முதல் பருவம் அலகு-4 வினா விடை

குறுவினாக்கள்

  • காப்பியம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • காப்பியம் இரண்டு வகைப்படும். அவை, 1.பெருங்காப்பியம், 2. சிறுகாப்பியம்
  • ஐம்பெரும்காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
    • சிலப்பதிகாரம்
    • மணிமேகலை
    • சீவகசிந்தாமணி
    • வளையாபதி
    • குண்டலகேசி
  • இரட்டைக் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
    • சிலப்பதிகாரம்
    • மணிமேகலை
  • சிலப்பதிகாரம் குறிப்பு வரைக.
    • இயற்றியவர் : இளங்கோவடிகள்
    • சமயம் – சமணம்
    • பெயர்க்காரணம்: காப்பியத்தின் கதை சிலம்பினைக் மையமாகக் கொண்டு அமைந்ததால் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது.
    • வேறு பெயர்கள்: குடிமக்கள் காப்பியம்,
      முத்தமிழ் காப்பியம்,
      உரையிடையிட்ட பாட்டுடை செய்யுள்
    • நூல் அமைப்பு : 
      புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் கொண்டது.
  • சிலப்பதிகாரம் உணர்த்தும் முப்பெரும் உண்மைகள் யாவை?
    • அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
    • ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.
    • உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.
  • சிலப்பதிகாரம் நூல் அமைப்பு குறித்து எழுதுக.
    • நூல் அமைப்பு : 
      புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் கொண்டது.
  • சிலப்பதிகாரம் எத்தனை காண்டங்களைக் கொண்டது? அவை யாவை?
    • சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களைக் கொண்டது.
    • புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களைக் கொண்டது.
  • சிலப்பதிகாரத்தைப் பாரதியார் எங்ஙனம் புகழ்ந்துள்ளார்?
    • ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம்’ எனப் பாராட்டுகிறார்.
  • கோப்பெருந்தேவி கண்ட தீக்கனவு குறித்து எழுதுக. 
    • வெண்கொற்றக் குடையும் செங்கோலும் கீழே விழுதல்
    • அரண்மனை வாயிலில் இடைவிடாது மணியின் ஓசை ஒலித்தல்
    • எட்டுத் திசைகளும் அப்போது அதிர்வுறுதல்
    • சூரியனை இருள் விழுங்குதல்
    • இரவு நேரத்தில் வானவில் தோன்றுதல்
  • வாயிற்காவலன் கண்ணகி பற்றி கூறியவற்றை எழுதுக.
    • கொற்றவை அல்லள்!
    • பிடாரியும் அல்லள்!
    • பத்திரகாளியும் அல்லள்.
    • துர்க்கையும் அல்லள்.
    • கையில் பொற்சிலம்பு ஒன்றினை ஏந்தியவளாய், கணவனை இழந்தவளாய்  நம் வாயிற்புறத்தில் வந்து நிற்கின்றாள்.
  • தான்தன் புதல்வனை ஆழியின் மடித்தோன் யார்? 
    • மனுநீதி சோழன்
  • “தேரா மன்னா செப்புவது உடையேன்…” யாருடைய கூற்று?
    • “தேரா மன்னா செப்புவது உடையேன்…” கண்ணகியின் கூற்று.
  • “யானோ அரசன் யானே கள்வன்….” யாருடைய கூற்று?
    • “யானோ அரசன் யானே கள்வன்….” பாண்டிய மன்னனின் கூற்று ஆகும்.
  •  மணிமேகலை காப்பியம் குறிப்பு வரைக.
      • இயற்றியவர்– சீத்தலை சாத்தனார்
      • சமயம் – பௌத்தம்
      • பெயர்க்காரணம்: காப்பியத்தின் கதை முழுதும் காப்பியத் தலைவி மணிமேகலையை மையமாகக் கொண்டு பாடப்பட்டதால்,  மணிமேகலை எனப் பெயர் பெற்றது.
      • வேறு பெயர்: மணிமேகலை துறவு 
      • நூல் அமைப்பு: முப்பது காதைகள் கொண்டது.
  • மணிமேகலை காப்பியத்தின் நோக்கம் குறித்து எழுதுக.
      • பௌத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த நூல் மணிமேகலையாகும்.
      • மக்களிடையே பௌத்த சமய உணர்வு மேலோங்கவும், சமயக் கொள்கைகளைப் பரப்பிடவும், அதனை நடைமுறையில் பின்பற்றவும் எழுந்த சமயப் பிரச்சார விளக்க நூல் மணிமேகலை எனலாம்.
  •  
  • தீவதிலகை குறித்து எழுதுக.
    •  மணிபல்லவத் தீவில் அமைந்துள்ள புத்தரின் பாத பீடத்தை இந்திரனின் ஆணையால் காவல் செய்பவர்.
  • பசியினால் விசுவாமித்திரர் செய்த செயல் யாது?
    • பசியால் எல்லா இடங்களும் சுற்றித் திரிந்தார்.
    • கொடிதானப் பசியைப் போக்க ஏதும் கிடைக்காமல் நாயின் சதையைத் தின்றார்.
  • அமுதசுரபி குறித்து எழுதுக.
    • மணிபல்லவத் தீவில் ஆபுத்திரன் தனது உயிர் துறக்கும்போது, அவன் பயன்படுத்திய அமுதசுரபி பாத்திரத்தை மணிமேகலை பெற்றாள். தீவ திலகை என்னும் தெய்வம் இதற்கு உதவியது.
    • இந்த பாத்திரத்தில் இருந்து எவ்வளவு உணவு எடுத்தாலும், அது குறையாமல் எப்போதும் நிறைந்திருக்கும் என்பது இதன் சிறப்பு. 
  • புத்தபீடிகையின் சிறப்பு குறித்து எழுதுக.
    • அறநெறிகளின் தலைவன் புத்தபகவான்.
    • புத்த பீடிகையைப்  பார்த்து வணங்கியவர்கள் தம்முடைய பழம்பிறப்பை உணர்வார்கள்.
  • பெரியபுராணம் குறிப்பு வரைக.
    • இயற்றியவர்: சேக்கிழார்
    • பெரிய புராணம் என்னும் பெருங்காப்பியம் தமிழகச் சூழலையும், 63 அடியார் பெருமக்களையும் மையமாகக் கொண்டு திகழ்கின்றது.
    • இந்நூல் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களையும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் உடையது.
    • 4286 விருத்தப் பாக்களையுடைய ஒரு பெரு நூலாகும்.
  • சேக்கிழார் குறித்து எழுதுக.
    • இயற்பெயர்: அருண்மொழித் தேவர்
    • சிறப்பு : தொண்டர்சீர் பரவுவார் 
    • காலம்: கி.பி. 12-ஆம் நூற்றாண்டு
  • மனக்கோயில் கட்டியவர் யார்?
    • மனக்கோயில் கட்டியவர் பூசலார் ஆவார்.
  • கற்கோவில் கட்டியவர் யார்?
    • கற்கோவில் கட்டியவர் பல்லவ மன்னன் ஆவார்.
  • பூசலார் குறித்து எழுதுக.
    • தொண்டை நாட்டில் திருநின்றவூரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் பூசலார்.
    • அவர் சிவபக்தியில் சிறந்தவராய், வேதத்தில் வல்லவராய் விளங்கினார்.
    • நாயனார் திருக்கோயில் ஒன்றினைக் கட்டிக் குடமுழுக்கு நீராட்ட விரும்பினார்.
    • சிவபெருமானுக்காக மனதில் கோவில் கட்டினார்.
  • கம்பராமாயணம் குறித்து எழுதுக.
    • இயற்றியவர்: கம்பர்
    • பெயர்க் காரணம்: இக்காப்பியத்தின் கதை இராமனின் வரலாற்றைப் பற்றித் தெரிவிப்பதால் இராமாயணம் எனப்பட்டது.
    • காப்பிய அமைப்பு: இக்காப்பியம் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களைக் கொண்டது.
  •  
  • கம்பராமாயணத்தில் அமைந்துள்ள காண்டங்கள் எத்தனை? அவை யாவை?
    • கம்பராமாயணம் ஆறு காண்டங்களைக் கொண்டது.
    • அவை,
      • பால காண்டம்
      • அயோத்தியா காண்டம்
      • ஆரணிய காண்டம்
      • கிட்கிந்தா காண்டம்
      • சுந்தர காண்டம்
      • யுத்த காண்டம்
  • குகனின் தோற்றம் குறித்து எழுதுக.
    • குகன் துடி என்னும் பறையை உடையவன்.
    • வேட்டைக்குத் துணை செய்யும் நாய்களை உடையவன்.
    • தோலினால் தைக்கப்பட்ட செருப்பை அணிந்த பெரிய கால்களை உடையவன்.
    • இருள் நெருங்கி நிறைந்ததைப் போன்ற நிறத்தை உடையவன்.
    • அவனது பெரிய சேனை அவனைச் சூழ்ந்திருப்பதால் நீர் கொண்டு கார் மேகம் இடியோடு கூடித் திரண்டு வந்ததைப் போன்ற தன்மை உடையவன்.
  • குகன் இராமன் மீது கொண்ட அன்பினை விளக்குக.
    • இராமனிடம் அளவு கடந்த அன்பை உடைய குகன் இராமனுக்காக  தேனையும், மீனையும் பக்குவப்படுத்திக் கொண்டு வந்து கொடுத்தான்.
    • இராமனைப் பிரியமனமின்றி உடன் கட்டிற்கு வருவதாக உரைத்தான். 
  • குகன் இராமனுக்காக கொண்டு வந்தவை எவை? (அல்லது) இராமனுக்காக குகன் கொணர்ந்த பொருள்கள் யாவை?
    • தேன்
    • மீன் 
  • இராமன் கங்கையைக் கடக்க உதவியாக இருந்தவர் யார்?
    • இராமன் கங்கையைக் கடக்க உதவியாக இருந்தவர் குகன் ஆவார்.
  • “நால்வரோடு ஐவரானோம் …”- யாருடைய கூற்று?.
    • “நால்வரோடு ஐவரானோம் …”-  இராமனின் கூற்று.
  • சீறாப்புராணம் குறிப்பு வரைக.
    • ஆசிரியர் : உமறுப்புலவர்
    • ‘சீறத்’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘வாழ்க்கை’ அல்லது ‘வாழ்க்கை வரலாறு’ என்று பொருள். புராணம்’ என்றால் ‘வரலாறு’ என்று பொருள். எனவே, சீறாப்புராணம் என்பது நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல்’ ஆகும். 
    • மூன்று காண்டங்களையும், மொத்தம் 92 படலங்களையும், 5027 விருத்தப் பாடல்களையும் கொண்ட ஒரு காவியம் ஆகும்.
  • சீறாப்புராணத்தின் ஆசிரியர் யார்?
    • சீறாப்புராணத்தின் ஆசிரியர் உமறுப்புலவர் ஆவார்.
  • ‘சீறத்’ என்ற அரபுச்சொல்லின் பொருள் யாது?
    • ‘சீறத்’ என்ற அரபுச்சொல்லின் பொருள் வரலாறு என்பது பொருள் ஆகும்.
  • சீறாப்புராணத்தின் முப்பெரும் காண்டங்களை எழுதுக.
    • விலாதத்துக் காண்டம்
    • நுபுவ்வத்துக் காண்டம்
    • ஹிஜ்ரத்துக் காண்டம் 
  • மானுக்குப் பிணையாக நின்றவர் யார்?
    • மானுக்குப் பிணையாக நின்றவர் நபிகள் நாயகம் ஆவார்.
  • இயேசுகாவியம் குறிப்பு வரைக.
    • இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    • இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு பற்றி குறிப்பிடுகிறது.
    • இந்நூல் பாயிரம், பிறப்பு, தயாரிப்பு, பொதுவாழ்வு, பாடுகள், மகிமை என ஐந்து பாகங்களைக் கொண்டது.
  • இயேசுகாவியத்தின் ஆசிரியர் யார்?
    • இயேசுகாவியத்தின் ஆசிரியர் கவிஞர் கண்ணதாசன் ஆவார்.

நெடுவினாக்கள்

  • சிலப்பதிகாரம் வழக்குரை காதை கதையை விவரி. (அல்லது) பாண்டியன் அவையில் கண்ணகி வழக்குரைத்த விதம் குறித்து விளக்குக.(அல்லது) கண்ணகி பாண்டிய மன்னனுடன் வழக்காடியதை விவரி.

சிலப்பதிகாரம்

    • இயற்றியவர்- இளங்கோவடிகள்
    • சமயம் சமணம்

பெயர்க்காரணம்:

    • காப்பியத்தின் கதை சிலம்பினைக் மையமாகக் கொண்டு அமைந்ததால் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது.

வேறு பெயர்கள்

    • குடிமக்கள் காப்பியம்
    • முத்தமிழ் காப்பியம்
    • உரையிடையிட்ட பாட்டுடை செய்யுள்

நூல் அமைப்பு

    • புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் கொண்டது.

வழக்குரைகாதை

  • பாண்டிமாதேவியின் தீக்கனவு
    • கோப்பெருந்தேவி தான் கண்ட தீக்கனவைத் தோழியிடம் கூறிக் கொண்டிருந்தாள். தோழி! நம் வேந்தனது வெண்கொற்றக் குடையும் செங்கோலும் கீழே விழும்படியாகவும், அரண்மனை வாயிலில் இடைவிடாது மணியின் ஓசை ஒலிப்பதாகவும் கனவு கண்டேன். எட்டுத் திசைகளும் அப்போது அதிர்வுற்றன. சூரியனை இருள் விழுங்கவும் கண்டேன். இரவு நேரத்தில் வானவில் தோன்றவும் கண்டேன். ஆதலால் நமக்கு வரக்கூடிய துன்பம் ஒன்று உள்ளது. எனவே மன்னனிடம் சென்று கனவைக் கூறுவோம்என்று கூறி மன்னனை நாடிச் சென்றாள்.
  • கோப்பெருந்தேவியின் வருகை
      • கோப்பெருந்தேவி மன்னனை நாடிச் செல்லும்போது மகளிர் பலர் தேவியைச் சூழ்ந்து வந்தனர். அவர்களில் சிலர் கண்ணாடி ஏந்தி வர, சிலர் அணிகலன்களை ஏந்தி வர, சிலர் அழகிய கலன்களை ஏந்தி வர, சிலர் புதிய நூலாடையையும், பட்டாடையையும் ஏந்தி வர, சிலர் வெற்றிலைகளை ஏந்தி வர, சிலர் வண்ணமும் சுண்ணமும் கத்தூரி கலந்த சந்தனக் குழம்பும் ஏந்தி வர, சிலர் தொடையல் மாலை, கவரி, தூபம் ஆகியனவற்றையும் ஏந்தி வந்தனர். கூன் உடைய மகளிரும், குருடும், ஊமையருமான குற்றவேல் செய்யும் மகளிரும் அரசியைச் சூழ்ந்து வந்தனர். நரையுடைய முதுமகளிர் பலர், “கடல் சூழ்ந்த இவ்வுலகத்தினைக் காக்கும் பாண்டியனுடைய தேவியே நீடு வாழ்வாயாகஎன வாழ்த்தினர். தோழியரும் காவல் மகளிரும், தேவி அடியெடுத்து வைக்குந்தோறும் புகழ்ந்து போற்றி வந்தனர். தன் பரிவாரங்களுடன் சென்ற தேவி தன் கணவனிடம் தான் கண்ட கனவின் தன்மையை எடுத்துச் சொல்ல, அதனைக் கேட்டுக் கொண்டு பாண்டியன் நெடுஞ்செழியன் அமர்ந்திருந்தான்.
  • கண்ணகி வாயிற்காப்போனிடம் கூறியது
      • அப்போது சினத்துடன் அங்கு வந்த கண்ணகி, “வாயிற்காவலனே, அறிவு இழந்து நீதி நெறி தவறிய மன்னனின் வாயிற்காவலனே! பரல்களை உடைய சிலம்பு ஒன்றினைக் கையிலே ஏந்தியவளாய், தன் கணவனை இழந்த ஒருத்தி நம் கடைவாயிலில் நிற்கின்றாள் என்று உன் மன்னனிடம் சென்று அறிவிப்பாயாகஎன்று கூறினாள்.
  • வாயிற்காவலன் கூற்று
      • வாயிற்காப்போன் மன்னனிடம் சென்று, “கொற்கை நகரத்து வேந்தனே வாழ்க! தென்திசையில் உள்ள பொதிய மலைக்குத் தலைவனே வாழ்க! செழியனே வாழ்க! தென்னவனே வாழ்க! பழிச்சொல் இல்லாத பாண்டிய மன்னனே வாழ்க! குருதிக் கொட்டும் தலையைப் பீடமாகக் கொண்டவளும், வேற்படையைக் கையில் ஏந்தியவளுமாகிய கொற்றவை அல்லள்! ஏழு கன்னியரில் இளையவளான பிடாரியும் அல்லள்! சிவபெருமானை நடனமாட வைத்த பத்திரகாளியும் அல்லள். தாருகாசுரனுடைய அகன்ற மார்பினைப் பிளந்த துர்க்கையும் அல்லள். பகைமை கொண்டவள் போலவும், உள்ளத்தில் மிகுந்த சினம் கொண்டவள் போலவும் உள்ள அவள் கையில் பொற்சிலம்பு ஒன்றினை ஏந்தியவளாய், கணவனை இழந்தவளாய்  நம் வாயிற்புறத்தில் வந்து நிற்கின்றாள்என்று கூறினான். அத்தகையவளை இங்கே அழைத்து வருக என ஆணையிட்டான் மன்னன்.
  • கண்ணகி வழக்குரைத்த நிலை
      • வாயிலோன் வழிகாட்ட கண்ணகி உள்ளே சென்றாள். அவளைக் கண்ட பாண்டியன், “கண்ணீர் சிந்தும் கண்களுடன் என் முன் வந்திருப்பவளே! நீ யார்? என வினவினான்.
      • கண்ணகி பெருஞ்சீற்றம் கொண்டு, “ஆராய்ந்து அறியாத மன்னனே! நா்ன என்னைப் பற்றிக் கூறுகிறேன் கேட்பாயாக. தேவர்களும் வியப்படையுமாறு புறாவின் துன்பத்தைத் தீர்த்த சிபி என்ற மன்னனும், தன் கன்றை இழந்த பசுவின் துன்பத்தைக் கண்டு ஆற்றாமல், அக்கன்று இறப்பதற்குக் காரணமான தன் மகனைத் தன்னுடைய தேர்ச்சக்கரத்தைக் கொண்டு தண்டித்த மனுநீதிச் சோழனும் வாழ்ந்த புகார் நகரமே என் ஊராகும். அவ்வூரில் புகழ் பெற்று விளங்கும் பெருங்குடி என்னும் வணிகர் மரபில் வாழும் மாசாத்துவான் என்பவனின் மகனாகப் பிறந்து, வாழ வேண்டும் என்ற விருப்பம் கொண்டு, ஊழ்வினை துரத்த, உன் மதுரை மாநகருக்கு வந்து, என்னுடைய கால் சிலம்பினை விற்பதற்கு விரும்பி, உன்னால் கள்வன் என்று குற்றம் சுமத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி நான். என் பெயர் கண்ணகிஎன்று கூறினாள்.
  • கண்ணகி வழக்கில் வென்றமை
      • கண்ணகியின் சொல்  கேட்ட பாண்டிய மன்னன், “பெண் தெய்வமே கள்வனைக் கொல்லுதல் கொடுங்கோன்மை அன்று. முறை தவறாத அரச நீதியே ஆகும்என்றான். அதற்குக் கண்ணகி, “நல்ல முறையில் நீதி அறிந்து செயலாற்றாத மன்னனே! என் காலில் உள்ள சிலம்பு மாணிக்கக் கற்களைப் பரல்களாகக் கொண்டதுஎன்றாள். பாண்டிய மன்னன், “என் மனைவியின் கால் சிலம்பில் பரல்களாக இருப்பவை முத்துக்கள்என்று கூறினான். பின்பு கோவலனிடமிருந்து பெறப்பட்ட சிலம்பைக் கொண்டு வாருங்கள்என்று கட்டளையிட்டு வரவழைத்து கண்ணகியின் முன் வைத்தான். உடனே கண்ணகி அவர்கள் வைத்த சிலம்பினை எடுத்து உடைத்தாள். அச்சிலம்பிலிருந்து மாணிக்கப் பரல் ஒன்று மன்னனின் முகத்திலும் வாயிலும் தெறித்து விழுந்தன.
  • பாண்டியன் தன் தவறுணர்ந்து இறத்தல்
    • அவ்வாறு தெறித்த மாணிக்கப் பரல் கண்டு திடுக்கிட்ட வேந்தன் வெண்கொற்றக்குடை தாழவும், செங்கோல் வளையவும், பொற்கொல்லன் பொய்யுரை கேட்டு நீதி தவறிய நான் அரசன் இல்லை. கோவலன் சிலம்பை என்னுடையதாகக் கொண்டதால் நானே கள்வன்”, எனக்கூறி உள்ளம் குமுறினான். துடித்தான். மக்களைக் காக்கும் பாண்டிய நாட்டு ஆட்சிக்கு என் காரணமாகத் தவறு நேர்ந்து விட்டதே என்று பதறினான். கெடுக என் ஆயுள்எனத் தனக்குத் தானே தண்டனை விதித்துக் கொண்டு மயங்கிக் கீழே விழுந்து இறந்து போனான். கணவனின் மரணம் கண்டு கோப்பெருந்தேவி உள்ளம் நிலை குலைந்து உடல் நடுங்கினாள். தாய் தந்தையரை இழந்தவர்க்கு அம்முறை சொல்லிப் பிறரைக் காட்டி ஆறுதல் கூற முடியும். ஆனால், கணவனை இழந்தோர்க்கு அங்ஙனம் காட்டலாகாதுஎனக் கருதித் தன் கணனின் கால்களைத் தொட்டு வணங்கி விழுந்து இறந்து போனாள்.
  • மணிமேகலை பாத்திரம் பெற்ற காதை விளக்குக. (அல்லது) மணிமேகலையிடம் அமுதசுரபி வந்தடைந்த விதத்தினை எழுதுக. (அல்லது) அமுத சுரபி பெற்ற மணிமேகலையின் செயல்கள் குறித்து எழுதுக.

மணிமேகலை

    • இயற்றியவர்– சீத்தலை சாத்தனார்
    • சமயம்பௌத்தம்

பெயர்க்காரணம்

    • காப்பியத்தின் கதை முழுதும் காப்பியத் தலைவி மணிமேகலையை மையமாகக் கொண்டு பாடப்பட்டதால்மணிமேகலை எனப் பெயர் பெற்றது.

வேறு பெயர்கள்

    • இரட்டைக் காப்பியங்கள் (சிலப்பதிகாரம்,மணிமேகலை)
    • இந்நூலின் பதிகம் இந்நூலினை மணிமேகலை துறவு என்று குறிப்பிடுகிறது.

நூல் அமைப்பு

    • முப்பது காதைகள் கொண்டது.

பாத்திரம் பெற்ற காதை

    • மணிபல்லவத்தீவின் காவல் தெய்வமாகிய தீவத்திலகை, மணிமேகலையை அறிந்து கொண்டு, அவளிடம் இங்குள்ள கோமுகிப் பொய்கையில் ஆபுத்திரனால் விடப்பட்ட அமுதசுரபி என்ற பாத்திரம் உன் கைகளை வந்து அடையும். அந்தப் பாத்திரத்தில் வற்றாமல் உணவு சுரந்து கொண்டே இருக்கும். அதைக் கொண்டு நீ பசித்தவர்களுக்கு உணவு தந்து காப்பாய்” என்று கூறியது. அத்தெய்வம் கூறியவாறு மணிமேகலையிடம் அமுதசுரபி வந்தடைந்தது. மணிமேலை தீவத்திலகையிடம் விடை பெற்றுக் கொண்டு வான் வழி பறந்து வந்து புகார் நகரை அடைகின்றாள். பின்பு அறவண அடிகளைக் காணச் செல்கின்றாள். இந்தச் செய்திகளை இக்காதை விவரிக்கின்றது.

நீயார் என வினவல்

    • மணிமேகலா தெய்வம் மந்திரம் சொல்லித் தந்து சென்ற பின்னர் மணிமேகலை மணிபல்லவத் தீவைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டாள். வெள்ளை மணல் குன்றுகளையும், அழகிய பூங்காக்களையும், குளிர்ச்சியான மலர்கள் பூத்திருக்கும் தெப்பங்களையும் சுற்றிப் பார்த்துக் கொண்டே பத்து மைல் தூரம் சென்றாள். அப்போது தெய்வத் திருக்கோலத்துடன் தீவதிலகை என்பவள் எதிரே தோன்றினாள். “படகு கவிழ்ந்து தப்பி வந்தவளைப் போல இங்கு வந்துள்ள தூயவளே நீ யார்?” என்று மணிமேகலையைப் பார்த்துக் கேட்டாள்.

மணிமேலை பதில் கூறல்

    • மணிமேகைலை தீவதிலகையிடம், “யார் நீ என்று என்னைக் கேட்டாய்? எந்தப் பிறப்பைப் பற்றிய கேள்வி இது? தங்கக் கொடி போன்றவளே! நான் சொல்லப் போவதைப் பொறுமையாகக் கேட்பாயாக! முற்பிறப்பில் நில உலகை ஆட்சி செய்த அரசனான இராகுலன் மனைவி நான். என் பெயர் இலக்குமி. இந்தப் பிறவியில் நாட்டியக் கலைச்செல்வி மாதவியின் மகள். என் பெயர் மணிமேகலை. மணிமேகலா தெய்வம் என்னைக் கொண்டு வந்து இங்கு சேர்த்தது. புகழ் பெற்ற இந்தப் பீடிகையால் என் பழைய பிறப்பைப் பற்றித் தெரிந்து கொண்டேன். இது நான் அடைந்த பயன். பூங்கொடியே நீ யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?” என மணிமேலை கேட்டாள்.

நான் தீவதிலகை

    • மணிமேகலை தனது முற்பிற்பினை அறிந்ததை தீவதிலகை அறிந்தாள். நல்ல முறையில் சில செய்திகளைக் கூறலானாள். “இந்த மணிபல்லவத் தீவின் அருகில் இரத்தினத் தீவகம் உள்ளது. அதில் உள்ள சமந்தகம் என்ற மலை உச்சியின் மேல், தன்னைச் சேர்ந்தவர்களைப் பிறவிக் கடலில் இருந்து கரை சேர்க்கும் புத்தரின் பாத பீடிகை உள்ளது. (சமந்தகம் என்பது இலங்கையில் உள்ள சிவனொளி பாதமலை) அதனை வலம் செய்து இங்கு வந்தேன். குற்றிமின்றிக் காட்சி தரும் இந்தப் பாத பீடத்தை இந்திரனின் ஆணையால் காவல் செய்து வருகிறேன். என் பெயர் தீவதிலகை” என்று கூறினாள்.

தீவதிலகை பாராட்டுதல்

    • அறநெறிகளின் தலைவன் புத்தபகவான். அவர் கூறிய புகழ் நிறைந்த நல்லறத்தில் தவறாக நோன்பு உடையவரே, இந்தத் திருவடித்தாமரைப் பீடிகையைப் பார்ப்பதற்கும், வணங்குவதற்கும் உரியவர் ஆவர். அப்படிப் பார்த்து வணங்கிய பின்னர் அவர்கள் தம்முடைய பழம்பிறப்பை உணர்வார்கள். அத்தகைய சிறப்புக்கு உரியவர்கள் இவ்வுலகில் அரியவர். அத்தகையவரே தருமநெறிகளைக் கேட்பதற்கும் உரியர். அத்தன்மை மிக்க அணியிழையே! இன்னும் கேட்பாயாக!

அமுத சுரபி

    • “மிக்க புகழுடைய இந்தப் பீடிகையின் முன்பு தெரிவது கோமுகி என்ற பொய்கையாகும். நீர் நிறைந்துள்ள இந்தப் பொய்கையில் பெரிய குவளை மலர்களும் நெய்தல் மலர்களும் அழகாகப் பூத்துக் கலந்து பொலிவுடன் திகழ்கின்றன.வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திரத்தன்று (பௌர்ணமி நாள்) புத்தர்பிரான் தோன்றிய அந்த நாளில் ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்ற பேரும் புகழும் மிக்க பாத்திரம் வெளிப்பட்டுத் தோன்றும்.

அந்த நாள் இந்த நாளே

    • அந்த நல்ல நாளான வைகாசிப் பௌர்ணமி இன்றுதான். அந்த அரிய அமுதசுரபி பாத்திரம் தோன்றும் நேரமும் இதுதான். நேரிழையே! அதோ அது உன்னிடம் வருவது போலத் தெரிகிறது. இந்தப் பாத்திரத்தில் இடும் உணவானது ஆருயிர் மருந்தாகும். அது எடுக்க எடுக்கக் குறையாது பெருகும். வாங்குபவர் கைகள் வலிக்குமே அன்றி பாத்திரத்தில் குறையாது. மணக்கின்ற மாலை அணிந்த பெண்ணே! அறவண அடிகளிடம் இப்பாத்திரத்தின் வரலாற்றைத் தெரிந்து கொள்வாய்” என்று தீவதிலகை கூறினாள்.

அமுதசுரபி கிடைத்தது

    • தீவதிலகை கூறியது கேட்ட மணிமேகலை, அதனை அடைய விரும்பி அந்த புகழ் மிக்க பீடத்தை தீவதிலகையுடன் வலம் வந்து வணங்கினாள். பீடிகையின் எதிரே நின்றாள். அப்பது எல்லோரும் வணங்கத்தக்க மரபினை உடைய அமுதசுரபி பாத்திரம் அந்தப் பொய்கையில் இருந்து எழுந்து வந்து, மணிமேலை கைகளில் சென்று சேர்ந்தது. அமுத சுரபியைப் பெற்ற மணிமேகலை பெரிதும் மகிழ்ந்தாள்.

புத்த பகவானை வணங்கினாள்

    • மகிழ்ந்த மணிமேகலை,“மாறனை வெற்றி கொள்ளும் வீரனே! தீய வழிகளான வாழ்வின் பகைகளை நீக்கியவனே! மற்றவர்களுக்குத் தரும வழி வாய்ப்பதற்கு முயலும் பெரியோனே! சுவர்க்க வாழ்வினை அடைய விரும்பாத பழையோனே! மக்களது எண்ணங்கள் பின்னடைய எட்டாத மேல்நிலை அடைந்து இருப்பவனே! உயிர்களுக்கு அறிவுக் கண்களை அளித்த மெய் உணர்வு உடையோனே! தீமை தரும் சொற்களைக் கேட்க மறுக்கும் காதுகளை உடையவனே! உண்மை மட்டுமே பேசும் நாவினை உடையவனே! நரகர் துன்பத்தைப் போக்க உடனே அங்கு சென்றவனே! உனது மலர்ப் பாதங்களை வணங்குவேன் அல்லாமல் வாழ்த்துவது என் நாவில் அடங்காத செயலாகும்” என்று கூறி புத்த பகவானைப் போற்றி வணங்கினாள் மணிமேகலை.

பசி தீர்க்கும் பணி

    • புத்த பகவானை மணிமேகலை வணங்கிப் போற்றியதைக் கண்ட தீவதிலகையும் போதிமரத்தின் அடியில் அமைந்துள்ள தேவனின் திருவடிகளை வணங்கினாள். பின் மணிமேகலையைப் பார்த்து, “பசியாகிய நோய் இருக்கிறதே அது மேல்குடியில் பிறந்த தகுதியை அழித்து விடும். தூய எண்ணங்களைச் சிதைத்து விடும். கல்வி என்ற பெரும் புணையையும் நீக்கிவிடும். நாணமாகிய அணியையும் போக்கிவிடும். பெருமையான அழகினைச் சீர்குலைக்கும். மனைவியோடு அடுத்தவர் வாசலில் பிச்சை எடுக்க நிறுத்திவிடும். இப்படியான பசி என்ற நோயினை நீக்க வேண்டும். அது ஒரு பாவி. அதனை விரட்டி அடிக்க வேண்டும். அப்படி நீக்கியவர்களின் புகழை அளவிட முடியாது.

பசியால் நாயினைத் தின்றவர்

    • புல்லும் மரங்களும் வெம்மையாலே கருகிப் புகைந்து பொங்கின. அனல் கொதித்தது. பசியினாலே உயிரினங்கள் அழியுமாறு மழை வளம் குன்றிப் போனது. அரச பதவியை விட்டு மறைகளை ஓதி துறவு மேற்கொண்ட அந்தண விசுவாமித்திர முனிவன், பசியால் எல்லா இடங்களும் சுற்றித் திரிந்தான். கொடிதான இந்தப் பசியைப் போக்க ஏதும் கிடைக்காமல் நாயின் சதையைத் தின்றான் என்றால் பசியின் கொடுமையை என்னவென்று சொல்வது? தின்பதற்கு முன் தேவபலி செய்ததாலே இந்திரன் தோன்றி மழைவளம் பெருகச் செய்தான். விளை பொருள்கள் மலிந்தன. மண் உயிர்களும் பெருகின.

உயிர் அளிப்பவர் யார்?

    • கைம்மாறு செய்யும் தகுதி உள்ளவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுப்பவர், அறத்தை விலைக்கு விற்பவர்கள் ஆவர். இல்லாத ஏழை மக்களின் பசியை நீக்குவோர்தாம் மேன்மையான அறநெறி வாழ்க்கை வாழ்பவர்கள். இந்த உலகத்தில் வாழ்பவர்களுக்கெல்லாம் உணவு தருபவர்களே உயிர் தந்தவர்கள் ஆவர். நீயும் அப்படிப்பட்ட உயிர் தரும் தரும வழியை உறுதியாக மேற்கொண்டாய். கலக்கமற்ற நல்லறத்தினை அறிந்து கொண்டாய்” என்று தீவதிலகை மணிமேகலையிடம் கூறினாள்.

அறம் செய்த பயன்

    • இதைக் கேட்ட மணிமேகலை,“முன்பிறப்பிலே என் கணவனான இராகுலன் திட்டிவிடம் என்ற பாம்பு தீண்ட உயிர் விட்டான். அப்போது நானும் அவனோடு சேர்ந்து தீக்குளிக்க உடல் வெந்தது. உணர்வுகள் நீங்கின. அப்போது வெயில் மிகுந்த உச்சிவேளையில் வந்து தோன்றிய சாது சக்கரமுனிவனுக்கு முன்னர் உணவு தந்ததுபோல கனவு மயக்கம் அடைந்தேன். என் உயிரும் பிரிந்தது. அந்தக் கனவின் காட்சியே நினைவின் பயனாய் அறப்பயனாகி ஆருயிர்களைக் காக்கும் மருந்தாக அமுதசுரபி எனக்குக் கிடைத்தது”.

தாய்போல் காப்பேன்

    • “சம்புத்தீவு என்கிற இப்பெரிய நாவலந்தீவிலே தரும நெறிகளை விதைத்து அந்த விளைவினைச் செல்வமாக அனுபவிப்போர் சிலராவர். கந்தலான துணி உடையை உடுத்திக் கொண்டு பசி துன்புறுத்துவதால் வருத்தப்பட்டு, அதிக வெயில் என்று வெறுக்காமலும், மழை அதிகம் என்று சோம்பித் திரியாமலும், செல்வந்தர் வீட்டு வாசல்களில் சென்று நின்று துன்பம் அதிகமாவதால் முன்பிறப்பில் செய்த தீவினை போலும் என எண்ணி அயர்வோர் பலராவர். பெற்ற குழந்தையின் பசியால் வாடிய முகம் கண்டு இரங்கி சுவையான பாலைச் சுரப்பவள் தாய். அந்தத் தாயின் கொங்கைகள் போல சுரந்து உணவளிப்பது இந்த தெய்விகப் பாத்திரம். இந்தப் பாத்திரத்தின் உள்ளே இட்ட அரிய உயிர் மருந்தாகிய உணவு பசியால் வாடிய ஏழைகளின் முகத்தைக் கண்டதும் சுரத்தலைக் காணும் விருப்பமுடையவள் நான்” எனக் கூறினாள் மணிமேகலை.

வானத்தில் பறந்தாள்

    • “அதன் திறத்தினை உன்னிடம் கூற நான் மறந்து விட்டேன். நீ எடுத்துக் கூறினாய். அறமே சாட்சியாக அருள் சுரந்து அது அனைவருக்கும் உணவு தரும். சிறந்தவர்களுக்குத்தான் அது உணவு தரும். அதன் பயனை நீ நன்றாக அறிந்துள்ளாய். தரும வழியில் மற்றவர்களுக்கு உதவவும் தயாராக இருக்கிறாய்! ஆகவே மணிபல்லவம் விட்டு உனது ஊருக்குச் செல்வாயாக!” என்றாள் தீவதிலகை. மணிமேகலை அவளது திருவடிகளில் விழுந்து வணங்கி விடை பெற்றாள். அமுதசுரபியைத் தன் மலர் போன்ற கையில் ஏந்தி மேலே எழுந்து வானத்தில் பறந்து புகார் நகர் நோக்கிச் சென்றாள்.

பழைய பிறப்பைக் கூறினாள்

    • “சொன்ன சொல் மாறாத மணிமேகலா தெய்வம் கூறிய ஏழாம் நாளும் வந்தது. என் மகள் மணிமேகலை வரவில்லையே, தெய்வம் கூடப் பொய் சொல்லுமா?” என நினைத்து வருந்தினாள் மாதவி. அப்போது அவர்கள் முன் வானிலிருந்து இறங்கித் தோன்றினாள் மணிமேகலை. மாதவி சுதமதி ஆகியோர் கவலை நீங்கினர். மணிமேகலை அவர்களிடம் ஓர் அரிய செய்தியைக் கூறினாள். “இரவிவன்மனின் பெருமை மிக்க புதல்வியே! குதிரைப் படைகளை உடைய துச்சயன் மனைவியே! அமுதபதியின் வயிற்றில் பிறந்து அப்போது எனக்குத் தமக்கையராக இருந்த தாரையும் வீரையும் ஆகிய நீங்கள் இப்பிறப்பில் எனக்குத் தாயார்களாக ஆனீர்கள்! உமது திருவடிகளை வணங்குகிறேன்” என்று கூறிய மணிமேலை, மாதவி சுதமதி இருவரையும் வணங்கினாள். (சுதமதி மாதவியின் தோழி. மணிமேகலைக்குச் செவிலித்தாய். ஆகவே இருவரையும் தாய் என்று கூறினாள் மணிமேகலை).

அறவண அடிகள் திருவடி தொழுவோம்

    • “உங்கள் இருவருக்கும் இந்த மானிடப் பிறப்பிலேயே தீயவினைகளைத் துடைத்து நற்பேறு எய்தும் வாய்ப்பு கிடைக்கும். அதற்கான தவநெறி முறைகளை அறவண அடிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்வீர். உங்கள் பிறவிப் பயன் இதுவே ஆகும். இதோ இந்தப் புகழ் மிக்க பாத்திரம் அமுதசுரபியாகும். இதனை நீங்களும் வணங்குங்கள்” என்று மணிமேகலை கூற, அவர்களும் வணங்கினர். மேலும் “உண்மையே பேசும் தாய்மார்களை நோக்கிக் குறை காண இயலாத மாபெரும் தவத்தோரான அறவண அடிகளின் பாதங்களை வணங்கிடச் செல்வோம். நீங்களும் வாருங்கள்” என்று அவர்களோடு அறவண அடிகளைக் காணப் புறப்பட்டனர்.
  • பெரியபுராணத்தில் அமைந்துள்ள பூசலார் நாயனார் புராணம் குறித்து விவரி. (அல்லது) பூசலார் நாயனார் கற்கோவில் கட்டிய விதத்தினை விளக்குக. (அல்லது) பூசலார் நாயனார் சிவன்மீது கொண்ட பக்தியை விளக்குக. (அல்லது) பூசலார் கோவில் கட்டிய திறத்தைப் பெரியபுராணம் வழிநின்று விளக்குக.

பெரியபுராணம்

    • இயற்றியவர்: சேக்கிழார்
    • பெரிய புராணம் என்னும் பெருங்காப்பியம் தமிழகச் சூழலையும், 63 அடியார் பெருமக்களையும் மையமாகக் கொண்டு திகழ்கின்றது.
    • இந்நூல் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களையும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் உடையது.
    • 4286 விருத்தப் பாக்களையுடைய ஒரு பெரு நூலாகும்.

பூசலார் நாயனார் புராணம்

கதைச் சுருக்கம்

தொண்டை நாட்டில் திருநின்றவூரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் பூசலார். அவர் சிவபக்தியில் சிறந்தவராய், வேதத்தில் வல்லவராய் விளங்கினார். நாயனார் திருக்கோயில் ஒன்றினைக் கட்டிக் குடமுழுக்கு நீராட்ட விரும்பினார். அதற்குரிய பொருள் கிடைக்காமையால் மனத்திற்குள்ளேயே எல்லாப் பொருள்களையும் கொண்டு சேர்த்துப் பிரதிட்டை செய்யும் நாளையும் குறித்தார். அச்சமயத்தில் காஞ்சி மாநகரில் பல்லவ வேந்தன் கோயில் கட்டிப் பிரதிட்டை செய்யும் நாளைக் குறித்தான். சிவபிரான் மன்னன் கனவில் தோன்றித் “திருநின்றவூரில் பூசல் என்பவன் கோயில் கட்டிப் பிரதிட்டை செய்ய உள்ளான். நாம் அங்குச் செல்வதால் உனது ஆயலப் பிரதிட்டையைப் பின்னொரு நாளில் வைத்துக்கொள்” என்றருளினார். உடனே மன்னர் விழித்தெழுந்து திருநின்றவூரை அடைந்தான். ஆங்குப் புதிதாகக் கட்டப்பட்ட கோயில் எதுவும் இல்லை என அறிந்தான். பின்பு பூசலாரை அடைந்து தொழுது “அடிகள் கட்டிய திருக்கோயில் எங்குள்ளது? என வினவி அத்திருக்கோயிலின் பிரதிட்டை நாள் இன்று என இறைவரால் அறிந்தேன்” என்றான். பூசலார் மருட்சியடைந்து தாம் மனத்துக்கண் கட்டிய கோயிலின் முறையினை விளக்கினார். மன்னன் நாயனாரைத் தொழுது விடைபெற்றான். நாயனார் தம் மனக்கோயிலுள் சிவபிரானைப் பிரதிட்டை செய்தார். சில காலம் மனக்கோயில் வழிபாடு செய்து இறைவர் திருவடி நிழலைச் சேர்ந்தார்.

பூசலார் தம் மனதில் கோயில் அமைத்தல்

    • பகைமை கொண்ட முப்புர அசுரர்களின் பொன், வெள்ளி, இரும்பு ஆகிய பறக்கும் கோட்டைகளை எரித்து அழித்த சிவபிரானுக்குக் கோயில் எடுக்க வேண்டும் என்று எண்ணி, எந்தப் பொருள்களும் இல்லாத வறுமையில், மனத்தின்கண் எழுந்த உணர்வுகளைக் கொண்டு நல்ல ஆலயத்தை உருவாக்கிய திருநின்றவூரின்கண் விளங்கும் பூசலார் தம் நினைவால் அமைத்த கோயிலை உரைக்கத் தொடங்கினேன்.
    • உலகில் ஒழுக்கநெறி உயர்ந்து மேவும் பெருமையுடைய தொண்டை நாட்டில் நான்கு வேதங்களும் நன்கு ஓதப்பெறும் தொன்மையான திருநின்றவூர். அங்கு இறைவனின் அடியார்கள் தம் கொள்கையில் சிறந்து நிற்பர்.
    • வேத நெறி தழைத்து மேவும் வகையில் பூசலார் திருநின்றவூரின்கண் தோன்றினார். அவருடைய உணர்வுகள் யாவும் சிவபிரான் திருப்பாதங்களையே சார்ந்தன. அன்பு மாறாத நெறி பெருகி வளரும் தன்மையில் வாய்மையுடன், வேதத்தின் நியதியில் பொலிவுடன் விளங்கினார்.
    • சிவனடியார்களுக்கு ஏற்ற பணிகளைச் செய்தலே தமக்குரிய திருத்தொண்டு என்று எண்ணியவராக, சிவபிரான் எழுந்தருளுவதற்கு ஒரு கோயிலை அமைக்க வேண்டும் என்று விரும்பினார். தன்னிடம் பொருட்செல்வம் இல்லை என்று உணர்ந்தும், கோயில் அமைக்கும் எண்ணத்தில் உறுதியுடன் நின்றார்.
    • கோயில் அமைக்க அவருடைய உள்ளம் விரும்பியது. ஆனால், கோயில் அமைப்பதற்குரிய பெருஞ்செல்வத்தை வருந்தித் தேடியும் கிடைக்காததால் என்ன செய்வேன் என்று மனம் வருந்துகின்றார். மனதுள்ளேயே அக்கோயிலைக் கட்ட வேண்டும் என்று எண்ணி அதற்குரிய செல்வத்தைச் சிறுகச் சிறுகத் தம் சிந்தனையிலேயே திரட்டிக் கொண்டார்.
    • தொழிற் கருவிகளோடு கட்டுதற்குரிய சாதனங்களுடன் தச்சர்களையும் தேடிக் கொண்டு ஆயலம் எடுப்பதற்குரிய நல்ல நாளும் விரும்பி, ஆகம விதிப்படி அடிநிலை எடுத்து, தம் அன்பின் நிறைவினால் இரவும் பகலும் உறங்காது மனதுக்குள்ளேயே கோயிலைச் செதுக்கினார்.
    • கோபுரத்தின் அடி முதல் முடி வரை அமைந்துள்ள அடுக்குகள் யாவற்றிலும் சித்திர வேலைப்பாடுகள் அமையுமாறு மனத்தினால் அமைத்து, விமானத்தின் முடிவில் சிகரமும் சிற்ப நூலில் சித்திரங்களும் உருவாக்கினார். இத்தகைய பணி யாவும் நீண்ட நாட்கள் செய்யப்படும் பணியாக தமது நினைவில் நிலைநிறுத்திக் கொண்டார்.
    • விமானத்தின் உச்சியில் கூர்மையான சிகரம் அமைத்து, சுண்ணச் சாந்து பூசி சிற்ப அலங்காரங்களைச் செய்த பின்பு, திருமஞ்சனத்திற்குரிய கிணறும், கோயிலைச் சுற்றி மதில்களைக் கட்டிக் குளமும் அமைத்தார். சிவபிரான் திருமேனியின் திருவுருவமாகிய சிவலிங்க மூர்த்தியைப் பிரதிட்டை செய்யும் நாளைக் குறித்தார்.

பல்லவ மன்னன் கனவில் சிவபிரான் தோன்றுதல்

    • பல்லவ வேந்தன் காஞ்சி மாநகரில் பெருஞ்செல்வத்தில் கற்கோயிலை முழுமையாகக் கட்டி முடித்தான். பின்பு சிவபிரானைப் பிரதிட்டை செய்ய குடமுழுக்கு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான். அதற்கு முன் நாள், கொன்றை மலர் சூடிய சிவபிரான் மன்னன் கனவில் தோன்றினார்.
    • “திருநின்றவூரில் பூசல் என்னும் அன்பன் பலநாள் மனத்துக்கண் அமைத்த புகழ் மிக்க ஆலயத்துள் நாளை நாம் புகுகின்றோம். ஆதலால் நீ செய்யும் குடமுழுக்குச் செயலை நாளைய தினம் தவிர்த்துப் பின்பு ஒருநாளில் அமைத்துச் செய்வாய்” என்று கூறி மறைந்தார்.

பல்லவ மன்னன் பூசலாரைக் கண்டு வணங்குதல்

    • திருத்தொண்டராகிய பூசலார் நாயனாரின் பெருமையை சிவபிரான் சொல்லக் கேட்ட பல்லவ மன்னன், அத்திருப்பணி செய்தவரைக் கண்டு வணங்குதல் வேண்டும் என்று விருப்பம் கொண்டு திருநின்றவூரை சென்றடைந்தான்.
    • திருநின்றவூரை அடைந்த வேந்தன், அன்பராகிய பூசலார் அமைத்த கோயில் எப்பக்கம் உள்ளது என்று அங்கு வந்தவர்களைக் கேட்க, அவர்களும், “தாங்கள் கூறும் பூசலார், கோயில் எதுவும் அமைத்தது இல்லை” என்றனர். அந்நிலையில் இறைவனின் அடியவர்கள் அனைவரும் தன்னைச் சந்திக்க வருமாறு உரைத்தான் மன்னன்.
    • அன்பர்கள் அனைவரும் வந்து அரசனைக் காண, மன்னன் அவர்களிடம் “பூசலார் என்பவர் யார்?” என்று வினவ, அவர்களும், “குற்றம் இல்லாத அந்த அன்பர் இந்த ஊரைச் சேர்ந்தவர்” என்று கூற, பூசலாரை நாடிச் சென்றான் மன்னன்.
    • திருத்தொண்டராகிய நாயனாரைக் கண்ட மன்னன் தொழுது போற்றி, “எட்டுத் திசைகளில் உள்ளவரும் தொழுமாறு நீங்கள் கட்டிய கோயில் எங்குள்ளது? இன்று அக்கோயிலில் தேவர் தலைவனான சிவபிரானைப் பிரதிட்டை செய்யப் போவதை அறிந்து இறைவன் அருள் பெற்று உம்மைக் கண்டு அடிபணிய வந்தேன்” என்று கூறினான்.

பூசலார் தாம் கட்டியது மனக்கோயில் என்று உரைத்தல்

    • மன்னன் உரை கேட்ட நாயனார் மருட்சி அடைந்தவராக, “என்னை ஒரு பொருளாகக் கொண்டு எம்பிரான் அருள் செய்தார். பணமும் பொருளும் கிடைக்கப்பொறாமையால் உள்ளத்தால் முயன்று நினைந்து நினைந்து அமைத்த கோயில் இதுவேயாகும்” என்று தாம் மனத்துள் எழுப்பிய ஆலயத்தை மன்னனுக்கு விளக்கமாக எடுத்துக் கூறினார்.
    • நாயனாரின் உரை கேட்ட மன்னன், அங்கு நிகழ்ந்த அதியசயத்தை எண்ணிக் “குற்றமற்ற திருத்தொண்டர்தம் பெருமைதான் என்னே!” என்று போற்றி, தான் சூடிய மாலை தரையில் பதியுமாறு நிலத்தில் வீழ்ந்து பூசலாரை வணங்கினான். பின்பு முரசு ஒலிக்கும் படையோடு தன் காஞ்சி மாநரை அடைந்தான்.

பூசலார் தம் மனக்கோயிலில் சிவபிரானைப் பிரதிட்டை செய்தல்

    • பூசலார் தாம் சிந்தையால் அமைத்த கோயிலில் சிவபிரானை நற்பெரும் பொழுதில் பிரதிட்டை செய்தார். பல நாட்கள் நலம் விளங்கும் பூசைகள் யாவும் செய்தார். திருநடனம் புரியும் இறைவனின் அழகிய திருப்பாதத்தில் சேர்ந்தார்.
  • கம்பராமாயணம் குகப்படலம் குறித்து விவரி. (அல்லது) குகன் இராமன் மீது கொண்ட பக்தியைக்/அன்பினைக் குகப்படலம்வழி விளக்குக.

கம்பராமாயணம்

    • இயற்றியவர்: கம்பர்
    • பெயர்க் காரணம்: இக்காப்பியத்தின் கதை இராமனின் வரலாற்றைப் பற்றித் தெரிவிப்பதால் இராமாயணம் எனப்பட்டது. 

காப்பிய அமைப்பு

    • இக்காப்பியம் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களைக் கொண்டது.

குகப்படலம்

    • வனம் புகுந்த இராமன் குகனைத் தோழமை கொண்ட செய்தியை உணர்த்தும் பகுதியை விவரிப்பதே குகப்படலம் ஆகும்.

குகனின் அறிமுகம்

    • இராமன் முனிவர்கள் தந்த விருந்தை அருந்தியிருந்தபொழுது, குகன் என்னும் பெயரை உடையவன் அங்கு வந்தான். அந்தக் குகன் ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவன். தூய்மையான கங்கையின் துறையில் பழங்காலம் தொட்டு ஓடங்களைச் செலுத்தும் உரிமை பெற்றவன். பகைவர்களைக் கொல்லும் வில்லை உடையவன். மலை போன்ற திரண்ட தோள்களை உடையவன்.
    • அந்தக் குகன் துடி என்னும் பறையை உடையவன். வேட்டைக்குத் துணை செய்யும் நாய்களை உடையவன். தோலினால் தைக்கப்பட்ட செருப்பை அணிந்த பெரிய கால்களை உடையவன். இருள் நெருங்கி நிறைந்ததைப் போன்ற நிறத்தை உடையவன். அவனது பெரிய சேனை அவனைச் சூழ்ந்திருப்பதால் நீர் கொண்டு கார் மேகம் இடியோடு கூடித் திரண்டு வந்ததைப் போன்ற தன்மை உடையவன்.
    • ஊதுகொம்பு, துந்துபி என்னும் பறை, சங்கு, முழங்கும் பேரிகை, பம்பை என்னும் பறை ஆகிய இசைக்கருவிகள் நிறைந்துள்ள படையை உடையவன். இலை வடிவமான அம்புகளை உடையவன். ஓடங்களுக்குத் தலைவன். யானைக் கூட்டத்தைப் போன்று பெரிய சுற்றத்தார்களை உடையவன்.
    • காழகம் (அரைக்கால் சட்டை) என்னும் ஆடை அணிந்தவன். கங்கை ஆற்றின் ஆழத்தைக் கண்டறிந்த பெருமையை உடையவன். இடுப்பிலிருந்து தொங்கவிட்ட செந்நிறத் தோலை உடையவன். இடுப்பைச் சுற்றிக் கட்டிய, ஓன்றோடு ஒன்று பிணைக்கப்பட்ட புலி வாலை உடையவன்.
    • பற்களைத் தொடுத்தது போன்ற பல அணிகலன்களைப் பூண்டவன். வீரக்கழலை அணிந்தவன். தலை மயிரில் நெற்கதிர்களைச் செருகிக் கொண்டவன். சினம் வெளிப்பட மேலேறி வளைந்த புருவத்தை உடையவன்.
    • பனை மரம் போன்று நீண்டு வளர்ந்துள்ள கைகளை உடையவன். பாறை போன்ற மார்பினை உடையவன். எண்ணெய் பூசப்பட்ட இருளைப் போன்ற கருநிற உடம்பை உடையவன்.
    • தன் இடுப்பில் குருதிக் கறை படிந்த வாளை உடையவன். நஞ்சை உடைய நாகமும் கண்டு நடுங்குகின்ற கொடிய பார்வையை உடையவன். பைத்தியக்காரர் போல் தொடர்பில்லாத பேச்சை உடையவன். இந்திரனின் வச்சிராயுதம் போன்று உறுதியான இடையை உடையவன்.
    • விலங்குகளின் இறைச்சியையும், மீனையும் உண்ட புலால் நாற்றம் பொருந்திய வாயை உடையவன். சிரிப்பு என்பது சிறிதும் இல்லாத முகத்தினை உடையவன். கோபம் இல்லாதபோதும் கனல் கக்குமாறு பார்ப்பவன். யமனும் அஞ்சும்படி அதிர்ந்து ஒலிக்கின்ற குரலை உடையவன்.
    • சிருங்கி பேரம் என்று சொல்லப்படும் பேரலைகள் பெற்ற கங்கை ஆற்றின் அருகில் அமைந்த நகரத்தில் வாழ்பவன். அப்படிப்பட்ட குகன் முனிவர் இருப்பிடத்தில் தங்கியுள்ள இராமனைக் காண்பதற்காகத் தேனையும் மீனையும் காணிக்கையாக எடுத்துக் கொண்டு வந்தான்.

இராமனின் தவச்சாலையை குகன் சேர்தல்

    • பொய்மை நீங்கிய மனத்தையும், இராமனிடம் அன்பு கொள்ளும் குணத்தையும் உடைய குகன் தன்னுடைய சுற்றத்தார் தூரத்தே நிற்க, அம்பையும், வில்லையும், வாளையும் நீக்கிவிட்டு, இராமன் தங்கியிருந்த தவச்சாலையின் வாயிலை அடைந்தான்.

குகன் இலக்குவனுக்குத் தன்னை அறிவித்தல்

    • வாயிலை அடைந்த குகன் தன் வருகையை உணர்த்தக் கூவிக் குரல் கொடுத்தான். முதலில் தம்பி இலக்குமணன் அவனை அணுகி, “நீ யார்?” என்று வினவினான். குகன் அவனை அன்போடு வணங்கி, “ஐயனே! நாய் போன்ற அடியவனாகிய நான் ஓடங்களைச் செலுத்தும் வேடன் ஆவேன். தங்கள் திருவடிகளைத் தொழ வந்தேன்” என்று கூறினான்.

குகனின் வரவை இலக்குவன் இராமனுக்கு அறிவித்தல்

    • இலக்குமணன் “நீ இங்கேயே இரு” என்று குகனிடம் கூறிவிட்டு, தவச் சாலைக்குள் சென்று தன் தமையன் இராமனைத் தொழுது, “அரசே! தூய உள்ளம் பெற்றுள்ளவனும், தாயைக் காட்டிலும் மிக நல்லவனும், அலை மோதும் கங்கையில் செல்லும் ஓடங்களுக்குத் தலைவனுமான குகன் என்னும் ஒருவன் உன்னைக் காண்பதற்காக, பெருந்திரளாகத் தன் சுற்றத்தாருடன் வந்துள்ளான்” என்று தெரிவித்தான்.

இராமனைக் கண்டு வணங்கிய குகன்

    • இராமனும் மனமுவந்து, “நீ அந்தக் குகனை என்னிடம் அழைத்து வா” என்று கூறினான். இலக்குமணனும் குகனை நோக்கி, “உள்ளே வா” என்றான். அதைக் கேட்ட குகன் விரைவாக உள்ளே சென்று, இராமனைத் தன் கண்ணினால் கண்டு களிப்படைந்தான். தன் கருமை நிற முடிகள் தரையில் படுமாறு அவனை வணங்கி எழுந்து, உடல் வளைத்து, வாயினைத் தன் கைகளால் பொத்திப் பணிவோடு  நின்றான்.

குகன் தன் கையுறைப் பொருளை அறிவித்தல்

    • “இங்கே அமர்க” என்று குகனிடம் இராமன் கூறினான். ஆனால் குகன் அமரவில்லை. இராமனிடம் அளவு கடந்த அன்பை உடைய அந்தக் குகன், இராமனை நோக்கி, “தங்கள் உணவாக அமையும்படி தேனையும், மீனையும் பக்குவப்படுத்திக் கொண்டு வந்துள்ளேன். தங்களுடைய எண்ணம் யாதோ?” என்று கேட்டான். இராமன் முனிவர்களை நோக்கிப் புன்னகைத்து விட்டு, பின்வருமாறு சொல்லத் தொடங்கினான்.

குகனது அன்பை இராமன் பாராட்டுதல்

    • “மனம் மகிழும்படி உள்ளத்திலே உண்டான அன்பின் தூண்டுதலால் பக்தி ஏற்பட அருமையாகக் கொண்டு வரப்பட்ட இத்தேனும் மீனும் அமிழதத்தைக் காட்டிலும் சிறந்தவை அல்லவா? நீ கொண்டு வந்தவை எவையாயினும் சரி, அவை அன்போடு பொருந்தியவை என்றால் தூய்மையானவையே! அவை எம்மைப் போன்றவர்கள் ஏற்கத் தக்கவையே. ஆதலால் நாம் அவற்றை இனிதாக உண்டவர்போல் ஆனோம்” என்று குகனிடம் கூறினான் இராமன்.

விடியலில் நாவாய் கொண்டு வர குகனிடம் இராமன் கூறல்

    • ஆண் சிங்கம் போன்ற இராமன் “நாம் இன்று இத்தவச்சாலையில் தங்கி நாளை கங்கையைக் கடப்போம். எனவே நீ உன் சுற்றத்தாரோடு இங்கிருந்து சென்று, உன்னுடைய நகரத்தில் உவகையோடு தங்கிவிட்டு, விடியற்காலை நாங்கள் செல்வதற்குரிய ஓடத்துடன் இங்கே வருக” என்று கூறினான்.

குகனது வேண்டுகோள்

    • இராமன் இவ்வாறு கூறியதும், குகன் “இவ்வுலகம் முழுவதையும் உனக்குரிய செல்வமாகக் கொண்டவனே! உன்னை இந்தத் தவவேடத்தில் பார்த்த என் கண்களைப் பறித்து எறியாத கள்ளன் நான். இந்தத் துன்பத்தோடு உன்னைப் பிரிந்து எனது இருப்பிடத்தை நோக்கிச் செல்ல மாட்டேன். ஐயனே! இங்கிருந்து என்னாலான அடிமைத் தொழிலை உனக்குச் செய்கிறேன்” என்று கூறினான்.

குகனின் வேண்டுகோளை இராமன் ஏற்றல்

    • மாலை சூட்டப்பட்ட வில்லை உடைய இராமன், குகன் கூறிய கருத்தைக் கேட்டான். உடனே சீதையின் முகத்தை நோக்கி, இலக்குமணனின் திருமுகத்தை நோக்கி, அவர்கள் மனமும் குகனின் அன்பை ஏற்றுக் கொள்வதை அறிந்து, “இவன் நம்மிடம் நீங்காத அன்புடையவன் ஆவான்” என்று கூறி கருணையினால் மலர்ந்த கண்கள் உடையவனாகி, “இனிமையான நண்பனே! நீ விரும்பியவாறு இன்று என்னோடு தங்கியிரு” என்று குகனிடம் கூறினான்.
    • இராமன் இன்று எம்மொடு தங்குக என்று சொல்லக் கேட்ட குகன், இராமன்  திருவடிகளை வணங்கி, மகிழ்ச்சி மிக, கடலை ஒத்த துடிப்பறையோடு கூடிய தனது சேனைப் பெருக்கை அழைத்து, அவர்கள் தங்கியுள்ள தவச்சாலையைச் சுற்றிப் பாதுகாக்கக் கட்டளையிட்டு, தானும் கட்டமைந்த வில்லைப் பிடித்து, வாளையும் அரைக்கச்சிலே கட்டி, கூரிய அம்மைப்பிடித்து, இடியோடு கூடிய மழை மேகம் போல உரத்த சத்தம்இட்டு, அத்தவச்சாலையில் அம்மூவரையும் காவல்செய்து  நின்றான்.

