் கங்கையைக் கடத்தல்

  • இராமனின் கருத்தை அறிந்த குகன் விரைவாகச் சென்று பெரிய படகு ஒன்றைக் கொண்டு வந்தான். தாமரை மலர் போலும் கண்களை உடைய இராமன், அங்கிருந்த முனிவர்களான அந்தணர்கள் அனைவரிடமும் விடை தருக என்று கூறிக் கொண்டு பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியைப் பெற்ற சீதையோடும் இலக்குமணனோடும் அப்படகில் இனிதாக ஏறினான்.
  • ஆற்றிலே படகை விரைவகச் செலுத்து என்றான் இராமன். அந்த இராமனுக்கு உண்மையான உயிர் போன்றவனான குகனும், மடங்கும் அலைகளை உடைய கங்கை ஆற்றிலே செலுத்திய பெரிய படகு விசையாகவும், இள அன்னம் நடப்பதைப்போல அழகாகவும் சென்றது. கூரையில் நின்றவர்களான முனிவர்கள் இராமனைப் பிரிந்த துயரத்தால் நெருப்பிலே பட்ட மெழுகைப் போல மனம் உருகினார்கள்.
  • பாலைப் போன்ற இனிய மொழி பேசும் சீதையும், சூரியனைப் போன்ற இராமனும், சேல் மீன்கள் வாழும் கங்கையின் புனித நீரை அள்ளி எடுத்து, ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடிக் கொண்டிருக்க, நீண்ட கோலினால் நீரைத் துழாவிச் செலுத்தப்பட்ட அந்தப் பெரிய படகு, பல கால்களை உடைய பெரிய தண்டு போல விரைவாகச் சென்றது.
  • சந்தனத்தை அணிந்துள்ள மணற்குன்றுகளாகிய பெரிய கொங்கைகளை உடைய சிறந்த கங்காதேவி, ஒளி வீசும் மாணிக்க மணிகள் மின்னுவதால், நறுமணம் வீசும் தாமரை மலரைப் போலச் செந்நிறவொளி பரவப் பெற்ற தெள்ளிய அலைகள் என்னும் நீண்ட கைகளால், தான் ஒருத்தியே அப்படகை ஏந்தி அக்கரையில் சேர்ந்தனள்.

இராமன் குகனிடம் சித்திரகூடம் செல்லும் வழி பற்றி வினவுதல்

  • கங்கையின் மறு கரையை அடைந்த இராமன் தன்னிடம் அன்பு கொண்ட குகனை நோக்கி, “சித்திரக் கூடத்துக்குச் செல்லும் வழியைச் சொல்லுக” என்று கேட்டான். குகன் இராமனின் திருவடிகளை வணங்கி, “உத்தமனே! நான் உங்களிடம் சொல்ல வேண்டியது ஒன்று உள்ளது” என்றான்.
  • “நான் உங்களுடன் வரும் பேறு பெறுவாயேயானால், நேர் வழியையும், அதில் குறுக்கிடும் பல கிளை வழிகளையும், அறியும் வல்லமை உடைய நான் தக்கபடி வழிகாட்டுவேன். பழுது நேராமல் நல்லனவாகிய காய்களையும், கனிகளையும் தேனையும் தேடிக் கொண்டு வந்து கொடுப்பேன். ஆங்காங்கே தங்குவதற்குத் தகுந்த குடில் அமைத்துக் கொடுப்பேன். ஒரு நொடிப் பொழுதும் உம்மைப் பிரிய மாட்டேன்” என்று குகன் கூறினான்.
  • “தீய விலங்குகளின் வகைகளை, நீங்கள் தங்கும் இடத்தைச் சூழ்ந்த எல்லாத் திசைகளிலும் நெருங்க விடாமல் சென்று அவற்றை அழித்து, தூயவனாகிய மான் மயில் போன்றவை வாழும் காட்டிடத்தை ஆராய்ந்து கண்டுபிடித்துக் காட்டும் வல்லமை பெற்றுள்ளேன். நீங்கள் விரும்பிய பொருளைத் தேடிக் காண்டு வந்து கொடுப்பேன். நீங்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றுவேன். இரவிலும் வழி அறிந்து நடப்பேன்” என்று குகன் கூறினான்.
  • மற்போரிலும் சிறப்புப் பெற்ற தோள்களை உடையவனே! செல்லும் இடம் மலைப் பகுதியானாலும் அங்கே கவலைக் கிழங்கு முதலியவற்றைத் தோண்டி எடுத்துத் தருவேன். வெகு தொலைவில் உள்ள வழியிலும் சென்று அங்குள்ள நீரைக் கொண்டு வந்து கொடுப்பேன். பலவகையான வில்லைப் பெற்றுள்ளேன். எதற்கும் அஞ்ச மாட்டேன். உங்களுடைய மலர் போன்ற திருவடியை ஒரு போதும் பிரிய மாட்டேன்” என்று குகன் கூறினான்.
  • “ஒப்பற்ற மார்பை உடையவனே! தாங்கள் சம்மதித்தால் எனது படையை உடன் அழைத்துக் கொண்டு ஒரு பொழுதும் உங்களைப் பிரியாது உங்களுடன் இருப்பேன். என்னால் வெல்ல முடியாத பகைவர்கள் வந்தாலும் உங்களுக்குத் தீங்கு நேரும் முன் நான் இறந்து போவேன். எந்தப் பழியும் பெறாதவனாகிய நான் உம்மோடு வருவேன்” என்று குகன் கூறினான்.

குகனை அவன் இனத்தாருடன் இருக்க இராமன் பணித்தல்

  • குகன் கூறிவற்றைக் கேட்ட இராமன் “நீ எனது உயிர் போன்றவன். என் தம்பி இலக்குமணன் உனக்குத் தம்பி. அழகிய நெற்றியைப் பெற்ற இச்சீதை உனக்கு உறவினள். குளிர்ந்த கடலால் சூழப்பட்ட இந்நாடு முழுவதும் உன்னுடையது” என்றான்.
  • “துன்பம் உண்டு என்றால் சுகமும் உண்டு. இப்போது இணைந்திருப்பதற்கும், வனவாசத்திற்குப் பின் இணைந்திருக்கப் போவதற்கும் இடைப்பட்டதான பிரிவு என்னும் துன்பம் உள்ளதே என்று எண்ணாதே. உன்னைக் கண்டு தோழமை கொள்வதற்கு முன்னே உடன் பிறந்தவர்களாக நாங்கள் நால்வர் இருந்தோம். இப்போது எல்லையற்ற அன்புடைய உடன்பிறந்தார்களாகிய நாம் ஐவர் ஆகிவிட்மோம்” என்றான் இராமன்.
  • ஒளி வீசும் கூரிய வேலை உடையவனே! நான் காட்டில் வாழும் காலமெல்லாம் உன் தம்பியாகிய இலக்குமணன் என்னுடன் இருக்கப் போகிறான். எனவே துன்புறுத்தும் வகைகள் எவை? ஒன்றும் இல்லை. உன் இருப்பிடத்திற்குச் சென்று நான் இருந்து மக்களைக் காப்பது போலக் காப்பதற்கு உரியவன் நீ! வனவாசம் முடிந்து அயோத்திக்குத் திரும்ப வடக்கு நோக்கி வரும் அந்த நாளில் உன்னிடம் உறுதியாக வருவேன். நான் சொன்ன சொல்லைத் தவற மாட்டேன்”
  • உன் தம்பியாகிய பரதன் அயோத்தியில் உள்ள சுற்றத்தாரைக் காப்பதற்கு ஏற்ற தகுதியோடு இருக்கிறான். நீ என்னுடன் வந்து விட்டால் இங்குள்ள சுற்றத்தாரைக் காப்பாற்ற யார் இருக்கிறார்கள். நீயே சொல். உன் சுற்றத்தார் என் சுற்றத்தார் அல்லவா? அதனால் அவர்கள் தம்மைக் காப்பாற்றுவார் இல்லாமல் மிகுந்த துன்பத்தை அடைதல் தகுமா? இங்குள்ள என் சுற்றத்தாரை என் கட்டளையை ஏற்று இனிதாகக் காப்பாயாக” என்றான் இராமன்

குகன் விடைபெறுதலும், மூவரும் காட்டிற்குள் செல்லுதலும்

  • இராமன் இட்ட கட்டளையை மீறாதவனும் அவனைப் பிரிவதால் உண்டான துன்பத்திலிருந்து நீங்காதவனும் நோய் கொண்டவன் என்று பிறர் நினைக்குமாறு பிரிவுத் துன்பத்தை உடையவனுமான குகன் இராமனிடம் விடை பெற்றுக் கொண்டான். பின்பு இராமனும் இலக்குமணனும் அழகிய ஆபரணங்களை அணிந்த மயிலைப் போன்ற சீதையோடு அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டில் நெடுந்தூரம் செல்வதற்குரிய வழியிலே நடந்து சென்றார்கள்.

5.சீறாப்புராணம்

  • ஆசிரியர் : உமறுப்புலவர்
  • ‘சீறா’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘வாழ்க்கை’ அல்லது ‘வாழ்க்கை வரலாறு’ என்று பொருள். புராணம்’ என்றால் ‘வரலாறு’ என்று பொருள். எனவே, சீறாப்புராணம் என்பது நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல்’ ஆகும். 
  • மூன்று காண்டங்களையும், மொத்தம் 92 படலங்களையும், 5027 விருத்தப் பாடல்களையும் கொண்ட ஒரு காவியம் ஆகும்.

மானுக்குப் பிணை நின்ற படலம்

முகமது நபி மலை வழியே சென்ற காட்சி

  • மேகம் வானில் குடையாக இருந்து நிழல் தருகின்றது. மலர்கள் தேனைச் சிந்துகின்றன. மலையைப் பார்க்கிலும் திண்ணிய தோள்களை உடைய வள்ளல் முகமது நபி அவர்கள் குற்றமற்ற வேதத்தினை பொழிந்து இஸ்லாம் எனும் மார்க்கத்தை வளர்த்துக் கொண்டிருந்த ஒரு நாளில், மக்கமா நகரத்தின் எல்லையை விட்டு அகன்று தன் சீடர்களுடன் சோலைகள் சூழ்ந்த ஒரு மலை வழியாகச் சென்று கொண்டிருக்கிறார். அவ்வனத்தில் வேடன் ஒருவன் மான் ஒன்றை வலையில் பிடித்து வைத்திருப்பதைக் கண்டு மானை நோக்கிச் சென்றார்.

வேடனின் தோற்றம்

  • வேடன் காட்டடில் திரிகின்ற விலங்குகளைக் கொன்று அதன் மாமிசத்தை அறுத்து, கொம்புகளில் வளைத்து, நெருப்பில் சுட்டு உண்டு, தனது உடலை வளர்ப்பதைத் தவிர வேறு ஒன்றையும் அறியாதவன். காலில் செருப்பையும், தனது இடையில் கந்தைத் துணியையும், தோளில் விலங்குகளைப் பிடிக்கின்ற வலையையும், கையில் பெரிய கோதண்டம் எனும் ஆயுதத்தையும், முதுகில் அச்சத்தைத் தருகின்ற கூரிய அம்பினையும், தோளில் வாளாயுதத்தையும் கொண்டு காட்சி அளித்தான். உடல் முழுவதும் வியர்வையோடு மாமிசம் உண்ணப்பட்ட வாயோடு, கொலை வெறி கொண்ட கண்களோடு தோற்றமளித்தான்.

மானைக் கண்ட நபிகளின் நிலை

  • வேடன் ஒரு மானைக் கோபத்துடன் தன் வலையில் சேர்த்துக் கட்டி வைத்திருப்பதைத் தன் கண்களால் கண்டார் நபி பெருமான். செழிப்புற்ற சோலை கொண்ட மலை வழியே சென்ற நபிகள், தேன் சிந்தும் மலர்களைப் பார்க்கவில்லை. மலையில் வீழ்கின்ற அருவிகளைப் பார்க்கவில்லை. நல்ல நிழலைப் பார்க்கவில்லை. ஈச்ச மரங்களின் காய்களையும், அவை மழை போல பொழிவதையும் பார்க்கவில்லை. வேடனால் கட்டுண்டு துன்பப்பட்டுக் கொண்டிருந்த அந்த மானையே பார்த்துக் கொண்டு அதன் அருகே சென்றார்.

நபிகளைக் கண்ட மானின் நிலை

  • கருணை மிகுந்த கண்களும், அழகு பொருந்திய முகமும், கஸ்தூரி மணம் கமழும் உடலும் கொண்டு தம்மை நோக்கி வருவது பரிசுத்தத் தூதராகிய முகமது நபிகள் என்று நிம்மதி அடைந்து, “இறைவனது தூதர் வந்து விட்டார், எனவே இவ்வேடனால் நம் உடலுக்கும் உயிருக்கும் இனி துன்பமில்லை. நம் கன்றையும் மானினத்தோடு சேர்ந்து காணலாம்” என்று தனக்குள் மகிழ்ந்தது.

மானின் துயர் நிலை

  • தரையில் வெள்ளியை உருக்கிவிட்டது போலத் தனது மடியில் பால் சிந்தியிருக்கவும், கண்களில் நீர் பொழிய உடலில் இருந்து பெருமூச்சு வெளிவர, திரும்புவதற்குக் கூட வழியில்லாமல் காலில் கட்டுண்டு கிடந்த மானின் அருகில் நபிகள் சென்றார்.
  • கொடி போன்ற உடம்பிலும், இலையைப் போன்ற குளம்பிலும் இட்ட சுருக்கினால் வேதனைப்பட்டுக் கிடந்த மானின் உடல் பதைக்கின்ற நிலையையும், அதன் பெருமூச்சையும் கண்ட நபிகள் மானின் அருகே அன்பு சுரக்க நின்றார்.
  • அக்காட்டில் உள்ள மரங்களில் உள்ள மலர்கள் செந்தேனைப் பொழிந்தன. அக்காட்சி மானின் துயரத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் மரங்கள் கண்ணீர் சிந்துவது போல இருந்தது.
  • மானைக் கட்டி வைத்திருந்த வேடனைக் கண்ணால் காண்பதும் பாவம் என்பது போல, பறவைகள் தத்தம் இனத்தோடு கூட்டுக்குள் புகுந்தன.
  • பறவைகள் கூட்டுக்குள் புகுந்தபோது பூக்களில் உள்ள தேனை உண்ட வண்டுகள் இசை பாடின. அந்த இசையானது, “முகமது நபி வருவார். மானை மீட்பார். வருந்த வேண்டாம்” என்று கூறுவது போல இருந்தது.
  • மான் தன் துயர் நிலையை நபிகளிடம் கூறியது
  • காட்டில் வேடனால் கட்டுண்டு கிடந்த மான், தன்னருகில் வந்து நின்ற முகமது நபியை நோக்கி, “இறைவனது உண்மையான தூதரே, என் உயிர் போன்ற சுற்றமும், என் கலைமானும், என் கன்றும் ஒன்றாகத் திரண்டு இந்த மலையின் பக்கத்தில் பயமின்றிப் புல் தரையில் மேய்ந்து வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு ஓர் இளங்கன்று வேண்டுமென்று விரும்பியும், நான் கருவுறாததால் வருத்தமடைந்தோம். பின் உங்கள் பெயரைப் போற்றி வணங்கியதால் எனக்குக் கரு உருவாகி வளர்ந்தது. எனக்கும் எனது கலைமானுக்கும் ஓர் இளங்கன்று பிறந்தது. நாங்கள் இன்பக்கடலில் மிதந்தோம். இம்மலையின் பக்கம் துன்பமின்றி வாழ்ந்தோம். ஆனால் என் முன்வினையினை நான் அறியவில்லை. நாங்கள் மலைச்சாரலில் ஒரு நாள் தழையுண்டு பசி தீர்த்து அச்சமின்றி உலவி வந்தோம். நாங்கள் நின்றிருந்த திசையின் எதிரிலிருந்த மலை முகட்டில் இருந்து ஒரு வரிப்புலியின் முழக்கம் கேட்டது. அதைக் கேட்ட நாங்கள் அச்சமடைந்து ஒவ்வொரு திசைக்கும் தனித்தனியாகச் சிதறி ஓடினோம். ஒடிய வேகத்தில் நான் என் கலைமானையும், கன்றையும் காணாது வேறு ஒரு காட்டில் புகுந்தேன்.
  • சென்ற திசை தெரியாது நான் புகுந்த காட்டுக்குள் மறைந்திருந்த இவ்வேடன், வலையைச் சுற்றி எனக்குச் சுருக்கிட்டான். புலியிடமிருந்து தப்பிச் சிங்கத்தின் வாயில் சிக்கியது போன்ற நிலையில், நான் மனமுடைந்து ஒடுங்கி நின்றேன். நான் சிக்கியதைக் கண்ட வேடன், “என் பசிக்கு உணவு கிடைத்தது” என்று கூறி என்னுடைய நான்கு கால்களையும் உடம்பினையும் ஒரு கயிற்றால் கட்டினான். என்னை இவ்வனத்திற்குள் கொண்டு வந்து இறக்கினான். நெஞ்சில் கவலை கொண்டு நான் தளர்வுடன் இருக்கும்போது நீங்கள் வருவதைக் கண்களால் கண்டு தளர்ச்சி நீங்கினேன்” என்று தான் வேடனிடம் சிக்குண்ட சூழலை நபிகள் பெருமானிடம் விளக்கிக் கூறியது.

நபிகளிடம் மான் விடுத்த வேண்டுகோள்

  • வேடனிடம் சிக்குண்ட மான் நபிகள் நாயகத்திடம், “விலங்கு சாதியாயினும் நான் கூறும் சொற்களைக் கேட்பீராக! நான் இவ்வேடனால் இறப்பதற்கு அஞ்சவில்லை. பிறந்த உயிர்கள் ஓருநாள் இறப்பது நிச்சயம். நான் என் கலைமானுடன் பிரிவில்லாமல் சில நாள் வாழ்ந்தேன். அன்புடன் ஒரு கன்றினையும் ஈன்றேன். இனி நான் எது குறித்து வாழ வேண்டும். மூங்கில் இலைப் பனி நீர் போல இவ்வுலக வாழ்க்கை நிலையற்றது. காட்டில் எங்காவது இறவாமல் உம்முடைய முகம் நோக்கி இறப்பதே மேலானது. வரிப்புலியின் முழக்கம் கேட்டு மானினம் சிதறித் தனித்தனியாக ஓடிப் பிரிந்தது. என்னைக் காணாது ஆண்மான் காட்டில் தேடி அலைந்ததோ? அல்லது வரிப்புலியின் வாயில் அகப்பட்டு இறந்ததோ? என் பிரிவினால் புல்லினை உண்ணாமல் நீரினை அருந்தாமல் கண்ணீர் வழிய நெருப்பில் இட்ட இளந்தளிர் போல உடல் பதைத்து நிற்கும். என் கன்று நான் பிடிபடுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் பிறந்தது. எனது மடியில் சுரந்த பாலும் வழிகின்றது. என் கன்று தன் தந்தையிடம் சேர்ந்ததோ? புலியின் வாயில் அகப்பட்டு இறந்ததோ? என்னைத் தேடி அலைகின்றதோ? உன்றும் அறியேன். எனக்கு இதுவன்றி வேறு கவலையில்லை.
  • கலிமா என்னும் மூலமந்திரத்தின் வழியாக, அனைவரையும் சுவர்க்கத்தில் புகச் செய்யும் புண்ணியனே! இவ்வேடனின் பசியைத் தீர்க்க விருப்பமாக உள்ளேன். அதற்கு முன் என் கால்களைப் பிணைத்துள்ள பிணைப்பை நீக்கி, என்னைத் தாங்கள் பிணையாக நின்று விடுவித்தல் வேண்டும். என்னைத் தாங்கள் விடுவித்தால் நான் என் கலைமானைச் சேர்ந்து அதன் கவலையைப் போக்கி என் நிலையை என் இனத்திற்குச் சொல்லி விட்டு என் கன்றுக்குப் பாலூட்டிவிட்டுச் சில மணி நேரத்தில் திரும்பி விடுவேன்” என்று வேண்டி நின்றது.

நபிகள் பிணையாக இருக்க இசைந்தமை

  • மானின் வேண்டுகோளைக் கேட்ட நபிகள், வேடனை நோக்கி, “இந்த மான் தனது கன்றின் துயர் தீர்த்து வரும்வரை நான் இதற்குப் பிணையாக நிற்கிறேன். எனவே இதனை விடுதலை செய்து விடு” என்று கூறினார்.

