கேள்விக்கென்ன பதில்
எந்தப் போட்டி தேர்வை எடுத்துக் கொண்டாலும் அதில் வெற்றி பெற வேண்டுமென்றால் நாம் முதலில் செய்ய வேண்டியது முந்தைய வருட வினாத்தாள்களைப் படித்துப் பார்ப்பது. அவ்வாறு படித்துப் பார்க்கும்போது நமக்கு அந்த தேர்வை பற்றிய ஒரு புரிதல் ஏற்படும். எந்தெந்த தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். எப்படி எளிதாக அந்தத் தேர்வை எதிர்கொள்ள முடியும் என்பதையும் புரிந்து கொள்ளலாம். அதனால் இனி வரக்கூடிய பதிவுகளில் நாம் முந்தைய வருடங்களில் NET தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளை ஒவ்வொரு அலகுகளாக பார்க்கலாம்.
2019ல் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2019 இல் இருந்து 2023 வரை(ஜூன் 2019, டிசம்பர் 2019, 2021, 2022, டிசம்பர் 2022, ஜூன் 2023, டிசம்பர்2023 ) ஏழு தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த ஏழு வினாத்தாள்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது வினாத்தாள் அமைப்பு பற்றிய ஒரு புரிதலைப் பெறலாம்.
- வினா-விடை அமைப்பில் 40 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. (எ.கா)அனுபவக் கதைகள் எந்த வகையுள் அடங்கும்? 1) புராணம் 2)நாட்டார் கதை 3)பழமரபு கதை 4)தேவதைக் கதை
- இவற்றுள் சரியானது எது? என்ற அமைப்பில் 25 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. (எ.கா) புறநானூற்றில் குறிப்பிடப்படும் நாடுகள் அ)பாரி நாடு ஆ)காட்டு நாடு இ)கோனாடு ஈ)முக்காவல் நாடு 1)அ,ஆ,இ,ஈ 2)ஆ,இ,ஈ 3)அ,ஆ,ஈ 4)அ,இ,ஈ
- பொருத்துக – 10 வினாக்கள்
- நிரல்படுத்துக – 10 வினாக்கள்
- உறுதிக்கூற்று – 5 வினாக்கள்.
- ஒரு பாடல் கொடுத்து அதிலிருந்து ஐந்து கேள்விகள் – இந்த ஐந்து கேள்விகளில், 2 வினா விடை பொருத்துக-1 நிரல்படுத்துக-1 உறுதிக்கூற்று -1
- ஒரு பத்தி கொடுத்து அதிலிருந்து 5 கேள்விகள் – இந்த ஐந்து கேள்விகளில், 2 வினா விடை பொருத்துக -1 நிரல்படுத்துக -1 உறுதிக்கூற்று -1
- இவற்றை ஒவ்வொரு அலகுகளாக பிரித்துப் பார்க்கும்போது ஒவ்வொரு அலகில் இருந்தும் 8 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.
குறிப்பு : இதுவரை நடந்த அனைத்துத் தேர்வுகளும் கணினி முறையில் நடைபெற்றது இம்முறை தேர்வு எழுத்துத் தேர்வாக நடைபெற உள்ளதால் வினாத்தாள் அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும் இதுவரைநடந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையளிப்பதன் மூலம் தேர்வை எதிர்கொள்வது எளிதாகும். கீழே உள்ள தலைப்புகளை சொடுக்குவதன் மூலம் அந்தந்த தலைப்புகளுக்கான வினாக்கள் இடம்பெற்றுள்ள பக்கங்களை அடைவீர்கள்.