இராமன் நகர் நீங்கிய காரணம் அறிந்து குகன் வருத்துதல்

    • “மனு குலத்தில் வந்த மன்னனே! நீ அழகிய அயோத்தி நகரை விட்டு இங்கு வந்த காரணத்தைத் தெரிவிப்பாயாக” என்று குகன் கேட்டான். இலக்குமணன், இராமனுக்கு நேர்ந்த துன்பத்தைச் சொல்ல அதைக் கேட்டு இரங்கியவனான குகன் மிக்க துன்பமுற்று, “பூமி தேவி தவம் செய்தவளாக இருந்தும், அத்தவத்தின் பயனை முழுவதும் பெறவில்லை போலும். இதென்ன வியப்பு” என்று கூறி இரண்டு கண்களும் அருவி போலக் கண்ணீர் சொரிய அங்கே இருந்தான்.

கதிரவன் மறைதல்

    • இருள் போன்ற பகையைத் தொலைத்து, திசைகளை வென்று, அனைவர்க்கும் மேலாக விளங்கி, தனது ஒப்பற்ற ஆணைச் சக்கரத்தைச் செலுத்தி, உயர்ந்த புகழை நிலைக்கச் செய்து, உலகத்தில் உள்ள அனைவர் உள்ளத்திலும் இடம் பெற்று கருணை காட்டி, பின் இறந்து போன வலிமை பெற்ற மாவீரனான தசரதனைப் போல செந்நிறக் கதிர்களைப் பெற்ற சூரியன் மறைந்தான்.

இராமனும் சீதையும் உறங்க இலக்குவன் காவல் இருத்தல்

    • மாலை வேலையில் செய்ய வேண்டிய கடமைகளைச் செப்பமான முறையில் செய்து, அங்கு தங்கிய இராமனும், பாற்கடலில் தோன்றிய அமுதம் போன்ற சீதையும் பரந்த பூமியில் பரப்பப்பட்ட படுக்கையில் படுத்தனர். இலக்குமணன் வில்லை ஏந்திக் கொண்டு விடியற்காலை தோன்றும் வரையிலும், கண்ணையும் இமைக்காமல் விழிப்போடு காத்து நின்றான்.

இராம இலக்குவரை நோக்கி குகன் இரவு முழுதும் கண்ணீர் வழிய நிற்றல்

    • யானைக் கூட்டத்தைப் போலத் தன்னைச் சுற்றியிருக்கும் சுற்றத்தாரை உடையவனும், அம்பு தொடுக்கப்பட்ட வில்லை உடையவனும், வெம்மை ஏறிக் கொதித்து நிலைகுலையும் மனத்தை உடையவனும், இமைக்காமல் விழித்திருக்கும் கண்களை உடையவனும், ஓடங்களுக்குத் தலைவனுமான குகன், கண் இமைக்காது நின்ற இலக்குமணனைப் பாரத்தும், இராமன் நாணற் புல்லிலே படுத்திருக்கும் நிலையைப் பார்த்தும், கண்ணீர் அருவியைச் சொரியும் மலை போன்று நின்றான்.

கதிரவன் தோன்றலும் தாமரை மலர்தலும்

    • உலகத்து உயிர்களைப் போலப் பிறத்தல் என்பதைப் பெறாதவனான சூரியன் அளவற்ற பிறப்புகளை உடைய உயிர்கள் யாவும் இறக்கும் முறை இதுதான் என்று உலகத்தாருக்குக் காட்டுகின்றவனைப் போல முந்திய நாள் மாலையில் மறைந்தான். அடுத்த நாள் காலையில் இறந்த உயிர்கள் மீண்டும் பிறக்கும் முறை இதுதான் என்று காட்டுகின்றவனைப் போல உதித்தான். ஆதலால் சொர்க்கம் முதலான சிறந்த உலகங்கள் எவையாயினும், அவற்றை மறந்து விடும் வழியை (வீடுபேறு) நினைப்பீராக.
    • சேற்றில் தோன்றும் செந்தாமரை மலர்கள் சூரியனது தோற்றத்தைக் கண்டனவாய், செக்கச் செவேல் என்று மலர்ந்தன. அச்சூரியனைக் காட்டிலும் வேறான ஒரு கருஞ்சூரியனைப் போன்ற இராமனைக் கண்டு, சீதையின் ஒளி பொருந்திய முகம் என்னும் தாமரையும் மலர்ந்தது.

குகனை நாவாய் கொணருமாறு இராமன் பணித்தல்

    • பகைவருக்கு அச்சம் தரும் தோளில் வில்லை உடைய இராமன், விடியற்காலையில் செய்ய வேண்டிய கடமைகளை விருப்பத்தோடு செய்து முடித்து, முனிவர்கள் தன்னைப் பின் தொடர்ந்து வர அங்கிருந்து புறப்பட்டான். குகனை நோக்கி, “ஐயனே! எம்மைக் கொண்டு செல்வதற்குரிய ஒடத்தை விரைவாகக் கொண்டு வருக” என்று கூறினான்.

இராமனை தன் இருப்பிடத்தில் தங்க குகன் வேண்டுதல்

    • இராமன் இட்ட கட்டளையைக் கேட்ட குகன், கண்ணீரைப் பொழியும் கண்களையுடைவனாக, உயிர் வாடுகின்றவனாய், இராமனின் திருவடிகளைப் பிரிய விரும்பாதவனாய், சீதையோடு இராமனின் திருவடி வணங்கித் தனது எண்ணத்தைச் சொல்லலானான்.
    • “ஒழுங்காகத் தொடுக்கப்பட்ட மாலை அணிந்தவனே! நாங்கள் பொய் வாழ்க்கை பெறாதவர்கள். நாங்கள் வாழும் இடம் காடே ஆகும். நாங்கள் குறையற்றவர்கள். வலிமை பெற்றவர்கள். செய்ய வேண்டிய முறைப்படி நீங்கள் சொல்லும் வேலைகளைச் செய்வோம். எங்களை உங்கள் உறவினராகக் கருதி, எங்கள் ஊரில் நெடுங்காலம் இனிதாகத் தங்கி இருப்பாயாக”
    • “எம்மிடம் தேன் உள்ளது. தினையும் உள்ளது. அவை தேவர்களும் விரும்பி உண்பதற்கு உரியவையாகும். மாமிசமும் இங்கு உள்ளது. உமக்குத் துணையாக நாய் போல் அடிமைப்பட்டவராகிய எங்கள் உயிர்கள் உள்ளன. விளையாடுவதற்குக் காடு இருக்கிறது. நீராடுவதற்குக் கங்கை இருக்கிறது. நான் உயிரோடு உள்ளவரை நீ இங்கேயே இனிதாக இருப்பாயாக. இப்போதே எம்மோடு வருக”
    • உடுத்திக் கொள்ள மெல்லிய ஆடை போன்ற தோல்கள் உள்ளன. உண்பதற்குச் சுவையான உணவு வகைகள் உள்ளன. தொங்கவிடப்பட்ட பரண்கள் உள்ளன. தங்குவதற்குச் சிறுகுடிசைகள் உள்ளன. விரைந்து செல்ல கால்கள் உள்ளன. வில்லைப் பிடித்துப் போரிடக் கைகள் உள்ளன. நீ விரும்பும் பொருள் ஒலிக்கும் வானத்தின் மீதுள்ள பொருளாக இருந்தாலும் விரைவாகக் கொண்டு வந்து கொடுப்போம்.
    • “எனக்குப் பணிசெய்வோராகிய வில்லை ஏந்திய வேடர்கள் ஐந்நூறாயிரம் பேர் உள்ளனர். அவர்கள் தேவர்களைக் காட்டிலும் வலிமை பெற்றவர்கள். எங்கள் குடியிருப்பில் நீ ஒரே ஓரு நாள் தங்கினாய் என்றாலும் நாங்கள் கடைத்தேறுவாம். அதைக் காட்டிலும் வேறான ஒரு சிறப்பு எங்களுக்கு இல்லை” என்றான் குகன்.

மீண்டும் வருகையில் குகனிடம் வருவதாக இராமன் இயம்பல்

    • குகனது வேண்டுகோளைக் கேட்ட இராமனும் அவனிடம் கொண்ட மனக் கருணை அதிகமாக வெண்ணிறப் பற்கள் தோன்றச் சிரித்தான். “வீரனே! நாங்கள் அந்தப் புண்ணிய நதிகளில் நீராடி, ஆங்காங்கு உள்ள முனிவரை வழிபாடு செய்து நாங்கள் வனவாசம் செய்ய வேண்டிய சில நாட்கள் முடிந்ததும் உன்னிடம் இனிதாக வந்து சேருவோம்” என்று கூறினான்.

குகன் நாவாய் கொணர, மூவரும் கங்கையைக் கடத்தல்

    • இராமனின் கருத்தை அறிந்த குகன் விரைவாகச் சென்று பெரிய படகு ஒன்றைக் கொண்டு வந்தான். தாமரை மலர் போலும் கண்களை உடைய இராமன், அங்கிருந்த முனிவர்களான அந்தணர்கள் அனைவரிடமும் விடை தருக என்று கூறிக் கொண்டு பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியைப் பெற்ற சீதையோடும் இலக்குமணனோடும் அப்படகில் இனிதாக ஏறினான்.
    • ஆற்றிலே படகை விரைவகச் செலுத்து என்றான் இராமன். அந்த இராமனுக்கு உண்மையான உயிர் போன்றவனான குகனும், மடங்கும் அலைகளை உடைய கங்கை ஆற்றிலே செலுத்திய பெரிய படகு விசையாகவும், இள அன்னம் நடப்பதைப்போல அழகாகவும் சென்றது. கூரையில் நின்றவர்களான முனிவர்கள் இராமனைப் பிரிந்த துயரத்தால் நெருப்பிலே பட்ட மெழுகைப் போல மனம் உருகினார்கள்.
    • பாலைப் போன்ற இனிய மொழி பேசும் சீதையும், சூரியனைப் போன்ற இராமனும், சேல் மீன்கள் வாழும் கங்கையின் புனித நீரை அள்ளி எடுத்து, ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடிக் கொண்டிருக்க, நீண்ட கோலினால் நீரைத் துழாவிச் செலுத்தப்பட்ட அந்தப் பெரிய படகு, பல கால்களை உடைய பெரிய தண்டு போல விரைவாகச் சென்றது.
    • சந்தனத்தை அணிந்துள்ள மணற்குன்றுகளாகிய பெரிய கொங்கைகளை உடைய சிறந்த கங்காதேவி, ஒளி வீசும் மாணிக்க மணிகள் மின்னுவதால், நறுமணம் வீசும் தாமரை மலரைப் போலச் செந்நிறவொளி பரவப் பெற்ற தெள்ளிய அலைகள் என்னும் நீண்ட கைகளால், தான் ஒருத்தியே அப்படகை ஏந்தி அக்கரையில் சேர்ந்தனள்.

இராமன் குகனிடம் சித்திரகூடம் செல்லும் வழி பற்றி வினவுதல்

    • கங்கையின் மறு கரையை அடைந்த இராமன் தன்னிடம் அன்பு கொண்ட குகனை நோக்கி, “சித்திரக் கூடத்துக்குச் செல்லும் வழியைச் சொல்லுக” என்று கேட்டான். குகன் இராமனின் திருவடிகளை வணங்கி, “உத்தமனே! நான் உங்களிடம் சொல்ல வேண்டியது ஒன்று உள்ளது” என்றான்.
    • “நான் உங்களுடன் வரும் பேறு பெறுவாயேயானால், நேர் வழியையும், அதில் குறுக்கிடும் பல கிளை வழிகளையும், அறியும் வல்லமை உடைய நான் தக்கபடி வழிகாட்டுவேன். பழுது நேராமல் நல்லனவாகிய காய்களையும், கனிகளையும் தேனையும் தேடிக் கொண்டு வந்து கொடுப்பேன். ஆங்காங்கே தங்குவதற்குத் தகுந்த குடில் அமைத்துக் கொடுப்பேன். ஒரு நொடிப் பொழுதும் உம்மைப் பிரிய மாட்டேன்” என்று குகன் கூறினான்.
    • “தீய விலங்குகளின் வகைகளை, நீங்கள் தங்கும் இடத்தைச் சூழ்ந்த எல்லாத் திசைகளிலும் நெருங்க விடாமல் சென்று அவற்றை அழித்து, தூயவனாகிய மான் மயில் போன்றவை வாழும் காட்டிடத்தை ஆராய்ந்து கண்டுபிடித்துக் காட்டும் வல்லமை பெற்றுள்ளேன். நீங்கள் விரும்பிய பொருளைத் தேடிக் காண்டு வந்து கொடுப்பேன். நீங்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றுவேன். இரவிலும் வழி அறிந்து நடப்பேன்” என்று குகன் கூறினான்.
    • மற்போரிலும் சிறப்புப் பெற்ற தோள்களை உடையவனே! செல்லும் இடம் மலைப் பகுதியானாலும் அங்கே கவலைக் கிழங்கு முதலியவற்றைத் தோண்டி எடுத்துத் தருவேன். வெகு தொலைவில் உள்ள வழியிலும் சென்று அங்குள்ள நீரைக் கொண்டு வந்து கொடுப்பேன். பலவகையான வில்லைப் பெற்றுள்ளேன். எதற்கும் அஞ்ச மாட்டேன். உங்களுடைய மலர் போன்ற திருவடியை ஒரு போதும் பிரிய மாட்டேன்” என்று குகன் கூறினான்.
    • “ஒப்பற்ற மார்பை உடையவனே! தாங்கள் சம்மதித்தால் எனது படையை உடன் அழைத்துக் கொண்டு ஒரு பொழுதும் உங்களைப் பிரியாது உங்களுடன் இருப்பேன். என்னால் வெல்ல முடியாத பகைவர்கள் வந்தாலும் உங்களுக்குத் தீங்கு நேரும் முன் நான் இறந்து போவேன். எந்தப் பழியும் பெறாதவனாகிய நான் உம்மோடு வருவேன்” என்று குகன் கூறினான்.

குகனை அவன் இனத்தாருடன் இருக்க இராமன் பணித்தல்

    • குகன் கூறிவற்றைக் கேட்ட இராமன் “நீ எனது உயிர் போன்றவன். என் தம்பி இலக்குமணன் உனக்குத் தம்பி. அழகிய நெற்றியைப் பெற்ற இச்சீதை உனக்கு உறவினள். குளிர்ந்த கடலால் சூழப்பட்ட இந்நாடு முழுவதும் உன்னுடையது” என்றான்.
    • “துன்பம் உண்டு என்றால் சுகமும் உண்டு. இப்போது இணைந்திருப்பதற்கும், வனவாசத்திற்குப் பின் இணைந்திருக்கப் போவதற்கும் இடைப்பட்டதான பிரிவு என்னும் துன்பம் உள்ளதே என்று எண்ணாதே. உன்னைக் கண்டு தோழமை கொள்வதற்கு முன்னே உடன் பிறந்தவர்களாக நாங்கள் நால்வர் இருந்தோம். இப்போது எல்லையற்ற அன்புடைய உடன்பிறந்தார்களாகிய நாம் ஐவர் ஆகிவிட்மோம்” என்றான் இராமன்.
    • ஒளி வீசும் கூரிய வேலை உடையவனே! நான் காட்டில் வாழும் காலமெல்லாம் உன் தம்பியாகிய இலக்குமணன் என்னுடன் இருக்கப் போகிறான். எனவே துன்புறுத்தும் வகைகள் எவை? ஒன்றும் இல்லை. உன் இருப்பிடத்திற்குச் சென்று நான் இருந்து மக்களைக் காப்பது போலக் காப்பதற்கு உரியவன் நீ! வனவாசம் முடிந்து அயோத்திக்குத் திரும்ப வடக்கு நோக்கி வரும் அந்த நாளில் உன்னிடம் உறுதியாக வருவேன். நான் சொன்ன சொல்லைத் தவற மாட்டேன்”
    • உன் தம்பியாகிய பரதன் அயோத்தியில் உள்ள சுற்றத்தாரைக் காப்பதற்கு ஏற்ற தகுதியோடு இருக்கிறான். நீ என்னுடன் வந்து விட்டால் இங்குள்ள சுற்றத்தாரைக் காப்பாற்ற யார் இருக்கிறார்கள். நீயே சொல். உன் சுற்றத்தார் என் சுற்றத்தார் அல்லவா? அதனால் அவர்கள் தம்மைக் காப்பாற்றுவார் இல்லாமல் மிகுந்த துன்பத்தை அடைதல் தகுமா? இங்குள்ள என் சுற்றத்தாரை என் கட்டளையை ஏற்று இனிதாகக் காப்பாயாக” என்றான் இராமன்

குகன் விடைபெறுதலும், மூவரும் காட்டிற்குள் செல்லுதலும்

    • இராமன் இட்ட கட்டளையை மீறாதவனும் அவனைப் பிரிவதால் உண்டான துன்பத்திலிருந்து நீங்காதவனும் நோய் கொண்டவன் என்று பிறர் நினைக்குமாறு பிரிவுத் துன்பத்தை உடையவனுமான குகன் இராமனிடம் விடை பெற்றுக் கொண்டான். பின்பு இராமனும் இலக்குமணனும் அழகிய ஆபரணங்களை அணிந்த மயிலைப் போன்ற சீதையோடு அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டில் நெடுந்தூரம் செல்வதற்குரிய வழியிலே நடந்து சென்றார்கள்.
  • குகனின் தோற்றம் குறித்து எழுதுக.
    • குகன் ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவன். தூய்மையான கங்கையின் துறையில் பழங்காலம் தொட்டு ஓடங்களைச் செலுத்தும் உரிமை பெற்றவன். பகைவர்களைக் கொல்லும் வில்லை உடையவன். மலை போன்ற திரண்ட தோள்களை உடையவன்.
    • அந்தக் குகன் துடி என்னும் பறையை உடையவன். வேட்டைக்குத் துணை செய்யும் நாய்களை உடையவன். தோலினால் தைக்கப்பட்ட செருப்பை அணிந்த பெரிய கால்களை உடையவன். இருள் நெருங்கி நிறைந்ததைப் போன்ற நிறத்தை உடையவன். அவனது பெரிய சேனை அவனைச் சூழ்ந்திருப்பதால் நீர் கொண்டு கார் மேகம் இடியோடு கூடித் திரண்டு வந்ததைப் போன்ற தன்மை உடையவன்.
    • ஊதுகொம்பு, துந்துபி என்னும் பறை, சங்கு, முழங்கும் பேரிகை, பம்பை என்னும் பறை ஆகிய இசைக்கருவிகள் நிறைந்துள்ள படையை உடையவன். இலை வடிவமான அம்புகளை உடையவன். ஓடங்களுக்குத் தலைவன். யானைக் கூட்டத்தைப் போன்று பெரிய சுற்றத்தார்களை உடையவன்.
    • காழகம் (அரைக்கால் சட்டை) என்னும் ஆடை அணிந்தவன். கங்கை ஆற்றின் ஆழத்தைக் கண்டறிந்த பெருமையை உடையவன். இடுப்பிலிருந்து தொங்கவிட்ட செந்நிறத் தோலை உடையவன். இடுப்பைச் சுற்றிக் கட்டிய, ஓன்றோடு ஒன்று பிணைக்கப்பட்ட புலி வாலை உடையவன்.
    • பற்களைத் தொடுத்தது போன்ற பல அணிகலன்களைப் பூண்டவன். வீரக்கழலை அணிந்தவன். தலை மயிரில் நெற்கதிர்களைச் செருகிக் கொண்டவன். சினம் வெளிப்பட மேலேறி வளைந்த புருவத்தை உடையவன்.
    • பனை மரம் போன்று நீண்டு வளர்ந்துள்ள கைகளை உடையவன். பாறை போன்ற மார்பினை உடையவன். எண்ணெய் பூசப்பட்ட இருளைப் போன்ற கருநிற உடம்பை உடையவன்.
    • தன் இடுப்பில் குருதிக் கறை படிந்த வாளை உடையவன். நஞ்சை உடைய நாகமும் கண்டு நடுங்குகின்ற கொடிய பார்வையை உடையவன். பைத்தியக்காரர் போல் தொடர்பில்லாத பேச்சை உடையவன். இந்திரனின் வச்சிராயுதம் போன்று உறுதியான இடையை உடையவன்.
    • விலங்குகளின் இறைச்சியையும், மீனையும் உண்ட புலால் நாற்றம் பொருந்திய வாயை உடையவன். சிரிப்பு என்பது சிறிதும் இல்லாத முகத்தினை உடையவன். கோபம் இல்லாதபோதும் கனல் கக்குமாறு பார்ப்பவன். யமனும் அஞ்சும்படி அதிர்ந்து ஒலிக்கின்ற குரலை உடையவன்.
    • சிருங்கி பேரம் என்று சொல்லப்படும் பேரலைகள் பெற்ற கங்கை ஆற்றின் அருகில் அமைந்த நகரத்தில் வாழ்பவன்.
  • சீறாப்புராணம் மானுக்குப் பிணை நின்ற படலம் குறித்து விளக்குக.(அல்லது) நபிகள் நாயகம் மானுக்கு உதவிய விதத்தினை விவரி.(அல்லது) மானுக்குப் பிணை நின்ற படலம் குறித்து கட்டுரைக்க.

சீறாப்புராணம்

    • ஆசிரியர் : உமறுப்புலவர்
    • ‘சீறா’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘வாழ்க்கை’ அல்லது ‘வாழ்க்கை வரலாறு’ என்று பொருள். புராணம்’ என்றால் ‘வரலாறு’ என்று பொருள். எனவே, சீறாப்புராணம் என்பது நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல்’ ஆகும். 
    • மூன்று காண்டங்களையும், மொத்தம் 92 படலங்களையும், 5027 விருத்தப் பாடல்களையும் கொண்ட ஒரு காவியம் ஆகும்.

மானுக்குப் பிணை நின்ற படலம்

முகமது நபி மலை வழியே சென்ற காட்சி

    • மேகம் வானில் குடையாக இருந்து நிழல் தருகின்றது. மலர்கள் தேனைச் சிந்துகின்றன. மலையைப் பார்க்கிலும் திண்ணிய தோள்களை உடைய வள்ளல் முகமது நபி அவர்கள் குற்றமற்ற வேதத்தினை பொழிந்து இஸ்லாம் எனும் மார்க்கத்தை வளர்த்துக் கொண்டிருந்த ஒரு நாளில், மக்கமா நகரத்தின் எல்லையை விட்டு அகன்று தன் சீடர்களுடன் சோலைகள் சூழ்ந்த ஒரு மலை வழியாகச் சென்று கொண்டிருக்கிறார். அவ்வனத்தில் வேடன் ஒருவன் மான் ஒன்றை வலையில் பிடித்து வைத்திருப்பதைக் கண்டு மானை நோக்கிச் சென்றார்.

வேடனின் தோற்றம்

    • வேடன் காட்டடில் திரிகின்ற விலங்குகளைக் கொன்று அதன் மாமிசத்தை அறுத்து, கொம்புகளில் வளைத்து, நெருப்பில் சுட்டு உண்டு, தனது உடலை வளர்ப்பதைத் தவிர வேறு ஒன்றையும் அறியாதவன். காலில் செருப்பையும், தனது இடையில் கந்தைத் துணியையும், தோளில் விலங்குகளைப் பிடிக்கின்ற வலையையும், கையில் பெரிய கோதண்டம் எனும் ஆயுதத்தையும், முதுகில் அச்சத்தைத் தருகின்ற கூரிய அம்பினையும், தோளில் வாளாயுதத்தையும் கொண்டு காட்சி அளித்தான். உடல் முழுவதும் வியர்வையோடு மாமிசம் உண்ணப்பட்ட வாயோடு, கொலை வெறி கொண்ட கண்களோடு தோற்றமளித்தான்.

மானைக் கண்ட நபிகளின் நிலை

    • வேடன் ஒரு மானைக் கோபத்துடன் தன் வலையில் சேர்த்துக் கட்டி வைத்திருப்பதைத் தன் கண்களால் கண்டார் நபி பெருமான். செழிப்புற்ற சோலை கொண்ட மலை வழியே சென்ற நபிகள், தேன் சிந்தும் மலர்களைப் பார்க்கவில்லை. மலையில் வீழ்கின்ற அருவிகளைப் பார்க்கவில்லை. நல்ல நிழலைப் பார்க்கவில்லை. ஈச்ச மரங்களின் காய்களையும், அவை மழை போல பொழிவதையும் பார்க்கவில்லை. வேடனால் கட்டுண்டு துன்பப்பட்டுக் கொண்டிருந்த அந்த மானையே பார்த்துக் கொண்டு அதன் அருகே சென்றார்.

நபிகளைக் கண்ட மானின் நிலை

    • கருணை மிகுந்த கண்களும், அழகு பொருந்திய முகமும், கஸ்தூரி மணம் கமழும் உடலும் கொண்டு தம்மை நோக்கி வருவது பரிசுத்தத் தூதராகிய முகமது நபிகள் என்று நிம்மதி அடைந்து, “இறைவனது தூதர் வந்து விட்டார், எனவே இவ்வேடனால் நம் உடலுக்கும் உயிருக்கும் இனி துன்பமில்லை. நம் கன்றையும் மானினத்தோடு சேர்ந்து காணலாம்” என்று தனக்குள் மகிழ்ந்தது.

மானின் துயர் நிலை

    • தரையில் வெள்ளியை உருக்கிவிட்டது போலத் தனது மடியில் பால் சிந்தியிருக்கவும், கண்களில் நீர் பொழிய உடலில் இருந்து பெருமூச்சு வெளிவர, திரும்புவதற்குக் கூட வழியில்லாமல் காலில் கட்டுண்டு கிடந்த மானின் அருகில் நபிகள் சென்றார்.
    • கொடி போன்ற உடம்பிலும், இலையைப் போன்ற குளம்பிலும் இட்ட சுருக்கினால் வேதனைப்பட்டுக் கிடந்த மானின் உடல் பதைக்கின்ற நிலையையும், அதன் பெருமூச்சையும் கண்ட நபிகள் மானின் அருகே அன்பு சுரக்க நின்றார்.
    • அக்காட்டில் உள்ள மரங்களில் உள்ள மலர்கள் செந்தேனைப் பொழிந்தன. அக்காட்சி மானின் துயரத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் மரங்கள் கண்ணீர் சிந்துவது போல இருந்தது.
    • மானைக் கட்டி வைத்திருந்த வேடனைக் கண்ணால் காண்பதும் பாவம் என்பது போல, பறவைகள் தத்தம் இனத்தோடு கூட்டுக்குள் புகுந்தன.
    • பறவைகள் கூட்டுக்குள் புகுந்தபோது பூக்களில் உள்ள தேனை உண்ட வண்டுகள் இசை பாடின. அந்த இசையானது, “முகமது நபி வருவார். மானை மீட்பார். வருந்த வேண்டாம்” என்று கூறுவது போல இருந்தது.
    • மான் தன் துயர் நிலையை நபிகளிடம் கூறியது
    • காட்டில் வேடனால் கட்டுண்டு கிடந்த மான், தன்னருகில் வந்து நின்ற முகமது நபியை நோக்கி, “இறைவனது உண்மையான தூதரே, என் உயிர் போன்ற சுற்றமும், என் கலைமானும், என் கன்றும் ஒன்றாகத் திரண்டு இந்த மலையின் பக்கத்தில் பயமின்றிப் புல் தரையில் மேய்ந்து வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு ஓர் இளங்கன்று வேண்டுமென்று விரும்பியும், நான் கருவுறாததால் வருத்தமடைந்தோம். பின் உங்கள் பெயரைப் போற்றி வணங்கியதால் எனக்குக் கரு உருவாகி வளர்ந்தது. எனக்கும் எனது கலைமானுக்கும் ஓர் இளங்கன்று பிறந்தது. நாங்கள் இன்பக்கடலில் மிதந்தோம். இம்மலையின் பக்கம் துன்பமின்றி வாழ்ந்தோம். ஆனால் என் முன்வினையினை நான் அறியவில்லை. நாங்கள் மலைச்சாரலில் ஒரு நாள் தழையுண்டு பசி தீர்த்து அச்சமின்றி உலவி வந்தோம். நாங்கள் நின்றிருந்த திசையின் எதிரிலிருந்த மலை முகட்டில் இருந்து ஒரு வரிப்புலியின் முழக்கம் கேட்டது. அதைக் கேட்ட நாங்கள் அச்சமடைந்து ஒவ்வொரு திசைக்கும் தனித்தனியாகச் சிதறி ஓடினோம். ஒடிய வேகத்தில் நான் என் கலைமானையும், கன்றையும் காணாது வேறு ஒரு காட்டில் புகுந்தேன்.
    • சென்ற திசை தெரியாது நான் புகுந்த காட்டுக்குள் மறைந்திருந்த இவ்வேடன், வலையைச் சுற்றி எனக்குச் சுருக்கிட்டான். புலியிடமிருந்து தப்பிச் சிங்கத்தின் வாயில் சிக்கியது போன்ற நிலையில், நான் மனமுடைந்து ஒடுங்கி நின்றேன். நான் சிக்கியதைக் கண்ட வேடன், “என் பசிக்கு உணவு கிடைத்தது” என்று கூறி என்னுடைய நான்கு கால்களையும் உடம்பினையும் ஒரு கயிற்றால் கட்டினான். என்னை இவ்வனத்திற்குள் கொண்டு வந்து இறக்கினான். நெஞ்சில் கவலை கொண்டு நான் தளர்வுடன் இருக்கும்போது நீங்கள் வருவதைக் கண்களால் கண்டு தளர்ச்சி நீங்கினேன்” என்று தான் வேடனிடம் சிக்குண்ட சூழலை நபிகள் பெருமானிடம் விளக்கிக் கூறியது.

நபிகளிடம் மான் விடுத்த வேண்டுகோள்

    • வேடனிடம் சிக்குண்ட மான் நபிகள் நாயகத்திடம், “விலங்கு சாதியாயினும் நான் கூறும் சொற்களைக் கேட்பீராக! நான் இவ்வேடனால் இறப்பதற்கு அஞ்சவில்லை. பிறந்த உயிர்கள் ஓருநாள் இறப்பது நிச்சயம். நான் என் கலைமானுடன் பிரிவில்லாமல் சில நாள் வாழ்ந்தேன். அன்புடன் ஒரு கன்றினையும் ஈன்றேன். இனி நான் எது குறித்து வாழ வேண்டும். மூங்கில் இலைப் பனி நீர் போல இவ்வுலக வாழ்க்கை நிலையற்றது. காட்டில் எங்காவது இறவாமல் உம்முடைய முகம் நோக்கி இறப்பதே மேலானது. வரிப்புலியின் முழக்கம் கேட்டு மானினம் சிதறித் தனித்தனியாக ஓடிப் பிரிந்தது. என்னைக் காணாது ஆண்மான் காட்டில் தேடி அலைந்ததோ? அல்லது வரிப்புலியின் வாயில் அகப்பட்டு இறந்ததோ? என் பிரிவினால் புல்லினை உண்ணாமல் நீரினை அருந்தாமல் கண்ணீர் வழிய நெருப்பில் இட்ட இளந்தளிர் போல உடல் பதைத்து நிற்கும். என் கன்று நான் பிடிபடுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் பிறந்தது. எனது மடியில் சுரந்த பாலும் வழிகின்றது. என் கன்று தன் தந்தையிடம் சேர்ந்ததோ? புலியின் வாயில் அகப்பட்டு இறந்ததோ? என்னைத் தேடி அலைகின்றதோ? உன்றும் அறியேன். எனக்கு இதுவன்றி வேறு கவலையில்லை.
    • கலிமா என்னும் மூலமந்திரத்தின் வழியாக, அனைவரையும் சுவர்க்கத்தில் புகச் செய்யும் புண்ணியனே! இவ்வேடனின் பசியைத் தீர்க்க விருப்பமாக உள்ளேன். அதற்கு முன் என் கால்களைப் பிணைத்துள்ள பிணைப்பை நீக்கி, என்னைத் தாங்கள் பிணையாக நின்று விடுவித்தல் வேண்டும். என்னைத் தாங்கள் விடுவித்தால் நான் என் கலைமானைச் சேர்ந்து அதன் கவலையைப் போக்கி என் நிலையை என் இனத்திற்குச் சொல்லி விட்டு என் கன்றுக்குப் பாலூட்டிவிட்டுச் சில மணி நேரத்தில் திரும்பி விடுவேன்” என்று வேண்டி நின்றது.

நபிகள் பிணையாக இருக்க இசைந்தமை

    • மானின் வேண்டுகோளைக் கேட்ட நபிகள், வேடனை நோக்கி, “இந்த மான் தனது கன்றின் துயர் தீர்த்து வரும்வரை நான் இதற்குப் பிணையாக நிற்கிறேன். எனவே இதனை விடுதலை செய்து விடு” என்று கூறினார்.

வேடனின் மறுமொழி

    • நபிகளின் உரையைக் கேட்ட வேடன் சிரித்து, “முட்கள் நிறைந்த காட்டில் முகத்து வியர்வை உள்ளங்கால் வரை நனைய ஓடி எந்த வேட்டையும் கிடைக்கப் பெறாத நிலையில் அம்மானைப் பிடித்துத் தூக்கி வந்தேன். இம்மான் தசையால் என் பசி நீங்கியது என மகிழ்வோடு இருந்தேன். முகமது அவர்களே! நீங்கள் எனக்கு வருத்தம் தரும் சொற்களைக் கூறினீர்கள். இச்சொற்கள் உமக்கு மட்டுமின்றி எவருக்கும் பொருத்தமற்றவை. காட்டில் பிடித்த மானை விட்டுவிட்டால் அது மீண்டும் மனிதனிடம் வருவது முன் எங்கும் நடந்தது உண்டோ? அறிவுடையவர்கள் இவ்வாறு பேசுவது உண்டோ? எனவே ஊனம் மிக்க இச்சொல்லைக் கைவிடுக” என்றான்.

நபியின் மறுமொழி

    • வேடனின் சொற்களைக் கேட்ட நபிகள், “குறிப்பிட்டவாறு உன் பசி தீர்க்க இந்த மான் வராவிட்டால் ஒன்றிற்கு இரண்டாக நான் மான்களைத் தருகிறேன்” என்று வேடனிடம் கூறினார். அது கேட்ட வேடன் நபிகளின் மீது நம்பிக்கை வைத்து நபிகளைப் பிணையாக ஏற்றுக் கொண்டு மானை விடுவித்தான்.

கலைமானின் வேண்டுகோளும், பிணைமானின் நேர்மையும்

    • வேடனிடம் இருந்த மீண்ட மான் வேறு ஒரு காட்டில் தன் மான் கூட்டத்தையும், தனது குட்டியையும் ஆண்மானோடு கண்டு மகிழ்ச்சியுற்றது. பின்பு தன் ஆண் மானின் மனத்துன்பத்தை நீக்கி, குட்டியைப் பாலை உண்ணும்படிச் செய்து விட்டு, தன் சுற்றத்தாரிடமும் தன் கலைமானிடமும் தான் வேடனிடம் மாட்டிக் கொண்ட சூழலையும், நபிகள் பெருமான் தனக்காகப் பிணையாக இருக்க இசைந்து தன்னை விடுவித்தமையையும் கூறியது. அதனால் நான் மீண்டும் வேடனிடம் செல்ல வேண்டும் என்பதைத் தெரிவித்தது. அதைக் கேட்ட கலைமான், “பகைவர் கையில் இருந்து தப்பி வந்த மான் மீண்டும் கொலைப்பட விரும்பி மனிதர்கள் கையில் அகப்படுதல் உண்டோ?” என்று பெண்மானிடம் கூறியது. 
    • இவ்வேண்டுகோளைக் கேட்ட பெண்மான், கலைமானை நோக்கி, “என்னைப் பிணைத்துக் கட்டி வைத்த வேடனின் மனத்தை மாற்றி, தன்னைப் பிணையாகக் கொண்டு என்னை விடுவித்தவர் இறைவன் நபி பெருமான். என் உயிரை வேடனின் பசிக்குத் தந்து நபியினது பிணையை மீட்க நான் மனம் ஒப்பவில்லை என்றால், நான் சுவர்க்கத்தை இழந்து தீய நரகில் புகுவது மட்டுமின்றி வேறு கதியும் பெருமையும் இழக்க வேண்டியிருக்கும். நபிகள் நாயகம் சொன்ன சொல்லை மாற்றிவிட்டு மறந்திருந்தால் நான் வரிப்புலியின் வாய்ப்பட்டு இறப்பதே தக்கதாகும். எனவே வாழும் விருப்பததைக் கைவிட வேண்டும். முன்பு ஒருநாள் நதியின் வெள்ளத்தில் மான் பிணையொன்று நடக்க, அதன்பின் நபியும் மற்றவரும் நடந்து சென்றனர். அப்போது அறிவில்லாத ஒருவன் நபிகள் சொல்லைக் கேட்காது மாறி நடந்ததால் நதிக்குள் வீழ்ந்து மடிந்தான். இந்த அதிசயத்தை அறியாதவர் யார்? இவற்றையெல்லாம் அறிந்தும், என்னை இங்கே நிறுத்துதல் நன்மையன்று” என்று கூறிக் கன்றுக்குப் பாலூட்டிவிட்டு வேடனிடம் செல்ல எழுந்தது.

மானுடன் கன்றும் செல்ல இசைதல்

    • தன் கூட்டத்தை விட்டு அகன்று செல்ல மான் முற்பட்டபோது கன்றானது முன் வந்து, “உன்னை நீங்கி நான் உயிர் வாழ மாட்டேன். அது சத்தியம்” என்று கூறி பிணையுடன் தானும் செல்ல முடிவு எடுத்தது. அதைக் கண்ட பெண்மானும் இறக்க மனமுவந்து செல்வதால் முடிவில்லாத இன்பம் நமக்கு வந்து சேரும் என்று எண்ணி தன் கன்றோடு காட்டை நோக்கிச் சென்றது.

வேடன் நல்லறிவு பெறல்

    • பெண்மானும் அதன் கன்றும் சேர்ந்து வருவதைக் கண்ட நபிகள் நாயகம் வேடனை அழைத்து, “ஒரு பிணைக்கு இரண்டாக உன்னிடம் வருகின்றன பார்” என்று கூறினார். பெண்மானும் அதன் கன்றும் நபிகள் பாதத்தில் பணிந்து “பாவியாகிய எனக்காக வேடனுக்குத் தங்களையே பிணையாக்கினீர். இப்போது மீட்டருள வேண்டும்” என்றுரைத்தது. இதனைக் கேட்ட முகமது நபி அவற்றின் பண்பினைச் சுட்டிக் காட்டி, “இந்தப் பிணையை விட்டு விட்டு உனது பசியினைச் தீர்த்துக் கொண்டு பெருநகரினை அடைக” என்றார். வேடனும், “நான் வீடு பேறு பெற்றேன். வாழ்ந்தேன்” என்று அவர் பாதத்தில் வீழ்ந்தான். பின்பு, “வேதநாயகரே என்பால் கலிமாவினை ஓதும். நான் வெறும் கானக வேடன். விலங்கை ஒத்தவன். நான் தெளிவடையுமாறு இஸ்லாம் நெறிக்கு உரியவனாக என்னை மாற்றி அருள வேண்டும்” என்று இரு கையாலும் ஏந்தி நின்றி மகிழ்வோடு கூறினான்.
    • முகமது நபிகள் மகிழ்வோடு கலிமா சொல்ல, வேடன் அதனை மனங்கொண்டு ஏற்று இறை நம்பிக்கை வைத்து, அதன்படி நடந்து பெருஞ்செல்வனாகித் தீன் வழியல் நிலையாக நின்றான். மேலும், மானை நோக்கி, “உன்னால் மனித வாழ்வில் பெறக்கூடிய உயர்ந்த கதியினைப் பெற்றேன். பிறவி நோயைப் போக்கினேன். நீயும் பயத்தை விட்டுக் கன்றுடன் உன் கலைமானிடம் சென்று நல்லொழுக்கப்படி வாழ்வாயாக” என்று கூறி வாழ்த்தி அனுப்பினான்.
  • வேடனின் தோற்றம் குறித்து விவரி.

வேடனின் தோற்றம்

    • வேடன் காட்டடில் திரிகின்ற விலங்குகளைக் கொன்று அதன் மாமிசத்தை அறுத்து, கொம்புகளில் வளைத்து, நெருப்பில் சுட்டு உண்டு, தனது உடலை வளர்ப்பதைத் தவிர வேறு ஒன்றையும் அறியாதவன். காலில் செருப்பையும், தனது இடையில் கந்தைத் துணியையும், தோளில் விலங்குகளைப் பிடிக்கின்ற வலையையும், கையில் பெரிய கோதண்டம் எனும் ஆயுதத்தையும், முதுகில் அச்சத்தைத் தருகின்ற கூரிய அம்பினையும், தோளில் வாளாயுதத்தையும் கொண்டு காட்சி அளித்தான். உடல் முழுவதும் வியர்வையோடு மாமிசம் உண்ணப்பட்ட வாயோடு, கொலை வெறி கொண்ட கண்களோடு தோற்றமளித்தான்.
  • மானின் துயர்நிலை குறித்து எடுத்துரைக்க.

மானின் துயர் நிலை

    • தரையில் வெள்ளியை உருக்கிவிட்டது போலத் தனது மடியில் பால் சிந்தியிருக்கவும், கண்களில் நீர் பொழிய உடலில் இருந்து பெருமூச்சு வெளிவர, திரும்புவதற்குக் கூட வழியில்லாமல் காலில் கட்டுண்டு கிடந்த மானின் அருகில் நபிகள் சென்றார்.
    • கொடி போன்ற உடம்பிலும், இலையைப் போன்ற குளம்பிலும் இட்ட சுருக்கினால் வேதனைப்பட்டுக் கிடந்த மானின் உடல் பதைக்கின்ற நிலையையும், அதன் பெருமூச்சையும் கண்ட நபிகள் மானின் அருகே அன்பு சுரக்க நின்றார்.
    • அக்காட்டில் உள்ள மரங்களில் உள்ள மலர்கள் செந்தேனைப் பொழிந்தன. அக்காட்சி மானின் துயரத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் மரங்கள் கண்ணீர் சிந்துவது போல இருந்தது.
    • மானைக் கட்டி வைத்திருந்த வேடனைக் கண்ணால் காண்பதும் பாவம் என்பது போல, பறவைகள் தத்தம் இனத்தோடு கூட்டுக்குள் புகுந்தன.
    • பறவைகள் கூட்டுக்குள் புகுந்தபோது பூக்களில் உள்ள தேனை உண்ட வண்டுகள் இசை பாடின. அந்த இசையானது, “முகமது நபி வருவார். மானை மீட்பார். வருந்த வேண்டாம்” என்று கூறுவது போல இருந்தது.
    • மான் தன் துயர் நிலையை நபிகளிடம் கூறியது
    • காட்டில் வேடனால் கட்டுண்டு கிடந்த மான், தன்னருகில் வந்து நின்ற முகமது நபியை நோக்கி, “இறைவனது உண்மையான தூதரே, என் உயிர் போன்ற சுற்றமும், என் கலைமானும், என் கன்றும் ஒன்றாகத் திரண்டு இந்த மலையின் பக்கத்தில் பயமின்றிப் புல் தரையில் மேய்ந்து வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு ஓர் இளங்கன்று வேண்டுமென்று விரும்பியும், நான் கருவுறாததால் வருத்தமடைந்தோம். பின் உங்கள் பெயரைப் போற்றி வணங்கியதால் எனக்குக் கரு உருவாகி வளர்ந்தது. எனக்கும் எனது கலைமானுக்கும் ஓர் இளங்கன்று பிறந்தது. நாங்கள் இன்பக்கடலில் மிதந்தோம். இம்மலையின் பக்கம் துன்பமின்றி வாழ்ந்தோம். ஆனால் என் முன்வினையினை நான் அறியவில்லை. நாங்கள் மலைச்சாரலில் ஒரு நாள் தழையுண்டு பசி தீர்த்து அச்சமின்றி உலவி வந்தோம். நாங்கள் நின்றிருந்த திசையின் எதிரிலிருந்த மலை முகட்டில் இருந்து ஒரு வரிப்புலியின் முழக்கம் கேட்டது. அதைக் கேட்ட நாங்கள் அச்சமடைந்து ஒவ்வொரு திசைக்கும் தனித்தனியாகச் சிதறி ஓடினோம். ஒடிய வேகத்தில் நான் என் கலைமானையும், கன்றையும் காணாது வேறு ஒரு காட்டில் புகுந்தேன்.
    • சென்ற திசை தெரியாது நான் புகுந்த காட்டுக்குள் மறைந்திருந்த இவ்வேடன், வலையைச் சுற்றி எனக்குச் சுருக்கிட்டான். புலியிடமிருந்து தப்பிச் சிங்கத்தின் வாயில் சிக்கியது போன்ற நிலையில், நான் மனமுடைந்து ஒடுங்கி நின்றேன். நான் சிக்கியதைக் கண்ட வேடன், “என் பசிக்கு உணவு கிடைத்தது” என்று கூறி என்னுடைய நான்கு கால்களையும் உடம்பினையும் ஒரு கயிற்றால் கட்டினான். என்னை இவ்வனத்திற்குள் கொண்டு வந்து இறக்கினான். நெஞ்சில் கவலை கொண்டு நான் தளர்வுடன் இருக்கும்போது நீங்கள் வருவதைக் கண்களால் கண்டு தளர்ச்சி நீங்கினேன்” என்று தான் வேடனிடம் சிக்குண்ட சூழலை நபிகள் பெருமானிடம் விளக்கிக் கூறியது.
  • இயேசுகாவியம் ஊதாரிப்பிள்ளை குறித்து கட்டுரைக்க. (அல்லது) இயேசுகாவியத்தால் நீ அறிந்த செய்திகளைத் தொகுத்துரைக்க.(அல்லது) ஊதாரிப்பிள்ளை கதையை விளக்குக.

இயேசு காவியம் 

    • இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    • இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு பற்றி குறிப்பிடுகிறது.
    • இந்நூல் பாயிரம், பிறப்பு, தயாரிப்பு, பொதுவாழ்வு, பாடுகள், மகிமை என ஐந்து பாகங்களைக் கொண்டது.

ஊதாரிப்பிள்ளை

தந்தையும் இரு மகன்களும்

    • தந்தை ஒருவர் தன் இரு மகன்களுடன், ஊர் முழுவதும் செல்வாக்குடனும், செல்வத்துடனும் வாழ்ந்து வந்தார். மூத்த மகன் குணத்தில் சிறந்தவனாக, தந்தையின் சொல்லை மதித்து நடந்தான். இளைய மகன் தந்தை சொல்லைக் கேட்காமல் ஊதாரித்தனமாகச் சுற்றித் திரிந்தான். ஒருநாள் இளைய மகன் தன் தந்தையிடம் தன் சொத்தைப் பிரித்துத் தருமாறு வற்புறுத்தினான். வேறு வழியின்றி தந்தை சொத்துக்களைப் பிரித்து அவனுக்குச் சேர வேண்டிய பங்கைக் கொடுத்தார். தன் பிள்ளையின் போக்கைக் கண்டு மனம் வருந்தினார். இருப்பினும் இந்தச் செல்வங்களைக் கொண்டு தன் பிள்ளை நன்றாக வாழ்வான் என்று நம்பினார்.

இளைய மகனின் செயல்

    • ஆனால் இளைய மகன் தன் சொத்துக்களைக் குறைந்த விலையில் விற்று விட்டு, அதன் மூலம் கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்று மது, மாது என தன் மனம் போன போக்கில் வாழ்ந்தான். பொருள் அனைத்தும் இழந்தான். அந்த நாட்டில் பெரும்பஞ்சம் ஏற்பட்டது. அந்தப் பஞ்சத்தில் சிக்கிக்கொண்டு மீள வழி தெரியாமல் மாட்டிக் கொண்டான். தன் நாட்டைச் சேர்ந்த மனிதர்களைச் சந்தித்து ஒரு வேலை தேடி அலைந்தான். ஒருவன் பன்றிகளை மேய்க்கும் வேலை கொடுத்தான். அந்தப் பன்றிகளுக்குக் கொடுக்கும் உணவுதான் அவனுக்கும் கிடைத்தது. அவ்வேளையில் தன் தந்தையின் நினைவால் வாடினான். தன் தவறை உணர்ந்தான். தன் தந்தையைத் தேடிச் சென்று அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, “என் தந்தையே உனக்கு எதிராக நின்றேன். எத்தனையோ ஊழியர்கள் இங்கே சுகமாக வாழ, அவர்களுள் ஒரு ஊழியனாக நான் இங்கேயே இருக்கின்றேன். உன் கூலிகளில் ஒருவனாக என்னை ஏற்பாய். ஏனெனில் உன் பிள்ளை என்று சொல்ல எனக்குத் தகுதியில்லை” என்று கூற வேண்டும் என்று எண்ணியவனாகத் தன் தந்தையிடம் சென்றான்.

மனம் திருந்திய இளைய மகன்

    • தன் மகன் எப்போதாவது திருந்தி தம்மிடமே வந்து விடுவான் என்று காத்திருந்த தந்தை, தன் மகனைக் கண்டதும், தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். “நீ எப்போது வருவாய் என்றுதான் நான் காத்திருந்தேன். இப்படி இளைத்திருக்கிறாயே” என்று கூறித் தன் மகனைத் தேற்றினார். மேலும் “நீ தப்பான பிள்ளையல்ல. காலம் செய்த சதி இது. ஆகவே வருந்தாதே” என்று கூறினார். பின்பு, “யாரங்கே பணியாட்களே! பட்டாடை நகைகள், அலங்கார வகைகள் யாவற்றையும் கொண்டு வந்து இவனுக்கு அணிவியுங்கள்” என்று ஆணையிட்டார். தன் மகனுக்கு கன்றின் கறிகளுடன் விருந்து படையுங்கள் என்று கூறினார். அன்று மாலை மூத்த மகன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடே நடனங்களும் பாடல்களுமாக விழாக்கோலம் கொண்டிருப்பதைக் கண்டு வியந்தான். தன் பணியாட்களிடம் கேட்க, அவர்கள், “தங்கள் தம்பி திரும்ப வந்துள்ளார். அவனின் வரவை உங்கள் தந்தை கொண்டாடுகின்றார்” என்று கூறினர். அதைக் கேட்ட மகன் மிகுந்த கோபம் கொண்டு வீட்டின் வெளியிலேயே நின்றான். தன்னைத் தேடி வந்த தந்தையிடம், “சாத்திரங்களை மறந்தவனுக்குத் தடபுடலாக வரவேற்பு கொடுக்கின்றீர். உங்களுடன் இருந்தவரை இதுபோன்று எனக்காக எந்த விருந்தும், விழாவும் நீங்கள் கொண்டாடியதில்லை” என்று கண்கலங்கிக் கூறினான். அதற்குத் தந்தை, “மகனே! நீ எப்போதும் என்னுடன் இருப்பவன். என் செல்வம் யாவும் எப்போதும் உனக்கே உரிமையாகும். உன் தம்பி இறந்து இப்போது உயிர் பெற்று வந்திருக்கின்றான். அவன் மறுபிறவி எடுத்ததற்காகவே இந்த ஏற்பாடுகள்” என்று கூறி சமாதானம் செய்கின்றார்.

முதல் பருவம் – அலகு -3 வினா விடை

முதல் பருவம்

அலகு-3 அற இலக்கியம்

குறுவினாக்கள்

  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் எவையேனும் நான்கினை எழுதுக.
    • திருக்குறள் 
    • நாலடியார்
    • நான்மணிக்கடிகை
    • பழமொழி நானூறு
    • இனியவை நானூறு
  • திருக்குறள் குறிப்பு வரைக.
    • எழுதியவர்: திருவள்ளுவர்
    • முப்பால்: அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்
    • அதிகாரங்கள்: 133
    • குறட்பாக்கள்: 1330
  • திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்கள் நான்கினை எழுதுக.
    • உத்தரவேதம் 
    • பொய்யாமொழி 
    • வாயுறை வாழ்த்து
    • தெய்வநூல்
    • உலகப் பொதுமறை
    • முப்பால்
    • தமிழ்மறை
  • திருவள்ளுவருக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் எவையேனும் நான்கினை எழுதுக.
    • முதற்பாவலர்
    • தெய்வப்புலவர் 
    • செந்நாப்போதார்
    • பெருநாவலர்
    • தெய்வப்புலவர்
    • நாயனார்
    • தேவர்
  • அறத்திற்கு பொருந்தாதவை எவை?
    • பொறாமை
    • பேராசை
    • சினம்
    • கொடிய சொல்
  • நாலடியார் குறிப்பு வரைக.
    • எழுதியோர்: சமண முனிவர்கள்
    • தொகுத்தவர்: பதுமனார்
    • பாடல் எண்ணிக்கை: 400
    • வேறுபெயர்: நாலடி நானூறு, வேளாண் வேதம்
  • உண்மையான அழகு எது?  
    • கல்வி அழகே உண்மையான அழகு ஆகும்.
  • மற்ற அழகுகளைவிடச் சிறந்த அழகு என்று நாலடியார் எதைக் கூறுகிறது?
    • கல்வி அழகே மற்ற அழகுகளைவிடச் சிறந்த அழகு என்று நாலடியார்  கூறுகிறது.
  • உண்மையான அழகுகள் ஆகாதவை எவை?
    • தலைமுடியால் ஏற்படும் அழகு
    • பட்டுக்கரையால் ஏற்படும் அழகு
    • மஞ்சள் பூசுவதால் ஏற்படும் அழகு 

ஆகியவை உண்மையான அழகு ஆகாது. 

  • நான்மணிக்கடிகை குறிப்பு வரைக.
    • ஆசிரியர்: விளம்பி நாகனார்
    • பாடல் எண்ணிக்கை: 104
    • பெயர்க்காரணம்: நான்கு மணிகளால் செய்யப்பட்ட அணிகலன் போல பாடல்தோறும் நான்கு கருத்துக்களைக் கொண்டுள்ளதால் இப்பெயர் பெற்றது.
  • நிலத்திற்கு அழகு சேர்ப்பவை யாவை?
    • நிலத்திற்கு அழகு சேர்ப்பது நெல்லும் கரும்பும் ஆகும்.
  • குளத்திற்கு அழகு சேர்ப்பது எது?
    • குளத்திற்கு அழகு சேர்ப்பது தாமரை மலர்கள்  ஆகும்.
  • பெண்களுக்கு அழகு சேர்ப்பது எது?
    • பெண்களுக்கு அழகு சேர்ப்பது நாணம்   ஆகும்.
  • நம் ஒவ்வொருவருக்கும் அழகு சேர்ப்பது எது?
    • நம் ஒவ்வொருவருக்கும் அழகு சேர்ப்பது நாம் செய்யும் அறச்செயல்கள் ஆகும்.
  • பழமொழி நானூறு குறிப்பு வரைக.
    • ஆசிரியர்: முன்றுறை அரையனார்
    • பாடல் எண்ணிக்கை:400
    • பெயர்க்காரணம்:  ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பழமொழி இடம்பெறுவதால் பழமொழி நானூறு எனும் பெயர் பெற்றது.
  • முதுசொல் என்பதன் பொருள் யாது?
    • முதுசொல் என்பதன் பொருள் பழமொழி என்பதாகும்.
  • இனியவை நாற்பது குறிப்பு வரைக.
    • ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்
    • பாடல் எண்ணிக்கை:40+1 கடவுள் வாழ்த்து
    • பெயர்க்காரணம்: இவை இவை இனியவை என நாற்பது பாடல்களில் குறிப்பிடுவதால் இனியவை நாற்பது எனும் பெயர் பெற்றது.
  • இளமையை __________உணர்தல் இனிது.
    • இளமையை மூப்பென்று உணர்தல் இனிது.
  • கிளைஞர் மாட்டு __________கேட்டல் இனிது.
    • கிளைஞர் மாட்டு  அச்சின்மை (அச்சமில்லாத) கேட்டல் இனிது.
  • தடமென் பணைத்தோள் தளிரியலாரை __________உணர்தல் இனிது.
    • தடமென் பணைத்தோள் தளிரியலாரை விடமென்று உணர்தல் இனிது.
  • “தடமென் பணைத்தோள் தளிரியலார்” –  யார்?
    • தடமென் பணைத்தோள் தளிரியலார் என்போர் பிறமகளிர் ஆவர்.

நெடுவினாக்கள்

  • அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள அறக்கருத்துக்களைத் தொகுத்து எழுதுக.

    திருக்குறள்

      • எழுதியவர்: திருவள்ளுவர்
      • முப்பால்: அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்
      • அதிகாரங்கள்: 133
      • குறட்பாக்கள்: 1330

அறன் வலியுறுத்தல்

  • அறவழியில் வரும் சிறப்பும் செல்வமும் ஒருவருக்குச் சிறந்த பயனைத் தரும். இந்த ஒன்றைத் தவிர ஆக்கம் அளிக்கக்கூடிய வழி வேறொன்றும் இல்லை. 
  • நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.
  • செய்யக்கூடிய செயல்கள் எவையாயினும் அறவழியிலேயே செய்யப்பட வேண்டும். 
    • ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

      செல்லும்வாய் எல்லாஞ் செயல்.  

  • மனம் தூய்மையாக இருப்பதே அறம் ஆகும். மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றும் இல்லை. 
    • மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

      ஆகுல நீர பிற. 

  • பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கையும் நீக்கி வாழ்வதே அறம் ஆகும். 
  • பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.
    • அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

      பொன்றுங்கால் பொன்றாத் துணை.

  • அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவையெனக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்.
  • பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.
    • வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

      வாழ்நாள் வழியடைக்கும் கல்.

  • அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பம் ஆகும். அதற்கு மாறான வழியில் வருவது இன்பம் ஆகாது. 
  • பழிக்கத்தக்க செயல்களைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறச் செயல்களைச் செய்வதே ஒருவருக்குப் புகழ் சேர்க்கும். 
    • செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

      உயற்பால தோரும் பழி. 

  • நாலடியார் பாடலை எழுதி விளக்குக.

நாலடியார்

    • எழுதியோர்: சமண முனிவர்கள்
    • தொகுத்தவர்: பதுமனார்
    • பாடல் எண்ணிக்கை: 400
    • வேறுபெயர்: நாலடி நானூறு, வேளாண் வேதம்

பாடல்

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.

விளக்கம்

    • நம் தலையில் உள்ள முடிகளைச் சீர்ப்படுத்துவதால் வருகின்ற அழகும், கரையுள்ள ஆடையை அணிவதால் உண்டாகும் அழகும், மஞ்சள் பூசுவதால் உண்டாகின்ற அழகும் உண்மையான அழகல்ல.  மாறாக, அறநெறியில் நடந்து, நடுவுநிலைமையோடு வாழ்கின்றோம் என்ற பெருமிதத்தைத் தருகின்ற கல்வியே உண்மையான அழகாகும். 

  • நான்மணிக்கடிகை பாடலை எழுதி விளக்குக.

நான்மணிக்கடிகை

    • ஆசிரியர்: விளம்பி நாகனார்
    • பாடல் எண்ணிக்கை: 104
    • பெயர்க்காரணம்: நான்கு மணிகளால் செய்யப்பட்ட அணிகலன் போல பாடல்தோறும் நான்கு கருத்துக்களைக் கொண்டுள்ளதால் இப்பெயர் பெற்றது.

பாடல்

நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்
குளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை
நலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கணி
தான்செல் உலகத்(து) அறம்.

விளக்கம்

    • பசுமையாகக் காணப்படும் நெல்லும், கரும்பும் நிலத்திற்கு அழகைத் தருகின்றன. 
    • குளத்திற்குத் தாமரை மலர்கள் அழகைத் தருகின்றன.
    • பெண்மைக்கு அழகு நாணமுடைமை
    • அதுபோல பிறருக்குச் செய்கின்ற அறச் செயல்கள்  ஒரு மனிதனுக்கு அழகைத் தருகின்றன.
  • பழமொழி நானூறு பாடலை எழுதி விளக்குக.

பழமொழி நானூறு

    • ஆசிரியர்: முன்றுறை அரையனார்
    • பாடல் எண்ணிக்கை:400
    • பெயர்க்காரணம்:  ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பழமொழி இடம்பெறுவதால் பழமொழி நானூறு எனும் பெயர் பெற்றது.

பாடல்

தந்நடை நோக்கார் தமர்வந்த வாறறியார்
செந்நடை சேராச் சிறியார்போல் ஆகாது
நின்னடை யானே நடவத்தா நின்னடை
நின்னின் றறிகிற்பார் இல்.

விளக்கம்

    • சிறுமைக் குணமுடையவர் தம் நடத்தையைத் தாம் எண்ணிப் பார்ப்பதில்லை.

    • தாம் எப்படி இந்த நிலைமைக்கு வந்தோம் என்றும் எண்ணிப் பார்ப்பதில்லை.

    • செம்மையான நன்னடத்தையைக் கடைப்பிடிப்பதில்லை.
      இத்தகைய சிறியார் போல நீ நடந்துகொள்ளக் கூடாது.

    • உன்னுடைய பெருமைக்கு ஏற்ற நடத்தையைப் பின்பற்றுக.
      உன்னுடைய நடத்தையை உன்னைத் தவிர வேறு யார் அறிந்துகொள்ள முடியும்?

    • ஆதலால் உன் பெருமைக்கு ஏற்ற நடத்தையை நீதான் பின்பற்ற வேண்டும்.

  • இனியவை நாற்பது பாடலை எழுதி விளக்குக.

இனியவை நாற்பது

    • ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்
    • பாடல் எண்ணிக்கை:40+1 கடவுள் வாழ்த்து
    • பெயர்க்காரணம்: இவை இவை இனியவை என நாற்பது பாடல்களில் குறிப்பிடுவதால் இனியவை நாற்பது எனும் பெயர் பெற்றது.

பாடல்

இளைமையை மூப்பென் றுணர்தல் இனிதே
கிளைஞர்மாட் டச்சின்மை கேட்டல் இனிதே
தடமென் பணைத்தோள் தளிரிய லாரை
லிடமென் றுணர்தல் இனிது.