வேடனின் மறுமொழி

  • நபிகளின் உரையைக் கேட்ட வேடன் சிரித்து, “முட்கள் நிறைந்த காட்டில் முகத்து வியர்வை உள்ளங்கால் வரை நனைய ஓடி எந்த வேட்டையும் கிடைக்கப் பெறாத நிலையில் அம்மானைப் பிடித்துத் தூக்கி வந்தேன். இம்மான் தசையால் என் பசி நீங்கியது என மகிழ்வோடு இருந்தேன். முகமது அவர்களே! நீங்கள் எனக்கு வருத்தம் தரும் சொற்களைக் கூறினீர்கள். இச்சொற்கள் உமக்கு மட்டுமின்றி எவருக்கும் பொருத்தமற்றவை. காட்டில் பிடித்த மானை விட்டுவிட்டால் அது மீண்டும் மனிதனிடம் வருவது முன் எங்கும் நடந்தது உண்டோ? அறிவுடையவர்கள் இவ்வாறு பேசுவது உண்டோ? எனவே ஊனம் மிக்க இச்சொல்லைக் கைவிடுக” என்றான்.

நபியின் மறுமொழி

  • வேடனின் சொற்களைக் கேட்ட நபிகள், “குறிப்பிட்டவாறு உன் பசி தீர்க்க இந்த மான் வராவிட்டால் ஒன்றிற்கு இரண்டாக நான் மான்களைத் தருகிறேன்” என்று வேடனிடம் கூறினார். அது கேட்ட வேடன் நபிகளின் மீது நம்பிக்கை வைத்து நபிகளைப் பிணையாக ஏற்றுக் கொண்டு மானை விடுவித்தான்.

கலைமானின் வேண்டுகோளும், பிணைமானின் நேர்மையும்

  • வேடனிடம் இருந்த மீண்ட மான் வேறு ஒரு காட்டில் தன் மான் கூட்டத்தையும், தனது குட்டியையும் ஆண்மானோடு கண்டு மகிழ்ச்சியுற்றது. பின்பு தன் ஆண் மானின் மனத்துன்பத்தை நீக்கி, குட்டியைப் பாலை உண்ணும்படிச் செய்து விட்டு, தன் சுற்றத்தாரிடமும் தன் கலைமானிடமும் தான் வேடனிடம் மாட்டிக் கொண்ட சூழலையும், நபிகள் பெருமான் தனக்காகப் பிணையாக இருக்க இசைந்து தன்னை விடுவித்தமையையும் கூறியது. அதனால் நான் மீண்டும் வேடனிடம் செல்ல வேண்டும் என்பதைத் தெரிவித்தது. அதைக் கேட்ட கலைமான், “பகைவர் கையில் இருந்து தப்பி வந்த மான் மீண்டும் கொலைப்பட விரும்பி மனிதர்கள் கையில் அகப்படுதல் உண்டோ?” என்று பெண்மானிடம் கூறியது. 
  • இவ்வேண்டுகோளைக் கேட்ட பெண்மான், கலைமானை நோக்கி, “என்னைப் பிணைத்துக் கட்டி வைத்த வேடனின் மனத்தை மாற்றி, தன்னைப் பிணையாகக் கொண்டு என்னை விடுவித்தவர் இறைவன் நபி பெருமான். என் உயிரை வேடனின் பசிக்குத் தந்து நபியினது பிணையை மீட்க நான் மனம் ஒப்பவில்லை என்றால், நான் சுவர்க்கத்தை இழந்து தீய நரகில் புகுவது மட்டுமின்றி வேறு கதியும் பெருமையும் இழக்க வேண்டியிருக்கும். நபிகள் நாயகம் சொன்ன சொல்லை மாற்றிவிட்டு மறந்திருந்தால் நான் வரிப்புலியின் வாய்ப்பட்டு இறப்பதே தக்கதாகும். எனவே வாழும் விருப்பததைக் கைவிட வேண்டும். முன்பு ஒருநாள் நதியின் வெள்ளத்தில் மான் பிணையொன்று நடக்க, அதன்பின் நபியும் மற்றவரும் நடந்து சென்றனர். அப்போது அறிவில்லாத ஒருவன் நபிகள் சொல்லைக் கேட்காது மாறி நடந்ததால் நதிக்குள் வீழ்ந்து மடிந்தான். இந்த அதிசயத்தை அறியாதவர் யார்? இவற்றையெல்லாம் அறிந்தும், என்னை இங்கே நிறுத்துதல் நன்மையன்று” என்று கூறிக் கன்றுக்குப் பாலூட்டிவிட்டு வேடனிடம் செல்ல எழுந்தது.

மானுடன் கன்றும் செல்ல இசைதல்

  • தன் கூட்டத்தை விட்டு அகன்று செல்ல மான் முற்பட்டபோது கன்றானது முன் வந்து, “உன்னை நீங்கி நான் உயிர் வாழ மாட்டேன். அது சத்தியம்” என்று கூறி பிணையுடன் தானும் செல்ல முடிவு எடுத்தது. அதைக் கண்ட பெண்மானும் இறக்க மனமுவந்து செல்வதால் முடிவில்லாத இன்பம் நமக்கு வந்து சேரும் என்று எண்ணி தன் கன்றோடு காட்டை நோக்கிச் சென்றது.

வேடன் நல்லறிவு பெறல்

  • பெண்மானும் அதன் கன்றும் சேர்ந்து வருவதைக் கண்ட நபிகள் நாயகம் வேடனை அழைத்து, “ஒரு பிணைக்கு இரண்டாக உன்னிடம் வருகின்றன பார்” என்று கூறினார். பெண்மானும் அதன் கன்றும் நபிகள் பாதத்தில் பணிந்து “பாவியாகிய எனக்காக வேடனுக்குத் தங்களையே பிணையாக்கினீர். இப்போது மீட்டருள வேண்டும்” என்றுரைத்தது. இதனைக் கேட்ட முகமது நபி அவற்றின் பண்பினைச் சுட்டிக் காட்டி, “இந்தப் பிணையை விட்டு விட்டு உனது பசியினைச் தீர்த்துக் கொண்டு பெருநகரினை அடைக” என்றார். வேடனும், “நான் வீடு பேறு பெற்றேன். வாழ்ந்தேன்” என்று அவர் பாதத்தில் வீழ்ந்தான். பின்பு, “வேதநாயகரே என்பால் கலிமாவினை ஓதும். நான் வெறும் கானக வேடன். விலங்கை ஒத்தவன். நான் தெளிவடையுமாறு இஸ்லாம் நெறிக்கு உரியவனாக என்னை மாற்றி அருள வேண்டும்” என்று இரு கையாலும் ஏந்தி நின்றி மகிழ்வோடு கூறினான்.
  • முகமது நபிகள் மகிழ்வோடு கலிமா சொல்ல, வேடன் அதனை மனங்கொண்டு ஏற்று இறை நம்பிக்கை வைத்து, அதன்படி நடந்து பெருஞ்செல்வனாகித் தீன் வழியல் நிலையாக நின்றான். மேலும், மானை நோக்கி, “உன்னால் மனித வாழ்வில் பெறக்கூடிய உயர்ந்த கதியினைப் பெற்றேன். பிறவி நோயைப் போக்கினேன். நீயும் பயத்தை விட்டுக் கன்றுடன் உன் கலைமானிடம் சென்று நல்லொழுக்கப்படி வாழ்வாயாக” என்று கூறி வாழ்த்தி அனுப்பினான்.

6.இயேசு காவியம்

  • இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
  • இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு பற்றி குறிப்பிடுகிறது.
  • இந்நூல் பாயிரம், பிறப்பு, தயாரிப்பு, பொதுவாழ்வு, பாடுகள், மகிமை என ஐந்து பாகங்களைக் கொண்டது.

ஊதாரிப்பிள்ளை

தந்தையும் இரு மகன்களும்

  • தந்தை ஒருவர் தன் இரு மகன்களுடன், ஊர் முழுவதும் செல்வாக்குடனும், செல்வத்துடனும் வாழ்ந்து வந்தார். மூத்த மகன் குணத்தில் சிறந்தவனாக, தந்தையின் சொல்லை மதித்து நடந்தான். இளைய மகன் தந்தை சொல்லைக் கேட்காமல் ஊதாரித்தனமாகச் சுற்றித் திரிந்தான். ஒருநாள் இளைய மகன் தன் தந்தையிடம் தன் சொத்தைப் பிரித்துத் தருமாறு வற்புறுத்தினான். வேறு வழியின்றி தந்தை சொத்துக்களைப் பிரித்து அவனுக்குச் சேர வேண்டிய பங்கைக் கொடுத்தார். தன் பிள்ளையின் போக்கைக் கண்டு மனம் வருந்தினார். இருப்பினும் இந்தச் செல்வங்களைக் கொண்டு தன் பிள்ளை நன்றாக வாழ்வான் என்று நம்பினார்.

இளைய மகனின் செயல்

  • ஆனால் இளைய மகன் தன் சொத்துக்களைக் குறைந்த விலையில் விற்று விட்டு, அதன் மூலம் கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்று மது, மாது என தன் மனம் போன போக்கில் வாழ்ந்தான். பொருள் அனைத்தும் இழந்தான். அந்த நாட்டில் பெரும்பஞ்சம் ஏற்பட்டது. அந்தப் பஞ்சத்தில் சிக்கிக்கொண்டு மீள வழி தெரியாமல் மாட்டிக் கொண்டான். தன் நாட்டைச் சேர்ந்த மனிதர்களைச் சந்தித்து ஒரு வேலை தேடி அலைந்தான். ஒருவன் பன்றிகளை மேய்க்கும் வேலை கொடுத்தான். அந்தப் பன்றிகளுக்குக் கொடுக்கும் உணவுதான் அவனுக்கும் கிடைத்தது. அவ்வேளையில் தன் தந்தையின் நினைவால் வாடினான். தன் தவறை உணர்ந்தான். தன் தந்தையைத் தேடிச் சென்று அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, “என் தந்தையே உனக்கு எதிராக நின்றேன். எத்தனையோ ஊழியர்கள் இங்கே சுகமாக வாழ, அவர்களுள் ஒரு ஊழியனாக நான் இங்கேயே இருக்கின்றேன். உன் கூலிகளில் ஒருவனாக என்னை ஏற்பாய். ஏனெனில் உன் பிள்ளை என்று சொல்ல எனக்குத் தகுதியில்லை” என்று கூற வேண்டும் என்று எண்ணியவனாகத் தன் தந்தையிடம் சென்றான்.

மனம் திருந்திய இளைய மகன்

  • தன் மகன் எப்போதாவது திருந்தி தம்மிடமே வந்து விடுவான் என்று காத்திருந்த தந்தை, தன் மகனைக் கண்டதும், தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். “நீ எப்போது வருவாய் என்றுதான் நான் காத்திருந்தேன். இப்படி இளைத்திருக்கிறாயே” என்று கூறித் தன் மகனைத் தேற்றினார். மேலும் “நீ தப்பான பிள்ளையல்ல. காலம் செய்த சதி இது. ஆகவே வருந்தாதே” என்று கூறினார். பின்பு, “யாரங்கே பணியாட்களே! பட்டாடை நகைகள், அலங்கார வகைகள் யாவற்றையும் கொண்டு வந்து இவனுக்கு அணிவியுங்கள்” என்று ஆணையிட்டார். தன் மகனுக்கு கன்றின் கறிகளுடன் விருந்து படையுங்கள் என்று கூறினார். அன்று மாலை மூத்த மகன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடே நடனங்களும் பாடல்களுமாக விழாக்கோலம் கொண்டிருப்பதைக் கண்டு வியந்தான். தன் பணியாட்களிடம் கேட்க, அவர்கள், “தங்கள் தம்பி திரும்ப வந்துள்ளார். அவனின் வரவை உங்கள் தந்தை கொண்டாடுகின்றார்” என்று கூறினர். அதைக் கேட்ட மகன் மிகுந்த கோபம் கொண்டு வீட்டின் வெளியிலேயே நின்றான். தன்னைத் தேடி வந்த தந்தையிடம், “சாத்திரங்களை மறந்தவனுக்குத் தடபுடலாக வரவேற்பு கொடுக்கின்றீர். உங்களுடன் இருந்தவரை இதுபோன்று எனக்காக எந்த விருந்தும், விழாவும் நீங்கள் கொண்டாடியதில்லை” என்று கண்கலங்கிக் கூறினான். அதற்குத் தந்தை, “மகனே! நீ எப்போதும் என்னுடன் இருப்பவன். என் செல்வம் யாவும் எப்போதும் உனக்கே உரிமையாகும். உன் தம்பி இறந்து இப்போது உயிர் பெற்று வந்திருக்கின்றான். அவன் மறுபிறவி எடுத்ததற்காகவே இந்த ஏற்பாடுகள்” என்று கூறி சமாதானம் செய்கின்றார்.

முதல் பருவம் – அலகு-3 பாடக்குறிப்புகள்

அலகு-3 நீதி இலக்கியம்

1.திருக்குறள் 

  • பெயர்க்காரணம்:குறள் வெண்பாக்களால் பாடப்பட்டுள்ளதால்  இப்பெயர் பெற்றது.
  • ஆசிரியர்திருவள்ளுவர்
  • பாவகைகுறள் வெண்பா
  • திருக்குறளின் வேறு பெயர்கள்:
    • திருவள்ளுவம்
    • தமிழ் மறை
    • பொதுமறை

அறன் வலியுறுத்தல்

குறள் 1

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு.  

விளக்கம்

  • அறமானது சிறப்பைத் தரும்; செல்வத்தையும் தரும்; அத்தகைய சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறு எதுவும் இல்லை.

குறள் 2

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு.  

விளக்கம்

  • நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.

குறள் 3

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல்.  

விளக்கம்

  • நம்மால் முடிந்த வகைகளில் எல்லாம், முடியக்கூடிய வழிகளில் எல்லாம், அறச் செயல்களை இடைவிடாமல் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும்.

குறள் 4

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற.  

விளக்கம்

  • ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருப்பதே அறமாகும். மனத்தூய்மை இல்லாத மற்றவை யாவும் வெறும் ஆரவாரமே தவிர வேறொன்றும் இல்லை.

குறள் 5

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.   

விளக்கம்

  • பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் என்னும் நான்கிற்கும் சிறிதும் இடம் தராமல் வாழ்வதே  அறம் ஆகும் . அவை யாவும் அறவழிக்குப் பொருந்தாதவைகள்.

குறள் 6

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.

விளக்கம்

  • பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்

குறள் 7

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

விளக்கம்

  • அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள் தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்.

குறள் 8

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்.  

விளக்கம்

  • பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்

குறள் 9

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல.  

விளக்கம்

  • அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.

குறள் 10

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி.  

விளக்கம்

  • பழிச் செயல்கள் செய்யாமல் தன்னைப் பாதுகாத்து, தன் வாழ்நாள் முழுவதும் அறம் செய்ய வேண்டியது மனிதனின் கடமையாகும்.

2.நாலடியார் 

  • பெயர்க்காரணம்: நான்கு அடிகளால் ஆன நானூறு பாடல்களை கொண்டதால் நாலடி நானூறு என்றும் நாலடியார் என்றும் அழைக்கப்படுகிறது
  • ஆசிரியர்சமண முனிவர்கள்
  • தொகுத்தவர்பதுமனார்
  • பாடல்கள் – 400
  • பொருள்அறம்
  • பா வகைவெண்பா

கல்வி

பாடல்

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு.

விளக்கம்

  • நம் தலையில் உள்ள முடிகளைச் சீர்ப்படுத்துவதால் வருகின்ற அழகும், கரையிட்ட (border) ஆடையை அணிவதால் உண்டாகும் அழகும், மஞ்சள் பூசுவதால் உண்டாகின்ற அழகும் உண்மையான அழகல்ல. அவை யாவும் புறத்தே உள்ள அழகை மட்டுமே வெளிப்படுத்துகின்றன. மாறாக, அறநெறியில் நடந்து, நடுவுநிலைமையோடு வாழ்கின்றோம் என்ற பெருமிதத்தைத் தருகின்ற கல்வியே உண்மையான அழகாகும். அது ஒன்றே அகத்தில் அழகைத் தரக் கூடியதாகும்.

3.நான்மணிக்கடிகை

  • பெயர்க்காரணம்: நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற  அணிகலன் போல் ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகள்  இடம்பெறுவதால் நான்மணிக்கடிகை எனும் பெயர் பெற்றது.
  • ஆசிரியர்விளம்பி நாகனார்
  • ஊர்விளம்பி
  • பாடல்கள் -104
  • பாவகைவெண்பா

பாடல்

நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்

குளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை

நலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கு அணியாம்

தான்செல் உலகத்து அறம்

விளக்கம்

  • பசுமையாகக் காணப்படும் நெல்லும், கரும்பும் வயலுக்கு அழகைத் தருகின்றன
  • நீர் நிறைந்த குளத்திற்குத் தாமரைக் கொடியின் இலையும் மலரும் அழகைத் தருகின்றன.
  • பெண்மைக்கு அழகு நாணமுடைமை
  • அதுபோல பிறருக்குச் செய்கின்ற அறச் செயல்கள்  ஒரு மனிதனுக்கு அழகைத் தருகின்றன.

4.பழமொழி நானூறு

  • பெயர்க்காரணம்: ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பழமொழி  இடம்பெறுவதால் பழமொழி நானூறு எனப் பெயர்பெற்றது.
  • ஆசிரியர்முன்றுறை அரையனார்
  • பாடல்கள் – 400
  • பாவகைவெண்பா

பாடல்

தம் நடை நோக்கார், தமர் வந்தவாறு அறியார்,

செந் நடை சேராச் சிறியார்போல் ஆகாது,

நின் நடையானே நட அத்தா! நின் நடை

நின் இன்று அறிகிற்பார் இல்.

விளக்கம்

  • சிறுமைக் குணமுடையவர் தம் நடத்தையைப் பற்றி எண்ணாமல், தம் சுற்றத்தாரைப் பற்றி அறியாமல், நன்னடத்தையைக் கடைப்பிடிக்காமல் நடந்து கொள்வர்
  • இத்தகைய சிறுமையுடையவர் போல நடந்துகொள்ளாமல் நம் பெருமைக்கு ஏற்ற நடத்தையைப் பின்பற்ற வேண்டும். ஏனெனில் நம்முடைய நடத்தையை நம்மைத் தவிர வேறு யார் அறிந்துகொள்ள முடியும்
  • ஆதலால் உயர்ந்த எண்ணம் கொண்டு ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என இப்பாடல் வலியுறுத்துகின்றது.

5.இனியவை நாற்பது

  • பெயர்க்காரணம்: இவை இவை இனிமை பயப்பவை என நாற்பது பாடல்களால் கூறுவதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது.
  • ஆசிரியர்பூதஞ்சேந்தனார்
  • பாடல்கள் – 1 + 40
  • பாவகைவெண்பா

பாடல்

இளமையை மூப்பு என்று உணர்தல் இனிதே

கிளைஞர்மாட்டு அச்சு இன்மை கேட்டல் இனிதே

தட மென் பணை தோள் தளிர் இயலாரை

விடம் என்று உணர்தல் இனிது.

விளக்கம்

  • இளவயதிலேயே முதுமை தருகின்ற மனப்பக்குவம் பெற்றிருப்பது இனிது.  
  • சுற்றத்தார்கள் அன்புமொழி கூறுபவராக அமைவது இனிது.
  • மென்மையான மூங்கில் போன்ற தோள்களைக் கொண்ட பிற மகளிர் நஞ்சைப் போன்றவர் எனத் தெளிந்து விட்டு விலகிவிடுதல் இனிது
  • என வாழ்க்கைக்கு இனிமை தரும் செய்திகளை இப்பாடல் விவரிக்கின்றது.

முதல் பருவம் அலகு-2 பாடக்குறிப்புகள்

அலகு-2 சங்க இலக்கியம்

1. நற்றிணை

  • திணை – குறிஞ்சி
  • பாடியவர் கபிலர்
  • கூற்று – பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.
  • கூற்று விளக்கம் பொருள் ஈட்டுதற் கரணமாகத் தலைவன் தலைவியை விட்டுப் பிரிய எண்ணியதைத் தோழி அறிந்து, தலைவியிடம் கூற, தலைவி தலைவன் அங்ஙனம் என்னை விட்டுப் பிரிய மாட்டார்எனத் தலைவனைப் புகழ்ந்து கூறுகின்றாள்.

பாடலின் விளக்கம்

        “தோழி என் காதலர் சொன்ன சொல்லைத் தவறாமல் காப்பாற்றக் கூடிய வாய்மையுடையவர். நீண்ட காலம் பழகுவதற்கு மிக இனிமையானவர். எப்போதும் என் தோள்களைப் பிரியும் எண்ணம் இல்லாதவர். அத்தகையவருடைய நட்பு, தேனீக்கள் தாமரையின் குளிர்ந்த மகரந்தங்களை ஊதி, உயர்ந்து நிற்கும் சந்தன மரத்தின் தாதினையும் ஊதி, சந்தன மரத்தின் உச்சியில் கொண்டு சென்று சேர்த்து வைத்த தேனைப் போல உறுதியாக உயர்ந்தது. தண்ணீர் இல்லாமல் இவ்வுலகம் இயங்காதது போல, அவர் இல்லாமல் நான் வாழ மாட்டேன் என்பதை நன்கு உணர்ந்தவர். என் மீது மிகுந்த விருப்பம் கொண்டவர். என்னைப் பிரிந்து சென்றால் என் நெற்றியில் பசலை நோய் படரும் என்று அஞ்சி தடுமாற்றம் அடைந்து என்னை விட்டு நீங்கிச் செல்ல மாட்டார்என்று தலைவி கூறுகின்றாள்.        

