-
0 Comments
- ஆசிரியர் நக்கீரர். நெடுநல்வாடையைப் பாடியவரும் இவரே.
- 317 அடிகளைக் கொண்டது.
- பாடப்பட்டவன் முருகன். ஆற்றுப்படை நூல்கள் பரிசில் பெறச் செல்வோரால் பெயர் பெறும். திருமுருகாற்றுப்படை மட்டும் பரிசில் கொடுப்போன்(முருகன்) பெயர் பெற்றது.
- ஆசிரியப்பாவால் ஆனது.
- திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டிற்குக் கடவுள் வாழ்த்துப் போன்று அமைந்துள்ளது.
- இதை புலவராற்றுப்படை எனவும் வழங்குவர்.
- முருகனிடம் அருள் பெற்ற ஒருவர் அருள் வேண்டும் ஒருவரை ஆற்றுப்படுத்தும் விதமாக அமைகிறது.
- பத்துப்பாட்டுள் முதலில் பதிப்பிக்கப் பெற்றது திருமுருகாற்றுப்படை(1851- ஆறுமுக நாவலர்). இந்நூல் அறுபத்தி இரண்டு பதிப்புகளைக் கண்டுள்ளது.
- பத்துப்பாட்டில் காலத்தால் பிந்திய நூல். கடவுள் வாழ்த்தாகக் கருதி முதலில் வைக்கப்பட்டது.
- முதற்பகுதி: திருப்பரங்குன்றம் மலை: அதனைச் சூழ்ந்த இயற்கை வளம், முருகனின் திருக்கோலம், சூரனுடன் செய்த போர் ஆகியன இப்பகுதியில் கூறப்பட்டுள்ளன.
- இரண்டாம் பகுதி: முருகனின் ஆறு திருமுகங்களின் சிறப்பு, பன்னிரு கைகளின் செயல், திருச்செந்தூர் சிறப்பு ஆகியன கூறப்பட்டுள்ளன.
- மூன்றாம் பகுதி: முருகனை வழிபடும் முனிவர்களின் பெருமை, பழனியில் வழிபாட்டிற்கு வரும் மகளிரின் இயல்பு ஆகியன கூறப்பட்டுள்ளன.
- நான்காம் பகுதி: திருவேரகத்தில் முருகனை வழிபடுவோரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
- ஐந்தாம் பகுதி : மலை நாட்டு மக்கள் குரவைக் கூத்தாடி வணங்கும் முறைகள் முதலியன கூறப்பட்டுள்ளன.
- ஆறாம் பகுதி: முருகன் எழுந்தருளும் இடங்களும், அவனிடம் சென்று அருள்பெறும் முறைகளும் பழமுதிர்ச்சோலையின் அருவிச் சிறப்பும் கூறப்பட்டுள்ளன.
- திருமுருகாற்றுப்படை கூறம் முருகனின் அறுபடை வீடுகள்
- திருப்பரங்குன்றம்
- திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)
- திருஆவினன் குடி (பழனிமலை, சித்தன்வாழ்வு)
- திருவேரகம் (சுவாமி மலை)
- குன்றுதோறாடல்
- பழமுதிர் சோலை
- 11ஆம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல். இருதொகுப்பில் (பத்துப்பாட்டு, திருமுறைகள் ) இடம் பெற்ற ஒரே நூல் திருமுருகாற்றுப்படை
பாடல் வரிகள்
- “உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு”- தொடக்கம்
- “பழமுதிர் சோலை மலைகிழவோனே” முடிவு
- “கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பு”
- “ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆல்அமர் செல்வ”