விளக்கம்

    • இளவயதிலேயே முதுமை தருகின்ற மனப்பக்குவம் பெற்றிருப்பது இனிது.  
    • உறவினர்கள் அன்புமொழி கூறுபவராக அமைவது இனிது.
    • மென்மையான மூங்கில் போன்ற தோள்களைக் கொண்ட பிற மகளிர் நஞ்சைப் போன்றவர் எனத் தெளிந்து விட்டு விலகிவிடுதல் இனிது.

மூன்றாம் பருவம் – அலகு 4- வினா விடைகள்

 மூன்றாம் பருவம்

அலகு – 4 – குறுவினாக்கள் மற்றும் விடைகள்

  • முதல் ஐந்தாண்டு திட்டம் எப்போது  தொடங்கப்பட்டது?
    • முதல் ஐந்தாண்டு திட்டம் 1951 தொடங்கப்பட்டது.
  • தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள அணைகளைப் பட்டியலிடுக.
    •  பவானிசாகர் அணை (1956)
    • அமராவதி அணை (1957)
    • மணிமுத்தாறு அணை (1958)
    • வைகை அணை (1959)
    • ஆழியாறு அணை (1962)
  • மத்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகளைப் பட்டியலிடுக.
    • நெய்வேலிப் பழுப்பு நிலக்கரித் திட்டம்
    • இணைப்பு இரயில்பெட்டித் தொழிற்சாலை
    • எண்ணூர் அனல்மின்சார நிலையம்
    • மணலி மண்ணெண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் தொழிற்சாலை
    • திருவெறும்பூர்: உயர் அழுத்தக் கொதிகலன் தொழிற்சாலை.
    • ஆவடி: டாங்கித் தொழிற்சாலை.
    • கல்பாக்கம்: மின்அணு நிலையம்.
  • நிலவுடைமை உச்சவரம்பு சட்டம் குறித்து எழுதுக.  
    • தமிழ்நாட்டு அரசாங்கம் சட்டத்தின் மூலம் நிலவுடைமைக்கு உச்சவரம்பு 15 ஏக்கர்களுக்குமேல் உரிமை கொண்டாட முடியாது என்று திட்டம் கொண்டு வந்தது. நிலமின்றி வாழ்ந்த மக்களுக்கு நிலங்கள் பங்கீடு செய்யப்பட்டன.
  • இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்து எழுதுக.
    • இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, மத்திய அரசு இந்தியைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்காது என்று அறிவித்தது. ஆனால் சென்னை மாகாண முதலமைச்சர் ஓ.பி. இராமசாமி ரெட்டியாரைக்கொண்ட அமைச்சரவை மீண்டும் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க முயன்றது.
    • இந்தி எதிர்ப்புப் போராட்டம் (1948): தமிழறிஞர்கள், சமயவாதிகள், காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தனர். 17.7.1948இல் சென்னையில் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது.
  • அரசியல் அமைப்பில் மொழிக் கொள்கை குறித்து எழுதுக.
    • அரசியலமைப்பில் மொழிக் கொள்கை (1950): இந்திய அரசியலமைப்பில் 343வது பிரிவில் இந்தியாவின் ஆட்சி அலுவல் மொழியாக இந்தி இருக்கும் என்று கூறப்பட்டது. 351வது பிரிவு, இந்தி மொழியைப் பரவச் செய்வதும், வளமுறச் செய்வதும் இந்திய அரசின் கடமை என்று அமைந்து இருந்தது.
  • தார்ப்பூசி அழிக்கும்  போராட்டம் என்றால் என்ன?
    • புகைவண்டி நிலையம், அஞ்சல் நிலையம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள பெயர்ப்பலகைகளில் காணப்படும் இந்தி எழுத்துக்களை தார்பூசி அழிக்கும் போராட்டம் ஆரம்பமானது.
  • வானொலிக்கு எதிரான போராட்டம் என்றால் என்ன? 
    • மத்திய அரசு வானொலிக்கு ‘ஆகாஷ்வாணி’ என்று பெயர் சூட்டுவதாக அறிவித்ததற்கு எதிராக 23.5.1959இல் போராட்டம் ஆரம்பமானது. தமிழ் எழுத்தாளர்கள், பாடகர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டனர். 
  • இந்திய ஆட்சிமொழி சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 
    • 13.4.1963இல் இந்திய அரசின் ஆட்சிமொழிச் சட்டம் தாக்கல் செய்யப்பட்டது.
    • இதன்படி, 26.1.1965 முதல் இந்தி ஆட்சி மொழியாகும், ஆங்கிலம் துணை மொழியாகப் பயன்படுத்தப்படும்.
  • இடைநிலை கல்வித் திட்டம் குறித்து எழுதுக.
    • வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு ஏதுவாக கணினிக் கல்வியும் தொழில் கல்வியும் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் ‘அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது.
  • சமுக நலத்திட்டங்களைப் பட்டியலிடுக.
    • பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டம் (1970).
    • கண்ணொளி வழங்கும் திட்டம் (1971)
    • இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கும் திட்டம் (1973).
    • ஊனமுற்றோர் மறுவாழ்வு திட்டம் (1974).
    • அனாதை சிறுவர்கள் மறுவாழ்வு திட்டம் (1975).
    •  தொட்டில் குழந்தை திட்டம்
    • பசுமைவீடு திட்டம்
  • கண்ணொளி வழங்கும் திட்டம் குறித்து எழுதுக.
    • கண்தானத்தை ஊக்குவிக்கும் திட்டம் 
    • லட்சக்கணக்கானோர் கண்ணொளி பெற்றனர்; இத்திட்டம் பின்னர் மத்திய அரசால் தேசிய அளவில் பின்பற்றப்பட்டது.
  • குடிசைத்தொழில்கள் சிலவற்றை எழுதுக. 
    • பட்டுப் பூச்சி வளர்த்தல்
    • மரச்சாமான்கள்
    • தேனீ வளர்ப்பு
    • மண்பாண்டத் தொழில்
    • பாய் முடைதல்
    • கோழி வளர்ப்பு
    • பண்ணைத் தொழில்
    • கதர், கைத்தறிப் பொருட்கள் தயாரித்தல்
  • இந்திய கனிமங்கள் யாவை?  அல்லது இந்தியாவில் கிடைக்கும் கனிமங்களைப் பட்டியலிடுக.
    • நிலக்கரி
    • இரும்பு
    • மாங்கனீசு
    • பாக்ஸைட்
    • மைக்கா
  • இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் உலோகங்கள் யாவை?  
    • மாங்கனீசு
    • பாக்சைட்
    • ஜிப்சம்
  • இந்தியாவிற்கு  இறக்குமதி செய்யப்படும் உலோகங்கள் யாவை? 
    • நிக்கல்
    • பெட்ரோலியம்
    • துத்தநாகம்
    • பாதரசம்
  • தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
    • 1957இல் ‘தமிழ்நாடு மின்சார வாரியம்’ தொடங்கப்பட்டது.
  • தகவல் தொடர்பு – விளக்கம் தருக.
    • தகவல் தொடர்பு என்பது ஓர் இடத்திலிருந்து தொலைவில் உள்ள மற்றொரு இடத்தோடு தகவல்களைப் பரிமாறிக் கொள்ளப் பயன்படுத்தும் அமைப்பு மற்றும் அதற்கான கருவிகள் ஆகும்.
  • இணையப் பயன்பாடுகள் குறித்து எழுதுக. (அல்லது) இணையம் வழங்கும் வசதிகளை ப் பட்டியலிடுக. 
    • வலைதளப்பக்கங்கள்
    • மின்னஞ்சல்
    • பல மொழிகளில் செய்திகள்
    • ஒளிப்படங்கள்
  • வன்பொருள், மென்பொருள் உட்பிரிவுகள் குறித்து எழுதுக.
    • உற்பத்தி, பரிசோதிப்பு, தரக்கட்டுப்பாடு, விற்பனை, பராமரிப்பு, ஆய்வு மற்றும் மேம்பாடு போன்ற உட்பிரிவுகளைக் கொண்டுள்ளன.
  • தனிப்பட்ட தகவல் தொடர்பு என்றால் என்ன? 
    • தனிப்பட்ட தொடர்பு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கிடையே கருத்துக்கள், எண்ணங்கள் மற்றும் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு செயல்முறையாகும்.
    • தபால், தந்தி
  • பொதுத் தகவல் தொடர்பு என்றால் என்ன?
    • பொதுத் தகவல் தொடர்பு என்பது, செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வழியாக ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்களைச் சென்றடையும் தகவல்தொடர்பு முறையாகும்.
  • முதல் தபால் தலை எங்கு எப்போது வெளியிடப்பட்டது?
    • 1852 இல் முதல் தபால் தலை கராச்சியில் வெளியிடப்பட்டது.
  • தமிழ் இணையக் கல்விக்கழகம் பற்றி எழுதுக. 
    • நோக்கம்: இணையம் வழியாகத் தமிழ் ஆதாரங்களை (மொழி, இலக்கியம், கலை, பண்பாடு) தமிழ்ச் சமுதாயத்தினருக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் அளிப்பது.
    • நிறுவல்: 18.5.2000இல் தமிழக அரசால் நிறுவப்பட்டு, 16.07.2010இல் ‘தமிழ் இணையப் பல்கலைக்கழகமாக’ இருந்து ‘தமிழ் இணையக் கல்விக்கழகமாக’ பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

நெடுவினாக்கள்

  • விடுதலைக்குப் பின் தமிழ்நாடு பெற்ற வளர்ச்சி குறித்து எழுதுக. (அல்லது) விடுதலைக்குப் பின் தமிழகத்தின் வளர்ச்சி குறித்து விரித்துரைக்க. 

விடுதலைக்குப் பின் தமிழ்நாட்டு வரலாறு

விடுதலைக்குப் பிந்தைய தமிழ்நாட்டில், நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் நிலவிய ஏற்றத்தாழ்வுகளைக் களைய, பல்வேறு துறைகளிலும் ஐந்தாண்டுத் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

  • ஐந்தாண்டுத் திட்டங்கள்: 
    • முதல் திட்டம்: 1951
    • இரண்டாம் திட்டம்: 1956
    • மூன்றாம் திட்டம்: 1961
    • நான்காம் திட்டம்: 1969
    • ஐந்தாம் திட்டம்: 1974
    • அடுத்த திட்டம்: 1980 இந்தத் திட்டங்களின் முக்கிய நோக்கம், உழவுத் தொழில் மற்றும் கனரகத் தொழில்களின் வளர்ச்சி ஆகும். இத்திட்டங்களின் பயனாக, தமிழகத்தில் வேளாண்மையிலும், கனரகத் தொழில்களிலும் வளர்ச்சி காணப்பட்டது.

பல்வேறு துறைகளில் முன்னேற்றம்

  • வேளாண்மை வளர்ச்சி:
      • விடுதலைக்குப் பிறகு பல இரசாயன உர உற்பத்தி ஆலைகள் தோன்றி உழவுக்குத் தேவையான உரங்களை வழங்கின. கோவை, தஞ்சை மாவட்டங்களில் இருந்து டிராக்டர்கள் மூலம் நிலங்களைப் பண்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
      • வேளாண்மைக்கு முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ. 9.37 கோடியும், இரண்டாம் திட்ட காலத்தில் ரூ. 51.02 கோடியும், மூன்றாம் திட்ட காலத்தில் ரூ. 57.20 கோடியும், நான்காவது திட்ட காலத்தில் ரூ. 93.48 கோடியும் ஒதுக்கப்பட்டது.
      • தமிழகத்தின் பல பகுதிகள் மழையை நம்பியே இருந்தன, மரபு வழிப்பட்ட வேளாண்மையே தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது. தஞ்சை, திருச்சி, நெல்லை போன்ற பகுதிகள் வேளாண்மையில் சிறப்பாக விளங்கின.
      • விடுதலைக்குப் பிறகு பவானிசாகர் அணை (1956), அமராவதி அணை (1957), மணிமுத்தாறு அணை (1958), வைகை அணை (1959), ஆழியாறு அணை (1962) போன்ற பெரிய அணைக்கட்டுகள் கட்டப்பட்டன.
      • திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நில உச்சவரம்பு 30 ஸ்டாண்டர்டு ஏக்கரில் இருந்து 15 ஸ்டாண்டர்டு ஏக்கராகக் குறைக்கப்பட்டது. நிலமின்றி வாழ்ந்த மக்களுக்கு நிலங்கள் பங்கீடு செய்யப்பட்டன.
      • கரும்பு, நெல், பருத்தி, சோளம், கம்பு போன்ற பயிர் வகைகளில் ஒட்டு ரகங்கள் உருவாக்கப்பட்டதால், 1971ஆம் ஆண்டுக்குள் உணவுத்துறையில் தன்னிறைவு ஏற்பட்டது. இந்தியாவிலேயே பசுமைப் புரட்சி கண்ட இரண்டாவது மாநிலமாகத் தமிழகம் விளங்கலாயிற்று.
  • தொழில் வளர்ச்சி:
      • கோவை, மதுரை ஆகிய இடங்களில் நூற்பாலைகளும் நெசவாலைகளும் துணி வகைகளை உற்பத்தி செய்தன. சென்னையில் உற்பத்தியாகும் ‘பின்னி’ துணிவகைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. கைத்தறி நெசவாளர்கள் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தனர்.
      • மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டில் பல பெரிய உற்பத்தித் திட்டங்களை நிறுவியது. 
        • நெய்வேலிப் பழுப்பு நிலக்கரித் திட்டம் (மூலதனம் ரூ. 182 கோடி): மின்சாரம், செயற்கை உரம், அடுப்புக்கரி உற்பத்தி, பீங்கான் பாத்திரங்கள், மின்தடை சாதனங்கள் தயாரிப்பு.
        • சென்னை: இணைப்பு இரயில்பெட்டித் தொழிற்சாலை, எண்ணூர் அனல்மின்சார நிலையம், மணலி மண்ணெண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் தொழிற்சாலை.
        • திருவெறும்பூர்: உயர் அழுத்தக் கொதிகலன் தொழிற்சாலை.
        • ஆவடி: டாங்கித் தொழிற்சாலை.
        • கல்பாக்கம்: மின்அணு நிலையம்.
      • தமிழ்நாடு முழுவதும் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு இலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. எல்லா மாவட்டங்களிலும் ‘தொழில்நுட்பப் பள்ளிகள்’ தொடங்கப்பட்டன.
      • நெசவு ஆலைகள் தவிர, சிமெண்ட், உரம், போக்குவரத்து வண்டிகள், டயர் உற்பத்தி செய்யும் தொழில்கள் பெருகின. துப்பாக்கித் தொழிற்சாலை, டாங்குகள் கட்டும் தொழிற்சாலை, இரயில் பெட்டித் தொழிற்சாலை போன்ற புதிய கனரகத் தொழிற்சாலைகள் உருவாயின.
      • ஆயிரக்கணக்கான சிறு தொழில்கள் பெருகின. அம்பத்தூர், கிண்டி, இராணிப்பேட்டை போன்ற இடங்களில் உருவான தொழிற்பேட்டைகள் குறிப்பிடத்தக்கவை.
      • கோவை, மதுரை, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் பஞ்சாலைத் தொழில் சிறந்து விளங்கியது. சர்க்கரை உற்பத்தியும் பெருகியது.
      • டால்மியாபுரம், தாழையூத்து போன்ற இடங்களில் சிமெண்ட் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைந்தன. 1976இல் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் ஏற்பட்டது.
      • அசோக் லேலாண்ட், ஸ்டாண்டர்டு மோட்டர்ஸ் லிமிடெட் போன்ற போக்குவரத்து ஊர்தி உற்பத்தித் தொழிற்சாலைகள் முக்கியமானவை. தோல் தொழில் வளர்ச்சிக்கு 1964இல் சென்னையை அடுத்த மாதவரத்தில் முதல் தொழிற்பேட்டை உருவானது.
      • பொதுத்துறை நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது, அவை வியத்தகு வளர்ச்சி அடைந்தன. பருத்தி, இரும்பு-எஃகு, சணல், சர்க்கரை, தேயிலை, பொறியியல் போன்ற தொழில்கள் பொதுத்துறையின் கீழ் வந்தன.
      • மின்னணுப் பொருள்கள், நுண்கருவிகள், எந்திரப் பாகங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் சிறுதொழில்கள், அரசு கடனுதவியுடன் ஊக்குவிக்கப்பட்டன.
      • பட்டுப் பூச்சி வளர்த்தல், மரச்சாமான்கள், தேனீ வளர்ப்பு, மண்பாண்டத் தொழில், பாய் முடைதல், கோழி வளர்ப்பு, கதர், கைத்தறிப் பொருள்கள் தயாரித்தல் போன்றவை குடிசைத் தொழில்களாக வளர்ந்தன.
      • சுதந்திரத்திற்குப் பின் தமிழகத்தில் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், பாரத கனரகத் தொழிற்சாலை, ஆவடி டாங்கி தொழிற்சாலை, துப்பாக்கித் தொழிற்சாலை போன்ற பத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.
  • மின் உற்பத்தி:
      • பொருளாதார வளர்ச்சிக்கு மின்சாரம் இன்றியமையாதது. 1947இல் பேசின் பிரிட்ஜ் அனல்மின் நிலையம், 1948இல் மேட்டூர் நீர்மின் நிலையம் உருவாயின.
      • 1957இல் ‘தமிழ்நாடு மின்சார வாரியம்’ தொடங்கப்பட்டது. கல்பாக்கம் அனல்மின் நிலையம், தூத்துக்குடி அனல்மின் நிலையம் போன்றவை துவங்கப்பட்டன.
  • போக்குவரத்து:
      • சாலைப் போக்குவரத்து சிறந்த முன்னேற்றம் அடைந்தது. 1947இல் சென்னை நகரப் பேருந்துகள் தேசியமயமாக்கும் திட்டம் தொடங்கி 1948இல் நிறைவுற்றது.
      • 1972இல் பல்லவன் போக்குவரத்துக் கழகம் உருவாகியது. அதன் பிறகு பல புதிய போக்குவரத்துக் கழகங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுத்தன.
      • புகைவண்டிப் போக்குவரத்தில் தமிழகம் வேகமான வளர்ச்சியைப் பெற்றது. நெல்லை – நாகர்கோயில், திண்டுக்கல் – கரூர், சேலம் – தருமபுரி – பெங்களூரு இடையே புதிய இரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. மீட்டர்கேஜ் ரயில்பாதைகள் அகலப் பாதைகளாக மாற்றப்பட்டன.
  • நிலவுரிமைச் சட்டங்கள்:
      • சுதந்திரத்திற்குப் பிறகு நில உரிமைகள் ஒரு சிலரிடம் குவிந்திருந்ததை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டியிருந்தது.
      • தமிழ்நாட்டு அரசாங்கம் சட்டத்தின் மூலம் நிலவுடைமைக்கு உச்சவரம்பு 15 ஏக்கர்களுக்குமேல் உரிமை கொண்டாட முடியாது என்று திட்டம் கொண்டு வந்தது. நிலமின்றி வாழ்ந்த மக்களுக்கு நிலங்கள் பங்கீடு செய்யப்பட்டன.
  • கிராம வளர்ச்சி:
      • கிராமங்கள் முன்னேற சாலை அமைத்தல், மின்சார வசதி, குடிநீர் வசதி போன்றவை அளிக்கப்பட்டன. ‘நூலக நிறுவனம்’ அமைக்கப்பட்ட பிறகு கிராமங்கள் தோறும் நூலகங்கள் உருவாகின.
      • வானொலி, செய்தித்தாள்கள், திரைப்படங்கள் ஆகியவை கிராமங்களைச் சென்றடைந்தன.
  • கல்வி வளர்ச்சி:
    • கலைக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள், உயர்தரக் கல்வி நிலையங்கள் பலமடங்கு பெருகியுள்ளன. வேளாண்மைப் பல்கலைக்கழகம், பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் போன்ற பல பல்கலைக்கழகங்கள் உருவாகியுள்ளன.
    • தேசிய ஒருமைப்பாடு, சமூகநீதி, சமயசார்பின்மை, சமதர்மப் பொருளாதாரம், அனைவருக்கும் தரமான கல்வி போன்ற உயர்ந்த குறிக்கோள்களுடன் கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

டாக்டர் ராதாகிருஷ்ணன் கமிஷன் (1948), A. லெட்சுமணசுவாமி முதலியார் குழு (1952), C.S. கோத்தாரி கமிஷன் (1964) போன்றவை அமைக்கப்பட்டன. 1968இல் ‘தேசிய கல்விக்கொள்கை’ உருவாக்கப்பட்டது.

  • மொழிப் போராட்டம் வழி தமிழகம் முழுவதும் நடைபெற்ற இழப்புகள் குறித்து விவரி. (அல்லது) மொழிப் போராட்டம் குறித்து எழுதுக.

மொழிப் போராட்டம்: இந்தித் திணிப்புக்கு எதிரான எதிர்ப்பு

மொழி ஒரு சமூகத்தின் ‘பண்பாட்டுத் தொடர்புக்கருவி’ ஆகும். பல மொழிகள் பேசும் நாட்டில் ஒரு குறிப்பிட்ட மொழியைத் திணிப்பது தவறானது, அது முரண்பாடுகளை உருவாக்கும். சென்னை மாகாணத்தில் ‘இந்தி மொழி திணிப்பு ஏற்பட்டது’.

  • விடுதலைக்குப் பிந்தைய இந்தித் திணிப்புப் போராட்டம்:
      • இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, மத்திய அரசு இந்தியைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்காது என்று அறிவித்தது. ஆனால் சென்னை மாகாண முதலமைச்சர் ஓ.பி. இராமசாமி ரெட்டியாரைக்கொண்ட அமைச்சரவை மீண்டும் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க முயன்றது.
      • நாளிதழ்கள், மாத, வார இதழ்கள் அரசின் இந்த முடிவைக் கண்டித்தன.
      • இந்தி எதிர்ப்புப் போராட்டம் (1948): தமிழறிஞர்கள், சமயவாதிகள், காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தனர். 17.7.1948இல் சென்னையில் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது. பெரியார், மறைமலையடிகள், திரு.வி.க., அண்ணா போன்றோர் கலந்துகொண்டனர்.
      • இந்தி திணிப்பு ‘ஆரிய திராவிட போராட்டத்தின் மறுவடிவம்’ என்று பலர் பேசினர். மறைமலையடிகள், “திராவிடர்களின் பண்பாட்டையும், மறுமலர்ச்சியையும் அழிக்கவே ஆரியர்கள் இந்தியைப் புகுத்தி உள்ளனர்” என்றார்.
      • அமைதிப் போராட்டம் (1948): திராவிடர் கழக செயற்குழு இந்திக்கு எதிராக ஊர்வலம் நடத்துதல், பொதுக்கூட்டம் கூட்டுதல், அமைச்சர்களுக்குக் கருப்புக் கொடி காட்டுதல், அரசு அலுவலகங்களில் மறியல் செய்தல் போன்ற அமைதியான போராட்டங்களை நடத்தத் தீர்மானித்தது.
      • சென்னைக்கு வந்த இந்திய கவர்னர் ஜெனரல் இராஜாஜிக்குக் கருப்புக் கொடி காட்டப்பட்டது. அரசு இந்தித் திணிப்பை அகற்றவில்லை.
      • 19.12.1948இல் கும்பகோணத்தில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. பெரியார், மணியம்மை கைது செய்யப்பட்டனர். 1949இல் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து அண்ணா தலைமையில் திமுக ஆரம்பிக்கப்பட்டது.
      • அரசின் புதிய ஆணை (1950): கல்வி அமைச்சர் மாதவராவ், 2.5.1950இல் 1ஆம் வகுப்பு முதல் 6ஆம் வகுப்பு வரை இரண்டாம் மொழியாக ஆங்கிலத்தையும், மூன்றாம் மொழியாக இந்தியையும் கட்டாயமாக்கி ஆணை பிறப்பித்தார். தி.க.வும், திமுகவும் இதனை எதிர்த்து 10.5.1950இல் ‘இந்தி எதிர்ப்பு நாளாகக்’ கொண்டாடினர்.
      • அரசியலமைப்பில் மொழிக் கொள்கை (1950): இந்திய அரசியலமைப்பில் 343வது பிரிவில் இந்தியாவின் ஆட்சி அலுவல் மொழியாக இந்தி இருக்கும் என்று கூறப்பட்டது. 351வது பிரிவு, இந்தி மொழியைப் பரவச் செய்வதும், வளமுறச் செய்வதும் இந்திய அரசின் கடமை என்று அமைந்து இருந்தது.
      • மத்திய அரசு, மற்ற மொழி பேசும் மக்களுக்கு ஆங்கிலம் தொடர்பு மொழியாக வைத்துக்கொள்ள 15 ஆண்டுகள் (1965 வரை) நீட்டிப்பு கொடுத்தது. இந்தி கற்பவர்களுக்கு அரசு வேலைகளில் தனிச்சலுகைகள் வழங்கியதால், தமிழகம் எங்கும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிகள் உருவாயின.
  • இராஜாஜி ஆட்சிக்காலத்தில் போராட்டம் (1952-1954):
      • 10.4.1952இல் இராஜாஜி முதல்வரானார். அவரது காலத்தில் ‘மொழிப்போர்’ புதிய வடிவம் பெற்றது. திராவிடர் கழகமும், திமுகவும் இணைந்து போராட்டத்தைத் துவங்கின.
      • புகைவண்டி நிலையம், அஞ்சல் நிலையம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள பெயர்ப்பலகைகளில் காணப்படும் இந்தி எழுத்துக்களை தார்பூசி அழிக்கும் போராட்டம் ஆரம்பமானது. பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்கள் இதில் ஈடுபட்டனர்.
      • இப்போராட்டத்தை அரசு அடக்க முயலவில்லை, இதனால் மக்களிடையே இந்தி எதிர்ப்புணர்ச்சியும், தமிழ் மீது பற்றும் ஏற்பட்டது.
  • தேசியக்கொடி எதிர்ப்புப் போராட்டம் (1955):
      • 1955இல் மத்திய அரசு இந்தியை மீண்டும் தேர்வுப் பாடமாகத் திணிக்கும் சூழ்நிலை உருவானது. இதனைத் தடுக்க, 17.7.1955இல் திருச்சியில் திராவிடர் கழக நிர்வாகக்குழு, “இந்தியக் கூட்டாட்சியில் இருக்க விரும்பவில்லை. 1.8.1955இல் தேசியக்கொடி எரிப்புப் போராட்டம் தொடங்கப்படும்” என்று முடிவெடுத்தது.
      • பிரதமர் நேருவின் கோரிக்கையின் பேரில், தமிழக முதல்வர் காமராஜர், இந்தி பேசாத மக்களின் நலன்களைப் பாதிக்கக்கூடிய எந்த நடவடிக்கைகளையும் இந்திய அரசோ, மாநில அரசோ எடுக்காது என்று உறுதிமொழி அளித்தார். இதனால் திராவிடர் கழகம் போராட்டத்தைக் கைவிட்டது.
  • பி.ஜி. கெர் குழுவும் இந்தி திணிப்பும் (1955):
      • 7.6.1955இல் பி.ஜி. கெர் தலைமையில் ஒரு குழு இந்தி மொழியைப் பரப்புவதற்கும், வளர்ப்பதற்கும் அமைக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கை, இந்தி கட்டாயப் பாடம் இல்லை, விருப்பப் பாடமாகப் படிக்கலாம் என்றது, ஆனால் மூன்றாவது மொழிக்குக் கிடைக்கும் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றது.
      • கெர் குழு அறிக்கை எதிர்ப்புப் போராட்டம் (1957): இந்தக் குழுவின் அறிக்கை மறைமுகமாக இந்தியைத் திணிப்பதாகக் கருதி பலமான எதிர்ப்பு தோன்றியது. பெரியார், “‘வளைந்த குண்டூசிக்குக்கூட பெறாத இந்தி நமக்கு எந்த வகையிலும் தேவையில்லை'” என்றார். திமுகவும் கடுமையாக எதிர்த்தது.
      • 26.11.1957இல் பெரியாரின் ஆணைப்படி, மாநிலம் முழுவதும் ‘சட்ட எரிப்புப் போராட்டம்’ துவக்கப்பட்டது. சுமார் 4,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவர்கள் முதல் முறையாக கும்பகோணத்தில் போராட்டம் நடத்தினர்.
  • வானொலிக்கு எதிரான போராட்டம் (1959):
      • மத்திய அரசு வானொலிக்கு ‘ஆகாஷ்வாணி’ என்று பெயர் சூட்டுவதாக அறிவித்ததற்கு எதிராக 23.5.1959இல் போராட்டம் ஆரம்பமானது. தமிழ் எழுத்தாளர்கள், பாடகர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டனர். மத்திய அரசு ‘ஆகாஷ்வாணி’ என்ற சொல்லைத் திரும்பப் பெற்றுக்கொண்டதும் போராட்டம் நிறுத்தப்பட்டது.
  • குடியரசுத் தலைவர் ஆணையும், தேசப்பட எரிப்புப் போராட்டமும் (1960):
      • 1959இல் பி.ஜி. கெர் அளித்த பரிந்துரையை குடியரசுத் தலைவர் ஏற்று, 20.4.1960இல் இந்தியை ‘ஆட்சி மொழியாக’ அறிவித்தார்.
      • பிரதமர் நேருவின் உறுதிமொழியை மீறிவிட்டதாகக் கருதிய பெரியார், “நாட்டுப் பிரிவினைக்கு வழிவகுத்து விட்டார்கள். எனவே தேசப்பிரிவினைக்கு இந்திய தேசப் படத்திற்கு தீ வையுங்கள்” என்று அறிக்கை வெளியிட்டார்.
      • 5.6.1960ஆம் தேதி ‘துக்கநாளாக’ அறிவிக்கப்பட்டது. பெரியார், வீரமணி கைது செய்யப்பட்டனர்.
      • திமுகவால் 31.7.1960இல் சென்னை கோடம்பாக்கத்தில் ‘இந்தி எதிர்ப்பு மாநாடு’ கூட்டப்பட்டது.
  • இந்திய ஆட்சிமொழிச் சட்டம், 1963:
      • 13.4.1963இல் இந்திய அரசின் ஆட்சிமொழிச் சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, 26.1.1965 முதல் இந்தி ஆட்சி மொழியாகும், ஆங்கிலம் துணை மொழியாகப் பயன்படுத்தப்படும். திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை இந்தி பேசாத மக்களுக்கு இழைத்த அநீதி என்று கண்டித்தார்கள்.
      • திமுக பொதுக்குழு கூடி அரசியல் சட்டம் 17வது பிரிவை எரிக்கத் தீர்மானம் நிறைவேற்றியது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1965ஆம் ஆண்டு இறுதி வரை நடைபெறும் என திமுக அறிவித்தது.
  • பக்தவச்சலம் சட்ட எரிப்புப் போராட்டம்:
      • 3.10.1963இல் பக்தவச்சலம் முதலமைச்சர் ஆனதும் ஆட்சிமொழிக்கு எதிரான போராட்டம் வேகம் பெற்றது. அண்ணா தலைமையில் 17.11.1963இல் அரசியல் சட்டத்தின் 17வது மொழிப் பிரிவை எரிப்பதாக இருந்தது, ஆனால் அவர் கைது செய்யப்பட்டார்.
      • அண்ணா உட்பட பலருக்கு 6 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. போராட்டம் தீவிரமடைந்து, 26.1.1965இல் புதுவேகம் பெற்றது.
  • குடியரசு தினமும், துக்க தினமும்:
      • 8.1.1965இல் திமுக, 26.1.1965ஐ துக்க தினமாகக் கொண்டாடவும், கருப்புச் சின்னம் அணியவும் முடிவெடுத்தது.
  • இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் (1965):
      • அனைத்துக் கல்லூரி மாணவர்களும் ஒன்றுகூடி ஒரு போராட்டக்குழுவை அமைத்தனர். சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இந்தியை அரக்கி வடிவத்தில் கொடும்பாவி செய்தும், எரித்தும், இந்திப் புத்தகங்களை எரித்தும் எதிர்ப்பைக் காட்டினர்.
      • மதுரையில் அரசியல் பிரிவு 17 கொளுத்தப்பட்டது. இதற்குக் காரணமான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டம் தீவிரமடைந்து, தடியடி, கண்ணீர் புகைக்குண்டு எனப் பரவியது.
      • மாணவர் இராஜேந்திரன் மரணம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இராஜேந்திரன் என்ற மாணவர் மரணமடைந்தார். இதனால் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மாணவர் கையிலிருந்து பொதுமக்கள் கைக்குச் சென்றது.
      • தீக்குளித்த திமுகத் தொண்டர்கள் பலி: திருச்சி சின்னச்சாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம் போன்ற பலர் உடலில் தீ வைத்துக் கொண்டு ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என்று கூறிக் கொண்டே இறந்தனர். இந்தப் போராட்டத்தை அடக்க முடியாமல் அரசு திணறியது, காங்கிரஸ் அரசு மக்களின் ஆதரவை இழந்தது.
  • திமுக ஆட்சியும் போராட்டத்தின் முடிவும் (1967):
    • 1967 பிப்ரவரியில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், 20 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியைத் தோற்கடித்து திமுக ஆட்சியைப் பிடித்தது. அண்ணாத்துரை 6.3.1967இல் முதலமைச்சர் ஆனார்.
    • 23.1.1968இல் கூடிய சட்டமன்றத்தில் அண்ணா, “ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழிகளே தமிழகத்தின் ஆட்சி மொழியாக இருக்கும். இந்திமொழி தேவை இல்லை” என்று அறிவித்தார். அரசு கல்லூரிகளில் தமிழ் பாடமொழியாக இருக்கும் என்றும், அடுத்த ஐந்தாண்டுக்குள் அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.
    • மத்திய அரசு இந்தியைத் திணிக்க முயலக்கூடாது என்றும், ஆங்கிலத்தையே ஆட்சிமொழியாக நீடிக்கச் செய்யவேண்டும் என்றும் திமுக அரசு கேட்டுக்கொண்டது.
    • இவ்வாறு திமுக இருமொழிக் கொள்கைத் திட்டத்தை அறிமுகம் செய்தவுடன், நீண்ட காலமாக நடந்து வந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் முடிவடைந்தது.
  • கல்வி வளர்ச்சி குறித்த திட்டங்களை விவரி. 

கல்வி வளர்ச்சி

விடுதலைக்குப் பின் தமிழ்நாட்டில் கல்வித் துறையில் பெரும் வளர்ச்சி காணப்பட்டது. தொடக்கப்பள்ளிகள், இடைநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றின் எண்ணிக்கை பல மடங்காகப் பெருகியுள்ளன.

முக்கியக் குறிக்கோள்கள்:

  • தேசிய ஒருமைப்பாடு, சமூக நீதி, சமயசார்பின்மை, சமதர்மப் பொருளாதாரம், மனிதவளப் பயன்பாடு, உணவு உற்பத்தியில் தன்னிறைவு, தொழில்மயமாக்கல், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அனைவருக்கும் தரமான கல்வி போன்ற உயரிய குறிக்கோள்கள் வகுக்கப்பட்டன.
  • இந்தக் குறிக்கோள்களை அடைய கல்வி முறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவர கல்விக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

கல்விக் குழுக்கள்:

  • டாக்டர் ராதாகிருஷ்ணன் கமிஷன் (1948).
  • A. லெட்சுமணசுவாமி முதலியார் தலைமையில் ஒரு குழு (1952).
  • C.S. கோத்தாரி தலைமையில் கமிஷன் (1964).
  • ‘தேசிய கல்விக்கொள்கை’ (1968) உருவாக்கப்பட்டது.

அனைவருக்கும் ஆரம்பக்கல்வி மற்றும் நலத்திட்டங்கள்:

  • இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
  • காமராஜர் தொடக்கக் கல்வி முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தார். அனைத்துக் கிராமங்களிலும் பள்ளிகள் தொடங்கப்பட்டு, குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டது.
  • மாணவர்களைப் பள்ளியில் சேர்க்கவும், இடைநிற்றலைத் தவிர்க்கவும், முழுமையான முன்னேற்றம் அடையவும் சத்துணவுத் திட்டம் (தினசரி உணவுடன் வாரத்திற்கு ஐந்து நாட்கள் முட்டை) மற்றும் இலவசப் பேருந்து வசதி வழங்கப்படுகிறது.
  • கரும்பலகைத் திட்டம் மூலம் ஒவ்வொரு தொடக்கப்பள்ளிக்கும் வகுப்புகள், கரும்பலகைகள், விளையாட்டுப் பொருட்கள், கற்பித்தல் பொருட்கள் வழங்கப்பட்டன.
  • தமிழ்நாடு அரசு, மத்திய அரசுடன் இணைந்து ‘அனைவருக்கும் கல்வித் திட்டத்தை’ செயல்படுத்தி வருகிறது.

பிற கல்வி நலத்திட்டங்கள்:

  • புதிய தொடக்கப்பள்ளிகள் திறப்பு; 300 பேர் வாழும் சிறு குடியிருப்புகளிலும் பள்ளிகள்.
  • ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி.
  • 10ஆம் வகுப்புக்கு மேல் தமிழ்மொழிவழிக் கல்வி பயில்வோருக்கு இலவசக் கல்வி.
  • ஏழை மாணவர்களுக்கு இலவசப் புத்தகங்கள், சீருடை.
  • ஆதிதிராவிடக் குழந்தைகளுக்கு இலவசத் தங்கும் விடுதிகள்.
  • பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் மூலம் உள்ளூர் மக்களின் பங்களிப்பை ஊக்குவித்தல்.
  • பள்ளிச் சிறுவர்களுக்கு இலவச மருத்துவ வசதிகள்.
  • பாடத்திட்டம் மேம்படுத்தப்பட்டு, தற்காலத் தேவைக்கேற்ப கணக்கு, அறிவியல், புவியியல் போன்ற பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.
  • விளையாட்டு, கைவினை ஈடுபாடுகள், அறிவியல் துணைப்பொருட்கள் ஆகியவற்றில் பண ஒதுக்கீடு மற்றும் கண்காட்சிகள்.
  • ஆசிரியர்களின் சம்பள விகிதம் உயர்வு மற்றும் சலுகைகள்.
  • நல்லாசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்குப் பரிசுத்தொகை.

இடைநிலைக் கல்வி மற்றும் உயர்கல்வி:

  • வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு ஏதுவாக கணினிக் கல்வியும் தொழில் கல்வியும் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் ‘அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது.
  • மாணவர்களுக்குக் கட்டணமின்மை, சீருடை, பாடநூல், போக்குவரத்து, பயண அட்டைகள், சைக்கிள், கணினிக் கல்வி போன்றவை இலவசமாக வழங்கப்பட்டன.
  • தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
  • நூலக வசதிகள் மேம்பாட்டுத் திட்டம், கற்பித்தல் கருவிகள் வழங்கல், மொழி ஆய்வகங்கள் (தமிழ், ஆங்கிலம் தெளிவாகத் தெரிந்து கொள்ள).
  • ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை மேம்படுத்த பணியிடைப் பயிற்சி திட்டங்கள், மாநில அளவிலான பயிற்சி நிறுவனங்கள், முன்மாதிரி பள்ளிகள்.
  • கலைத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்வி, மக்கள் தொகைக் கல்வி, வேலைத் திறனளிக்கும் கல்வி, மதிப்புணர்வுக் கல்வி போன்றவை வலியுறுத்தப்படுகின்றன. தாய்மொழி வழியே பாடங்களைக் கற்பிக்கும் முயற்சி.
  • ‘தமிழ் மெல்ல இனிச் சாகும்’ என்ற பாரதியின் எச்சரிக்கை, பிற மொழிச் சரித்திரங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதன் அவசியத்தை உணர்த்தியது.
  • உயர்கல்வியின் இலக்கு இளைஞர்களின் தனித் திறமைகளை வளர்த்து, இந்த நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள அவர்களைத் தயார்படுத்துவதாகும். உலகத்தரம் வாய்ந்த கல்வி வழங்குதல், உள்கட்டமைப்பு மேம்பாடு, இணையவழி மின் ஆளுமை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவித்தல், நலிவடைந்த மாணவர்களுக்கு வாய்ப்பளித்தல் போன்றவை இதன் நோக்கங்கள்.
  • சமுக வளர்ச்சி குறித்து எழுதுக. (அல்லது) பொருள் சார்ந்த சமூக வளர்ச்சியில் தமிழகம் பெற்ற முன்னேற்றம் குறித்து விளக்குக. 

சமூக, பொருளாதார வளர்ச்சி

  • சுதந்திர இந்தியாவில் நிலவி வந்த ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் பொருட்டு பதினோர் ஐந்தாண்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
  • இதன் பயனாகத் தமிழகத்தில் வேளாண்மை மற்றும் கனரகத் தொழில்களில் வளர்ச்சி காணப்பட்டது.
  • மத்திய அரசு நிறுவனங்கள் பல நிறுவப்பட்டன, மின் உற்பத்தி, போக்குவரத்து போன்ற துறைகள் நன்கு வளர்ச்சியடைந்தன.

வேளாண்மை வளர்ச்சி

  • வேளாண்மையே பொருளாதார அமைப்பின் அடிப்படையாகவும், இந்திய மக்களின் முதன்மைத் தொழிலாகவும் விளங்குகிறது.
  • ஐந்தாண்டுத் திட்டங்களில் வேளாண்மைக்கு கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • தமிழகத்தின் பல பகுதிகள் மழையை நம்பியுள்ளன, மரபு வழிப்பட்ட வேளாண்மை தொடர்கிறது.
  • தஞ்சை, திருச்சி, நெல்லை மாவட்டங்கள் வேளாண்மையில் சிறந்து விளங்குகின்றன.
  • சுதந்திரத்திற்குப் பிறகு பவானிசாகர் அணை (1956), அமராவதி அணை (1957), மணிமுத்தாறு அணை (1958), வைகை அணை (1959), ஆழியாறு அணை (1962), சேர்வலாறு அணை (1985) போன்ற பெரிய அணைக்கட்டுகள் கட்டப்பட்டன.
  • நில உச்சவரம்பு சட்டம்: முதலில் 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நில உச்சவரம்பு இருந்தது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அது 15 ஸ்டாண்டர்டு ஏக்கராகக் குறைக்கப்பட்டது.
  • கரும்பு, நெல், பருத்தி, சோளம், கம்பு போன்ற பயிர்களில் ஒட்டு ரகங்கள் உருவாக்கப்பட்டன. இதன் காரணமாகத் தமிழகத்தில் சுமார் 1971க்குள் உணவுத்துறையில் தன்னிறைவு ஏற்பட்டது, மேலும் இந்தியாவிலேயே பசுமைப் புரட்சி கண்ட இரண்டாவது மாநிலமாகத் தமிழகம் விளங்கியது.

தொழில் வளர்ச்சி

  • வேளாண்மையில் 63% மக்கள் ஈடுபட்டபோதிலும், 15% மக்களே கனரகத் தொழில்கள், சிறுதொழில்கள், நடுத்தரத் தொழில்கள் போன்ற வேளாண்மை அல்லாத தொழில்களில் ஈடுபட்டிருந்தனர்.
  • தொழில்துறை நெசவு ஆலைகளைத் தாண்டி சிமெண்ட், உரம், போக்குவரத்து வண்டிகள், டயர் உற்பத்தி போன்ற துறைகளில் விரிவடைந்தது.
  • மத்திய, மாநில அரசுகள் துப்பாக்கித் தொழிற்சாலை, டாங்கி தொழிற்சாலை, இரயில் பெட்டித் தொழிற்சாலை போன்ற புதிய கனரகத் தொழிற்சாலைகளை உருவாக்கின.
  • ஆயிரக்கணக்கான சிறு தொழில்கள் பெருகின. அம்பத்தூர், கிண்டி, ராணிப்பேட்டை, கப்பலூர், அரக்கோணம், மார்த்தாண்டம், திருச்சி, காரைக்குடி, ஒசூர் போன்ற இடங்களில் தொழிற்பேட்டைகள் உருவாயின. இவற்றில் அம்பத்தூரும் கிண்டியும் மிகப்பெரியவையாக விளங்கின.
  • பஞ்சாலைத் தொழில் கோவை, மதுரை, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் சிறந்து விளங்கியது.
  • புதிய வேளாண்மை முறைகளால் சர்க்கரை உற்பத்தியும் பெருகியது, இது கிராமப்புற முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது.
  • டால்மியாபுரம், தாழையூத்து போன்ற இடங்களில் சிமெண்ட் உற்பத்தித் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் 1976இல் தொடங்கப்பட்டது.
  • அசோக் லேலண்ட், ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் போக்குவரத்து ஊர்திகளை உற்பத்தி செய்தன.
  • தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. 1964இல் சென்னையை அடுத்த மாதவரத்தில் முதல் தோல் தொழில்பேட்டை உருவானது.
  • பொதுத்துறை நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அவை பருத்தி துணி, இரும்பு எஃகு, சணல் ஆலை, சர்க்கரை ஆலை, தேயிலைத் தொழில், பொறியியல் தொழில் போன்ற துறைகளில் வியத்தகு வளர்ச்சி அடைந்தன.
  • சிறு தொழில்கள் மின்னணுப் பொருட்கள், நுண்கருவிகள், எந்திரப் பாகங்கள், காலணிகள், விவசாயக் கருவிகள் போன்றவற்றை உற்பத்தி செய்கின்றன. அரசு கடனுதவி மற்றும் தொழில்நுட்ப உதவி அளித்து சிறு தொழில்களை ஊக்குவிக்கிறது.
  • குடிசைத் தொழில்கள் (உள்ளூரில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு வீட்டு உறுப்பினர்களால் வீடுகளிலேயே செய்யப்படுபவை) பட்டுப் பூச்சி வளர்த்தல், மரச்சாமான்கள், தேனீ வளர்ப்பு, மண்பாண்டத் தொழில், பாய் முடைதல், கோழி வளர்ப்பு, பண்ணைத் தொழில், கதர், கைத்தறிப் பொருட்கள் தயாரித்தல் ஆகியவை அடங்கும்.

இந்தியக் கனிமங்கள்

  • நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கனிம வளம் இன்றியமையாதது.
  • இந்தியாவில் நிலக்கரி, இரும்பு, மாங்கனீசு, பாக்ஸைட், மைக்கா ஆகியவை அதிகம் கிடைக்கின்றன. செம்பு, ஈயம், துத்தநாகம், தங்கம் மற்றும் பெட்ரோல் போதிய அளவில் இல்லை.
  • இந்தியப் புவியியல் ஆய்வுத்துறை, இந்திய சுரங்கக்கழகம் போன்ற நிறுவனங்கள் கனிமவளக் கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ளன.
  • உலோக வளங்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றன: 
    • பெருமளவில் பயன்படும் உலோகங்கள்: இரும்புத்தாது, மைக்கா.
    • ஏற்றுமதிக்கான உலோகங்கள்: மாங்கனீசு, பாக்சைட், ஜிப்சம். 1950இல் 22 வகையான உலோகங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 70க்கும் மேற்பட்டவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
    • சுயதேவைகளைப் பூர்த்தி செய்யும் உலோகங்கள்: சோடியம், சோடியம் உப்பு, பாக்சைட், பாஸ்பேட், நிலக்கரி, கண்ணாடி.
    • வெளிநாடுகளைச் சார்ந்துள்ள உலோகங்கள்: நிக்கல், பெட்ரோலியம், துத்தநாகம், பாதரசம், தகரம், பிளாட்டினம், பித்தளை.

எரிசக்தி

  • எரிசக்தியின் உபயோகம் நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இந்தியாவின் எரிசக்தி பெட்ரோலிய எண்ணெய், வாயு, நிலக்கரி, சாணம், எரிவாயு, காற்று ஆகியவற்றிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
  • நன்மைகள்: தொழில்துறை வளர்ச்சி, மக்களுடைய அன்றாட வாழ்க்கை (சமைத்தல், மின்விசிறி இயக்குதல், பொருட்கள் பாதுகாப்பு), போக்குவரத்து மற்றும் விவசாயத் துறைகளில் (டிராக்டர்கள், அறுவடை கருவிகள்) பெரிதும் உதவுகிறது.

கைத்தறித்துறை வளர்ச்சி

  • ஜவுளித் தொழில் இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பதோடு, வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியிலும் பங்களிக்கிறது.
  • தமிழ்நாட்டில் மொத்தம் 5.56 லட்சம் கைத்தறிகள் உள்ளன. அவற்றில் 2.93 லட்சம் கைத்தறிகள் கூட்டுறவு அமைப்பின்கீழ் செயல்படுகின்றன. இவற்றுக்கு 12 கூட்டுறவு நூற்பாலைகள் நூல் விநியோகம் செய்கின்றன.
  • புதுக்கோட்டை, தருமபுரி, எட்டயபுரம், தேனி ஆகிய இடங்களில் புதிய நூற்பாலைகள் கட்டப்பட்டு உள்ளன.
  • நூற்புத் தொழில், கைத்தறி, விசைத்தறி மற்றும் பின்னலாடைத் தொழில் ஆகியவை ஜவுளித் தொழிலில் முக்கியமானவை, இவை கைத்தறி நெசவாளர்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துகின்றன.

கதர், கிராமத் தொழில் வளர்ச்சி

  • தமிழ்நாட்டில் 1,250 கிராமத் தொழில் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இவற்றில் 80,000 கைவினைத் தொழிலாளிகள் ஈடுபட்டுள்ளனர், இதன் மூலம் பல ஆயிரம் கிராமப்புற ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

மத்திய அரசு நிறுவனங்கள்

  • சுதந்திரத்திற்குப் பின் தமிழகத்தில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அவை: இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ், இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், பாரத கனரகத் தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், உரத்தொழிற்சாலை, எஃகுத் தொழிற்சாலை, பாய்லர் துணைத் தொழிற்சாலை, ஆவடி டாங்கித் தொழிற்சாலை, துப்பாக்கித் தொழிற்சாலை ஆகியவை குறிப்பிடத்தக்கன.

மின் உற்பத்தி

  • பொருளாதார வளர்ச்சிக்கு மின்சாரம் இன்றியமையாதது. சுதந்திரத்திற்குப் பின் தமிழகத்தில் 1947இல் பெசின் பிரிட்ஜ் அனல்மின் நிலையம், 1948இல் மேட்டூர் நீர்மின் நிலையம் உருவாக்கப்பட்டன.
  • 1957இல் ‘தமிழ்நாடு மின்சார வாரியம்’ தொடங்கப்பட்டது. இவைகளைத் தொடர்ந்து கல்பாக்கம் அனல்மின் நிலையம், தூத்துக்குடி அனல்மின் நிலையம் போன்றவை துவங்கப்பட்டன.

போக்குவரத்து

  • சாலைப் போக்குவரத்து சிறந்த முன்னேற்றம் அடைந்தது. 1947இல் சென்னை நகரப் பேருந்துகள் தேசியமயமாக்கும் திட்டம் தொடங்கி 1948இல் முடிந்தது.
  • 1972இல் பல்லவன் போக்குவரத்துக் கழகம் உருவாகியது. அதன்பின் பல புதிய போக்குவரத்துக் கழகங்கள் உருவாகிப் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுத்தன.
  • புகைவண்டிப் போக்குவரத்தில் தமிழகம் வேகமான வளர்ச்சியைப் பெற்றது. நெல்லை-நாகர்கோயில், திண்டுக்கல்-கரூர், சேலம்-தருமபுரி-பெங்களூரு இடையேயும் புதிய இரயில் பாதைகள் அமைக்கப்பட்டன.
  • தமிழ்நாட்டில் உள்ள மீட்டர்கேஜ் ரயில்பாதைகள் அகலப்பாதைகளாக மாற்றப்பட்டன, இதனால் புகைவண்டியில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது.

தொழில்நுட்ப வளர்ச்சி

  • தகவல் தொழில்நுட்ப முதலீட்டிற்குத் தேவையான அறிவியல், சமூகக் கட்டமைப்பு மற்றும் மனித ஆற்றலைத் தமிழகம் கொண்டுள்ளது.

தேசிய மின் ஆளுமைத் திட்டங்கள் மற்றும் மாநில அரசின் மின் ஆளுமைத் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது.

  • தகவல் தொழில்நுட்ப  வளர்ச்சி குறித்து எழுதுக. (அல்லது) தகவல் தொடர்பு முன்னேற்றம் குறித்து விளக்குக.  

தகவல் தொடர்பு விளக்கம்:

  • தகவல் தொடர்பு என்பது ஓர் இடத்திலிருந்து தொலைவில் உள்ள மற்றொரு இடத்தோடு தகவல்களைப் பரிமாறிக் கொள்ளப் பயன்படுத்தும் அமைப்பு மற்றும் அதற்கான கருவிகள் ஆகும்.

தொழில்நுட்பவியல் துறையின் நோக்கங்கள்:

  • குடிமக்களுக்கு அரசின் தகவல்கள் மற்றும் பரிமாற்றங்களை இணையம் வாயிலாக விரைவாக வழங்குதல்.
  • கிராமம், நகர மக்களிடையே உள்ள இடைவெளியை நிரப்புதல்.
  • தமிழ்நாட்டை மின் ஆளுமையில் சிறந்த மாநிலமாக மாற்றுதல்.
  • தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியை கணிசமான அளவுக்கு உயர்த்துதல்.
  • அனைத்து வீடுகளுக்கும் கம்பிவட தொலைக்காட்சி சேவைகளை நியாயமான விலையில் வழங்குதல்.
  • கணினித் தமிழை உயர்நிலைக்கு எடுத்துச் செல்லுதல் மற்றும் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துதல்.

தொழில்நுட்ப துறையின் பயன்கள்:

  • முழுமையான மாற்றத்திற்கான தொடர் இயக்கி, சமமான வளர்ச்சி, புதிய கருவிகள், வேலைவாய்ப்பு உருவாக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிப்பு, விரைவான சேவைகள், நேரம் மற்றும் ஆற்றலைச் சேமித்தல்.
  • டிஜிட்டல் தொழில்நுட்பம்: சமூக கைபேசி, பகுப்பாய்வு, மேகக்கணினியம், இயந்திரக் கற்றல், செயற்கை நுண்ணறிவு, ரோபோ தொழில்நுட்பம், முப்பரிமாண அச்சிடுதல், வங்கி, வணிகம், மருத்துவம், வேளாண்மை, பல்பொருள் இணையம், அனிமேஷன் மற்றும் விளையாட்டு, தரவுப் பகுப்பாய்வு, வணிக நுண்ணறிவு மென்பொருள் போன்ற தற்காலத் துறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

இணையம்:

  • தொலைபேசி கம்பி வடத்தையும் இணைக்கும் கணினி தொழில்நுட்பத்தால் உருவானது ‘இணையம்’.
  • இது மிகப்பெரிய நூலகம் போன்றது, வலைதளப்பக்கங்கள், மின்னஞ்சல், ஒலி, ஒளி, சலனப்படம், பல மொழிகளில் செய்திகள், ஒளிப்படங்கள் போன்ற வசதிகளை வழங்குகிறது.
  • மின்னஞ்சல் மூலம் குறைவான செலவில், விரைவாக, உலகின் பல நாடுகளுக்கும் கடிதங்களை அனுப்ப முடியும். தமிழ் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் மின்னஞ்சல்களை அனுப்பும் வசதி உள்ளது.

தலைமுறைகள் கடந்த தொழில்நுட்பங்கள்:

  • முதல் தலைமுறை கம்பிவழித் தொலைபேசியிலிருந்து, இரண்டாம், மூன்றாம் தலைமுறை செல்பேசிகளும், தற்போது நான்காம் தலைமுறை தொழில்நுட்பமும் பயன்பாட்டில் உள்ளன.
  • செல்பேசி வழியாக இணையம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கின்றன. செயற்கைக் கோள்கள் வழியே நாடு விட்டு நாடு தகவல் பரிமாற்றம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பச் சேவைகள்:

  • தகவல் தொழில்நுட்பச் சேவைகள் வன்பொருள் (hardware) மற்றும் மென்பொருள் (software) என இரு பிரிவுகளைக் கொண்டது. இவை உற்பத்தி, பரிசோதிப்பு, தரக்கட்டுப்பாடு, விற்பனை, பராமரிப்பு, ஆய்வு மற்றும் மேம்பாடு போன்ற உட்பிரிவுகளைக் கொண்டுள்ளன.
  • டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், காக்னிசன்ட் டெக்னாலஜீஸ், விப்ரோ போன்ற இந்திய நிறுவனங்கள் உலகெங்கும் தகவல் தொழில்நுட்பச் சேவைகளை வழங்குகின்றன.
  • அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உட்படப் பல நாடுகளில் உள்ள வங்கி, காப்பீடு, நிதித் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு இந்திய நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பச் சேவைகளை வழங்குகின்றன.
  • வாகனங்கள், எந்திரங்கள், புத்தக வெளியீடு போன்ற உற்பத்தித் துறைகளிலும், வங்கி, காப்பீடு, தொலைதொடர்பு, மருத்துவம் போன்ற சேவைத் துறைகளிலும் தொழில்நுட்ப சேவைகள் வளர்ச்சி பெற்றுள்ளன.

தகவல் தொடர்பில் முன்னேற்றம்:

  • நாம் வாழும் யுகம் ‘தகவல் யுகம்’ ஆகும். தகவல் தொடர்புகள் தனிப்பட்டவை, தொழில் சார்ந்தவை, பொதுவானவை என மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
  • தபால் வழித் தொடர்பு: 1852இல் முதல் தபால் தலை கராச்சியில் வெளியிடப்பட்டது. இந்தியத் தபால் நிலையம் உலகிலேயே மிகப்பெரியது. 1975இல் ‘விரைவுத் தபால் முறை’, 1977இல் செயற்கைக் கோள் மூலம் தகவல் தொடர்பு, 1995இல் கிராமப்புற தபால் காப்பீட்டுத் திட்டம்.
  • தொலைபேசி: 1881-82இல் கொல்கத்தாவில் முதல் சேவை தொடங்கப்பட்டது. 1984இல் ‘தொலைநிலை இயக்க மேம்பாட்டு மையம்’ உருவாக்கப்பட்டது. தனியார் துறை ஊக்குவிக்கப்பட்டு, அலைபேசி பெருமளவில் உருவாயின.
  • வானொலி தகவல் தொடர்பு: 1936இல் ‘அகில இந்திய வானொலி’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தேசிய, மாநில, உள்ளூர் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. பண்பலை வரிசை ஒலிபரப்பு 1977இல் சென்னையில் துவக்கப்பட்டு, தனியார் நிறுவனங்கள் மூலம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குகின்றன.
  • தொலைக்காட்சி: 1959இல் ‘டெல்லி தொலைக்காட்சி மையமாக’ தொடங்கப்பட்டு, 1976 முதல் ‘தூர்தர்சன்’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. செய்திகள், நிகழ்ச்சிகள், கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.
  • பத்திரிக்கை தகவல் தொடர்பு: 1868இல் ‘அமிர்த பஜார்’ பத்திரிக்கை ஆரம்பித்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் – பிரிவு 19 பத்திரிக்கைக்கு சுதந்திரப் பாதுகாப்பு அளிக்கிறது. நடுநிலையோடு செயல்பட்டு மக்களின் குரலாக ஒலிக்கின்றன. தற்போது 101 மொழிகளில் நாளிதழ்கள் வெளியிடப்படுகின்றன, இணையம் மூலம் உலகம் முழுவதும் சென்றடைகின்றன.
  • திரைப்படங்கள் மூலம் தகவல் தொடர்பு: 1931இல் பேசும் திரைப்பட சகாப்தம் தொடங்கியது. கிராபிக்ஸ், 3D அனிமேஷன் மூலம் பல தந்திரக் காட்சிகள் உருவாக்கப்பட்டு, மக்களை நல்வழிக்கு அழைத்துச் செல்லும் சாதனமாகத் திகழ்கின்றன.

இந்தியாவில் தொழில்நுட்ப சேவைகளின் வளர்ச்சி:

  • இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் கணினிப் பாடத்தைப் புகுத்தி ஏராளமான பட்டதாரி இளைஞர்களை உருவாக்கின. ஆங்கிலக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால், இந்தியப் பொறியியல் பட்டதாரிகள் ஆங்கிலத்திலும் போதுமான அறிவு பெற்றிருந்தனர்.
  • வேலைவாய்ப்புகள்: 
    • கணிப்பொறித் துறையில் கற்றுத் தேர்ந்த இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் பெரும் வரவேற்புக் கிடைத்தது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 40 சதவீதம் இந்தியர்கள் பணியாற்றுகின்றனர்.
    • வெளிநாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் கிளைகளை நிறுவி, ஏராளமானோர்க்கு வேலைவாய்ப்பு அளித்தன.
    • தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அயலாக்கச் சேவைகளால், வெளிநாட்டு வேலைகள் இந்திய இளைஞர்களைத் தேடிவரத் தொடங்கின.
  • இந்திய அரசின் நடவடிக்கைகள்: நாஸ்காம் அமைப்பின் பரிந்துரைகளை ஏற்று, 2002ஆம் ஆண்டு அரசு பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இவை பேரழிவு மீட்பு, அலைக்கற்றைப் பகிர்வு, அழைப்புதவி மையங்களுக்கான விதிகள், வருமான வரி விலக்கு, மூலதனப் பொருட்கள் இறக்குமதி சலுகைகள் போன்றவற்றை உள்ளடக்கியது.
  • தமிழ் இணையக் கல்விக்கழகம் குறித்து எழுதுக.

தமிழ் இணையக் கல்விக்கழகம்:

  • நோக்கம்: இணையம் வழியாகத் தமிழ் ஆதாரங்களை (மொழி, இலக்கியம், கலை, பண்பாடு) தமிழ்ச் சமுதாயத்தினருக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் அளிப்பது.
  • நிறுவல்: 18.5.2000இல் தமிழக அரசால் நிறுவப்பட்டு, 16.07.2010இல் ‘தமிழ் இணையப் பல்கலைக்கழகமாக’ இருந்து ‘தமிழ் இணையக் கல்விக்கழகமாக’ பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • செயல்பாடுகள்: அரிச்சுவடி முதல் பட்டப்படிப்பு வரையிலான கல்வித் திட்டங்கள், அரிய அச்சு நூல்கள், செய்தித்தாள்கள், பருவ இதழ்கள் போன்றவற்றை மின்னுருவாக்கம் செய்தல், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவரும் பயன்படுத்தும் வகையில் மின் நூலகம் வடிவமைத்தல், தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளை ஆவணப்படுத்துதல், கணினித் தமிழ் ஆய்வினை ஊக்குவித்தல்.
  • தமிழ் மென்பொருள் உருவாக்கல்: தமிழக அரசின் முகவராகச் செயல்பட்டு, தமிழில் மென்பொருட்களை உருவாக்க நிதியுதவி அளிக்கிறது, மேலும் மென்பொருட்களைச் சோதித்துச் சான்றளிக்கிறது.
  • கல்வித் திட்டங்கள்: மழலைக்கல்வி, இளநிலைத் தமிழியல் பட்டக் கல்வி, தமிழர் தகவலாற்றுப்படை, தமிழ் மின்நிகண்டு, மின்கற்றலுக்கான இணையதளம், மின்நூலகம் உருவாக்குதல், தமிழ்ப் பெருங்களஞ்சியத் திட்டம், தமிழ் மென்பொருள்கள் உருவாக்கம், புதிய பாடத்திட்டங்கள், புதிய கல்வித்திட்டம், மாணவர்களுக்கான குறுஞ்செயலிகள்.