2. குறுந்தொகை

  • திணை குறிஞ்சி
  • பாடியவர் தேவகுலத்தார்
  • துறை – தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி, தோழி இயற்பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது.
  • துறை விளக்கம் தலைவன் தலைவி வீட்டின் அருகே வந்து நின்றான்.  தலைவியை அவன் மணந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவன் இயல்புகளை இகழ்ந்து கூறுகின்றாள் தோழி. அதைக் கேட்ட தலைவி, தலைவனின் இயல்புகளைப் புகழ்ந்து கூறுகின்றாள்.

பாடல் விளக்கம்

  • எம் தோழியே! கரிய கொம்புகளில்  பூத்துக் குலுங்குகின்ற குறிஞ்சிப் பூக்களில் உள்ள தேனை எடுத்து, மலையில் உள்ள உயர்ந்த மரங்களில் தேனடைகளைச் சேகரித்து வைக்கின்ற  மலைநாட்டில் வாழ்கின்றவன் எம் தலைவன்.  அவனோடு நான் கொண்ட நட்பு, நிலத்தை விடப் பெரியது, வானத்தை விட உயர்ந்தது. கடலைவிட ஆழமானதுஎன்று தலைவி தோழிக்குக் கூறுகின்றாள்.

 

3.ஐங்குறுநூறு

  • திணை – மருதம்
  • பாடியவர் – ஓரம்போகியார்
  • கூற்று – புறத்தொழுக்கத்திலே நெடுநாள் ஒழுகி, “இது தகாதுஎனத் தெளிந்த மனத்தனாய் மீண்டு தலைவியோடு கூடி ஒழுகா நின்ற தலைமகள் தோழியோடு சொல்லாடி யான் அவ்வாறு ஒழுக, நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்கு அவள் சொல்லியது.
  • கூற்று விளக்கம் – பரத்தையர் உறவில் நெடுநாள் வாழ்ந்த தலைமகன் தன் பிழையுணர்ந்து தன் மனைவியை மீண்டும் கூடினாள். அப்பொழுது தோழியை நோக்கி, “நான் உங்களைப் பிரிந்து வாழும் நாட்களில் நீங்கள் என்ன எண்ணியிருந்தீர்கள்?” என வினவினான். அதற்கு விடையாகத் தோழி சொல்லியது.
  • கூற்று – தோழி தலைவனிடம் கூறியது.

பாடல் விளக்கம்

  • தலைவனே! எம் மன்னனாகிய ஆதன் அவினி நெடிது வாழ்க! எம் நாட்டு வயல்களில் நெல்வளம் சிறக்கட்டும்! நாட்டில் பொன் வளம் பெருகட்டும் என்று விரும்புகின்றாள் எம் தாய் (தலைவி). அரும்புகள் நிரம்பிய புன்னை மரங்களும், முட்டைகளை மிகுதியாகக் கொண்ட சிறுமீன்களும் நிறைந்த ஊரின் தலைவன் வாழட்டும்! அவனுடன் அவன் பாணனும் வாழட்டும் என விரும்புகிறேன் எனத் தலைவி கூறினாள்என்று தோழி தலைவனிடம் கூறுகின்றாள்.

4.கலித்தொகை

  • பாடியவர்  – கபிலர்
  • திணை  – குறிஞ்சி
  • துறை – புகாஅக்காலைப் புக்கு எதிர்ப்பட்டுழி பகாவிருந்தின்  பகுதிக்கண்தலைவி தோழிக்குக் கூறியது.
  • துறை விளக்கம் – தலைவன் தலைவியைக் காண வேண்டும் என ஆசையுற்றான். அதனால் தான் புகுதற்குத் தகுதியில்லாத பகற்பொழுதில் தலைவன், உணவு நேரத்தில் தலைவியின் வீட்டுக்குள் புகுதல். அவ்வாறு புகுந்தவனைத் தலைவி காட்டிக்கொடுக்காமல் தாயின்முன் சமாளித்து ஏற்றுக்கொள்ளல்.

பாடல் விளக்கம்

  • ஒளிமிக்க வளையல் அணிந்த தோழியே! நான் சொல்வதைக் கேள். தெருவில் நாம் மணலால் செய்த சிறுவீட்டைத் தன்காலால் கலைத்தும், நாம் கூந்தலில் சூடிய மலர்மாலையை அறுத்தும், வரியை உடைய நாம் விளையாடிக் கொண்டிருந்த பந்தைப் பறித்துக் கொண்டு ஓடியும் நாம் வருந்தத் தக்க செயல்களைச் செய்யும் சிறியவனாகக் கட்டுக்கடங்காமல் திரிந்தான். முன்பு ஒருநாள் தாயும் (அம்மாவும்) நானும் வீட்டில் இருந்தபோது வந்தான். வீட்டின் வாசலில் நின்று, “வீட்டில் இருப்பவர்களே! உண்ணும் நீரை உண்ண விரும்பினேன்என்று குரல் கொடுத்தான். அவ்வாறு வந்து கேட்டவனுக்கு என் தாய், என்னிடம், “ஒளி வீசும் அணிகலன்களை அணிந்தவளே. தங்கத்தாலான குவளையில் கொண்டு போய் நீர் கொடுத்து வாஎன்றாள். அவ்வாறு தாய் சொன்னதால் வந்தவன் சிறு பட்டியாய் இருக்கும் தன்மை அறியாமல் தண்ணீர் கொண்டு போனேன். நான் சென்றதும் வளையல் அணிந்த முன் கையைப் பிடித்து இழுத்தான். (சிறுபட்டி எனில் பட்டியில் அகப்படாத மாடு போன்றவன் எனப் பொருள்) அதனால் நான் வருந்தி அம்மா என அலறி இவன் செய்த செய்த செயலைப் பார்த்தாயா? என்றேன். அம்மா அலறிக்கொண்டு ஓடி வந்தாள். நான் அவன் செய்த குறும்புச் செயலை மறைத்து, இவன் நீர் குடிக்கும் போது விக்கல் எடுத்து வருந்தினான், அதனால் கத்தினேன்என்றேன். நான் மறைத்துக் கூறியதை ஏற்று அம்மாவும் அவன் முதுகைப் பலமுறை தடவிக் கொடுத்தாள். அப்போது அக்கள்வன் மகன் (அந்தத் திருடன்) தன் கடைக்கண்ணால் என்னைக் கொல்வது போல் திருட்டுப்பார்வை பார்த்தான். தன் புன்முறுவலால் என்னை மயக்கி என்னுள்ளத்தில் புகுந்தான்என்று தன் தோழியிடம் தலைவி கூறுகின்றாள்.

 

5.புறநானூறு

  • பாடியவர்: ஔவையார்
  • திணை: பொதுவியல்.
  • திணை விளக்கம்: வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத கருத்துக்களையும், அத்திணைகளுக்குப் பொதுவாக உள்ள கருத்துகளையும் எடுத்துரைப்பது பொதுவியல் திணையாகும்.
  • துறை: பொருண்மொழிக்காஞ்சி.
  • துறை விளக்கம்: துறவியர்கள் கற்று உணர்ந்த நன்மையான செய்திகளை எடுத்துக் கூறுவது இத்துறையாகும்.

பாடல் விளக்கம்

  • நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும், தாழ்ந்த நிலமாக (அவலாக) – பள்ளமாக – இருந்தாலும், மேடான நிலமாக (மிசையாக) இருந்தாலும், எவ்விடத்தில் ஆடவர் நல்லவராய் விளங்குகின்றனரோ, அவ்விடத்தில் மேன்மை பெற்றுத் திகழ்வாய், நிலமே!

6.புறநானூறு

  • பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
  • திணை விளக்கம்வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத கருத்துக்களையும், அத்திணைகளுக்குப் பொதுவாக உள்ள கருத்துகளையும் எடுத்துரைப்பது பொதுவியல் திணையாகும்.
  • துறை: பொருண்மொழிக்காஞ்சி.
  • துறை விளக்கம்துறவியர்கள் கற்று உணர்ந்த நன்மையான செய்திகளை எடுத்துக் கூறுவது இத்துறையாகும்

பாடல் விளக்கம்

  • இந்த உலகம் முழுவதையும் தனக்கே உரிமை கொண்டு ஆட்சி செய்கின்ற மன்னனாக இருந்தாலும், இரவிலும் பகலிலும் உறங்காமல் விலங்குகளை வேட்டையாடித் திரிகின்ற கல்வியறிவற்ற வேடனாக இருந்தாலும் இவ்விருவருக்கும் உண்பது, உடுப்பது ஆகிய இரண்டு செயல்களும் பொதுவானதே. இதைப் போன்றே பிற தேவைகளும் பொதுவானதாகவே இருக்கும். இதுவே இயற்கையின் நியதி. ஆதலால், தான் பெற்ற செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்து உதவுவதே வாழ்வின் பயனாகும். அதை விடுத்து, தான் ஈட்டிய செல்வத்தைத் தானே அனுபவிப்பேன் என்று இறுமாப்பு கொண்டு வாழ்ந்தால் அறம், பொருள், இன்பம் என்ற வாழ்வின் உறுதிப் பொருளை இழக்க நேரிடும் என்று கூறுகின்றார் நக்கீரர்.

7.முல்லைப்பாட்டு

  • மழைப் பொழிவு
    • அலை ஓசை முழங்குகின்ற குளிர்ந்த கடல் நீரைக் குடித்து எழுந்தது மேகம். அகன்ற உலகை வளைத்தது. வலப்பக்கமாக உயர்ந்தெழுந்தது. மலையில் தங்கியது. மாலைக்காலத்தில் பெருமழையாகப் பொழிந்தது. இக்காட்சி திருமால் வாமன அவதாரம் கொண்டபோது, மாவலிசக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்க, மாவலி மூன்றடி மண் கொடுக்கும் பொருட்டு வாமனரின் கரங்களில் நீர் வார்த்தார். அந்நீர் வாமனரின் கைகளில் பட்டவுடன் திருமால், விண்ணையும் மண்ணையும் அளக்கும்படி உயர்ந்து எழுந்ததுபோலக் காட்சியளித்தது.
  • தெய்வத்தை வணங்குதல் 
    • மாலைப்பொழுதில் பெண்கள் காவல் கொண்ட பழமையான ஊருக்கு வெளியே உள்ள தெய்வத்தை நோக்கிச் சென்றனர்.  யாழிசை போன்று முரலுகின்ற வண்டுகள் சூழ்ந்து ஆரவாரிக்கும்படியாக முல்லைப்பூக்கள் மலர்ந்தன. அம்மலர்களையும், நெல்லையும் கொண்டு வந்து தூவி தெய்வத்தை வணங்கி நற்சொல் எதிர்பார்த்து நின்றனர்.
  • நற்சொல் (விரிச்சி) கேட்டல்
    • ஆயர் மகள் இளங்கன்றுக்குட்டியைச் சிறிய தாம்புக் கயிற்றில் கட்டி வைத்திருந்தாள். அது தாய்ப்பசுவை எண்ணித் தவித்துக் கொண்டிருந்தது. அந்தக் கன்றின் கழுத்தைத் தன் கைகளில் அணைத்துக்கொண்டு கோவலர் பின்னிருந்து ஓட்டிக் கொண்டு வர உன் தாய்ப்பசு இப்பொழுதே வந்துவிடும்என்று ஆறுதல் கூறிக் கொண்டிருந்தாள். இந்நற்சொற்கள் தெய்வத்தை வணங்கிக் கொண்டிருந்த பெண்களின் காதில் விழுந்தது. இதுவே தாங்கள் எதிர்பார்த்த நற்செய்தி என்று மகிழ்வுடன் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றனர்.

 

  • தலைவியைத் தேற்றுதல்
    • நற்சொல் கேட்ட பிறகு அப்பெண்கள் யாவரும், போரின் காரணமாகப் பிரிந்து சென்ற தலைவனை எண்ணிக் கலங்கிக் கொண்டிருக்கும் தலைவியை நோக்கிச் சென்றனர். தாங்கள் கேட்ட நற்சொற்களைக் கூறி தலைவன் தான் மேற்கொண்ட வினை முடிந்து பகைவரிடம் திறைப் பொருள் பெற்று விரைந்து வந்து உன்னைச் சந்திப்பார். ஆதலால், நீ உன் மனத்தடுமாற்றத்தால் அடையும் துன்பத்தைப் போக்கிக் கொள்எனப் பன்முறை கூறித் தேற்றினர். அவர்களின் சொற்களைக் கேட்டு மனம் ஆற்றாதவளான தலைவியின் கண்களிலிருந்து முத்துப்போன்ற கண்ணீர்த் துளிகள் விழுந்தன.
  • பாசறையின் அமைப்பு 
    • காட்டாறு பாய்கின்ற முல்லைக் காட்டில், மணம் வீசும் பிடவம்பூச் செடிகள் களையப்பட்டு, வேடருடைய அரண்கள் அழிக்கப்பட்டு, வேட்டையாடும் விலங்குகள் உள்ளே வராத வண்ணம் முள் வேலியை மதிலாக வளைத்துக் கடலைப்போல் அகலமாக பாசறை வீடு உருவாக்கப்பட்டது. அது பாடி வீடு என்று அழைக்கப்படும். அவ்வீட்டில் தலைவன் தங்கியிருந்தான்.
  • போர் யானையும் யானைப் பாகனும் 
    • பாசறை அமைக்கப்பட்ட தெருக்களில் உவலைக் கொடி படர்ந்த கூரைக் கூடாரங்கள் இருந்தன. தெருக்கள் பிரியும் முற்றத்தில் காவலுக்காக யானைகள் நிறுத்தப்பட்டு இருந்தன. அந்த யானைகளுக்குக் கம்பும், கதிரோடு கூடிய நெற்கதிர்க் கட்டுகளும், அதிமதுரத் தழையும் உணவாகக் கொடுக்கப்பட்டன. அந்த யானைகள் அவற்றைத் தன் கைகளால் வாங்கி, உண்ணாமல் அவற்றால் தன் நெற்றியைத் துடைத்துக் கொண்டன. கையில் அங்குசம் வைத்திருந்த இளைஞர்களான பாகர்கள் யானைகளுக்குப் புரிகின்ற வடமொழிச் சொற்களைக் கூறி அவற்றை உண்ணும்படிப் பயிற்றுவித்தனர்.
  • அரண்
    • தவம் பூண்ட அந்தணர் மூன்று கோல்கள் இணைந்த முக்கோலைக் கையில் வைத்திருப்பர். அந்தக் கோலில் தங்கள் காவி ஆடையைத் தொங்க விடுவர். அதுபோல  போர் வீரர்கள் தங்கள் வில்லினை நிலத்தில் ஊன்றி அவற்றின்மேல் தங்கள் அம்புகள் வைத்திருக்கும் தூணியைத் தொங்க விட்டனர். தங்கள் வேல்களை வரிசையாக நட்டுக் கயிற்றால் இறுகக் கட்டிக் கூடாரம் அமைத்தனர்.  பின்னர் எறிகோல்களை அதன்மீது நட்டு தோலால் ஆன  கருவிகளை வரிசையாகப் பரப்பிப் பிணைத்து இருக்கை அமைத்தனர். இவ்வாறு வில்லால் செய்யப்பட்ட அரணில் தலைவனை அமர வைத்தனர்.
  • அரசனுக்கு அமைத்த பாசறை 
    • பல்வேறு படை வீரர்களின் இருக்கைக்கு நடுவே, வேறு ஒரு தனி இடத்தில் தலைவனுக்கென்று தனிப் பாசறையை அமைத்தனர். பலநிறமுடைய மதில் திரையை வளைத்து அதன் உள்ளே அரசனுக்கு இருக்கை அமைத்தனர். பல்வேறு படைவீரர்கள் அதனைக் காவல் புரிந்தனர்.
  • மங்கையர் விளக்கு ஏற்றுதல் 
    • முதுகில் கூந்தல் புரள, கையில் வளையலுடன், தன் கச்சோடு வாளினைச் சேர்த்துக் கட்டிய மங்கையர் அரசனுக்கென்று அமைத்த பாசறையில் உள்ள பாவை விளக்கில் நீண்ட திரியை இட்டனர். நெய் வார்த்து விளக்கேற்றினர். விளக்கின் சுடர் மங்கும்போதெல்லாம் அதன் திரியைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தனர்.
  • மெய்க்காப்பாளர் காவல் புரிதல் 
    • நீண்ட நாக்கினை உடைய மணி இது நள்ளிரவு என ஒலித்துக் காட்டியது. புனலிப்பூக்கள் பூத்த சிறு செடிகள், மழைத் தூறலுடன் வீசுகின்ற காற்றில் அசைந்தாடுவதைப் போன்று, தம் தலையைத் துகிலால் மயிர்க்கட்டுக் கட்டியிருக்கும் வயது முதிர்ந்த மெய்க்காப்பாளர்கள் தூக்க மயக்கத்துடன் ஆடி அசைந்து கொண்டே மன்னனைச் சூழ்ந்து காவலாக நின்றனர். அவர்கள் மெய்ப்பை எனப்படும் சட்டை அணிந்திருந்தனர்.
  • நாழிகைக் கணக்கர் பொழுது அறிவித்தல் 
    • பிழையின்றி காலத்தைக் கணிக்கும் நாழிகைக் கணக்கர் மன்னனைத் தம் கையால் தொழுது வணங்கினார். மன்னனை வாழ்த்திவிட்டு கடல் சூழ்ந்த உலகத்தை வெல்ல வந்தவரே உன்னுடைய நாழிகை வட்டிலில் சென்ற நாழிகை இதுவே. காண்பாயாகஎன்று மன்னனுக்கு அறிவிக்கின்றார். (நாழிகை வட்டில் வட்டிலில் நீரிட்டு ஒரு சிறு துளை வழியாக அந்நீரைச் சிறிது சிறிதாகக் கசிய விட்டு அந்நீரை அளந்து காணும் கருவி)
  • யவனர் செயல் 
    • வலிமையான கயிற்றால் திரைகள் இழுத்துக் கட்டப்பட்ட அரசனின் பாசறையில் உள் அறை, புற அறை என இரண்டு அறைகள் இருந்தன. அவை புலிச் சங்கிலியால் ஒப்பனை செய்யப்பட்டிருந்தன. உள் அறையாகிய பள்ளி அறையில் அரசன் படுத்திருந்தான். அவனருகில் வாய் பேச முடியாத ஊமை வீரர்கள் பாதுகாவலுக்காக நின்றனர். அவர்களின் தோற்றம் அச்சம் கொள்ளத்தக்கதாக இருந்தது. மடங்கிப் புடைத்துத் தோன்றும்படி நெருங்கிக் கட்டின ஆடை அணிந்திருந்தனர். அவ் ஆடைமேல் குதிரைச் சவுக்கு வளைந்து கிடக்கிறது. வலிமை மிக்க உடம்பில் தங்கள்  உடம்பில் சட்டை அணிந்திருந்தனர். பாசறையின் மணி விளக்கை எரிய வைத்துக் கொண்டிருந்தனர்.
  • மன்னன் நிலை 
    • மன்னன் ஒரு கையைப் படுக்கை மேல் வைத்து, கடகம் அணிந்த மற்றொரு கையால் தலையைத் தாங்கியவனாய் உறக்கம் கொள்ளாமல் இரவு முழுவதும் முன்நாளில் நடந்த போர் நிகழ்ச்சிகளை நினைத்தவனாய்ப் படுத்திருந்தான். 
    • போரில் பகைவர் எறிந்த வேல் உடலைக் கிழித்தமையால் புண் மிகுந்து தம் பிடி யானைகளை மறந்து நின்ற களிறுகளை நினைக்கின்றான். 
    • அடிபட்ட பாம்பு துடிப்பதைப்போல களிறுகள் தம் வெட்டுப்பட்டுக் கைகளை இழந்து வருந்தும் காட்சியை நினைக்கின்றான்.
    • தாம் அணிந்த வஞ்சி மாலைக்கு வெற்றியைத் தேடித் தந்து, செஞ்சோற்றுக் கடன் தீர்த்து போரில் இறந்த வீரரை நினைக்கின்றான்.
    • கூர்மையான அம்பின் நுனிகள் தோலில் பாய்ந்ததால் வலி பொறுக்காது தம் செவியைச் சாய்த்துப் புல் உண்ண இயலாமல் வருந்தும் குதிரைகளை நினைக்கின்றான். இவற்றையெல்லாம் நினைத்துக் கொண்டே உறக்கம் கொள்ளாமல் தவிக்கின்றான்.
  • பாசறையில் வெற்றி முழக்கம் 
    • மறுநாள் போரில், படைக்கருவியால் பகைவரை வென்று வெற்றி தேடித் தந்த போர் வீரர்கள் பகை மன்னர்கள் நடுங்கும்படி வெற்றி முரசை முழங்கினர். பாசறையில் அவ்வெற்றி முழக்கத்தைக் கேட்டுக் கொண்டே வினை முடித்த மனநிறைவோடு இனிதாகத் துயில் கொள்கின்றான் மன்னன்.
  • தலைவியின் துயரம்
    • பாவை விளக்குகள் ஒளி வீசும் உயர்ந்த ஏழடுக்கு மாளிகையில் அமர்ந்திருக்கும் தலைவி தலைவனின் பிரிவை ஆற்றாதவளாய் மனம் வருந்துகின்றாள்.  நான் வரும் வரை பிரிவை ஆற்றியிருஎனக் கூறிச் சென்ற தலைவனின் சொல்லை மீறுவது கற்பிற்கு இழுக்காகும் என்று தம் மனத்தைத் தேற்றுகின்றாள். எனினும், பிரிவாற்றாமையால் வருத்தம் கொண்டு மீண்டும் தலைவனை எண்ணி மயங்குகின்றாள். பிரிவின் துயரால் உடல் மெலிந்து போனதால் அவள் அணிகலன்கள் கழண்டு விழுகின்றன. அம்பு தைத்த மயில்போல நடுங்கி நிற்கிறாள். மழைநீர் கூரை மேல் அருவி போன்று விழுகின்ற ஓசையைக் கேட்டவாறு நெஞ்சம் ஆற்றுகின்றாள். அப்போது அவள் காதுகளில் தலைவன் வரும் ஆரவார ஓசை கேட்டது.
  • அரசன் மீண்டு வருதல் 
    • பகைவரை வென்று அவர்தம் நிலங்களைக் கவர்ந்து திரண்ட படையோடு வெற்றிக் கொடி உயர்த்தி ஊது கொம்பும் சங்கும் முழங்க வருகின்றான் தலைவன்.
  • மழையால் செழித்த முல்லைநிலம்
    • அரசன் வரும் வழியில் காயா மலர்கள் மலர்ந்திருக்கின்றன. கொன்றை மலர்கள் பூத்திருக்கின்றன. வெண் காந்தள் மொட்டுக்கள் விரிந்திருக்கின்றன. தோன்றி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. முல்லை நில வழியில் பருவ மழை பெய்த காரணத்தால் நன்கு விளைந்த கதிர்கள் காணப்படுகின்றன. அதனருகில் கொம்புகள் கொண்ட இரலை மான்களுடன் (ஆண்) மடப்பம் பொருந்திய மான்கள் (பெண்) துள்ளி குதித்து விளையாடுகின்றன. மழை மெதுவாகப் பொழிந்து கொண்டிருந்தது.
  • தேர் வருகை 
    • வள்ளிக்கிழங்கு முதிர்ந்திருக்கும் முல்லைக் காட்டில் அரசனது தேர்க்குதிரைகளைத் தேரோட்டி விரைவாகச் செலுத்திக் கொண்டிருந்தான். அந்த ஓசைகளால் தலைவியின் காதுகள் குளிர்ந்து மகிழ்ந்தன.