மூன்றாம் பருவம் – அலகு 3- வினாக்களுக்கான விடைகள்

 மூன்றாம் பருவம்

அலகு – 3 – குறுவினாக்கள் மற்றும் விடைகள்

  • ஐரோப்பியர் காலம் 
    • கி.பி. 16 – கி.பி. 20
  • இராபர்ட் டி நொபிலி குறித்து எழுதுக. 
    • இத்தாலியிலிருந்து கி.பி.1606இல் தமிழ்நாட்டிற்கு வந்தார்.
    • தமிழையும் வடமொழியையும் கற்று, தன் பெயரை ‘தத்துவ போதகர்’ என்று மாற்றிக் கொண்டார்.
    • ‘முதல் உரைநடை நூலைத் தமிழில் எழுதினார்’.
  • தத்துவப்போதகர் என்று அழைக்கப்பட்டவர் யார்? 
    • தத்துவப்போதகர் என்று அழைக்கப்பட்டவர் இராபர்ட் டி நொபிலி ஆவார்.
  • இராபர்ட் டி நொபிலி எழுதிய நூல்களைப் பாட்டியலிடுக. 
    •  மந்திர மாலை
    • ஆத்தும நிரணயம்
    • கடவுள் நிர்ணயம்
    • நீதி மாலை
  • ஹென்றிக் பாதிரியார் குறித்து எழுதுக.
    • போர்ச்சுகீசிய நாட்டிலிருந்து தமிழகக் கடற்கரை மக்களுக்குத் தொண்டு புரிய வந்தவர்.
    • முதன் முதலில் தமிழ் எழுத்துக்களால் ‘விவிலியத்தை’ அச்சேற்றியதால் இவர் ‘தமிழ் அச்சின் தந்தை’ என்று போற்றப்படுகிறார்.
    • இயற்றிய நூல்கள்: தம்பிரான் வணக்கம், கிரீசித்தாணி வணக்கம்.
  • வீரமாமுனிவர் குறித்து வரைக.
    • இத்தாலியில் பிறந்த கான்சடன்டைன் ஜோசப் பெஸ்கி, 1710இல் தமிழகம் வந்தார்.
    • ‘சுப்பிரதீபக் கவிராயர்’ என்பவரிடம் தமிழ் கற்று, தன்பெயரை ‘வீரமாமுனிவர்’ என மாற்றிக் கொண்டார்.
    • எழுதிய நூல்கள்:
      • தொன்னூல் விளக்கம்
      • சதுரகராதி
      • பரமார்த்த குரு கதை
      • தேம்பாவணி
  • வீரமாமுனிவர் இயற்றிய நூல்களில் எவையேனும் நான்கினை எழுதுக. 
    • தொன்னூல் விளக்கம்
    • சதுரகராதி
    • பரமார்த்த குரு கதை
    • தேம்பாவணி
  • சுவடி தேடும் சாமியார் என்று அழைக்கப்பட்டவர் யார்? 
    • சுவடி தேடும் சாமியார் என்று அழைக்கப்பட்டவர் வீரமாமுனிவர் ஆவார்.
  • ஜி. யு. போப் பற்றி எழுதுக.
    • 1839இல் தமிழ்நாட்டிற்கு வந்தார்
    • தனது கல்லறையின்மீது ‘இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்’ என்று செதுக்கப்படவேண்டும் என எழுதி வைத்தார்.
    • 1886இல் முதன் முதலாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
    • நாலடியார், புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
  • ஜி. யு. போப் மொழிபெயர்த்துள்ள நூல்களைப் பட்டியலிடுக.
    • திருக்குறள்
    • திருவாசகம்
    • நாலடியார்
    • புறப்பொருள் வெண்பாமாலை
    • புறநானூறு 
  • டச்சுக்காரர்களின் வர்த்தக மையங்கள் யாவை? 
    • பழவேற்காடு 
    • பாட்னா
    • சூரத்
    • காசிம்பஜார்
    • சின்சுரா
  • டேனிஸ்காரர்கள் குறித்து எழுதுக.
    • டென்மார்க் நாட்டைச் சார்ந்த மக்கள் ‘டேனியர்கள்’ (டேனிஸ்காரர்கள்) என்று அழைக்கப்பட்டனர்.
    • கி.பி.1620இல் தரங்கம்பாடியிலும், 1676இல் வங்காளத்தில் உள்ள சீராம்பூரிலும் ‘வாணிப மையங்களை’ ஏற்படுத்தினர்.
  • பிரெஞ்சுகாரர்களின் முதல் வர்த்தக மையம்  எது?
    • சூரத்
  • ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் எப்போது யாரால் தொடங்கப்பட்டது? 
    • நூறு லண்டன் வியாபாரிகள் ஒன்று சேர்ந்து ‘ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி’யை தோற்றுவித்தனர். இக்கம்பெனிக்கு 31.12.1600 இல் இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத் வியாபாரம் செய்வதற்கான அனுமதியை வழங்கினார்.
  • பாளையக்காரர்களின் அதிகார வரம்புகளைப் பட்டியலிடுக.
    • நிதித்துறை
    • நீதித்துறை
    • இராணுவம்
  • திருநெல்வேலி கூடிணைப்பு குறித்து எழுதுக.
    • ஆங்கிலேயரை எதிர்த்து தமிழகத்தில் மானத்தைக் காக்கவேண்டும் என வீரபாண்டியன் எண்ணி, திருநெல்வேலி பாளையக்காரர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரு கூட்டணியை உருவாக்கினார்.
    • இதில் பாஞ்சாலங்குறிச்சி, சாத்தூர், குளத்தூர், நாகலாபுரம், மன்னார் கோட்டை, கோலார் பட்டி, கடல்குடி, ஏழாயிரம் பண்ணை, சென்னல்குடி ஆகிய பாளையங்கள் அடங்கும்.
  • வேலுநாச்சியார் குறித்து எழுதுக.
    • 1746இல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்து வடுகநாதத் தேவருக்கு மகளாகப் பிறந்த வேலுநாச்சியார் பல மொழிகள் கற்று, ஆயுதப்பயிற்சி பெற்றார்.
    • மருது சகோதரர்களின் பெரும் முயற்சியினால் சிவகங்கை மக்களை ஒன்றுதிரட்டி ஓர் ‘எதிர்ப்புப்படையை’ உருவாக்கினர். வேலுநாச்சியார் மருது சகோதரர்களே இப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.
    • ராணி வேலுநாச்சியார் சிவகங்கை சீமையின் முதல் ராணியாக முடிசூட்டப்பட்டார்.
    • இவர் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.
  • மருதுபாண்டியர் குறிப்பு வரைக.
    • கி.பி. 1780 முதல் 1801 வரை சிவகங்கைச் சீமையை ஆண்டவர்கள் மருதுசகோதரர்கள் ஆவார்.
    • சின்னமருது, பெரியமருது என அழைக்கப்படும் இவர்களின் புரட்சிக் கோட்டையாக ‘காளையார் கோவில்’ விளங்கியது.
    • ஆங்கிலேயர்களுக்கு எதிரான புரட்சியில் அனைவரும் இணைந்து செயல்பட மருதுசகோதரர்கள் ஒரு ‘சிவகங்கைக் கூட்டிணைப்பை’ உருவாக்கினர்.
  • திண்டுக்கல் கூடிணைப்பு குறித்து எழுதுக.
    • திண்டுக்கல் கூட்டிணைப்பில் தாராபுரம், தேவதானம், கரூர், கன்னிவாடி, காங்கேயம், கொழுமம், சங்ககிரி, மணப்பாறை ஆகிய பாளையங்கள் இருந்தன.
  • வேலூர் கலகம் குறித்து எழுதுக.
    • ஆங்கிலேயர்கள் இராணுவத்தில் புகுத்திய சில கட்டுப்பாடுகள் (இந்து வீரர்கள் சமயக் குறிகளை இடக்கூடாது, முஸ்லிம் வீரர்கள் தாடி மீசைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்) ராணுவ வீரர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தின. திப்புவின் பிள்ளைகளை ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடத் தூண்டினர்.
    • 9.7.1806இல் வேலூர் கோட்டையில் நடைப்பெற்ற திருமணத்தில் கலந்துகொள்ள வீரர்கள் கூடினர்.
    • நள்ளிரவில் இங்கு கூடியிருந்த வீரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஆங்கிலேயர்களைத் தாக்கி ஜீலை 10ஆம் நாள் கோட்டையைக் கைப்பற்றினர்.
  • வ. உ. சிதம்பரம்பிள்ளை குறிப்பு வரைக.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் என்னும் ஊரில் 5.9.1872இல் பிறந்தார்.
    • ‘செக்கிழுத்த செம்மல்’ என்றும், ‘கப்பலோட்டி தமிழன்’ என்றும் அழைக்கப்பட்டார்.
    • சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தோற்றுவித்து, தூத்துக்குடி – கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்தைத் துவங்கினார்.
  • வ. உ. சிதம்பரம்பிள்ளையின் சிறப்புப்பெயர்களை எழுதுக. 
    • செக்கிழுத்த செம்மல்
    • கப்பலோட்டி தமிழன் 
  • பாரதியார் குறித்து எழுதுக. 
    • எட்டயபுரத்தில் 11.12.1882இல் பிறந்தார்.
    • சுதேசமித்ரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். 1907இல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார்.
    • 1907இல் தமிழ் வாரப் பத்திரிக்கையான ‘இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியரானார். அதே சமயத்தில் ‘பாலபாரதம்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையை வெளியிட்டார்.
  • பாரதியார் நடத்திய  இதழ்களின் பெயர்களை எழுதுக.  
    • இந்தியா
    • பாலபாரதம்
  • திருப்பூர் குமரன் குறித்து எழுதுக.
    • ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலையில் 1904இல் பிறந்தார்.
    • சாகும் தருவாயில் தேசியக் கொடியைக் கையில் ஏந்தியபடி தனது தேசப்பற்றை வெளிப்படுத்தினார்.
    • இவர் தமிழக வரலாற்றில் ‘கொடிகாத்த குமரன்’ என்று போற்றப்படுகிறார்.
  • காமராஜர் குறிப்பு வரைக.  
    • விருதுநகரில் 15.7.1903இல் காமராஜர் பிறந்தார்.
    • 1924இல் ‘வைக்கம் சத்தியாகிரகம்’ போராட்டத்தில் ஈடுபட்டதின் மூலம் சுதந்திரப்போராட்ட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
    • காமராஜர் தமிழக முதலமைச்சராக 9 ஆண்டுகள் பணியாற்றினார்.
    • மதிய உணவுத்திட்டம், புதிய பள்ளிகளைத் திறந்தது, இலவச கல்வி வழங்குதல், வேளாண்மையை மேம்படுத்துதல், கால்வாய்களை வெட்டுதல், அணைகளைக் கட்டுதல் மற்றும் புதிய தொழிற்சாலைகளை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

பெருவினாக்கள்

  • ஐரோப்பியர்களின் இலக்கியப் பணி குறித்து எழுதுக. (அல்லது) ஐரோப்பியர் வரலாறு குறித்து கட்டுரை வரைக.

ஐரோப்பியர் கால வரலாறு

  • இந்தியாவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே வாணிபத் தொடர்பு அலெக்ஸாண்டர் வருகையால் மேலும் வளர்ச்சி அடைந்தது.
  • பட்டு, நறுமணப் பொருள்கள், மஸ்லின் கைத்தறி ஆடைகள், மிளகு, மிளகாய், பட்டை, இஞ்சி, தேங்காய், சர்க்கரை, சாயப்பொருள்கள் போன்றவை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாயின.
  • முக்கிய மூன்று வாணிப வழித்தடங்கள் இருந்தன: 
    • ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா மற்றும் காஸ்பியன் கடல் வழியாக கருங்கடல், தரைப்பகுதி.
    • பாரசீகம் மற்றும் சிரியா வழியாக மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள அலெக்ஸாண்டிரியா.
    • அரபிக்கடல், பாரசீக வளைகுடா மற்றும் செங்கடல் வழியாக கடல்மார்க்கம்.
  • கி.பி.1453இல் ஆட்டோமானிய துருக்கியர்கள் ‘காண்ஸ்டாண்டி நோபிள் நகரத்தைக்’ கைப்பற்றி ஐரோப்பிய வணிகர்களுக்கு இடையூறுத் தந்தனர் மற்றும் வாணிபத்திற்குத் தடைவிதித்தனர்.
  • இதனால் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு புதிய கடல்வழி காணும் முயற்சியில் இறங்கினர்.

ஐரோப்பியர் காலம்

  • கி.பி. 16இல் தொடங்கி கி.பி.20 வரை உள்ள காலப்பகுதி இது.
  • ஐரோப்பியாவில் இருந்து வந்த கிறித்தவர்கள் தமிழ்நாட்டில் சமயப் பிரச்சாரம் செய்யும் நோக்கில் வந்தனர்.
  • தமிழ் எழுத்து வடிவில் இருந்த குறைபாடுகளை நீக்கி தமிழ்மொழிக்கும், தமிழ் உரைநடைக்கும் மிகப்பெரிய தொண்டு செய்தனர்.

அச்சு இயந்திரமும் அச்சேறிய நூல்களும்

  • ‘கார்த்தில்யா’ (லிஸ்பன், 1554) – ‘முதல் தமிழ் நூல்’ ஆகும்; இதில் தமிழ் ஒலிகளைச் குறிக்க உரோமருடைய எழுத்துக்கள் கையாளப்பெற்றிருந்தன.
  • ‘தம்பிரான் வணக்கம்’ (கொல்லம், 1577) – தமிழில் இரண்டாவதாக அச்சேறிய நூல்.
  • ‘கிரிசித்தியாலி வணக்கம்’ (கொச்சி, 1579) – தமிழில் மூன்றாவதாக அச்சேறிய நூல்.

இராபர்ட்-டி-நோபிலி

  • இத்தாலியிலிருந்து கி.பி.1606இல் தமிழ்நாட்டிற்கு வந்தார்.
  • தமிழையும் வடமொழியையும் கற்று, தன் பெயரை ‘தத்துவ போதகர்’ என்று மாற்றிக் கொண்டார்.
  • ‘முதல் உரைநடை நூலைத் தமிழில் எழுதினார்’.
  • இவர் இயற்றிய நூல்களில் சில: ஞானோபதேச காண்டம், மந்திர மாலை, ஆத்தும நிரணயம், சத்திய வேத இலட்சணம், கடவுள் நிர்ணயம், தத்துவ கண்ணாடி, ஏசுநாதர் சரித்திரம்.

ஹென்றிக் பாதிரியார்

  • போர்ச்சுகீசிய நாட்டிலிருந்து தமிழகக் கடற்கரை மக்களுக்குத் தொண்டு புரிய வந்தவர்.
  • முதன் முதலில் தமிழ் எழுத்துக்களால் ‘விவிலியத்தை’ அச்சேற்றியதால் இவர் ‘தமிழ் அச்சின் தந்தை’ என்று போற்றப்படுகிறார்.
  • இயற்றிய நூல்கள்: தம்பிரான் வணக்கம், கிரீசித்தாணி வணக்கம்.
  • இவரது 70 மடல்களின் தொகுதி ‘Documenta Indica’ ஆகும்.
  • ஐரோப்பியருள் முதன் முதலில் தமிழ் கற்றுத் தமிழ் நூலை அச்சேற்றிய பெருமைக்கு உரியவர்.

சீகன்பால்கு

  • ஜெர்மனியில் 10.7.1682இல் பிறந்தார்.
  • தமிழ்நாட்டிற்கு வந்த ‘முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர்’ ஆவார்.
  • ‘தமிழ் மொழியே எனக்கு தாய்மொழியாகிவிட்டது’ என்று பெருமையாகப் பதிவுச் செய்தார்.
  • இந்தியாவில் முதன் முதலாகத் தமிழ்மொழியில் புதிய ஏற்பாட்டினைக் காகிதத்தில் அச்சடித்து நூலாக வெளியிட்டார்.
  • திருக்குறள், தொல்காப்பியம், புறநானூறு, ஆத்திசூடி ஆகியவற்றை ஓலைச்சுவடியில் இருந்து காகிதத்தில் அச்சடித்துப் புத்தகமாக வெளியிட்டார்.
  • தரங்கம்பாடியில் சுமார் 300 நூல்கள் அடங்கிய நூலகத்தை உருவாக்கினார்.
  • பொறையாரில் அச்சகம், காகித ஆலை, மை தயாரிக்கும் தொழிற்சாலை, தமிழ் எழுத்துகள் தயாரிக்கும் கூடம் ஆகியவற்றை உருவாக்கித் தமிழ்நாட்டில் ‘அச்சுப்பண்பாடு’ வளரக் காரணமாக இருந்தார்.
  • தொழிலாளர்களுக்காக முதல் மிஷன் பாடசாலையையும் குழந்தைகள் இல்லத்தையும் நிறுவினார்.
  • இந்தியாவில் பெண் அடிமைத்தனத்தை ஒழிக்கப் பெண்களுக்கெனத் தனியாக ‘முதல் பள்ளிக்கூடத்தை அமைத்தார்’; விதவைகளை ஆசிரியர்களாக்கி ‘சமுதாய புரட்சிக்கு’ வித்திட்டார்.
  • இலத்தீன் மொழியில் தமிழ் இலக்கணம், தமிழ் ஜெர்மன் அகராதி, கொடுந்தமிழ் அகராதி, செந்தமிழ் அகராதி போன்ற நூல்களை இயற்றினார்.
  • இந்திய மொழிகளில் தமிழில் ‘வேதாகமத்தை’ முதன் முதலில் மொழிபெயர்த்து அச்சடித்து நூலாகத் தந்தவர்.
  • ‘இந்தியாவின் அச்சகத் தந்தை’ என போற்றப்படுகிறார்.

வீரமாமுனிவர்

  • இத்தாலியில் பிறந்த கான்சடன்டைன் ஜோசப் பெஸ்கி, 1710இல் தமிழகம் வந்தார்.
  • ‘சுப்பிரதீபக் கவிராயர்’ என்பவரிடம் தமிழ் கற்று, தன்பெயரை ‘வீரமாமுனிவர்’ என மாற்றிக் கொண்டார்.
  • உயிர்எழுத்து மற்றும் உயிர்மெய் எழுத்துக்களில் நெடில் ஓசையை குறிப்பதற்காக ‘ஆ, ஏ’ எனவும், நெட்டெழுத்து கொம்பை மேலே சுழித்தெழுதும் (கே,பே) வழக்கத்தையும் உண்டாக்கினார். இவர் செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தங்கள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன.
  • ‘தொன்னூல் விளக்கம்’ என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார்.
  • ‘முதல் தமிழ் அகரமுதலி’யான தமிழ்-லத்தீன் அகராதியை உருவாக்கினார்.
  • ‘சதுரகராதி’ உருவாக்கி நிகண்டுக்கு ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தார்.
  • பரமார்த்த குரு கதை, தேம்பாவணி உள்ளிட்ட நூல்களை இயற்றினார்.
  • பேச்சு வழக்குத் தமிழிலும் உரைநடை எழுதியதால் ‘தமிழ் உரைநடையின் தந்தை’ என அழைக்கப்பட்டார்.
  • பட்டங்கள்: ‘சுவடி தேடும் சாமியார்’, ‘தமிழ் அகராதியின் தந்தை’, ‘செந்தமிழ் தேசிகர்’.

பெப்ரிஷியஸ்

  • ஜெர்மனியிலிருந்து 1740இல் இந்தியாவிற்கு வந்தார்.
  • தமிழகத்தில் 50 ஆண்டுகள் அருட்பணி புரிந்த பன்மொழிப் புலவர்.

டாக்டர் கால்டுவெல்

  • அயர்லாந்து நாட்டில் 7.5.1814இல் பிறந்தார்.
  • 1838இல் சென்னைக்கு வந்து தமிழகத்தின் இடையன்குடியில் மதப்பணியை மேற்கொண்டார்.
  • 50 ஆண்டு காலம் மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டு, திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலை நிறுத்தினார்.
  • திருநெல்வேலியில் அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுப் பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும் ஈமத்தாழிகள், நாணயங்கள் ஆகியவற்றையும் வெளிக் கொணர்ந்தார்.
  • பாண்டிய நாட்டின் ‘மீன் சின்னம்’ பொறித்த தங்கக் காசுகளைக் கண்டறிந்தார்.
  • ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ உள்ளிட்ட நூல்களை இயற்றினார்.

ஜி.யு. போப்

    • கனடாவில் 24.4.1820 இல் பிறந்தார்.
    • 1839இல் தமிழ்நாட்டிற்கு வந்தார்; 8 மாதங்களிலேயே தமிழை நன்குக் கற்றார்.
    • இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார்.
    • இவரது கடைசி விருப்பமாக, கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும்போது தான் மொழிபெயர்த்து வெளியிட்ட ‘திருக்குறள் மற்றும் திருவாசகத்தையும்’ உடன் வைக்கவேண்டும்; தனது கல்லறையின்மீது ‘இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்’ என்று செதுக்கப்படவேண்டும் என எழுதி வைத்தார்.
    • ‘Elementary Tamil Grammar’ என்ற தமிழ் இலக்கணத்தை மூன்று பாகமாக எழுதி உள்ளார்.
    • தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றையும், ஆங்கிலம்-தமிழ் அகராதி ஒன்றையும் வெளியிட்டார்.
    • 1886இல் முதன் முதலாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
    • நாலடியார், புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு, திருவருட்பயன் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
    • இவரது திருவாசக மொழிபெயர்ப்பு சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது.
    • ‘மறைநூற் புலவர்’ என்னும் பட்டம் பெற்றார்.
  • டச்சுக்காரர்கள் குறித்து எழுதுக.

டச்சுக்காரர்கள்

  • போர்ச்சுகீசியர்களைத் தொடர்ந்து இந்தியாவிற்கு வருகைப் புரிந்தனர்.
  • ‘நெதர்லாந்து ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனி’ 1602ல் தொடங்கப்பட்டது.
  • மசூலிப்பட்டினத்தில் அவர்களின் வர்த்தக மையத்தை நிறுவினர்.
  • போர்ச்சுகீசியரிடமிருந்து அம்பாய்னாவையும் நாகப்பட்டினத்தையும் கைப்பற்றினர்.
  • ஆரம்பத்தில் ‘பழவேற்காடு’ டச்சுக்காரர்களின் தலைநகராக இருந்தது, பின்னர் 1690ல் நாகப்பட்டினத்திற்கு மாற்றினர்.
  • பட்டு, பருத்தி, இண்டிகோ, அரிசி மற்றும் அபினி ஆகியவை டச்சுக்காரர்கள் வர்த்தகம் செய்த பொருள்கள்.
  • கருப்பு மிளகு மற்றும் மற்ற நறுமணப் பொருள்கள்மீதான வியாபாரத்தில் அவர்கள் ஏகபோக உரிமைப் பெற்றிருந்தனர்.
  • 1623இல் டச்சுக்காரர்கள் அம்பாய்னாவில் பத்து ஆங்கில வியாபாரிகள் மற்றும் ஒன்பது ஜப்பானியர்களைக் கொன்றனர்.
  • 1759இல் நடைப்பெற்ற ‘பெடரா போரில்’ ஆங்கிலேயர்கள் டச்சுக்காரர்களைத் தோற்கடித்தனர்.
  • 1795இல் டச்சுக்காரர்கள் தங்கள் குடியேற்றங்களை முழுமையாக ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தனர்.
  • தமிழ்நாட்டில்: 1613இல் பழவேற்காட்டில் கெல்டிரியா கோட்டையைக் கட்டினர்.
  • நாகப்பட்டினம், புன்னக்காயல், பரங்கிப்பேட்டை, கடலூர் மற்றும் தேவனாம்பட்டினம் ஆகியன டச்சுக்காரர்களின் கோட்டைகள் மற்றும் கைப்பற்றிய பகுதிகள்.
  • பிரெஞ்சுக்காரர் குறித்து எழுதுக. 

பிரெஞ்சுக்காரர்கள்

  • ‘பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம்’ மன்னர் பதினான்காம் லூயியின் அமைச்சரான ‘கால்பர்ட்’ என்பவரால் 1664இல் உருவாக்கப்பட்டது.
  • இந்தியாவிற்கு வருகைத் தந்த ஐரோப்பிய நாடுகளுள் கடைசி ஐரோப்பிய நாடு ‘பிரான்சு’ ஆகும்.
  • கரோன் என்பவர் சூரத்நகரில் முதல் பிரெஞ்சு வணிகமையத்தை நிறுவினார்.
  • மார்ட்டின் என்பவர் 1673இல் பாண்டிச்சேரியில் குடியேற்றத்தை நிறுவினார்; இது இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் வளமான பிரெஞ்சு குடியேற்றமானது.
  • பிரான்காய்ஸ் மாட்டின் பாண்டிச்சேரியில் ‘செயின்ட் லூயிஸ்’ எனப்படும் கோட்டையை கட்டினார்.
  • கல்கத்தாவுக்கு அருகே ‘சந்திரநாகூர்’ என்ற நகரை நிர்மாணித்தது.
  • 1742இல் ‘ஜோசப் பிராங்காய்ஸ் டியூப்ளே’ பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.
  • ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆதிக்கப்போட்டி இந்தியாவில் ‘கர்நாடக போர்’ எனப் பிரதிபலித்தது.
  • இறுதியில் ஆங்கிலேயர்கள் வெற்றிப் பெற்று இந்தியாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினர்; பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறினர்.
  • ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி குறித்து எழுதுக.

ஆங்கிலேயர்கள்

  • கி.பி. 1588இல் உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான ‘ஸ்பானிய ஆர்மடா’வை தோற்கடித்து இங்கிலாந்து ஐரோப்பாவில் அதிக கடல் வலிமை பெற்ற நாடாக விளங்கியது.
  • நூறு லண்டன் வியாபாரிகள் ஒன்று சேர்ந்து ‘ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி’யை தோற்றுவித்தனர். இக்கம்பெனிக்கு 31.12.1600 இல் இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத் வியாபாரம் செய்வதற்கான அனுமதியை வழங்கினார்.
  • 1608இல் வில்லியம் ஹாக்கின்ஸ் ஜஹாங்கீரின் அரசவைக்கு வியாபாரம் செய்யக் கோரிய அனுமதி கடிதத்துடன் வருகை புரிந்தார், ஆனால் தோல்வியடைந்தார்.
  • கி.பி. 1615இல் சர்தாமஸ்ரோ என்ற ஆங்கில வியாபாரி ஜஹாங்கீர் அரசவைக்கு வருகைப் புரிந்து இந்தியாவுடன் வியாபாரம் செய்வதற்கான அனுமதியைப் பெற்றார்.
  • குஜராத்தின் முகலாய ஆளுநரான இளவரசர் குர்ரம் ஆங்கிலேயருக்கு வணிக உரிமைகளை வழங்கினார்.
  • 1639இல் சந்திரகிரியின் அரசர் சென்னையை ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனிக்குக் கொடுத்து, ‘புனித ஜார்ஜ் கோட்டை’ கட்டிக் கொள்ள அனுமதி வழங்கினார். இந்திய மண்ணில் ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக்குழு முதன் முதலாகப் பெற்ற நிலப்பகுதி இதுவே ஆகும்.
  • 1652இல் சென்னை ஓர் மாகாணமாக்கப்பட்டது, மீண்டும் 1684இல் மாகாண அந்தஸ்தைப் பெற்றது.
  • 1688இல் சென்னை ஒரு மேயரையும், பத்து உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவையும் கொண்ட நகராட்சி அரசைப் பெற்றிருந்தது.

கர்நாடகப் போர்கள் (1746-1763)

  • ஆங்கிலேயர் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்ட 1746 முதல் 1763 வரை பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராக மூன்று போர்களை நடத்தினர். இவை கர்நாடகப் பகுதியில் நடைப்பெற்றதால் ‘கர்நாடகப் போர்கள்’ என அழைக்கப்பட்டன.

முதல் கர்நாடகப் போர் (கி.பி. 1746-1748)

  • காரணம்: ஐரோப்பாவில் நடைபெற்ற ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் இந்தியாவில் எதிரொலித்தது, இதில் இங்கிலாந்து ஆஸ்திரியாவிற்கும், பிரான்ஸ் அதற்கு எதிராகவும் இருந்தன.
  • நிகழ்வுகள்: 
    • ஃபார்னெட் தலைமையிலான ஆங்கிலக் கப்பற்படை சில பிரெஞ்சுக் கப்பல்களைக் கைப்பற்றியது.
    • ஃபிரான்சின் தீவின் ஆளுநராக இருந்த லா போர்டோனாய் எட்டு போர்க்கப்பல்களுடன் இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்து பைடன் தலைமையிலான ஆங்கிலக் கப்பற்படையைத் தோற்கடித்தார் (6.7.1746).
    • வெற்றிப்பெற்ற பிரெஞ்சுக் கப்பற்படை, பாதுகாப்பு இல்லாமல் இருந்த சென்னையை 15.9.1746இல் கைப்பற்றியது.
    • துய்ப்ளே சென்னையைக் கைப்பற்றி நவாப்பிடமே ஒப்படைப்பதாகக் கூறி அன்வாருதீனை சமாதானப்படுத்தினார். ஆனால், பின்னர் வாக்குறுதியளித்தபடி சென்னையை ஒப்படைக்க மறுத்தார்.
    • நவாப் அன்வாருதீனின் மகன் மாபுஸ்கான் தலைமையிலான 10,000 வீரர்கள் சாந்தோம், அடையாறு போர்களில் பிரெஞ்சுப் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.
  • விளைவு: 
    • 1748இல் ஐரோப்பாவில் இங்கிலாந்தும், பிரான்சும் ஐ.லா.சபேல் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
    • இதன்படி, இந்தியாவில் ஆங்கிலேயரும், பிரெஞ்சுக்காரரும் தங்கள் மோதல்களை முடித்துக்கொண்டனர்.
    • பிரெஞ்சுக்காரர் சென்னையை ஆங்கிலேயருக்குத் திருப்பித் தருவது என்றும், அதற்கு மாறாக வட அமெரிக்காவில் லூயிஸ்பர்க் என்ற இடத்தை பிரெஞ்சுக்காரருக்குக் கொடுப்பது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இரண்டாம் கர்நாடகப் போர் (1749-1754)

  • காரணம்: ஐரோப்பாவில் அமைதி நிலவினாலும், இந்தியாவில் காலனி நாடுகளால் அமைதியாக இருக்க முடியவில்லை. சுதேச அரசர்களை ஒருவருக்கு எதிராக மற்றொருவரைத் தூண்டிவிட்டனர். ஆற்காடு, ஹைதராபாத் அரசுகளில் ஏற்பட்ட வாரிசுரிமைப் போர்களில் துய்ப்ளே பிரான்சின் செல்வாக்கை மேம்படுத்த விரும்பினார்.
  • வாரிசுரிமைப் போர்கள்: 
    • ஹைதராபாத்: 1748இல் நிஜாம் ஆசப்ஜா மரணமடைந்தவுடன், துய்ப்ளே அவரது பேரன் முசாபர் ஜங்கை ஆதரித்தார். ஆங்கிலேயர் எதிர் போட்டியாளரான நாசிர் ஐங்கை ஆதரித்தனர்.
    • ஆற்காடு: துய்ப்ளே முகமது அலிக்கு எதிராக சந்தா சாகிப்பை ஆதரித்தார். ஆங்கிலேயர் முகமது அலியையும் ஆதரித்தனர்.
  • நிகழ்வுகள்: 
    • பிரெஞ்சுக்காரர் நிஜாம், கர்நாடக நவாப் ஆகியோரிடையே ‘முக்கூட்டு உடன்படிக்கை’ ஏற்பட்டது.
    • 1749இல் நடைப்பெற்ற ஆம்பூர் போரில் நவாப் அன்வாருதீன் கொல்லப்பட்டார்.
    • பிரெஞ்சுப் படைகளால் நாசிர் ஐங் கொல்லப்பட்டு, முசாபர் ஐங் 1750 டிசம்பரில் ஹைதராபாத்தின் நிஜாமாக ஆக்கப்பட்டார்.
    • முசாபர் ஜங் கொல்லப்பட்ட பிறகு, பிரெஞ்சுத் தளபதி புஸ்ஸி பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டார்.
  • விளைவு: துய்ப்ளேயின் கனவு சில காலம் நனவாகலாம் என்ற நிலை இருந்தது. அவர் நிஜாமிடமிருந்தும், ஆற்காடு நவாப்பிடமிருந்தும் பெருமளவு பணத்தையும், நிலங்களையும் பெற்றார்.

மூன்றாம் கர்நாடகப் போர் (1756-1763)

  • காரணம்: ஐரோப்பாவில் 1756இல் தொடங்கிய ‘ஏழாண்டுப் போரின்’ விளைவே மூன்றாம் கர்நாடகப் போர் ஆகும்.
  • நிகழ்வுகள்: 
    • பிரெஞ்சு தளபதி கவுண்ட்-டி-லாலி, ஆங்கிலேயரின் புனித டேவிட் கோட்டையைக் கைப்பற்றினார்.
    • தளபதி புஸ்ஸி ஹைதராபாத்தைவிட்டு சென்னைக்கு வந்தபோது, ஆங்கிலேயர்கள் ஹைதராபாத்தைக் கைப்பற்றினர்.
    • புஸ்ஸி மற்றும் கவுண்ட்-டி-லாலி இருவரும் இணைந்து சென்னையைத் தாக்கினர்.
    • ஆங்கில தளபதி சர் அயர்கூட் பிரெஞ்சுப்படையை கி.பி. 1760இல் வந்தவாசி போர்க்களத்தில் தோற்கடித்தார். இது பிரெஞ்சுக்காரர்களுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியது.
    • கி.பி. 1761இல் பிரெஞ்சுத்தளபதி ‘கவுண்ட்-டி-லாலி’ பாண்டிச்சேரியை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார். இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கம் சரிவடைந்தது.
  • விளைவு: 
    • மூன்றாம் கர்நாடகப்போர் கி.பி. 1763இல் பாரிஸ் சமாதான உடன்படிக்கையின்படி முடிவுக்கு வந்தது.
    • பிரெஞ்சுக்காரர்கள் பாண்டிச்சேரி, காரைக்கால், சந்திரநாகூர், மாஹி ஆகிய நிலப்பகுதிகளை திரும்பப்பெற்றனர், ஆனால் அங்குக் கோட்டைகள் கட்டுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
    • பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவில் தங்களின் ஆதிக்கத்தையும், செல்வாக்கையும் ஒருசேர இழந்தனர். ஆங்கிலேயர்கள் வலிமை அடைந்தனர்.
  • வெற்றிக்கான காரணங்கள்: 
    • ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனம் தாய்நாட்டின் ஆதரவினையும், பொருளாதார உயர்நிலையையும் பெற்றிருந்தது.
    • ஆங்கிலேயரின் ‘கடற்படை வலிமை’ அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது.
    • பிரெஞ்சுத் தளபதிகளின் தவறான வியூகம் (சென்னையைக் கைப்பற்ற படையெடுத்தது).
    • பிரான்ஸ் முழுமனதோடு இப்போரில் ஈடுபடமுடியவில்லை, ஆனால் இங்கிலாந்து முழுமையான வெற்றியைப் பெற்றது.
    • இதுவே இந்திய வரலாற்றின் போக்கை மாற்றி, இந்தியாவை ஆளும் சக்தியாக இங்கிலாந்து வலுப்பெற்றது.

வங்காளம்

  • பிளாசிப் போர் (1757):
      • முகலாயப் பேரரசில் வளமான நிலப்பகுதியாக இருந்த வங்காளம் ‘அலிவர்திகான்’ தலைமையில் சுதந்திரமான பேரரசாக உருவானது. அவர் மறைவுக்குப் பிறகு அவரது பேரன் ‘சிராஜ்உத்-தௌலா’ வங்காளத்தின் நவாப் ஆனார்.
      • ஆங்கிலேயர்கள் அனுமதியின்றி கோட்டைகளைக் கட்டி வலிமைப்படுத்தியதை சிராஜ்உத்-தௌலா எதிர்த்தார். பிரான்ஸ் நவாப்பின் ஆணையை ஏற்றுக்கொண்டது, ஆனால் இங்கிலாந்து ஏற்கமறுத்தது.
      • ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனம் வியாபார சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தியதால், சிராஜ்உத்-தௌலா கோபமடைந்தார்.
      • சிராஜ்உத்-தௌலா பெரும்படையுடன் சென்று கல்கத்தாவைக் கைப்பற்றி 146 ஆங்கிலேயப் போர் வீரர்களைச் சிறையில் அடைத்தார்; அதில் 23 பேரே உயிருடன் இருந்தனர். இந்நிகழ்வு ‘கல்கத்தா இருட்டறை துயரச் சம்பவம்’ என அழைக்கப்படுகிறது.
      • இச்செய்தியைக் கேள்வியுற்ற சென்னை நிர்வாகம் தளபதி வாட்சன் மற்றும் ராபர்ட் கிளைவ் ஆகியோரை வங்காளத்திற்கு அனுப்பியது, அவர்கள் கல்கத்தாவைத் திரும்பக் கைப்பற்றினர்.
      • 23.5.1757இல் சிராஜ்உத்-தௌலா, ராபர்ட் கிளைவ் ஆகியோரின் படைகள் கல்கத்தாவிற்கு அருகே உள்ள பிளாசி என்ற இடத்தில் போரிட்டன. இப்போரில் சிராஜ்உத்-தௌலா தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
      • வங்காளத்தில் நிர்வாகியாக ‘மீர்ஜாபரை’ ஆங்கிலேயர்கள் நியமித்தனர், இவர் ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தின் பொம்மையாகச் செயல்பட்டார்.
      • பின்னர், ஆங்கில நிர்வாகம் மீர்ஜாபரை அகற்றிவிட்டு அவரது மருமகன் மீர்காசிம்மை வங்காளத்தின் நவாப்பாக அறிவித்தது.
  • பக்சார் போர் (1764):
    • மீர்காசிம் வங்காள நவாப் ஆன பிறகு இந்திய வியாபாரிகளுக்கு உதவ சுங்கவரியை ரத்துச் செய்தார், இது ஆங்கிலேயர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.
    • ஆங்கிலேயப்படை மீர்காசிம்மைத் தோற்கடித்தது. தோற்கடிக்கப்பட்ட மீர்காசிம் அயோத்தியை ஆட்சிச் செய்த ஷூஜா உத்-தௌலாவிடம் அடைக்கலம் ஆனார்.
    • முகலாய பேரரசர் இரண்டாம் ஷாஆலம், ஷூஜா உத்-தௌலா, மீர்காசிம் ஆகிய மூன்று மன்னர்களும் ஒன்று சேர்ந்து ஆங்கிலேயர்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரப் போரிடத் தயாரானார்கள்.
    • 22.10.1764இல் ‘பக்ஸார்’ என்ற இடத்தில் இந்திய மன்னர்களின் கூட்டுப்படை ஆங்கிலேயப் படையை எதிர்கொண்டன, ஆனால் தோற்கடிக்கப்பட்டன.
    • மீர்காசிம் போர்க்களத்தைவிட்டுத் தப்பி ஓடினார். இரண்டாம் ஷாஆலம், ஷூஜா உத்-தௌலா ஆகியோர் ஆங்கிலேயரிடம் சரணடைந்தனர்.
    • ஆங்கிலேயர்கள் பிளாசியில் பெற்ற வெற்றி பக்ஸாரில் நிலைநிறுத்தப்பட்டது.

மைசூர்ப் போர் (1767-1769)

  • முதல் ஆங்கில – மைசூர் போர்: 
    • ராபர்ட் கிளைவ் வங்காளத்தின் நிர்வாகியாக இருந்தபோது மைசூரில் ஹைதர்அலி வலிமை மிகுந்த ஒரு பேரரசை உருவாக்கி இருந்தார்.
    • ஹைதர்அலியின் வலிமையும், பிரான்ஸ் நாட்டோடு அவர் கொண்டு இருந்த நல்லுறவும் ஆங்கிலேய நிர்வாகத்திற்கு கவலையளித்தன.
    • நிகழ்வுகள்: 
      • கி.பி. 1766இல் ஹைதர்அலிக்கு எதிராக இங்கிலாந்து மராத்தியரோடும், ஹைதராபாத் நிஜாமோடும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டது.
      • ஹைதர்அலி தனது மதிநுட்பத்தினாலும் கையூட்டின் மூலமாகவும் மராட்டியர்களையும், ஹைதராபாத் நிஜாமையும் நண்பர்களாக்கிக் கொண்டார்.
      • கி.பி. 1767இல் ஹைதர்அலி மற்றும் நிஜாமை ஆங்கிலேயர்கள் ‘சங்கமா’ என்ற இடத்தில் தோற்கடித்தனர்.
      • ஹைதர்அலி ஆம்பூர், மங்களூர் ஆகிய இடங்களைக் கைப்பற்றி, பின்னர் கரூர், தஞ்சாவூர், கடலூர், பாராமஹால் ஆகிய இடங்களையும் கைப்பற்றினார்.
      • ஹைதர்அலி சென்னையை முற்றுகையிட்டது ஆங்கிலேயர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
      • ஆங்கிலேயர்கள் கி.பி. 1769இல் ஹைதர்அலியோடு மதராஸ் (சென்னை) அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

இராபர்ட் கிளைவ்

  • கி.பி. 1765இல் வங்காளத்தின் கவர்னராக ராபர்ட் கிளைவ் பொறுப்பேற்றார். அவரது முதல் ஆட்சிக்காலத்தில் வெற்றி வீரராகவும், இரண்டாவது ஆட்சிக்காலத்தில் சிறந்த நிர்வாகியாகவும் விளங்கினார்.
  • நிர்வாகச் சீர்திருத்தங்கள்: 
    • ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி ஊழியர்கள் இந்தியர்களிடம் இருந்து அன்பளிப்பு பெறக்கூடாது என்றார்.
    • ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் வியாபாரம் செய்யக்கூடாது என்றார், மேலும் ஊதியத்தை உயர்த்தினார்.
    • அமைதி காலத்தில் இராணுவ அதிகாரிகளுக்கு இரட்டை ஊக்கத்தொகை அளித்தார்.
    • கம்பெனி ஊழியர்கள் மற்றும் அவர்களின் விதவைகளுக்கு உதவ ‘கிளைவின் நிதி’ ஒன்றை உருவாக்கினார்.
    • முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலமிடமிருந்து வங்காளத்தின் உரிமையியல் மற்றும் குற்றவியல் உரிமைகளைப் பெற்ற பிறகு, வங்காளத்தில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தினார்.
    • இந்த இரட்டை ஆட்சியின்படி, ஆங்கிலேயர்கள் அனைத்து அதிகாரத்தையும் பெற்றனர், ஆனால் எந்தப் பொறுப்பையும் ஏற்கவில்லை; நவாப் அனைத்துப் பொறுப்பையும் ஏற்றார், ஆனால் அதிகாரம் பெறவில்லை.
    • மக்களின் நலனில் அக்கறை காட்டாததால், இந்த இரட்டை ஆட்சி முறை கி.பி. 1772இல் ரத்து செய்யப்பட்டு, வங்காளம் ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவரப்பட்டது.
  • சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு குறித்து விளக்குக.   

பாளையக்காரர்கள்

  • கி.பி. 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் எங்கும் ‘பாளையப்பட்டு ஆட்சிமுறை’ இருந்தது.
  • திருமலை நாயக்கர் காலத்தில் மதுரை நாட்டில் மட்டும் 72 பாளையப்பட்டுகள் இருந்தன. திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் பாளையக்காரர்கள் அதிகம் இருந்தனர்.
  • பாளையப்பட்டு ஆட்சி முறை: 
    • பாளையக்காரர்களின் உள்நாட்டு ஆட்சியில் நாயக்கர் அரசோ, பிற அரசுகளோ தலையிடுவதில்லை.
    • நாட்டுப்படை, காவற்படை வருவாய், நீதி ஆகியவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
    • அரசுக்கோ அல்லது பேரரசுக்கோ உரிய தண்டல் தொகையையும், தேவைப்படும்போது படை உதவியும் அளிப்பது இவர்களுக்குரிய கடமையாக இருந்தது.
  • பாளையங்களின் அதிகார வரம்புகள் 3 வகைகளாகப் பகுக்கப்பட்டிருந்தன: நிதித்துறை, நீதித்துறை, இராணுவம்
    • நிதித்துறை: குடிமக்களிடம் இருந்து வரி வசூலிக்கும் முழுப்பொறுப்பும் பாளையக்காரர்களிடம் இருந்தது. வசூலித்த வரியில் மூன்றில் ஒரு பங்கை மைய அரசுக்கும், மற்றொரு பங்கைத் தம்மிடம் உள்ள இராணுவத்திற்கும், மீதமுள்ள பங்கைச் சொந்த நிர்வாகச் செலவிற்கும் பகிர்ந்து அளிக்குமாறு நாயக்கர் அரசால் நெறிப்படுத்தப்பட்டிருந்தனர்.
    • நீதித்துறை: பாளையப் பகுதிக்குள் கொண்டு வரப்படும் அனைத்து வழக்குகளுக்கும் நீதி வழங்கும் தலைமை நீதிமன்றமாகப் ‘பாளையக்காரர்கள்’ விளங்கினர்.
    • இராணுவம்: பாளையங்கள் தாங்கள் வசூல் செய்யும் வரியில் மூன்றில் ஒரு பங்கை இராணுவத்திற்குச் செலவிடும் உரிமைப்பெற்று இருந்தனர். ஆபத்துக் காலங்களில் படை உதவி அளித்தவர்களுக்கு வரிக்கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
  • பாளையக்காரர் முறை ஒழிப்பு: கி.பி. 1801இல் சென்னை கவர்னர் எடவாட கிளைவ், பாளையக்காரர் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆணை பிறப்பித்தார். பின்னர் பாளையக்காரர்கள் ‘ஜமீன்தார்கள்’ எனப் பெயர் பெற்றனர்.

பூலித்தேவன்

  • மேற்குப்பிரிவில் மறவர் பாளையக்காரர்களுக்கும், தெற்குப்பிரிவில் தெலுங்கு பாளையக்காரர்களுக்கும் தலைவர்களாக நெல்கட்டும் சேவல் பாளையத்தின் பூலித்தேவனும், பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த கட்டபொம்மனும் இருந்தனர்.
  • இவ்விருவருமே நவாப்பிற்குச் செலுத்த வேண்டிய கப்பம் கட்ட மறுத்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
  • 1755இல் மாபஸ்கான், பிரிட்டிஷ் படைத்தளபதி கர்னல் ஹெரானின் தலைமையிலான படைகளின் உதவியோடு பாளையக்காரர்கள் மீது படையெடுத்தார்.
  • பூலித்தேவனும், மறவர் பாளையக்காரர்களும் பிரிட்டிஷாருக்கு எதிராக உறுதியுடன் இருந்தனர்.
  • பூலித்தேவர் மறவர்களை ஒன்று சேர்த்து தனது நிலையை மேலும் வலிமைப்படுத்திக் கொண்டு, பிரிட்டிஷாருக்கு எதிராக மைசூரின் ஹைதர்அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் நாடினார்.
  • பிரிட்டிஷார் பூலித்தேவனையும் அவரது கூட்டாளிகளையும் அடக்கும் பொறுப்பை யூசுப்கானிடம் (கான்சாகிப்) ஒப்படைத்தனர்.
  • பூலித்தேவன் மதுரையைத் தாக்கி மாபஸ்கானிடமிருந்து அதனைக் கைப்பற்றினார். இது ஒரு இந்திய வீரர் பிரிட்டிஷாருக்கு எதிராக நின்று வெற்றிக்கொண்ட மகத்தான ராணுவ வெற்றியாகும்.
  • 1759இல் நெல்கட்டும் சேவல் மீது தாக்குதல் தொடர்ந்தது. 1767ல் அது கர்னல் காம்ப்பெல் என்பவரால் கைப்பற்றப்பட்டது. பூலித்தேவர் அங்கிருந்து தப்பியோடினார்.
  • பிரிட்டிஷ் ஆதிக்கத்தை ஒடுக்க வேண்டும் என்ற தனது எண்ணம் நிறைவேறாமலேயே அவர் இறந்தார். தென்னிந்திய வரலாற்றில் சுதந்திரப் போராட்டத்தைத் துவக்கிய பெருமைக்கு உரியவர் பூலித்தேவனே ஆவார்.

வீரபாண்டிய கட்டபொம்மன்

  • கி.பி. 1790 முதல் 1799 வரை பாஞ்சாலங்குறிச்சியை வீரபாண்டிய கட்டபொம்மன் ஆண்டார்.
  • ராமநாதபுரத்தில் கலெக்டர் ஜான்சன் கட்டபொம்மனை இழிவுப்படுத்திய முறைகளும், கைது செய்ய எடுத்த முயற்சிகளும் அவரைப் புரட்சி செய்யத் தூண்டின.
  • திருநெல்வேலிக் கூட்டிணைப்பு: ஆங்கிலேயரை எதிர்த்து தமிழகத்தில் மானத்தைக் காக்கவேண்டும் என வீரபாண்டியன் எண்ணி, திருநெல்வேலி பாளையக்காரர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரு கூட்டணியை உருவாக்கினார். இதில் பாஞ்சாலங்குறிச்சி, சாத்தூர், குளத்தூர், நாகலாபுரம், மன்னார் கோட்டை, கோலார் பட்டி, கடல்குடி, ஏழாயிரம் பண்ணை, சென்னல்குடி ஆகிய பாளையங்கள் அடங்கும்.
  • ஆங்கிலேயரை எதிர்ப்பதற்கான காரணங்கள்: 
    • பாஞ்சாலங்குறிச்சி விடுதலை வேட்கையுடைய பாளையம்.
    • மருதுபாண்டியர் கூட்டிணைப்பால் தூண்டப்பட்டார்.
    • கலெக்டர் ஜாக்சனின் அடாவடிச் செயல்கள், அத்துமீறல்கள்.
    • ஆங்கிலேயரின் வரிவிதிப்பு முறையும், அதை வசூல் செய்யும் விதமும் பாளையங்களை பயங்கரச் சூழலில் கொண்டுபோய்விட்டது.
    • தாயக மக்கள் கட்டும் நிலவரி அன்னியரிடம் போகக் கூடாது என்ற தீவிர எதிர்ப்பு.
    • ஆங்கிலேய அதிகாரிகள் கட்டபொம்மனை அடிமையெனக் கருதி அவமானப்படுத்தியது.
    • “வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. நாங்கள் ஏன் உங்களுக்கு வரிகட்டவேண்டும்” என்று முழக்கமிட்டார்.
  • பானர்மேன் படையெடுப்பு: 
    • பாளையங்களை ஆங்கில நிர்வாகத்தின்கீழ் கொண்டு வரும் நோக்குடனும், அரசுக்கு எதிராகப் பாளையங்களைக் கூட்டிணைத்த கட்டபொம்மனைத் தண்டிக்கும் எண்ணத்துடனும் ஆங்கில அரசு பாஞ்சாலங்குறிச்சிமீது படையெடுக்கத் தீர்மானித்தது. மேஜர் பானர்மேனுக்கு இந்த அதிகாரம் தரப்பட்டது.
    • 5.9.1799இல் பாஞ்சாலங்குறிச்சிமீது பானர்மேன் படை தொடுத்தான்.
    • ஆங்கிலேயப்படை கோலார்ப்பட்டியில் கட்டபொம்மனிடம் போரிட்டு அவரைக் கைது செய்தது.
    • 16.10.1799இல் கட்டபொம்மன் விசாரிக்கப்பட்டு ‘கயத்தாற்றில்’ தூக்கிலிடப்பட்டார்.

ஊமைத்துரை

  • கட்டபொம்மனின் உறவினர்கள் அனைவரும் ஆங்கிலேயரால் உள்ளாக்கப்பட்டனர். அவர்கள் சிறையில் இருந்த வீரர்கள் தமிழகத்தைக் காக்கச் சிக்கல் ஏதுமின்றித் தப்பித்தனர்.
  • அவர்கள் ஒரு கூட்டமைப்பினை ஏற்படுத்தி ஊமைத்துரையின் தலைமையில் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையினை வலுப்படுத்தினர். இவர்களுக்கு மருதுபாண்டியர்கள் உறுதுணையாக நின்றனர்.
  • மக்காலேயின் படையெடுப்பு: மக்காலே தலைமையில் அனுப்பப்பட்ட படையை ஊமைத்துரையின் படைகள் தாக்கின. மக்காலே தாக்குப் பிடிக்க முடியாமல் பாளையங்கோட்டைக்குப் பின்வாங்கினார். 1801ஆம் ஆண்டு மார்ச் இறுதியிலும், ஏப்ரல் ஆரம்பத்திலும் நடைப்பெற்ற மற்றொரு போரிலும் மக்காலே தோல்வி அடைந்தார்.
  • அக்னு படையெடுப்பு: 1801ஆம் ஆண்டு மே திங்களில் அக்னு என்பாரின் தலைமையில் பெரும்படையொன்று ஊமைத்துரையை தோற்கடிக்க அனுப்பப்பட்டது.
  • போர் பாஞ்சாலங்குறிச்சியில் கடுமையாக நடைப்பெற்றபோது ஊமைத்துரை படுகாயம் அடைந்தார். கிராமப்புற மகளிர் அவரைப் பெரியம்மையால் இறந்த இளைஞன் எனக் கூறி காப்பாற்றினார்கள்.
  • மருதுபாண்டியரை சிறுவயலுக்கு அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளித்தனர். குணம் அடைந்தவுடன் மீண்டும் போருக்கு ஊமைத்துரை தயாரானார். அச்சமயத்தில் மருது சகோதரங்களும், அவர்களது படைகளும் ஆதரவு நல்கினர்.
  • தூக்கிலிடப்படுதல்: ஆங்கிலப்படையின் தலைவர் மேஜர் ஜோன்ஸ் ‘சத்திரப்பட்டி’ போர்க்களத்தில் ஊமைத்துரையைச் சந்தித்தார். போரில் ஊமைத்துரை தோல்வியடைந்து பின்வாங்கினார்.
  • இறுதியில் ‘வத்தலகுண்டு’ என்ற இடத்தில் அவரும், அவரது வீரர்கள் சிலரும் ஆங்கிலேயரால் சிறைப்படுத்தப்பட்டனர்.
  • 16.11.1801இல் பாஞ்சாலங்குறிச்சியில் ஊமைத்துரை தூக்கிலிடப்பட்டார்.

வேலுநாச்சியார்

  • 1746இல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்து வடுகநாதத் தேவருக்கு மகளாகப் பிறந்த வேலுநாச்சியார் பல மொழிகள் கற்று, ஆயுதப்பயிற்சி பெற்றார்.
  • ஆங்கிலேயர் படையெடுப்பு: 1772இல் ஐரோப்பியரின் படையெடுப்பால் கணவரை இழந்த வேலுநாச்சியார், நாட்டை மீட்டெடுக்க விருப்பாட்சியில் தங்கி காத்திருந்தார்.
  • வேலுநாச்சியார் ஹைதர்அலியை சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர்அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார்.
  • மருது சகோதரர்களின் பெரும் முயற்சியினால் சிவகங்கை மக்களை ஒன்றுதிரட்டி ஓர் ‘எதிர்ப்புப்படையை’ உருவாக்கினர். வேலுநாச்சியார் மருது சகோதரர்களே இப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.
  • படை திரட்டல்: 1780ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும், 5000 போர் வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார்.
  • வேலுநாச்சியாரின் படைகள் வைகை ஆற்றின் வழியில் சோழவந்தான், சிலைமான், திருப்புவனம், முத்தனேந்தல் நகரங்களை வென்று, மானாமதுரை நகரத்தில் போர் பயிற்சி பெறாத மக்களின் துணைகொண்டு அன்னிய பரங்கியர்களை வெற்றிக்கொண்டனர்.
  • அதன் பிறகு ராணி வேலுநாச்சியார் சிவகங்கை சீமையின் முதல் ராணியாக முடிசூட்டப்பட்டார்.
  • பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் 25.12.1796இல் மறைந்தார்.
  • இவர் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.

மருதுபாண்டியர்

  • கி.பி. 1780 முதல் 1801 வரை சிவகங்கைச் சீமையை ஆண்டவர்கள் மருதுசகோதரர்கள் ஆவார். சின்னமருது, பெரியமருது என அழைக்கப்படும் இவர்களின் புரட்சிக் கோட்டையாக ‘காளையார் கோவில்’ விளங்கியது.
  • இவர்கள் சிவகங்கை மன்னரான ‘முத்து வடுகநாத தேவர்’ அரசவையில் முதலில் சாதாரண ஊழியர்களாகப் பணியில் சேர்ந்தனர். மன்னர் குடும்பத்தின் நம்பிக்கையினைப் பெற்றனர்.
  • 1712இல் கர்நாடக நவாபின் ஆதிக்கம் நிலைபெற ஆற்காடு ஆங்கிலேயக் கூட்டுப்படையானது சிவகங்கையில் புகுந்தது. அப்போது மருது பாண்டியர்கள் அப்படையை எதிர்த்துப் போர் புரிந்தனர். போர் நடைப்பெற்றபோதே மன்னர் இறந்துவிட்டார்.
  • மன்னர் குடும்பத்தை மருதுபாண்டியர்கள் காப்பாற்றினர். பின்னர் மறைந்த மன்னரின் மனைவி ‘வேலுநாச்சியார்’ ஆட்சிக்கு வந்தார்.
  • வேலுநாச்சியாருக்குப்பின் இளவரசி ‘வெள்ளைச்சி அம்மாள்’ பெரியஉடையத் தேவரை மணந்ததால் அவர் சிவகங்கை மன்னர் ஆனார். அப்போது மருதுபாண்டியர் இருவரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
  • கூட்டிணைப்பு: ஆங்கிலேயர்களுக்கு எதிரான புரட்சியில் அனைவரும் இணைந்து செயல்பட மருதுசகோதரர்கள் ஒரு ‘சிவகங்கைக் கூட்டிணைப்பை’ உருவாக்கினர். 
    • இக்கூட்டமைப்பில் இராமநாதபுரம் பகுதியினைச் சேர்ந்த வேலப்பன், முத்துக்கருப்பதேவர், சிங்கம்செட்டி போன்றோரும், சிவகிரியின் மாப்பிள்ளை வன்னியனும் இடம்பெற்று இருந்தனர்.
    • மருதுபாண்டியரின் இக்கூட்டிணைப்புக்கு கட்டபொம்மனின் ‘திருநெல்வேலி கூட்டிணைப்பும்’, கோபாலனின் ‘திண்டுக்கல் கூட்டிணைப்பும்’ ஆதரவு நல்கின.
    • திருநெல்வேலி கூட்டிணைப்பில் பாஞ்சாலங்குறிச்சி, சாத்தூர், குளத்தூர், நாகலாபுரம், மன்னார் கோட்டை, கோலார் பட்டி, கடல்குடி, ஏழாயிரம் பண்ணை, சென்னல்குடி ஆகிய பாளையங்கள் இருந்தன.
    • திண்டுக்கல் கூட்டிணைப்பில் தாராபுரம், தேவதானம், கரூர், கன்னிவாடி, காங்கேயம், கொழுமம், சங்ககிரி, மணப்பாறை ஆகிய பகுதிகள் இருந்தன.
  • திருச்சிராப்பள்ளி அறிக்கை (1801): 
    • மருதுபாண்டியர் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப்போரில் இந்தியமக்கள் அனைவரும் ஈடுபடவேண்டும் என்ற நோக்கில் இந்த அறிக்கையை வெளியிட்டனர்.
    • அனைத்து மக்களும் விடுதலைப் போரில் ஈடுபட வேண்டும் என்றும், இவ்வறிக்கை ஒவ்வொருவரும் படித்து அனைவருக்கும் எடுத்துக் கூற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
    • ஆங்கிலேயரைச் சுற்றி துதிபாடும் சதிகார சிற்றரசர்களைக் கடுமையாகக் கண்டித்தது.
    • அன்னியர் வரவால் நாடு வளம் சுருங்கி, நலம் கெட்டுப்போவதை எடுத்துக்காட்டி தூங்கும் மக்களைத் தட்டி எழுப்பியது.
    • விளைவுகள்: நாட்டுப்பற்றுக் கொண்ட நல்லோர்கள் ஒன்று சேர்ந்தார்கள். திருப்பத்தூர், திருப்புவனம், திருச்சுழி, பந்தல்குடி ஆகிய இடங்களில் கிளர்ச்சிகள் நடைபெற்று கிளர்ச்சியாளர்கள் வசமாயின. கர்னர் அக்னு தலைமையில் செயல்பட்ட ஆங்கிலப்படை கடுமையான போருக்குப்பின் அப்பகுதிகளை மீட்டது.
    • காளையர் கோயிலில் கடும்போர் ஏற்பட்டது. மருதுபாண்டியரின் கொரில்லாத் தாக்குதலுக்குமுன் ஆங்கிலப்படை தாக்குப் பிடிக்காமல் பின்வாங்கியது.
  • ஆங்கிலேயரின் சூழ்ச்சி: வெள்ளையர் வெற்றிப் பெறுவது கடினம் எனக் கருதி, சிவகங்கை அரசகுடும்பத்தைச் சேர்ந்த உடையத் தேவரை அப்பகுதியின் உன்னராக்குவதாகக் கூறி கிளர்ச்சியாளர்களைப் பிளவடையச் செய்தனர். இதனால் மருதுபாண்டியர் ஆதரவாளர்கள் பிளவுபட்டு, ஆங்கிலேயர்கள் வலிவும் பொலிவும் பெற்றனர்.
  • மருதுபாண்டியர் இறத்தல்: 
    • ஆங்கிலேயரின் பெரும்படை காளையர்கோயில் நோக்கிப் புறப்பட்டது. அக்கோட்டையினை 1801ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் கைப்பற்றினர்.
    • அதே ஆண்டு அதே திங்களில் 19ஆம் நாள் சோழபுரத்தில் மருதுபாண்டியர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இறுதிப்போர் ஏற்பட்டது.
    • மருதுசகோதரர்கள் ஆங்கிலேயரிடம் கைதிகளாயினர். அவர்களோடு ஆதரவாளர்களும் கைதிகளாயினர்.
    • திருப்பத்தூர் கோட்டையில் மருதுபாண்டியர், கோபாலன் உள்பட 73 பேர் தூக்கிலிடப்பட்டனர்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு

  • இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு மிக முக்கிய பங்காற்றியது. பூலித்தேவன், கட்டபொம்மன், மருதுசகோதரர்கள், வேலுத்தம்பி போன்ற தலைவர்கள் தேசப்பற்று, தைரியம், சுயமரியாதை மற்றும் தியாகத்திற்குப் பெயர் பெற்றவர்கள்.
  • ஜி. சுப்பிரமணிய அய்யர், வ.உ.சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிய பாரதி, சி.ராஜகோபாலாச்சாரி, பெரியார் இ.வெ.ராமசாமி, திருப்பூர் குமரன், கே.காமராஜ் போன்ற தலைவர்களும், அறிஞர்களும், சமூக சீர்திருத்தவாதிகளும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.

வேலூர் கலகம் (1805)

  • காரணங்கள்: ஆங்கிலேயர்கள் இராணுவத்தில் புகுத்திய சில கட்டுப்பாடுகள் (இந்து வீரர்கள் சமயக் குறிகளை இடக்கூடாது, முஸ்லிம் வீரர்கள் தாடி மீசைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்) ராணுவ வீரர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தின. திப்புவின் பிள்ளைகளை ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடத் தூண்டினர்.
  • நிகழ்வுகள்: 
    • 9.7.1806இல் வேலூர் கோட்டையில் நடைப்பெற்ற திருமணத்தில் கலந்துகொள்ள வீரர்கள் கூடினர்.
    • நள்ளிரவில் இங்கு கூடியிருந்த வீரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஆங்கிலேயர்களைத் தாக்கி ஜீலை 10ஆம் நாள் கோட்டையைக் கைப்பற்றினர்.
    • திப்புவின் கொடி வேலூர் கோட்டையில் ஏற்றப்பட்டு, திப்புவின் இரண்டாவது மகன் பதேக் ஹைதர் அரசராக அறிவிக்கப்பட்டார்.
    • இருப்பினும் இக்கிளர்ச்சி ஆங்கிலேயர்களால் அடக்கப்பட்டது.

சென்னை மகாஜன சபை

  • சென்னை மாகாணத்தில் மக்கள் உரிமைகளை நிலைநாட்டப் படுத்தப்பட்ட முதல் அமைப்பு ‘சென்னை சுதேசி சங்கம்’ ஆகும். இதனை 1852இல் ஹார்லி, இலஷ்மி நரசுச்செட்டி மற்றும் சீனிவாசப்பிள்ளை ஆகியோர் நிறுவினர்.
  • 1884இல் சென்னை சுதேசிசங்கம், ‘சென்னை மகாஜன சபையுடன்’ இணைக்கப்பட்டது.
  • எஸ்.இராமசாமி முதலியார், பி.அனந்தாசாகுலு, இரங்கய்யா நாயுடு ஆகியோர் இதனை ஏற்படுத்தினர். சென்னை மகாஜன சபையின் முதல் தலைவராக பி.இரங்கையா நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • சென்னை மகாஜன சபை சுதந்திரப் போராட்டத்தில், இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகக் குரல் எழுப்பியது. 1920இல் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்து செயல்பட்டது.
  • 22.4.1930இல் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தை சென்னையில் ஜார்ஜ் டவுன், யானைக்கவுனி, உயர்நீதிமன்றம் மற்றும் கடற்கரைப் பகுதியில் தலைமை ஏற்று நடத்தியது.
  • பல்வேறு அனைத்திந்திய கைத்தறி கண்காட்சி, சுதேசி பொருள்கள் கண்காட்சி மூலம் மக்கள் மனதில் தேசியப்பற்றை வளர்த்தது.
  • 24.10.1896இல் ‘தேசத்தந்தை மகாத்மா காந்தி’ சென்னை மகாஜன சபையில் உரையாற்றினார்.

வ.உ.சிதம்பரம்பிள்ளை

  • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் என்னும் ஊரில் 5.9.1872இல் பிறந்தார். ‘செக்கிழுத்த செம்மல்’ என்றும், ‘கப்பலோட்டி தமிழன்’ என்றும் அழைக்கப்பட்டார்.
  • திருநெல்வேலியில் வழக்குரைஞராகத் தமது வாழ்க்கையைத் தொடங்கினார். வியாபாரச் சங்கம் மற்றும் தொழிலாளர்கள் அமைப்பினை ஊக்குவித்தார்.
  • சுதேசி தர்ம சங்க நெசவாளிகள் சங்கம் மற்றும் சுதேசி கூட்டுறவு அங்காடிகளைத் தூத்துக்குடியில் தோற்றுவித்தார்.
  • பின்னர், சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தோற்றுவித்து, தூத்துக்குடி – கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்தைத் துவங்கினார்.
  • 1905இல் மேற்கொள்ளப்பட்ட வங்காளப் பிரிவினை இவரை அரசியலில் ஈடுபடச் செய்தது. தூத்துக்குடி அருகில் பவள ஆலை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
  • 1907இல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு பாலகங்காதர திலகரை ஆதரித்தார்.
  • இவர்மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவருடைய வலதுகால் சங்கிலியால் கோர்க்கப்பட்டு மாடுபோல் சிறையில் செக்கிழுத்தார்.

சுப்பிரமணிய சிவா

  • திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு கிராமத்தில் பிறந்தார். இவர் ஒரு சிறந்த விடுதலைப் போராட்ட வீரராகவும், சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார்.
  • ஆங்கிலேயருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் 1908இல் சிறையில் இருந்தபோது தொழுநோயால் பாதிக்கப்பட்டார்.
  • ஆங்கில அரசு இவருக்காகவே தொழுநோயாளிகள் இரயிலில் பயணம் செய்யக்கூடாது என்று சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. இதன் விளைவாக சுப்பிரமணிய சிவா உடல் முழுவதும் தொழுநோய் புண்களுடன் தமிழகம் முழுவதும் நீண்ட நடைப் பயணமாகவே சுற்றி வந்தார்.
  • தனது நோயின் காரணமாக 23.7.1925இல் காலமானார்.

சுப்பிரமணிய பாரதியார்

  • திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் 11.12.1882இல் பிறந்தார்.
  • சுதேசமித்ரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். 1907இல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார்.
  • பாலகங்காதர திலகர் மற்றும் அரவிந்தகோஷுடன் சேர்ந்து சுயராஜ்ஜியத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டார்.
  • 1907இல் தமிழ் வாரப் பத்திரிக்கையான ‘இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியரானார். அதே சமயத்தில் ‘பாலபாரதம்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையை வெளியிட்டார்.
  • 1908இல் சென்னையில் மாபெரும் கூட்டத்தை நடத்தி, சுயராஜ்ஜிய நாளை கொண்டாடினார். அவரது பாடல்களான ‘வந்தே மாதரம், அச்சமில்லை அச்சமில்லை, எந்தையும் தாயும்’ போன்றவை அச்சிடப்பட்டு தமிழ் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
  • 1908இல் வ.உ.சி.க்கு எதிராக ஆங்கில அரசு தொடர்ந்த வழக்கில், வ.உ.சி.க்கு ஆதரவாக சாட்சி வழங்கினார். இதனால் ஆங்கில அரசு அவரைக் கைது செய்ய ஆணை பிறப்பித்தது.
  • பாரதியார் பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த புதுவைக்குத் தப்பி ஓடினார். அங்கிருந்து தனது படைப்பினைத் தொடர்ந்து வெளியிட்டார். ஆனால் ஆங்கில அரசு 1909இல் பாரதியின் படைப்புகளுக்குத் தடை விதித்தது.
  • முதல் உலகப்போருக்குப் பிறகு நவம்பர் 1918இல் கடலூருக்கு வந்த சமயத்தில் கைது செய்யப்பட்டார். மூன்று வார காவலுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.
  • சென்னையில் இருந்து ‘சுதேசமித்ரன் பத்திரிகையின்’ ஆசிரியராக மீண்டும் பணியாற்றினார். 11.9.1921இல் காலமானார்.

வாஞ்சிநாதன்

  • திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பணியாற்றினார்.
  • திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ் என்பவர் நான்கு பேரைத் திருநெல்வேலியில் சுட்டுக் கொன்றார்.
  • இக்கொடுஞ்செயலுக்குப் பழிதீர்க்க எண்ணிய வாஞ்சிநாதன், மணியாச்சி புகைவண்டி நிலையத்திற்குச் சென்று 17.6.1911இல் மாவட்ட ஆட்சியர் ஆஷ் அவர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, தாமும் தற்கொலை செய்துகொண்டார்.
  • வாஞ்சிநாதன் இறந்தபின் அவர் சட்டைப்பையில் இருந்த கடிதத்தில், ஆட்சியர் ஆஷின் கொலை சென்னை வரும் அரசர் ஐந்தாம் ஜார்ஜை கொலை செய்வதற்கான ஒத்திகையே ஆகும் என்று எழுதப்பட்டு இருந்தது.

தியாகி விஸ்வநாததாஸ்

  • திரைப்படம் வராத அந்தக்காலத்தில் மேடை நாடகத்தைக் கொண்டு மக்கள் உள்ளங்களில் விடுதலைக் கனலை வளர்த்த நாடக நடிகர் தியாகி விஸ்வநாததாஸ் ஆவார்.
  • இவர் நாடகங்களில் மக்களுக்கு விடுதலை உணர்வைத் தூண்டும் பாடல்கள் பல அமைந்து இருந்தன.
  • ‘கொக்கு பறக்குதடி பாப்பா, வெள்ளைக் கொக்கு பறக்குதடி பாப்பா’ என்ற பாடல் புகழ் பெற்றது.
  • வ.உ.சி. அவர்கள் ஓட்டிய சுதேசிக் கப்பலைக் ‘கதர்க் கப்பல் வருகுதே’ என்று பாடிய பாடல் தேசிய சிந்தனையை ஊட்டுவதாக அமைந்தது.
  • இவர்தம் நாடகங்களின் மூலம் வசூலாகும் பணத்தைச் சுதந்திரப் போராட்டத்துக்கு அர்ப்பணித்து வாழ்ந்தார்.

திருப்பூர் குமரன்

  • ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலையில் 1904இல் பிறந்தார். இவர் மாபெரும் கிளர்ச்சியாளர்.
  • தேசியக்கொடித் தடைக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டு காவல் துறையினரின் தாக்குதலால் உயிர் துறந்தார்.
  • சாகும் தருவாயில் தேசியக் கொடியைக் கையில் ஏந்தியபடி தனது தேசப்பற்றை வெளிப்படுத்தினார்.
  • இவர் தமிழக வரலாற்றில் ‘கொடிகாத்த குமரன்’ என்று போற்றப்படுகிறார்.

எஸ். சத்தியமூர்த்தி

  • காமராசரின் அரசியல் குருவான சத்தியமூர்த்தி ஒரு சிறந்த அரசியல்வாதி, நாட்டுப் பற்றாளர்.
  • 1930இல் இராஜகோபாலாச்சாரியார் தனக்குப்பின் சத்தியமூர்த்தியை அகில இந்தியக் காங்கிரஸ் தமிழ்நாட்டுப் பிரிவின் தலைவர் ஆக்கினார்.
  • 19.8.1887இல் சென்னை மாகாணத்தில் உள்ள திருமயம் என்னும் ஊரில் பிறந்தார். வழக்கறிஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார்.
  • 1939இல் சென்னை மேயராக இருந்தபோது சென்னையில் மிக மோசமான குடிநீர் பஞ்சம் நிலவியது. மக்களின் குடிநீர் பஞ்சத்தைப் போக்குவதற்காக சென்னைக்கு மேற்கே 50கி.மீ தூரத்தில் உள்ள பூண்டி என்னும் இடத்தில் ஒரு குடிநீர்த் தேக்கம் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
  • இக்குடிநீர்த்தேக்கம் பின்னர் காமராசர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சத்தியமூர்த்தியை நினைவுக்கூறும் வகையில் ‘சத்தியமூர்த்தி சாகர்’ என்று இந்த நீர்த்தேக்கத்திற்குப் பெயரிடப்பட்டது.
  • சுதேசி இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற இயக்கங்களில் பங்கேற்று, பலமுறை சிறை சென்றுள்ளார்.
  • இந்திய விடுதலைக்காகவும், சமுதாய நீதிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் தன் வாழ்வையே அர்ப்பணித்த சத்தியமூர்த்தி அவர்கள் 28.3.1943இல் காலமானார்.

இராஜகோபாலாச்சாரி

  • இராஜாஜி என்று புகழப்பெற்ற இராஜகோபாலாச்சாரி 10.12.1878இல் தொரப்பள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். சட்டம் பயின்று வழக்கறிஞராக சேலத்தில் தன் வாழ்க்கையைத் தொடங்கினார்.
  • காந்தியின் தீவிர ஆதரவாளர் ஆனார். 1930இல் வேதாரண்யம் சத்தியாகிரகத்தைத் தலைமை ஏற்று நடத்தினார். திருச்சியில் இருந்து 100 தொண்டர்களுடன் வேதாரணியத்திற்குப் பயணம் மேற்கொண்டு, கடல் நீரில் இருந்து உப்பு காய்ச்சி உப்புச் சட்டங்களை மீறினார்.
  • 1939இல் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் போட்டியிட்டு சென்னை மாகாண முதலமைச்சர் ஆனார். தனது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கை அமுல்படுத்தினார். இந்திமொழியை கட்டாயப் பாடமாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தினார்.
  • இரண்டாவது உலகப்போரின்போது ஆங்கில அரசு இந்தியத் தலைவர்களைக் கலந்தாலோசிக்காமல் இந்தியாவைப் போரில் ஈடுபடுத்தியதைக் கண்டித்து, 1939இல் தனது முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.
  • சுதந்திர இந்தியாவின் ‘முதல் இந்திய கவர்னர் ஜெனரலாக’ பொறுப்பேற்றார். மீண்டும் தமிழக முதலமைச்சராக 1952இல் பதவி ஏற்றார்.
  • தமிழகத்தில் ‘குலக்கல்வித் திட்டத்தை’ அறிமுகப்படுத்தினார், ஆனால் காமராஜர் மற்றும் பெரியார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் 1954இல் தனது முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். பின்னர் காங்கிரசில் இருந்தும் வெளியேறினார்.
  • சுதந்திரக் கட்சியைத் தோற்றுவித்து ‘இளம் இந்தியா’ என்ற பத்திரிகையை நடத்தினார்.
  • ‘சக்கரவர்த்தி திருமகன் (இராமாயணம்), வியாசர் விருந்து (மகாபாரதம்)’ போன்றவை இவர் எழுதிய உரைநடை நூல்கள் ஆகும்.
  • 1955இல் இவருக்கு ‘பாரத ரத்னா விருது’ வழங்கப்பட்டது. இவர் 25.12.1972இல் காலமானார். இவருடைய அரசியல் தந்திர செயல்களால் ‘சாணக்கியர்’ எனப் போற்றப்படுகிறார்.

காமராஜர்

  • விருதுபட்டி என்று அழைக்கப்பட்ட விருதுநகரில் 15.7.1903இல் காமராஜர் பிறந்தார்.
  • 1924இல் ‘வைக்கம் சத்தியாகிரகம்’ போராட்டத்தில் ஈடுபட்டதின் மூலம் சுதந்திரப்போராட்ட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
  • 1930இல் காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கியபோது தமிழகத்தில் இராஜாஜியுடன் சேர்ந்து வேதாரண்ய உப்புச்சத்தியாகிரகத்தை மேற்கொண்டார். இதனால் கைதுச் செய்யப்பட்டு இரண்டாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
  • 1942இல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் ஈடுபட்ட நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார்.
  • 1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது சத்தியமூர்த்தியின் வீட்டில் ‘இந்திய தேசியக் கொடியை’ ஏற்றினார்.
  • காமராஜர் தமிழக முதலமைச்சராக 9 ஆண்டுகள் பணியாற்றினார். மதிய உணவுத்திட்டம், புதிய பள்ளிகளைத் திறந்தது, இலவச கல்வி வழங்குதல், வேளாண்மையை மேம்படுத்துதல், கால்வாய்களை வெட்டுதல், அணைகளைக் கட்டுதல் மற்றும் புதிய தொழிற்சாலைகளை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
  • தேசிய அரசியலில் முக்கியப் பங்கு வகித்தார். இதனால் ‘அரசை உருவாக்குவர்’ எனப் போற்றப்பட்டார்.
  • லால்பகதூர் சாஸ்திரியை 1964இல் இந்தியப் பிரதமராகவும், அவரது மறைவிற்குப் பிறகு இந்திரா காந்தியை 1966இல் இந்தியப் பிரதமராகவும் உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தார்.
  • ‘காமராஜர் திட்டம்’ என்ற திட்டத்தின்படி கட்சிப் பணிக்காகத் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
  • 2.10.1975இல் காலமானார். இவரை மக்கள் அன்போடு ‘பெருந்தலைவர்’ என்றும் ‘கர்மவீரர்’ என்றும் அழைத்தனர்.
  • பாளையக்காரர்கள் ஆட்சிமுறை குறித்து விவரி. 

பாளையக்காரர்கள்

  • கி.பி. 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் எங்கும் ‘பாளையப்பட்டு ஆட்சிமுறை’ இருந்தது.
  • திருமலை நாயக்கர் காலத்தில் மதுரை நாட்டில் மட்டும் 72 பாளையப்பட்டுகள் இருந்தன. திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் பாளையக்காரர்கள் அதிகம் இருந்தனர்.
  • பாளையப்பட்டு ஆட்சி முறை: 
    • பாளையக்காரர்களின் உள்நாட்டு ஆட்சியில் நாயக்கர் அரசோ, பிற அரசுகளோ தலையிடுவதில்லை.
    • நாட்டுப்படை, காவற்படை வருவாய், நீதி ஆகியவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
    • அரசுக்கோ அல்லது பேரரசுக்கோ உரிய தண்டல் தொகையையும், தேவைப்படும்போது படை உதவியும் அளிப்பது இவர்களுக்குரிய கடமையாக இருந்தது.
  • பாளையங்களின் அதிகார வரம்புகள் 3 வகைகளாகப் பகுக்கப்பட்டிருந்தன: நிதித்துறை, நீதித்துறை, இராணுவம்
    • நிதித்துறை: குடிமக்களிடம் இருந்து வரி வசூலிக்கும் முழுப்பொறுப்பும் பாளையக்காரர்களிடம் இருந்தது. வசூலித்த வரியில் மூன்றில் ஒரு பங்கை மைய அரசுக்கும், மற்றொரு பங்கைத் தம்மிடம் உள்ள இராணுவத்திற்கும், மீதமுள்ள பங்கைச் சொந்த நிர்வாகச் செலவிற்கும் பகிர்ந்து அளிக்குமாறு நாயக்கர் அரசால் நெறிப்படுத்தப்பட்டிருந்தனர்.
    • நீதித்துறை: பாளையப் பகுதிக்குள் கொண்டு வரப்படும் அனைத்து வழக்குகளுக்கும் நீதி வழங்கும் தலைமை நீதிமன்றமாகப் ‘பாளையக்காரர்கள்’ விளங்கினர்.
    • இராணுவம்: பாளையங்கள் தாங்கள் வசூல் செய்யும் வரியில் மூன்றில் ஒரு பங்கை இராணுவத்திற்குச் செலவிடும் உரிமைப்பெற்று இருந்தனர். ஆபத்துக் காலங்களில் படை உதவி அளித்தவர்களுக்கு வரிக்கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

பாளையக்காரர் முறை ஒழிப்பு: கி.பி. 1801இல் சென்னை கவர்னர் எடவாட கிளைவ், பாளையக்காரர் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆணை பிறப்பித்தார். பின்னர் பாளையக்காரர்கள் ‘ஜமீன்தார்கள்’ எனப் பெயர் பெற்றனர்.

முதல் பருவம் அலகு 1- வினா விடை

  • தொல்காப்பியம் நூல் அமைப்பு குறித்து எழுதுக. அல்லது தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்களின் பெயர்களை எழுதுக.
    • தொல்காப்பியம் 3 அதிகாரங்களைக் கொண்டது. அவை, எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகியவை ஆகும்.
  • தொல்காப்பியத்தின் சிறப்பு பாயிரத்தை எழுதியவர் யார்?
    • பனம்பாரனார்
  • அகத்தினைக்குரிய முப்பொருள்கள் யாவை?
    • முதற்பொருள் 
    • கருப்பொருள்
    • உரிப்பொருள்
  • அன்பின் ஐந்திணை என்று அழைக்கப்படுபவை…..
    • குறிஞ்சி
    • முல்லை
    • மருதம்
    • நெய்தல்
    • பாலை
  • முதற்சங்கத்தை நிறுவியவர் யார்?
    • காய்சினவழுதி
  • இடைச்சங்கத்தை நிறுவியவர் யார்?
    • வெண்டேர் செழியன்
  • கடைச்சங்கத்தை நிறுவியவர் யார்?
    • முடத்திருமாறன்
  • நம்பி அகப்பொருளினை இயற்றியவர் யார்?
    • நாற்கவிராச நம்பி
  • கற்பு பிரிவின் வகைகள் 
    • கற்பு வாழ்க்கையில் பிரிவு 6 வகைப்படும். அவை,  
      • ஓதற்பிரிவு
      • தூதிற்பிரிவு
      • துணைவயிற்பிரிவு
      • பொருள்வயிற்பிரிவு
      • காவல் பிரிவு
      • பரத்தையிற்பிரிவு
  • புறப்பொருள் வெண்பாமாலையை இயற்றியவர் யார்?
    • ஐயனாரிதனார்
  • வெட்சித்திணை என்றால் என்ன?
    • பகைவரது பசுக்கூட்டத்தைக் கவர்ந்து வருவது வெட்சித்திணை ஆகும்.
  • பாடாண் திணை என்றால் என்ன?
    • பாடப்படக்கூடிய ஆண்மகனது வீரம்,கொடை, வெற்றி ஆகியவற்றை புகழ்ந்து பாடுவது பாடாண் திணை ஆகும்.
  • பொதுவியல் திணை என்றால் என்ன?
    • எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைக் கூறுவது பொதுவியல் திணை ஆகும்.
  • நன்னூல் எழுதியவர் யார்?
    • பவணந்தி முனிவர்
  • நன்னூலின் நூல் அமைப்பு குறித்து எழுதுக.
    • இரண்டு அதிகாரங்களைக் கொண்டது. அவை,
      • எழுத்ததிகாரம்
      • சொல்லதிகாரம்
  • தண்டியலங்காரம் எந்த நூலை அடியொற்றி எழுதப்பட்டது?
    • வடமொழி நூலான காவியதரிசனம் என்ற நூலை அடியொற்றி எழுதப்பட்டது.
  • தன்மையணி என்றால் என்ன?
    • ஒரு பொருளின் இயல்புத்தன்மையை நேரில் கண்டாற்போல உள்ளபடி விளக்குவது தன்மையணி ஆகும்.
  • உவமையணி என்றால் என்ன?
    • ஒருவன் தான் கூறக் கருதியப் பொருளை அதனோடு ஒப்புமை உடைய மற்றொரு பொருளோடு இயைபுபடுத்திக் கூறுவது ‘உவமையணி’ ஆகும்.
  • உருவக அணி என்றால் என்ன?
    • உவமைக்கும், பொருளுக்கும் வேற்றுமையின்றி இரண்டையும் ஒன்றாகக் கூறுவது ‘உருவக அணி’ ஆகும்.
  • தற்குறிப்பேற்ற அணி என்றால் என்ன?
    • இயல்பாக நிகழும் நிகழ்ச்சி மீது கவிஞன் தன்னுடையக் கருத்தை ஏற்றி கூறுவது ‘தற்குறிப்பேற்ற அணி’ ஆகும்.
  • புகழா புகழ்ச்சி அணி என்றால் என்ன?
    • ஒன்றைப் பழிப்பது போல புகழ்ந்து கூறுவது  ‘புகழா புகழ்ச்சி அணி’ ஆகும்.
  • யாப்பருங்கலக்காரிகை நூலினை இயற்றியவர் யார்?
    • அமிர்தசாகரர்
  • எட்டுத்தொகையில் அமைந்துள்ள அகம் சார்ந்த நூல்களின் பெயர்களை எழுதுக.
    • நற்றிணை
    • குறுந்தொகை
    • ஐங்குறுநூறு
    • கலித்தொகை
    • அகநானூறு
  • எட்டுத்தொகையில் அமைந்துள்ள புறம் சார்ந்த நூல்களின் பெயர்களை எழுதுக.
    • புறநானூறு
    • பதிற்றுப்பத்து
  • எட்டுத்தொகையில் அமைந்துள்ள அகம்புறம் சார்ந்த நூலின் பெயரினை எழுதுக.
    • பரிபாடல்
  • நற்றிணை குறிப்பு வரைக.
    • வேறுபெயர் : நற்றிணை நானூறு
    • பாடல் எண்ணிக்கை: 400
    • அடிவரையறை: 9-12
    • தொகுப்பித்தவர்: பாண்டியன் மாறன்வழுதி
  • குறுந்தொகை குறிப்பு வரைக.
    • பெயர்க்காரணம்: குறுகிய அடிகளைக் கொண்ட நானூறு பாடல்களைக் கொண்டுள்ளதால் இப்பெயர் பெற்றது.
    • அடிவரையறை: 4-8
    • பாடல் எண்ணிக்கை: 4௦௦
    • வேறுபெயர்: நல்ல குறுந்தொகை
    • தொகுத்தவர்: பூரிக்கோ 
  • நாழிகை கணக்கர் என்பவர் யார்?
    • இரவில் தூங்காது காலக்கணக்கை ஆராய்பவர்.
  • ஐங்குறுநூறு பெயர்க்காரணம் தருக.
    • பெயர்க்காரணம்: ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் வீதம் குறுகிய அடிகளைக் கொண்ட ஐந்நூறு பாடல்களைக் கொண்டுள்ளமையால் ஐங்குறுநூறு எனும் பெயர் பெற்றது. 
  • அகநானூறு குறிப்பு வரைக.
    • பெயர்க்காரணம்: அகம் சார்ந்த நானூறு பாடல்களை கொண்டு அமைந்துள்ளதால் அகநானூறு எனும் பெயர் பெற்றது.
    • பாடல் எண்ணிக்கை:4௦௦
    • அடிவரையறை: 13- 31
  • புறநானூறு பெயர்க்காரணம் தருக.
    • புறம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்ட நூல் என்பதால் இப்பெயர் பெற்றது.
  • ஆற்றுப்படை நூல்களின் பெயர்களை எழுதுக.
    • திருமுருகாற்றுப்படை
    • பொருநராற்றுப்படை
    • சிறுபாணாற்றுப்படை
    • பெரும்பாணாற்றுப்படை
    • கூத்தராற்றுப்படை
  • பத்துப்பாட்டில் அகம் சார்ந்த நூல்களின் பெயர்களை எழுதுக.
    • குறிஞ்சிப்பாட்டு
    • முல்லைப்பாட்டு
    • பட்டினப்பாலை
  • ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்களை எழுதுக. 
    • சிலப்பதிகாரம்
    • மணிமேகலை
    • சீவகசிந்தாமணி
    • வளையாபதி
    • குண்டலகேசி
  • கம்பராமாயணத்தில் அமைந்துள்ள கண்டங்கள்…
    • 6 கண்டங்கள் உள்ளன.
      • பாலகாண்டம்
      • அயோத்தியா காண்டம்
      • ஆரண்ய காண்டம்
      • கிட்கிந்தா காண்டம்
      • சுந்தர காண்டம்
      • யுத்த காண்டம்
  • சைவ சமயக் குரவர் நால்வரின் பெயர்களை எழுதுக.
    • திருஞானசம்பந்தர்
    • திருநாவுக்கரசர்
    • சுந்தரர் 
    • மாணிக்கவாசகர்
  • தேவாரம் என்பதன் பொருள்
    • கடவுளுக்கு சூட்டப்படும் பாமாலை என்பது பொருள் ஆகும்.
    • முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் என்று அழைக்கப்படுகிறது.
  • பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர்
    • நம்பியாண்டார் நம்பி
  • நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?
    • நாதமுனிகள்
  • முதல் ஆழ்வார்கள் மூவர் பெயரினை எழுதுக.
    • பொய்கையாழ்வார்
    • பூதத்தாழ்வார்
    • பேயாழ்வார்
  • இராவண காவியம் குறிப்பு வரைக.
    • எழுதியவர்: புலவர் குழந்தை
    • இக்காப்பியம் ஐந்து காண்டங்களால் ஆனது. அவை,
      • தமிழகக் காண்டம்
      • இலங்கைக் காண்டம்
      • விந்தக் காண்டம்
      • பழிபுரி காண்டம்
      • இலங்கைக் காண்டம்.

பெருவினாக்கள்

  • தொல்காப்பியம் குறித்து எழுதுக.
    • தொல்காப்பியம்

      • பழந்தமிழ் நூல்களுள் தொன்மையும் முதன்மையும் உடையது தொல்காப்பியம்

      செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு

       முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்

       புலந்தொகுத் தோனே

      என்கிறார் பனம்பாரனார்.

    • தொல்காப்பியம் அமைப்பு 

      • தொல்காப்பியம் எழுத்து, சொல். பொருள் என்ற அதிகாரங்களையும், 9 இயல்களாக மொத்தம் 27 இயல்களை உடை 1610 நூற்பாக்களால் ஆனது.

      எழுத்ததிகாரம் 

      • எழுத்ததிகாரம், நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உறுப்பியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என 9 இயல்களைக் கொண்டது.
      • தமிழ்மொழியின் எழுத்துக்களையும், சார்பெழுத்துக்களையும் பற்றி குறிப்பிடுகின்றது
      • மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்களையும், மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்களையும், இவ்விரு எழுத்துக்களும் பிறக்கும் முறையினையும் பற்றிய செய்திகளைத் தருகிறது.

      சொல்லதிகாரம் 

      • சொல்லதிகாரம், கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என 9 இயல்களைக் கொண்டது.
      • திணை, பால், எண். முதலியனவும், வேற்றுமை வகைகளும், சொல்லின் முதல், ஈறு, இடை சந்தி, சாரியை, விகாரம் என்னும் 6 உறுப்புகளும், பெயர், வினை எச்சங்களும், இடை உரிச்சொற்களும் பற்றி குறிப்பிடுகிறது.
      • இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் சொற்களும் இடம்பெறுகின்றன
      • ஆறுதொகை வகைகளும், 10 வகை எச்சங்களும், சொல்மரபுகளும், அவைகளை ஆளும் முறைகளும் அமைந்துள்ளன.
      • வடசொற்கள் ஏற்றுக்கொள்ளும் முறையை

      வடசொற்கிளவி வடவெழுத்து ஓரீஇ 

      எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே

      என்கிறார் தொல்காப்பியர்

      பொருளதிகாரம் 

      • பொருளதிகாரம், அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என 9 இயல்களைக் கொண்டது.
      • இல்வாழ்க்கைப் பற்றிய செய்திகள் அகப்பொருள் என்றும், மற்ற அனைத்தும் புறப்பொருள் என்றும் அழைக்கப்படுகின்றன
      • ஆணும் பெண்ணும் இணைந்து அன்பால் சேர்ந்து வாழும் வாழ்க்கைஅகவாழ்க்கைஆகும்
      • வீரம் விளங்க கொடையில் சிறந்து புகழ்பெற்று வாழும் வாழ்க்கைபுறவாழ்க்கைஆகும்.
      • குறிஞ்சி .முல்லை மருதம், நெய்தல்,பாலை கைக்கிளை, பெருந்திணை என்னும் ஏழும் அகத்திணைக்கு உரிய ஒழுக்கங்கள் ஆகும்
      • குறிஞ்சி .முல்லை மருதம், நெய்தல், பாலை ஐந்தும்அன்பின் ஐந்திணைஎனப்படும்
      • கைக்கிளை’  என்பதுஒரு தலைக்காமம்ஆகும்
      • பெருந்திணைஎன்பதுபொருந்தாக் காமம்ஆகும்.
      • திருமணத்திற்கு முன்னர் தலைவனும், தலைவியும் பிறர் அறியாமல் சந்தித்து அன்பை வளர்த்துக் கொள்வதுகளவுஆகும்.
      • மணம் நிகழ்ந்தபின் அவர்கள் ஊடியும் கூடியும் வாழும் வாழ்க்கைகற்புஆகும்.
      • தொல்காப்பியம், 1 முதற்பொருள் 2. கருப்பொருள், 3. உரிப்பொருள் என முப்பொருள்பற்றி பேசுகிறது
        • நிலமும் பொழுதும்முதற்பொருள்ஆகும்
        • தெய்வம்,உணவு,விலங்கு, மரம், பறை,தொழில், யாழ் என்பனகருப்பொருள்கள்ஆகும்
        • புணர்ச்சி, பிரிவு, இருத்தல், இரங்கல், ஊடல் என்பன முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்ற திணைக்குரியஉரிப்பொருள்கள்ஆகும்.

      உரை எழுதியோர் 

      • தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர் தெய்வச்சிலையார், கல்லாடர், பேராசிரியர் ஆகியோர் உரை எழுதியுள்ளனர்.
  • முச்சங்கம் பற்றி எழுதுக.
    • சங்கம்

      முதல் சங்கம்

      இடைச் சங்கம்

      கடைச் சங்கம்

      இடம்

      தென் மதுரை

      கபாடபுரம்

      வட மதுரை

      காலம்

      4440

      3700

      1850

      புரந்த அரசர்

      காய்சினவழுதி முதலாக கடுங்கோன் ஈறாக 89 பேர்

      வெண்டேர் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக 59 பேர்

      முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி ஈறாக 49 பேர்

      சங்க உறுப்பினர்

      549

      59

      49

      புலவர்கள்

      4449, அகத்தியர், சிவபெருமான், முருகன், முரஞ்சியூர் முடிநாகராயர்

      3700, அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர் கருங்கோழி, வெள்ளூர் காப்பியன், சிறு பாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக்கோன், கீரந்தை

      449, சிறுமேதாவியார், சேந்தம் பூதனார், அறிவுடை அரனார், பெருங்குன்றூர் கிழார், இளந்திருமாறன்,

      மருதனிளநாகனார், நக்கீரனார்

      நூல்கள்

      அகத்தியம், பரிபாடல், முதுநாரை, முதுகுருகு

      அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம், இசைநுணுக்கம், கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை, அகவல்

      அகத்தியம், தொல்காப்பியம்,

      நெடுந்தொகை,குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, குற்றிசை, பேரிசை

  • நம்பியகப்பொருள் நூல் அமைப்பு குறித்து எழுதுக. 

நம்பியகப் பொருள்

    • கி.பி.13ஆம் நூற்றாண்டில் தோன்றியநம்பி அகப்பொருள்என்ற நூல் அகப்பொருள் இலக்கணத்துக்கு என ஒரு தனிப்பெரும் நூல் ஆகும்.
    • எழுதியவர் : நாற்கவிராச நம்பி

நாற்கவிராச நம்பி 

    • நம்பியகப்பொருளின் ஆசிரியர் நாற்கவிராச நம்பி
    • இயற்பெயர் நம்பி 
    • ஊர் புளிங்குடி 
    • சமண சமயத்தை சார்ந்தவர்
    • தமிழ், வடமொழி இரண்டிலும் வல்லவர்
    • ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி. வித்தாரக்கவி என்னும் நால்வகைப் பாக்களும் புனையும் ஆற்றல் பெற்றவர். அதனால் இவர். “நாற்கவிராசன் என அழைக்கப்பட்டார்
    • நம்பி தம் அகப்பொருள் நூலுக்கு அகப்பொருள் விளக்கம் என்று பெயரிட்டும், இந்நூலுக்கு உரையும் எழுதினார்
    • தம் நூலைப் பாண்டியன் குலசேகரன் அவையில் அரங்கேற்றினார்.

அகச்செய்திகள்

    • ஓர் ஆணுக்கும். ஒரு பெண்ணும் இடையே ஏற்படும் காதல் உணர்வை மையமாகக் கொண்டு அமைவதுஅகப்பொருள் இலக்கணம்ஆகும்

நூலின் அமைப்பு 

    • நாற்கவிராச நம்பியால் இயற்றப்பெற்ற அகப்பொருள் விளக்கம் 
    1. அகத்திணையியல்(116)
    2. களவியல்(54)
    3. வரைவியல்(29)
    4. கற்பியல்(10)
    5. ஒழிபியல்(43) 

என்ற ஐந்து பகுதிகளை உள்ளடக்கியது. 252 நூற்பாக்களைக் கொண்டது ஆகும்.

  • அகத்திணையியல் 
    • அகத்திணையியலில் ஐந்திணைப்பாகுபாடுகள். முதல் கரு. உரிப்பொருள் பற்றியச் செய்திகள் உள்ளன
  • களவியல் 
    • களவின் இலக்கணங்களாக எண்வகைத் திருமணம் பற்றியும். கைக்கிளையின் பாகுபாடுகளாக காட்சி. ஐயம், துணிவு. குறிப்பறிதல் பற்றியச் செய்திகளும் உள்ளன.
  • வரையியல்
    • வரைவியலில் திருமணம் செய்தல், அறத்தொடு நிற்றல், தலைவி, தோழி, செவிலி அறத்தோடு நிற்கும் திறம் பற்றி கூறுகிறது
  • கற்பியல் 
  •  
    • கற்பியலில் இல்லறம் நடத்தும் கிழவன், கிழத்தியின் பாங்கும். கற்பின் சிறப்பும், கற்பிற்குரிய இலக்கணத்தை பற்றியும் பேசுகிறது. இல்வாழ்க்கையில் பிரிவானது,
    1. பரத்தையிற் பிரிவு
    2. ஓதல் பிரிவு
    3. காவல் பிரிவு
    4. தூது பிரிவு
    5. துணைவயிற் பிரிவு
    6. பொருள்வயிற் பிரிவு

என 6 வகைப்படும்.

    • ஒழிபியல் 
    • ஒழிபியலில் அகப்பாட்டு உறுப்புகள் 12 ஆகும். அவை, திணை, கைக்கோள், கூற்று, கேட்போர், இடம், காலம், பயன், முன்னம், மெய்ப்பாடு, எச்சம், பொருள் வகை, துறை ஆகும்
  • புறப்பொருள் வெண்பாமாலை நூல் அமைப்பு குறித்து எழுதுக. (அல்லது) புறத்திணைகளைப் பட்டியலிடுக. (அல்லது) பன்னிரு திணைகள் விவரி.

1. வெட்சி :  ஆக்களைக் கவர்தல்

2.கரந்தைத் திணை : கவர்ந்த பசுக்களைப் பகைவரிடம் இருந்து மீட்பது

3.வஞ்சித் திணை: பகைநாட்டின் மீது போர் தொடுத்து செல்வது  

4.காஞ்சித் திணை : எதிர்த்துப் போர் செய்வது 

5. நொச்சித்திணை : மதில் காப்பது

6. உழிஞைத் திணை : மதிலை முற்றுகையிடுதல் 

7.தும்பைத் திணை : இருவேந்தர் போரிடுவது 

8.வாகைத் திணை : வெற்றியைக் கொண்டாடுவது 

9.பாடாண் திணை : ஆண்மகனது வெற்றி, கொடை, புகழ் ஆகியவற்றை சிறப்பித்துப் பாடுவது 

10.பொதுவியல் : புறத்திணைகளுக்கு எல்லாம் பொதுவாக கூறும் செய்திகள்

11.கைக்கிளை: ஒரு தலைக்காமமே கைக்கிளைஆகும்.

12.பெருந்திணை : பெருந்திணை என்பது பொருந்தாக் காதலை குறிக்கும்.

  • அணி வகைகள் விவரி.
    1. தன்மையணி : ஒரு பொருளின் இயல்புத் தன்மையை நேரில் கண்டாற்போல உள்ளப விளக்குவதுதன்மையணி’.
    2. உவமையணி : ஒருவன் தான் கூறக் கருதியப் பொருளை அதனோடு ஒப்புயை உடைய மற்றொரு பொருளோடு இயைபுபடுத்திக் கூறுவதுஉவமையணி
    3. உருவகயணி : உவமைக்கும் பொருளுக்கும் வேற்றுமையின்றி இரண்டையும் ஒன்றாகக் கூறுவதுஉருவக அணி’.
    4. தீவக அணி : தீவகம் என்பது விளக்கு ஆகும். ஓரிடத்தில் வைக்கப்பட்ட விளக்கு பல இடங்களிலும் உள்ள பொருளை விளக்க காட்டும். அதுபோல ஓரிடத்தில் நின்ற சொல் பல இடங்களிலும் சென்று பொருளை விளக்குவதுதீவக அணி’.
    5. பின்வரு நிலையணி : முன்னர் வந்த சொல்லாவது, பொருளாவது பல இடத்தும் வருமாயின் அதுபின்வருநிலை அணி’.
    6. முன்னவிலக்கணி : கவிஞன் ஒரு பொருளைக் குறிப்பால் மறுத்து மேன்மை தோன்றச் சொல்லுவதுமுன்னவிலக்கணி
    7. ஒட்டணி : கவிஞன் தான் கூறக் கருதிய ஒன்றை நேரே கூறாமல் விடுத்து அதனை ஒப்புமை உடைய பொருளோடு ஒட்டிக் கூறுவான் அதன் வாயிலாகச் சொல்லக் கருதியதைக் குறிப்பாக உணர்த்துவான். ஒட்டிக் கூறுவதால்ஒட்டணிஎன பெயர் பெற்றது.
    8. அதிசய அணி : கவிஞனின் கூற்றானது சான்றோருக்கும் வியப்பைத் தருவதாய் உலக இயல்புக்கு மாறானதாய் அமைவதேஅதிசய அணி’.
    9. தற்குறிப்பேற்ற அணி : இயல்பாக நிகழும் நிகழ்ச்சி ஒன்றின் மேல் கவிஞன் தான் கூறக் கருதிய பொருளை ஏற்றிச் சுவைபட உரைப்பதுதற்குறிப்பேற்ற அணி’.
    10. நிரல்நிறையணி : கவிஞர் தம் செய்யுள்களில் முதலில் சொற்பொருள்களை வரிசைப்படுத்துவர். அவற்றோடு தொடர்புடையவற்றைப் பின்னர் அதே முறையில் பொருள்படுமாறு வரிசைப்படுத்திப் பாடுவர். இவ்வாறு அமைவதேநிரல்நிறை அணிஆகும்.
    11. ஆர்வமொழி அணி : உள்ளத்தின்கண் நிகழும் ஆர்வத்தின் காரணமாக நிகழ்ச்சிகளை மிகுதிபடுத்திக் கூறுவதுஆர்வமொழி அணி’.
    12. தன்மேம்பாட்டுரையணி : ஒருவனுடைய ஆற்றலைப் பிறர் அறியார். அவ்இடங்களில் தன்னுடைய ஆற்றலைத் தானே எடுத்துக் கூறுவர். இவ்வாறு எடுத்து மொழிவதேதன்மேம்பாட்டுரை அணி’.

    13. சிலேடையணி : செய்யுளில் இடம்பெறும் ஒரு சொல்லோ தொடரோ தனித்து நின்றும் பிரிந்து நின்றும் பல பொருள்களைத் தரும். அவ்வாறு பல பொருள்பட அமைவதுசிலேடை அணி’.

    14. மாறுபடு புகழ்நிலையணி : கவிஞன் தான் பழிக்கக் கருதிய பொருளைக் கூறாது மற்றொரு பொருளைப் புகழ்ந்து கூறுவான். இதனைமாறுபடு புகழ்நிலை அணி”.
    15. புகழாப் புகழ்ச்சியணி : ஒன்றைப் பழித்துக் கூறுவது போன்ற தன்மையால் அப்பொருளுக்கு மேம்பாடு தோன்றும் படியாக உரைப்பதுபுகழாப்புகழ்ச்சி அணி’.

    16. வாழ்த்தணி: இவருக்கு இன்னது பொருந்து என்று கவிஞன் தாம் நினைத்தை விரித்துச் சொல்லுவதுவாழ்த்தணி’.

    1.  
  •  பா வகைகள் குறித்து எழுதுக.

வெண்பா

    • ஈற்றடி முச்சீரும் ஏனைய அடி நாற்சீரும் பெற்று வரும்
    • மாமுன் நிரை, விளம் முன் நேர், காய் முன் நேர் என்பனவாகிய வெண்பாத் தளைகளையே பெற்று வரவேண்டும்
    • ஈற்றுச் சீர் ஓரசையாலோ, ஓரசையுடன் குற்றியலுகரமோ பெற்று முடிதல் வேண்டும்
    • இவ்வெண்பா குறைந்தது இரண்டு அடிகளைக் கொண்டது.

ஆசிரியப்பா

    • உரைநடை போன்று அமைவதே ஆசிரியப்பா
    • ஈரசைச் சீர்கள் நான்கு கொண்ட அளவடிகளால் அமைவது இது
    • எதுகை, மோனைகளால் சிறப்புப் பெறுவது. குறைந்தது மூன்றடிகளைப் பெற்று வரும்
    • அடி மிகுதிக்கு எல்லை இல்லை.

கலிப்பா

    • நிரை முதலாகிய வெண்பாவுரிச்சீர் ( புளிமாங்காய், கருவிளங்காய்) மிகுந்துவரும்.
    • கலிப்பாவுக்குரிய கலித்தளைகளுடன் பிறதளைகளும் கலந்துவரும்.
    • கலிப்பாவுக்குரிய அடி அளவடி. அம்போதரங்க உறுப்பில் குறளடி, சிந்தடிகளும், அராக உறுப்பில் நெடிலடி, கழிநெடிலடிகளும் வரும்.
    • கலிப்பாவின் ஓசை, துள்ளல் ஓசை.
    • கலிப்பா ஒன்றையொன்று தொடரும் உறுப்புகளால் ஆகியது. அவை தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறுமாகும்.

வஞ்சிப்பா

    • வஞ்சியுரிச்சீர் எனப்படும் கனிச்சீர்களால் ஆயது வஞ்சிப்பா. சிறுபான்மை காய்ச்சீர்களும் கலந்து வரலாம்.
    • ஒன்றிய வஞ்சித்தளையும் ஒன்றாத வஞ்சித்தளையும் வரும். சிறுபான்மை பிறதளைகளும் வரலாம்.
    • வஞ்சிப்பாவிற்குரிய அடி குறளடியும் சிந்தடியும் ஆகும். அதாவது ஒரு வஞ்சிப்பா முழுமையும் குறளடிகளாய் வரும் ; அல்லது சிந்தடிகளாய் வரும். வஞ்சிப்பாவின் அடிச்சிறுமை மூன்றடி ;பெருமைக்கு வரம்பு இல்லை.
    • வஞ்சியடிகளின் இறுதியில் ஒரு தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் கொண்டு வஞ்சிப்பா முடிவடையும்.
  • வல்லினம் மிகும் இடங்களைப் பட்டியலிடுக.
    • வல்லினம் மிகும் இடங்கள் என்பது ஒரு சொல்லின் இறுதியில் வல்லின மெய்யெழுத்துக்கள் (க், ச், த், ப்) மிகுந்து வரும் இடங்களைக் குறிக்கும்.

சுட்டு, வினா எழுத்துக்களை அடுத்து:

    • , , , , போன்ற சுட்டு மற்றும் வினா எழுத்துக்களை அடுத்து வரும் போது வல்லினம் மிகும்
    • எடுத்துக்காட்டாக, “ + குடம் = அக்குடம்“, “இந்த + பக்கம் = இந்தப்பக்கம்“, “ + கேள்வி = எக்கேள்வி” 

உவமைத் தொகையில்:

    • ஒரு பொருளை வேறொரு பொருளுடன் ஒப்பிட்டு கூறும் போது வல்லினம் மிகும்.
    • எடுத்துக்காட்டாக, “தாமரை + முகம் = தாமரைமுகம்“, “மயில் + தோகை = மயில்தோகை

இரண்டாம் வேற்றுமை உருபு () மறைந்து வரும்போது:

    • இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வரும்போது வல்லினம் மிகும்
    • எடுத்துக்காட்டாக, “பாலை + உண்டான் = பாலைஉண்டான்“, “பழத்தைத் தின்றான் = பழத்தின்றான்

பெயரெச்சம், வினையெச்சம்:

    • பெயரெச்சம் மற்றும் வினையெச்சம் ஆகியவற்றின் பின் வல்லினம் மிகும்
    • எடுத்துக்காட்டாக, “ஓடிய + குதிரை = ஓடியக்குதிரை“, “செய்து + பார்த்தான் = செய்துப்பார்த்தான்

வினைத்தொகை:

    • வினைத்தொகையில் வல்லினம் மிகும்
    • எடுத்துக்காட்டாக, “சுட்டு + களம் = சுட்டுக்களம்“, “வீசு + தென்றல் = வீசுதென்றல்

எதிர்மறைப் பெயரெச்சம்:

    • எதிர்மறைப் பெயரெச்சத்தில் வல்லினம் மிகும்
    • எடுத்துக்காட்டாக, “கண்ட + காட்சி = கண்டகாட்சி“, “செல்லாத + பாதை = செல்லாதப்பாதை

பண்புத்தொகை:

    • பண்புத்தொகையில் வல்லினம் மிகும்
    • எடுத்துக்காட்டாக, “செம்மை + தாமரை = செந்தாமரை“, “வெண்மை + புறா = வெண்புறா” 

உரிச்சொற்றொடர்களில்:

    • உரிச்சொற்றொடர்களில் வல்லினம் மிகும்.
    • எடுத்துக்காட்டாக, “சால + சிறந்தது = சாலச்சிறந்தது“, “தவ + பெரிது = தவப்பேரிது” 

உம்மைத்தொகை:

    • உம்மைத்தொகையில் வல்லினம் மிகும்
    • எடுத்துக்காட்டாக, “இரவும் + பகலும் = இரவுபகலும்“, “கையும் + காலும் = கைகால்கள்

இரட்டைக்கிளவி:

    • இரட்டைக்கிளவி சொற்களில் வல்லினம் மிகும்
    • எடுத்துக்காட்டாக, “சலசல + என்றது = சலசலத்தது“, “படபட + என்றது = படபடத்தது“.
  • வல்லினம் மிகா இடங்களைப் பட்டியலிடுக.
    • வல்லினம் மிகா இடங்கள் என்பவை, தமிழ் இலக்கணத்தில் ஒரு சொல்லின் இறுதியில் உள்ள வல்லின எழுத்துக்கள் (க், ச், ட், த், ப், ற்) அடுத்த சொல்லின் முதலில் வரும்போது மிகாமல், அதாவது தோன்றாமல் வருவது ஆகும்.

எழுவாய் சொற்களை அடுத்து:

    • உதாரணத்திற்கு, “தம்பி படித்தான்என்ற இடத்தில், ‘தம்பிஎன்ற எழுவாய்க்குப் பின் வல்லினம் மிகாது

அது, இது, எது ஆகிய சொற்களை அடுத்து

    • அது சென்றது“, “இது பெரியது“, “எது கிடைத்ததுபோன்ற இடங்களில் வல்லினம் மிகாது

பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றின் பின்

    • எழுதிய பாடல்“, “எழுதாத பாடல்போன்ற இடங்களில் வல்லினம் மிகாது

இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வரும் இடங்களில் (இரண்டாம் வேற்றுமைத்தொகை): 

    • கற்றல் நூல்” (கற்ற நூலை) என்ற இடத்தில், ‘உருபு மறைந்து வந்தாலும், வல்லினம் மிகாது

சுட்டு, வினா சொற்களை அடுத்து:

    • அது பறந்தது“, “எது தங்கம்“, “எவை சென்றனபோன்ற இடங்களில் வல்லினம் மிகாது

, , போன்ற வினா எழுத்துக்களின் பின்

    • உயிரெழுத்துகளின் பின்: “வாழ்க தமிழ்போன்ற இடங்களில், உயிரெழுத்தானவிற்கு பின் வல்லினம் மிகாது
  • எட்டுத்தொகை நூல்கள் குறித்து விவரி.
    • அகம் சார்ந்த நூல்கள்
      1. நற்றிணை
      2. குறுந்தொகை
      3. ஐங்குறுநூறு
      4. கலித்தொகை
      5. அகநானூறு
    • புறம் சார்ந்த நூல்கள்
      1. புறநானூறு
      2. பதிற்றுப்பத்து
    • அகமும் புறமும்  சார்ந்த நூல்
      1. பரிபாடல்

அகம் சார்ந்த நூல்கள்

நற்றிணை

    • நல்ல திணை 
    • பாடுபொருள்: அகம்
    • அடிவரையறை : 9-12
    • பாடல் எண்ணிக்கை: 400
    • பாடிய புலவர்கள்:175
    • வேறுபெயர்: நற்றிணை நானூறு
    • தொகுப்பித்தவர்: பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி

குறுந்தொகை

    • நல்ல குறுந்தொகை
    • பாடுபொருள்: அகம்
    • அடிவரையறை : 4 – 8
    • பாடல் எண்ணிக்கை: 400
    • தொகுத்தவர்: பூரிக்கோ

ஐங்குறுநூறு 

    • ஐந்திணைகளில் ஒவ்வொன்றும் குறைந்த அடிகளைக் கொண்ட நானூறு பாடல்களைக் கொண்டு விளங்குவதால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.
    • பாடுபொருள்: அகம்
    • அடிவரையறை : 3-6
    • பாடல் எண்ணிக்கை: 500
    • பாடிய புலவர்கள்: 5

கலித்தொகை

    • கலிப்பாக்களால் ஆன பாடல்களைக் கொண்டுள்ளமையால் கலித்தொகை எனும் பெயர் பெற்றது.
    • பாடுபொருள்: அகம்
    • பாடல் எண்ணிக்கை: 150
    • பாடிய புலவர்கள்: 5

அகநானூறு

    • அகம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டுள்ளமையால் அகநானூறு எனும் பெயர் பெற்றது.
    • பாடுபொருள்: அகம்
    • அடிவரையறை : 13-31
    • பாடல் எண்ணிக்கை: 400
    • பாடிய புலவர்கள்: 145 

புறம் சார்ந்த நூல்கள்

புறநானூறு

    • புறம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டமையால் புறநானூறு எனும் பெயர் பெற்றது.
    • பாடுபொருள்புறம் 
    • பாடல் எண்ணிக்கை – 400
    • வேறுபெயர்புறம்,புறப்பாட்டு

பதிற்றுப்பத்து

    • பத்து சேரமன்னர்களையும் பத்துப் பத்தாக நூறு பாடல்களில் பாடியுள்ளமையால் பதிற்றுப்பத்து எனும் பெயர் பெற்றது.
    • பாடுபொருள்புறம் 
    • பாடல் எண்ணிக்கை– 100 (கிடைத்தவை 80 )
    • பாடாண் திணையில் மட்டுமே அமைந்த பாடல்களைக் கொண்டுள்ளது.
    • இரும்புக்கடலை என்றும் அழைக்கபடுகிறது.

அகமும் புறமும் சார்ந்த நூல்

பரிபாடல்

    • பரிந்து செல்லும் ஓசையுடைய பாடல்களை கொண்டுள்ளதால் பரிபாடல் எனும் பெயர் பெற்றது.
    • பாடுபொருள்– அகம் புறம் சார்ந்தது.
    • பாடல் எண்ணிக்கை-70(கிடைத்தவை 22)
      • திருமால்-6
      • முருகன்-8
      • வையை-8
    • அடிவரையறை – 25-40
    • பாடிய புலவர்கள்– 13
  • எட்டுத்தொகையில் அமைந்துள்ள அகம் சார்ந்த நூல்களைப் பட்டியலிடுக.

  • எட்டுத்தொகையில் அமைந்துள்ள புறம் சார்ந்த நூல்கள் குறித்து எழுதுக.

புறம் சார்ந்த நூல்கள்

    1. புறநானூறு
    2. பதிற்றுப்பத்து

புறநானூறு

    • புறம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டமையால் புறநானூறு எனும் பெயர் பெற்றது.
    • பாடுபொருள்: புறம் 
    • பாடல் எண்ணிக்கை – 400
    • வேறுபெயர்: புறம்,புறப்பாட்டு

பதிற்றுப்பத்து

    • பத்து சேரமன்னர்களையும் பத்துப் பத்தாக நூறு பாடல்களில் பாடியுள்ளமையால் பதிற்றுப்பத்து எனும் பெயர் பெற்றது.
    • பாடுபொருள்: புறம் 
    • பாடல் எண்ணிக்கை- 100 (கிடைத்தவை 80 )
    • பாடாண் திணையில் மட்டுமே அமைந்த பாடல்களைக் கொண்டுள்ளது.
    • இரும்புக்கடலை என்றும் அழைக்கபடுகிறது.
  • பத்துப்பாட்டு நூல்களைப் பட்டியலிடுக.
    • ஆற்றுப்படை நூல்கள்
      • திருமுருகாற்றுப்படைநக்கீரர்
      • பொருநராற்றுப்படைமுடத்தாமக் கண்ணியார்
      • சிறுபாணாற்றுப்படைநல்லூர் நத்தத்தனார்
      • பெரும்பாணாற்றுப்படை:கடியலூர் உருத்திரங்கண்ணனார்
      • மலைபடுகடாம்பெருங்கெளசிகனார்
    • அகம் சார்ந்த நூல்கள்
      • முல்லைப்பாட்டு : நப்பூதனார்
      • குறிஞ்சிப்பாட்டுகபிலர்
      • பட்டினப்பாலைகடியலூர் உருத்திரங்கண்ணனார்
    • புறம் சார்ந்த நூல்கள்
      • திருமுருகாற்றுப்படைநக்கீரர்
      • பொருநராற்றுப்படைமுடத்தாமக் கண்ணியார்
      • சிறுபாணாற்றுப்படைநல்லூர் நத்தத்தனார்
      • பெரும்பாணாற்றுப்படை:கடியலூர் உருத்திரங்கண்ணனார்
      • மலைபடுகடாம்பெருங்கெளசிகனார்
      • மதுரைக்காஞ்சி: மாங்குடி மருதனார்
    • அகம் புறம் சார்ந்த நூல்
      • நெடுநல்வாடை
    • பத்துப்பாட்டில் மிகச் சிறிய பாட்டு 103 அடிகளைக் கொண்டது. மிக நீண்டது 782 அடிகளைக் கொண்டது.

திருமுருகாற்றுப்படை

    • பத்துப்பாட்டுக்குக் கடவுள் வாழ்த்துப் போல அமைந்தது திருமுருகாற்றுப்படை.
    • இது 317 அடிகள் கொண்டது
    • முருகன் அருள் பெற்ற ஒருவன், அதைப் பெற விரும்பும் இன்னொருவனை முருகப் பெருமானிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது.
    • இயற்றியவர் நக்கீரர்
    •  இதற்குப் புலவராற்றுப் படை என்றும் ஒரு பெயர் உண்டு.

பொருநராற்றுப்படை

    • சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாட்டுடைத் தலைவன் ஆவார்.
    • இயற்றியவர்முடத்தாமக் கண்ணியார் 
    • இப்பாட்டு 248 அடிகள் கொண்டது.
    • போர்க்களம் பாடும் பொருநன் ஒருவன் (கூத்தன்) தனக்குப் பரிசளித்த கரிகாலனிடம் இன்னொரு பொருநனை ஆற்றுப்படுத்துவதாக இயற்றப்பட்டது இது.

பெரும்பாணாற்றுப் படை

    • இயற்றியவர்கடியலூர் உருத்திரங்கண்ணனார் 
    • பாட்டுடைத் தலைவன்காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன்.
    •  500 அடிகள் கொண்டது
    • பேரியாழை வாசிக்கும் பாணன் ஒருவன், தன்போல் இன்னொரு பாணனைத் தனக்குப் பரிசளித்த வள்ளலான இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டதாதலால் பெரும்பாணாற்றுப் படையாயிற்று.

சிறுபாணாற்றுப் படை

    • இயற்றியவர்இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
    • பாட்டுடைத் தலைவன்ஓய்மான் நாட்டை ஆண்ட நல்லியக்கோடன்
    • இது 269 அடிகள் கொண்டது.
    • சீறியாழை (சிறிய யாழ்) வாசிக்கும் பாணன் ஒருவனை, நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டமையின் இப்பெயர் பெற்றது.

மலைபடுகடாம்(கூத்தராற்றுப்படை)

    • இயற்றியவர்இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார்
    • பாட்டுடைத் தலைவன்நன்னன் சேய் நன்னன்
    •  583 அடிகள் கொண்டது.
    • பரிசில் பெற்ற கூத்தன், அது பெறவிரும்பிய இன்னொரு கூத்தனை நன்னனிடம் ஆற்றுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டது.
    • மலைக்கு யானையை உவமித்து, அதில் பிறந்த ஓசையைக் கடாம் (மதநீர்) எனச் சிறப்பித்தமையால் மலைபடுகடாம் எனப்பட்டது.

மதுரைக் காஞ்சி

    • பத்துப்பாட்டுள் மிகவும் நீண்ட பாட்டான இது 782 அடிகளைக் கொண்டது.
    • இது, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ் செழியனுக்கு, நிலையாமையை எடுத்துக்கூறும் வகையில் மாங்குடி மருதனார் இயற்றியது.
    • மதுரை மன்னனுக்குக் கூறிய காஞ்சியாகையால் மதுரைக்காஞ்சியாயிற்று (காஞ்சிநிலையாமை).