இரண்டாம் பருவம் – அலகு- 5 பாடக்குறிப்புகள்

அலகு – 5: மொழிப் பயிற்சி

 

1. பிழை – திருத்தம் (பொதுவான சொற்களும் அவற்றின் திருத்தங்களும்)

மூலங்களில் காணப்படும் எழுத்து மற்றும் சொற்பிழைகளும் அவற்றின் திருத்தங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

பிழைச் சொல்

திருத்தம்

பிழைச் சொல்

திருத்தம்

வாசிப்பது

வாசிப்பவர்

சில்லறை

சில்லரை

சுவர்

சுவரில்

கறுப்பு

கருப்பு

இயக்குநர்

இயக்குனர்

முறித்தல்

முரித்தல்

மனம்/மனசு

மனது/மனம்

அருகாமையில்

அருகில்

அக்கரை

அக்கறை

மங்கலம்

மங்களம்

சிகப்பு

சிவப்பு

அகண்ட

அகன்ற

ஒருக்கால

ஒருகால

கத்திரிக்காய்

கத்தரிக்காய்

அதுகள்

அவை

கம்பிளி

கம்பளி

அருவாமனை

அரிவாள்மனை

கறம்

கரம்

காக்கா

காக்கை

அறுவறுப்பு

அருவருப்பு

கிரணம்

கிரகணம்

அங்கிட்டு

அங்கு

அமக்களம்

அமர்க்களம்

கோர்வை

கோவை

அத்தினி

அத்தனை

சமயல்

சமையல்

அவுத்து

அவிழ்த்து

சிலது

சில

ஆச்சு

ஆயிற்று

அப்ளாம்

அப்பளம்

இரும்பல்

இருமல்

அடமழை

அடைமழை

இங்கிட்டு

இங்கு

ஆத்திற்கு

ஆற்றிற்கு

இறச்சி

இறைச்சி

ஆம்பிள்ளை

ஆண்பிள்ளை

இவையன்று

இவையல்ல

இடதுபக்கம்

இடப்பக்கம்

ஈர்கலி

ஈர்கொல்லி

இடதுகை

இடக்கை

உடமை

உடைமை

இளனி

இளநீர்

உருச்சி

உரித்து

இடைபோடு

எடைபோடு

இத்துபோதல்

இற்றுப்போதல்

உசிர்

உயிர்

ஒத்தடம்

ஒற்றடம்

ஒம்பது

ஒன்பது

எண்ணெ

எண்ணெய்

உலந்து

உலர்ந்து

ஒருக்கால்

ஒருகால்

அருணைக்கயிறு

அரைஞாண்கயிறு

புஞ்சை

புன்செய்

ஒட்டரை

ஒட்டடை

பாவக்காய்

பாகற்காய்

கடப்பாறை

கடப்பாரை

தவக்களை

தவளை

இசிக்கின்றான்

இழிக்கின்றான்

கொரங்கு

குரங்கு

காத்து

காற்று

முயற்சித்தார்

முயன்றார்

ஆத்தக்கரை

ஆற்றங்கரை

தோப்பனார்

தகப்பனார்

காவா

வாய்க்கால்/கால்வாய்

வேர்வை

வியர்வை

பேரன்

பெயரன்

வண்ணாத்திப்பூச்சி

வண்ணத்துப்பூச்சி

இடதுபுறம்

இடப்புறம்

உசிரு

உயிர்

இத்தினை

இத்தனை

எம்பது

எண்பது

ஒருவள்

ஒருத்தி

எழவு

இழவு

கண்ணாலம்

கலியாணம்

கடகால்

கடைக்கால்

கவுளி

கவளி

கட்டிடம்

கட்டடம்

கருவேற்பிலை

கறிவேப்பிலை

கெனவு

கனவு

முந்தாணி

முன்றாணை/முன்தானை

ரொம்ப

நிரம்ப

வலதுபக்கம்

வலப்பக்கம்

வெய்யல்

வெயில்

வெட்டிப்பேச்சு

வெற்றுப்பேச்சு

சுவற்றில்

சுவரில்

கோடாலி

கோடரி

தமயன்

தமையன்

சந்தணம்

சந்தனம்

தாப்பாள்

தாழ்ப்பாள்

சாயங்காலம்

சாயுங்காலம்

திருவிளா

திருவிழா

சிலவு

செலவு

துடங்கு

தொடங்கு

சீக்காய்

சீகைக்காய் / சிகைக்காய்

நஞ்ச

நன்செய்

தடுமாட்டம்

தடுமாற்றம்

நெனவு

நினைவு

தலகாணி

தலையணை

நோம்பு

நோன்பு

தாவாரம்

தாழ்வாரம்

பொண்ணு

பெண்

திரேகம்

தேகம்

மாத்தினான்

மாற்றினான்

மாச்சி

மாட்சி

தொடப்பம்

துடைப்பம்

நாத்தம்

நாற்றம்

முழித்தான்

விழித்தான்

நேத்து

நேற்று

மோர்ந்து

மோந்து

பன்னெண்டு

பன்னிரெண்டு

முன்னுாறு

முந்நுாறு

புண்ணாக்கு

பிண்ணாக்கு

பொம்பளை

பெண்பிள்ளை

வயறு

வயிறு

வெங்கலம்

வெண்கலம்

மாயிலை

மாவிலை

வேணும்

வேண்டும்

முழுங்கு

விழுங்கு

மெனக்கெட்டு

வினைகெட்டு

வைக்கல்

வைக்கோல்

வென்னீர்

வெந்நீர்

அலமேலுமங்கை

அலர்மேல்மங்கை

அவரக்கா

அவரைக்காய்

ஒசத்தி ஒயர்வு

உயர்வு

ஒண்டியாய்

ஒன்றியாய்

ஒண்டிக்குடித்தனம்

ஒன்றிக்குடித்தனம்

பதட்டம்

பதற்றம்

புழக்கடை

புறக்கடை

மணத்தக்காளி

மணித்தக்காளி

அடமானம்

அடைமானம்

சாம்பராணி

சாம்பிராணி

கெடிகாரம்

கடிகாரம்

துவக்கம்

தொடக்கம்

துவக்கப்பள்ளி

தொடக்கப்பள்ளி

துளிர்

தளிர்

தொந்திரவு

தொந்தரவு

தேனீர்

தேநீர்

பண்டகசாலை

பண்டசாலை

பயிறு

பயறு

வேண்டாம்

வேண்டா

எடஞ்சல்

இடைஞ்சல்

எலிமிச்சம்பழம்

எலுமிச்சம்பழம்

கைமாறு

கைம்மாறு

பொடைத்தாள்

புடைத்தாள்

இன்னிக்கு

இன்றைக்கு

கழட்டு

கழற்று

துகை

தொகை

வத்தல்

வற்றல்

பசும்பால்

பசுப்பால்

தின்னீர்

திருநீறு

திருவாணி

திருகாணி

சாணி

சாணம்

புட்டு

பிட்டு

கவுனி

கவனி

அனியாயம்

அநியாயம்

உத்திரவு

உத்தரவு

எதுகள்

எவை

எந்தன்

என்றன்

குத்துதல் (நெல்)

குற்றுதல் (நெல்)

சோத்துப்பானை

சோற்றுப்பானை

பீத்தல்

பீற்றல்

புணையம்

பிணையம்

எல்லோரும்

எல்லாரும்

கத்திரிக்கோல்

கத்தரிக்கோல்

கர்ப்பூரம்

கருப்பூரம்

கோர்த்தான்

கோத்தான்

சித்தரித்தல்

சித்திரித்தல்

தேங்காய் முடி

தேங்காய் மூடி

தோற்கடித்தான்

தோல்வியுற அடித்தான்

விசாரி

உசாவு

நாழி

நாழிகை

பூசணிக்காய்

பூச்சுணைக்காய்

முகர்தல்

மோத்தல்

மென்மேலும்

மேன்மேலும்

அப்பாவி

அற்ப ஆவி

எல்கை

எல்லை

ஏழரை நாட்டுச் சனியன்

ஏழரை ஆட்டைச் சனியன்

களி கூறுங்கள்

களிகூருங்கள்

கம்மனாட்டி

கைம்பொண்டாட்டி

கழிசடை

கழியாடை

கிடாய்

கடா

கெவுளி

கௌளி

சதை

தசை

சும்மாடு

சுடையடை

மார்வலி

மார்புவலி

ஓரவத்தி

ஓரகத்தி

கண்றாவி

கண்ணராவி

கம்மாய்

கண்மாய்

சக்களத்தி

சகக்கிளத்தி

சில்லரை

சில்லறை

சின்னாபின்னம்

சின்னபின்னம்

நிச்சயதார்த்தம்

நிச்சியதார்த்தம்

மாதாமாதம்

மாதம்மாதம்

மிரட்டினார்

மருட்டினார்

வரேன்

வாரேன்

வராது

வாராது

வாத்தியார்

உபாத்தியாயர்

வாத்திச்சி

உபாத்தியாயினி

வாய்ப்பாடு

வாய்பாடு

வாவரசி

வாழ்வரசி

வியாதியஸ்தர்

வியாதிஸ்தர்

வெங்கடாசலம்

வேங்கடாசலம்

வெள்ளாமை

வேளாண்மை

2. மொழிபெயர்ப்பு (Translation)

நெல்சன் மண்டேலாவின் கூற்று

  • நீங்கள் ஒரு மனிதனிடம் ஒரு மொழியில் பேசி, அவன் புரிந்துகொண்டால், அது அவனுடைய மூளைக்குச் செல்லும்.

  • நீங்கள் அவனுடைய சொந்த மொழியிலேயே பேசினால் அது அவனுடைய இதயத்தைத் தொடும்.

ரீட்டா மே பிரௌன் கூற்று

  • மொழி ஒரு கலாச்சாரத்தின் வழிகாட்டியாக இருக்கிறது.

  • அது உங்களுக்கு மக்கள் எங்கே இருந்து வந்தார்கள்? அவர்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்லும்.

இயற்கை விளக்கம்

  • தங்கநிற சூரியன் தினமும் அதிகாலையில் எழுந்து, பிரகாசமான ஒளிக்கதிர்களால் இருளைப் போக்குகிறது.

  • பால் போன்ற மேகங்கள் அலைகின்றன.

  • வண்ணமயமான பறவைகள் சிறகுகளை அடித்து காலை இசையைத் தொடங்குகின்றன.

  • அழகான வண்ணத்துப் பூச்சிகள் மலர்களைச் சுற்றி நடனமாடும்.

  • மலர்களின் நறுமணம் தென்றல் காற்றை நிரப்புகிறது.

  • இத் தென்றல் மென்மையாக உலவி எல்லா இடங்களிலும், எல்லாப் பொருள்களிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

தமிழ் கலாச்சாரம் (இளங்கோவன் உரை)

  • தமிழர்கள் கலாச்சாரத்திலும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கியதாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்க இலக்கியங்களில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

  • தமிழர்கள் மொழிக்கு இலக்கணம் வகுத்ததைப் போலவே வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்துள்ளனர்.

  • தமிழ்ப் பண்பாடு இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து என உலகளாவிய தமிழ் மக்களின் வாழ்க்கை முறையில் வேரூன்றியுள்ளது.

  • நமது பண்பாடு மிகவும் பழமையானது என்றாலும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

  • நாம் நமது கலாச்சாரத்தைப் பற்றிப் பெருமை கொள்ள வேண்டும்.

மின்சார சேமிப்பு (மலர் – தேவி உரையாடல்)

  • மலர்: அறையை விட்டு வெளியே செல்லும் போது விளக்கை அணைத்துவிட வேண்டும்.

  • தேவி: நாம் மின்சாரத்தை சேமிக்க வேண்டும்.

  • மலர்: நமது நாடு நிறைய மின்சாரத்தை வீதிகளில் விளக்குவதற்காக செலவு செய்கிறது.

  • தேவி: வருங்காலத்தில் நமது நாடு வானத்தில் செயற்கை நிலாவை நிறுவி விளக்குகளை எரிய செய்யலாம்.

  • மலர்: சில நாடுகள் இது போன்ற ஒளியூட்டும் செயற்கைக் கோள்களை விரைவில் நிறுவதாக நான் படித்திருக்கிறேன்.

  • தேவி: நாம் செயற்கை நிலாவை நிறுவினால், இயற்கை பேரழிவால் பாதிப்பு ஏற்படும் போது அந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் பொழுது விளக்குகளை ஒளிரச் செய்யலாம்.

3. கூத்து (Therukoothu)

  • பெயர் விளக்கம்: தெருக்கூத்து என்பது, அதன் பெயருக்கேற்ப வீதிகளில் நடத்தப்படும் ஒரு புகழ்பெற்ற திரையரங்கம் ஆகும்.

  • நிகழ்த்துவோர்: இது கிராமியக் கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டது.

  • கதை மூலம்: இதற்குரிய கதைகள் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்களிலிருந்து எடுக்கப்படுகின்றன.

  • அமைப்பு: 15 முதல் 20 கலைஞர்கள் சிறு இசைக்குழுவாக கூத்துக் குழுவில் இருப்பார்கள்.

  • நிகழ்த்து முறை: இசைக்குழுவில் பாடகர் இருந்தாலும், கலைஞர்கள் சொந்தக் குரலிலேயே பாடுகிறார்கள்.

  • அலங்காரம்: கலைஞர்கள் சிறந்த உடை அலங்காரமும் பளிச்சிடும் ஒப்பனையும் தாங்களாகவே செய்து கொள்வார்கள்.

  • பிரபலம்: கூத்து கிராமப் புறங்களில் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.

4. மருத நிலம் (Marutam Region)

  • பிரிவு: தமிழ்நாட்டில் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து நிலப் பிரிவுகளில் மருத நிலப் பகுதியும் ஒன்று.

  • சிறப்பு: இது உழவுத் தொழிலுக்கு மிகவும் ஏற்றதாக இருந்தது, ஏனெனில் இதில் மிகவும் வளமான நிலங்கள் இருந்தன.

  • விவசாயத் தேவைகள்: விவசாயிகளுக்குத் தேவையான சூரிய ஒளி, பருவமழை, மண் வளம் ஆகியவை கிடைக்கிறது.

  • முக்கியத்துவம்: இயற்கையின் இத்தனைக் கூறுகளிலும் சூரிய ஒளியே உயர்ந்ததாகப் பழந்தமிழர்கள் கருதினார்கள்.

5. ரோம் பிச்சைக்காரர்கள் கதை (God vs. King)

  • பிச்சைக்காரர்களின் முழக்கம்: ரோம் நகரில் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தனர்.

    • முதல் பிச்சைக்காரன்: “கடவுள் யாருக்கு உதவுகிறாரோ, அவனே உதவியைப் பெறுவான்” என்று கத்திக் கொண்டு செல்வான்.

    • இரண்டாம் பிச்சைக்காரன்: “அரசன் யாருக்கு உதவி செய்கிறாரோ, அவனே உதவியைப் பெறுவான்” என்று கத்திக் கொண்டு செல்வான்.

  • அரசரின் உதவி: பேரரசர், தன்னை வீதிகளில் புகழ்ந்த இரண்டாம் பிச்சைக்காரனுக்கு உதவ முடிவு செய்தார். அவர் ஒரு ரொட்டித் துண்டின் உள்ளே தங்கத் துண்டுகளை வைத்து தயாரித்து அவனுக்குக் கொடுத்தார்.

  • முதல் பிச்சைக்காரனின் வெற்றி: ரொட்டித் துண்டுகள் கனமாக இருந்ததால், இரண்டாம் பிச்சைக்காரன் அதைச் சந்தித்தவுடன் தன் நண்பனுக்கு (முதல் பிச்சைக்காரனிடம்) விற்று விடுகிறான்.

  • ரொட்டியை வாங்கிய முதல் பிச்சைக்காரன் வெட்டிப் பார்த்த போது, “ஒளிரும் தங்கத் துண்டுகளைக் கண்டான்”. அவன் கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு, அன்றே பிச்சை எடுப்பதை நிறுத்திக் கொண்டான்.

  • அரசரின் ஏமாற்றம்: இரண்டாம் பிச்சைக்காரன் மீண்டும் தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான்.

  • அரசர் அவனை அழைத்து, ரொட்டியை என்ன செய்தாய் என்று கேட்டபோது, அவன், “அது அதிக எடை கொண்டதாகும், சரியாக வேகாமலும் இருந்தது” என்று கூறி நண்பனுக்கு விற்றுவிட்டதாகப் பதில் கூறினான்.

  • பேரரசர் கூற்று: அதைக் கேட்ட அரசர், “உண்மையில் கடவுள் யாருக்கு உதவ நினைக்கிறாரோ, அவரே உதவியைப் பெறுகிறார்” என்று கூறிவிட்டு, அந்தப் பிச்சைக்காரனை அரண்மனையிலிருந்து வெளியேற்றினார்.

இரண்டாம் பருவம்- அலகு-4 பாடக்குறிப்புகள்

அலகு- 4: இக்கால இலக்கியம் -II

1. திருக்குறள் மாநாடு – பெரியார் உரை

  • ஆரியத்தை ஒழிக்கும் ஆயுதம்: திருக்குறளே ஆரியத்தை ஒழிக்கும் ஒப்பற்ற ஆயுதம் என்று பெரியார் குறிப்பிடுகிறார்.

  • தன்னறிவு முதன்மை: பெரியார் எப்போதும் தன் அறிவு ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டவர்.