குறிஞ்சிப் பாட்டு

    • இயற்றியவர்  – கபிலர்
    • இது 261 அடிகள் கொண்ட அகவற்பாட்டாகும்.
    • குறிஞ்சிக்குரிய இயற்கைப் புணர்ச்சியும் அதற்குரிய நிமித்தங்களும் இதில் காணப்பட்டமையால் குறிஞ்சிப்பாட்டாயிற்று.
    • பெருங்குறிஞ்சி என்ற பெயரும் இதற்கு உண்டு.
    • இது அறத்தொடு நிற்றல் என்ற அகத்துறைக்கு அழகான எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது

முல்லைப் பாட்டு

    • பத்துப்பாட்டுள் மிகச்சிறிய பாட்டான இதில் 103 அடிகள் உள்ளன.
    • இதனை இயற்றியவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார்.
    • இதற்கு முல்லை என்ற பெயரும் உண்டு.
    • முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்துள்ளது.

பட்டினப்பாலை

    • பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணைச் செய்யுள் என்பது  பொருள்
    • 301 அடிகள் கொண்டது.
    • இதில் வஞ்சியடிகள் கலந்து வருவதால், இதனை வஞ்சிநெடும் பாட்டு என்பர்.
    • இதன் தலைவன் திருமாவளவன் என்னும் கரிகால் வளவன் ஆவான்.
    • இதனை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
    • பொருள்தேடச் செல்ல விரும்பிய தலைவன் தன் மனைவியைப் பிரிய மனமின்றித் தன் செலவினைக் கைவிட்ட நிலையில் பாடப்பட்டது இது.
    • அகப்பொருள் இதனைச் செலவழுங்குதல் என்று கூறும்.

நெடுநல்வாடை

    • இது 188 அடிகள் கொண்டது.
    • இதனை இயற்றியவர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
    • காதலன் பகைவர்மேல் படையெடுத்துச் சென்று பாசறையில் இருக்கிறான். காதலி பிரிவுத் துயரால் வாடிக்கிடக்கிறாள். காதலியின் துயரைப் போக்க முடியா அரண்மனைப் பெண்டிர், தலைவன் விரைவில் திரும்பி வருமாறு கொற்றவைக்கு வழிபாடு செய்கின்றனர். இதுவே இதன் மையக் கருத்து.
  • பத்துப்பாட்டில் அமைந்துள்ள ஆற்றுப்படை நூல்கள் குறித்து விவரி.

திருமுருகாற்றுப்படை

      • பத்துப்பாட்டுக்குக் கடவுள் வாழ்த்துப் போல அமைந்தது திருமுருகாற்றுப்படை.
      • இது 317 அடிகள் கொண்டது. 
      • முருகன் அருள் பெற்ற ஒருவன், அதைப் பெற விரும்பும் இன்னொருவனை முருகப் பெருமானிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது.
      • இயற்றியவர் நக்கீரர். 
      •  இதற்குப் புலவராற்றுப் படை என்றும் ஒரு பெயர் உண்டு.

பொருநராற்றுப்படை

      • சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாட்டுடைத் தலைவன் ஆவார்.
      • இயற்றியவர் – முடத்தாமக் கண்ணியார் 
      • இப்பாட்டு 248 அடிகள் கொண்டது.
      • போர்க்களம் பாடும் பொருநன் ஒருவன் (கூத்தன்) தனக்குப் பரிசளித்த கரிகாலனிடம் இன்னொரு பொருநனை ஆற்றுப்படுத்துவதாக இயற்றப்பட்டது இது.

பெரும்பாணாற்றுப் படை

      • இயற்றியவர் – கடியலூர் உருத்திரங்கண்ணனார் 
      • பாட்டுடைத் தலைவன் – காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன்.
      •  500 அடிகள் கொண்டது. 
      • பேரியாழை வாசிக்கும் பாணன் ஒருவன், தன்போல் இன்னொரு பாணனைத் தனக்குப் பரிசளித்த வள்ளலான இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டதாதலால் பெரும்பாணாற்றுப் படையாயிற்று.

சிறுபாணாற்றுப் படை

      • இயற்றியவர் – இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
      • பாட்டுடைத் தலைவன் -ஓய்மான் நாட்டை ஆண்ட நல்லியக்கோடன்
      • இது 269 அடிகள் கொண்டது.
      • சீறியாழை (சிறிய யாழ்) வாசிக்கும் பாணன் ஒருவனை, நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டமையின் இப்பெயர் பெற்றது.

மலைபடுகடாம்(கூத்தராற்றுப்படை)

      • இயற்றியவர் – இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார்
      • பாட்டுடைத் தலைவன் – நன்னன் சேய் நன்னன்
      •  583 அடிகள் கொண்டது.
      • பரிசில் பெற்ற கூத்தன், அது பெறவிரும்பிய இன்னொரு கூத்தனை நன்னனிடம் ஆற்றுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டது.
      • மலைக்கு யானையை உவமித்து, அதில் பிறந்த ஓசையைக் கடாம் (மதநீர்) எனச் சிறப்பித்தமையால் மலைபடுகடாம் எனப்பட்டது.
  • பத்துப்பாட்டில் அமைந்துள்ள அகம் சார்ந்த நூல்கள் குறித்து எழுதுக.

குறிஞ்சிப் பாட்டு

      • இயற்றியவர்  – கபிலர்
      • இது 261 அடிகள் கொண்ட அகவற்பாட்டாகும்.
      • குறிஞ்சிக்குரிய இயற்கைப் புணர்ச்சியும் அதற்குரிய நிமித்தங்களும் இதில் காணப்பட்டமையால் குறிஞ்சிப்பாட்டாயிற்று.
      • பெருங்குறிஞ்சி என்ற பெயரும் இதற்கு உண்டு.
      • இது அறத்தொடு நிற்றல் என்ற அகத்துறைக்கு அழகான எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. 

முல்லைப் பாட்டு

      • பத்துப்பாட்டுள் மிகச்சிறிய பாட்டான இதில் 103 அடிகள் உள்ளன.
      • இதனை இயற்றியவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார்.
      • இதற்கு முல்லை என்ற பெயரும் உண்டு.
      • முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்துள்ளது.

பட்டினப்பாலை

      • பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணைச் செய்யுள் என்பது  பொருள். 
      • 301 அடிகள் கொண்டது.
      • இதில் வஞ்சியடிகள் கலந்து வருவதால், இதனை வஞ்சிநெடும் பாட்டு என்பர்.
      • இதன் தலைவன் திருமாவளவன் என்னும் கரிகால் வளவன் ஆவான்.
      • இதனை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
      • பொருள்தேடச் செல்ல விரும்பிய தலைவன் தன் மனைவியைப் பிரிய மனமின்றித் தன் செலவினைக் கைவிட்ட நிலையில் பாடப்பட்டது இது.
      • அகப்பொருள் இதனைச் செலவழுங்குதல் என்று கூறும்.
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்து எழுதுக.

நீதி நூல்கள் (11 நூல்கள்)

1) திருக்குறள்
2)நாலடியார் 
3) இன்னா நாற்பது
4) இனியவை நாற்பது 
5)நான்மணிக்கடிகை
6)ஆசாரக்கோவை 
7) சிறுபஞ்சமூலம்
8) ஏலாதி
9)திரிகடுகம் 
10)முதுமொழிக்காஞ்சி
11) பழமொழி நானூறு

அக நூல்கள் (6 நூல்கள்)

1) ஐந்திணை ஐம்பது
2)ஐந்திணை எழுபது 
3) திணைமொழி ஐம்பது
4)  திணைமாலை நூற்று ஐம்பது
5) கைந்நிலை
6)கார் நாற்பது 

புற நூல் (ஒன்று)

1)களவழி நாற்பது

என மூன்று பிரிவுகளுள் அடக்கலாம்.

திருக்குறள்

      • பெயர்க்காரணம்: குறள் வெண்பாக்களால் பாடப்பட்டுள்ளதால்  இப்பெயர் பெற்றது.
      • திருக்குறள் என்பது “அடையடுத்த கருவியாகு பெயர்
      • ஆசிரியர்திருவள்ளுவர்
      • பாவகைகுறள் வெண்பா

திருக்குறளின் வேறு பெயர்கள்:

          • திருவள்ளுவம்
          • தமிழ் மறை
          • பொதுமறை
          • முப்பால்
          • பொய்யாமொழி
          • தெய்வநூல்

நூல் பகுப்பு முறை:

          • பால் – 3(அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்)
          • அதிகாரம் – 133
          • பாடல்கள் – 1330
          • இயல்கள் – 9

நாலடியார்

      • பெயர்க்காரணம்: நான்கு அடிகளால் ஆன நானூறு பாடல்களை கொண்டதால் நாலடி நானூறு என்றும் நாலடியார் என்றும் அழைக்கப்படுகிறது
      • ஆசிரியர்சமண முனிவர்கள்
      • தொகுத்தவர்பதுமனார்
      • பாடல்கள் – 400
      • பொருள்அறம்
      • பா வகைவெண்பா

வேறு பெயர்கள்:

        • நாலடி நானூறு
        • வேளாண் வேதம்

நூல் பகுப்பு:

        • இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது
          • அறத்துப்பால் – 13 அதிகாரங்கள்
          • பொருட்பால் – 24 அதிகாரங்கள்
          • இன்பத்துப்பால் – 3 அதிகாரங்கள்

நூலின் சிறப்பு:

        • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள ஒரே தொகை நூல் இது.

நான்மணிக்கடிகை

        • பெயர்க்காரணம்: நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற  அணிகலன் போல் ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகள்  இடம்பெறுவதால் நான்மணிக்கடிகை எனும் பெயர் பெற்றது.
        • ஆசிரியர்விளம்பி நாகனார்
        • ஊர்விளம்பி
        • பாடல்கள் -104
        • பாவகைவெண்பா

இன்னா நாற்பது

        • பெயர்க்காரணம்: இன்னாதுன்பம். இன்னது இன்னது இன்னா என நாற்பது பாடல்களில் கூறுவதால்  இன்னா நாற்பது எனப்படுகிறது.
        • ஆசிரியர்கபிலர்
        • பாடல்கள் – 1 + 40
        • பாவகைவெண்பா

இனியவை நாற்பது

        • பெயர்க்காரணம்: இவை இவை இனிமை பயப்பவை என நாற்பது பாடல்களால் கூறுவதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது.
        • ஆசிரியர்பூதஞ்சேந்தனார்
        • பாடல்கள் – 1 + 40
        • பாவகைவெண்பா

திரிகடுகம்

        • பெயர்க்காரணம்: சுக்குமிளகுதிப்பிலி ஆகிய மூன்றும் உடல் நோயைத் தீர்ப்பானஅதனை போன்று இந்நூலில் அமைந்துள்ள ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்களும் உள்ளந்தின் நோயைத் தீர்க்கும்.
        • திரிமூன்று
        • கடுகம்காரமுள்ள பொருள்
        • ஆசிரியர்நல்லாதானர்
        • பாடல்கள் – 100 + 1
        • பாவகைவெண்பா

ஆசாரக்கோவை

        • பெயர்க்காரணம்: மனித வாழ்விற்கு இன்றியமையாத ஒழுக்கநெறிகள் பலவற்றையும் ஒன்றிணைத்துக் கூறும் ஒரு தொகுப்பு நூல் என்பதால் அப்பெயர் பெற்றது.
        • ஆசிரியர்பெருவாயின் முள்ளியார்
        • பாடல்கள் – 100
        • பாவகைபல்வேறு வெண்பா வகைகள்

பழமொழி நானூறு

        • பெயர்க்காரணம்: ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பழமொழி  இடம்பெறுவதால் பழமொழி நானூறு எனப் பெயர்பெற்றது.
        • ஆசிரியர்முன்றுறை அரையனார்
        • பாடல்கள் – 400
        • பாவகைவெண்பா

சிறுபஞ்சமூலம்

        • பெயர்க்காரணம்:கண்டங்கத்திரிசிறு வழுதுணைசிறுமல்லிபெருமல்லிநெருஞ்சி ஆகிய வேர்கள் இணைந்து மனிதனின் நோயை குணப்பதுவது போல இந்நூல் மனிதனின் உள்ளப்பிணியை நீக்குகிறது.
        • ஆசிரியர்காரியாசான்
        • பாடல்கள்கடவுள் வாழ்த்து 1, பாயிரங்கள் 2, செய்யுட்கள் 102
        • பாவகைவெண்பா

முதுமொழிக்காஞ்சி

        • பெயர்க்காரணம்: மூத்தோர் சொற்கள் பலவற்றைக் கோர்த்த கோவை முதுமொழிக்காஞ்சி எனப்படுகிறது.
        • ஆசிரியர்மதுரைக் கூடலூர்க்கிழார்
        • பாடல்கள் – 100
        • பாவகைகுறள் தாழிசை

ஏலாதி

        • பெயர்க்காரணம்: ஏலம்இலவங்கம்நாககேசரம்சுக்குமிளகுதிப்பிலி ஆகிய ஆறு மருந்து பொருட்கள் சேர்ந்து உடல் நோயை தீர்ப்பது போன்று இந்நூலின் உள்ள ஒவ்வொரு பாடல் கூறும் ஆறு கருத்துக்களும் மனிதனின் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும்.
        • ஆசிரியர்கணிமேதாவியார்
        • பாடல்கள்பாயிரம் 1, தற்சிறப்பாயிரம் 1, பாடல்கள் 80
        • பாவகைவெண்பா

ஐந்திணை ஐம்பது

        • பெயர்க்காரணம்: ஐந்து தினைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் ஐம்பது பாடல்கள் பாடப்பட்டதால் ஐந்திணை ஐமபது எனப் பெயர் பெற்றது.
        • ஆசிரியர்மாறன் பொறையனார்
        • பாடல்கள் – 50(5 X 10 = 50)
        • திணைஐந்து அகத்திணை
        • திணை வைப்பு முறைமுல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்
        • பாவகைவெண்பா

ஐந்திணை எழுபது

        • ஐந்து தினைகளுக்கும் பதினாங்கு பாடல்கள் வீதம் எழுபது பாடல்கள் பாடப்பட்டதால் ஐந்திணை எழுபது எனப் பெயர் பெற்றது.
        • ஆசிரியர்மூவாதியார்
        • பாடல்கள் – 70(5*14=70)
        • திணைஐந்து அகத்தினணகளும்
        • திணை வைப்பு முறைகுறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்
        • பாவகை  – வெண்பா

திணைமொழி ஐம்பது

        • பெயர்க்காரணம்:திணைக்கு பத்து பாடல் வீதும் ஐம்பது பாடல்களைக் கொண்டதால் திணைமொழி ஐம்பது எனப் பெயர்பெற்றது.
        • ஆசிரியர்கண்ணஞ் சேந்தனார்
        • பாடல்கள் – 50(5*10=50)
        • திணைஐந்து அகத்திணைகளும்
        • திணை வைப்பு முறைகுறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்
        • பாவகை  – வெண்பா

திணைமாலை நூற்றைம்பது

        • பெயர்க்காரணம்:திணைக்கு முப்பது பாடல்கள் வீதம் நூற்றைம்பது பாடல்கள் கொண்டதால் திணைமாலை நூற்றைம்பது எனப் பெயர் பெற்றது.
        • ஆசிரியர்கணிமேதாவியார்
        • பாடல்கள் – 150(5*30=150)
        • திணைஐந்து அகத்திணைகளும்
        • திணை வைப்பு முறைகுறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம்
        • பாவகைவெண்பா

கைந்நிலை

        • கை = ஒழுக்கம்
        • ஐந்திணை ஒழுக்க நிலை கூறும் நூல் என்னும் பொருளில் “கைந்நிலை” எனப் பெயர் பெற்றது.
        • ஆசிரியர்புல்லாங்காடனார்
        • பாடல்கள் – 60(5*12=60)
        • திணைஐந்து அகத்திணைகளும்
        • பாவகைவெண்பா

கார் நாற்பது

        • கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையினாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார்நாற்பது என்னும் பெயர் பெற்றுள்ளது
        • இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்.
        • ஆசிரியர்மதுரைக் கன்னங் கூத்தனார்
        • பாடல்கள் – 40(அகநூல்களில் அளவில் சிறியது)
        • திணைஅகத்திணைமுல்லைத்திணை
        • பாவகைவெண்பா

களவழி நாற்பது

        • களம் = போர்க்களம்.
        • போர்க்களம் பற்றிய நாற்பது பாடல்களைக் கொண்டதால் களவழி நாற்பது எனப் பெயர் பெற்றது.
        • ஆசிரியர்பொய்கையார்
        • பாடல் – 40
        • திணைபுறத்திணைவாகைத்திணை
        • பாவகை – வெண்பா
  • ஐம்பெரும்காப்பியங்கள் குறித்து எழுதுக.

ஐம்பெரும் காப்பியங்கள்

    1. சிலப்பதிகாரம்
    2. மணிமேகலை
    3. சீவகசிந்தாமணி
    4. வளையாபதி
    5. குண்டலகேசி

சிலப்பதிகாரம்

    • இயற்றியவர்– இளங்கோவடிகள்
    • சமயம்சமணம்

பெயர்க்காரணம்:

    • காப்பியத்தின் கதை சிலம்பினைக் மையமாகக் கொண்டு அமைந்ததால் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது.

வேறு பெயர்கள்

    • குடிமக்கள் காப்பியம்
    • முத்தமிழ் காப்பியம்
    • உரையிடையிட்ட பாட்டுடை செய்யுள்

நூல் அமைப்பு

    • புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் கொண்டது.

மூன்று நீதிகள் அல்லது உண்மைகள்

      • அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது ;
        உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவது ;
        ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்  

காப்பியக் கதை

    • கோவலன் கண்ணகி திருமணத்தில் தொடங்கி, மாதவியின் நடனத்தால் மையல் கொண்ட கோவலன், கண்ணகியை விடுத்து, மாதவி மாட்டு விடுதலறியாவிருப்பினன் ஆகி, மணிமேகலையை மகளாய்ப் பெற்று, பல ஆண்டுகளுக்குப் பின் இந்திர விழாவில் கானல் வரிபாடும் நிலையில் ஊழ்வினை காரணமாக மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் மாதவி என அவளைப் பழித்து நீங்கி, கண்ணகியைத் தஞ்சமடைந்து, கவுந்தியடிகள் துணையுடன் மதுரை சென்று, மாதரியிடம் கண்ணகியை அடைக்கலமாக்கி, மதுரை வீதியில் பொற்கொல்லனிடம் சிலம்பு விற்கச் சென்று கள்வன் எனக் குற்றஞ் சாட்டப்பட்டு, மன்னன் கொன்று வா என ஆணையிடக் கொலைக் களத்தில் கோவலன் கொலைப்பட, வண்ணச் சீறடி மண்மகள் அறியாது புகாரில் வாழ்ந்த கண்ணகி மதுரை வீதியில் சீற்றமே உருவாய் அரண்மனை வாயில் புகுந்து மன்னனிடம் தன் கணவன் கள்வனல்லன் என்பதைச் சிலம்பை உடைத்து, மாணிக்கத்தைக் காட்டி தெளிவுப்படுத்த அதனால் குற்றம் செய்தேன் என மன்னன் மடிய, கோப்பெருந்தேவி உயிர் துறக்க,சினம் அடங்காப் பத்தினி மதுரை மாநகரைத் தீக்கிரையாக்கி, வஞ்சி மாநகர் புகுந்து அங்குள்ள மலைக்குறவர் காண, விமானத்தில் ஏறி விண்ணுலகு சென்றாள். இதுவே சிலப்பதிகாரம் காட்டும் கண்ணகி கோவலன் கதையாகும்.

மணிமேகலை

    • இயற்றியவர்– சீத்தலை சாத்தனார்
    • சமயம்பௌத்தம்

பெயர்க்காரணம்

    • காப்பியத்தின் கதை முழுதும் காப்பியத் தலைவி மணிமேகலையை மையமாகக் கொண்டு பாடப்பட்டதால்மணிமேகலை எனப் பெயர் பெற்றது.

வேறு பெயர்கள்

    • இரட்டைக் காப்பியங்கள் (சிலப்பதிகாரம்,மணிமேகலை)
    • இந்நூலின் பதிகம் இந்நூலினை மணிமேகலை துறவு என்று குறிப்பிடுகிறது.

நூல் அமைப்பு

    • முப்பது காதைகள் கொண்டது.

மூன்று கருத்துகள்

    • இளமை நிலையாமை
    • யாக்கை நிலையாமை
    • செல்வம் நிலையாமை 

காப்பியக் கதை 

    • கோவலன் கொலை செய்யப்பட, செய்தியறிந்த மாதவியும். அவள் மகள் மணிமேகலையும் பௌத்த சமயத்தில் சேர்ந்துதுறவியாகின்றனர். புத்தபிரானுக்கு மலர் வேண்டி மலர்வனம் புகுகின்றாள் மணிமேகலை. மணிமேகலை மீது காமம் கொண்ட இளவரசன் உதயகுமரன் அவளைப் பின் தொடர்கிறாள். தன்னைப் பொருள்விலையாட்டி எளக் கூறி இகழ்ந்தும் உதயகுமரன் பின்னால் தன் மனம் செல்வதையறிந்து வருந்துகிறாள் மணிமேகலை. இந்நிலையில் மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத் தீவில் விட்டுவிடுகிறது. அங்குப் பழம்பிறப்பு அறிந்து, மூன்று மந்திரங்களும் பெறுகிறாள். ஆபுத்திரனின் அமுத சுரபியும் கோமுகிப் பொய்கையிலிருந்து கிடைக்கிறது. மந்திரத்தின் உதவியால் விண்ணில் பறந்து புகார் வந்து பசியால் வாடியோர்க்கு உண்டி கொடுத்து உயிர்கொடுக்கிறாள் உதயகுமரன்தரும் துன்பம் நீங்கமந்திரத்தின் உதவியால் காயசண்டிகை வடிவத்தை எடுத்துக்கொள்கிறாள். காயசண்டிகையின் கணவன் காஞ்சனனால் உதயகுமரன் தவறுதலாகக் கொல்லப்படுகிறான். கொன்ற பழி மணிமேகலையை வந்தடைகிறது. அரசன் மகளைக் கொன்றதால் சோழ மன்னன் மணிமேகலையைர் சிறையில் அடைக்கிறான். மகனைப் பறி கொடுத்த அரசி. மணிமேகலையைப் பல்வேறு வகையில் கொடுமைப்படுத்துகிறாள். தவவலிமையால் அவற்றிலிருந்து விடுபடுகிறாள். உண்மை உணர்ந்த அரசி அவளை விடுவித்துத் தன்னை மன்னிக்க வேண்டுகிறாள். பின்னர் மணிமேகலை காஞ்சி சென்று பௌத்த மதக் கொள்கைகளைப் பரப்பி அறவண அடிகளிடம் ஆசி பெறுகிறாள். இதுவே மணிமேகலையின் கதையாகும்.

சீவகசிந்தாமணி

    • இயற்றியவர்திருத்தக்கதேவர்
    • தமிழில் விருத்தப்பாவால் எழுதப்பட்ட முதல் காப்பியம் சீவகசிந்தாமணி ஆகும்.
    • மணநூல் என்று அழைக்கப்படுகிறது.
    • சமயம்சமணம்

நூல் அமைப்பு

    • 13 இலம்பகங்கள் 
    • 3145 பாடல்கள் கொண்டது.

காப்பியக் கதை 

    • காப்பியத்தலைவன் சீவகன். ஏமாங்கத நாட்டு அரசன் சச்சந்தன், மனைவி விசயை. நாட்டை மறந்து அந்தப்புரத்தில் அடைக்கலமாகும் மன்னன் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை அமைச்சன் கட்டியங்காரனிடம் ஒப்படைக்கின்றான். அமைச்சன் தக்க நேரம் பார்த்துப் படையுடன் வந்து மன்னனைக் கொல்கிறான். அமைச்சன் சதியறிந்த மன்னன், மனைவி விசயையை மயிற்பொறியில் ஏற்றி வானில் பறக்கும்படிச்செய்கிறான். உயிர்தப்பிய விசயை சுடுகாட்டில் இறங்குகிறாள். அங்கு அவளுக்கு ஓர் ஆண்குழந்தை பிறக்கிறது. சீவகன் என்று பெயர் மட்டும் சூட்டி மகனோடு வாழ முடியாது தாய் விசயை மறைந்து வாழ்கிறாள். கந்துக்கடன் எனும் வணிகன் சீவகனை எடுத்துச்சென்று, அச்சணந்தி அடிகளிடம் கல்வி பயில அனுப்புகிறான். கல்வி கேள்விகளில் சிறந்தவனாக வளர்கின்றான். இளமைப் பருவம் எய்திய சீவகன் தன் அழகாலும் ஆண்மையாலும் போட்டிகளில் வெற்றி பெற்றுகாந்தருவ தத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எண்மரை மணக்கிறான். கட்டியங்காரனைப் போரில் கொன்று தன் தந்தையின் நாட்டை மீட்டு அரசாள்கிறான். மனைவியரோடு மகிழ்ச்சியாய், நற்புதல்வர்களைப் பெற்று இருக்குங்காலை தோட்டத்தில் பார்த்த ஒரு காட்சியால் வாழ்க்கையில் விரக்தியுற்றுத் துறவு பூண்டு முக்தி அடைகிறான். இதுவே சீவக சிந்தாமணி தரும் சீவகனின் கதையாகும்.

வளையாபதி

    • ஆசிரியர் பெயர் தெரியவில்லை
    • சமண சமயம் சார்ந்த நூல்

காப்பியக் கதை 

    • நவகோடி நாராயணன் ஒரு வணிகன். இவன் வேறு சாதிப் பெண்ணை மணந்தான். இதனால் அவன் குலத்தோர் வெறுக்க, வெறுப்பைத் தாங்க இயலாது அவனும் அயல் நாடு சென்றுவிட, அவன் மனைவிக்குப் பிறக்கும் மகன் வளர்ந்த பின் புகாரில் தன் தந்தையைக் கண்டு இறுதியில் தாய் தந்தையரை இணைத்து வைக்கிறான். வைசிய புராணம் தரும் கதை இதுவேயாகும்.

குண்டலகேசி

    • குண்டலகேசி என்பதற்கு  சுருண்ட கூந்தலை உடையவள் என்பது பொருள் ஆகும்.
    • இயற்றியவர்நாதாகுத்தனார்
    • 25 பாடல்கள் கிடைத்துள்ளன.
    • சமயம்பௌத்தம்

காப்பியக் கதை 

    • வணிகன் மகள் பத்தரை. இவள் காளன் என்ற கள்வனை விரும்புகிறாள். மகளின் வற்புறுத்தலால் தந்தையும் கள்வனைச் சிறையிலிருந்து மீட்டு அவளுக்கு மணம் செய்து வைக்கிறார். இன்பமான வாழ்க்கையின் இடையில் ஊடலின்போது சினத்தில் பத்தரை தன் கணவனை நீ கள்வன் தானே? என்று கூறிவிட அதனால் சினங்கொண்ட காளன் (கணவன்) தெய்வத்தை வணங்க என்று பொய் கூறி மலையுச்சிக்கு அவளை அழைத்துச் சென்று கொல்லப் போவதாகக் கூறுகின்றான். கணவனுக்கு அறிவுரை கூறியும் அவன் திருந்தாத நிலையில் அவனை வணங்கி வலம் வருவது போல் வந்து கணவனை மலையுச்சியிலிருந்து தள்ளிக் கொன்று விடுகின்றாள். தான் செய்த பாவம் நீங்கிடப் பௌத்த சமயத்தில் சேர்ந்து அறக் கருத்துக்களைப் பரப்பி இறுதியில் புத்தபிரானின் திருவடியை அடைகிறாள்.
  • ஐஞ்சிறுகாப்பியங்கள் பற்றி எழுதுக.

ஐஞ்சிறுகாப்பியங்கள்

நாககுமார காவியம்

    • ஆசிரியர்பெயர் தெரியவில்லை
    • காலம்கி.பி.16ஆம் நூற்றாண்டு
    • பாடல்கள் – 170
      சருக்கம் – 5
      பாவகைவிருத்தப்பா
    • சமயம்சமணம்
    • பெயர்க்காரணம்:
      கதைத் தலைவன் நாககுமாரன் பற்றிக் கூறுவதால் நூல் இப்பெயர் பெற்றது.
    • வேறு பெயர்: நாகபஞ்சமி கதை

உதயணகுமார காவியம்

    • ஆசிரியர்பெயர் தெரியவில்லை
    • காலம்கி.பி.15ஆம் நூற்றாண்டு
    • பாடல்கள் = 369
      காண்டம் = 6
      காண்டங்கள்:

      • உஞ்சைக் காண்டம்
      • இலாவண காண்டம்
      • மகத காண்டம்
        வத்தவ காண்டம்
      • நரவாகன காண்டம்
      • துறவுக் காண்டம்
    • வேறு பெயர்உதயணன் கதை

யசோதர காவியம்

    • ஆசிரியர்வெண்ணாவலூர் உடையார் வேள்
    • காலம் – 13ஆம் நூற்றாண்டு
    • பாடல்கள் – 320
      சருக்கங்கள் – 5
    • பாவகைவிருத்தம்
    • சமயம்சமணம்

நீலகேசி

    • ஆசிரியர்பெயர் தெரியவில்லை
    • காலம் – 6ஆம் நூற்றாண்டு
    • பாடல்கள் – 894
      சருக்கம் – 10
    • பாவகைவிருத்தம்
    • சமயம் = சமணம்
    • வேறு பெயர்:
      நீலகேசி தெருட்டு
      நீலம்(யாப்பருங்கல விருத்தியுரை)
    • நீலகேசி = கரிய கூந்தலை உடையவள்

சூளாமணி

    • ஆசிரியர்தோலாமொழித் தேவர்
    • காலம்கி.பி.பத்தாம் நூற்றாண்டு
    • பாடல்கள் – 2330
      சருக்கம் – 12
    • பாவகைவிருத்தம்
    • சமயம்சமணம்
    • பெயர்க்காரணம்: மிக்க ஒளியையும் சிறப்பினையும் உடையது சூளாமணி. ஆற்றல்களும் சிறப்புகளும் கொண்டு திவிட்டனும் விசயனும் சூளாமணி போல் ஒளிர்ந்தமையால் நூல் இப்பெயர் பெற்றது.
  • சமயக் காப்பியங்கள் குறித்து எழுதுக.
    • மணிமேகலை பௌத்தத்தைப் போற்றும் நிலையில் எழுந்தது. சீவகசிந்தாமணி சமணம் பரப்ப எழுந்தது.
    • வளையாபதி சமண சமயத்தது.
    • குண்டலகேசி பௌத்தத்தைப் போற்றுவது.
    • ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமண சமயத்தனவாகும்.
    • கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலியன வைணவ சமயக் காப்பியங்களாகும்.
    • பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், கந்தபுராணம் முதலின சைவ சமயக் காப்பியங்களாகும்.
    • சீறாப்புராணம் இசுலாமியக் காப்பியம்.
    • இயேசு காவியம் கிறித்துவக் காப்பியம் ஆகும்.
    • சமயம் பரப்பும் நோக்கில்தான் காப்பியங்களின் வளர்ச்சி அமைந்தது என்றே உறுதிபடக் கூறலாம்.

கம்பராமாயணம்

    • இயற்றியவர்கம்பர்
    • பெயர்க் காரணம்: இக்காப்பியத்தின் கதை இராமனின் வரலாற்றைப் பற்றித் தெரிவிப்பதால் இராமாயணம் எனப்பட்டது

காப்பிய அமைப்பு

    • இக்காப்பியம் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களைக் கொண்டது.
    • இந்த ஆறு காண்டங்களின் சிறு பிரிவுகளாக 113 படலங்கள் உள்ளன. மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 10,500 ஆகும்.
    • கம்பராமாயணம் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கற்பு நெறி நின்று வாழவேண்டும் என்ற உண்மையை ஏகபத்தினி விரதனாம்இராமன் மூலம் தெரிவிக்கின்றது.

வில்லிபாரதம்

    • இயற்றியவர்: வில்லிபுத்துரார்
    • காலம்: 16-ஆம் நூற்றாண்டு.
    • பருவங்கள்:
      வில்லிபாரதம் 10 பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
      • பருவங்களின் பெயர்கள்:

        • ஆதி பருவம்
        • சபா பருவம்
        • ஆரணிய பருவம்
        • விராட பருவம்
        • உத்தியோக பருவம்
        • வீடும பருவம்
        • துரோண பருவம்
        • கன்ன பருவம்
        • சல்லிய பருவம்
        • சௌப்திக பருவம்

    • 4351 விருத்தப் பாடல்களைக் கொண்டது.

பெரியபுராணம்

    • இயற்றியவர்: சேக்கிழார்
    • பெரிய புராணம் என்னும் பெருங்காப்பியம் தமிழகச் சூழலையும், 63 அடியார் பெருமக்களையும் மையமாகக் கொண்டு திகழ்கின்றது.
    • இந்நூல் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களையும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் உடையது.
    • 4286 விருத்தப் பாக்களையுடைய ஒரு பெரு நூலாகும்.

திருவிளையாடற் புராணம்

    • இயற்றியவர்: பரஞ்சோதி முனிவர்
    • காண்டங்கள்:
      3 காண்டங்கள் உள்ளன.
      • மதுரைக் காண்டம்
      • கூடல் காண்டம்
      • திருவாலவாய்க் காண்டம்
    • படலங்கள்:
      மொத்தம் 64 படலங்கள் உள்ளன.
    • மதுரைக் காண்டம்: 18 படலங்கள்.
    • கூடல் காண்டம்: 30 படலங்கள்.
    • திருவாலவாய்க் காண்டம்: 16 படலங்கள்.
    • பாடல்கள்:
      இந்த நூல் 3363 பாடல்களைக் கொண்டுள்ளது.

கந்தபுராணம்

    • இயற்றியவர்: கச்சியப்ப சிவாச்சாரியார்
    • முருகனின் வரலாற்றைக் கூறும் நூல்
    • ஆறுகாண்டங்கள்
      • உற்பத்தி காண்டம்
      • அசுர காண்டம்
      • மஹேந்திர காண்டம்
      • யுத்த காண்டம்
      • தேவ காண்டம்
      • தக்ஷ காண்டம்
    • 142 படலங்கள்
    • 2967 பாடல்கள்

சீறாப்புராணம்

    • ஆசிரியர் : உமறுப்புலவர்
    • சீறாஎன்ற அரபுச் சொல்லுக்கு வாழ்க்கை அல்லது வாழ்க்கை வரலாறு என்று பொருள். ‘புராணம்என்றால்வரலாறுஎன்று பொருள்எனவே, சீறாப்புராணம் என்பது ‘நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல் ஆகும்
    • மூன்று காண்டங்களையும், மொத்தம் 92 படலங்களையும், 5027 விருத்தப் பாடல்களையும் கொண்ட ஒரு காவியம் ஆகும்.

தேம்பாவணி

    • ஆசிரியர்: வீரமாமுனிவர்
    • மூன்று காண்டங்கள்
    • 36 படலங்கள்
    • 3615 விருத்தப் பாடல்கள்
    • கதையின் பாடுபொருள்:
      • தேம்பாவணி நூல் புனித யோசேப்பைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயேசு கிறிஸ்துவின் பெருமையைப் பாடுகிறது.
      • இது தமிழ் மரபுக்கு ஏற்ற ஒரு காப்பியமாக இருந்தாலும், கிறிஸ்தவக் கருத்துக்களை முன்வைக்கிறது

இயேசு காவியம்

    • இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    • இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு பற்றி குறிப்பிடுகிறது.
    • இந்நூல் பாயிரம், பிறப்பு, தயாரிப்பு, பொதுவாழ்வு, பாடுகள், மகிமை என ஐந்து பாகங்களைக் கொண்டது.
  • பன்னிரு திருமுறைகள் பற்றி விவரி. (அல்லது) நாயன்மார்கள் குறித்து எழுதுக.
    • பக்தி இலக்கியம் பெரிதும் வளர்ந்த காலம் பல்லவர் காலம் ஆகும்.
    • தேவாரம்
      • தே+வாரம்=தேவாரம்
      • கடவுளுக்கு சூட்டப்படுகின்ற பாமாலை என்று பொருள்.
    • சைவ சமயத்தின் முழுமுதற் கடவுள் சிவபெருமான்
    • சிவபெருமானின் ஐன்தொழில்கள் – படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்

பன்னிரு திருமுறைகள் பகுப்பு

    • சைவ சமயப் பெரியவர்கள் பாடிய பாடல்கள் திருமுறைகள் எனப்படும்.
    • 1 , 2, 3 திருமுறைகள்திருஞானசம்பந்தர் (சம்பந்தர் தேவாரம்)
    • 4, 5 , 6 திருமுறைகள்திருநாவுக்கரசர் (தேவாரம்)
    • 7ம் திருமுறைசுந்தரர் (சுந்தரர் தேவாரம்)
    • 8ம் திருமுறைமாணிக்கவாசகர்திருவாசகம் மற்றும் திருக்கோவையார்
    • ஒன்பதாம் திருமுறை – 9 பேர்
    • பத்தாம் திருமுறைதிருமூலர்
    • பதினொன்றாம் திருமுறைதிரு ஆலவாய் உடையார் முதலாக பன்னிருவர்
    • பன்னிரண்டாம் திருமுறைசேக்கிழார் (பெரியபுராணம்)
    • திருமுறைகளை தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
      இவர் 11 திருமுறைகளை மட்டுமே தொகுத்தார்
      பெரியபுராணம் பின்னால் எழுதப்பட்டது.
    • திருமுறைகளைதொகுப்பித்தவன் முதலாம் ஆதித்த சோழன்
      முதலாம் ராஜராஜன் திருமுறை கண்ட சோழன் எனப்படுகிறான்
    • முதல் ஏழு திருமுறைகள் மூவர் தேவாரம் எனப்படும்.
      இதற்கு மூவர் தமிழ் என்று வேறு பெயரும் உண்டு.
    • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்மூவர் முதலிகள்எனப்படுவர்.
    • சைவ சமயக் குரவர்கள் நால்வர்
    1. திருஞானசம்பந்தர்
    2. திருநாவுக்கரசர்
    3. சுந்தரர்
    4. மாணிக்கவாசகர்
    • பன்னிரு திருமுறைகளையும் பாடியவர்கள் மொத்தம் 27 பேர்.

திருஞானசம்பந்தர்

    • இயற்பெயர் : ஆளுடைய பிள்ளை
    • பெற்றோர்சிவபாத இருதயர்பகவதி அம்மையார்
    • பிறந்த ஊர்சீர்காழி 
    • இவர் பாடியவை1,2,3 திருமுறைகள்

சிறப்பு:

    • 23 இசைகளில் பாடியுள்ளார்.
    • யாழ்முறி இவருக்கு மட்டுமே உரியது.
    • திராவிட சிசுஆதிசங்கரரால்  போற்றப்பட்டார்.
    • நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர்சுந்தரர்

செய்த அற்புதங்கள்

    • மழவன் மகளுக்கு ஏற்பட்ட கடுமையான முயலகன் என்னும் நோயைப் போக்கினார்.
    • கூன் பாண்டியன் வெப்பு நோயைப் நீக்கினார்.
    • திருமறைக்காட்டுக் கோவிலின் கதவை தம் பாட்டால் மூடும்படி செய்தார்.
    • திருவோத்தூரில் ஆண் பனையைப் பெண் பனையாக்கி அற்புதம் செய்தார்.

திருநாவுக்கரசர்

    • இயற்பெயர்: மருள் நீக்கியார்
    • பெற்றோர் : புகழனார், மாதினியார்
    • அக்கா : திலகவதியார்
    • பிறந்த ஊர்: திருவாமூர்
    • இவர் பாடியவை4,5,6 திருமுறைகள்
    • சிறப்பு பெயர்கள்:
      • திருநாவுக்கரசர்,வாகீசர்,அப்பர்,ஆளுடைய அரசு,தாண்டக வேந்தர்,தருமசேனர்
    • சமண சமயத்திலிருந்து  சைவ சமயத்திற்கு மாற்றியவர்தமக்கை திலகவதியார்
    • முதலாம் மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் .
    • கல்லையே தெப்பமாகக் கொண்டு கரை ஏறியவர்
    • திங்களூரில் பாம்பு தீண்டி இறந்தவரை உயிர்ப்பித்தார்.
    • திருமறைக்காட்டுக் கோவில் கதவை திறக்க செய்தார்.

சுந்தரர்

    • இயற்பெயர்: நம்பி ஆரூரார் / ஆரூரார்
    • பெற்றோரோர்: சடையனார்மாதினியார்
    • இவர் பாடியவை7 திருமுறை

சிறப்பு பெயர்கள் :

    • வன் தொண்டர்
    • தம்பிரான் தோழர்
    • திருத்தொண்டத்தொகை பாடியவர் சுந்தரர்

மாணிக்கவாசகர்

    • இயற்பெயர் தெரியவில்லை
    • பெற்றோர் : சம்புபாதசாரியார்சிவஞானவதி
    • இவர் பாடியவை8 திருமுறை

சிறப்பு பெயர்கள்

    • அருள் வாசகர்
    • மணிவாசகர்
    • அழுது அடியடைந்த அன்பர்
    • தென்னவன் பிரமராயர்
    • மாணிக்கவாசகர் (இவர் பாடல்கள் ஒவ்வொன்றும் மாணிக்கம் போல் உள்ளதால் )

நூல்கள்

    • திருக்கோவையாரும் திருவாசகமும் இவர் பாடியவை

ஒன்பதாம் திருமுறை ( திருவிசைப்பா

    • 9 பேர் பாடியது

பத்தாம் திருமுறை ( திருமந்திரம்

    • திருமூலர்
    • திருமந்திரத்திற்கு திருமூலர் இட்ட பெயர் திருமந்திர மாலை
    • திருமந்திரத்தின் வேறு பெயர்கள்தமிழ் மூவாயிரம்
    • முதல் சித்த நூல் யோக நெறியை கூறும் தமிழர் நூல்
      ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இந்நூலின் சிறப்பு

பதினொன்றாம் திருமுறை (பிரபந்த மாலை)

    • 12 பேர் பாடியுள்ளனர்
    • 40 நூல்கள் உள்ளன
    • திருவாலவாயுடையார் (1)
    • காரைக்காலம்மையார் (நான்கு நூல்கள்)
    • கல்லாடர் (1)
    • நக்கீரர் (10)
    • கபிலர் (3)
    • பரணர் (1)
    • அதிரா அடிகள் 1
    • இளம்பெருமான் அடிகள் (1)
    • ஐயடிகள் (1)
    • சேரமான் பெருமான் நாயனார் (3)
    • பட்டினத்தார் (5)
    • நம்பியாண்டார் நம்பி (ஒன்பது நூல்கள் )
    • தமிழ் வியாசர் என அழைக்கப்படுபவர் நம்பியாண்டார் நம்பி
      64 நாயன்மார்களை பற்றி திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர்

காரைக்கால் அம்மையார்

    • இயற்பெயர் புனிதவதியார் 
    • காரைக்கால்வணிக மரபினர்
    • சைவசமய எழுச்சிக்கு வித்திட்ட முன்னோடி

12ம் திருமுறை (பெரியபுராணம்)

    • சேக்கிழார்
    • இயற்பெயர்: அருண்மொழித்தேவர்

சிறப்பு பெயர்கள் :

    • உத்தம சோழப் பல்லவன்
    • தொண்டர் சீர் பரவுவார்

நூல் அமைப்பு:

    • இரண்டு காண்டம் 13 சருக்கம் 4286 பாடல்கள்
    • உலகெலாம் என்று இறைவனே அடியெடுத்துக் கொடுக்க பாடப்பட்ட நூல்

 63 நாயன்மார்களில் மூவர் பெண்கள்

    • காரைக்கால்
    • அம்மையார்
    • இசைஞானியார்
    • மங்கையர்க்கரசி
  • நாலாயிர திவ்ய பிரபந்தம் குறித்து எழுதுக.

நாலாயிர திவ்ய பிரபந்தம்

    • ஆழ்வார்களின் பாடல்கள் திவ்வியப்பிரபந்தம் என்று அழைக்கப்படுகின்றனதிராவிட வேதம் என்றொரு பெயரும் இதற்கு உண்டு.
    • ஆழ்வார்கள் திருமாலின் பக்தியில்அன்பில்அருளில்தோற்றத்தில் ஆழ்ந்தவர்கள் எனலாம்
    • முதலாழ்வார்கள்:
      பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்.

ஆழ்வார்கள்பாசுரங்களின் எண்ணிக்கை

1.பொய்கை ஆழ்வார்– 100

2.பூதத்தாழ்வார்– 100

3.பேயாழ்வார்– 100

4.திருமழிசை ஆழ்வார்– 216

5.மதுரகவி ஆழ்வார்– 11

6.நம்மாழ்வார்– 1296

7.குலசேகர ஆழ்வார்-105

8.பெரியாழ்வார்– 473

9.ஆண்டாள்– 173

10.தொண்டரடிப் பொடி ஆழ்வார்– 55

11.திருப்பாணாழ்வார்– 10

12.திருமங்கை ஆழ்வார்– 1137

பொய்கையாழ்வார்

    • பிறந்த ஊர் : காஞ்சிபுரம்பொய்கையில் அவதரித்தவர்,
    • காலம் : 7ம்நூற்றாண்டு
    • எழுதிய நூல் : முதல் திருவந்தாதி
    • பாடல்கள் : 100

பூதத்தாழ்வார்

    • பிறந்த ஊர் : மகாபலிபுரம்
    • காலம் :  7ம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி
    • பாடல்கள் : 100

பேயாழ்வார்

    • பிறந்த ஊர் :  மயிலாப்பூர்
    • காலம்: ஏழாம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி
    • பாடல்கள் : 100

திருமழிசையாழ்வார்

    • பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)
    • காலம் : கி.பி.7ம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத விருத்தம்
    • பாடல்கள் : 216

பெரியாழ்வார்

    • பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிப்புத்தூர்
    • காலம்: 9ம் நூற்றாண்டு 
    • எழுதிய நூல் : பெரியாழ்வார் திருமொழி
    • பாடிய பாடல் : 473

ஆண்டாள்

    • பிறந்த ஊர் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
    • வளர்ப்புத்தந்தை : பெரியாழ்வார்
    • காலம் : 9ம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி
    • பாடிய பாடல் : 173

தொண்டரடி பொடியாழ்வார்

    • இயற்பெயர் : விப்ர நாராயணன்
    • பிறந்த ஊர் : திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)
    • காலம் : எட்டாம் நூற்றாண்டு 
    • எழுதிய நூல் : திருமாலை, திருப்பள்ளி எழுச்சி
    • பாடிய பாடல் : 55

திருமங்கையாழ்வார்

    • பிறந்த இடம் : திருக்குறையலூர்
    • காலம் : எட்டாம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம்,   திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கைபெரிய திருமடல்,சிறிய திருமடல்.
    • பாடிய பாடல் : 1253 

திருப்பாணாழ்வார்

    • பிறந்த ஊர் : உறையூர் (திருச்சி)
    • காலம் : எட்டாம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : அமலனாதிபிரான்
    • பாடிய பாடல் : 10

குலசேகர ஆழ்வார்

    • பிறந்த இடம் : திருவஞ்சைக்களம்
    • காலம் : எட்டாம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : பெருமாள் திருமொழி
    • பாடிய பாடல்  : 105

நம்மாழ்வார்

    • பிறந்த ஊர் : ஆழ்வார் திருநகரி
    • பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி
    • எழுதிய நூல் : பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம்,திருவாய்மொழி
    • பாடல்கள் : 1296

மதுரகவி ஆழ்வார்

    • பிறந்த ஊர் : திருக்கோளூர்
    • காலம் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி
    • எழுதிய நூல் : கண்ணி நுண் சிறுத்தாம்பு
    • பாடல்கள் : 96
  • பகுத்தறிவு இலக்கியம் குறித்து எழுதுக.
    • பகுத்தறிவு என்பதற்கு ஒன்றினைப் பகுத்து அறிதல் என்று பொருள்.
    • சமூகத்தில் நிகழும் நிகழ்வினை மனிதன் ஆராய்ந்து தெளிவுபெற வேண்டும் என்பதே பகுத்தறிவு இலக்கியங்களின் நோக்கம் ஆகும்.
    • கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த கிறித்தவ பாதிரிமார்கள் கல்வி கற்றல், கணவன் இறந்த பின்பு கைம்பெண்களை மறுதிருமணம் செய்ய ஊக்குவித்தல், குழந்தைத் திருமணத்தைத் தடுத்தல் எனப் பல்வேறு கருத்துக்களைக் கூறி மக்களை நல்வழிப்படுத்தினர்.

சுயமரியாதைக் இயக்கம்

    • பெரியார் 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தினைத் தொடங்கினார்.
    • சமமான கல்வி, அனைவருக்கும் கிடைக்கக் கூடிய நீதி, பொருளாதார பொதுவுடைமை, மூடபழக்கத்தை ஒழித்தல் போன்றவை சுயமரியாதை இயக்கத்தின் நோக்கங்களாக அமைந்தன.

சித்தர் இலக்கியம்

    • மனிதர்களிடம் காணப்படாத வியக்கத்தக்க ஆற்றல் கொண்டவர்களைச் சித்தர்கள் என்று அழைக்கின்றனர். இவர்கள் மெய்ஞ்ஞானம் நிரம்பியவர்கள்.   கொண்டவை.
    • சித்தர்கள் பலர் இருப்பினும் வழக்கில் பதினெண்சித்தர்கள் என்று கூறப்படும் மரபு காணப்படுகின்றது.

1.அகத்தியர் 2.இடைக்காடர் 3.உரோமமுனி  4.கருவூரார்   5.காகபுண்டர் 6.கொங்கணர் 7.கோரக்கர் 8.சட்டைமுனி 9.மச்சமுனி 10.போகர் 11.திருமூலர் 12.நந்தி 13. புண்ணாக்கீசர்   14. தேரையர் 15. யூகிமுனி 16.  காலாங்கி நாதர் 17.புலத்தியர் 18. தன்வந்திரி

திருமூலர்

    • இவர் சித்தர் தத்துவத்தின் மூலமுதல்வர்.
    • இவர் பாடிய திருமந்திரம் பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.
    • 3000 பாடல்கள் இயற்றினார்.
    • இத்திருமந்திரம் நிலையாமை உண்மைகளை வலியுறுத்துகின்றதுஒன்றே குலம் ஒருவனே தேவன்”, “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்பன போன்ற புகழ் பெற்ற தொடர்கள் இந்நூலில் இடம்பெற்றவையே.

இராவண காவியம்

    • இயற்றியவர்: புலவர் குழந்தை
    • இக்காப்பியம் ஐந்து காண்டங்களால் ஆனது. அவை1) தமிழகக் காண்டம், 2) இலங்கைக் காண்டம், 3) விந்தக் காண்டம், 4) பழிபுரி காண்டம், 5) இலங்கைக் காண்டம்.
    • இக்காப்பியக் காண்டம் ஒவ்வொன்றும் பல படலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நூலில் அமைந்துள்ள மொத்தப் படலங்கள் ஐம்பத்தேழாகும். பாயிரம் உட்பட ஐந்து காண்டத்திலும் உள்ள மொத்தப் பாக்கள் 3100.
    • புலவர் குழந்தை தாம் படைத்த இக்காவியத்தைத் தமிழர்க்குக் காணிக்கையாக்கியுள்ளார். தமிழர்கள் தம் பண்பாட்டுச் சிறப்பை அறிந்து வாழ்வதற்காக இராவணனின் பெருமை படைப்பதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்

    • புலவர் குழந்தை ஓலவலசுப் பண்ணைக்காரர்குடியில் 1-7-1906இல் பிறந்தார்.
    • முத்துச்சாமிக் கவுண்டர், சின்னம்மையார் என்பவர்களின் ஒரே மகனாவார்.
    • இவர் திண்ணைப் பள்ளியில் கற்ற காலம் மொத்தமாக எட்டு மாதங்களேயாம்.
    • இயற்கையிலேயே கவிபாடும் ஆற்றல் வாய்க்கப் பெற்றவர்.
    • இசைப் பாடல்களே இவர் முதன் முதலாகப் பாடிய பாடல்கள்.
    • ஆசிரியர் உதவியின்றித் தாமே முயன்று தமிழ் கற்றுச் சீரிய புலமை எய்தினார்
    • 1934இல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் புலவர் பட்டம் பெற்றார்.
    • ஆசிரியராகவும் தலைமைத் தமிழாசிரியராகவும் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

பிற படைப்புகள்

    • இராவண காவியத்தைத் தவிர, புலவர் குழந்தை மரபுவழி யாப்பில் அமைந்த அரசியலரங்கம், நெருஞ்சிப்பழம், காமஞ்சரி, உலகப் பெரியோன் கென்னடி, திருநணாச் சிலேடை வெண்பா, புலவர் குழந்தை பாடல் ஆகியவற்றைப் படைத்துள்ளார்
    • திருக்குறள், தொல்காப்பியப் பொருளதிகாரம், நீதிக்களஞ்சியம் ஆகியவை அவரால் விளக்கவுரை எழுதப்பட்ட நூல்களாகும்.

முதல் பருவம் – அலகு – 1 பாடக்குறிப்புகள்

அலகு – 1 –  தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு அறிமுகம்

  • தமிழ் இலக்கிய வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை.

  • அவ்வாண்டுகளில் தோன்றிய இலக்கியங்கள் தமிழ்மொழியை வளப்படுத்தின. ஒரு மொழிக்கு ஒழுங்கையும் சீர்மையையும் தருவதுஇலக்கணம்ஆகும்

இலக்கிய மின்றி இலக்கணம் இன்றே 

எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே 

எள்ளினின் றெண்ணெய் எடுப்பது போல 

இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம்

என்னும் அகத்திய நூற்பா இலக்கிய, இலக்கணம் பற்றி குறிப்பிடுகிறது.

தொல்காப்பியம்

  • பழந்தமிழ் நூல்களுள் தொன்மையும் முதன்மையும் உடையது தொல்காப்பியம்

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு

 முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்

 புலந்தொகுத் தோனே

என்கிறார் பனம்பாரனார்.

  • எழுதியோர் பெயரால் நூல் பெயர் அமையும் மரபு உண்டு. .கா..

எழுதியவர்

நூல் பெயர்

வாய்ப்பியன்

வாய்ப்பியம்

பனம்பாரன்

பனம்பாரம்

நற்றத்தன்

நற்றத்தம்

காக்கைப்பாடினி

காக்கைப்பாடினியம்

  • இது போன்று தொல்காப்பியர் எழுதியமையால் தொல்காப்பியம் எனப் பெயர் பெற்றது.

தொல்காப்பியம் அமைப்பு 

  • தொல்காப்பியம் எழுத்து, சொல். பொருள் என்ற அதிகாரங்களையும், 9 இயல்களாக மொத்தம் 27 இயல்களை உடை 1610 நூற்பாக்களால் ஆனது.

எழுத்ததிகாரம் 

  • எழுத்ததிகாரம், நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உறுப்பியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என 9 இயல்களைக் கொண்டது.

  • தமிழ்மொழியின் எழுத்துக்களையும், சார்பெழுத்துக்களையும் பற்றி குறிப்பிடுகின்றது

  • மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்களையும், மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்களையும், இவ்விரு எழுத்துக்களும் பிறக்கும் முறையினையும் பற்றிய செய்திகளைத் தருகிறது.

சொல்லதிகாரம் 

  • சொல்லதிகாரம், கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என 9 இயல்களைக் கொண்டது.

  • திணை, பால், எண். முதலியனவும், வேற்றுமை வகைகளும், சொல்லின் முதல், ஈறு, இடை சந்தி, சாரியை, விகாரம் என்னும் 6 உறுப்புகளும், பெயர், வினை எச்சங்களும், இடை உரிச்சொற்களும் பற்றி குறிப்பிடுகிறது.

  • இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் சொற்களும் இடம்பெறுகின்றன

  • ஆறுதொகை வகைகளும், 10 வகை எச்சங்களும், சொல்மரபுகளும், அவைகளை ஆளும் முறைகளும் அமைந்துள்ளன.

  • வடசொற்கள் ஏற்றுக்கொள்ளும் முறையை

வடசொற்கிளவி வடவெழுத்து ஓரீஇ 

எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே

என்கிறார் தொல்காப்பியர்

பொருளதிகாரம் 

  • பொருளதிகாரம், அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என 9 இயல்களைக் கொண்டது.

  • இல்வாழ்க்கைப் பற்றிய செய்திகள் அகப்பொருள் என்றும், மற்ற அனைத்தும் புறப்பொருள் என்றும் அழைக்கப்படுகின்றன

  • ஆணும் பெண்ணும் இணைந்து அன்பால் சேர்ந்து வாழும் வாழ்க்கைஅகவாழ்க்கைஆகும்

  • வீரம் விளங்க கொடையில் சிறந்து புகழ்பெற்று வாழும் வாழ்க்கைபுறவாழ்க்கைஆகும்.

  • குறிஞ்சி .முல்லை மருதம், நெய்தல்,பாலை கைக்கிளை, பெருந்திணை என்னும் ஏழும் அகத்திணைக்கு உரிய ஒழுக்கங்கள் ஆகும்

  • குறிஞ்சி .முல்லை மருதம், நெய்தல், பாலை ஐந்தும்அன்பின் ஐந்திணைஎனப்படும்

  • கைக்கிளை’  என்பதுஒரு தலைக்காமம்ஆகும்

  • பெருந்திணைஎன்பதுபொருந்தாக் காமம்ஆகும்.

  • திருமணத்திற்கு முன்னர் தலைவனும், தலைவியும் பிறர் அறியாமல் சந்தித்து அன்பை வளர்த்துக் கொள்வதுகளவுஆகும்.

  • மணம் நிகழ்ந்தபின் அவர்கள் ஊடியும் கூடியும் வாழும் வாழ்க்கைகற்புஆகும்.

  • தொல்காப்பியம், 1 முதற்பொருள் 2. கருப்பொருள், 3. உரிப்பொருள் என முப்பொருள்பற்றி பேசுகிறது

    • நிலமும் பொழுதும்முதற்பொருள்ஆகும்

    • தெய்வம்,உணவு,விலங்கு, மரம், பறை,தொழில், யாழ் என்பனகருப்பொருள்கள்ஆகும்

    • புணர்ச்சி, பிரிவு, இருத்தல், இரங்கல், ஊடல் என்பன முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்ற திணைக்குரியஉரிப்பொருள்கள்ஆகும்.

உரை எழுதியோர் 

  • தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர் தெய்வச்சிலையார், கல்லாடர், பேராசிரியர் ஆகியோர் உரை எழுதியுள்ளனர்.

இறையனார் களவியல் 

  • களவு, கற்பின் இலக்கணத்தை உரைக்கும் இறையனார் களவியல்  நூலில் 33 நூற்பாக்களும், கற்பு பிரிவில் 27 நூற்பாக்களுமாக மொத்தம் 60 நூற்பாக்கள் உள்ளன

  • இந்நூற்பாக்களுக்கான உரை நக்கீரரால் இயற்றப்பட்டு, ‘இறையனார் களவியல் உரைஎனப் பெயர் பெற்றது.

இறையனார் களவியல் உரை

  • நக்கீரர்கீரங்கொற்றனார்தேனூர்கிழார்இவ்வாறு வாய்மொழியாக எட்டு தலைமுறைகள் கடந்து முசிறி நீலகண்டரால் எழுதப்பட்டது என்ற செய்தி உள்ளது.

  • நான்கு வகை உரைகருத்துரை, பதவுரை, பொழிப்புரை, அகலவுரை

  • செவிலியை இந்நூல் கோடாய்(பெற்றுக் கொள்ளும் தாய்) என குறிப்பிடப்படுகிறது.

  • முச்சங்கங்கள் குறித்த செய்திகளை முதலில் குறிப்பிடும் நூல் இறையனார் களவியல் உரை ஆகும்.

சங்கம்

முதல் சங்கம்

இடைச் சங்கம்

கடைச் சங்கம்

இடம்

தென் மதுரை

கபாடபுரம்

வட மதுரை

காலம்

4440

3700

1850

புரந்த அரசர்

காய்சினவழுதி முதலாக கடுங்கோன் ஈறாக 89 பேர்

வெண்டேர் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக 59 பேர்

முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி ஈறாக 49 பேர்

சங்க உறுப்பினர்

549

59

49

புலவர்கள்

4449, அகத்தியர், சிவபெருமான், முருகன், முரஞ்சியூர் முடிநாகராயர்

3700, அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர் கருங்கோழி, வெள்ளூர் காப்பியன், சிறு பாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக்கோன், கீரந்தை

449, சிறுமேதாவியார், சேந்தம் பூதனார், அறிவுடை அரனார், பெருங்குன்றூர் கிழார், இளந்திருமாறன்,

மருதனிளநாகனார், நக்கீரனார்

நூல்கள்

அகத்தியம், பரிபாடல், முதுநாரை, முதுகுருகு

அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம், இசைநுணுக்கம், கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை, அகவல்

அகத்தியம், தொல்காப்பியம்,

நெடுந்தொகை,குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, குற்றிசை, பேரிசை

நம்பியகப் பொருள்

  • கி.பி.13ஆம் நூற்றாண்டில் தோன்றியநம்பி அகப்பொருள்என்ற நூல் அகப்பொருள் இலக்கணத்துக்கு என ஒரு தனிப்பெரும் நூல் ஆகும்.

  • எழுதியவர் : நாற்கவிராச நம்பி

நாற்கவிராச நம்பி 

  • நம்பியகப்பொருளின் ஆசிரியர் நாற்கவிராச நம்பி

  • இயற்பெயர் நம்பி 

  • ஊர் புளிங்குடி 

  • சமண சமயத்தை சார்ந்தவர்

  • தமிழ், வடமொழி இரண்டிலும் வல்லவர்

  • ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி. வித்தாரக்கவி என்னும் நால்வகைப் பாக்களும் புனையும் ஆற்றல் பெற்றவர். அதனால் இவர். “நாற்கவிராசன் என அழைக்கப்பட்டார்

  • நம்பி தம் அகப்பொருள் நூலுக்கு அகப்பொருள் விளக்கம் என்று பெயரிட்டும், இந்நூலுக்கு உரையும் எழுதினார்

  • தம் நூலைப் பாண்டியன் குலசேகரன் அவையில் அரங்கேற்றினார்.