  • நடைமுறைப்படுத்தல்: மனிதன் ஒவ்வொருவனும் தன் வாழ்வுக்குத் தானே எஜமானன் என்பதை உணர்ந்து செயலாற்றுவதே நன்மை பயக்கும்.

  • திருக்குறள் மீதான பார்வை: இன்று தாம் திருக்குறளைப் புகழ்வதற்குக் காரணம், தம்முடைய கருத்துகள் அதில் காணப்படுவதுதான்.

  • பகுத்தறிவுக்கு ஒவ்வாததை நீக்குதல்: திருக்குறளில் தம் முன்னேற்றக் கருத்துக்கு ஒவ்வாதன இருப்பின், அவற்றை விலக்கத் தாம் ஒருபோதும் தயங்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.

  • குறளும் சுயமரியாதையும்:

    • சுயமரியாதைப் பிரச்சாரத்தால் மூட நம்பிக்கைகளும், ஆரிய முறையும் பெருமளவுக்கு நீங்கிவிட்டன.

    • நீண்ட நாட்களாக ஆரியத்தால் புகுத்தப்பட்ட கடவுள், மதம் சார்ந்த மூட நம்பிக்கைகள் ஒழிக்கப்படும் வரை திருக்குறளை மக்களிடையே பரப்பினால் பயனில்லை என்று உணர்ந்ததால் முன்பு அதிகம் பேசாமல் இருந்தார்.

    • இன்று சுயமரியாதைப் பிரசாரம் வெற்றி பெற்று, ஆரியம் அழியும் காலம் நெருங்கிவிட்டதை அறிந்த பிறகே திருக்குறளைப் பரப்பத் துணிவு கொண்டு மாநாட்டைக் கூட்டினர்.

  • ஒழுக்கக் கேடு: சமுதாயத்தின் ஒழுக்கமும், நாணயமும் மிகவும் கெட்டுவிட்டதாகவும், இத்தகைய ஒழுக்கக் கேட்டிற்குக் காரணமான கடவுளும் மதமும் மாற்றப்பட்டாக வேண்டுமென்றும் தெரிவித்தார்.

  • காந்தியடிகள் உதாரணம்: காந்தியார் வணங்கிய கடவுளும், போற்றிய அகிம்சை, சத்தியம், மதமும் அவருக்கே பயன்படாது போனது, இந்த உண்மையை மக்களுக்குப் புலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே.

  • வாழ்க்கையைச் செப்பனிடுதல்: திருக்குறளை யார் எழுதியது, அவர் காலமென்ன என்ற ஆராய்ச்சிகளை எல்லாம் சரித்திரப் பேராசிரியர்களுக்கே விட்டுவிட்டு, குறளில் உள்ள கருத்துகளின்படி நம் வாழ்க்கையை செப்பனிட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

  • உருவக் கடவுள் இல்லை: வள்ளுவர் எங்கும் உருவக் கடவுளைப் பற்றிக் குறிக்கவே இல்லை என்றும்.

  • கடவுள் வாழ்த்து விளக்கம்: கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் மனிதன் இன்னின்ன உயர்வான குணங்களைப் பெறுதல் வேண்டும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது; அது உயர்வான மனிதத் தன்மை எதுவென்பதை விளக்குகிறது.

  • வானின் சிறப்பு: மக்கள் ஒழுக்கமாயிருந்தால் மழை பெய்யும் என்ற மதவாதிகளின் கருத்தைக் கண்டித்து, மழை பெய்தால் தான் மக்கள் கஷ்டமின்றி வாழ முடியும், அப்போதுதான் ஒழுக்கம் நிலவ முடியும் என்று வள்ளுவர் கூறியிருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

  • பெண்வழிச் சேரல் விளக்கம்:

    • திருவள்ளுவர் பெண்களை ஐந்து வகைகளாகப் பிரித்தே பேசியிருக்கிறார்.

    • ‘பெண் வழிச் சேரல்’ என்ற பகுதியில் குறிப்பிடப்பட்ட பெண்டிர், தான்தோன்றித்தனமாக சுதந்திரமாக வாழ்ந்து வரும் பெண்கள் (சுதந்தரர்கள்) ஆவர்.

    • அவர் வழி சேர்ந்த ஆடவர்களுக்குத்தான் கேடு சம்பவிக்கும் என்று வள்ளுவர் கூறியிருக்கிறாரே ஒழிய, பெண்களைப் பற்றி இழிவாக ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

  • பொதுவுடைமைக்காரர்: திருவள்ளுவர் காலம் பொது உடைமைக்காலம் இல்லாவிட்டாலும், அவர் சிறந்த பொது உடைமைக்காரராகவே விளங்குகிறார் என்று பெரியார் போற்றுகிறார்.

  • மாநாட்டு நோக்கம்: நாட்டின் மூலை முடுக்குகள் தோறும் திருவள்ளுவர் கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டு, திருக்குறள் கருத்துகள் பரப்பப்பட வேண்டும். குறள் ஆரியத்தை ஒழிக்க ஒப்பற்ற நல்லாயுதம்.


2.வேலைக்காரி – அறிஞர் அண்ணா (நாடகம்)

  • வெளியீடு: அறிஞர் அண்ணாவால் 1947 ஆம் ஆண்டு எழுதப்பட்டு, 1949 ஆம் ஆண்டு திரைப்படமாக வெளிவந்தது.

  • மையக் கரு: பணவெறியும் ஜாதி வெறியும் கொண்ட ஜமீன்தார் வேதாச்சலம் பற்றிய கதை.

  • கதை மாந்தர்கள்: வேதாச்சலம் (ஜமீன்தார்), சரசு (ஆணவம் கொண்ட மகள்), மூர்த்தி (பண்புள்ளம் கொண்ட மகன்), அமிர்தம் (வேலைக்காரி), முருகேசன் (அமிர்தத்தின் தந்தை), ஆனந்தன் (சுந்தரம் பிள்ளையின் மகன்), மணி (ஆனந்தனின் நண்பன்).

  • காதல்: சரசு அமிர்தத்தைக் குறை கூறும்போதெல்லாம் மூர்த்தி அவளுக்காகப் பரிந்து பேசினான்; நாளடைவில் மூர்த்தியும் அமிர்தமும் காதல் கொண்டனர்.

  • சுந்தரம் பிள்ளையின் தற்கொலை: வேதாச்சலத்திடம் கடன் வாங்கிய சுந்தரம் பிள்ளை, பணத்தைத் திருப்பிக் கொடுக்காததால் அவமானத்தால் மரக்கிளையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கின்றார்.

  • ஆனந்தனின் சபதம்: தந்தையின் தற்கொலைக்குக் காரணம் வேதாச்சலம் என்பதை அறிந்த ஆனந்தன், அவரைப் பழிவாங்கத் துடிக்கின்றான்.

  • மணியின் அறிவுரை: ஆனந்தன் கொலை செய்யத் துணிந்தபோது, மணி குறுக்கிட்டு, “அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக வாட்டி வதைக்க வேண்டும். ஊரார் முன்பாகத் தலைகுனிய வைக்க வேண்டும்” என்று அறிவுரை கூறித் தடுத்தான்.

  • பரமானந்தமாக மாறுதல்: மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற ஆனந்தன், பாழுங்கிணற்றில் ஒளிந்திருந்தபோது, தன்னைப் போலவே தோற்றமளிக்கும் செல்வந்தர் பரமானந்தத்தின் இறந்த உடலைக் கண்டான். வேதாச்சலத்தைப் பழிவாங்க இதுவே சரியான வழி என்று மணி, ஆனந்தனைப் பரமானந்தனாக மாற்றுவித்தான்.

  • பழிவாங்கல்: பரமானந்தன் வேடத்தில் இருந்த ஆனந்தன், வேதாச்சலத்தின் மகள் சரசாவைத் திருமணம் செய்து கொண்டு, பொய்யாகக் குடித்தும், பல பெண்களுடன் தொடர்பு இருப்பது போல நடித்தும் மாமனாரின் நற்பெயரைக் கெடுத்தான். அமிர்தத்திடம் தவறாக நடப்பது போலக் காட்டி, மூர்த்திக்கும் வேதாச்சலத்திற்கும் பிளவை ஏற்படுத்தினான்.

  • அமிர்தம் பாலுவின் மகளாக: வீட்டை விட்டு வெளியேறிய அமிர்தம், பாலு முதலியார் என்பவரால் அவரது மகள் சுகிர்தமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறாள். விபத்தில் மகளை இழந்து மனப்பிறழ்வு ஏற்பட்டிருந்த பாலு முதலியாரை, அமிர்தம் குணப்படுத்தினாள்.

  • நீதிமன்றத்தில் மூர்த்தி: யோகியின் ஆசிரமத்தில் நடந்த சண்டையில் யோகி இறந்துவிட, மூர்த்தி கொலைக் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான்.

  • விடுதலை: ஆனந்தன் வட இந்திய வழக்கறிஞராக மாறுவேடத்தில் வந்து, யோகி காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளி என்றும், நடந்தது தற்காப்புக் கொலை என்றும் வாதிட்டு, மூர்த்தியை விடுதலை செய்கின்றான்.

  • மகிழ்ச்சியான முடிவு: ஆனந்தன், ஜாதி வெறியை அடக்கவே அமிர்தத்திற்கும் மூர்த்திக்கும் திருமணத்தை நடத்தினேன் என்று வேதாச்சலத்திடம் விவரிக்கின்றான். தன் தவறுணர்ந்த வேதாச்சலம், “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று நாட்டு மக்களுக்கு உரைப்போம் என்று கூறி நாடகம் நிறைவடைகின்றது.


3. சாக்ரடீஸ் (ராஜா ராணி) –  கலைஞர் கருணாநிதி (ஓரங்க நாடகம்)

  • திரைப்படம்: 1956 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் கலைஞர் கருணாநிதியால் திரைக்கதை, வசனம் எழுதப்பட்டது.

  • நாடக அமைப்பு: இந்த ஓரங்க நாடகம் மூன்று காட்சிகளைக் கொண்டது.

  • முதல் காட்சி (அறைகூவல்): கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரின் வீதியில், சாக்ரடீஸ் இளைஞர்களுக்கு “சிந்திக்கக் கற்றுக் கொள்ளுங்கள்! அறிவை ஆயுதமாக ஏந்துங்கள்” என்று அறைகூவல் விடுக்கின்றார். அறிவாயுதமே உலகின் அணையாத ஜோதியாகும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

  • அரசுக்கு அச்சம்: சாக்ரடீஸின் இந்த உரை அரசுக்கும் ஆட்சிக்கும் அச்சத்தைக் கொடுக்கின்றது.

  • வழக்கு: அரசியல்வாதி அணிடஸ் மற்றும் கவிஞன் மெலிடஸ் ஆகியோர் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுக்கின்றனர்.

  • இரண்டாம் காட்சி (நீதிமன்றம்):

    • அணிடஸ், சாக்ரடீஸை “இழிகுணக் கிழவன்” என்று கேலி செய்கின்றான்.

    • சாக்ரடீஸ் வழக்கை, “அறிவு, அர்த்தமற்ற கற்பனை, அதிகார ஆணவம் ஆகிய மூன்றுக்கும் இடையே நடக்கும் மும்முனைப் போராட்டத்தின் விளைவு” என்று விளக்குகிறார்.

    • மெலிடஸ் குற்றம் சாட்டியபோது, சாக்ரடீஸ், “நான் என்ன வாலிபருக்கு வலை வீசும் விலை மாதா?” என்று எதிர்வாதம் புரிகின்றார்.

    • நீதிபதி சாக்ரடீஸுக்கு விஷம் அருந்தி உயிர்விட வேண்டும் என்று மரணதண்டனை வழங்குகின்றார்.

  • மூன்றாம் காட்சி (சிறைச்சாலை):

    • சாக்ரடீஸ் தன் மனைவி எக்ஸ்சேந்துபியிடம், “உன் கணவன் அகிலம் புகழும் வீரனாக, தேசம் புகழும் தியாகியாக மாறிவிட்டான்” என்று தேற்றுகின்றார்.

    • சிறைக் காவலன் விஷம் அருந்தி, கால்கள் மரத்துப் போகும் வரை நடந்து, பிறகு படுத்துவிட வேண்டும் என்று முறையை விவரிக்கின்றான்.

    • சாக்ரடீஸ் அதை “ஆனந்தமான நித்திரை” என்று அழைக்கின்றார்.

    • நண்பன் கிரீடோ சிறிது நேரம் பொறுத்துக் குடிக்கச் சொன்னபோது, சாக்ரடீஸ் “இந்த விஷம் அழிக்கப்போவது என்னையல்ல, இந்த உடலைத்தான்” என்று கூறுகிறார்.

  • இறுதி உரை: “உன்னையே நீ அறிய வேண்டும். எதற்கு? ஏன்? எப்படி? என்று கேள்!“.

  • அறிவுறுத்தல்: “எவர் சொன்ன சொல்லானாலும் அதனை உந்தன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப் பார்ப்பாய்“.

  • வீரம் பொங்கும் இறுதி வார்த்தைகள்: தன் பிணத்தை அடக்கம் செய்தால், “இந்நாட்டில் உலவும் புழுகு மூட்டைகளை என்னோடு புதைத்து மண்ணாக்கிவிடு” என்றும், எரித்தால் “ஏமாற்றுக்காரர்களின் சுவடிகளையும் என்னோடு சேர்த்துச் சுட்டுச் சாம்பலாக்கி தண்ணீரில் கரைத்து விடு” என்றும் கூறுகின்றார்.


4.இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு – அறிஞர் அண்ணா உரை (1968)

  • நிகழ்வு: இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, 1968 ஜனவரி 3 அன்று சென்னையில் நடைபெற்றது.

  • துவக்கி வைத்தவர்: டாக்டர் ஜாகீர் உசேன், இந்தியக் குடியரசுத் தலைவர்.

  • ஊர்வலம் (காலை உரை): மாபெரும் ஊர்வலம் தற்கால வரலாற்றில் சிறப்பான இடம் பெற்றது. இது தமிழகத்தின் வரலாற்றை உருவகப்படுத்தும் ஒரு நினைவு என்றும், வழக்கமான ஊர்வலம் அல்ல என்றும் அண்ணா விளக்கினார்.

  • குடியரசுத் தலைவர் பாராட்டு: ஜாகீர் உசேன் ஊர்வலத்தை இறுதிவரை கண்டுகளித்து, பலமுறை பாராட்டினார்.

  • அமைப்பாளர்கள்: எஸ்.எஸ்.வாசன் மற்றும் அவரது குழுவினர் ஊர்வலத்தை மிகச் சிறப்பாக ஒழுங்கமைத்தனர்.

  • வாசனின் கருத்து: “தமிழகத்தினுடைய இலக்கியமும் வரலாறும் இவ்வளவு அழகானதாக இருந்திராமல் போயிருக்குமானால் நாங்கள் இப்படிப்பட்டக் காட்சிகள் அமைத்திருக்க முடியுமா?”.

  • செலவு: ஊர்வலக் காட்சிகளுக்கு மட்டும் சுமார் ஆறு லட்சம் ரூபாய் செலவானது.

  • துல்லியம்: எஸ்.எஸ்.வாசன் ஊர்வலத்தை எந்த நேரத்தில், எந்த இடத்தில் எந்தக் காட்சி வரவேண்டும் என்று முசோலினியின் ரயில்வே நேரத் துல்லியத்துடன் ஒப்பிடக்கூடிய வகையில் திட்டமிட்டிருந்தார்.

  • அண்ணாவின் பார்வை: கலைத்துறை, எழுத்தறிவு அதிகம் இல்லாத நாட்டில் நற்கருத்துக்களைப் பயனுள்ளதாகவும் சுவையுள்ளதாகவும் எடுத்துரைக்க ஒரு சிறந்த சாதனம் என்று அண்ணா நம்பினார்.

  • மாலை உரை (கருத்தரங்குகள்): நாளையதினம் முதல் தமிழ் மொழி வல்லுநர்கள் தமிழ் மொழியின் நுணுக்கங்கள், பிற மொழிகளுடனான தொடர்புகள், மற்றும் தமிழ் பிற மொழிகளுக்குத் துணையாக இருந்ததற்கான ஆதாரங்கள் குறித்து விவாதிக்க இருந்தனர்.

  • தமிழின் உலகளாவியப் பரவல்: மாநாட்டில் மலேசியா, சிங்கப்பூர், ரஷ்யா, அமெரிக்கா உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் வந்திருந்தனர்.

  • பண்டைய இலக்கியச் செழுமை: ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற செம்மையான இலக்கியங்கள் இருந்தன.

  • திருக்குறள் தத்துவம்:எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற தத்துவத்தை உலகுக்கு அளித்தவர்கள் தமிழர்கள்.

  • கண்காட்சி: மரியாதைக்குரிய சா.கணேசன் அவர்களால் ஒரு சிறப்பான கண்காட்சி பல்கலைக்கழக மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  • தமிழின் பெருந்தன்மை: தமிழ்ப் பண்பாடு உலகத்தின் எந்தக் கோடியில் உள்ளவர்களையும் தோழர்களாகக் கருதுகிறது; அறிவை எங்கு இருந்தாலும் எடுத்துக்கொள்வதில் பின்வாங்கியவர்கள் அல்ல.

  • மேற்கோள்கள்: அண்ணா “யாதும் ஊரே யாவரும் கேளிர்” மற்றும் “தீதும் நன்றும் பிறர்தர வாரா” போன்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ப் பெருமகனின் கூற்றுகளை மேற்கோள் காட்டினார்.

  • நம்பிக்கை: இந்த மாநாடு தமிழ் மொழிக்கு ஒரு புதிய பொலிவையும் வலிமையையும் பெற்றுத்தரும் என்றும், அது உலக அரங்கில் இணைப்பு மொழியாக, பொது மொழியாக, ஆட்சி மொழியாக மாறும் என்றும் அண்ணா உறுதியாக நம்பினார்.


5. இதழியல் – முரசொலி கடிதம் (செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்)

  • நிகழ்வு: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முதன்முதலாக 2010 ஆம் ஆண்டு கோவையில் ஜூன் மாதம் 23 ஆம் நாள் முதல் 27ஆம் நாள் வரை ஐந்து நாட்கள் நடைபெற்றது.

  • முரசொலி கட்டுரை: கலைஞர் கருணாநிதி அவர்கள் மாநாடு நடப்பதற்கு முன்னர் தம் முரசொலி இதழில் “செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்” என்ற தலைப்பில் முதல் கட்டுரை உட்பட எட்டுக் கட்டுரைகளை வழங்கினார்.

  • பரிதிமாற் கலைஞரின் பங்கு: தமிழ் மொழியைச் செம்மொழி என அறிவித்த முதல் அறிஞர் பரிதிமாற்கலைஞர் ஆவார்.

  • பரிதிமாற் கலைஞரின் கருத்து:

    • 1902 ஆம் ஆண்டு செந்தமிழ் இதழில், “உயர்தனிச் செம்மொழி“ என்ற தலைப்பில், தமிழ்மொழி எவ்வாற்றால் ஆராய்ந்தாலும் உயர்தனிச் செம்மொழியே என்று விளக்கினார்.

    • 1903 ஆம் ஆண்டு “தமிழ் மொழியின் வரலாறு“ என்ற நூலில், தமிழ் மொழியை, தெலுங்கு முதலியவற்றிற்கெல்லாம் தலைமையும் மிக்க மேதகவும் உடையதால் உயர்மொழி என்கிறார்.

    • தமிழைச் செம்மொழி என நூறாண்டுகளுக்கு முன்பே உறுதியாக நிலைநாட்டிய பெருமை அவரைச் சாரும்.

  • கலைஞர் வழங்கிய அரசு மரியாதை:

    • பரிதிமாற் கலைஞர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக்கினார்.

    • அவரது மார்பளவு சிலையை நினைவு இல்லத்தின் முகப்பில் நிறுவினார்.

    • அவரது அனைத்து நூல்களையும் அரசுடைமையாக்கினார்.

    • 2007 ஆம் ஆண்டு நினைவு சிறப்பு அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டார்.

    • நினைவு இல்லத்தைத் திறந்து வைத்தபோது, “தமிழுக்குச் செம்மொழித் தகுதி கோரிக் குரல் கொடுத்த முதல் தமிழன் பரிதிமாற்கலைஞர் புகழ் வாழ்க” என்று கையொப்பமிட்டார்.

  • பரிதிமாற் கலைஞரின் தமிழ்ப்பணி:

    • தமிழில் நாடக இலக்கண நூல் இல்லாத குறையைப் போக்க “நாடகவியல்“ என்னும் நூல் எழுதி வெளியிட்டுள்ளார்.