அகச்செய்திகள்

  • ஓர் ஆணுக்கும். ஒரு பெண்ணும் இடையே ஏற்படும் காதல் உணர்வை மையமாகக் கொண்டு அமைவதுஅகப்பொருள் இலக்கணம்ஆகும்

நூலின் அமைப்பு 

  • நாற்கவிராச நம்பியால் இயற்றப்பெற்ற அகப்பொருள் விளக்கம் 

  1. அகத்திணையியல்(116)

  2. களவியல்(54)

  3. வரைவியல்(29)

  4. கற்பியல்(10)

  5. ஒழிபியல்(43) 

என்ற ஐந்து பகுதிகளை உள்ளடக்கியது. 252 நூற்பாக்களைக் கொண்டது ஆகும்.

  • அகத்திணையியல் 

  • அகத்திணையியலில் ஐந்திணைப்பாகுபாடுகள். முதல் கரு. உரிப்பொருள் பற்றியச் செய்திகள் உள்ளன

  • களவியல் 

  • களவின் இலக்கணங்களாக எண்வகைத் திருமணம் பற்றியும். கைக்கிளையின் பாகுபாடுகளாக காட்சி. ஐயம், துணிவு. குறிப்பறிதல் பற்றியச் செய்திகளும் உள்ளன.

  • வரையியல்

  • வரைவியலில் திருமணம் செய்தல், அறத்தொடு நிற்றல், தலைவி, தோழி, செவிலி அறத்தோடு நிற்கும் திறம் பற்றி கூறுகிறது

  • கற்பியல் 

  • கற்பியலில் இல்லறம் நடத்தும் கிழவன், கிழத்தியின் பாங்கும். கற்பின் சிறப்பும், கற்பிற்குரிய இலக்கணத்தை பற்றியும் பேசுகிறது. இல்வாழ்க்கையில் பிரிவானது,

  1. பரத்தையிற் பிரிவு

  2. ஓதல் பிரிவு

  3. காவல் பிரிவு

  4. தூது பிரிவு

  5. துணைவயிற் பிரிவு

  6. பொருள்வயிற் பிரிவு

என 6 வகைப்படும்.

  • ஒழிபியல் 

  • ஒழிபியலில் அகப்பாட்டு உறுப்புகள் 12 ஆகும். அவை, திணை, கைக்கோள், கூற்று, கேட்போர், இடம், காலம், பயன், முன்னம், மெய்ப்பாடு, எச்சம், பொருள் வகை, துறை ஆகும்

புறப்பொருள் வெண்பாமாலை

  • பொருள் இலக்கணத்தின் ஒரு கூறாகிய புறப்பொருள் பற்றிப் பேசுவதால் புறப்பொருள் எனப் பெயர் பெற்றது

  • இயற்றியவர்ஐயனாரிதனார்

  • மாலை என்பதன் பொருள் வரிசை ஆகும். பூக்களைக் கொண்டு தொடர்ச்சி மாறாமல் ஓர் ஒழுங்கு முறையில் வரிசையாகத் தொடுப்பதால் பூமாலையாக உருப்பெற்றது. அதுபோல, வெண்பா, யாப்பு என்ற பூவைக் கொண்டு போர் பற்றிய ஒழுகலாறுகளைத் தொடர்ச்சி மாறாத வண்ணம் ஓர் ஒழுங்குறத் தொடுக்கப்பட்டமை கருதி மாலை என்ற சொல்புறப்பொருள் வெண்பாஎன்பதன் பின் வைக்கப்பட்டு உள்ளது. ஆதலால்புறப்பொருள் வெண்பா மாலைஎனப் பெயர் பெற்றது.

  • தொல்காப்பிய உரையாசிரியராகிய பேராசிரியர் புறப்பொருள் வெண்பாமாலையை வழிநூல்என்கிறார்

பன்னிரு திணைகள் 

  • பொதுவாழ்வில் காணப்படும் வீரம், கல்வி, கொடை, புகழ் பற்றியும், நிலையாமை பற்றியும் புறப்பாடல்களில் இடம்பெறும். வெட்சி, கரந்தை, வஞ்சி,காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை எனப் பன்னிரெண்டு திணையாகப்புறப்பொருள் வெண்பாமாலைஅமைந்து உள்ளது.

  1. வெட்சி : ஆக்களைக் கவர்தல்

  • பண்டையக் காலத்தில் பகை நாட்டின்மீது போர் தொடுக்க விரும்பும் அரசன், பகை நாட்டுப் பசுக்களைப் போரில் இறந்துப் போகாமல் காக்கத் தன் வீரர்களை அனுப்பி அவற்றைக் கவர்ந்து வரச் செய்வான். அவ்வாறு பசுக்களைக் கவர்ந்து வரச் செல்வோர்  ‘வெட்சிப் பூவைச்‘  சூடிச் செல்வர்.

2.கரந்தைத் திணை : கவர்ந்த பசுக்களைப் பகைவரிடம் இருந்து மீட்பது

  • பசுக்கூட்டத்தைக் கவர்ந்து செல்வோரிடமிருந்து பசுக்கூட்டதை மீட்பது உண்டு. அப்படி மீட்போர்கரந்தைப் பூவைஅணிந்து செல்வர்.

3.வஞ்சித் திணை: மண்ணாசை கொண்டு, பகை வேந்தனது நாட்டைக் கைப்பற்றும் முயற்சியில்வஞ்சிப்பூச் சூடிச்செல்வது வழக்கம் ஆகும்.

4.காஞ்சித் திணை : மண்ணாசை கொண்டு போர்தொடுத்த பகைவர் படையைத் தன்னாட்டு எல்லைக்குள் புகாதவாறுகாஞ்சிப் பூவைச் சூடி நின்று தடுப்பது ஆகும்.

  1. நொச்சித் திணை : மதிலை வளைத்துக் கொண்ட பகைவர்களை உள்ளே புகாதவாறு தடுத்துக் காக்கநொச்சிப்பூச்அணிவர்.

  2. உழிஞைத் திணை : மாற்றான் மதிலை முற்றுகையிடுவது உழிஞைத் திணை ஆகும். அத்தகு செயலில் ஈடுபடுவோர்உழிஞைப்பூஅணிவர்.

7.தும்பைத் திணை : வேந்தர் இருவர் மாறுபாடு கொண்டு எதிர் நின்று போரிடுவது தும்பைத் திணை ஆகும். அதற்கு அடையாளமாகத்தும்பைப் பூஅணிவர்.

8.வாகைத் திணை : போரில் வெற்றி பெற்ற அரசன் சூடுவதுவாகைப்பூஆகும். வாகைப் பூச்சூடி ஆரவாரிக்கும் நிலைவாகைத் திணைஆகும்.

9.பாடாண் திணை : பாடப்பெறும் அரசனுடைய வீரம், கொடை, புகழ் முதலிய அரும்பண்புகளைப் போற்றிப் பாடுவது ஆகும். பாடாண்திணை = பாடு ஆண் + திணை எனப்பிரியும். பாடப்படும் ஆண் மகனின் ஒழுகலாறு எனப் பொருள்படும்.

10.பொதுவியல் : புறத்திணைகளுக்கு எல்லாம் பொதுவாக கூறும் செய்திகள்பொதுவியல்ஆகும்.

11.கைக்கிளை : தலைமகன், தலைமகள் என்ற இருவரிடத்தில் ஒருவரிடம் மட்டும் தோன்றுகின்ற ஒரு தலைக்காமமே கைக்கிளைஆகும்.

12.பெருந்திணை : பெருந்திணை என்பது பொருந்தாக் காதலை குறிக்கும். இஃது இருபாலாரிடத்தும் தோன்றும்.

நன்னூல்

  • பவணந்தி முனிவரால் நன்னூல் இயற்றப்பட்டது

  • இந்நூல் எழுத்து சொல் ஆகிய இரண்டு இலக்கணங்களையும் கூறுகிறது.

  •  ‘அருங்கலை விநோதன்என்ற பட்டப்பெயர் பெற்ற சீயகங்கன் என்ற அரசனின் வேண்டுகோளின்படிநன்னூல்இயற்றப்பட்டது

  • இந்நூலுக்கு மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர், கூழங்கைத் தம்பிரான், விசாகப் பெருமாளையர், இராமானுச கவிராயர், ஆறுமுக நாவலர் ஆகியோர் உரை எழுதி உள்ளனர்.

நன்னூலின் அமைப்பு

  • நன்னூல் பாயிரம் 55 சூத்திரங்களை உடையது

  • எழுத்து அதிகாரம் 5 இயல்களும், 202 நூற்பாக்களும் உடையது.

  • சொல் அதிகாரம் 5 இயல்களும், 205 நூற்பாக்களும் உடையது.

எழுத்து இலக்கணம்

  • எழுத்திலக்கணத்தின் பகுதி

  • எழுத்து வகை :இரண்டு ஆகும் அவை 1. முதலொழுத்து 2. சார்பெழுத்து

  • முதலெழுத்து வகை : முப்பது

  • சார்பெழுத்து வகை : பத்து

  • சார்பெழுத்து விரி: உயிர்மெய் (216), முற்றாய்தம் (8), உயிரளவு (21) ஒற்றளவு (42), குற்றியலிகரம் (37), குற்றியலுகரம் (36). ஐகாரக் குறுக்கம் (3). ஒளகாரக்குறுக்கம் (1). மகரக் குறுக்கம் (3), ஆய்தம் (2).

  • பெயர் வகை: நான்கு ஆகும். அவை 1. இடுகுறிப் பொதுப்பெயர் 2. இடுகுறிச் சிறப்பு பெயர் 3. காரணப் பெயர் 4. காரணச் சிறப்புப் பெயர்

  • குற்றெழுத்து : ஐந்து ஆகும். அவை , , , , ஆகும்.

  • நெட்டெழுத்து : ஏழு ஆகும். அவை , , , , , ,

  • சுட்டெழுத்து மூன்று ஆகும். அவை . .

  • சுட்டெழுத்து வகை இரண்டு ஆகும். அவை 1 அகச்சுட்டு 2. புறச்சுட்டு

  • பதம் இரண்டு ஆகும். அவை 1. பகுபதம், பகாாபதம்

  • ஓரெழுத்தொரு மொழி 42

  • புணர்ச்சி இரண்டு ஆகும். 1. இயல்புப் புணர்ச்சி, 2. விகாரப் புணர்ச்சி

  • வேற்றுமை உருபு : .ஆல்,கு,இன், அது, கண்

சொல் இலக்கணம் 

  • மொழி வகை: மூன்று ஆகும். அவை

  1. ஒரு மொழி

  2. தனிமொழி

  3. தொடர்மொழி

  • திணை இரண்டு ஆகும்.

  1. உயர்திணை 2. அஃறிணை

  • பால் ஐந்து ஆகும். அவை,

  1. ஆண்பால், 2.பெண்பால், 3. பலர் பால், 4. ஒன்றன் பால், 5. பலவின் பால்

  • இடம் மூன்று ஆகும். அவை

  1. தன்மை

  1. முன்னிலை

  2. படர்க்கை

  • சொல்வகை நான்கு ஆகும். அவை,

  1. இயற்சொல்

  2. திரிசொல் 

  3. திசைக்சொல்

  4. வடசொல்

  • பொருள்கோள் எட்டு ஆகும். அவை.

  1. ஆற்றுநீர்ப் பொருள்கோள்

  2. மொழிமாற்று பொருள்கள்

  3. நிரனிறை பொருள்கோள்

  4. விற்பூண் பொருள்கோள்

  1. தாப்பிசை பொருள்கோள்

  2. அளைமறியாப்பு பொருள்கோள்

  3. கொண்டு கூட்டு பொருள்கோள்

  4. அடிமறிமாற்று பொருள்கோள்

தண்டியலங்காரம்

  • தொல்காப்பியத்தை அடுத்து அணி இலக்கணம் பயிலப் பெரிதும் பயன்படுவதுதண்டியலங்காரம்’. இந்நூல் தொல்காப்பியத்தையும், வடமொழி நூலான காவியதரிசனத்தையும் அடியொற்றி எழுதப்பட்டது

  • இந்நூலை இயற்றியவர்தண்டிஆவார்

  • 35 அணிகளை உடையது.

  1. தன்மையணி : ஒரு பொருளின் இயல்புத் தன்மையை நேரில் கண்டாற்போல உள்ளப விளக்குவதுதன்மையணி’.

  2. உவமையணி : ஒருவன் தான் கூறக் கருதியப் பொருளை அதனோடு ஒப்புயை உடைய மற்றொரு பொருளோடு இயைபுபடுத்திக் கூறுவதுஉவமையணி

  3. உருவகயணி : உவமைக்கும் பொருளுக்கும் வேற்றுமையின்றி இரண்டையும் ஒன்றாகக் கூறுவதுஉருவக அணி’.

  4. தீவக அணி : தீவகம் என்பது விளக்கு ஆகும். ஓரிடத்தில் வைக்கப்பட்ட விளக்கு பல இடங்களிலும் உள்ள பொருளை விளக்க காட்டும். அதுபோல ஓரிடத்தில் நின்ற சொல் பல இடங்களிலும் சென்று பொருளை விளக்குவதுதீவக அணி’.

  5. பின்வரு நிலையணி : முன்னர் வந்த சொல்லாவது, பொருளாவது பல இடத்தும் வருமாயின் அதுபின்வருநிலை அணி’.

  6. முன்னவிலக்கணி : கவிஞன் ஒரு பொருளைக் குறிப்பால் மறுத்து மேன்மை தோன்றச் சொல்லுவதுமுன்னவிலக்கணி’.

  7. வேற்றுப் பொருள் வைப்பணி : கவிஞன் ஒரு பொருளைச் சிறப்பிக்கக் கருதுவான் அதற்கு உலகமறிந்த வலிவுடைய பிறிதொரு பொருளை எடுத்துக்காட்டி முடிப்பான் இதுவேவேற்றுப் பொருள் வைப்பு அணி

  8. வேற்றுமையணி : கவிஞன் ஒப்புமை உடைய இரு பொருள்களை எடுத்துக் கொண்டு முன்னர் அவற்றுக்குரிய ஒப்புமையைக் கூறுவான். பின்னர் வேற்றுமையையும் கூறி வேறுபடுத்துவதுவேற்றுமை அணி’.

  9. விபாவனை அணி : கவிஞன் ஒன்றன் வினையைக் குறிப்பிடுகின்ற பொழுது அதற்குப் பலரால் அறியப்படும் காரணத்தைக் கூறாமல் பிறிதொரு காரணத்தைக் குறிப்பாகப் புலப்படும்படி இயல்பாக உரைப்பதுவிபாவனை அணி’.

  10. ஒட்டணி : கவிஞன் தான் கூறக் கருதிய ஒன்றை நேரே கூறாமல் விடுத்து அதனை ஒப்புமை உடைய பொருளோடு ஒட்டிக் கூறுவான் அதன் வாயிலாகச் சொல்லக் கருதியதைக் குறிப்பாக உணர்த்துவான். ஒட்டிக் கூறுவதால்ஒட்டணிஎன பெயர் பெற்றது.

  11. அதிசய அணி : கவிஞன் தான் கூறக் கருதிய ஒருபொருளின் உண்மைத் தன்மையினை உள்ளபடி கூறாமல் உயர்த்திக் கூறுதலை விரும்புவான். அக்கவிஞனின் கூற்றானது சான்றோருக்கும் வியப்பைத் தருவதாய் உலக இயல்புக்கு மாறானதாய் அமைவதேஅதிசய அணி’.

  12. தற்குறிப்பேற்ற அணி : இயல்பாக நிகழும் நிகழ்ச்சி ஒன்றின் மேல் கவிஞன் தான் கூறக் கருதிய பொருளை ஏற்றிச் சுவைபட உரைப்பதுதற்குறிப்பேற்ற அணி’.

  13. ஏதுவணி : ஒரு பொருளில் தோன்றும் தன்மைக்கு இதனாலேயே இது நிகழ்ந்தது எனக் காரணத்தை மிகுந்துச் சொல்லுவதுஏது அணி’.

  14. நுட்பவணி : பிறருடைய கருத்தை அறிந்து. அதற்குரிய மறுமொழியை சொல்லாமல் வெளிப்படுத்தாமல் குறிப்பாலோ செயலாலோ அரிதா உய்த்துணரும்படி புலப்படுத்துவதுநுட்ப அணி’.

  15. இலேசவணி : ஒருவர் தன்னிடத்தில் வெளிப்படும் மெய்ப்பாடு உணர்விற்குரிய மெய்யான காரணத்தை மறைத்து அது வேறொன்றால் நிகழ்ந்ததாக கூறுவதுஇலேச அணி’.

  16. நிரல்நிறையணி : கவிஞர் தம் செய்யுள்களில் முதலில் சொற்பொருள்களை வரிசைப்படுத்துவர். அவற்றோடு தொடர்புடையவற்றைப் பின்னர் அதே முறையில் பொருள்படுமாறு வரிசைப்படுத்திப் பாடுவர். இவ்வாறு அமைவதேநிரல்நிறை அணிஆகும்.

  17. ஆர்வமொழி அணி : உள்ளத்தின்கண் நிகழும் ஆர்வத்தின் காரணமாக நிகழ்ச்சிகளை மிகுதிபடுத்திக் கூறுவதுஆர்வமொழி அணி’.

18.சுவையணி : உள்ளத்தின்னகண் நிகழும் தன்மைகளைப் பிறர் அறியும் வகையில் உடலால் புலப்படுத்திக் காட்டுவது மெய்ப்பாடு ஆகும். அவை நகை அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி என்பலை இவை எட்டும் சுவை என்றும் கூறப்படும். இச்சுவையினை விளக்குவதேசுவையணிஆகும்.

19.தன்மேம்பாட்டுரையணி : ஒருவனுடைய ஆற்றலைப் பிறர் அறியார். அவ்இடங்களில் தன்னுடைய ஆற்றலைத் தானே எடுத்துக் கூறுவர். இவ்வாறு எடுத்து மொழிவதேதன்மேம்பாட்டுரை அணி’.

20.பரியாயவணி : கவிஞன் தான் கூறக் கருதிய ஒன்றனை அவ்விடத்துக் கூறுதல் தகாது எனக் கருதிப் பிறிதொன்றால் அப்பொருளை விளக்குவதுபரியாயவணி

  1. சமாயிதவணி : தன்னால் முயலப்பட்ட தொழல் ஒன்று. அதற்குரிய பயனைத் தரவில்லை. அப்பயன் வேறொன்றினால் தரப்பட்டதாக முடிக்கப்படுவதுசமாயிதவணி’.

  2. உதாத்தவணி : ஒருவருடைய பொருள் செல்வத்தையும், உள்ளத்தின் செல்வத்தையும் வியக்கத்தக்கதாக உயர்த்திக் கூறுவர். அதுவேஉதாத்தம் அணி’.

  3. அவநுதியணி : யாதானும் ஒரு பொருளின் உண்மைத் தன்மையை மறுத்துப் பிறிதொரு தன்மையை அதன்கண் ஏற்றி உரைப்பதுஅவநுதி அணி’.

  4. சிலேடையணி : செய்யுளில் இடம்பெறும் ஒரு சொல்லோ தொடரோ தனித்து நின்றும் பிரிந்து நின்றும் பல பொருள்களைத் தரும். அவ்வாறு பல பொருள்பட அமைவதுசிலேடை அணி’.

  5. விசேடவணி : ஒரு பொருளுக்குக் குணம். தொழில், சாதி. உறுப்புப் போன்றவற்றால் ஏதேனும் ஒரு குறைபாடு தோன்றும். அக்குறைபாடு காரணமாக அப்பொருளுக்கு மேம்பாடு தோன்ற உரைப்பதுவிசேட அணி’.

  6. ஒப்புமைக் கூட்டவணி : கவிஞன் தான் கருதிய பொருளைச் சொல்லுமிடத்து அப்பொருளின் குணத்தைவிட மிகுந்த குணமுடைய வேறுபொருள்களை ஒருங்கே சொல்லுவதுஒப்புமைக் கூட்டவணி

  7. விரோதவணி : இவ்வுலகத்தில் ஒன்றற்கொன்று மாறுபட்ட சொற்களும் உண்டு. பொருள்களும் உண்டு. அவற்றைக் கொண்டு மாறுபாட்டுத் தன்மையின் விளைவு தோன்றக் கூறுவதுவிரோத அணி’.

  8. மாறுபடு புகழ்நிலையணி : கவிஞன் தான் பழிக்கக் கருதிய பொருளைக் கூறாது மற்றொரு பொருளைப் புகழ்ந்து கூறுவான். இதனைமாறுபடு புகழ்நிலை அணி”.

  9. புகழாப் புகழ்ச்சியணி : ஒன்றைப் பழித்துக் கூறுவது போன்ற தன்மையால் அப்பொருளுக்கு மேம்பாடு தோன்றும் படியாக உரைப்பதுபுகழாப்புகழ்ச்சி அணி’.

  10. நிதரிசனவணி : ஒன்றன் காரணமாகப் பொருளிடத்து ஒரு நிகழ்வு தோன்றும். அந்நிகழ்வு பிறிதொன்றற்கு நன்மையும் பயக்கும். தீமையும் பயக்கும். இவ்வாறு இரு நிலையில் காட்டுவதுநிதரிசன அணி’.

  11. புணர்நிலையணி : செயலாலும் பண்பாலும் ஒத்த இரு பொருள்கள் உள்ளன அப்பொருள்களுக்கு ஒரு வினையையோ, பண்பையோ பொருந்தும் வண்ணம் கூட்டிச் சொல்வதுபுணர்நிலை அணி’. 

  12. பரிவருத்தனையணி : ஒரு பொருளைக் கொடுத்து வேறொரு பொருளைப் பெற்றுக கொள்வதாகச் சொல்வதுபரிவருத்தனை அணி’.

  13. வாழ்த்தணி: இவருக்கு இன்னது பொருந்து என்று கவிஞன் தாம் நினைத்தை விரித்துச் சொல்லுவதுவாழ்த்தணி’.

  14. சங்கீரணவணி : தன்மை முதலாக வாழ்த்து ஈறாகக் கூறப்பட்ட பொருளணிகள் 33 ஆகும். அவற்றுள் இரண்டுக்கு மேற்பட பல அணிகள் தம்முள் கலந்துவர உரைப்பதுசங்கீரண அணிஆகும்.

  15. பாவிகவணி : ஒரு பாடலாலோ பல பாடல்களாலோ ஆகிய செய்யுள் வகைகள் அடங்காமல் தொடர்நிலையாகப் பாடப்பெறுவது காப்பிய வகை ஆகும். அவ்வகையுள் ஒன்றை முழுவதுமாக நோக்கிக் கொள்ளப்படுவதாய்க் கவிஞனால் கருதிச் செய்யப்படுவதேபாவிகம் அணிஆகும்.

யாப்பருங்கலக் காரிகை

  • யாப்புஎன்றால்கட்டுதல்’. எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய உறுப்புகளை ஒருசேரக் கட்டி அமைப்பது

  • இந்நூலின் ஆசிரியர் அமிர்தசாகரர்

  • இந்நூலுக்கு குணசாகரர் உரை எழுதியுள்ளார்.

நூலின் அமைப்பு

எழுத்து

குறில், நெடில், ஆய்தம், ஒற்று, அளபெடை, குறுக்கம் என ஆறு வகைகளில் எழுத்துக் குறித்துத் தெரிந்து கொள்ளுதல் போதுமானது.

அசை

ஓரெழுத்தோ, இரண்டெழுத்தோ நிற்பது அசை எனப்படும். ஒற்றெழுத்தைக் கணக்கிடுவதில்லை. (ஒற்றெழுத்து = மெய்யெழுத்து). அசையானது நேரசை, நிரையசை என இருவகைப்படும்.

சீர்

அசைகளால் அமைவது சீர். ஒரு சொல்லோ, ஒரு சொல்லின் பகுதியோ, இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சொற்களோ ஒரு சீராக அமையும். சீர் நான்கு வகைப்படும். அவை, ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் ஆகும்.

தளை

நின்ற சீரின் இறுதி அசையும், வரும் சீரின் முதல் அசையும் தம்முள் பொருந்துவதுதளைஎனப்படும். தளை ஏழு வகைப்படும்.

  • நேர் ஒன்று ஆசிரியத் தளை மாமுன் நேர்

  • நிரைஒன்று ஆசிரியத்தளை விளமுன் நிரை

  • இயற்சீர் வெண்டளை மாமுன் நிரை

  • விளமுன் நேர்

  • வெண்சீர் வெண்டளை காய்முன் நேர்

  • கலித்தளை காய்முன் நிரை

  • ஒன்றிய வஞ்சித்தளை கனி முன் நிரை

  • ஒன்றாத வஞ்சித்தளை கனி முன் நேர்

அடி

சீர்களால் அமைவது அடி. இது ஐவகைப்படும். அவை:

  • குறளடி – 2 சீர்களை உடையது.

  • சிந்தடி – 3 சீர்களை உடையது.

  • அளவடி () நேரடி – 4 சீர்களை உடையது.

  • நெடிலடி – 5 சீர்களை உடையது.

  • கழிநெடிலடி – 6 () அதற்குமேற்பட்ட சீர்களை உடையது.

  • சீர்களுக்கேற்ப அறுசீர்க்கழிநெடிலடி,

  • எழுசீர்க்கழிநெடிலடி என்றவாறு பெயர் பெறும்.

தொடை வகை

தொடை எட்டு வகைப்படும். அவை : மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை, அந்தாதி, இரட்டை, செந்தொடை ஆகும்.

வெண்பா

  • ஈற்றடி முச்சீரும் ஏனைய அடி நாற்சீரும் பெற்று வரும்

  • மாமுன் நிரை, விளம் முன் நேர், காய் முன் நேர் என்பனவாகிய வெண்பாத் தளைகளையே பெற்று வரவேண்டும்

  • ஈற்றுச் சீர் ஓரசையாலோ, ஓரசையுடன் குற்றியலுகரமோ பெற்று முடிதல் வேண்டும்

  • இவ்வெண்பா குறைந்தது இரண்டு அடிகளைக் கொண்டது.

ஆசிரியப்பா

  • உரைநடை போன்று அமைவதே ஆசிரியப்பா

  • ஈரசைச் சீர்கள் நான்கு கொண்ட அளவடிகளால் அமைவது இது

  • எதுகை, மோனைகளால் சிறப்புப் பெறுவது. குறைந்தது மூன்றடிகளைப் பெற்று வரும்

  • அடி மிகுதிக்கு எல்லை இல்லை.

கலிப்பா

  • நிரை முதலாகிய வெண்பாவுரிச்சீர் ( புளிமாங்காய், கருவிளங்காய்) மிகுந்துவரும்.

  • கலிப்பாவுக்குரிய கலித்தளைகளுடன் பிறதளைகளும் கலந்துவரும்.

  • கலிப்பாவுக்குரிய அடி அளவடி. அம்போதரங்க உறுப்பில் குறளடி, சிந்தடிகளும், அராக உறுப்பில் நெடிலடி, கழிநெடிலடிகளும் வரும்.

  • கலிப்பாவின் ஓசை, துள்ளல் ஓசை.

  • கலிப்பா ஒன்றையொன்று தொடரும் உறுப்புகளால் ஆகியது. அவை தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறுமாகும்.

வஞ்சிப்பா

  • வஞ்சியுரிச்சீர் எனப்படும் கனிச்சீர்களால் ஆயது வஞ்சிப்பா. சிறுபான்மை காய்ச்சீர்களும் கலந்து வரலாம்.

  • ஒன்றிய வஞ்சித்தளையும் ஒன்றாத வஞ்சித்தளையும் வரும். சிறுபான்மை பிறதளைகளும் வரலாம்.

  • வஞ்சிப்பாவிற்குரிய அடி குறளடியும் சிந்தடியும் ஆகும். அதாவது ஒரு வஞ்சிப்பா முழுமையும் குறளடிகளாய் வரும் ; அல்லது சிந்தடிகளாய் வரும். வஞ்சிப்பாவின் அடிச்சிறுமை மூன்றடி ;பெருமைக்கு வரம்பு இல்லை.

  • வஞ்சியடிகளின் இறுதியில் ஒரு தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் கொண்டு வஞ்சிப்பா முடிவடையும்.

ஒற்றுப்பிழை தவிர்த்தல்

  • ஒற்றுப்பிழை என்பது தமிழ் எழுதும் போது ஏற்படும் ஒரு பிழை. அது, வலி மிக வேண்டிய இடத்தில் மிகாமலும், மிகக் கூடாத இடத்தில் மிகுதலும் ஆகும். இதனைத் தவிர்க்க, வல்லெழுத்து மிகும், மிகா இடங்களை அறிந்துகொள்வது அவசியம்

  • தமிழில், சில இடங்களில் வல்லெழுத்துக்கள் (க், ச், ட், த், ப், ற்) மிகுந்து வரும். அதாவது, இரண்டு சொற்கள் இணையும் போது, இடையில் இந்த எழுத்துகள் சேரும். எடுத்துக்காட்டாக, “கல் + சிலை = கற்கள் சிலைஎன்பதில்க்மிகுந்துள்ளது

  • சில இடங்களில், இந்த வல்லெழுத்துக்கள் மிகக் கூடாது. உதாரணமாக, “அது + புத்தகம் = அது புத்தகம்இதில் ஒற்று மிகக் கூடாது

  • இந்த ஒற்று மிகுதலில் ஏற்படும் பிழைகளே ஒற்றுப்பிழை எனப்படும்

அது

  • உயிர்மெய் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொற்களின் முன் வரும்.

  • எடுத்துக்காட்டாக: அது புத்தகம், அது மரம், அது குழந்தை

அஃது

  • உயிர் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொற்களின் முன் வரும்.

  • எடுத்துக்காட்டாக: அஃது ஆமை, அஃது எல்லை, அஃது ஊர்

ஒரு

  • ஒருஎன்பது மெய்யெழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன் வரும்.

  • எடுத்துக்காட்டாக, “ஒரு வீடு“, “ஒரு மரம்“, “ஒரு புத்தகம்” 

ஓர்

  • ஓர்என்பது உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன் வரும்.

  • எடுத்துக்காட்டாக, “ஓர் ஆறு“, “ஓர் ஐந்து“, “ஓர் ஊர்” 

வல்லினம் மிகும் இடங்களை அறிதல்:

  • வல்லினம் மிகும் இடங்கள் என்பது ஒரு சொல்லின் இறுதியில் வல்லின மெய்யெழுத்துக்கள் (க், ச், த், ப்) மிகுந்து வரும் இடங்களைக் குறிக்கும்.

சுட்டு, வினா எழுத்துக்களை அடுத்து:

  • , , , , போன்ற சுட்டு மற்றும் வினா எழுத்துக்களை அடுத்து வரும் போது வல்லினம் மிகும்

  • எடுத்துக்காட்டாக, “ + குடம் = அக்குடம்“, “இந்த + பக்கம் = இந்தப்பக்கம்“, “ + கேள்வி = எக்கேள்வி” 

உவமைத் தொகையில்:

  • ஒரு பொருளை வேறொரு பொருளுடன் ஒப்பிட்டு கூறும் போது வல்லினம் மிகும்.

  • எடுத்துக்காட்டாக, “தாமரை + முகம் = தாமரைமுகம்“, “மயில் + தோகை = மயில்தோகை

இரண்டாம் வேற்றுமை உருபு () மறைந்து வரும்போது:

  • இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வரும்போது வல்லினம் மிகும்

  • எடுத்துக்காட்டாக, “பாலை + உண்டான் = பாலைஉண்டான்“, “பழத்தைத் தின்றான் = பழத்தின்றான்

பெயரெச்சம், வினையெச்சம்:

  • பெயரெச்சம் மற்றும் வினையெச்சம் ஆகியவற்றின் பின் வல்லினம் மிகும்

  • எடுத்துக்காட்டாக, “ஓடிய + குதிரை = ஓடியக்குதிரை“, “செய்து + பார்த்தான் = செய்துப்பார்த்தான்

வினைத்தொகை:

  • வினைத்தொகையில் வல்லினம் மிகும்

  • எடுத்துக்காட்டாக, “சுட்டு + களம் = சுட்டுக்களம்“, “வீசு + தென்றல் = வீசுதென்றல்

எதிர்மறைப் பெயரெச்சம்:

  • எதிர்மறைப் பெயரெச்சத்தில் வல்லினம் மிகும்

  • எடுத்துக்காட்டாக, “கண்ட + காட்சி = கண்டகாட்சி“, “செல்லாத + பாதை = செல்லாதப்பாதை

பண்புத்தொகை:

  • பண்புத்தொகையில் வல்லினம் மிகும்

  • எடுத்துக்காட்டாக, “செம்மை + தாமரை = செந்தாமரை“, “வெண்மை + புறா = வெண்புறா” 

உரிச்சொற்றொடர்களில்:

  • உரிச்சொற்றொடர்களில் வல்லினம் மிகும்.

  • எடுத்துக்காட்டாக, “சால + சிறந்தது = சாலச்சிறந்தது“, “தவ + பெரிது = தவப்பேரிது” 

உம்மைத்தொகை:

  • உம்மைத்தொகையில் வல்லினம் மிகும்

  • எடுத்துக்காட்டாக, “இரவும் + பகலும் = இரவுபகலும்“, “கையும் + காலும் = கைகால்கள்

இரட்டைக்கிளவி:

  • இரட்டைக்கிளவி சொற்களில் வல்லினம் மிகும்

  • எடுத்துக்காட்டாக, “சலசல + என்றது = சலசலத்தது“, “படபட + என்றது = படபடத்தது

வல்லினம் மிகா இடங்களை அறிதல்:

  • வல்லினம் மிகா இடங்கள் என்பவை, தமிழ் இலக்கணத்தில் ஒரு சொல்லின் இறுதியில் உள்ள வல்லின எழுத்துக்கள் (க், ச், ட், த், ப், ற்) அடுத்த சொல்லின் முதலில் வரும்போது மிகாமல், அதாவது தோன்றாமல் வருவது ஆகும்.

எழுவாய் சொற்களை அடுத்து:

  • உதாரணத்திற்கு, “தம்பி படித்தான்என்ற இடத்தில், ‘தம்பிஎன்ற எழுவாய்க்குப் பின் வல்லினம் மிகாது

அது, இது, எது ஆகிய சொற்களை அடுத்து

  • அது சென்றது“, “இது பெரியது“, “எது கிடைத்ததுபோன்ற இடங்களில் வல்லினம் மிகாது

பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றின் பின்

  • எழுதிய பாடல்“, “எழுதாத பாடல்போன்ற இடங்களில் வல்லினம் மிகாது

இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வரும் இடங்களில் (இரண்டாம் வேற்றுமைத்தொகை): 

  • கற்றல் நூல்” (கற்ற நூலை) என்ற இடத்தில், ‘உருபு மறைந்து வந்தாலும், வல்லினம் மிகாது

சுட்டு, வினா சொற்களை அடுத்து:

  • அது பறந்தது“, “எது தங்கம்“, “எவை சென்றனபோன்ற இடங்களில் வல்லினம் மிகாது

, , போன்ற வினா எழுத்துக்களின் பின்

  • உயிரெழுத்துகளின் பின்: “வாழ்க தமிழ்போன்ற இடங்களில், உயிரெழுத்தானவிற்கு பின் வல்லினம் மிகாது

சங்க இலக்கியம்

  • கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி”- புறப்பொருள் வெண்பாமாலை (ஐயனாரிதனார்)

  • சங்கத்தால் ஆய்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் சங்க இலக்கியம் ஆகும்.

  • சங்க இலக்கியம் வேறுபெயர் – திணை இலக்கியம், பதினெண்மேற் கணக்கு, பாட்டுத்தொகை (பாட்டுபத்துப்பாட்டு, தொகைஎட்டுத்தொகை)

எட்டுத்தொகை 

  • அகம் சார்ந்த நூல்கள்

    1. நற்றிணை

    2. குறுந்தொகை

    3. ஐங்குறுநூறு

    4. கலித்தொகை

    5. அகநானூறு

  • புறம் சார்ந்த நூல்கள்

    1. புறநானூறு

    2. பதிற்றுப்பத்து

  • அகமும் புறமும்  சார்ந்த நூல்

    1. பரிபாடல்

அகம் சார்ந்த நூல்கள்

நற்றிணை

  • நல்ல திணை 

  • பாடுபொருள்அகம்

  • அடிவரையறை9-12

  • பாடல் எண்ணிக்கை400

  • பாடிய புலவர்கள்:175

  • வேறுபெயர்நற்றிணை நானூறு

  • தொகுப்பித்தவர்: பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி

  • கடவுள் வாழ்த்துப் பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்

  • நற்றிணையில் இடம்பெற்றுள்ள இசைக்கருவிகள் – முழவு, முரசு, தண்ணுமை, கிணைப்பாறை, சிறுபறை, குழல் 

  • அறவோன் மருத்துவன்

  • கணியர் – சோதிடம் பார்ப்பவர்

  • படிவ மகளிர்தவம் செய்யும் பெண்கள்

குறுந்தொகை

  • நல்ல குறுந்தொகை

  • பாடுபொருள்அகம்

  • அடிவரையறை4 – 8

  • பாடல் எண்ணிக்கை400

  • தொகுத்தவர்பூரிக்கோ

  • பெண்பாற் புலவர்கள்: அள்ளூர் நன்முல்லையார், ஆதிமந்தியார், ஔவையார், காக்கைப்பாடினியார்

  • குறவன் நிலத்தை உழுது  தினை விதைப்பவன்

  • சேணான் உயர்வான பரணின் மீது இருப்பவர்

  • கோடியர்கூத்தர்

  • அணிகள்: தலையணிகள், காசுமாலைகள், பூங்குழை, மின்னிழை, சேயிழை, மாணிழை

  • ஆரியக்கூத்தர் மூங்கிலில் கட்டிய கயிற்றின் மேல் ஆடுபவர்.

  • விழா நிறைந்த ஊர் – சாறு கொள் ஊர்

  • நாழிகைக் கணக்கர் – இரவில் தூங்காது காலக்கணக்கைக்  கூறுபவர்.

  • கடப்பாட்டளன்தன் பொருள் பலருக்கும் பயன்பட வேண்டும் என்னும் நல்லெண்ணம் கொண்டவன்.

ஐங்குறுநூறு 

  • ஐந்திணைகளில் ஒவ்வொன்றும் குறைந்த அடிகளைக் கொண்ட நானூறு பாடல்களைக் கொண்டு விளங்குவதால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.

  • பாடுபொருள்அகம்

  • அடிவரையறை : 3-6

  • பாடல் எண்ணிக்கை: 500

  • பாடிய புலவர்கள்5

  • தொகுத்தவர்புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்

  • தொகுப்பித்தவர்யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

  • கடவுள் வாழ்த்து பாடியவர்பாரதம் பாடிய பெருந்தேவனார்

  • நொண்டிப்பத்து அந்தாதி முறையில் அமைந்தது.

  • சொல்லாட்சியால் பெயர் வைத்தல்வேட்கைப்பத்து, வேழப்பத்து, களவன்பத்து

  • போரில் இறந்த வீரர்களுக்கு கல்நட்டு அக்கல்லில் வீரரின் உருவத்தையும் பெயரையும் எழுதிஎழுத்துரைநடுகல் என்னும் பெயருடன் வழிப்பட்டனர்

கலித்தொகை

  • கலிப்பாக்களால் ஆன பாடல்களைக் கொண்டுள்ளமையால் கலித்தொகை எனும் பெயர் பெற்றது.

  • பாடுபொருள்அகம்

  • பாடல் எண்ணிக்கை: 150

    • பாலை– 35 பாடல்கள்

    • குறிஞ்சி– 29 பாடல்கள்

    • மருதம்– 35 பாடல்கள்

    • முல்லை– 17 பாடல்கள்

    • நெய்தல்– 37 பாடல்கள்

  • பாடிய புலவர்கள்5

  • ஏறுதழுவுதல்குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.

  • போர்க்களத்தில் வெற்றிப் பெற்ற பின்துணங்கை கூத்துஆடுவது குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.

  • மகாபாரதம், இராமாயண காப்பிய செய்திகள் இடம்பெற்றுள்ளது

  • உரை– நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.

அகநானூறு

  • அகம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டுள்ளமையால் அகநானூறு எனும் பெயர் பெற்றது.

  • பாடுபொருள்அகம்

  • அடிவரையறை : 13-31

  • பாடல் எண்ணிக்கை400

  • பாடிய புலவர்கள்145

  • தொகுத்தவர்மதுரை உப்பூரிக்குடி கிழார் மகனார் உருத்திர சன்மர்

  • தொகுப்பித்தவர்பாண்டியன் உக்கிரப்பெருவழுதி

  • வேறுபெயர்நெடுந்தொகை

  • நூல் அமைப்பு:

    • களிற்றியானை நிரை– 1-120

    • மணிமிடைப்பவளம்-121- 300

    • நித்திலக் கோவை – 301- 400

  • பாடல் வைப்புமுறை

    • பாலைத்திணை– 1,3,5,7,… ஒற்றைப்படை எண்ணாக வருபவை 

    • குறிஞ்சித்திணை – 2,8,12,18….

    • முல்லைத்திணை – 4,14,24,…

    • மருதத்திணை– 6,16,26,…..

    • நெய்தல் திணை – 10,20,30,……

  • குடவோலை முறை பற்றி குறிப்பிடுகிறது.

  • காவிரிக் கரையில் பங்குனி விழா நடைபெறுவது பற்றிய செய்திகளும் இடம்பெற்றுள்ளன.

புறம் சார்ந்த நூல்கள்

புறநானூறு

  • புறம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டமையால் புறநானூறு எனும் பெயர் பெற்றது.

  • பாடுபொருள்புறம் 

  • பாடல் எண்ணிக்கை – 400

  • வேறுபெயர்புறம்,புறப்பாட்டு

  • புறநானூறு தோன்றிய காலம் தமிழகத்தின் வீரயுகம் என்றும் தமிழகத்தின் பொற்காலம் என்றும் அழைக்கபடுகிறது.

  • பண்டைய காலத்தில் வாழ்ந்த பேரரசர்கள்,சிற்றரசர்கள், வீரர்கள் பற்றிய செய்திகளையும் வழிபாட்டு முறைகள், மக்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை பற்றி செய்திகளையும் தருவதால் தமிழரின் வரலாற்றுப் பெட்டகம் என்று அழைக்கபடுகிறது.

  • கடையேழு வள்ளல்கள்

    • பாரிபறம்பு மலை

    • பேகன்பழனி மலை

    • ஓரிகொல்லிமலை

    • காரிமலையமான் நாடு

    • ஆய்பொதியமலை

    • அதியன்தகடூர்

    • நள்ளிதோட்டி மலை

பதிற்றுப்பத்து

  • பத்து சேரமன்னர்களையும் பத்துப் பத்தாக நூறு பாடல்களில் பாடியுள்ளமையால் பதிற்றுப்பத்து எனும் பெயர் பெற்றது.

  • பாடுபொருள்புறம் 

  • பாடல் எண்ணிக்கை– 100 (கிடைத்தவை 80 )

  • பாடாண் திணையில் மட்டுமே அமைந்த பாடல்களைக் கொண்டுள்ளது.

  • இரும்புக்கடலை என்றும் அழைக்கபடுகிறது.

  • ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் துறை,வண்ணம், தூக்கு, பெயர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

  • திருமணத்தின் போது அருந்ததி என்னும் விண்மீனைப் பார்க்கும் வழக்கத்தைக் குறிப்பிடுகிறது.

  • நான்காம் பத்து அந்தாதி தொடையில் அமைந்துள்ளது.

அகமும் புறமும் சார்ந்த நூல்

பரிபாடல்

  • பரிந்து செல்லும் ஓசையுடைய பாடல்களை கொண்டுள்ளதால் பரிபாடல் எனும் பெயர் பெற்றது.

  • பாடுபொருள்– அகம் புறம் சார்ந்தது.

  • பாடல் எண்ணிக்கை-70(கிடைத்தவை 22)

    • திருமால்-6

    • முருகன்-8

    • வையை-8

  • அடிவரையறை – 25-40

  • பாடிய புலவர்கள்– 13

  • வல்லோன் ஓவியம் வரைபவர்

  • உரைபரிமேலழகர் உரை எழுதியுள்ளார்.

  • அகலிகை, மன்மதன் ஓவியங்கள் திருபரங்குன்றத்தில் இடம்பெற்றிருந்ததை பரிபாடல் மூலம் அறிய முடிகிறது.

பத்துப்பாட்டு

  • திருமுருகாற்றுப்படை முதல் மலைபடுகடாம் முடியப் பத்து நீண்ட பாடல்களின் தொகுப்பே பத்துப்பாட்டு என்று சான்றோரால் வழங்கப்படுகின்றது.

  • ஆற்றுப்படை நூல்கள்

    • திருமுருகாற்றுப்படைநக்கீரர்

    • பொருநராற்றுப்படைமுடத்தாமக் கண்ணியார்

    • சிறுபாணாற்றுப்படைநல்லூர் நத்தத்தனார்

    • பெரும்பாணாற்றுப்படை:கடியலூர் உருத்திரங்கண்ணனார்

    • மலைபடுகடாம்பெருங்கெளசிகனார்

  • அகம் சார்ந்த நூல்கள்

    • முல்லைப்பாட்டு : நப்பூதனார்

    • குறிஞ்சிப்பாட்டுகபிலர்

    • பட்டினப்பாலைகடியலூர் உருத்திரங்கண்ணனார்

  • புறம் சார்ந்த நூல்கள்

    • திருமுருகாற்றுப்படைநக்கீரர்

    • பொருநராற்றுப்படைமுடத்தாமக் கண்ணியார்

    • சிறுபாணாற்றுப்படைநல்லூர் நத்தத்தனார்

    • பெரும்பாணாற்றுப்படை:கடியலூர் உருத்திரங்கண்ணனார்

    • மலைபடுகடாம்பெருங்கெளசிகனார்

    • மதுரைக்காஞ்சி: மாங்குடி மருதனார்

  • அகம் புறம் சார்ந்த நூல்

    • நெடுநல்வாடை

  • பத்துப்பாட்டில் மிகச் சிறிய பாட்டு 103 அடிகளைக் கொண்டது. மிக நீண்டது 782 அடிகளைக் கொண்டது.

திருமுருகாற்றுப்படை

  • பத்துப்பாட்டுக்குக் கடவுள் வாழ்த்துப் போல அமைந்தது திருமுருகாற்றுப்படை.

  • இது 317 அடிகள் கொண்டது

  • முருகன் அருள் பெற்ற ஒருவன், அதைப் பெற விரும்பும் இன்னொருவனை முருகப் பெருமானிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது.

  • இயற்றியவர் நக்கீரர்

  •  இதற்குப் புலவராற்றுப் படை என்றும் ஒரு பெயர் உண்டு.

பொருநராற்றுப்படை

  • சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாட்டுடைத் தலைவன் ஆவார்.

  • இயற்றியவர்முடத்தாமக் கண்ணியார் 

  • இப்பாட்டு 248 அடிகள் கொண்டது.

  • போர்க்களம் பாடும் பொருநன் ஒருவன் (கூத்தன்) தனக்குப் பரிசளித்த கரிகாலனிடம் இன்னொரு பொருநனை ஆற்றுப்படுத்துவதாக இயற்றப்பட்டது இது.

பெரும்பாணாற்றுப் படை

  • இயற்றியவர்கடியலூர் உருத்திரங்கண்ணனார் 

  • பாட்டுடைத் தலைவன்காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன்.

  •  500 அடிகள் கொண்டது

  • பேரியாழை வாசிக்கும் பாணன் ஒருவன், தன்போல் இன்னொரு பாணனைத் தனக்குப் பரிசளித்த வள்ளலான இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டதாதலால் பெரும்பாணாற்றுப் படையாயிற்று.

சிறுபாணாற்றுப் படை

  • இயற்றியவர்இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்

  • பாட்டுடைத் தலைவன்ஓய்மான் நாட்டை ஆண்ட நல்லியக்கோடன்

  • இது 269 அடிகள் கொண்டது.

  • சீறியாழை (சிறிய யாழ்) வாசிக்கும் பாணன் ஒருவனை, நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டமையின் இப்பெயர் பெற்றது.

மலைபடுகடாம்(கூத்தராற்றுப்படை)

  • இயற்றியவர்இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார்

  • பாட்டுடைத் தலைவன்நன்னன் சேய் நன்னன்

  •  583 அடிகள் கொண்டது.

  • பரிசில் பெற்ற கூத்தன், அது பெறவிரும்பிய இன்னொரு கூத்தனை நன்னனிடம் ஆற்றுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டது.

  • மலைக்கு யானையை உவமித்து, அதில் பிறந்த ஓசையைக் கடாம் (மதநீர்) எனச் சிறப்பித்தமையால் மலைபடுகடாம் எனப்பட்டது.

மதுரைக் காஞ்சி

  • பத்துப்பாட்டுள் மிகவும் நீண்ட பாட்டான இது 782 அடிகளைக் கொண்டது.

  • இது, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ் செழியனுக்கு, நிலையாமையை எடுத்துக்கூறும் வகையில் மாங்குடி மருதனார் இயற்றியது.

  • மதுரை மன்னனுக்குக் கூறிய காஞ்சியாகையால் மதுரைக்காஞ்சியாயிற்று (காஞ்சிநிலையாமை).

குறிஞ்சிப் பாட்டு

  • இயற்றியவர்  – கபிலர்

  • இது 261 அடிகள் கொண்ட அகவற்பாட்டாகும்.

  • குறிஞ்சிக்குரிய இயற்கைப் புணர்ச்சியும் அதற்குரிய நிமித்தங்களும் இதில் காணப்பட்டமையால் குறிஞ்சிப்பாட்டாயிற்று.

  • பெருங்குறிஞ்சி என்ற பெயரும் இதற்கு உண்டு.

  • இது அறத்தொடு நிற்றல் என்ற அகத்துறைக்கு அழகான எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது

முல்லைப் பாட்டு

  • பத்துப்பாட்டுள் மிகச்சிறிய பாட்டான இதில் 103 அடிகள் உள்ளன.

  • இதனை இயற்றியவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார்.

  • இதற்கு முல்லை என்ற பெயரும் உண்டு.

  • முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்துள்ளது.

பட்டினப்பாலை

  • பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணைச் செய்யுள் என்பது  பொருள்

  • 301 அடிகள் கொண்டது.

  • இதில் வஞ்சியடிகள் கலந்து வருவதால், இதனை வஞ்சிநெடும் பாட்டு என்பர்.

  • இதன் தலைவன் திருமாவளவன் என்னும் கரிகால் வளவன் ஆவான்.

  • இதனை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

  • பொருள்தேடச் செல்ல விரும்பிய தலைவன் தன் மனைவியைப் பிரிய மனமின்றித் தன் செலவினைக் கைவிட்ட நிலையில் பாடப்பட்டது இது.

  • அகப்பொருள் இதனைச் செலவழுங்குதல் என்று கூறும்.

நெடுநல்வாடை

  • இது 188 அடிகள் கொண்டது.

  • இதனை இயற்றியவர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார்.

  • காதலன் பகைவர்மேல் படையெடுத்துச் சென்று பாசறையில் இருக்கிறான். காதலி பிரிவுத் துயரால் வாடிக்கிடக்கிறாள். காதலியின் துயரைப் போக்க முடியா அரண்மனைப் பெண்டிர், தலைவன் விரைவில் திரும்பி வருமாறு கொற்றவைக்கு வழிபாடு செய்கின்றனர். இதுவே இதன் மையக் கருத்து.

பதினெண்கீழ்க்கணக்கு

  • வெண்பா யாப்பினைப் பயன்படுத்தி, குறைவான அடிகளால் ஐம்பது முதல் ஐந்நூறு பாடல்களைக் கொண்டு விளங்குவது கீழ்க்கணக்கு என்றும் கூறுகிறது பன்னிரு பாட்டியல்.

  •  இத்தொகுப்பில்  பதினெட்டு நூல்கள் அடங்கும். இப்பதினெட்டு நூல்களையும்

நீதி நூல்கள் (11 நூல்கள்)

1) திருக்குறள்
2)நாலடியார் 
3) இன்னா நாற்பது
4) இனியவை நாற்பது 
5)நான்மணிக்கடிகை
6)ஆசாரக்கோவை 
7) சிறுபஞ்சமூலம்
8) ஏலாதி
9)திரிகடுகம் 
10)முதுமொழிக்காஞ்சி
11) பழமொழி நானூறு

அக நூல்கள் (6 நூல்கள்)

1) ஐந்திணை ஐம்பது
2)ஐந்திணை எழுபது 
3) திணைமொழி ஐம்பது
4)  திணைமாலை நூற்று ஐம்பது
5) கைந்நிலை
6)கார் நாற்பது 

புற நூல் (ஒன்று)

1)களவழி நாற்பது

என மூன்று பிரிவுகளுள் அடக்கலாம்.

திருக்குறள்

பெயர்க்காரணம்:

  • குறள் வெண்பாக்களால் பாடப்பட்டுள்ளதால்  இப்பெயர் பெற்றது.

  • திருக்குறள் என்பது “அடையடுத்த கருவியாகு பெயர்

  • ஆசிரியர்திருவள்ளுவர்

  • பாவகைகுறள் வெண்பா

திருக்குறளின் வேறு பெயர்கள்:

  • திருவள்ளுவம்

  • தமிழ் மறை

  • பொதுமறை

  • முப்பால்

  • பொய்யாமொழி

  • தெய்வநூல்

நூல் பகுப்பு முறை:

  • பால் – 3(அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்)

  • அதிகாரம் – 133

  • பாடல்கள் – 1330

  • இயல்கள் – 9

நாலடியார்

பெயர்க்காரணம்:

  • நான்கு அடிகளால் ஆன நானூறு பாடல்களை கொண்டதால் நாலடி நானூறு என்றும் நாலடியார் என்றும் அழைக்கப்படுகிறது

  • ஆசிரியர்சமண முனிவர்கள்

  • தொகுத்தவர்பதுமனார்

  • பாடல்கள் – 400

  • பொருள்அறம்

  • பா வகைவெண்பா

வேறு பெயர்கள்:

  • நாலடி நானூறு

  • வேளாண் வேதம்

நூல் பகுப்பு:

  • இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது

    • அறத்துப்பால் – 13 அதிகாரங்கள்

    • பொருட்பால் – 24 அதிகாரங்கள்

    • இன்பத்துப்பால் – 3 அதிகாரங்கள்

நூலின் சிறப்பு:

  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள ஒரே தொகை நூல் இது.

நான்மணிக்கடிகை

பெயர்க்காரணம்:

  • நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற  அணிகலன் போல் ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகள்  இடம்பெறுவதால் நான்மணிக்கடிகை எனும் பெயர் பெற்றது.

  • ஆசிரியர்விளம்பி நாகனார்

  • ஊர்விளம்பி

  • பாடல்கள் -104

  • பாவகைவெண்பா

இன்னா நாற்பது

பெயர்க்காரணம்:

  • இன்னாதுன்பம். இன்னது இன்னது இன்னா என நாற்பது பாடல்களில் கூறுவதால்  இன்னா நாற்பது எனப்படுகிறது.

  • ஆசிரியர்கபிலர்

  • பாடல்கள் – 1 + 40

  • பாவகைவெண்பா

இனியவை நாற்பது

பெயர்க்காரணம்:

  • இவை இவை இனிமை பயப்பவை என நாற்பது பாடல்களால் கூறுவதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது.

  • ஆசிரியர்பூதஞ்சேந்தனார்

  • பாடல்கள் – 1 + 40

  • பாவகைவெண்பா

திரிகடுகம்

பெயர்க்காரணம்:

  • சுக்குமிளகுதிப்பிலி ஆகிய மூன்றும் உடல் நோயைத் தீர்ப்பானஅதனை போன்று இந்நூலில் அமைந்துள்ள ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்களும் உள்ளந்தின் நோயைத் தீர்க்கும்.

  • திரிமூன்று

  • கடுகம்காரமுள்ள பொருள்

  • ஆசிரியர்நல்லாதானர்

  • பாடல்கள் – 100 + 1

  • பாவகைவெண்பா

ஆசாரக்கோவை

பெயர்க்காரணம்:

  • மனித வாழ்விற்கு இன்றியமையாத ஒழுக்கநெறிகள் பலவற்றையும் ஒன்றிணைத்துக் கூறும் ஒரு தொகுப்பு நூல் என்பதால் அப்பெயர் பெற்றது.

  • ஆசிரியர்பெருவாயின் முள்ளியார்

  • பாடல்கள் – 100

  • பாவகைபல்வேறு வெண்பா வகைகள்

பழமொழி நானூறு

பெயர்க்காரணம்:

  • ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பழமொழி  இடம்பெறுவதால் பழமொழி நானூறு எனப் பெயர்பெற்றது.

  • ஆசிரியர்முன்றுறை அரையனார்

  • பாடல்கள் – 400

  • பாவகைவெண்பா

சிறுபஞ்சமூலம்

பெயர்க்காரணம்:

  • கண்டங்கத்திரிசிறு வழுதுணைசிறுமல்லிபெருமல்லிநெருஞ்சி ஆகிய வேர்கள் இணைந்து மனிதனின் நோயை குணப்பதுவது போல இந்நூல் மனிதனின் உள்ளப்பிணியை நீக்குகிறது.

  • ஆசிரியர்காரியாசான்

  • பாடல்கள்கடவுள் வாழ்த்து 1, பாயிரங்கள் 2, செய்யுட்கள் 102

  • பாவகைவெண்பா

முதுமொழிக்காஞ்சி

பெயர்க்காரணம்

  • மூத்தோர் சொற்கள் பலவற்றைக் கோர்த்த கோவை முதுமொழிக்காஞ்சி எனப்படுகிறது.

  • ஆசிரியர்மதுரைக் கூடலூர்க்கிழார்

  • பாடல்கள் – 100

  • பாவகைகுறள் தாழிசை

ஏலாதி

பெயர்க்காரணம்:

  • ஏலம்இலவங்கம்நாககேசரம்சுக்குமிளகுதிப்பிலி ஆகிய ஆறு மருந்து பொருட்கள் சேர்ந்து உடல் நோயை தீர்ப்பது போன்று இந்நூலின் உள்ள ஒவ்வொரு பாடல் கூறும் ஆறு கருத்துக்களும் மனிதனின் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும்.

  • ஆசிரியர்கணிமேதாவியார்

  • பாடல்கள்பாயிரம் 1, தற்சிறப்பாயிரம் 1, பாடல்கள் 80

  • பாவகைவெண்பா

ஐந்திணை ஐம்பது

பெயர்க்காரணம்:

  • ஐந்து தினைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் ஐம்பது பாடல்கள் பாடப்பட்டதால் ஐந்திணை ஐமபது எனப் பெயர் பெற்றது.

  • ஆசிரியர்மாறன் பொறையனார்

  • பாடல்கள் – 50(5 X 10 = 50)

  • திணைஐந்து அகத்திணை

  • திணை வைப்பு முறைமுல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்

  • பாவகைவெண்பா

ஐந்திணை எழுபது

  • ஐந்து தினைகளுக்கும் பதினாங்கு பாடல்கள் வீதம் எழுபது பாடல்கள் பாடப்பட்டதால் ஐந்திணை எழுபது எனப் பெயர் பெற்றது.

  • ஆசிரியர்மூவாதியார்

  • பாடல்கள் – 70(5*14=70)

  • திணைஐந்து அகத்தினணகளும்

  • திணை வைப்பு முறைகுறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்

  • பாவகை  – வெண்பா

திணைமொழி ஐம்பது

பெயர்க்காரணம்:

  • திணைக்கு பத்து பாடல் வீதும் ஐம்பது பாடல்களைக் கொண்டதால் திணைமொழி ஐம்பது எனப் பெயர்பெற்றது.

  • ஆசிரியர்கண்ணஞ் சேந்தனார்

  • பாடல்கள் – 50(5*10=50)

  • திணைஐந்து அகத்திணைகளும்

  • திணை வைப்பு முறைகுறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்

  • பாவகை  – வெண்பா

திணைமாலை நூற்றைம்பது

பெயர்க்காரணம்:

  • திணைக்கு முப்பது பாடல்கள் வீதம் நூற்றைம்பது பாடல்கள் கொண்டதால் திணைமாலை நூற்றைம்பது எனப் பெயர் பெற்றது.

  • ஆசிரியர்கணிமேதாவியார்

  • பாடல்கள் – 150(5*30=150)

  • திணைஐந்து அகத்திணைகளும்

  • திணை வைப்பு முறைகுறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம்

  • பாவகைவெண்பா

கைந்நிலை

பெயர்க்காரணம்:

  • கை = ஒழுக்கம்

  • ஐந்திணை ஒழுக்க நிலை கூறும் நூல் என்னும் பொருளில் “கைந்நிலை” எனப் பெயர் பெற்றது.

  • ஆசிரியர்புல்லாங்காடனார்

  • பாடல்கள் – 60(5*12=60)

  • திணைஐந்து அகத்திணைகளும்

  • பாவகைவெண்பா

கார் நாற்பது

  • கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையினாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார்நாற்பது என்னும் பெயர் பெற்றுள்ளது

  • இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்.

  • ஆசிரியர்மதுரைக் கன்னங் கூத்தனார்

  • பாடல்கள் – 40(அகநூல்களில் அளவில் சிறியது)

  • திணைஅகத்திணைமுல்லைத்திணை

  • பாவகைவெண்பா

களவழி நாற்பது

பெயர்க்காரணம்:

  • களம் = போர்க்களம்.

  • போர்க்களம் பற்றிய நாற்பது பாடல்களைக் கொண்டதால் களவழி நாற்பது எனப் பெயர் பெற்றது.

  • ஆசிரியர்பொய்கையார்

  • பாடல் – 40

  • திணைபுறத்திணைவாகைத்திணை

  • பாவகைவெண்பா

ஐம்பெரும் காப்பியங்கள்

  • காப்பியம் பெருங்காப்பியம், சிறுங்காப்பியம் என இரு வகைப்படும்.

ஐம்பெரும் காப்பியங்கள

  1. சிலப்பதிகாரம்

  2. மணிமேகலை

  3. சீவகசிந்தாமணி

  4. வளையாபதி

  5. குண்டலகேசி

சிலப்பதிகாரம்

  • இயற்றியவர்– இளங்கோவடிகள்

  • சமயம்சமணம்

பெயர்க்காரணம்:

  • காப்பியத்தின் கதை சிலம்பினைக் மையமாகக் கொண்டு அமைந்ததால் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது.