    • சென்னைப் பல்கலைக்கழகம் உள்நாட்டு மொழிகளைப் பாடப் பகுதியிலிருந்து நீக்கத் திட்டமிட்டபோது, திரு பூர்ணலிங்கம் அவர்களோடு இணைந்து அத்திட்டத்தைத் தடுத்தார்.

    • “தமிழ் மொழியின் வரலாறு” என்ற தம் நூலில், வடமொழியாளர்களின் முகத்திரையைக் கிழித்து, அவர்களுடைய வேஷத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.


6.தொல்காப்பியப் பூங்கா – கலைஞர் கருணாநிதி

  • நூல் விளக்கம்: கலைஞர் கருணாநிதி அவர்கள் தொல்காப்பியத்தின் நூற்பாக்களுக்குப் புதுமையான முறையில் விளக்கம் அளித்துள்ளார்.

  • எழுத்ததிகாரத்தின் முதல் நூற்பா: எல்லா மொழிகளுக்கும் ஒலிதான் மூலம் என்பதால், தொல்காப்பியரின் கனவில் எழுத்துகள் ஒலி எழுப்பியவாறு அணிவகுத்து நின்றன.

    • முதல் வரிசை: அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ (உயிரெழுத்துகள்).

    • பின் வரிசை: க் முதல் ன் வரை உள்ள 18 மெய்யெழுத்துகள்.

  • குற்றியலிகரம், குற்றியலுகரம்: அவற்றின் ஒலி குறுகியதாக இருந்ததால், முதல் எழுத்துகள் முப்பதின் வரிசையில் இடம் பெற முடியாது என்று தொல்காப்பியர் கூறிவிட்டார். அவை சார்பெழுத்துகள் வரிசையில் இடம் பெறும்.

  • ஆய்த எழுத்து: ஆயுதம் ஏந்திக் கொண்டு வந்த ஆய்த எழுத்து, முக்கியமான சமயங்களில் உதவிக்கு வருவதாக அடக்கத்துடன் கூறியது.

  • முதல் நூற்பா:

    • எழுத்தெனப் படுப அகர முதல் னகர ஈறுவாய் முப்பஃதென்ப சார்ந்து வரல் மரபின் மூன்றலங்கடையே” (எழுத்து, நூல் மரபு- 1).

  • தொல்காப்பியரின் வியப்பு: “முப்பஃ தென்ப” என்ற தொடரில் ஆய்த எழுத்து (ஃ-ஐக்கு உள்ளே உள்ள மூன்று புள்ளிகள், அதாவது முப்பால் புள்ளி) அமர்ந்து கொண்டதை தொல்காப்பியர் வியப்புடன் கண்டு மகிழ்ச்சி கொண்டார்.

  • சார்பெழுத்துகள்: குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் ஆகிய மூன்றும் சார்பெழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாமல், பிற எழுத்துகளோடு பொருந்தி வரும் தன்மை கொண்டவை.

இரண்டாம் பருவம் – அலகு-3 பாடக்குறிப்புகள்

அலகு- 3: இக்கால இலக்கியம் -I

1. பாரத சமுதாயம் வாழ்கவே – பாரதியார்

பாரதியார் குறிப்பு

  • இயற்பெயர்: சுப்பிரமணியன்.

  • பெற்றோர்: சின்னச்சாமி ஐயர் – இலக்குமி அம்மாள்.

  • காலம்: 11.12.1882 – 11.09.1921.

  • அறிந்த மொழிகள்: தமிழ், ஆங்கிலம், இந்தி, சமசுகிருதம், வங்காள மொழி.

  • முப்பெரும் படைப்புகள் : கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்.

  • பிற படைப்புகள்: பாப்பா பாட்டு, பகவத் கீதை, புதிய ஆத்திசூடி, சந்திரிகையின் கதை, ஞான ரதம், தேசிய கீதங்கள்.

  • புனைப்பெயர்கள்: காளிதாசன், சக்திதாசன், சாவித்திரி, ஷெல்லிதாசன்.

  • சிறப்பு பெயர்கள்: மகாகவி, மக்கள் கவிஞர், தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, முண்டாசுக் கவிஞன்.

  • பாரதியின் வாழ்த்து: பாரத சமுதாயம் என்ற தலைப்பில் பொதுவுடைமைக் கொள்கை குறித்து விளக்குகின்றார். பாரத நாட்டில் வாழும் மக்களை “வாழ்க வாழ்க“ என்று வாழ்த்துகின்றார், மேலும் சமுதாயம் வெற்றிப் பாதை நோக்கியே செல்லும் என்பதை அறிவிக்க “ஜய ஜய” என்று இசை பாடி மகிழ்கின்றார்.

  • பொதுவுடைமைக் கொள்கை: தான் வாழ்ந்த காலத்தில் பாரதத்தில் வாழ்ந்திருந்த 30 கோடி மக்களும் பொதுவுடைமைக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என விரும்பினார். அக்கொள்கையைப் பின்பற்றும் சமுதாயம் ஒப்பில்லாத சமுதாயமாகவும், உலகத்திற்குப் புதுமையான சமுதாயமாகவும் விளங்கும் என்று கூறுகின்றார்.

    • இக்கொள்கையைப் பின்பற்றினால், ஒரு மனிதனின் உணவை இன்னொரு மனிதன் தட்டிப் பறிக்கும் வழக்கம் இருக்காது.

    • ஒரு மனிதனைத் துன்பப்படுத்தித் தான் மட்டும் சுகமாக வாழும் பழக்கம் இருக்காது.

  • இயற்கை வளம் நிறைந்த நாடு: இனிமையான சோலைகளாலும், நெடிய வயல்களாலும் சூழப்பட்ட பாரத நாட்டில் கனியும், கிழங்கும், தானியங்களும் கணக்கின்றி கிடைக்கின்றன. எனவே, ஒரு மனிதனின் உணவை இன்னொரு மனிதன் பறித்து உண்ணும் வழக்கம் இருக்கத் தேவையில்லை.

  • புதிய கொள்கை: “தனி மனிதன் ஒருவனுக்கு உணவில்லை என்றால், நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால் இந்த உலகத்தினை அழித்திட வேண்டும் என்ற விதியைப் புதிதாக இயற்றுவோம். அதை எப்போதும் கடைபிடிப்போம்” என்று சினமுடன் உரைக்கின்றார்.

  • சமத்துவம்: “எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்” என்பது இறைத் தத்துவம். ஆகையால் சாதி, இனம், மதம் என்ற கட்டுக்களை அறுத்தெறிய வேண்டும் என்பது பாரதியின் கனவு.

  • வேற்றுமையில் ஒற்றுமை: மக்கள் அனைவரும் மன அமைதியுடன் வாழ்ந்து, இறைவனை அடைகின்ற வழியை இந்தியா உலகிற்கே கற்றுக் கொடுக்கும். இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு.

  • சமதர்மக் கொள்கை: சாதி, மதம், இனம் என வெவ்வேறாக இருப்பினும், இங்கு வாழும் மக்கள் அனைவரும்:

    • ஒரு குலத்தைச் சேர்ந்தவர்களே! ஒரு இனத்தைச் சேர்ந்தவர்களே! எல்லோரும் ஒரு எடை கொண்டவர்களே!.

    • அனைவருக்கும் ஒரு விலையே!.

  • எல்லோரும் இந்நாட்டு மன்னர்: இந்திய நாட்டில் வாழும் மக்கள் ஒவ்வொருவரும் தங்களை மன்னர்களாக எண்ணி வாழ வேண்டும் என்றும், சுதந்திர மனப்போக்குடன் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்கும் மனநிலை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் சூளுரைக்கின்றார்.

2. சிறுத்தையே வெளியில் வா – பாரதிதாசன்

பாரதிதாசன் குறிப்பு

  • இயற்பெயர்: கனகசுப்புரத்தினம்.

  • பெற்றோர்: கனகசபை- லட்சுமியம்மாள்.

  • காலம்: 29.04.1891-21.04.1964.

  • படைப்புகள்: அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, சேர தாண்டவம், பிசிராந்தையார், தமிழச்சியின் கத்தி.

  • விருதுகள்: 1946 இல் புரட்சிக்கவி என்ற பட்டம் பெற்றார். 1968 இல் பிசிராந்தையார் என்ற நூல் சாகித்திய அகாதமி விருது பெற்றது.

  • சிறுத்தையே வெளியில் வா (வலியுறுத்தல்): தமிழரின் உரிமை காக்க, தமிழ் மொழியை மேம்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று பாவேந்தர் பாரதிதாசன் வலியுறுத்துகின்றார்.

  • செயல் செய்ய புறப்படு: அடிமைத்தளத்தில் இருந்த கதவுகள் திறக்கப்பட்டு விட்டன. சிறுத்தை போன்ற இளைஞர்களே வெளியே வாருங்கள்! எலி என இகழ்ந்தவர்களுக்கு முன்பாக, புலி என காட்டிட செயல் வீரர்களாகப் புறப்படுங்கள்!

  • நள்ளிரவை பகல் என நம்பியது போதும். பறவை போல சிறகை விரித்து உயர பறக்க முயற்சி செய்யுங்கள்! சிங்கம் போன்ற இளைஞர்களே, தாய்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க உங்கள் சிந்தனைகளைச் செயல்படுத்துங்கள்!

  • விழித்தெழு தமிழா: தாய்நாட்டைக் கழுதை போன்ற சிந்தனை கொண்டவர்கள் ஆட்சி செய்ய அனுமதிக்கக் கூடாது. வெறும் கையை ஏந்தி வந்த கயவர்கள் பொய்களை உரைத்து, தமிழ் மொழிக்குத் தடை விதித்து நாட்டைக் கைப்பற்றி விட்டனர். நம் உரிமைகளைப் பறித்து, அவற்றை அவர்களுடையது என்று கூறுகின்றனர். காலங்காலமாக வீரத்துடன் வாழ்ந்த நாம் இதைக் கேட்டுக் கொண்டு இருக்கக் கூடாது; மொழிப் பற்றைப் புதுப்பித்துக் கொண்டு விழித்தெழுங்கள்!

  • தாய்மொழிக்கு புதுமை சேர்ப்போம்: மானத்திற்கு அஞ்சி வாழ்ந்த தமிழினம், புகழ்ச்சியை மட்டுமே தங்கள் வாழ்க்கையில் அனுமதிக்கும். வலிமை மிகுந்த மரபில் வந்த இளைஞர்களே, உங்கள் கைகளின் செயல்திறனைக் காட்ட வாருங்கள்! உயர்ந்த குறிக்கோள்கள் நிறைந்த இளைஞர் கூட்டத்தைக் கூட்டுங்கள்! கடல் போல பகை வளர்ந்துள்ளது. ஆகவே, தாய்மொழிக்கு விடுதலை தரவும், தமிழ் மொழிக்குப் புதுமை சேர்க்கவும் மக்களை ஒன்று சேர்த்து தமிழர்களின் வாழ்வை உயர்த்திடுங்கள்!

3. கத்தியின்றி ரத்தமின்றி – நாமக்கல் கவிஞர்

நாமக்கல் கவிஞர் குறிப்பு

  • இயற்பெயர்: வெ. இராமலிங்கம் பிள்ளை.

  • பெற்றோர்: வெங்கடராமன் பிள்ளை – அம்மணியம்மாள்.

  • பிறந்த ஊர்: நாமக்கல் மாவட்டம் – மோகனூர்.

  • காலம்: 19.10.1888-24.08.1972.

  • சிறப்பு பெயர்: காந்தியக் கவிஞர்.

  • சிறப்பு பெற்ற பாடல் வரிகள்: “தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா”.

  • படைப்புகள்: மலைக்கள்ளன், அவளும் அவனும், என் கதை (தன் வரலாறு), காந்தி அஞ்சலி, வள்ளுவரின் உள்ளம்.

  • நோக்கம்: நாமக்கல் கவிஞர் காந்தியக் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். அகிம்சை நெறியில் தேசத்திற்காகப் போராட வருமாறு மக்களை அழைக்கின்றார்.

  • புதுமையான போர்: கத்தியும் இல்லாமல் இரத்தமும் இல்லாமல் ஒரு யுத்தம் நடைபெறுகின்றது. உண்மையான வழியில் போராடினால் வெற்றி கிடைக்கும் என்று நம்புகின்ற யாவரும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர். ஒளிந்து கொண்டு பகைவர் மீது குண்டு எறிந்து கொல்லும் விருப்பம் இல்லாத இந்தப் போராட்டத்தை உலகில் வேறு எங்கும் காண முடியாது.

  • எதிரியென்று யாருமில்லை: இந்தப் போராட்டத்தில் பகைவர்களை அழிக்கக் குதிரைப்படை, யானைப்படை இல்லை. உயிர்களைக் கொல்லும் விருப்பம் இல்லை. எதிரி என்று யாரையும் எண்ணுவதில்லை. யார் மீதும் கோபம் இல்லை, அவர்களை வென்றாக வேண்டும் என்ற ஆசையும் இல்லை.

  • தனக்குத் துன்பத்தையே கொடுத்தவர்களாக இருப்பினும் அவர்கள் மீது சாபம் இடுவதில்லை. பாவத்தின் செய்கைகளை நினைத்துக் கூடப் பார்ப்பது இல்லை.

  • தெய்வ மார்க்கம்: இப்படி ஒரு மாறுபட்ட போரை யாரும் கேள்விப்பட்டிருக்க முடியாது. முன்பு செய்த புண்ணியத்தால் சாந்தம் நிறைந்த காந்தி என்ற மகானை இத்தேசத்தில் பெற்றிருக்கின்றோம். அவர் காட்டுகின்ற அகிம்சையின் செம்மையான வழியில், மனிதர் எவருக்கும் தீங்கு நேராத முறையில் நடைபெறுகின்ற இந்தப் போரில் கலந்து கொள்ளுமாறு தேச மக்களை அழைக்கின்றார்.

4. மீன்கள் – தமிழ்ஒளி

தமிழ்ஒளி குறிப்பு

  • இயற்பெயர்: விஜயரங்கம்.

  • காலம்: 21.09.1924 – 29.03.1965.

  • புனைப்பெயர்கள்: தமிழ் ஒளி, விஜயரங்கம், விஜயன், சி. வி. ர..

  • நூல்கள்: கவிஞனின் காதல், வீராயி, மே தின ரோசா, விதியே வீடியோ, திருக்குறளும் கடவுளும், தமிழர் சமுதாயம்.

  • வான்கடல் முத்துக்கள்: ஏழைகள் வாழும் ஓட்டை விழுந்த குடிசையானது விண்ணை நோக்கி நீண்டிருக்கும் கடலில் கிடைக்கும் முத்துக்களோ? அல்லது, இம்மாநிலத்தில் உழைப்பவர்களின் உடலில் உண்டான தழும்புகளோ? என்று கவிஞர் வினவுகிறார்.

  • பெண்களின் சோக உணர்ச்சி சிதறல்கள்: செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த மக்களின் கண்களெல்லாம் குடிசையில் உள்ள பொத்தலை நோக்கியே துடித்தபடி கிடக்கின்றனவா? சொந்தமாய் உரிமையை இழந்திருக்கக்கூடிய பெண்கள் என்பது சோக உணர்ச்சியின் சிதறல்கள் தானோ என்று வருத்தத்துடன் பாடுகிறார்.

  • கண்களோ விண்மீன்கள்: இரவுதான் வறுமையில் வாடுவோர்க்கான கந்தல் உடை என்றால் அவற்றைக் காணும் கண்களா விண்மீன்கள்? வான்குன்றிலிருந்து சிதறும் நீர் துளிகளா அருந்தக் கூ கூட இல்லாத மக்களின் கண்ணீர்? எனப் பசியில் வாடுவோரின் துயரைப் பேசியுள்ளார்.

  • காலம் எழுதும் எழுத்துக்கள்: பிச்சைக்காரரது உள்ளத்தின் ஏக்கங்கள் காலத்தால் எழுதப்பட்ட எழுத்துக்களோ என்று வருத்தத்துடன் பாடுகிறார்.

  • தொழிலாளர்களின் எண்ணங்கள்: வெய்யில் போன்று சுடக்கூடிய கொடிய அரசாங்கம் வாட்டினாலும், வேலிகட்டி அடைத்து வைத்திருந்தாலும், பொய்யாக வாழாத தொழிலாளரின் எண்ணங்களெல்லாம் அங்கே பொங்கி குமுறி இறைத்த ஒன்றுதானோ என்கிறார். நீலக்கடலில் இறைக்கப்படும் மின்னலைப் போல், அரசாங்கம் உதவிடும் என நம்பும் தொழிலாளரது எண்ணமும் இருக்கிறது என அவர்களின் வேதனையைக் கவிஞர் தமிழ்ஒளி பாடியுள்ளார்.

5. எட்டாவது சீர் – ஈரோடு தமிழன்பன்

ஈரோடு தமிழன்பன் குறிப்பு

  • இயற்பெயர்: ந. செகதீசன்.

  • பெற்றோர்: செ. இரா. நடராசன் – வள்ளியம்மாள்.

  • காலம்: 28.09.1933.

  • விருது: கலைமாமணி.

  • நூல் விருது:வணக்கம் வள்ளுவ” என்ற நூல் 2004 இல் சாகித்திய அகாதமி விருது பெற்றது.

  • எழுதிய நூல்கள்: தமிழன்பன் கவிதைகள், சிலிர்ப்புகள், தோணிகள் வருகின்றன, ஊமை வெயில்.

  • மையக் கருத்து: உலகின் முக்கியமான சில நிகழ்வுகள் ஏழு என்ற எண்ணுடன் நிறைவு பெறுகின்றது. ஏன் எட்டாம் எண்ணிற்கு முக்கியத்துவம் தரவில்லை என்ற வினாவை மையப்படுத்தி இக்கவிதையைப் படைத்துள்ளார். திருவள்ளுவர் தம் திருக்குறளில் ஏழு சீர்களையே பயன்படுத்தியிருப்பது கண்டு, எட்டாவது சீருக்கு அவர் ஏன் இடமளிக்க மறுத்துவிட்டார் என்பதையும் ஆராய்கின்றார்.

  • இசையின் சுரங்கள் ஏழு: எட்டாவது சுரம் அனுமதிக்கப்படாததால், இசை ஒரு வரைமுறைக்குள் அடங்காதவை என்பதை உணர்த்தி, இசையின் தேவதை கதவைத் திறக்க ஓடியிருக்கலாம்.

  • வானவில்லின் நிறம் ஏழு: எட்டாவது வண்ணத்திற்கு இடமில்லை என்பதால், வானம் நிறங்கள் நீங்கிய இரவில் தன் வண்ணங்களைக் காணவில்லை என்று அழுதிருக்கலாம்.

  • வாரத்தின் நாட்கள் ஏழு: எட்டாவது கிழமைக்கு வாரத்தின் கால எல்லைக்குள் இடமில்லை. ஒருவேளை இருந்திருந்தால் காலத்தின் அளவு கூடி மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்கும்.

  • வள்ளுவத்தின் சீர் ஏழு: எட்டாவது சீர் வள்ளுவரைத் தேடிப் போனபோது, வாசலில் நிற்கும் பிச்சைக்காரனை விரட்டுவது போல வள்ளுவர் விரட்டியிருக்கலாம்.

  • யாப்பின் கட்டமைப்புகள்: யாப்புக் கட்டமைப்புகள் எட்டாவது சீருக்கு இடம் தர முடியாது என்று மிரட்டியிருக்கலாம்.

  • அலகிடும் வாய்ப்பாடுகள்: காசு, பிறப்பு, நாள், மலர் ஆகியவை எட்டாவது சீர் வந்தால் நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று நச்சரித்திருக்கலாம்.

  • வள்ளுவரின் கேள்வி: ஏழு சீர்களில் சொன்னதையே நாம் பின்பற்றுவதில்லை. பிறகு ஏதற்கு எட்டாவது சீர்க் கவலை என்று வள்ளுவர் கேட்பது காதில் விழுகின்றது.

  • இலக்கணத்தின் ஆர்வம்: இலக்கணத்தின் மீது ஆர்வம் உடையவன், “எட்டாவது சீருக்கு இடம் தந்திருந்தால் இன்னும் ஏதேனும் செய்தி கிடைத்திருக்குமே” என்று ஏங்குகின்றான்.

  • எட்டாவது சீர் யார்?: உண்மையின் உள்ளத்தில் இருந்து பேசுபவர் எவரோ அவரே வள்ளுவர் எழுதாமல் விட்ட எட்டாவது சீர் என்று தோன்றுகின்றது.

6. கடிதம் – புதுமைப்பித்தன்

  • கதை மாந்தர்: சிங்கார வேலு (இலக்கியக் கர்த்தா), சுந்தரம் (சிங்கார வேலுவின் நண்பர்), நாகப்பன் (கடிதம் எழுதியவர்).

  • சிங்கார வேலுவின் சிறுகதைகள்: இவை “வாழ்க்கையின் இலட்சியங்களையும் சிக்கல்களையும் திறந்து காட்டும் ஜன்னல்களாக” கருதப்படுகின்றன.

  • எழுத்தின் நோக்கம்: அவர் பணத்திற்காக எழுதவில்லை, மாறாக தன்னை வெளிப்படுத்தவே எழுதுகிறார்.

  • புகழின் தேவை: ஓர் இலக்கியக் கர்த்தாவுக்கு “நேர்மையான புகழ்” தேவை என்று அவர் நம்புகிறார்; அந்தப் புகழ் “ஊக்கமளிக்கும் உணவு” போன்றது.

  • மனநிலை: உண்மையான பாராட்டு இல்லாததால் அவர் சிரமப்படுகிறார். சமூகத்திற்கு அழகு என்றால் என்னவென்று தெரியவில்லை அல்லது பாராட்டத் தைரியம் இல்லை என்று உணர்கிறார்.

  • படைப்புத் தடை: ஊக்கமின்மையால், சிங்கார வேலு படைப்புத் தடையை அனுபவிக்கிறார்; ஒரு கதையை ஏழு நாட்களாகத் தொடர முடியாமல் விரக்தியடைகிறார். நண்பர் சுந்தரம் பாராட்டியதைக் கூட நட்பின் காரணமாக வந்ததாகப் புறக்கணிக்கிறார்.

  • நாகப்பனின் கடிதம்: ஐந்தாறு நாட்கள் கழித்து, விசாகப்பட்டினத்திலிருந்து (10.9.33 அன்று) நாகப்பன் என்ற அறிமுகமில்லாத ஒருவரிடமிருந்து கடிதம் வருகிறது.

  • கடிதத்தின் பாராட்டு: அந்தக் கடிதம் சிங்கார வேலுவின் ‘சாலாவின் சங்கடங்கள்’ என்ற கதையை, “வாழ்க்கையின் உயிர்பெய் ஓவியம்” என்றும், தமிழ் மற்றும் உலக இலக்கியத்திலேயே இணையற்றது என்றும் புகழ்ந்து பேசுகிறது.

  • ஆரம்ப மகிழ்ச்சி: கடிதத்தைப் படித்ததும், சிங்கார வேலுவின் முகம் மலர்ச்சி அடைகிறது, உள்ளம் பூரிப்படைகிறது. இது தனது “பெரிய தாபத்தைத் தீர்த்து” சமூகத்தின் மீது நம்பிக்கையை மீட்டெடுத்ததாக அவர் உணர்கிறார்.

  • சந்தேகம் மற்றும் கோபம்: கடிதத்தில் உள்ள சில எழுத்துக்கள் தனக்குத் தெரிந்தவரின் கையெழுத்துப் போல் இருப்பதால், இதைச் சுந்தரம் செய்த குறும்புத்தனமான செயல் என்று சந்தேகிக்கிறார். இந்தக் “கோழைத்தனமான செயல்” குறித்து ஆரம்ப மகிழ்ச்சி கடும் கோபமாக மாறுகிறது.

  • சமூகத்தின் மீதான விமர்சனம்: அவர் சமூகத்தை “முட்டாள்கள்,” “கோழைகள்,” மற்றும் “தரித்திரக் கழுதைகள்” என்று திட்டுகிறார். அத்தகைய “முட்டாள் கூட்டத்திற்கு” கதை எழுதுவதை விட “கசையடி கொடுப்பேன்” என்று அறிவிக்கிறார்.

  • முடிவு: அறையெங்கும் காகிதம் எரியும் நாற்றம் பரவுகிறது. அவர் இருளில் அமர்ந்தபடி, “அசட்டுத்தனமான சமூகத்தை” எப்படி உயர்த்துவது என்றும், கோழைத்தனத்தை மாற்றியமைத்து “புழுக்களை மனிதர்கள் ஆக்குவது எப்படி” என்றும் சிந்திக்கிறார். “ஒளி” (நம்பிக்கை அல்லது மாற்றம்) வரும்போது, தான் இருக்க வேண்டிய அவசியமில்லை, தனது சிருஷ்டிகள் இருந்தால் போதும் என்றும் சிந்திக்கிறார்.

7. வாய்ச்சொற்கள் – ஜெயகாந்தன்

  • கதை மாந்தர்: ருக்குமணி (பிறவிக் குருடான பெண்), கண்ணப்பன் (பார்வையை இழந்த இளைஞன்).

  • ருக்குமணியின் நிலை: அவள் கிராமத்தின் எல்லையில் உள்ள பாழடைந்த சத்திரத்தில் தனிமையில் வாழ்கிறாள் (தாத்தா செங்கேணி இறந்த பிறகு).

  • தொழில்: கண்பார்வை இல்லையென்றாலும், கூடை முடைதல், தடுக்கு பின்னுதல் போன்ற கைவினைத் தொழில்களைச் செய்து பிழைக்கிறாள்.

  • உணர்வுத் திறன்: அவளது விரல்கள், காதுகள், நாக்கு என உடல் முழுவதும் “கண்கள்” இருப்பதாகக் கூறப்படுகிறது, இது அவளது கூர்மையான உணர்வுத் திறன்களைக் குறிக்கிறது.

  • கண்ணப்பன்: விழுப்புரத்திலிருந்து ரயிலில் டிக்கெட் இல்லாமல் வந்து இறக்கிவிடப்பட்டவன். அவனும் நான்கு வருடங்களுக்கு முன் அம்மை வார்த்து கண்பார்வையை இழந்தவன்.

  • முதல் சந்திப்பு: கண்ணப்பனின் “ஞானக் கண் ஒன்று இருந்திடும் போதினிலே” என்ற பாட்டைக் கேட்டு ருக்குமணி மிகவும் கவரப்படுகிறாள். அவள் அவனுக்கு வேர்க்கடலையும், புல்லாங்குழல் செய்ய உதவும் நல்ல மூங்கில் கம்பையும் கொடுக்கிறாள்.

  • பிரிவு மற்றும் மீள்வருகை: மறுநாள் கண்ணப்பன் சொல்லாமல் சென்றுவிடுகிறான். ஒரு வாரம் கழித்து, ருக்குமணி கொடுத்த மூங்கிலால் புல்லாங்குழல் செய்து, குழந்தைகள் ஊதும் ஊதல் போன்ற கருவிகளைச் செய்யும் புதிய தொழிலைத் தொடங்கிவிட்டு, புல்லாங்குழல் இசைத்தபடி திரும்ப வருகிறான்.

  • உணர்ச்சி வெளிப்பாடு: ருக்குமணி தனது உணர்வுகளை வெளிப்படுத்தி, அவனது பாட்டையும், பேச்சையும், அவனையும் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறுகிறாள்.

  • திருமணத் தயக்கம்: இரண்டு பார்வையற்றவர்கள் எப்படி வாழ முடியும் என்றும், தானும் அவளுக்குச் சுமையாகிவிடுவேன் என்றும் நினைத்துத்தான் சொல்லாமல் சென்றதாகக் கண்ணப்பன் கூறுகிறான்.

  • பார்வையற்ற நிலை: ருக்குமணி தனது பார்வையற்ற நிலை ஒரு குறைபாடு அல்ல என்று கூறி, “கண்ணுன்னா என்னா?” என்று கேட்கிறாள்.

  • கண்ணப்பனின் பார்வை: கண்ணப்பன் உணர்ச்சிவசப்பட்டு, “நீதான் எனக்குக் கண்ணு இனிமேலே” என்று அவளைத் தன் கண்களாகக் கருதுகிறான்.

  • வாய்ச்சொற்களின் முக்கியத்துவம்: வள்ளுவரின் கூற்றான “கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும்இல” என்பதற்கு மாறாக, இந்த உறவுக்கு வாய்ச்சொற்களே முக்கியம் என்பதைக் கதை உணர்த்துகிறது.

8. அந்நியர்கள் – சூடாமணி

  • கதை மாந்தர்: ஸவிதா (அக்கா), சௌம்யா (தங்கை).

  • சந்திப்பு: பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு, தாயின் மரணத்துக்குப் பின் சந்திக்கின்றனர். ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட சௌம்யாவை, அவரது கணவர் பம்பாயிலிருந்து அக்காவிடம் அனுப்பிவைக்கிறார்.

  • ஆரம்ப ஒற்றுமை: ஆரம்பத்தில், பிரிந்திருந்த காலம் கரைந்துவிட்டதைப் போல உணர்கிறார்கள். காபியில் ஒரே அளவு இனிப்பு, அகலக் கரை போட்ட புடைவைகள், விடியற்காலை நடைப்பயிற்சி, வற்றல் சாப்பிடும் பழக்கம் போன்ற பல சின்னச் சின்ன ஒத்த ரசனைகள் அவர்களிடம் இருந்தன.

  • வேறுபாடுகள் வெளிப்படல்: நாளடைவில், இருவரின் கருத்துக்களிலும், உலக கண்ணோட்டத்திலும் வேறுபாடுகள் வெளிப்படத் தொடங்கின.

வேறுபாடுகள்

ஸவிதா (அக்கா)

சௌம்யா (தங்கை)

குழந்தை வளர்ப்பு

காலம் மாறுகிறது என்றும், பிள்ளைகள் உலகத்தின் யதார்த்தங்களைத் தெரிந்துகொண்டு வாழ வேண்டும் என்றும் கூறுகிறாள்.

பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே தங்கினால் கெட்ட பழக்கங்களைக் கற்றுக்கொள்வார்கள் என அஞ்சுகிறாள்.

கலை/இலக்கியம்

நவீன படைப்புகளில் உள்ள நல்ல அம்சங்களை மட்டும் ரசிக்க வேண்டும் என்று வாதிடுகிறாள்.

நவீன திரைப்படங்களையும் இலக்கியத்தையும் “பச்சைத்தனம்” கொண்டவை என்று விமர்சிக்கிறாள்.

எழுத்து லட்சியம்

சௌம்யாவின் எழுத்தை “நவீன ஃபேரி டேல்ஸ் மாதிரி” இருப்பதாகக் கூறுகிறாள்.

ஆபாசமும் பயங்கரமும் நிறைந்த உலகில், தனது எழுத்தில் நல்லதையும் தூய்மையையும் காட்டுவதே தனது லட்சியம்.

பொதுச் சேவை

தனிநபரின் உதவி “போட்டவரைக்கும் பிரயோசனம்” என்று பத்துப் ரூபாய் கொடுத்து உதவுகிறாள்.

வறுமை ஒரு அடியில்லாத பள்ளம் என்றும், தனிநபர்களின் உதவி பயனற்றது என்றும், நிறுவன அளவிலான தீர்வுகள் தேவை என்றும் கருதுகிறாள்.

நினைவுச் சின்னங்கள்

பெற்றோரின் கண்ணாடி ஜாடியைப் பொக்கிஷமாகக் காப்பாற்றுகிறாள்.

தனது பங்கைப் பார்த்த ஒரு பெண்ணின் திருமணத்திற்குப் பரிசாகக் கொடுத்துவிட்டாள். “அப்பா அம்மாவை நினைவு வச்சுக்க நினைவுச் சின்னங்கள் வேணுமா என்ன?” என்று கேட்கிறாள்.

தெய்வ நம்பிக்கை

அவள் வீட்டில் பூஜை அறை இல்லை. “மனதிலேயே வேண்டிக்கோயேன். நம்பிக்கை இருந்தால் அது போறாதா?” என்று தன் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறாள்.

தெய்வ நம்பிக்கையின்றி வாழ முடியாது என்று கூறுகிறாள்.

  • உறவின் நிலை: இந்த வேறுபாடுகளால் அவர்களுக்குள் ஒரு “கவன உணர்வு” மற்றும் “தயக்கம்” உருவாகிறது.

  • முடிவு: பிரிந்து வந்த பின்னரும், ஒருவரையொருவர் “ஒரு புதிய இருப்பாகத்தான் கண்டு அறிமுகம் செய்துகொள்ள வேண்டி இருக்கிறது” என்று ஸவிதா உணர்கிறாள். இந்த வேறுபாடுகள் அனைத்தையும் கடந்தும், அவர்களின் அன்பு ஒரு ஆழமான பிணைப்பாக, உள்ளுயிர்ப்பாக (அடியிழை) தொடர்ந்து நீடிக்கிறது.

9. தம்பிக்கு – மு.வரதராசனார் (முதல் கடிதம்)

  • நூல் வடிவம்: டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் தம்பிக்கு என்ற நூலில், வளவன் என்னும் அண்ணன் தன் தம்பி எழிலுக்கு எழுதுவதுபோல பல கடிதங்களை எழுதியுள்ளார்.

  • நோக்கம்: அக்கடிதங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மொழியையும் இளைஞர்கள் எவ்வாறு காக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.

  • நன்மை – வன்மை: நன்மை, வன்மை இரண்டும் இருந்தால்தான் இந்த உலகில் வாழ்க்கை உண்டு. நல்ல தன்மை மட்டும் உடையவர்கள் துன்புற்று வீழ்கின்றனர். வல்லமை மட்டும் பெற்றவர்கள் எதிர்பாராத வகையில் அழிந்து போகின்றனர்.

  • தமிழர்கள் நிலை: தமிழர்கள் நல்லவர்களாக மட்டும் இருந்து தனித்தனியாகவும், குடும்பம் குடும்பமாகவும், நாடு நாடாகவும் அழிந்தது போதும். இனி வல்லவர்களாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

  • உடல் – உள்ளம்: உடலை மட்டும் போற்றினால், உள்ளம் பகைத்து அழிக்கும். உள்ளத்தை மட்டும் தூய்மையாகப் போற்றினால், உடல் நோய்க் கிருமிகளுக்கு இடம் கொடுத்து அமைதியைக் கெடுக்கும். எனவே, உடல், உள்ளம் இரண்டையும் வலிமையாகவும், தூய்மையாகவும் காப்பதே கடமையாகும்.

  • அறநெறி – பொருள்நெறி: வாழ்க்கையில் அறநெறியும் வேண்டும், பொருள் நெறியும் வேண்டும் என்று வள்ளுவர் வலியுறுத்துகின்றார். அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் தேவை என்பது வள்ளுவர் கருத்து.

  • தமிழ்மொழி – வன்மை மொழி: நல்ல மொழியான தமிழை நாம் வன்மை பொருந்திய மொழியாக ஆக்கவில்லை. தமிழ் மொழிக்கு அறிவுக் கலைகளில் செல்வாக்கு அளிக்கவில்லை. நீதிமன்றங்களில் உரிமை தரவில்லை. ஆட்சிக் கூடங்களில் வாழ்வு வழங்கவில்லை. வல்லமை இல்லாத நன்மை என்றும் வாழாது.

  • பொதுமக்கள் – களிமண்: பொதுமக்கள் தங்களின் எதிர்காலத்தையும் நிகழ்காலத்தையும் எண்ணித் தங்கள் தேவையை உணரத் தெரியாத களிமண்ணாக பரந்து விரிந்து இருக்கின்றனர். அதனால் யார் யாரோ அவர்களைப் பிசைந்து தங்கள் விருப்பத்திற்கேற்ப உருவங்களைச் செய்து கொள்கின்றனர்.

  • கடமை – மேடைப் பேச்சு: ஒன்றும் செய்யாமல் தமிழ்நாடும் தமிழும் வாழ்ந்து விடும் என்று எண்ணிக் கொண்டு காலம் கழிப்பது குற்றம். மேடையில் வீறு கொண்டு பேசுவதை நிறுத்திவிட்டால், கடமைகளை எண்ணிப் பார்க்க வாய்ப்பு உண்டாகும். மேடையின் மகிழ்ச்சி கடமையை மறக்கச் செய்கின்றது.

  • முடிவுரை (முதல் கடிதம்): இன்றைய உலகம் வல்லமை மிகுந்த மாமியார்போல் உள்ளது. நம் அருமைத் தமிழகம் மிக நல்ல மருமகளாக உள்ளது. தற்கொலையோ மனவேதனையோ எதிரே வந்து நிற்காதவாறு காப்பாற்ற வேண்டியது இளைஞர்களாகிய நம் பொறுப்பு என்று அறிவுறுத்துகின்றார்.

1௦. தம்பிக்கு – மு.வரதராசனார் (இரண்டாம் கடிதம்)

  • நோக்கம்: மேடைப்பேச்சு உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி, நம்மை சோம்பேறிகளாக்குகின்றது. உணரச்சிக் கொந்தளிப்பால் வீரமான வசனங்களைப் பேசுவது வீணான காரியம் என்பதை இக்கடிதத்தின் வாயிலாகக் குறிப்பிடுகின்றார்.

  • வீண் கனவு அல்ல: திருக்குறள் ஓதியே திருமணம் நடைபெற வேண்டும், கோயில்களில் தமிழ்மறைகள் ஓத வேண்டும், அதிகாரிகள் தமிழை மதிப்பவர்களாக இருக்க வேண்டும், ஆளுநர் தமிழில் கையொப்பம் இட வேண்டும் ஆகியவை வீண் கனவு அல்ல. தமிழுக்கோ தமிழ்நாட்டுக்கோ பகைவனாக இருப்பவன்தான் இவற்றை வீண் கனவு என்று குறிப்பிடுவான்.

  • தமிழரின் கடமை: தமிழரின் திருமணங்களில் திருக்குறள் ஓதுவது கனவு அல்ல; அது தமிழரின் கடமை. கோயில்களில் தமிழ் மறை ஓதுவது கனவு அல்ல; சான்றோர்களுக்கு நன்றியுணர்வைத் தெரிவிக்கும் கடமை. அதிகாரிகளும், ஆளுநரும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என்பது கனவு அல்ல; அது வங்காளத்தில் தொண்டு செய்யச் சென்றபோது வங்காளி எழுத்தைக் கற்றுக் கொண்ட காந்தியடிகளின் நெறி.

  • தமிழரின் குறை: பிறருடைய சொல்லுக்கு மயங்குவது தமிழரின் மிகப் பெருங் குறையாக இருக்கின்றது. மற்றவர்கள் இதைத் தெரிந்து கொண்டு, தமிழரை ஏமாற்றுகின்றனர்.

  • தமிழர் நெஞ்சம் உயர்ந்த கொள்கைகளை உணர்ந்து பண்பட்டு வந்தது. அதனால் சொல்பவர் யார், உண்மையாக சொல்கிறாரா என்று ஆராய்ந்து பார்க்காமல் நம்பி உணர்ந்து வாழத் தொடங்கிவிடுவர். இதனால், “தமிழர்களே தமிழர்களை அழித்துக் கொள்வார்கள்” என்று பகைவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

  • மொழிப்பற்று: மொழியால் இனம் அமைவதும், நாகரிகம் அமைவதும், நாடு அமைவதும், நாட்டின் அமைப்புக்குத் துணையாக இருப்பதும் உலகம் அறிந்த உண்மைகள். இவற்றை எல்லாம் பொய் என்று உபதேசம் செய்கிறவர்கள் நம்மைப் பற்றி நல்லெண்ணம் இல்லாதவர்கள்.

  • தற்காப்பு உணர்ச்சி: உலகம் ஒரு குடும்பமாய் அன்பாய் வாழக் கற்றுக் கொள்ளும் வரையில், தமிழனுக்குத் தற்காப்பு உணர்ச்சி கட்டாயம் வேண்டும். தமிழர்களைக் கடமைப்பற்று உடைய செயல் வீரர்களாக ஆக்க வேண்டும்.

  • முடிவுரை (இரண்டாம் கடிதம்): இன்று தமிழர்க்கு வேண்டியது அன்றாட கடமையைப் பற்றிய ஆராய்ச்சியே. மொழிப் பற்றையும் நாட்டுப் பற்றையும் செயலில் காட்ட முனைவதே சிறப்பு என்று அறிவுறுத்துகின்றார் மு.வரதராசனார்.

 

இரண்டாம் பருவம் – அலகு-2 பாடக்குறிப்புகள்

  1. கலிங்கத்துப் பரணி
    • காலத்தால் முற்பட்டது: பரணி நூல்களிலேயே காலத்தால் முற்பட்டது கலிங்கத்துப் பரணி ஆகும்.

    • பாட்டுடைத் தலைவன்: முதல் குலோத்துங்க சோழன் கலிங்க நாட்டின் மீது படை எடுத்து பெற்ற வெற்றியைச் சிறப்பித்துப் பாடியதே இந்நூல்.

    • சிறப்புப் பெயர்: இந்நூல் “தென்தமிழ்த் தெய்வப்பரணி” என்று சிறப்பிக்கப்படுகிறது.

    • ஆசிரியர்: செயங்கொண்டார்.

      • காலம்: 11-12 ஆம் நூற்றாண்டு.

      • பணி: இவர் முதற்குலோத்துங்க சோழனின் அவைக்களப் புலவர் ஆவார்.