வேறு பெயர்கள்

  • குடிமக்கள் காப்பியம்

  • முத்தமிழ் காப்பியம்

  • உரையிடையிட்ட பாட்டுடை செய்யுள்

நூல் அமைப்பு

  • புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் கொண்டது.

மூன்று நீதிகள் அல்லது உண்மைகள்

    • அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது ;
      உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவது ;
      ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்  

காப்பியக் கதை

  • கோவலன் கண்ணகி திருமணத்தில் தொடங்கி, மாதவியின் நடனத்தால் மையல் கொண்ட கோவலன், கண்ணகியை விடுத்து, மாதவி மாட்டு விடுதலறியாவிருப்பினன் ஆகி, மணிமேகலையை மகளாய்ப் பெற்று, பல ஆண்டுகளுக்குப் பின் இந்திர விழாவில் கானல் வரிபாடும் நிலையில் ஊழ்வினை காரணமாக மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் மாதவி என அவளைப் பழித்து நீங்கி, கண்ணகியைத் தஞ்சமடைந்து, கவுந்தியடிகள் துணையுடன் மதுரை சென்று, மாதரியிடம் கண்ணகியை அடைக்கலமாக்கி, மதுரை வீதியில் பொற்கொல்லனிடம் சிலம்பு விற்கச் சென்று கள்வன் எனக் குற்றஞ் சாட்டப்பட்டு, மன்னன் கொன்று வா என ஆணையிடக் கொலைக் களத்தில் கோவலன் கொலைப்பட, வண்ணச் சீறடி மண்மகள் அறியாது புகாரில் வாழ்ந்த கண்ணகி மதுரை வீதியில் சீற்றமே உருவாய் அரண்மனை வாயில் புகுந்து மன்னனிடம் தன் கணவன் கள்வனல்லன் என்பதைச் சிலம்பை உடைத்து, மாணிக்கத்தைக் காட்டி தெளிவுப்படுத்த அதனால் குற்றம் செய்தேன் என மன்னன் மடிய, கோப்பெருந்தேவி உயிர் துறக்க,சினம் அடங்காப் பத்தினி மதுரை மாநகரைத் தீக்கிரையாக்கி, வஞ்சி மாநகர் புகுந்து அங்குள்ள மலைக்குறவர் காண, விமானத்தில் ஏறி விண்ணுலகு சென்றாள். இதுவே சிலப்பதிகாரம் காட்டும் கண்ணகி கோவலன் கதையாகும்.

மணிமேகலை

  • இயற்றியவர்– சீத்தலை சாத்தனார்

  • சமயம்பௌத்தம்

பெயர்க்காரணம்

  • காப்பியத்தின் கதை முழுதும் காப்பியத் தலைவி மணிமேகலையை மையமாகக் கொண்டு பாடப்பட்டதால்மணிமேகலை எனப் பெயர் பெற்றது.

வேறு பெயர்கள்

  • இரட்டைக் காப்பியங்கள் (சிலப்பதிகாரம்,மணிமேகலை)

  • இந்நூலின் பதிகம் இந்நூலினை மணிமேகலை துறவு என்று குறிப்பிடுகிறது.

நூல் அமைப்பு

  • முப்பது காதைகள் கொண்டது.

மூன்று கருத்துகள்

  • இளமை நிலையாமை

  • யாக்கை நிலையாமை

  • செல்வம் நிலையாமை 

காப்பியக் கதை 

  • கோவலன் கொலை செய்யப்பட, செய்தியறிந்த மாதவியும். அவள் மகள் மணிமேகலையும் பௌத்த சமயத்தில் சேர்ந்துதுறவியாகின்றனர். புத்தபிரானுக்கு மலர் வேண்டி மலர்வனம் புகுகின்றாள் மணிமேகலை. மணிமேகலை மீது காமம் கொண்ட இளவரசன் உதயகுமரன் அவளைப் பின் தொடர்கிறாள். தன்னைப் பொருள்விலையாட்டி எளக் கூறி இகழ்ந்தும் உதயகுமரன் பின்னால் தன் மனம் செல்வதையறிந்து வருந்துகிறாள் மணிமேகலை. இந்நிலையில் மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத் தீவில் விட்டுவிடுகிறது. அங்குப் பழம்பிறப்பு அறிந்து, மூன்று மந்திரங்களும் பெறுகிறாள். ஆபுத்திரனின் அமுத சுரபியும் கோமுகிப் பொய்கையிலிருந்து கிடைக்கிறது. மந்திரத்தின் உதவியால் விண்ணில் பறந்து புகார் வந்து பசியால் வாடியோர்க்கு உண்டி கொடுத்து உயிர்கொடுக்கிறாள் உதயகுமரன்தரும் துன்பம் நீங்கமந்திரத்தின் உதவியால் காயசண்டிகை வடிவத்தை எடுத்துக்கொள்கிறாள். காயசண்டிகையின் கணவன் காஞ்சனனால் உதயகுமரன் தவறுதலாகக் கொல்லப்படுகிறான். கொன்ற பழி மணிமேகலையை வந்தடைகிறது. அரசன் மகளைக் கொன்றதால் சோழ மன்னன் மணிமேகலையைர் சிறையில் அடைக்கிறான். மகனைப் பறி கொடுத்த அரசி. மணிமேகலையைப் பல்வேறு வகையில் கொடுமைப்படுத்துகிறாள். தவவலிமையால் அவற்றிலிருந்து விடுபடுகிறாள். உண்மை உணர்ந்த அரசி அவளை விடுவித்துத் தன்னை மன்னிக்க வேண்டுகிறாள். பின்னர் மணிமேகலை காஞ்சி சென்று பௌத்த மதக் கொள்கைகளைப் பரப்பி அறவண அடிகளிடம் ஆசி பெறுகிறாள். இதுவே மணிமேகலையின் கதையாகும்.

சீவகசிந்தாமணி

  • இயற்றியவர்திருத்தக்கதேவர்

  • தமிழில் விருத்தப்பாவால் எழுதப்பட்ட முதல் காப்பியம் சீவகசிந்தாமணி ஆகும்.

  • மணநூல் என்று அழைக்கப்படுகிறது.

  • சமயம்சமணம்

நூல் அமைப்பு

  • 13 இலம்பகங்கள் 

  • 3145 பாடல்கள் கொண்டது.

காப்பியக் கதை 

  • காப்பியத்தலைவன் சீவகன். ஏமாங்கத நாட்டு அரசன் சச்சந்தன், மனைவி விசயை. நாட்டை மறந்து அந்தப்புரத்தில் அடைக்கலமாகும் மன்னன் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை அமைச்சன் கட்டியங்காரனிடம் ஒப்படைக்கின்றான். அமைச்சன் தக்க நேரம் பார்த்துப் படையுடன் வந்து மன்னனைக் கொல்கிறான். அமைச்சன் சதியறிந்த மன்னன், மனைவி விசயையை மயிற்பொறியில் ஏற்றி வானில் பறக்கும்படிச்செய்கிறான். உயிர்தப்பிய விசயை சுடுகாட்டில் இறங்குகிறாள். அங்கு அவளுக்கு ஓர் ஆண்குழந்தை பிறக்கிறது. சீவகன் என்று பெயர் மட்டும் சூட்டி மகனோடு வாழ முடியாது தாய் விசயை மறைந்து வாழ்கிறாள். கந்துக்கடன் எனும் வணிகன் சீவகனை எடுத்துச்சென்று, அச்சணந்தி அடிகளிடம் கல்வி பயில அனுப்புகிறான். கல்வி கேள்விகளில் சிறந்தவனாக வளர்கின்றான். இளமைப் பருவம் எய்திய சீவகன் தன் அழகாலும் ஆண்மையாலும் போட்டிகளில் வெற்றி பெற்றுகாந்தருவ தத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எண்மரை மணக்கிறான். கட்டியங்காரனைப் போரில் கொன்று தன் தந்தையின் நாட்டை மீட்டு அரசாள்கிறான். மனைவியரோடு மகிழ்ச்சியாய், நற்புதல்வர்களைப் பெற்று இருக்குங்காலை தோட்டத்தில் பார்த்த ஒரு காட்சியால் வாழ்க்கையில் விரக்தியுற்றுத் துறவு பூண்டு முக்தி அடைகிறான். இதுவே சீவக சிந்தாமணி தரும் சீவகனின் கதையாகும்.

வளையாபதி

  • ஆசிரியர் பெயர் தெரியவில்லை

  • சமண சமயம் சார்ந்த நூல்

காப்பியக் கதை 

  • நவகோடி நாராயணன் ஒரு வணிகன். இவன் வேறு சாதிப் பெண்ணை மணந்தான். இதனால் அவன் குலத்தோர் வெறுக்க, வெறுப்பைத் தாங்க இயலாது அவனும் அயல் நாடு சென்றுவிட, அவன் மனைவிக்குப் பிறக்கும் மகன் வளர்ந்த பின் புகாரில் தன் தந்தையைக் கண்டு இறுதியில் தாய் தந்தையரை இணைத்து வைக்கிறான். வைசிய புராணம் தரும் கதை இதுவேயாகும்.

குண்டலகேசி

  • குண்டலகேசி என்பதற்கு  சுருண்ட கூந்தலை உடையவள் என்பது பொருள் ஆகும்.

  • இயற்றியவர்நாதாகுத்தனார்

  • 25 பாடல்கள் கிடைத்துள்ளன.

  • சமயம்பௌத்தம்

காப்பியக் கதை 

  • வணிகன் மகள் பத்தரை. இவள் காளன் என்ற கள்வனை விரும்புகிறாள். மகளின் வற்புறுத்தலால் தந்தையும் கள்வனைச் சிறையிலிருந்து மீட்டு அவளுக்கு மணம் செய்து வைக்கிறார். இன்பமான வாழ்க்கையின் இடையில் ஊடலின்போது சினத்தில் பத்தரை தன் கணவனை நீ கள்வன் தானே? என்று கூறிவிட அதனால் சினங்கொண்ட காளன் (கணவன்) தெய்வத்தை வணங்க என்று பொய் கூறி மலையுச்சிக்கு அவளை அழைத்துச் சென்று கொல்லப் போவதாகக் கூறுகின்றான். கணவனுக்கு அறிவுரை கூறியும் அவன் திருந்தாத நிலையில் அவனை வணங்கி வலம் வருவது போல் வந்து கணவனை மலையுச்சியிலிருந்து தள்ளிக் கொன்று விடுகின்றாள். தான் செய்த பாவம் நீங்கிடப் பௌத்த சமயத்தில் சேர்ந்து அறக் கருத்துக்களைப் பரப்பி இறுதியில் புத்தபிரானின் திருவடியை அடைகிறாள்.

ஐஞ்சிறுகாப்பியங்கள்

நாககுமார காவியம்

  • ஆசிரியர்பெயர் தெரியவில்லை

  • காலம்கி.பி.16ஆம் நூற்றாண்டு

  • பாடல்கள் – 170
    சருக்கம் – 5
    பாவகைவிருத்தப்பா

  • சமயம்சமணம்

  • பெயர்க்காரணம்:
    கதைத் தலைவன் நாககுமாரன் பற்றிக் கூறுவதால் நூல் இப்பெயர் பெற்றது.

  • வேறு பெயர்: நாகபஞ்சமி கதை

உதயணகுமார காவியம்

  • ஆசிரியர்பெயர் தெரியவில்லை

  • காலம்கி.பி.15ஆம் நூற்றாண்டு

  • பாடல்கள் = 369
    காண்டம் = 6
    காண்டங்கள்:

    • உஞ்சைக் காண்டம்

    • இலாவண காண்டம்

    • மகத காண்டம்
      வத்தவ காண்டம்

    • நரவாகன காண்டம்

    • துறவுக் காண்டம்

  • வேறு பெயர்உதயணன் கதை

யசோதர காவியம்

  • ஆசிரியர்வெண்ணாவலூர் உடையார் வேள்

  • காலம் – 13ஆம் நூற்றாண்டு

  • பாடல்கள் – 320
    சருக்கங்கள் – 5

  • பாவகைவிருத்தம்

  • சமயம்சமணம்

நீலகேசி

  • ஆசிரியர்பெயர் தெரியவில்லை

  • காலம் – 6ஆம் நூற்றாண்டு

  • பாடல்கள் – 894
    சருக்கம் – 10

  • பாவகைவிருத்தம்

  • சமயம் = சமணம்

  • வேறு பெயர்:
    நீலகேசி தெருட்டு
    நீலம்(யாப்பருங்கல விருத்தியுரை)

  • நீலகேசி = கரிய கூந்தலை உடையவள்

சூளாமணி

  • ஆசிரியர்தோலாமொழித் தேவர்

  • காலம்கி.பி.பத்தாம் நூற்றாண்டு

  • பாடல்கள் – 2330
    சருக்கம் – 12

  • பாவகைவிருத்தம்

  • சமயம்சமணம்

  • பெயர்க்காரணம்: மிக்க ஒளியையும் சிறப்பினையும் உடையது சூளாமணி. ஆற்றல்களும் சிறப்புகளும் கொண்டு திவிட்டனும் விசயனும் சூளாமணி போல் ஒளிர்ந்தமையால் நூல் இப்பெயர் பெற்றது.

சமயக் காப்பியங்கள்

  • மணிமேகலை பௌத்தத்தைப் போற்றும் நிலையில் எழுந்தது. சீவகசிந்தாமணி சமணம் பரப்ப எழுந்தது.

  • வளையாபதி சமண சமயத்தது.

  • குண்டலகேசி பௌத்தத்தைப் போற்றுவது.

  • ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமண சமயத்தனவாகும்.

  • கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலியன வைணவ சமயக் காப்பியங்களாகும்.

  • பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், கந்தபுராணம் முதலின சைவ சமயக் காப்பியங்களாகும்.

  • சீறாப்புராணம் இசுலாமியக் காப்பியம்.

  • இயேசு காவியம் கிறித்துவக் காப்பியம் ஆகும்.

  • சமயம் பரப்பும் நோக்கில்தான் காப்பியங்களின் வளர்ச்சி அமைந்தது என்றே உறுதிபடக் கூறலாம்.

கம்பராமாயணம்

  • இயற்றியவர்கம்பர்

  • பெயர்க் காரணம்: இக்காப்பியத்தின் கதை இராமனின் வரலாற்றைப் பற்றித் தெரிவிப்பதால் இராமாயணம் எனப்பட்டது

காப்பிய அமைப்பு

  • இக்காப்பியம் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களைக் கொண்டது.

  • இந்த ஆறு காண்டங்களின் சிறு பிரிவுகளாக 113 படலங்கள் உள்ளன. மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 10,500 ஆகும்.

  • கம்பராமாயணம் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கற்பு நெறி நின்று வாழவேண்டும் என்ற உண்மையை ஏகபத்தினி விரதனாம்இராமன் மூலம் தெரிவிக்கின்றது.

வில்லிபாரதம்

  • இயற்றியவர்: வில்லிபுத்துரார்

  • காலம்: 16-ஆம் நூற்றாண்டு.

  • பருவங்கள்:
    வில்லிபாரதம் 10 பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

    • பருவங்களின் பெயர்கள்:

      • ஆதி பருவம்

      • சபா பருவம்

      • ஆரணிய பருவம்

      • விராட பருவம்

      • உத்தியோக பருவம்

      • வீடும பருவம்

      • துரோண பருவம்

      • கன்ன பருவம்

      • சல்லிய பருவம்

      • சௌப்திக பருவம்

  • 4351 விருத்தப் பாடல்களைக் கொண்டது.

பெரியபுராணம்

  • இயற்றியவர்: சேக்கிழார்

  • பெரிய புராணம் என்னும் பெருங்காப்பியம் தமிழகச் சூழலையும், 63 அடியார் பெருமக்களையும் மையமாகக் கொண்டு திகழ்கின்றது.

  • இந்நூல் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களையும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் உடையது.

  • 4286 விருத்தப் பாக்களையுடைய ஒரு பெரு நூலாகும்.

திருவிளையாடற் புராணம்

  • இயற்றியவர்: பரஞ்சோதி முனிவர்

  • காண்டங்கள்:
    3 காண்டங்கள் உள்ளன.

    • மதுரைக் காண்டம்

    • கூடல் காண்டம்

    • திருவாலவாய்க் காண்டம்

  • படலங்கள்:
    மொத்தம் 64 படலங்கள் உள்ளன.

  • மதுரைக் காண்டம்: 18 படலங்கள்.

  • கூடல் காண்டம்: 30 படலங்கள்.

  • திருவாலவாய்க் காண்டம்: 16 படலங்கள்.

  • பாடல்கள்:
    இந்த நூல் 3363 பாடல்களைக் கொண்டுள்ளது.

கந்தபுராணம்

  • இயற்றியவர்: கச்சியப்ப சிவாச்சாரியார்

  • முருகனின் வரலாற்றைக் கூறும் நூல்

  • ஆறுகாண்டங்கள்

    • உற்பத்தி காண்டம்

    • அசுர காண்டம்

    • மஹேந்திர காண்டம்

    • யுத்த காண்டம்

    • தேவ காண்டம்

    • தக்ஷ காண்டம்

  • 142 படலங்கள்

  • 2967 பாடல்கள்

சீறாப்புராணம்

  • ஆசிரியர் : உமறுப்புலவர்

  • சீறாஎன்ற அரபுச் சொல்லுக்கு வாழ்க்கை அல்லது வாழ்க்கை வரலாறு என்று பொருள். ‘புராணம்என்றால்வரலாறுஎன்று பொருள்எனவே, சீறாப்புராணம் என்பது ‘நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல் ஆகும்

  • மூன்று காண்டங்களையும், மொத்தம் 92 படலங்களையும், 5027 விருத்தப் பாடல்களையும் கொண்ட ஒரு காவியம் ஆகும்.

தேம்பாவணி

  • ஆசிரியர்: வீரமாமுனிவர்

  • மூன்று காண்டங்கள்

  • 36 படலங்கள்

  • 3615 விருத்தப் பாடல்கள்

  • கதையின் பாடுபொருள்:

    • தேம்பாவணி நூல் புனித யோசேப்பைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயேசு கிறிஸ்துவின் பெருமையைப் பாடுகிறது.

    • இது தமிழ் மரபுக்கு ஏற்ற ஒரு காப்பியமாக இருந்தாலும், கிறிஸ்தவக் கருத்துக்களை முன்வைக்கிறது

இயேசு காவியம்

  • இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

  • இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு பற்றி குறிப்பிடுகிறது.

  • இந்நூல் பாயிரம், பிறப்பு, தயாரிப்பு, பொதுவாழ்வு, பாடுகள், மகிமை என ஐந்து பாகங்களைக் கொண்டது.

பக்தி இலக்கியம்

  • பக்தி இலக்கியம் பெரிதும் வளர்ந்த காலம் பல்லவர் காலம் ஆகும்.

  • தேவாரம்

    • தே+வாரம்=தேவாரம்

    • கடவுளுக்கு சூட்டப்படுகின்ற பாமாலை என்று பொருள்.

  • சைவ சமயத்தின் முழுமுதற் கடவுள் சிவபெருமான்

  • சிவபெருமானின் ஐன்தொழில்கள் – படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்

பன்னிரு திருமுறைகள் பகுப்பு

  • சைவ சமயப் பெரியவர்கள் பாடிய பாடல்கள் திருமுறைகள் எனப்படும்.

  • 1 , 2, 3 திருமுறைகள்திருஞானசம்பந்தர் (சம்பந்தர் தேவாரம்)

  • 4, 5 , 6 திருமுறைகள்திருநாவுக்கரசர் (தேவாரம்)

  • 7ம் திருமுறைசுந்தரர் (சுந்தரர் தேவாரம்)

  • 8ம் திருமுறைமாணிக்கவாசகர்திருவாசகம் மற்றும் திருக்கோவையார்

  • ஒன்பதாம் திருமுறை – 9 பேர்

  • பத்தாம் திருமுறைதிருமூலர்

  • பதினொன்றாம் திருமுறைதிரு ஆலவாய் உடையார் முதலாக பன்னிருவர்

  • பன்னிரண்டாம் திருமுறைசேக்கிழார் (பெரியபுராணம்)

  • திருமுறைகளை தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
    இவர் 11 திருமுறைகளை மட்டுமே தொகுத்தார்
    பெரியபுராணம் பின்னால் எழுதப்பட்டது.

  • திருமுறைகளைதொகுப்பித்தவன் முதலாம் ஆதித்த சோழன்
    முதலாம் ராஜராஜன் திருமுறை கண்ட சோழன் எனப்படுகிறான்

  • முதல் ஏழு திருமுறைகள் மூவர் தேவாரம் எனப்படும்.
    இதற்கு மூவர் தமிழ் என்று வேறு பெயரும் உண்டு.

  • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்மூவர் முதலிகள்எனப்படுவர்.

  • சைவ சமயக் குரவர்கள் நால்வர்

  1. திருஞானசம்பந்தர்

  2. திருநாவுக்கரசர்

  3. சுந்தரர்

  4. மாணிக்கவாசகர்

  • பன்னிரு திருமுறைகளையும் பாடியவர்கள் மொத்தம் 27 பேர்.

திருஞானசம்பந்தர்

  • இயற்பெயர் : ஆளுடைய பிள்ளை

  • பெற்றோர்சிவபாத இருதயர்பகவதி அம்மையார்

  • பிறந்த ஊர்சீர்காழி 

  • இவர் பாடியவை1,2,3 திருமுறைகள்

சிறப்பு:

  • 23 இசைகளில் பாடியுள்ளார்.

  • யாழ்முறி இவருக்கு மட்டுமே உரியது.

  • திராவிட சிசுஆதிசங்கரரால்  போற்றப்பட்டார்.

  • நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர்சுந்தரர்

செய்த அற்புதங்கள்

  • மழவன் மகளுக்கு ஏற்பட்ட கடுமையான முயலகன் என்னும் நோயைப் போக்கினார்.

  • கூன் பாண்டியன் வெப்பு நோயைப் நீக்கினார்.

  • திருமறைக்காட்டுக் கோவிலின் கதவை தம் பாட்டால் மூடும்படி செய்தார்.

  • திருவோத்தூரில் ஆண் பனையைப் பெண் பனையாக்கி அற்புதம் செய்தார்.

திருநாவுக்கரசர்

  • இயற்பெயர்: மருள் நீக்கியார்

  • பெற்றோர் : புகழனார், மாதினியார்

  • அக்கா : திலகவதியார்

  • பிறந்த ஊர்: திருவாமூர்

  • இவர் பாடியவை4,5,6 திருமுறைகள்

  • சிறப்பு பெயர்கள்:

    • திருநாவுக்கரசர்,வாகீசர்,அப்பர்,ஆளுடைய அரசு,தாண்டக வேந்தர்,தருமசேனர்

  • சமண சமயத்திலிருந்து  சைவ சமயத்திற்கு மாற்றியவர்தமக்கை திலகவதியார்

  • முதலாம் மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் .

  • கல்லையே தெப்பமாகக் கொண்டு கரை ஏறியவர்

  • திங்களூரில் பாம்பு தீண்டி இறந்தவரை உயிர்ப்பித்தார்.

  • திருமறைக்காட்டுக் கோவில் கதவை திறக்க செய்தார்.

சுந்தரர்

  • இயற்பெயர்: நம்பி ஆரூரார் / ஆரூரார்

  • பெற்றோரோர்: சடையனார்மாதினியார்

  • இவர் பாடியவை7 திருமுறை

சிறப்பு பெயர்கள் :

  • வன் தொண்டர்

  • தம்பிரான் தோழர்

  • திருத்தொண்டத்தொகை பாடியவர் சுந்தரர்

மாணிக்கவாசகர்

  • இயற்பெயர் தெரியவில்லை

  • பெற்றோர் : சம்புபாதசாரியார்சிவஞானவதி

  • இவர் பாடியவை8 திருமுறை

சிறப்பு பெயர்கள்

  • அருள் வாசகர்

  • மணிவாசகர்

  • அழுது அடியடைந்த அன்பர்

  • தென்னவன் பிரமராயர்

  • மாணிக்கவாசகர் (இவர் பாடல்கள் ஒவ்வொன்றும் மாணிக்கம் போல் உள்ளதால் )

நூல்கள்

  • திருக்கோவையாரும் திருவாசகமும் இவர் பாடியவை

ஒன்பதாம் திருமுறை ( திருவிசைப்பா

  • 9 பேர் பாடியது

பத்தாம் திருமுறை ( திருமந்திரம்

  • திருமூலர்

  • திருமந்திரத்திற்கு திருமூலர் இட்ட பெயர் திருமந்திர மாலை

  • திருமந்திரத்தின் வேறு பெயர்கள்தமிழ் மூவாயிரம்

  • முதல் சித்த நூல் யோக நெறியை கூறும் தமிழர் நூல்
    ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இந்நூலின் சிறப்பு

பதினொன்றாம் திருமுறை (பிரபந்த மாலை)

  • 12 பேர் பாடியுள்ளனர்

  • 40 நூல்கள் உள்ளன

  • திருவாலவாயுடையார் (1)

  • காரைக்காலம்மையார் (நான்கு நூல்கள்)

  • கல்லாடர் (1)

  • நக்கீரர் (10)

  • கபிலர் (3)

  • பரணர் (1)

  • அதிரா அடிகள் 1

  • இளம்பெருமான் அடிகள் (1)

  • ஐயடிகள் (1)

  • சேரமான் பெருமான் நாயனார் (3)

  • பட்டினத்தார் (5)

  • நம்பியாண்டார் நம்பி (ஒன்பது நூல்கள் )

  • தமிழ் வியாசர் என அழைக்கப்படுபவர் நம்பியாண்டார் நம்பி
    64 நாயன்மார்களை பற்றி திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர்

காரைக்கால் அம்மையார்

  • இயற்பெயர் புனிதவதியார் 

  • காரைக்கால்வணிக மரபினர்

  • சைவசமய எழுச்சிக்கு வித்திட்ட முன்னோடி

12ம் திருமுறை (பெரியபுராணம்)

  • சேக்கிழார்

  • இயற்பெயர்: அருண்மொழித்தேவர்

சிறப்பு பெயர்கள் :

  • உத்தம சோழப் பல்லவன்

  • தொண்டர் சீர் பரவுவார்

நூல் அமைப்பு:

  • இரண்டு காண்டம் 13 சருக்கம் 4286 பாடல்கள்

  • உலகெலாம் என்று இறைவனே அடியெடுத்துக் கொடுக்க பாடப்பட்ட நூல்

 63 நாயன்மார்களில் மூவர் பெண்கள்

  • காரைக்கால்

  • அம்மையார்

  • இசைஞானியார்

  • மங்கையர்க்கரசி

நாலாயிர திவ்ய பிரபந்தம்

  • ஆழ்வார்களின் பாடல்கள் திவ்வியப்பிரபந்தம் என்று அழைக்கப்படுகின்றனதிராவிட வேதம் என்றொரு பெயரும் இதற்கு உண்டு.

  • ஆழ்வார்கள் திருமாலின் பக்தியில்அன்பில்அருளில்தோற்றத்தில் ஆழ்ந்தவர்கள் எனலாம்

  • முதலாழ்வார்கள்:
    பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்.

ஆழ்வார்கள்பாசுரங்களின் எண்ணிக்கை

1.பொய்கை ஆழ்வார்– 100

2.பூதத்தாழ்வார்– 100

3.பேயாழ்வார்– 100

4.திருமழிசை ஆழ்வார்– 216

5.மதுரகவி ஆழ்வார்– 11

6.நம்மாழ்வார்– 1296

7.குலசேகர ஆழ்வார்-105

8.பெரியாழ்வார்– 473

9.ஆண்டாள்– 173

10.தொண்டரடிப் பொடி ஆழ்வார்– 55

11.திருப்பாணாழ்வார்– 10

12.திருமங்கை ஆழ்வார்– 1137

பொய்கையாழ்வார்

  • பிறந்த ஊர் : காஞ்சிபுரம்பொய்கையில் அவதரித்தவர்,

  • காலம் : 7ம்நூற்றாண்டு

  • எழுதிய நூல் : முதல் திருவந்தாதி

  • பாடல்கள் : 100

பூதத்தாழ்வார்

  • பிறந்த ஊர் : மகாபலிபுரம்

  • காலம் :  7ம் நூற்றாண்டு

  • எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி

  • பாடல்கள் : 100

பேயாழ்வார்

  • பிறந்த ஊர் :  மயிலாப்பூர்

  • காலம்: ஏழாம் நூற்றாண்டு

  • எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி

  • பாடல்கள் : 100

திருமழிசையாழ்வார்

  • பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)

  • காலம் : கி.பி.7ம் நூற்றாண்டு

  • எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத விருத்தம்

  • பாடல்கள் : 216

பெரியாழ்வார்

  • பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிப்புத்தூர்

  • காலம்: 9ம் நூற்றாண்டு 

  • எழுதிய நூல் : பெரியாழ்வார் திருமொழி

  • பாடிய பாடல் : 473

ஆண்டாள்

  • பிறந்த ஊர் : ஸ்ரீவில்லிப்புத்தூர்

  • வளர்ப்புத்தந்தை : பெரியாழ்வார்

  • காலம் : 9ம் நூற்றாண்டு

  • எழுதிய நூல் : திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி

  • பாடிய பாடல் : 173

தொண்டரடி பொடியாழ்வார்

  • இயற்பெயர் : விப்ர நாராயணன்

  • பிறந்த ஊர் : திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)

  • காலம் : எட்டாம் நூற்றாண்டு 

  • எழுதிய நூல் : திருமாலை, திருப்பள்ளி எழுச்சி

  • பாடிய பாடல் : 55

திருமங்கையாழ்வார்

  • பிறந்த இடம் : திருக்குறையலூர்

  • காலம் : எட்டாம் நூற்றாண்டு

  • எழுதிய நூல் : பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம்,   திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கைபெரிய திருமடல்,சிறிய திருமடல்.

  • பாடிய பாடல் : 1253 

திருப்பாணாழ்வார்

  • பிறந்த ஊர் : உறையூர் (திருச்சி)

  • காலம் : எட்டாம் நூற்றாண்டு

  • எழுதிய நூல் : அமலனாதிபிரான்

  • பாடிய பாடல் : 10

குலசேகர ஆழ்வார்

  • பிறந்த இடம் : திருவஞ்சைக்களம்

  • காலம் : எட்டாம் நூற்றாண்டு

  • எழுதிய நூல் : பெருமாள் திருமொழி

  • பாடிய பாடல்  : 105

நம்மாழ்வார்

  • பிறந்த ஊர் : ஆழ்வார் திருநகரி

  • பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி

  • எழுதிய நூல் : பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம்,திருவாய்மொழி

  • பாடல்கள் : 1296

மதுரகவி ஆழ்வார்

  • பிறந்த ஊர் : திருக்கோளூர்

  • காலம் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி

  • எழுதிய நூல் : கண்ணி நுண் சிறுத்தாம்பு

  • பாடல்கள் : 96

பகுத்தறிவு இலக்கியம்

  • பகுத்தறிவு என்பதற்கு ஒன்றினைப் பகுத்து அறிதல் என்று பொருள்.

  • சமூகத்தில் நிகழும் நிகழ்வினை மனிதன் ஆராய்ந்து தெளிவுபெற வேண்டும் என்பதே பகுத்தறிவு இலக்கியங்களின் நோக்கம் ஆகும்.

  • கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த கிறித்தவ பாதிரிமார்கள் கல்வி கற்றல், கணவன் இறந்த பின்பு கைம்பெண்களை மறுதிருமணம் செய்ய ஊக்குவித்தல், குழந்தைத் திருமணத்தைத் தடுத்தல் எனப் பல்வேறு கருத்துக்களைக் கூறி மக்களை நல்வழிப்படுத்தினர்.

சுயமரியாதைக் இயக்கம்

  • பெரியார் 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தினைத் தொடங்கினார்.

  • சமமான கல்வி, அனைவருக்கும் கிடைக்கக் கூடிய நீதி, பொருளாதார பொதுவுடைமை, மூடபழக்கத்தை ஒழித்தல் போன்றவை சுயமரியாதை இயக்கத்தின் நோக்கங்களாக அமைந்தன.

சித்தர் இலக்கியம்

  • மனிதர்களிடம் காணப்படாத வியக்கத்தக்க ஆற்றல் கொண்டவர்களைச் சித்தர்கள் என்று அழைக்கின்றனர். இவர்கள் மெய்ஞ்ஞானம் நிரம்பியவர்கள்.   கொண்டவை.

  • சித்தர்கள் பலர் இருப்பினும் வழக்கில் பதினெண்சித்தர்கள் என்று கூறப்படும் மரபு காணப்படுகின்றது.

1.அகத்தியர் 2.இடைக்காடர் 3.உரோமமுனி  4.கருவூரார்   5.காகபுண்டர் 6.கொங்கணர் 7.கோரக்கர் 8.சட்டைமுனி 9.மச்சமுனி 10.போகர் 11.திருமூலர் 12.நந்தி 13. புண்ணாக்கீசர்   14. தேரையர் 15. யூகிமுனி 16.  காலாங்கி நாதர் 17.புலத்தியர் 18. தன்வந்திரி

திருமூலர்

  • இவர் சித்தர் தத்துவத்தின் மூலமுதல்வர்.

  • இவர் பாடிய திருமந்திரம் பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.

  • 3000 பாடல்கள் இயற்றினார்.

  • இத்திருமந்திரம் நிலையாமை உண்மைகளை வலியுறுத்துகின்றதுஒன்றே குலம் ஒருவனே தேவன்”, “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்பன போன்ற புகழ் பெற்ற தொடர்கள் இந்நூலில் இடம்பெற்றவையே.

இராவண காவியம்

  • இயற்றியவர்: புலவர் குழந்தை

  • இக்காப்பியம் ஐந்து காண்டங்களால் ஆனது. அவை1) தமிழகக் காண்டம், 2) இலங்கைக் காண்டம், 3) விந்தக் காண்டம், 4) பழிபுரி காண்டம், 5) இலங்கைக் காண்டம்.

  • இக்காப்பியக் காண்டம் ஒவ்வொன்றும் பல படலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நூலில் அமைந்துள்ள மொத்தப் படலங்கள் ஐம்பத்தேழாகும். பாயிரம் உட்பட ஐந்து காண்டத்திலும் உள்ள மொத்தப் பாக்கள் 3100.

  • புலவர் குழந்தை தாம் படைத்த இக்காவியத்தைத் தமிழர்க்குக் காணிக்கையாக்கியுள்ளார். தமிழர்கள் தம் பண்பாட்டுச் சிறப்பை அறிந்து வாழ்வதற்காக இராவணனின் பெருமை படைப்பதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்

  • புலவர் குழந்தை ஓலவலசுப் பண்ணைக்காரர்குடியில் 1-7-1906இல் பிறந்தார்.

  • முத்துச்சாமிக் கவுண்டர், சின்னம்மையார் என்பவர்களின் ஒரே மகனாவார்.

  • இவர் திண்ணைப் பள்ளியில் கற்ற காலம் மொத்தமாக எட்டு மாதங்களேயாம்.

  • இயற்கையிலேயே கவிபாடும் ஆற்றல் வாய்க்கப் பெற்றவர்.

  • இசைப் பாடல்களே இவர் முதன் முதலாகப் பாடிய பாடல்கள்.

  • ஆசிரியர் உதவியின்றித் தாமே முயன்று தமிழ் கற்றுச் சீரிய புலமை எய்தினார்

  • 1934இல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் புலவர் பட்டம் பெற்றார்.

  • ஆசிரியராகவும் தலைமைத் தமிழாசிரியராகவும் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

பிற படைப்புகள்

  • இராவண காவியத்தைத் தவிர, புலவர் குழந்தை மரபுவழி யாப்பில் அமைந்த அரசியலரங்கம், நெருஞ்சிப்பழம், காமஞ்சரி, உலகப் பெரியோன் கென்னடி, திருநணாச் சிலேடை வெண்பா, புலவர் குழந்தை பாடல் ஆகியவற்றைப் படைத்துள்ளார்

  • திருக்குறள், தொல்காப்பியப் பொருளதிகாரம், நீதிக்களஞ்சியம் ஆகியவை அவரால் விளக்கவுரை எழுதப்பட்ட நூல்களாகும்.

பக்தி இலக்கியம் – குறிப்புகள்

  • பக்தி இலக்கியம் பெரிதும் வளர்ந்த காலம் பல்லவர் காலம் ஆகும்.
  • தேவாரம்
    • தே+வாரம்=தேவாரம்
    • கடவுளுக்கு சூட்டப்படுகின்ற பாமாலை என்று பொருள்.
  • சைவ சமயத்தின் முழுமுதற் கடவுள் சிவபெருமான்
  • சிவபெருமானின் ஐன்தொழில்கள் – படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்

பன்னிரு திருமுறைகள் பகுப்பு

  • சைவ சமயப் பெரியவர்கள் பாடிய பாடல்கள் திருமுறைகள் எனப்படும்.
  • 1 , 2, 3 திருமுறைகள் – திருஞானசம்பந்தர் (சம்பந்தர் தேவாரம்)
  • 4, 5 , 6 திருமுறைகள் – திருநாவுக்கரசர் (தேவாரம்)
  • 7ம் திருமுறை – சுந்தரர் (சுந்தரர் தேவாரம்)
  • 8ம் திருமுறை – மாணிக்கவாசகர்-திருவாசகம் மற்றும் திருக்கோவையார்
  • ஒன்பதாம் திருமுறை – 9 பேர்
  • பத்தாம் திருமுறை – திருமூலர்
  • பதினொன்றாம் திருமுறை – திரு ஆலவாய் உடையார் முதலாக பன்னிருவர்
  • பன்னிரண்டாம் திருமுறை – சேக்கிழார் (பெரியபுராணம்)
  • திருமுறைகளை தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
    இவர் 11 திருமுறைகளை மட்டுமே தொகுத்தார்
    பெரியபுராணம் பின்னால் எழுதப்பட்டது.
  • திருமுறைகளைதொகுப்பித்தவன் முதலாம் ஆதித்த சோழன்
    முதலாம் ராஜராஜன் திருமுறை கண்ட சோழன் எனப்படுகிறான்
  • முதல் ஏழு திருமுறைகள் மூவர் தேவாரம் எனப்படும்.
    இதற்கு மூவர் தமிழ் என்று வேறு பெயரும் உண்டு.
  • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் – மூவர் முதலிகள்எனப்படுவர்.
  • சைவ சமயக் குரவர்கள் நால்வர்

1. திருஞானசம்பந்தர்

2. திருநாவுக்கரசர்

3. சுந்தரர்

4. மாணிக்கவாசகர்

  • பன்னிரு திருமுறைகளையும் பாடியவர்கள் மொத்தம் 27 பேர்.

திருஞானசம்பந்தர்

  • இயற்பெயர் : ஆளுடைய பிள்ளை
  • பெற்றோர் – சிவபாத இருதயர் – பகவதி அம்மையார்
  • பிறந்த ஊர் – சீர்காழி 
  • இவர் பாடியவை: 1,2,3 திருமுறைகள்

சிறப்பு:

  • 23 இசைகளில் பாடியுள்ளார்.
  • யாழ்முறி இவருக்கு மட்டுமே உரியது.
  • திராவிட சிசு – ஆதிசங்கரரால்  போற்றப்பட்டார்.
  • நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர் – சுந்தரர்

செய்த அற்புதங்கள்

  • மழவன் மகளுக்கு ஏற்பட்ட கடுமையான முயலகன் என்னும் நோயைப் போக்கினார்.
  • கூன் பாண்டியன் வெப்பு நோயைப் நீக்கினார்.
  • திருமறைக்காட்டுக் கோவிலின் கதவை தம் பாட்டால் மூடும்படி செய்தார்.
  • திருவோத்தூரில் ஆண் பனையைப் பெண் பனையாக்கி அற்புதம் செய்தார்.

திருநாவுக்கரசர்

  • இயற்பெயர்: மருள் நீக்கியார்
  • பெற்றோர் : புகழனார், மாதினியார்
  • அக்கா : திலகவதியார்
  • பிறந்த ஊர்: திருவாமூர்
  • இவர் பாடியவை: 4,5,6 திருமுறைகள்
  • சிறப்பு பெயர்கள்:
    திருநாவுக்கரசர்,
    வாகீசர்,
    அப்பர்,
    ஆளுடைய அரசு,
    தாண்டக வேந்தர்,
    தருமசேனர்
  • சமண சமயத்திலிருந்து  சைவ சமயத்திற்கு மாற்றியவர் -தமக்கை திலகவதியார்
  • முதலாம் மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் .
  • கல்லையே தெப்பமாகக் கொண்டு கரை ஏறியவர்
  • திங்களூரில் பாம்பு தீண்டி இறந்தவரை உயிர்ப்பித்தார்.
  • திருமறைக்காட்டுக் கோவில் கதவை திறக்க செய்தார்.

சுந்தரர்

  • இயற்பெயர்: நம்பி ஆரூரார் / ஆரூரார்
  • பெற்றோரோர்: சடையனார் – மாதினியார்
  • இவர் பாடியவை: 7 திருமுறை

சிறப்பு பெயர்கள் :

  • வன் தொண்டர்
  • தம்பிரான் தோழர்
  • திருத்தொண்டத்தொகை பாடியவர் சுந்தரர்

மாணிக்கவாசகர்

  • இயற்பெயர் தெரியவில்லை
  • பெற்றோர் : சம்புபாதசாரியார் – சிவஞானவதி
  • இவர் பாடியவை: 8 திருமுறை

சிறப்பு பெயர்கள்

  • அருள் வாசகர்
  • மணிவாசகர்
  • அழுது அடியடைந்த அன்பர்
  • தென்னவன் பிரமராயர்
  • மாணிக்கவாசகர் (இவர் பாடல்கள் ஒவ்வொன்றும் மாணிக்கம் போல் உள்ளதால் )

நூல்கள்

  • திருக்கோவையாரும் திருவாசகமும் இவர் பாடியவை

ஒன்பதாம் திருமுறை ( திருவிசைப்பா

  • 9 பேர் பாடியது

பத்தாம் திருமுறை ( திருமந்திரம்) 

  • திருமூலர்
  • திருமந்திரத்திற்கு திருமூலர் இட்ட பெயர் திருமந்திர மாலை
  • திருமந்திரத்தின் வேறு பெயர்கள்: தமிழ் மூவாயிரம்
  • முதல் சித்த நூல் யோக நெறியை கூறும் தமிழர் நூல்
    ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இந்நூலின் சிறப்பு

பதினொன்றாம் திருமுறை (பிரபந்த மாலை)

  • 12 பேர் பாடியுள்ளனர்
  • 40 நூல்கள் உள்ளன
  • திருவாலவாயுடையார் (1)
  • காரைக்காலம்மையார் (நான்கு நூல்கள்)
  • கல்லாடர் (1)
  • நக்கீரர் (10)
  • கபிலர் (3)
  • பரணர் (1)
  • அதிரா அடிகள் 1
  • இளம்பெருமான் அடிகள் (1)
  • ஐயடிகள் (1)
  • சேரமான் பெருமான் நாயனார் (3)
  • பட்டினத்தார் (5)
  • நம்பியாண்டார் நம்பி (ஒன்பது நூல்கள் )
  • தமிழ் வியாசர் என அழைக்கப்படுபவர் நம்பியாண்டார் நம்பி
    64 நாயன்மார்களை பற்றி திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர்

காரைக்கால் அம்மையார்

  • இயற்பெயர் புனிதவதியார் 
  • காரைக்கால் – வணிக மரபினர்
  • சைவசமய எழுச்சிக்கு வித்திட்ட முன்னோடி

12ம் திருமுறை (பெரியபுராணம்)

  • சேக்கிழார்
  • இயற்பெயர்: அருண்மொழித்தேவர்

சிறப்பு பெயர்கள் :

  • உத்தம சோழப் பல்லவன்
  • தொண்டர் சீர் பரவுவார்

நூல் அமைப்பு:

  • இரண்டு காண்டம் 13 சருக்கம் 4286 பாடல்கள்
  • உலகெலாம் என்று இறைவனே அடியெடுத்துக் கொடுக்க பாடப்பட்ட நூல்

 63 நாயன்மார்களில் மூவர் பெண்கள்

  • காரைக்கால்
  • அம்மையார்
  • இசைஞானியார்
  • மங்கையர்க்கரசி

நாலாயிர திவ்ய பிரபந்தம்

  • ஆழ்வார்களின் பாடல்கள் திவ்வியப்பிரபந்தம் என்று அழைக்கப்படுகின்றன. திராவிட வேதம் என்றொரு பெயரும் இதற்கு உண்டு.
  • ஆழ்வார்கள் திருமாலின் பக்தியில் – அன்பில் – அருளில் – தோற்றத்தில் ஆழ்ந்தவர்கள் எனலாம். 
  • முதலாழ்வார்கள்:
    பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்.

ஆழ்வார்கள் – பாசுரங்களின் எண்ணிக்கை

1.பொய்கை ஆழ்வார்- 100
2.பூதத்தாழ்வார்- 100
3.பேயாழ்வார்- 100
4.திருமழிசை ஆழ்வார்- 216
5.மதுரகவி ஆழ்வார்- 11
6.நம்மாழ்வார்- 1296
7.குலசேகர ஆழ்வார்-105
8.பெரியாழ்வார்- 473
9.ஆண்டாள்- 173
10.தொண்டரடிப் பொடி ஆழ்வார்- 55
11.திருப்பாணாழ்வார்- 10
12.திருமங்கை ஆழ்வார்- 1137
பொய்கையாழ்வார்
  • பிறந்த ஊர் : காஞ்சிபுரம்- பொய்கையில் அவதரித்தவர்,
  • காலம் : 7ம்நூற்றாண்டு
  • நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் 
  • எழுதிய நூல் : முதல் திருவந்தாதி
  • பாடல்கள் : 100

பூதத்தாழ்வார்

  • பிறந்த ஊர் : மகாபலிபுரம்
  • காலம் :  7ம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி
  • பாடல்கள் : 100

பேயாழ்வார்

  • பிறந்த ஊர் :  மயிலாப்பூர்
  • காலம்: ஏழாம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி
  • பாடல்கள் : 100

திருமழிசையாழ்வார்

  • பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)
  • காலம் : கி.பி.7ம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத விருத்தம்
  • பாடல்கள் : 216

பெரியாழ்வார்

  • பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிப்புத்தூர்
  • காலம்: 9ம் நூற்றாண்டு 
  • எழுதிய நூல் : பெரியாழ்வார் திருமொழி
  • பாடிய பாடல் : 473

ஆண்டாள்

  • பிறந்த ஊர் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
  • வளர்ப்புத்தந்தை : பெரியாழ்வார்
  • காலம் : 9ம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி
  • பாடிய பாடல் : 173

தொண்டரடி பொடியாழ்வார்

  • இயற்பெயர் : விப்ர நாராயணன்
  • பிறந்த ஊர் : திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)
  • காலம் : எட்டாம் நூற்றாண்டு 
  • எழுதிய நூல் : திருமாலை, திருப்பள்ளி எழுச்சி
  • பாடிய பாடல் : 55

திருமங்கையாழ்வார்

  • பிறந்த இடம் : திருக்குறையலூர்
  • காலம் : எட்டாம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம்,   திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை,  பெரிய திருமடல்,சிறிய திருமடல்.
  • பாடிய பாடல் : 1253 
திருப்பாணாழ்வார்
  • பிறந்த ஊர் : உறையூர் (திருச்சி)
  • காலம் : எட்டாம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : அமலனாதிபிரான்
  • பாடிய பாடல் : 10

குலசேகர ஆழ்வார்

  • பிறந்த இடம் : திருவஞ்சைக்களம்
  • காலம் : எட்டாம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : பெருமாள் திருமொழி
  • பாடிய பாடல்  : 105

நம்மாழ்வார்

  • பிறந்த ஊர் : ஆழ்வார் திருநகரி
  • பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி
  • எழுதிய நூல் : பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம்,திருவாய்மொழி
  • பாடல்கள் : 1296

மதுரகவி ஆழ்வார்

  • பிறந்த ஊர் : திருக்கோளூர்
  • காலம் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி
  • எழுதிய நூல் : கண்ணி நுண் சிறுத்தாம்பு
  • பாடல்கள் : 96

ஐஞ்சிறுகாப்பியங்கள் – குறிப்புகள்

நாககுமார காவியம்

  • ஆசிரியர் – பெயர் தெரியவில்லை
  • காலம் – கி.பி.16ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் – 170
    சருக்கம் – 5
    பாவகை – விருத்தப்பா
  • சமயம் – சமணம்
  • பெயர்க்காரணம்:
    கதைத் தலைவன் நாககுமாரன் பற்றிக் கூறுவதால் நூல் இப்பெயர் பெற்றது.
  • வேறு பெயர்:
    நாகபஞ்சமி கதை

உதயணகுமார காவியம்

  • ஆசிரியர் – பெயர் தெரியவில்லை
  • காலம் – கி.பி.15ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் = 369
    காண்டம் = 6
    காண்டங்கள்:
    • உஞ்சைக் காண்டம்
    • இலாவண காண்டம்
    • மகத காண்டம்
      வத்தவ காண்டம்
    • நரவாகன காண்டம்
    • துறவுக் காண்டம்
  • வேறு பெயர்: உதயணன் கதை

யசோதர காவியம்

  • ஆசிரியர் – வெண்ணாவலூர் உடையார் வேள்
  • காலம் – 13ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் – 320
    சருக்கங்கள் – 5
  • பாவகை – விருத்தம்
  • சமயம் – சமணம்

நீலகேசி

  • ஆசிரியர் – பெயர் தெரியவில்லை
  • காலம் – 6ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் – 894
    சருக்கம் – 10
  • பாவகை – விருத்தம்
  • சமயம் = சமணம்
  • வேறு பெயர்:
    நீலகேசி தெருட்டு
    நீலம்(யாப்பருங்கல விருத்தியுரை)
  • நீலகேசி = கரிய கூந்தலை உடையவள்

சூளாமணி

  • ஆசிரியர் – தோலாமொழித் தேவர்
  • காலம் – கி.பி.பத்தாம் நூற்றாண்டு
  • பாடல்கள் – 2330
    சருக்கம் – 12
  • பாவகை – விருத்தம்
  • சமயம் – சமணம்
  • பெயர்க்காரணம்: மிக்க ஒளியையும் சிறப்பினையும் உடையது சூளாமணி. ஆற்றல்களும் சிறப்புகளும் கொண்டு திவிட்டனும் விசயனும் சூளாமணி போல் ஒளிர்ந்தமையால் நூல் இப்பெயர் பெற்றது.

நூல்

சமயம் பாவகை ஆசிரியர் அமைப்பு

நாக குமார காவியம்

சமணம் விருத்தம்  

5 சருக்கம், 170 பாடல்

உதயன குமார காவியம் சமணம் விருத்தம்  

6 காண்டம், 369 பாடல்

யசோதர காவியம்

சமணம் விருத்தம் வெண்ணாவலூர் உடையார் வேள் 5 சருக்கம், 320 பாடல்
நீலகேசி சமணம் விருத்தம்  

10 சருக்கம், 894 பாடல்

சூளாமணி

சமணம் விருத்தம் தோலாமொழித்தேவர்

12 சருக்கம்,  2330 விருதப்பாக்கள்

ஐம்பெரும் காப்பியங்கள் – குறிப்புகள்

  • காப்பியம் பெருங்காப்பியம், சிறுங்காப்பியம் என இரு வகைப்படும்.

ஐம்பெரும் காப்பியங்கள்

  1. சிலப்பதிகாரம்
  2. மணிமேகலை
  3. சீவகசிந்தாமணி
  4. வளையாபதி
  5. குண்டலகேசி

சிலப்பதிகாரம்

  • இயற்றியவர்- இளங்கோவடிகள்
  • சமயம் – சமணம்

பெயர்க்காரணம்:

    • காப்பியத்தின் கதை சிலம்பினைக் மையமாகக் கொண்டு அமைந்ததால் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது.

வேறு பெயர்கள்

  • குடிமக்கள் காப்பியம்
  • முத்தமிழ் காப்பியம்
  • உரையிடையிட்ட பாட்டுடை செய்யுள்

நூல் அமைப்பு

  • புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் கொண்டது.

மூன்று நீதிகள் அல்லது உண்மைகள்

    • “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது ;
      உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவது ;
      ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்”  

காப்பியக் கதை

  • கோவலன் கண்ணகி திருமணத்தில் தொடங்கி, மாதவியின் நடனத்தால் மையல் கொண்ட கோவலன், கண்ணகியை விடுத்து, மாதவி மாட்டு விடுதலறியாவிருப்பினன் ஆகி, மணிமேகலையை மகளாய்ப் பெற்று, பல ஆண்டுகளுக்குப் பின் இந்திர விழாவில் கானல் வரிபாடும் நிலையில் ஊழ்வினை காரணமாக மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் மாதவி என அவளைப் பழித்து நீங்கி, கண்ணகியைத் தஞ்சமடைந்து, கவுந்தியடிகள் துணையுடன் மதுரை சென்று, மாதரியிடம் கண்ணகியை அடைக்கலமாக்கி, மதுரை வீதியில் பொற்கொல்லனிடம் சிலம்பு விற்கச் சென்று கள்வன் எனக் குற்றஞ் சாட்டப்பட்டு, மன்னன் கொன்று வா என ஆணையிடக் கொலைக் களத்தில் கோவலன் கொலைப்பட, வண்ணச் சீறடி மண்மகள் அறியாது புகாரில் வாழ்ந்த கண்ணகி மதுரை வீதியில் சீற்றமே உருவாய் அரண்மனை வாயில் புகுந்து மன்னனிடம் தன் கணவன் கள்வனல்லன் என்பதைச் சிலம்பை உடைத்து, மாணிக்கத்தைக் காட்டி தெளிவுப்படுத்த அதனால் குற்றம் செய்தேன் என மன்னன் மடிய, கோப்பெருந்தேவி உயிர் துறக்க,சினம் அடங்காப் பத்தினி மதுரை மாநகரைத் தீக்கிரையாக்கி, வஞ்சி மாநகர் புகுந்து அங்குள்ள மலைக்குறவர் காண, விமானத்தில் ஏறி விண்ணுலகு சென்றாள். இதுவே சிலப்பதிகாரம் காட்டும் கண்ணகி கோவலன் கதையாகும்.

மணிமேகலை

  • இயற்றியவர்- சீத்தலை சாத்தனார்
  • சமயம் – பௌத்தம்

பெயர்க்காரணம்

  • காப்பியத்தின் கதை முழுதும் காப்பியத் தலைவி மணிமேகலையை மையமாகக் கொண்டு பாடப்பட்டதால்,  மணிமேகலை எனப் பெயர் பெற்றது.

வேறு பெயர்கள்

  • இரட்டைக் காப்பியங்கள் (சிலப்பதிகாரம்,மணிமேகலை)
  • இந்நூலின் பதிகம் இந்நூலினை மணிமேகலை துறவு என்று குறிப்பிடுகிறது.

நூல் அமைப்பு

  • முப்பது காதைகள் கொண்டது.

மூன்று கருத்துகள்

  • இளமை நிலையாமை
  • யாக்கை நிலையாமை
  • செல்வம் நிலையாமை 

காப்பியக் கதை 

  • கோவலன் கொலை செய்யப்பட, செய்தியறிந்த மாதவியும். அவள் மகள் மணிமேகலையும் பௌத்த சமயத்தில் சேர்ந்துதுறவியாகின்றனர். புத்தபிரானுக்கு மலர் வேண்டி மலர்வனம் புகுகின்றாள் மணிமேகலை. மணிமேகலை மீது காமம் கொண்ட இளவரசன் உதயகுமரன் அவளைப் பின் தொடர்கிறாள். தன்னைப் பொருள்விலையாட்டி எளக் கூறி இகழ்ந்தும் உதயகுமரன் பின்னால் தன் மனம் செல்வதையறிந்து வருந்துகிறாள் மணிமேகலை. இந்நிலையில் மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத் தீவில் விட்டுவிடுகிறது. அங்குப் பழம்பிறப்பு அறிந்து, மூன்று மந்திரங்களும் பெறுகிறாள். ஆபுத்திரனின் அமுத சுரபியும் கோமுகிப் பொய்கையிலிருந்து கிடைக்கிறது. மந்திரத்தின் உதவியால் விண்ணில் பறந்து புகார் வந்து பசியால் வாடியோர்க்கு உண்டி கொடுத்து உயிர்கொடுக்கிறாள் உதயகுமரன்தரும் துன்பம் நீங்கமந்திரத்தின் உதவியால் காயசண்டிகை வடிவத்தை எடுத்துக்கொள்கிறாள். காயசண்டிகையின் கணவன் காஞ்சனனால் உதயகுமரன் தவறுதலாகக் கொல்லப்படுகிறான். கொன்ற பழி மணிமேகலையை வந்தடைகிறது. அரசன் மகளைக் கொன்றதால் சோழ மன்னன் மணிமேகலையைர் சிறையில் அடைக்கிறான். மகனைப் பறி கொடுத்த அரசி. மணிமேகலையைப் பல்வேறு வகையில் கொடுமைப்படுத்துகிறாள். தவவலிமையால் அவற்றிலிருந்து விடுபடுகிறாள். உண்மை உணர்ந்த அரசி அவளை விடுவித்துத் தன்னை மன்னிக்க வேண்டுகிறாள். பின்னர் மணிமேகலை காஞ்சி சென்று பௌத்த மதக் கொள்கைகளைப் பரப்பி அறவண அடிகளிடம் ஆசி பெறுகிறாள். இதுவே மணிமேகலையின் கதையாகும்.

சீவகசிந்தாமணி

  • இயற்றியவர்– திருத்தக்கதேவர்
  • தமிழில் விருத்தப்பாவால் எழுதப்பட்ட முதல் காப்பியம் சீவகசிந்தாமணி ஆகும்.
  • மணநூல் என்று அழைக்கப்படுகிறது.
  • சமயம்- சமணம்

நூல் அமைப்பு

  • 13 இலம்பகங்கள் 
  • 3145 பாடல்கள் கொண்டது.

காப்பியக் கதை 

  • காப்பியத்தலைவன் சீவகன். ஏமாங்கத நாட்டு அரசன் சச்சந்தன், மனைவி விசயை. நாட்டை மறந்து அந்தப்புரத்தில் அடைக்கலமாகும் மன்னன் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை அமைச்சன் கட்டியங்காரனிடம் ஒப்படைக்கின்றான். அமைச்சன் தக்க நேரம் பார்த்துப் படையுடன் வந்து மன்னனைக் கொல்கிறான். அமைச்சன் சதியறிந்த மன்னன், மனைவி விசயையை மயிற்பொறியில் ஏற்றி வானில் பறக்கும்படிச்செய்கிறான். உயிர்தப்பிய விசயை சுடுகாட்டில் இறங்குகிறாள். அங்கு அவளுக்கு ஓர் ஆண்குழந்தை பிறக்கிறது. சீவகன் என்று பெயர் மட்டும் சூட்டி மகனோடு வாழ முடியாது தாய் விசயை மறைந்து வாழ்கிறாள். கந்துக்கடன் எனும் வணிகன் சீவகனை எடுத்துச்சென்று, அச்சணந்தி அடிகளிடம் கல்வி பயில அனுப்புகிறான். கல்வி கேள்விகளில் சிறந்தவனாக வளர்கின்றான். இளமைப் பருவம் எய்திய சீவகன் தன் அழகாலும் ஆண்மையாலும் போட்டிகளில் வெற்றி பெற்று, காந்தருவ தத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எண்மரை மணக்கிறான். கட்டியங்காரனைப் போரில் கொன்று தன் தந்தையின் நாட்டை மீட்டு அரசாள்கிறான். மனைவியரோடு மகிழ்ச்சியாய், நற்புதல்வர்களைப் பெற்று இருக்குங்காலை தோட்டத்தில் பார்த்த ஒரு காட்சியால் வாழ்க்கையில் விரக்தியுற்றுத் துறவு பூண்டு முக்தி அடைகிறான். இதுவே சீவக சிந்தாமணி தரும் சீவகனின் கதையாகும்.

வளையாபதி

  • ஆசிரியர் பெயர் தெரியவில்லை
  • சமண சமயம் சார்ந்த நூல்

காப்பியக் கதை 

  • நவகோடி நாராயணன் ஒரு வணிகன். இவன் வேறு சாதிப் பெண்ணை மணந்தான். இதனால் அவன் குலத்தோர் வெறுக்க, வெறுப்பைத் தாங்க இயலாது அவனும் அயல் நாடு சென்றுவிட, அவன் மனைவிக்குப் பிறக்கும் மகன் வளர்ந்த பின் புகாரில் தன் தந்தையைக் கண்டு இறுதியில் தாய் தந்தையரை இணைத்து வைக்கிறான். வைசிய புராணம் தரும் கதை இதுவேயாகும்.

குண்டலகேசி

  • குண்டலகேசி என்பதற்கு  சுருண்ட கூந்தலை உடையவள் என்பது பொருள் ஆகும்.
  • இயற்றியவர்– நாதாகுத்தனார்
  • 25 பாடல்கள் கிடைத்துள்ளன.
  • சமயம்- பௌத்தம்

காப்பியக் கதை 

  • வணிகன் மகள் பத்தரை. இவள் காளன் என்ற கள்வனை விரும்புகிறாள். மகளின் வற்புறுத்தலால் தந்தையும் கள்வனைச் சிறையிலிருந்து மீட்டு அவளுக்கு மணம் செய்து வைக்கிறார். இன்பமான வாழ்க்கையின் இடையில் ஊடலின்போது சினத்தில் பத்தரை தன் கணவனை நீ கள்வன் தானே? என்று கூறிவிட அதனால் சினங்கொண்ட காளன் (கணவன்) தெய்வத்தை வணங்க என்று பொய் கூறி மலையுச்சிக்கு அவளை அழைத்துச் சென்று கொல்லப் போவதாகக் கூறுகின்றான். கணவனுக்கு அறிவுரை கூறியும் அவன் திருந்தாத நிலையில் அவனை வணங்கி வலம் வருவது போல் வந்து கணவனை மலையுச்சியிலிருந்து தள்ளிக் கொன்று விடுகின்றாள். தான் செய்த பாவம் நீங்கிடப் பௌத்த சமயத்தில் சேர்ந்து அறக் கருத்துக்களைப் பரப்பி இறுதியில் புத்தபிரானின் திருவடியை அடைகிறாள்.

wpChatIcon
error: Content is protected !!