      • பாராட்டு: பலபட்டடை சொக்கநாதர் இவரை “பரணிக்கோர் செயங்கொண்டார்” என்று பாராட்டி உள்ளார்.

      • பிற நூல்கள்: கலிங்கத்துப்பரணி தவிர, இவர் இசை ஆயிரம், உலாமடல் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

போர்க்களக் காட்சிகள் (கலிங்கத்துப் பரணி)

  • வீரர்களின் முகமலர்ச்சி: விருந்தினர்களும், ஏழைகளும் தொடர்ந்து வந்து உணவு உண்பதைக் கண்ட வள்ளலைப் போல, பருந்துக் கூட்டமும், கழுகுக் கூட்டமும் தம் உடலைக் கொத்தித் தின்பதைக் கண்டு, இறந்து கிடக்கும் வீரர்களின் திருமுகங்கள் தாமரை மலர்போல மகிழ்ச்சியால் மலர்ந்திருந்தன.

  • நரிக்கூட்டத்தின் செயல்: பிறர்க்குக் கொடுத்து உதவாதவர் இறந்த பின்பு அவருடைய பொருள்களைக் கவர்ந்து செல்லும் பேதைகளைப் போல, நரிக்கூட்டம் வீரர்கள் உயிரோடு இருக்கும் வரையில் அருகிலேயே இருந்துவிட்டு, உயிர் போன பின்பும் கூட அவர்களை விட்டு அகலாமல் இருக்கின்றன.

  • மகளிரின் செயல்: யானைகள் உயிருடன் இருந்தவரை அதன் மதநீரை உண்ட வண்டுகள், மதயானைகள் இறந்ததும் அவற்றை வெறுத்து ஒதுக்கின. வண்டுகள், வானுலகத்தவர் மன்னன் பெற்ற வெற்றி கண்டு பொழியும் பூக்களில் உள்ள தேனை உண்ண மேலே பறந்து சென்று விட்டன. இச்செயல், பொருள் உள்ளவரை கூடி இருந்துவிட்டு, பொருள் தீர்ந்தவுடன் நீங்கி வேறு ஒருவனைத் தேடி அடையும் விலைமகளிரைப் போன்றது.

  • வீரரது மனைவிகளின் செயல்கள்: போர்க்களத்தில் உயிர் நீத்து விழுந்து கிடக்கும் மத யானைகளுடன் மன்னர்களின் கொடிகள் பிணைந்து கிடக்கும் காட்சி, உயிர் நீங்கிய தங்கள் கணவர்களுடன் நெருப்பில் உடன்கட்டை ஏறிய பெண்கள் போல் இருக்கிறது.

  • இடாகினி பேயின் வினவல்: கற்புடைய மகளிர் போரில் இறந்துவிட்ட தங்கள் கணவருடன் வீர சொர்க்கம் அடைய வேண்டி, போர்க்களம் முழுவதும் தங்கள் கணவர் உடலைத் தேடியும் காண முடியாத நிலையில், பிணங்களைத் தின்னும் இடாகினிப் பேயிடம், “எம் கணவர் உடல் கிடக்கும் இடம் எங்கே?” என்று கேட்பதைக் காணலாம்.

2. திருக்குற்றாலக் குறவஞ்சி

  • பெயர்க்காரணம்: குற்றாலம் என்ற இடத்தின் பெயரால் இந்நூல் திருக்குற்றாலக் குறவஞ்சி எனப் பெயர் பெற்றது.

  • வேறுபெயர்: குறவஞ்சி நாடகம்.

  • பாட்டுடைத் தலைவன்: குற்றால நாதர்.

  • பாட்டுடைத் தலைவி: வசந்தவல்லி.

  • பாடல்கள்: 128 பாடல்களைக் கொண்டது.

  • நூலாசிரியர்: திரிகூடராசப்பக் கவிராயர்.

    • பணி: இவர் சின்னணஞ்சாத் தேவரின் அவைக்களப் புலவர்.

    • அரங்கேற்றம்: திருக்குற்றாலநாதரின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது.

    • பாராட்டு: மதுரை மன்னனான முத்துவிஜயரங்க சொக்கநாத நாயக்கரின் பாராட்டைப் பெற்றவர்.

  • குற்றால மலையின் வளம் (குறத்தி கூற்று):

    • குற்றால மலையில் உள்ள ஆண் குரங்குகள் பழங்களைப் பறித்து மந்திகளுக்குக் கொடுத்து மகிழும்.

    • மந்தி சிந்திய பழங்களை வானுலகில் வாழும் தேவர் கூட்டம் விரும்பிக் கேட்கும்.

    • வேடர்கள் தங்கள் கண் பார்வையால் உற்று நோக்கித் தேவர்களை அழைப்பார்கள்.

    • சித்தர்கள் இம்மலைக்கு வந்து உடலுக்கு நன்மை அளிக்கும் யோகங்கள் என்னும் சித்து வேலைகளைச் செய்வார்கள்.

    • தேன்கலந்த மலை அருவியின் அலைகள் மேல் நோக்கி உயர்ந்து பாய்ந்து வானத்தில் இருந்து வழிந்தோடும்.

    • இதனால் செந்நிறச் சூரியனின் தேரில் பூட்டிச் செல்லும் குதிரைக் கால்களும் தேர்ச் சக்கரமும் வழுக்கி விழும்.

    • இம்மலை, வளைந்த இளம் பிறையைச் சூடிய சடை முடியுடைய திருக்குற்றாலநாதராகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள சிறப்பு மிக்கது என்று குறத்தி மலைவளம் கூறுகிறாள்.

3. முக்கூடற்பள்ளு

  • தொன்மை: இது பள்ளு நூல்களில் தொன்மையானது.

  • மூன்று ஆறுகள்: தாமிரபரணி ஆறு, சிற்றாறு, கயத்தாறு ஆகிய மூன்று ஆறுகளைக் குறிப்பிடுகிறது.

  • பாட்டுடைத் தலைவன்: சீவலபேரி என்ற ஊரில் கோவில் கொண்டுள்ள அழகர் மீது பாடப்பட்டதே முக்கூடற்பள்ளு.

  • வேறு பெயர்கள்: அவ்வூரில் அழகர், ‘செண்டு அலங்காரர்’ என்றும் குறிப்பிடப்படுகிறார்.

  • காலம்: கி.பி. 17 ஆம் நுற்றாண்டு.

  • குறிப்பிடப்படும் செல்வர்கள்: காவை வடமலைப் பிள்ளையன், ஆறை அழகப்ப முதலியார், திருமலைக் கொழுந்துப் பிள்ளையன்.

  • ஆற்றில் வெள்ளம் வருவதற்கான அறிகுறிகள் (பள்ளர்கள் கூற்று):

    • தென்மேற்குத் திசையில் மலையாள மின்னல் மின்னிக் கொண்டுள்ளது.

    • தென் கிழக்குத் திசையில் ஈழத்து மின்னல் மின்னிக் கொண்டுள்ளது.

    • நேற்றும் இன்றும் மரக்கொம்புகளைச் சுற்றியவாறு காற்று அடிக்கிறது.

    • கிணற்றில் உள்ள சொறித்தவளைகள் கூப்பாடு போடுகின்றன.

    • நண்டுகள் வளைகளுள் மழைநீர் புகுந்து விடாதபடி வாயில்களைச் சேற்றினால் அடைக்கின்றன.

    • மழை நீரைத் தேடிக் கோடி வானம்பாடிகள் அங்கும் இங்கும் பறக்கின்றன.

    • இந்த அறிகுறிகளைக் கண்ட பள்ளர்கள் யாவரும் துள்ளி ஆடியிருக்கின்றார்கள்.

4. அபிராமி அந்தாதி

  • பாட்டுடைத் தலைவி: அபிராமி.

  • ஊர்: திருக்கடவூர்.

  • இயற்றியவர்: அபிராமி பட்டர்.

  • பாடல்கள்: 102 பாடல்கள்.

  • அபிராமி பட்டர்:

    • இயற்பெயர்: சுப்ரமணிய ஐயர்.

    • காலம்: 18-19 ஆம் நுற்றாண்டு.

    • நூல்கள்: அபிராமி அந்தாதி, அபிராமி அம்மைப்பதிகம்.

  • அன்னை அபிராமி அருளும் பதினாறு செல்வங்கள்:

    • அன்னை அபிராமி இந்த உலகத்தில் மகிழ்ச்சியுடன் வாழ பதினாறு செல்வங்களை அளிப்பதாகக் கூறப்படுகிறது.

    • அவை: கல்வி, நீண்ட ஆயுள், உண்மையான நண்பர்கள், நிறைந்த செல்வங்கள், முதுமையிலும் இளமையுடன் திகழக்கூடிய உடல் நலம், நோயற்ற உடல், சோர்வின்றி இயங்குகின்ற மனம், அன்பைப் பொழிகின்ற மனைவி, மதிப்பும் மரியாதையும் தருகின்ற குழந்தைகள், என்றும் குறையாத புகழ், வாக்கு மாறாதிருத்தல், பிறருக்கு உதவி செய்யத் தடையில்லாத செல்வ நிலை, அழியாத செல்வங்கள், நீதி தவறாத ஆட்சி, துன்பம் இல்லாத வாழ்க்கை, அபிராமியின் திருவடியின் மீது அன்பு இவற்றோடு அடியவர்களின் நட்பு ஆகியனவாகும்.

    • அவள் அலைகள் வீசும் கடலில் துயில் கொண்டிருக்கும் திருமாலின் தங்கை. திருக்கடவூரில் கோயில் கொண்டிருக்கும் தெய்வம். சிவபெருமானின் ஒரு பாகத்தை விட்டு நீங்காதிருக்கும் பேறு பெற்றவள்.

5. திருவரங்கக் கலம்பகம்

  • பாடியவர்: அழகியமணவாளதாசர்.

  • பாடல் எண்ணிக்கை: 100 பாடல்கள்.

  • அழகியமணவாளதாசர்:

    • வேறுபெயர்: பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்.

    • நூல்கள்: அஷ்டப்பிரபந்தம், திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்துமாலை, திருவரங்கத்தந்தாதி, சீரங்கநாயகர் ஊசல்திருநாமம், திருவேங்கடமாலை, திருவேங்கடத்தந்தாதி, அழகர் அந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி.

  • பெண் கேட்டு வந்த தூதனுக்கு அளிக்கப்பட்ட மறுமொழி:

    • வேடர்களாகிய எங்கள் மகளை மணம் பேச வந்த தூதனே, எங்கள் பெண்ணை மணம் பேச வந்த தூதனே! செல்லினால் அரிக்கப்பட்ட ஓலை செல்லுமோ? செல்லாது.

    • திருவரங்கநாதரும், நப்பின்னையின் கணவருமாகிய நம்பெருமானது திருவடிகளில் அன்பு வைத்த, வேடர்களாகிய எங்களது மகளை விரும்பி, முன்னாட்களிலே, பட்டந்தரித்த அரசர்கள் பட்ட பாடுகளை எங்கள் ஊரினுள் வந்து பார் என்று கூறப்பட்டது.

    • அரசர்களின் பொருட்கள் ஆனதன் விளக்கம்:

      • எங்கள் வீட்டு வாசலில் வைத்து மூடும் கதவுகளாக இருப்பது, அவர்கள் பிடித்துவந்த குடைகள்.

      • தினையரிசிகளை அளக்கும்படியாக வைத்த மரக்கால்கள், படி முதலிய அளவுகருவிகள் அவர்கள் தரித்து வந்த பெரிய பெரிய கிரீடங்கள்.

      • எங்கள் குடிசைக்குமேல் மூடுகின்ற கற்றை, அவர்களுக்கு வீசி வந்த சாமரங்கள்.

      • அவர்கள் தோல்வியடைந்து விட்டுச் சென்ற வில்லும் வாளும் வேலும் எங்கள் வீட்டின் நாற்புறத்திலும் வேலியாகப் போடப்பட்டுள்ளன.

    • ஆகவே, உன்னை ஏவிய அரசனுக்கும் இந்தக் கதியே நேரும் என்று போய்க் கூறுவாயாக எனத் தூதனிடம் மறுமொழி அளிக்கப்படுகிறது.

6. தமிழ்விடு தூது

  • தூது இலக்கியத்தின் வேறு பெயர்கள்: வாயில் இலக்கியம், சந்து இலக்கியம்.

  • பாடல் எண்ணிக்கை: 268 கண்ணிகள்.

  • முதல் பதிப்பு: 1930 ஆம் ஆண்டு **உ.வே.சா.**வால் முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டது.

  • கருப்பொருள்: மதுரைச் சொக்கநாதர் மீது காதல் கொண்ட ஒரு பெண், தன் காதல் நோயைக் கூறி வருமாறு தமிழ்மொழியைத் தூது விடுக்கின்றாள்.

  • தமிழ்மொழியின் சிறப்புகள் (பாட்டுடைத் தலைவி கூற்று):

    • மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக வீற்றிருந்த சிவபெருமான், எல்லாத் திசைகளிலும் வெற்றியைத் தரும் தடாதகைப் பிராட்டியாகிய பார்வதி தேவி, விருப்பத்துடன் சிவஞானத் திரட்டைக் கையிலெடுத்த கணபதி ஆகியோர் மீது தூது விடுக்கப்படுகின்றது.

    • தமிழ்ச்சங்கத்தில் புலவர்களுக்கெதிராக அமர்ந்து பாடல் அறிவித்த முருகப்பெருமான்.

    • மூன்று வயதிலேயே பார்வதிதேவியின் அருளால் பாலருந்தி தமிழ்மொழியும் வடமொழியும் கற்றுத் தேர்ந்த திருஞானசம்பந்தர்.

    • மூன்று வருடங்களுக்கு முன்பு முதலை விழுங்கிய பிள்ளையைச் சிவபெருமானிடம் ஈன்று தரச் சொல்லிப் பாடல் இசைத்த சுந்தரர்.

    • பிரமனும் திருமாலும் தேடியும் அடைய முடியாத சிவனின் திருமுடியையும், திருவடியையும் தேடாமலேயே திருநல்லூரில் தேவாரம் பாடித் தன் தலை மீது முடியாகப் பெற்றுக் கொண்ட திருநாவுக்கரசர்.

    • சிவபெருமானே விரும்பி வந்து தம் ஓலையில் எழுதிக்கொள்ள திருவாசகத்தையும், திருக்கோவையாரையும் அருளிய மாணிக்கவாசகர்.

    • முத்தமிழ் ஓதிய அகத்தியர்.

    • பழந்தமிழ் இலக்கணம் உரைத்தத் தொல்காப்பியர்.

7. தனிப்பாடல்கள்

வான் குருவியின் கூடு (ஒளவையார்)

  • ஔவையார்: அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கும் அறிந்தவர். மனித வாழ்வுக்கேற்ற மகத்தான தத்துவங்களை வழங்கியவர்.

  • தற்பெருமை பேசுதல் வேண்டாம்: தூக்கணாங்குருவியின் கூடும், உறுதியான அரக்கும், பழமை கொண்ட கரையான் புற்றும், தேன்கூடும், சிலந்தியின் வலையும் நம்மில் எவருக்கும் செய்வதற்கு அரிதானவையாகும். அதனால் யாம் பெரிதும் வல்லமை உடையோம் என்று எவரும் தற்பெருமை பேசுதல் வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிதானது என்று அறிய வேண்டும்.

ஆமணக்குக்கும் யானைக்கும் சிலேடை (காளமேகப் புலவர்)

  • காளமேகப் புலவர்:

    • இயற்பெயர்: வரதன்.

    • காலம்: 15 ஆம் நூற்றாண்டு.

    • சிறப்பு பெயர்கள்: வசை பாட காளமேகம், வசைகவி, ஆசுகவி.

    • படைப்புகள்: திருவானைக்கா உலா, சித்திரமடல், கடல் விலாசம், புலவர் புராணம், சமுத்திர விலாசம், தமிழ் நாவலர் சரிதை.

    • சிறப்பு: வர்க்க எழுத்துக்களை மட்டும் கொண்டு பல பாடல்கள் புனைந்தவர்.

  • சிலேடை விளக்கம்:

    • ஆமணக்கு: கொட்டைமுத்து இருக்கும். (ஊன்றுகோல் போன்ற) தன் கொம்பை அசைக்கும். உள்ளே துளை உள்ள மூரித்தண்டு ஏந்தி வளரும். கொத்தாக இருக்கும் ஆமணக்குக் குலையை நேரே உயர்த்தித் தலையைச் சாய்க்கும்.

    • யானை: முத்துப்போன்ற தன் வெண்ணிறக் கொம்பை (தந்தத்தை) அசைக்கும். உள்ளே துளை உள்ள தன் துதிக்கைத் தண்டை ஏந்திக்கொண்டு வரும். கொத்தாகப் பழுத்திருக்கும் வாழைமரத்துக் குலையைச் சாய்க்கும்.

இம்பர் வான் எல்லை இராமனையே பாடி (வீரராகவர்)

  • வீரராகவர்:

    • பொன்விளைந்த களத்தூரில் பிறந்தவர்.

    • பிறவியிலேயே கண்ணொளி இழந்தவர்.

    • பாராட்டு: இலங்கை சென்று பரராசசேகர மன்னனைப் பாடி ஒரு யானை, பொற்பந்தம், ஓர் ஊர் ஆகியவற்றைப் பரிசிலாகப் பெற்றார்.

    • படைப்புகள்: திருவாரூர் உலா, திருவேங்கடக் கலம்பகம், கீழ்வேளூர் உலா, வரதராசர் பஞ்சரத்தினம், 39 தனிப்பாடல்கள்.

  • புலவர் பெற்ற பரிசில் (யானையின் வேறு பெயர்கள்):

    • ஒரு அரசனைப் புகழ்ந்து பாடி யானையைப் பரிசாகப் பெற்ற புலவன் வீட்டிற்கு வந்தபோது, வறுமையில் இருந்த மனைவி, என்ன பெற்று வந்திருக்கின்றாய் என்று கேட்கிறாள்.

    • புலவர் சொன்ன யானையைக் குறிக்கும் சொற்களை மனைவி வேறு பொருட்களாக நினைத்துக் கொண்டாள்:

      • களபம் என்று சொல்ல, சந்தனம் என்று நினைத்து பூசிக்கொள்ளச் சொல்கிறாள்.

      • மாதங்கம் என்று சொல்ல, தங்கம் என்று நினைத்து நாம் வாழலாம் என்கிறாள்.

      • வேழம் என்றார், உடனே அவளும் கரும்பு என்று நினைத்து சாப்பிடச் சொல்கிறாள்.

      • கம்பமா என்று சொல்ல, கம்பு மா என்று நினைத்து களி செய்து சாப்பிடலாம் என்கிறாள்.

      • இறுதியில் புலவரும் கைமா என்கிறார்.

    • அப்போதுதான் அது யானை என்று உணர்ந்து, “எம் இருவருக்குமே சாப்பாட்டுக்கு வழியில்லை, எப்படி யானைக்கு உணவு போடுவது?” என்று கலங்கினாள். யானையைக் குறிக்க இத்தனை சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நாரைவிடு தூது (சத்திமுத்தப் புலவர்)

  • நாரையிடம் புலவர் கூறிய செய்திகள்:

    • புலவர் நாரையிடம், “சிவந்த கால்களையுடைய நாரையே! பனங்கிழங்கைப் பிளந்தது போல பவளம் போன்று செந்நிறமுள்ள கூர்மையான வாயையும், சிவந்த காலையும் உடைய நாரையே!” என்று அழைக்கிறார்.

    • புலவர், நாரையிடம் தெற்கில் உள்ள கன்னியாகுமரிக் கடலில் முழுகி, அங்கிருந்து வடக்குத் திசை நோக்கிச் சென்று, தன் ஊராகிய சத்திமுத்தத்தில் உள்ள நீர்நிலையிலே இறங்கும்படி கூறுகிறார்.

    • அங்கு, மழையினால் நனைதற்குரிய சுவரோடு கூடிய கூரை வீட்டில், கனைகுரல் பல்லி நற்சகுனமாக ஒலிப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற தன் மனைவியைப் பார்த்து, தன் நிலையைக் கூறுமாறு கேட்கிறார்.

    • அதாவது, மாறன் என்றும் வழுதி என்றும் பெயரையுடைய பாண்டிய அரசனது மதுரையில், போர்த்துக் கொள்ள ஆடை இல்லாமல் குளிர் காற்றினால் ஒடுங்கி, கைகள் இரண்டினாலும் உடம்பை மூடிக் கொண்டும், கால்களைக் குந்த வைத்துக் கொண்டு தழுவிக் கொண்டும், பெட்டிக்குள் அடங்கியிருக்கும் பாம்பு போல பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்ற வறுமையுடைய உனது கணவனைப் பார்த்தோம் என்று சொல்லுங்கள் என்று பாடுகின்றார்.

wpChatIcon
error: Content is protected !!